• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home ஏவுகணைகள்

ஏழை எளியவர்களை புறக்கணிக்கும் புதிய கல்வி கொள்கை ! தலைவர் கே.எஸ். அழகிரி கடும் எதிர்ப்பு !

by Admin
30/07/2020
in ஏவுகணைகள்
0
பாடத்திட்டங்களில் வகுப்புவாத கொள்கைகளை புகுத்தாதே – தலைவர் கே.எஸ். அழகிரி
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

இந்தியாவில் உள்ள ஏழை, எளிய மக்களிடையே மதம், ஜாதியின் காரணமாக கல்வியிலும், சமூக வாழ்க்கை முறையிலும் ஏற்றத்தாழ்வுகள் நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகின்றன. அதனால் அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வருகிறது. சுதந்திர இந்தியாவில் அனைவருக்கும் கல்வி கொடுக்க வேண்டுமென்று அரசமைப்புச் சட்டத்தில் உள்ள வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டு, அதை நடைமுறையில் கொண்டு வருவதற்கு பல கல்விக் கொள்கைகள் உருவாக்கப்பட்டன. மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 6 முதல் 14 வயது உள்ள அனைவருக்கும் கல்வி பெறுகிற உரிமை சட்டமாக நிறைவேற்றப்பட்டது. நகர்ப்புறங்களில் கிடைக்கிற தரமான கல்வி கிராமப்புறங்களில் கிடைக்கவில்லை. கல்வி வணிகமயமாகிவிட்ட நிலையில் தரமான கல்வி ஏழை, எளியவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் கிடைக்கவில்லை. அரசு பள்ளிகள் மூலமாகத் தான் அனைவருக்கும் தரமான கல்வி வழங்க வேண்டும். அதை வழங்குவதற்கு புதிய கல்விக் கொள்கையில் எந்தவிதமான வாய்ப்பும் இல்லை.

அதேபோல, உயர்கல்வியில் அனைத்து விதமான பட்டப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே நீட் தேர்வு காரணமாக  தமிழக கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவ கல்வி பெற முடியாமல் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதே நிலை தான் உயர்கல்வித் துறையிலும் நுழைவுத் தேர்வு வைத்தால் ஏற்படப் போகிறது.

நெடுங்காலமாக நடைமுறையில் இருந்து வந்த கல்விக் கொள்கைகளுக்கு முற்றிலும் புறம்பாக வகுப்புவாத கொள்கைகளை புகுத்தி மதச்சார்பற்ற கொள்கைக்கு உலை வைக்கும் நோக்கத்துடன் புதிய கல்விக் கொள்கையை பா.ஜ.க. அரசு நிறைவேற்றியிருக்கிறது.இந்த கொள்கைக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள முற்போக்கு சிந்தனை கொண்ட அறிஞர் பெருமக்கள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், அதைப் பற்றி கண்டு கொள்ளாமல் மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.

தொடக்கத்தில் மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை கட்டாய பாடமாக திணிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எதிர்ப்பு கண்டு அஞ்சிய மத்திய அரசு, மூன்றாவது மொழி என்ன என்பதை  மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என கொள்கையை மாற்றிக் கொண்டு பின்வாங்கியது. மும்மொழிக் கொள்கையின்படி சமஸ்கிருதம் அனைத்து பள்ளி மற்றும் உயர் படிப்புகளில் விருப்பப் பாடமாக சேர்க்கப்பட்டு ஊக்குவிக்கப்பட இருக்கிறது. மற்ற செம்மொழிகளும் இந்திய இலக்கியங்களும் விருப்பப் பாடங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. இதில் மத்திய அரசின் பாரபட்சம் வெளிப்படுகிறது. இதன்மூலம் பல்வேறு மாநிலங்களிடையே நிலவும் பன்முகக் கலாச்சாரம் சிதையப் போகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் மூன்றாவது மொழி சமஸ்கிருத மொழியா ? இந்தி மொழியா ? அல்லது வேறு மொழியா என்பதை முடிவு செய்ய வேண்டிய இடத்தில் தமிழக அரசு உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை கொண்டு பன்முக கலாச்சாரத்தை போற்றி வருகிற இந்திய நாட்டில் ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்” என்ற கொள்கையின் அடிப்படையில் இந்தி, சமஸ்கிருத மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் மக்களிடையே பிளவு மனப்பான்மை தான் வளரும்.

சமீபத்தில் மத்திய – மாநில பா.ஜ.க. அரசுகள் பாடத் திட்டங்களில் இருந்து மதச்சார்பின்மை, அரசமைப்புச் சட்டம், குடிமக்கள் உரிமைகள் மற்றும் விடுதலைப் போராட்ட மாவீரர்களான திப்பு சுல்தான் போன்றவர்களின் வரலாற்றுப் பாடங்களை நீக்குகிற முடிவையும் எடுத்திருக்கிறது. இந்தப் பின்னணியில் பார்க்கிற போது, புதிய கல்விக் கொள்கையை காவி மயமாக்கும் முயற்சியில் பா.ஜ.க. அரசு ஈடுபட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் கடுகளவு விவாதம் கூட நடத்தப்படவில்லை. வருகிற ஆகஸ்ட் மாதத்தில் நாடாளுமன்றம் கூடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்போது இதுகுகுறித்து விரிவாக விவாதித்து பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்தை அறிந்து பா.ஜ.க. அரசு நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கலாம். ஆனால், அவசர சட்டத்தின் மூலம் ஆட்சி நடத்துகின்ற நரேந்திர மோடி அரசு புதிய கல்விக் கொள்கை குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க தயாராக இல்லை.

எனவே, கல்வி பெறுவதில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை போக்காமல், வகுப்புவாத கொள்கைகளை புகுத்தாமல் அரசமைப்புச் சட்டப்படி மக்களுக்கு இருக்கிற உரிமைகளை போற்றிடும் வகையில் புதிய கல்விக் கொள்கை இல்லை. இந்த கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டால் 136 கோடி மக்களும் மதரீதியாக பிளவுபடுத்துகிற வகையில் கல்வி முறை புகுத்தப்பட்டு காவிமயமாவதற்கு அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. மக்கள் விரோத புதிய கல்விக் கொள்கையை உடனடியாக நிறைவேற்றாமல் பாராளுமன்றத்தில் விவாதங்கள் நடத்துவதோடு, அனைத்து மாநில அரசுகளோடு கலந்து பேசி நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

Previous Post

ஜெ.யின் நினைவு இல்லம்! அரசு பணம் ரூ.100 கோடியா?

Next Post

மோடியின் ரபேல் விமானம் வந்துவிட்டது! ஆனால் ஊழல் குறித்த கேள்விக்கு பதில் வரவில்லை!

Admin

Admin

Next Post
மோடியின் ரபேல் விமானம் வந்துவிட்டது! ஆனால் ஊழல் குறித்த கேள்விக்கு பதில் வரவில்லை!

மோடியின் ரபேல் விமானம் வந்துவிட்டது! ஆனால் ஊழல் குறித்த கேள்விக்கு பதில் வரவில்லை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com