• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home ஏவுகணைகள்

மோடி அரசே! இலங்கை தமிழகர்களுக்கு ராஜிவ் பெற்றுத்தந்த உரிமைகளை 13 வது திருத்தத்தின்படி பாதுகாத்திடுக! கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

by Admin
21/08/2020
in ஏவுகணைகள்
4
மோடி அரசே! இலங்கை தமிழகர்களுக்கு ராஜிவ் பெற்றுத்தந்த உரிமைகளை 13 வது திருத்தத்தின்படி பாதுகாத்திடுக! கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் ராஜபக்க்ஷே தலைமையிலான கட்சி அமோக ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பது தமிழர்களிடையே பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 16 உறுப்பினர்களை பெற்று பிரதான எதிர்க்கட்சியாக செல்வாக்குடன் இருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் அந்த எண்ணிக்கை 10 ஆக குறைந்துள்ளது தமிழ் கட்சிகளின் பலத்தை பலகீனமடையச் செய்துள்ளது. இதற்கு காரணம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருக்கிற தமிழர் தலைவர்களிடையே ஒற்றுமை இல்லாததுதான். முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி சார்பாகவும், அதேபோல, தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பாக கஜேந்திர குமார் பொன்னம்பலமும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 145 இடங்களில் வெற்றி பெற்ற ராஜபக்க்ஷே தலைமையிலான பொது ஜன பெரமுனாவிற்கு எதிர்க்கட்சியாக சஜீத் பிரேமதாசா கட்சி 54 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இவருடைய தந்தை பிரேமதாசாவை விடுதலைப் புலிகள் கொன்ற காரணத்தால் தமிழர்கள் உரிமைகளுக்காக பிரதான எதிர்க்கட்சி குரல் கொடுக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. அதேபோல, மைத்ரிபால சிறிசேனா, ரணில் விக்ரமசிங்கே போன்றவர்கள் தோல்வியை தழுவியிருக்கிறார்கள்.

பெரும்பான்மை பலம் பெற்றிருக்கிற ராஜபக்க்ஷே நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டி 19 வது திருத்தத்தை ரத்து செய்ய இருக்கிறார். இதன் மூலம் அதிபரின் அதிகாரத்தை விரிவு படுத்த முயற்சி செய்து வருகிறார். ராஜபக்க்ஷேவிடம் அதிகாரம் குவியக், குவிய தமிழர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உட்படுகிற நிலை ஏற்படுகிறது.

ஜுன், 1987 இல் பிரதமர் ராஜீவ் காந்திக்கும், அதிபர் ஜெயவர்த்தனாவிற்கும் ஏற்பட்ட உடன்பாட்டின்படி தமிழர்களுக்கு நாடாளுமன்றத்தில் 13 வது திருத்தத்தின் மூலம் கணிசமான உரிமைகள் பெறப்பட்டன. ராஜீவ் காந்தியின் உடன்படிக்கையின்படி தமிழ் தாயகம் என்ற நீண்டநாள் கோரிக்கை ஏற்கப்பட்டு, இலங்கையில் 3 இல் 1 பங்கு நிலப்பரப்பில் பரவியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணம் ஒன்றாக இணைக்கப்பட்டு, இந்தியாவில் உள்ள மாகாணங்களைப் போல் ஒரு மாநில நிர்வாக சுயாட்சியுடன் கூடிய அரசு உருவாக வழி ஏற்பட்டது. 1956 முதல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்ற நியாயமற்ற நிலை மாறி, தமிழும் ஆட்சி மொழி என்ற சமவுரிமை பெறப்பட்டது. இத்தகைய உரிமைகள் பெறப்பட்டதின் அடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணம் ஒன்றாக இணைக்கப்பட்டு இடைக்கால அரசாங்கம் வரதராஜ பெருமாள் தலைமையில் அமைக்கப் பட்டதை இங்கு நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம். ஆனால் வடக்கு, கிழக்கு மாகாணம் இணைக்கப்பட்டதை நீதிமன்றம் ரத்து செய்தது துரதிர்ஷடவசமானது ஆகும். ஆனாலும், வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்பட்டு சி.வி. விக்னேஸ்வரன் முதலமைச்சராக  செயல்பட்டதை எவரும் மறந்திட முடியாது.

அமரர் ராஜீவ் காந்தி அவர்கள் 1987 இல் ஏற்படுத்திய இந்திய – இலங்கை உடன்பாட்டின் அடிப்படையில் இலங்கை நாடாளுமன்றத்தில் 13 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, அதிக அதிகாரங்கள் தமிழர்களுக்கு அந்த  மாகாணங்களில் வழங்கப்பட்டது.  இன்றைக்கு தமிழர்களுக்கு இருக்கிற ஒரே பாதுகாப்பு கவசம் 13 வது திருத்தம் தான்.

ஆனால், தமிழர்களுக்கு எதிரான கடுமையான போக்குக் கொண்ட ராஜபக்க்ஷே சிறுபான்மை மக்களுக்கு எதிராக பெரும்பான்மை மக்களை அணி திரட்டுகிற முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார். இதன் மூலம், அரசியல் லாபத்தை பெற்றிருக்கிறார். இந்த வெற்றியை குறித்து ராஜபக்க்ஷே குறிப்பிடுகிற போது, இந்தியாவில் நரேந்திர மோடி எத்தகைய உத்தியை கையாண்டாரோ அதே உத்தியை இலங்கையில் கையாண்டு வெற்றி பெற்றதாகக் கூறியிருக்கிறார். நரேந்திர மோடி பாதையில் ராஜபக்க்ஷே சென்று கொண்டிருக்கிறார். இந்தியாவில் எப்படி சிறுபான்மையினர்கள்  பாதுகாப்பற்ற நிலையில் வாழ்கிறார்களோ, அதைப்போலவே இலங்கையில் வாழ்கிற தமிழர்கள், இஸ்லாமியர்கள் பாதுகாப்பற்ற தன்மையோடு வாழ்ந்து வருகிறார்கள். தங்களது எதிர்காலம் கேள்விக் குறியானது குறித்து மிகுந்த கவலையுடன் இருக்கிறார்கள்.

இந்நிலையில், புவிசார் அரசியலைப் பொறுத்தவரை, இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அம்பன்தோட்டா துறைமுக திட்டதில் சீனா அதிக நிதியை ஒதுக்கி வருவது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. ஒரே நேரத்தில் சீனாவிடம் இருந்தும், இந்தியாவிடமிருந்தும் நிதியை கேட்டு பெறுகிற முயற்சியில் ராஜபக்க்ஷே ஈடுபடுகிறார். அண்டை நாடாக இருக்கிற இந்தியாவை விட சீனாவோடு அதிக நெருக்கம் காட்டுவது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. இலங்கை நாட்டை பொறுத்தவரை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முற்றிலும் தோல்வியடைந்து விட்டது.

ஏற்கனவே, தமிழகத்தில் 100 க்கும் மேற்பட்ட முகாம்களில் ஏறத்தாழ 1 லட்சம் அகதிகள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுடைய எதிர்காலம் குறித்து ஒரு செயல் திட்டத்தை தமிழக அரசு தயாரித்து மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இலங்கை தேர்தலுக்குப் பிறகு ராஜபக்க்ஷே தலைமையில் அமைந்திருக்கிற அரசால் இலங்கை தமிழர்கள் ராஜீவ் காந்தியின் முயற்சியால் 13 வது திருத்தத்தின் மூலம் பெற்ற உரிமைகளையும், சம வாய்ப்புகளையும் பறிப்பதற்கு நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு அனுமதிக்கக் கூடாது. தமிழர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அண்டை நாடான இந்தியாவிற்கு இருக்கிறது. இதுகுறித்து பிரதமர் மோடி தீவிர கவனம் செலுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

Tags: 13th amendmentsrilankan tamils
Previous Post

தெருவிளக்கு வெளிச்சத்தில் ராஜீவை பார்த்த நேரு!

Next Post

பி எம் கேர்ஸ் நிதி விவகாரம்: உச்ச நீதிமன்றம் உணராத உண்மை

Admin

Admin

Next Post
பி எம் கேர்ஸ் நிதி விவகாரம்: உச்ச நீதிமன்றம் உணராத உண்மை

பி எம் கேர்ஸ் நிதி விவகாரம்: உச்ச நீதிமன்றம் உணராத உண்மை

Comments 4

  1. M Jahir Hussain says:
    5 years ago

    இலங்கையையும், அதன் அரசியல் தன்மையையும் ஒரு தேர்ந்த அரசியல் நோக்கோடு பார்த்திருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரின் அறிக்கை. அப்போதும், இப்போதும், என்றும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு உறுதுணையாக இருப்பது காங்கிரஸ் கட்சி மட்டும்தான்.

    தமிழக மக்கள் உணர்ச்சி வயப்பட்டு எதார்த்தை கவனிக்க தவறுகின்றனர் என்பதே உண்மை.

    இலங்கையில் ஆள்பவனும், எதிர்க்கட்சியும் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவுள்ளனர். கரிசனம் காட்டுபவர்கள் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். இது எதைக்காட்டுகிறது என்றால் தமிழர்களுக்குள்ளேயே எந்தவித ஒற்றுமையும் இல்லை. அது இலங்கைக்கும் மட்டுமல்ல. இன்றைய தமிழ்நாட்டுக்கும் இது சரியாக பொருந்தும்.

    என்ன செய்யப் போகிறது தமிழ் சமுதாயம்?

    Reply
    • B.A.Sithik says:
      5 years ago

      ஈழத்தமிழர்களை
      சிங்கள இனவாத அரசு
      கொன்று குவித்த நேரத்தில்
      அதை “இனப்படுகொலை” என
      உலக அரங்கில்
      ஓங்கிக் குரல் கொடுத்தவர்
      அன்னை இந்திரா.
      ஈழத்தமிழர் வாழ்வுக்கு
      இலங்கை அரசுடன்
      அரசு முறை ஒப்பந்தம்
      உருவாக்கியவர்
      இந்தியப் பிரதமர்
      ராஜிவ் காந்தி.
      ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ளாமல்
      ராஜிவ் காந்தியைக்கொன்று
      ஈழத்தமிழர் வாழ்வையும்
      சூறையாடிய சர்வாதிகாரி
      பிரபாகரன்.
      எதிர்காலமே இல்லாத
      சூன்யத்தில் இன்று
      ஈழத்தமிழர் நிற்பதற்கு
      யார் காரணம் என்பதை
      வரலாறு மறைக்காது.

      Reply
      • ஆ. கோபண்ணா says:
        5 years ago

        சரியான நேரத்தில் சரியான பதிவு…நன்றி!

        Reply
    • ஆ. கோபண்ணா says:
      5 years ago

      சபாஷ்! தெளிவான பதில்.

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com

  • facebook
  • twitter
  • whatsapp