• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home ஏவுகணைகள்

தமிழகத்தில் நீட் தேர்வை அனுமதிக்க மாட்டோம்: தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை – 25-07-2020

by Admin
25/07/2020
in ஏவுகணைகள்
1
பாடத்திட்டங்களில் வகுப்புவாத கொள்கைகளை புகுத்தாதே – தலைவர் கே.எஸ். அழகிரி
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

தமிழகத்தில் நீட் தேர்வு நடத்துவதன் மூலமாக ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்கள் குறிப்பாக அரசு பள்ளிகளில் படிக்கிற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்கிற அடிப்படையில் அனைத்து கட்சிகளும்  எதிர்ப்புக்குரல் எழுப்பி வருகின்றன. இந்நிலையில் நடப்பாண்டில் நீட் தேர்வு நடத்தவேண்டுமென்பதில் மத்திய அரசு மிகுந்த முனைப்புக்  காட்டி வருகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியத்தால்  10 மற்றும், 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக  10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற நிலையில், எந்த தேர்வுகளும் நடத்துவதற்கான வாய்ப்பில்லை என்ற நிலை ஏற்பட்டது. இதனால் தான், மே 3 ஆம் தேதி மற்றும் ஜுலை 26 ஆம் தேதி என இரு முறை   நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அந்த தேதியில் நடத்த முடியாத நிலையில் தற்போது செப்டம்பர் 13 ஆம் தேதி நடத்தப் போவதாக தேசிய தேர்வு ஆணையம் ஒரு குழுவை அமைத்து அதன் பரிந்துரையின் அடிப்படையில் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. நீட் தேர்வுகள் சமூக இடைவெளியுடன் நடத்தப்படும் என்று கூறியிருக்கிறது.  ஆனால் கொரோனா தொற்று காரணமாக நீட் தேர்வில் பங்கெடுக்க மாணவர்களும், பெறறோர்களும்  பெருமளவில் விரும்பவில்லை.

தமிழகத்தை பொறுத்தவரை  10,  11 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு நடத்தாமல் அனைவரும் தேர்வு பெற்றதாக தமிழக அரசு  அறிவித்திருக்கிறது. இதை தவிர கல்லூரிக்கான செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்திருக்கிறது. இவற்றுக்கெல்லாம் தேர்வு நடத்த முடியாத நிலையில் நீட் தேர்வை எப்படி நடத்த முடியும் ?

நீட் தேர்வு தயாரிப்புக்காக அதிக பணத்தை செலவழித்து பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து வசதி உள்ளவர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், நீட் தேர்வு மாணவர்களுக்கு தமிழக அரசு கடந்தாண்டு  412 பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்தியது. அந்த வகுப்பில் பயிற்சி பெற்ற ஒரு சில மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும், அவர்கள்  450 மதிப்பெண்களுக்கும் குறைவாக பெற்றிருந்ததால் அவர்களில் ஒரு மாணவருக்குக் கூட மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இதை விட தமிழகத்திற்கு வேறு  ஓர் அவலம் இருக்கமுடியாது. மேலும் நடப்பாண்டில் இதுவரை பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு  நடத்தவில்லை. இந்நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கிற மாணவர்கள் நீட் தேர்வில் எப்படி வெற்றி பெற முடியும் ?                                     

மாவட்டத்திற்கு மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரிகளை தொடங்கி மாணவர்களின் எண்ணிக்கையை பெருக்குவதாக,  தமிழக அரசு தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. மேலும் அரசு பள்ளிகளில் படிக்கிற மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அறிவித்திருக்கிறது. நீட் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளே நடத்தாத நிலையில்,  இவற்றால் தமிழக மாணவர்களுக்கு எந்த பயனும் ஏற்படப்போவதில்லை.

கடந்த ஆண்டில் தமிழகத்திலிருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள்  எண்ணிக்கை  ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 997. ஆனால் நடப்பாண்டில் அந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 502 ஆக குறைந்துள்ளது. நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற தன்னம்பிக்கையை தமிழக மாணவர்கள் இழந்து வருவதுதான் இந்த எண்ணிக்கை குறைவிற்கு காரணம். தேசிய அளவில் நீட் தேர்வு எழுதுபவர்கள் எண்ணிக்கை  ஆண்டுதோறும் கூடி வருகிறது. ஏறத்தாழ  15  லட்சத்துக்கும் மேற்பட்டோர் நடப்பாண்டில்  நீட் தேர்வு எழுத பதிவு செய்திருக்கிறார்கள். மேலும் நடப்பாண்டில் 12 ஆம் வகுப்பில் ஏறத்தாழ 10 லட்சம் மாணவர்கள் தேர்வு பெற்றிருக்கின்றனர். ஆனால் நீட் தேர்வுக்காக அரசு பள்ளிகளில் படித்த 7500 பேர் தான் விண்ணப்பம் செய்திருக்கிறார்கள் என்று புள்ளிவிபரம் கூறுகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகி விட்ட நிலையில் நீட் தேர்வு யாருக்காக நடத்தப்படுகிறது? எதற்காக நடத்தப்படுகிறது? தமிழகத்திலுள்ள ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கிராமப்புற  மாணவர்கள்,  நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் நடப்பாண்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளின் கோரிக்கை இதுவாகத்தான் இருக்கமுடியும்.

2017 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நிறைவேற்றப்பட்ட மசோதா, குடியரசுத் தலைவரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக 2017 செப்டம்பர் 18 அன்று திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மசோதாவை திருப்பி அனுப்பும் போது, அதற்கான காரணத்தை இன்றைய தேதி வரை தமிழக அரசுக்கு குடியரசுத் தலைவர் தெரிவிக்கவில்லை.

எனவே, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று சட்ட வடிவம் பெறுவதற்கு உடனடியாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என  தமிழக முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

மத்திய பாஜக அரசின் நீட் தேர்வு திணிப்பை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக அரசால் தடுக்க முடியவில்லை எனில், நீட் தேர்வை  தடுக்க எத்தகைய போராட்ட வழி முறைகளை கையாள்வது என்பது குறித்து விரைவில் முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்படும்  என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

Previous Post

இந்திய எல்லைக்குள் 40 ஆயிரம் சீனப் படைகள்: காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

Next Post

சீனாவின் விரிவாக்கத்தை முறியடிக்க என்ன வழி? சசி தரூர்

Admin

Admin

Next Post
shashi tharoor

சீனாவின் விரிவாக்கத்தை முறியடிக்க என்ன வழி? சசி தரூர்

Comments 1

  1. B.A.Sithik says:
    5 years ago

    கபில்சிபல், சசிதரூர்
    தமிழக காங்கிரஸ் தலைவர்
    திரு கே. எஸ்.அழகிரி
    ஆகியோர் கருத்துக்கள்
    முழுமையாக படித்தோம்.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com