• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home ஏவுகணைகள்

கொள்கை கூட்டணி குறித்து சந்தர்ப்பவாத கூட்டணினர் விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை! அமைச்சர் ஜெயகுமாருக்கு தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலடி!

by Admin
20/10/2020
in ஏவுகணைகள்
0
தமிழக அரசே! 10 ஆண்டுகளாகப் பணியாற்றும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்க! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை!
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் திரு டி.ஜெயக்குமார் அடிக்கடி பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பொருந்தாத வாதங்களின் அடிப்படையில் கருத்துக்களைக் கூறுவதன்மூலம் நகைச்சுவை மன்னனாகத் திகழ்ந்து வருகிறார். அதை உறுதி செய்கிற வகையில்,  வாகன தயாரிப்புத்தொழில் முடங்கியிருப்பதைப் போல தி.மு.க. தலைமையிலான கூட்டணி செயலற்று இருப்பதாகக் கூறியிருக்கிறார். மேலும் பல கட்சிகள்  அந்த கூட்டணியிலிருந்து  விலகி அ.தி.மு.க. கூட்டணியில் சேர இருப்பதாகவும் அடிப்படையே இல்லாமல் ஆதாரமற்ற அவதூறு கருத்தைக் கூறியிருக்கிறார். இந்த கூற்றுக்கு மாறாக இக்கூட்டணி உறுதியாகச் செயல்பட்டு வருவதைத் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மக்கள் நலன் சார்ந்து நீண்டகாலமாக ஒற்றுமையுடன் கட்டுக்கோப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டணியின் தலைவராக தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்து வழிநடத்தி வருகிறார். தமிழக மக்களைப் பாதிக்கிற எந்த பிரச்சனையாக இருந்தாலும், கூட்டணிக் கட்சிகளை அழைத்துப் பேசி கருத்துகளைப் பகிர்ந்து, விவாதித்து, தீர்மானமாக வடித்து, கொள்கைத் திட்டங்கள் வெளியிடப்படுகின்றன. மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவது, போராட்டங்கள் நடத்துவது என ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட அணுகுமுறைகளின் அடிப்படையில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்பது ஒரு கொள்கை கூட்டணி. அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியைப் போல சந்தர்ப்பவாதக் கூட்டணி அல்ல.

தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் அடிக்கடி கூடி விவாதித்து முடிவெடுப்பதைப்போல, அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் என்றைக்காவது மக்கள் பிரச்சினைகள் குறித்துக் கூடி பேசியிருக்கின்றனவா? விவாதித்திருக்கிறார்களா? முடிவெடுத்திருக்கிறார்களா? கூட்டணிக் கட்சிகள் என்பது அடிக்கடி கூடிப் பேசவேண்டும். கருத்தொற்றுமையுடன் செயல்பட வேண்டும். ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக, கூட்டணிக் கட்சி என்ற அடிப்படை இலக்கணத்தைக் கூட நடைமுறையில் கடுகளவும் கடைப்பிடிக்காத அ.தி.மு.க. கூட்டணியை என்னவென்று அழைப்பது?

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இருக்கிறதா? இல்லையா? என்பதே ஒரு கேள்விக்குறியாக உள்ளது. தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமியை தமிழக பா.ஜ.க. தலைவர் திரு எல்.முருகன் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசியிருக்கிறாரே தவிர, கூட்டணிக் கட்சிகள் என்ற முறையில் என்றைக்காவது கூடி விவாதித்திருக்கிறாரா?

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 2021 தேர்தலுக்குப் பிறகு திரு. எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அறிவிக்கப்படுகிறது. இந்த முடிவு எடுப்பதற்கு முன்பாக பா.ஜ.க. தலைமையோடு அ.தி.மு.க. தலைமை கலந்து பேசியிருக்கிறதா? அ.தி.மு.க. கூட்டணியில் குறைந்தபட்ச மரியாதை கூட இல்லாமல் இருப்பதை விட ஒரு அவமானம் பா.ஜ.க.வுக்கு இருக்க முடியாது. அ.தி.மு.க. கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் அங்கம் வகிக்கின்றன என்ற பெயரை டி.ஜெயக்குமாரால் வெளியிட முடியுமா? கடந்த 2019 மக்களவைத்  தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட கட்சிகளில் எந்தெந்த கட்சிகள் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கின்றன என்பதே சிதம்பர ரகசியமாக இருக்கிறது. இந்நிலையில், எஃகு கோட்டை போல உறுதியாக செயல்பட்டு வருகிற தி.மு.க. தலைமையிலான கூட்டணியைப் பற்றி பேச டி.ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் எவருக்கும் எந்த தகுதியும் கிடையாது.

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில், ஜெயலலிதா தலைமையில் போட்டியிட்ட அ.தி.மு.க. கூட்டணிக்கும், தி.மு.க. தலைமையிலான  மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே பெற்ற வாக்குகளின் மொத்த வித்தியாசம் 5 லட்சத்திற்கும் குறைவானது தான். அதாவது 1.1 சதவீதம் தான் வித்தியாசம். அந்த தேர்தல் முடிவின் அடிப்படையில் கடந்த நான்கு ஆண்டுகளில் நூற்றுக்கு இரண்டு பேர் அ.தி.மு.க. கூட்டணியை எதிர்த்து தி.மு.க. கூட்டணிக்குக் குறைந்தபட்சம் வாக்களித்தாலே எடப்பாடி ஆட்சி அகற்றப்படுவது உறுதி.

அ.தி.மு.க. கூட்டணியில்  பா.ஜ.க.வை சேர்த்தால் கடந்த மக்களவை தேர்தலைப் போல படுதோல்வி அடைய நேரிடும் என்ற அச்சம் அ.தி.மு.க. தலைமைக்கு இருக்கிறது. இந்த அச்சம் அ.தி.மு.க. தலைமைக்கு மட்டுமல்ல, அந்த கட்சியின் தொண்டர்களிடமும் இருக்கிறது. தமிழக மக்களால் அதிகம் வெறுக்கப்படுகிற கட்சியாக பா.ஜ.க. இருப்பதற்குக் காரணம் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் தான்.

எனவே, அ.தி.மு.க. கூட்டணியில் இவ்வளவு குழப்பங்களை வைத்துக்கொண்டு தமிழக மக்களின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு, அவர்களது உரிமைகளைப் பாதுகாக்கிற கேடயமாகவும், மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுகிற வாளாகவும் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி விளங்குகிறது. எனவே, எப்பொழுதும் போல நையாண்டி பேசி, காமெடி அரசியல் நடத்துவதைத் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Previous Post

விவசாய விளைப் பொருள் சந்தை குறித்து காங்கிரசின் அணுகுமுறை என்ன ? ப. சிதம்பரம் விளக்கம்

Next Post

குறைந்தபட்ச ஆதரவு விலை ஏன் தேவை? விவசாயிகள் போராடுவது ஏன்? : விரிவான அலசல்

Admin

Admin

Next Post
குறைந்தபட்ச ஆதரவு விலை ஏன் தேவை? விவசாயிகள் போராடுவது ஏன்? : விரிவான அலசல்

குறைந்தபட்ச ஆதரவு விலை ஏன் தேவை? விவசாயிகள் போராடுவது ஏன்? : விரிவான அலசல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com