unemployment Archives - தேசிய முரசு - Desiya Murasu

இந்தியாவில் இதுவரை 15 கோடி பேர் வேலை இழப்பு: ட்விட்டரில் பொங்கி எழுந்த 40 லட்சம் இளைஞர்கள்
கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு 6 மாதங்கள் முடிந்துள்ள நிலையில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள வேலை இழப்பு பிரச்சினை அபாயக் கட்டத்தை எட்டியுள்ளதாக, நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.

இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த பாதிப்பு அடுத்த தலைமுறையையும் பாதிக்கும் என எச்சரிக்கிறார் இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தலைமை செயல் அதிகாரியும், பொருளாதார நிபுணருமான  மகேஷ் வ்யாஸ்.

இந்த சூழலில், பிரதமர் மோடியின் 70 ஆவது பிறந்தநாள் அன்று, ட்விட்டரில் புயலே வீசியது.

பிரதமரின் பிறந்தநாளைத் தேசிய ‘வேலையில்லா திண்டாட்ட  தினமாக’ 40 லட்சம் ட்விட்டர் பதிவாளர்கள் கடைப்பிடித்தனர். 2 கோடி இளைஞர்களுக்கு ஆண்டுதோறும் வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என, கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி அளித்த வாக்குறுதியைக் கேலி செய்து பதிவிட்டிருந்தனர்.

அரசு ஊழியர்கள் பொது முடக்கத்துக்குப் பிறகும் முழுச் சம்பளம் பெறுகின்றனர். அவர்களுக்கு வேலைப் பாதுகாப்பு உள்ளது. அதனால் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருப்பவர்கள் அரசு வேலையை எதிர்பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அமைப்பு சாரா மற்றும் தனியார் துறையில் திடீரென வேலை இழப்பு ஏற்பட்டதால், ஏராளமானோர் வருவாயை இழந்துள்ளனர்.

பொது முடக்கத் தளர்வுகளை அறிவித்து வேலைக்குப் போகச் சொன்னார்கள். ஆனால், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகளில் வேலை இல்லாமல் போனது. வருவாய் இழப்பால் குடும்பத்தை  எப்படி சமாளிப்பது என்று புரியாமல் லட்சக்கணக்கானோர் தவிக்கின்றனர்.

தனியார் வேலைக்கு உத்தரவாதம் இல்லாததால், பல  இளைஞர்களுக்குத் திருமணம் நடப்பதுகூட கேள்விக்குறியாகியுள்ளது. அரசுப் பணி இருந்தால் மட்டுமே அவர்களுக்குப் பெண் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை மத்திய அரசு நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை இளைஞர் மத்தியில் எழுந்துள்ளது.

அரசுத் துறைகள் தனியார்மயமாவதையும், பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று ட்விட்டரில் பொங்கி எழுந்துள்ளனர் இளைஞர்கள்.
கடந்த 3 ஆண்டுகளாக வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்துக்குப் பிறகு, வேலை இல்லா திண்டாட்டம் இன்னும் அதிகரித்து இளைஞர்கள் வாழ்க்கை இருளில் மூழ்கியுள்ளது. இத்தகைய நிலை, கிரிமினல் குற்றங்கள் அதிகரிக்க வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த 1932-33 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை உச்சத்திலிருந்தபோது, ஒன்றரை கோடி பேர் வேலை இழந்தனர். இது குறித்து யோகேந்திர யாதவ் எழுதிய கட்டுரை ஒன்றில், ‘வேலைவாய்ப்பின்றி இருப்போர் எண்ணிக்கை 5 கோடியைத் தாண்டக் கூடாது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்தின் மதிப்பீட்டில், கடந்த ஏப்ரல்-ஆகஸ்ட் மாதங்களில் இந்தியாவில் 12 கோடி பேர் (மாத ஊதியம் பெற்று வந்தவர்கள்) வேலை இழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை 15 கோடியைத் தாண்டும் என்றும் அந்த மதிப்பீட்டில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையே 33 கோடி தான். அதில் பாதி அளவுக்கு இந்தியாவில் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதை நினைக்கும் போது, ட்விட்டரில் கொதித்து எழுந்த இளைஞர்களின் பக்கம் நியாயம் இருப்பது புரிகிறது.

The post இந்தியாவில் இதுவரை 15 கோடி பேர் வேலை இழப்பு: ட்விட்டரில் பொங்கி எழுந்த 40 லட்சம் இளைஞர்கள் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

முடங்கிப்போன பொருளாதாரத்தை மீட்க என்ன வழி? புதிய வேலை வழங்க பா.ஜ.க. அரசிடம் என்ன திட்டம் உள்ளது?: பேராசிரியர் கவுரவ் வல்லப் கேள்வி
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் பேராசிரியர் கவுரவ் வல்லப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஒவ்வொரு ஆண்டும் பல கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற, அதே பழைய புராணத்தை பாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நடந்தபாடில்லை. காலாண்டில் ஜி.டி.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9 சதவிகிதமாக சுருங்கியதையடுத்து, இந்திய பொருளாதாரம் இருண்டு காணப்படுகிறது. ஜி.டி.பியில் அமைப்பு சார்ந்த துறைகள் உட்படுத்தப்படவில்லை என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். அமைப்பு சார்ந்த துறையையும் இணைத்தால், எண்ணிக்கை பயமுறுத்தும். முடங்கிப் போன இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க பின்வரும் 3 வழிகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்குமாறு, அரசுக்கு கோரிக்கை வைத்தோம்.:

குடும்பம் மற்றும் தனியார் செலவு மற்றும் தேவையை அதிகரிக்க வேண்டும். இந்த இரண்டின் வழியாகத்தான் கிட்டத்தட்ட 76 சதவிகித முதலீடு நடக்கிறது.

தொழிற்துறையை ஊக்குவிக்க அடிப்படை செலவினங்களை அதிகரித்தால், தொழிற்துறை நடவடிக்கைகள் வேகமாக நடைபெறுவதுடன் வேலை வாய்ப்புகளும் உருவாகும்.

கிராமம் மற்றும் நகர்ப் புறங்களில் நிலையான வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.

நாட்டில் 42 கோடியே 80 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். வேலை இன்றி 3 கோடியே 60 லட்சம் பேர் உள்ளனர். இந்த நேரத்தில் வேலைவாய்ப்பை அதிகரிப்பது அரசின் முதன்மை நடவடிக்கையாக இருக்க வேண்டும். இந்திய பொருளாதாரத்தில், கிராமப் பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கிராமப் புறங்களிலும் வேலை இழப்பு அதிகரித்துள்ளது. பிரச்சினை இரண்டு விதமாக உள்ளது. நகர்ப்புறம் மற்றும் கிராமப் புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கும் திறனற்ற அரசாக மோடி அரசு உள்ளது. அடுத்ததாக, காலிப் பணியிடங்களை நிரப்புவதில் அரசு காட்டும் அக்கறையின்மை மிகவும் வினோதமாக உள்ளது.

21 துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிக்கையை ரயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதோடு தேர்வு விதிமுறைகள் குறித்தும் வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

காலியாக உள்ள 2 லட்சத்து 14 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப 2 கோடியே 88 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த விண்ணப்பங்கள் மூலம் தேர்வு கட்டணமாக ரூ. 1,025 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த கணக்கு, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல்தான். அரசின் இயலாமையால் ஏற்படும் சுமையை இளைஞர்களின் தோள்களில் ஏற்றக்கூடாது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்போர் வசதிபடைத்த குடும்ப பின்னணியில் இருந்து வருவதில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 2 லட்சத்து 15 ஆயிரம் பணியிடங்களை நிரப்பாததால், 2 லட்சத்து 15 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அரசிடம் நான் கேட்கும் 3 முக்கிய கேள்விகள்:

காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பெரும்பாலான அறிவிக்கை, தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்பு வெளியிடப்படுவது ஏன்? உண்மையிலேயே பணியிடங்கள் காலியாக உள்ளனவா? இல்லை, ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 ஆயிரம் போடுவோம் என்று சொன்னது போன்ற, வெறும் அரசியல் வித்தையா?

பொருளாதாரத்தின் தேவை அதிகரிக்கும் போது, லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்கி அதனை பொருளாதாரத்துடன் இணைத்திருக்க வேண்டும் என்பதில் உங்கள் கவனம் இருந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் இத்தகைய நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை?. எதுவும் செய்யாமல் இருந்தது, தவறான நோக்கம் கொண்டதா? அல்லது தவறான செயல்பாடா?

இந்திய ரயில்வேயில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான காலம் நீண்டுகொண்டு இருக்கும்போது, மற்ற துறைகளில் பணியிடங்கள் நிரப்ப எவ்வளவு காலம் ஆகும்? காலிப் பணியிடங்களை நிரப்புவதில் காலம் தாழ்த்த மாட்டோம் என மத்திய அரசு உறுதி தருமா?

The post முடங்கிப்போன பொருளாதாரத்தை மீட்க என்ன வழி? புதிய வேலை வழங்க பா.ஜ.க. அரசிடம் என்ன திட்டம் உள்ளது?: பேராசிரியர் கவுரவ் வல்லப் கேள்வி appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

‘காணாமல் போன வளர்ச்சி’ : களைகட்டும் காங்கிரஸின் சமூக ஊடகப் பிரச்சாரம்
வேலைவாய்ப்பு இழப்பு, வளர்ச்சி உள்ளிட்ட பல விசயங்களில் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டதாக, சமூக ஊடகம் மூலம் காங்கிரஸ் கட்சி பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவின்  ”காணாமல் போன வளர்ச்சி” என்ற பிரச்சாரத்தில் இணைந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமது ட்விட்டர் பதிவில் மோடி அரசை கடுமையாக சாடியுள்ளார்.

ஆகஸ்ட் மாதத்தில்  கிராமப்புறங்களில்  வேலை இழப்பு அதிகரித்துள்ளதை ட்விட்டர் பதிவில் சுட்டிக் காட்டியுள்ள ராகுல் காந்தி, ”12 கோடி வேலை வாய்ப்புகள் பறிபோயுள்ளன. 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் காணாமல் போய்விட்டது. நாட்டின் பாதுகாப்பும் எதிர்காலமும் காணாமல் போய்விட்டன. நீங்கள் கேள்வி கேட்டால், அதற்கு பதிலும் காணாமல் போகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு ட்வீட்டில், வேலைவாய்ப்பு வழங்குமாறும், நாட்டில் உள்ள இளைஞர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறும், மோடி அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா தமது ட்விட்டர் பதிவில், ”வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அரசின் பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கும் அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  கடந்த சில ஆண்டுகளாக பட்டப்படிப்பு படித்தவர்களுக்காக அரசு வேலை வாய்ப்பை உருவாக்கும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் தேர்வுகள் முடங்கியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
2017 ஆம் ஆண்டுக்கான ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நியமனம் செய்யப்படவில்லை. 2018 ஆம் ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. 2019 ஆம் ஆண்டு தேர்வு நடத்தவில்லை. 2020 ஆம் ஆண்டுக்கான காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. காலிப் பணியிடங்கள் இருந்தால், தேர்வு கிடையாது. தேர்வு நடந்தால் முடிவுகள் வெளியிடுவதில்லை. முடிவுகள் வெளியிடப்பட்டால், தேர்வு கிடையாது” என்று பிரியங்கா இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.

தொடர்ந்து அவர் குறிப்பிடும்போது, ”தனியார் துறையில் வேலை இழப்பு, அரசுப் பணிக்கான தேர்வு நிறுத்தம் ஆகியவற்றால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.  ஆனால், உண்மை நிலையை மறைத்துவிட்டு, விளம்பரங்கள் மூலம் மோடி அரசு பொய் சொல்லிக் கொண்டிருக்கிறது” என்று சாடியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”ரயில்வே மற்றும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் மூலம் 2 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டியுள்ளது” என்றார்.  தொடர்ந்து பேசிய அவர், ஒரு விண்ணப்பத்துக்கு தேர்வு கட்டணமாக 2 கோடியே 50 லட்சம் விண்ணப்பதாரரிடம் இருந்து ரூ.1,000 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இதற்கிடையே, மோடி அரசை  காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கடுமையாக சாடியுள்ளார். ”இந்தியாவில் வறுமை அதிகரித்துள்ளதாக ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், 40 கோடி இந்தியர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே சென்றுள்ளதாக, சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறியுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post ‘காணாமல் போன வளர்ச்சி’ : களைகட்டும் காங்கிரஸின் சமூக ஊடகப் பிரச்சாரம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

தமிழத்தில் 53 சதவீத குடும்பத்தினர் வேலை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குக! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை!
கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாதந்தோறும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதாக அந்த தளர்வுகள் இல்லை.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் சொல்லொண்ணா துயரத்தில் உள்ளனர். பல குடும்பங்களில் வறுமை தாண்டவமாடுவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கும் எந்த திட்டமும் தமிழக அரசிடம் இல்லை.

கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் 53 சதவிகித குடும்பத்தினரில், குறைந்தது ஒருவராவது வேலை இழந்துள்ளதாக, தமிழக அரசு நடத்திய கணக்கெடுப்பில்  தெரியவந்துள்ளது.

ஊரடங்கால் நகர்ப்புறத்தினர் 50 சதவிகிதத்தினரும்,   கிராமப்புறத்தில் 56 சதவிகிதத்தினரும்  வேலை இழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 53 சதவீத குடும்பங்களில் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த 3 மாத காலத்தில், கிராமப்புறத்தில் 92 சதவிகித குடும்பங்களிலும், நகர்ப்புறத்தில் 95 சதவிகித குடும்பங்களிலும் ஒன்றிலிருந்து இரண்டு பேர் வரை வேலை இழந்துள்ளனர். மேலும், மீதமுள்ள 8 சதவிகித கிராமப்புற குடும்பங்களிலும், 5 சதவிகித நகர்ப்புற குடும்பங்களிலும்  3 முதல் 5 பேர் வரை வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகவும் அந்த கணக்கெடுப்பு கூறுகிறது.

வேலை இழந்தோரில் 83.4 சதவிகிதத்தினர் அன்றாடக்  கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். 13.3 சதவிகித குடும்பங்களில் வேலை இழந்தோர் தனியார் துறைகளில் பணி புரிந்தவர்களாக உள்ளனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், ஊரடங்குக்கு முன்பு 37 சதவிகித கிராமப்பற குடும்பத்தினர் பணியாற்றினர். இவர்களில் மூன்றில் 2 சதவிகிதத்தினர் கடந்த ஏப்ரல் மாதம் வேலைக்கு திரும்பினர். ஆனால், 1 சதவிகிதத்தினர் ஊரடங்கால் வேலை இழந்துள்ளனர்.

ஊரடங்கு காரணமாக 67 சதவிகித தமிழக குடும்பத்தினர் வருவாயை இழந்துள்ளனர். கிராமப் புறங்களில் கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூபாய் 11,472 ஆக இருந்த சராசரி வருமானம், மே மாதத்தில் ரூபாய் 6,522 ஆக குறைந்துள்ளது. நகர்ப்புறங்களில் கடந்த பிப்ரவரி மாதம் ரூபாய் 17,717 ஆக இருந்த சராசரி குடும்ப வருமானம், மே மாதத்தில் ரூபாய் 11 ஆயிரத்து 337 ஆக குறைந்துள்ளது.

தமிழகத்திலேயே விருதுநகர் மாவட்டம் தான் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இங்கு 67 சதவிகித குடும்பத்தினர் வேலை இழந்துள்ளனர். வெளிமாநிலங்களில் வேலை இழந்து 8.19 சதவிகிதத்தினர் தமிழகம் திரும்பியுள்ளனர். இவர்களும் வருமானம் இன்றி வறுமையில் வாடிக்  கொண்டிக்கின்றனர்.

இத்தகைய புள்ளிவிவரங்கள் தமிழக மக்களின் நிலைகுலைந்து போன வாழ்க்கையைப் படம்பிடித்துக்  காட்டுவதாக உள்ளன. இவர்களுடைய வாழ்க்கை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இதற்காக ஏதும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா? விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூபாய் 2 ஆயிரம் உதவியும், மக்களுக்கு வழங்கப்படும் இலவச ரேஷன் பொருட்களும் அவர்களது வாழ்வாதாரத்திற்க்கு போதுமானதா? என்பது குறித்து  தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.

மேலும், பொருளாதாரத் தொகுப்பாக குறைந்தது மாதம் ரூபாய் 5 ஆயிரமாவது கொடுத்தால் மட்டுமே, வறுமையில் வாடும் மக்கள் ஓரளவுக்கு வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முடியும். இதற்கான நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில், தொடங்குமாறு முதலமைச்சர் எடப்பாடிச் பழனிசாமியை கேட்டுக்  கொள்கிறேன்.

The post தமிழத்தில் 53 சதவீத குடும்பத்தினர் வேலை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குக! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.