Tamilnadu Archives - தேசிய முரசு - Desiya Murasu

நடனம், உடற்பயிற்சி, தன்னம்பிக்கை, அரசியல் உரையாடல் : நம்பிக்கையை விதைத்த ராகுல் காந்தி
”தலைவர்கள் மக்களிடமிருந்து தான் உருவாகிறார்கள். அவர்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல…”என்பதைப் பொட்டில் அடித்துச் சொல்லியிருக்கிறது ராகுல் காந்தியின் தமிழகப் பயணம்.

இது ஒரு தலைமுறையின் வழக்கம் அல்ல. ஜவஹர்லால் நேரு,இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோரும் மக்களோடு மக்களாகக் கலந்து அவர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்கள். மக்களிடம் நெருங்கினால் தான் அவர்களது வலியைப் புரிந்து கொள்ள முடியும் என்பதை உள்வாங்கியவர்கள். இதில் ராகுல் மட்டும் மாறுபடுவாரா என்ன?

தொழிற்துறையினர் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களிடம் நெருங்கி, அவர்களுடன் பேசிய விதம் அவருக்கு இயற்கையாகவே அமைந்த பாசப் பிணைப்பைக் காட்டியது. பல ஆண்டுகளாகப் பிரச்சினைகளைச் சுமந்து கொண்டு அழவும் முடியாமல், சிரிக்கவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மக்களுக்கு, கலங்கரை விளக்கமாக ராகுல் காந்தி தெரிகிறார்.

தமிழகத்தின் கலாச்சாரம்,தமிழர்களின் வாழ்வுரிமை,தமிழர்களின் பண்பாட்டை இந்த அளவுக்கு சமீபகாலமாக உரக்கச் சொல்லியவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம். அந்த அளவுக்கு அவரது குரல் இந்தியா முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

ஊருக்கு ஒரு பேச்சு பேசும் அரசியல் வியாபாரி அல்ல அவர். தமிழகத்தில் திருக்குறளையும், மேற்கு வங்கத்தில் மார்க்ஸியத்தையும், நாக்பூரில் மதவாதத்தையும் பேசும் அரசியல்வாதிகள் மத்தியில் உண்மை பேசும் ஒரே தலைவராக ராகுல் காந்தி மிளிர்கிறார்.

‘பஞ்சாபியர்களும் தமிழர்களும் சுயமரியாதை மிக்கவர்கள்’ என்று சொன்னார். மற்ற மாநிலத்தவர் வாக்குகள் போய்விடுமே என்று நினைக்கவில்லை. ஊருக்கு ஒரு வேடம் போட அவருக்குத் தெரியாது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டில் தொடங்கிய அவரது பயணம் தமிழகம் முழுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு இடத்திலும் ஒரு சுவையான சம்பவம். இவ்வளவு எளிமையான தலைவரை, அதுவும் மிக அருகில், தங்களுக்காகக் குரல் கொடுத்துக் கட்டி அணைக்கும் தலைவரைத் தமிழக மக்கள் மிகவும் நேசிக்கத் தொடங்கியிருக்கிறார்.

‘ராகுல் என்று அழையுங்கள், சார் வேண்டாம்…’ என்ற சொன்ன போது, ‘எங்கள் ஊரில் பெரியவர்களைப் பெயர் சொல்லி அழைப்பதில்லை…’ என்று ஒரு மாணவி கூறுகிறார். அதற்கு,’ ராகுல் அண்ணா என்று அழையுங்கள்’ என்கிறார். அங்கே மாணவிகள் எழுப்பிய கரவொலி அடங்க வெகுநேரமானது.

சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டம் முலகுமூடு கிராமத்தில் உள்ள செயின்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்ற ராகுல் காந்தி, 12 ஆம் வகுப்பு படிக்கும் கிளாடிஸ் ருபெல்லாவுடன் மேடையிலேயே நடனம் ஆடினார். கேள்வி கேட்க ருபெல்லா தயாரானபோது, நீங்கள் என்னுடன் சேர்ந்து பாட விரும்ப மாட்டீர்கள் என்று நம்புகிறேன் என்று சிரித்துக் கொண்டே. உடனே பதில் அளித்த ருபெல்லா, ”நண்பர்களே! ராகுலுக்காக நான் பாட்டு எழுதியுள்ளேன். நான் பாடும்போது நீங்கள் நடனம் ஆடுகிறீர்களா?என்று கேட்டார். அதனை ராகுலும் ஏற்றுக் கொண்டார். ருபெல்லாவின் 3 தோழிகள் நடனம் ஆட மேடைக்கு வந்தனர். அப்போது ராகுல், ”ஒரு நொடி பொறுங்கள்”என்றார். மேடையைச் சுற்றிப் பார்த்தவர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியையும், அகில இந்திய காங்கிரஸின் தமிழக பொறுப்பாளருமான தினேஷ் குண்டு ராவையும் மேடைக்கு அழைத்தார்.

நான் மட்டும் தனியாக நடனம் ஆடினால் மோசமாக இருக்கும் என்று தெரிவித்த ராகுல், வலது பக்கம் ருபெல்லா தோழிகளின் கைகளைக் கோர்த்தும் வலதுபுறம் தினேஷ் குண்டு ராவ் உள்ளிட்டவர்களின் கையைப் பிடித்தவாறு காலை அசைத்தவாறு நடனம் ஆடினார். ராகுல் குறித்து ருபெல்லா பாடி முடிந்ததும், அங்கிருந்த மாணவ, மாணவிகள், ராகுல், ராகுல் என்று உற்சாகமாகக் குரல் எழுப்பினர்.

நன்றாகப் பாடினார் என்று ருபெல்லாவை பாராட்டிய ராகுல், ‘என் நடத்தை விட அவரது பாடியது சிறப்பாக இருந்தது’ என்றார். ருபெல்லா பாட்டுப் பாடுவதில் மாநில விருதைப் பெற்றவர் என்று கூறிய பாதிரியார் டோமினிக், நீங்களும் அருமையாக நடனம் ஆடினீர்கள் என்று ராகுலைப் பாராட்டினார்.

முன்னதாக, கருத்துச் சுதந்திரத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து ராகுல் காந்தியிடம் ருபெல்ல கேள்வி எழுப்பினார். மற்றொரு சுதந்திரப் போராட்டத்துக்கு அவசியம் ஏற்பட்டுள்ளதா? என்றும் கேட்டார்.

அதற்குப் பதில் அளித்த ராகுல், ” ஆம். இந்தியாவுக்கு மற்றொரு சுதந்திரப் போராட்டம் தேவைப்படுகிறது. அத்தகைய போராட்டம் வன்முறை அல்லாத நேசத்துடனான போராட்டமாக இருக்க வேண்டும் .நாடு முழுவதும் கோபமும் அச்சமும் விரிவுபடுத்தப்படுகிறது. அச்சம், கோபம், பிளவுபடுத்தும் சக்திகளை எதிர்த்து நாம் போராட வேண்டும். அப்போது தான் மகிழ்ச்சியான, அச்சமில்லாத, ஒன்றுபட்ட இந்தியாவைக் காண முடியும்”என்றார்.

கடலில் குதித்தார் ராகுல், நடனம் ஆடினார் ராகுல். இந்த நிலையில், மெரோலின் என்ற மாணவி, நீங்கள் ‘புஷ் அப்’ எடுப்பீர்களா என்று கேட்டார். அந்த மாணவியையும் அழைத்து தன்னோடு சேர்ந்து ‘புஷ் அப்’ செய்யச் சொன்னார்.

அந்த மாணவியைவிட வேகமாக புஷ் அப் செய்தார் ராகுல். அதோடு ஒரு கையை தாங்கியவாறும் ‘புஷ் அப்’ செய்தார். இதனைப் பார்த்த அனைவரும் கரகோஷம் எழுப்பினர். பாதிரியார் டோமினிக் கட்டிப்பிடித்து ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்தார். ராகுல் ப்ரூஸ்லீயைப் போல் செய்ததாகப் பாதிரியார் டோமினிக் கூறினார். மெரோலினை அழைத்து தன்னுடன் நிற்கவைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ராகுலுடன் புகைப்படம் எடுக்கும் முன்பு, வறுமை ஒழிப்பு குறித்து சைஷானியா என்ற மாணவி கேள்வி எழுப்பினார். கடந்த மக்களவை தேர்தலில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் உதவி வழங்கும் நியான் திட்டத்தைத் தேர்தல் வாக்குறுதியாகக் காங்கிரஸ் அறிவித்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்திருந்தால், இந்த திட்டத்தைச் செயல்படுத்தியிருப்போம். அடுத்த 5 ஆண்டுகளில் வறுமையை ஒழித்திருப்போம்” என்றார்.

‘புதுக்கோட்டையில் உள்ள குறிப்பிட்ட சமையல் குழுவினருடன் இணைந்து சமையல் செய்ததில் முக்கிய காரணம் ஏதும் உண்டா?’ என ஒரு மாணவி கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த ராகுல், ”அந்த சமையல் குழுவினர் சுவாரஸ்யமானவர்கள். இவர்களைப் போல மற்ற குழுவினரின் உணவு, மொழி மற்றும் மாநிலத்தின் கலாச்சாரத்தை அறிந்து கொள்ள விரும்புகின்றேன்” என்றார்.

ஓவியர் அசோக்கிடம் பயிற்சி பெற்ற 7 ஆம் வகுப்பு மாணவர் சன்னி வரைந்த நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் ஓவியத்தை, ராகுலிடம் பாதிரியார் டோமினிக் நினைவுப் பரிசாக வழங்கினார். அப்போது ராகுல் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் வெளியேறியபோது, அந்த சூழல் இறுக்கமாக மாறியது.

மக்களோடு மக்களாகக் கலந்து அவர்கள் இதய சிம்மாசனத்திலும் ராகுல் இடம்பிடித்துவிட்டார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர் நடத்தும் உரையாடல்கள் மாற்றத்துக்கான விதைகளை தூவிக் கொண்டிருக்கின்றன. நல்லதை மக்கள் அறுவடை செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் உறுதி.

The post நடனம், உடற்பயிற்சி, தன்னம்பிக்கை, அரசியல் உரையாடல் : நம்பிக்கையை விதைத்த ராகுல் காந்தி appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

எதார்த்த அணுகுமுறையின்படி தொகுதி பங்கீடு செய்து கொள்வோம் : தினேஷ் குண்டு ராவ் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதைக் கண்டறிந்து வருவதாகவும், பேரம் பேச மாட்டோம் எனவும், அகில இந்திய காங்கிரஸின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்துக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளைக் கட்சி தொடங்கியுள்ளது. வலுவான மற்றும் நல்ல வேட்பாளர்களை நிறுத்துவதற்கான ஆலோசனையும் தொடங்கியிருக்கிறது.

நாங்கள் அதை முக்கியமான, நடைமுறை கோணத்தில் பார்க்கிறோம். தொகுதிவாரியாக உள்ள எதார்த்தங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மற்ற விசயங்களைவிடக் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியம்.

பீகார் தேர்தல் முடிவுகள் எங்களைப் பாதிக்காது. தமிழகத்தின் அரசியல் களம் வேறு. திமுகவுடனான எங்கள் கூட்டணி ஏற்கனவே பரிசோதிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில்  கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதைப் போல் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலிலும் இணைந்து போட்டியிடுவோம். பீகாரில் மக்களவைத் தேர்தலில் எங்கள் கூட்டணி தோல்வியடைந்தது. ஆனால், தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றது. களத்தில் சிறப்பாகப் பணியாற்றியதோடு, மக்களின் ஏகோபித்த ஆதரவையும் எங்கள் கூட்டணி பெற்றது. அதேபோன்ற மக்கள் ஆதரவு இனியும் தொடரும்.

வாக்கு வித்தியாசம் குறையும் போது திமுக மற்றும் தோழமை கட்சிகளுக்கு வலுவூட்டக் காங்கிரஸ் கட்சியால் முடியும். கடும் போட்டி நிலவும் 100 தொகுதிகளில் திமுகவுக்கு நாங்கள் உதவிகரமாக இருப்போம்.

எதார்த்த அணுகுமுறையின்படி தொகுதிப் பங்கீடு நடக்கும். நேர்மையான மற்றும் வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தி எங்கள் தோழமைக் கட்சிகளை சமாதானப்படுத்த முயல்வோம். தேவையற்ற பேரங்கள்  இருக்காது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, கடந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தமிழக முதலமைச்சராக அமர வைக்கக் காங்கிரஸ் பணியாற்றும்.

தமிழகத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு தினேஷ் குண்டு ராவ் தெரிவித்தார்.

The post எதார்த்த அணுகுமுறையின்படி தொகுதி பங்கீடு செய்து கொள்வோம் : தினேஷ் குண்டு ராவ் அறிவிப்பு appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

எளிதாக தொழில் நடத்தும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 14ஆவது இடம். எங்கே முதலீடு? தொழில் வளர்ச்சி? வேலை வாய்ப்பு? தலைவர் கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு
மாநில தொழில் சீர்த்திருத்த செயல்திட்டம் – 2019 அடிப்படையில் எளிதாக தொழில் நடத்துவதற்கான சூழலை மேம்படுத்தும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. கட்டுமான அனுமதி, தொழிலாளர்கள் கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் பதிவு, தகவல்கள் அணுகுதல், நிலம் கிடைக்கும் தன்மை, ஒற்றைச் சாளர அனுமதி என பல அம்சங்களின் அடிப்படையில் ஆராயப்பட்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் எளிதாக தொழில் நடத்துவதற்கு உகந்த மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா முதல் இடம் வகிக்கிறது. தமிழகம் பதினான்காவது இடத்தில் உள்ளது. ஆந்திர மாநிலம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. இந்த தரவரிசை  பட்டியலை டெல்லியில்  நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தொழில் வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

மத்திய அரசின் தரவரிசை பட்டியலை பொறுத்தவரை 2018 ஆம் ஆண்டு பனிரெண்டாவது இடத்தில் இருந்த உத்திரபிரதேச மாநிலம் இரண்டாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது.  இந்த தரவரிசை பட்டியலை பொறுத்தவரை மத்திய அரசே வெளியிடுவதன் மூலம் மாநிலங்களிடையே தொழில் தொடங்குவதற்கான சீர்திருத்த நடவடிக்கைகளையும், தொழில் தொடங்க எளிதாக அனுமதி வழங்குவதிலும், போட்டித் தன்மையை வளர்த்து, முதலீடுகளை அதிகமாக பெறுவதற்கு வழிவகை செய்கிறது. இந்த வகையில் முதல் பத்து மாநிலங்களில் கூட இடம்பெற முடியாமல் தமிழகம் பதினான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது பல்வேறு நிலைகளில் முதலீடுகளை பாதிப்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த பட்டியலை பார்க்கிறபோது முதலீடு செய்பவர்கள் ஆந்திர மாநிலத்திற்கு செல்வார்களேயொழிய தமிழகத்திற்கு வரமாட்டார்கள்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ரூ. 100 கோடி செலவில் ஆடம்பரமாகவும், கோலாகலமாகவும், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு முதலீடுகள் குவிந்து, வேலைவாய்ப்புகள் பெருகியதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் ஏமாற்றமே மிஞ்சியது.

இதை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் 304 நிறுவனங்களோடு ரூ. 3 லட்சத்து 431 கோடி முதலீடு பெறப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதை தொடர்ந்த 63 திட்டங்களுக்கு  ரூ. 19 ஆயிரம் கோடி முதலீடும், 83 ஆயிரத்து 300 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்ததாக அறிவித்தார். அடுத்த கட்டமாக 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு 31,464 கோடி முதலீட்டால் 69,712 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அறிவித்தார். அவரது அறிவிப்பின் படி 1 லட்சத்து 53 ஆயிரத்து 12 பேருக்கு மொத்தம் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதாக கூறுகிறார். ஆனால் எளிதாக தொழில் நடத்த உகந்த மாநிலங்களில் பதினான்காவது இடத்தில் இருக்கிற தமிழகம், தமிழக முதலமைச்சர் எடப்பாடியின் அறிவிப்பின் படி மொத்தம் ரூ. 3 லட்சத்து 50 ஆயிரத்து 895 கோடி முதலீடுகள் பெற்றிருக்கிறது.

தமிழக முதலமைச்சர் அறிவித்திருக்கிற முதலீட்டு தொகைக்கும், வேலை வாய்ப்பு எண்ணிக்கைக்கும் என்ன அடிப்படை ஆதாரம் என்று எவராலும் தெரிந்துகொள்ள முடியவில்லை. அறிவிப்புகள் எல்லாம் ஒரே மர்மமாக இருக்கின்றன. எந்த இடத்தில், எந்த தொழில்சாலையில், எத்தனை பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன என்ற தகவலை தமிழக அரசின் இணையதளத்தில் உடனே வெளியிடவேண்டும். முதலமைச்சரின் அறிவிப்புகளுக்கும், கள நிலவரத்திற்கும் எந்த தொடர்பும் டு இன் இல்லை.

கொரோனா தொற்றினால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டு, தொழில்சாலைகள் நலிவடைந்து, வேலை வாய்ப்புகள் இழந்து, பொருளாதார ரீதியாக பேரழிவை சந்தித்துக்கொண்டிருக்கிற நிலையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் அடிப்படையில் வெளிப்படுகிற அறிவிப்புகள் எவையுமே நம்பக்கூடியதாக இல்லை. இவை வெறும் கண்துடைப்பு அறிவிப்புகளாகவே கருத்தப்படவேண்டியிருக்கிறது. நம்மால் காணமுடியாத ஒன்றை நமது முதலமைச்சர் கற்பனையாக அறிவித்துக்கொண்டிருக்கிறார். எதார்த்த நிலைக்கும், முதலமைச்சர் அறிவிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை.

கடந்த ஜூலை 31 ஆம் தேதி நிலவரப்படி வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தில்  66.37 லட்சம் பேர் பதிவு செய்து வேலைக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள்.  இதில் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் 12.50 லட்சம் பேர். 19 முதல் 23 வயதுவரை உள்ளோர் 17.46 லட்சம் பேர். 24 முதல் 35 வயது உள்ளவர்கள் 24.55 லட்சம் பேர் என்று வேலைவாய்ப்பு பதிவு அலுவலகக் குறிப்பு கூறுகிறது. தமிழக அரசின் வேலையில்லா திண்டாட்டத்தை வேலைவாய்ப்பு பதிவு அலுவலகமே புள்ளிவிபரங்களோடு உறுதி செய்கிறது.

இந்நிலையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை காரணம் காட்டி முதலீடு குவிந்ததாகவோ, வேலைவாய்ப்பு பெருகியதாகவோ கூறுவதை எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நம்பவும் மாட்டார்கள். ஏனெனில் மத்திய அரசு வெளியிட்ட தரவரிசை பட்டியலில் எளிதாக தொழில் நடத்த உகந்த மாநிலமாக தமிழகம் இல்லாமல் போனதற்கு என்ன காரணம் என்பதை தமிழக முதலமைச்சர் ஆய்வு செய்யவேண்டும்.

இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று தம்பட்டம் அடிப்பதை இனியாவது தமிழக ஆட்சியாளர்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும். அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி குன்றி, தாழ்ந்த நிலைக்கு சென்றுகொண்டிருப்பதை மத்திய அரசின் தரைவரிசைப் பட்டியலே அம்பலப்படுத்தியிருப்பதை தமிழக முதலமைச்சர் உணரவேண்டும்.

The post எளிதாக தொழில் நடத்தும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 14ஆவது இடம். எங்கே முதலீடு? தொழில் வளர்ச்சி? வேலை வாய்ப்பு? தலைவர் கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

அனிதாவை காவு வாங்கிய ‘நீட்’ : நீதி கேட்டு போராடிய 25 இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறி
‘நீட்’ நுழைவுத் தேர்வு அனிதாவை காவு வாங்கி 3 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அப்போது அனிதாவுக்காக நீதி கேட்டு போராடிய 25 இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, கடந்த 2017 ஆம் ஆண்டு பிளஸ் டூ தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மருத்துவம் படிக்கும் வாய்ப்பு இவருக்கு கைக்கு எட்டும் தொலைவில் இருந்தது. ஆனால், நீட் தேர்வை அந்த ஆண்டு அமல்படுத்தியதால், மருத்துவம் படிக்கும் வாய்ப்பை அனிதா இழந்தார். தந்தை கூலித் தொழிலாளியாக இருந்த நிலையில், கஷ்டப்பட்டு படித்த அனிதாவின் மருத்துவக் கனவு தகர்ந்து போனது. இந்த துயரம் தாங்காமல் அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய 25 இளைஞர்கள் மீது வழக்கு பதிந்து, அவர்களது எதிர்காலத்தை இருளுக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது காவல்துறை.

அனிதாவின் 3 ஆவது நினைவுதினத்தையொட்டி, அவரது சகோதரர் மணிரத்னம் கூறும்போது, ”25 இளைஞர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், அந்த இளைஞர்கள் உயர் கல்வி பயிலும் வாய்ப்பையும் வேலை வாய்ப்பையும் இழந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ராகுல் காந்தி என்பவர் கூறும்போது, ”வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வந்தும், வழக்கு நிலுவையில் உள்ளதால் எனது பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. நான் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு அரசு வேலை கிடைக்கவும் வாய்ப்பில்லை. என்னோடு போராடிய பல பெண்களுக்கும் இதே நிலை தான்” என தெரிவித்தார்.

ராகுல் ராஜேஸ் என்பவர் கூறும்போது, ”போராட்டம் நடத்தியதாக என் தாயார் மீது வழக்குப் பதிவு செய்தனர். என் தாயார் போராட்டத்தில் கலந்து கொள்ளவே இல்லை. எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். எங்கள் மீது வழக்குப் பதிவு செய்யமாட்டோம் என்று உறுதியளித்த காவல் துறையினர், பின்னர் எங்களோடு சேர்த்து என் தாயார் மீதும்  வழக்குப் பதிவு செய்தனர்” என்றார்.

இந்த பிரச்சினை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கவனத்துக்கும் அனிதாவின் சகோதரர் மணிரத்னம் கொண்டு சென்றுள்ளார். இது தொடர்பாக அரசிடம் பலமுறை முறையிட்டும் பலன் இல்லை என்பதால், இறுதியாக, எதிர்கட்சிகளின் உதவியை நாடியுள்ளார் மணிரத்னம்.

The post அனிதாவை காவு வாங்கிய ‘நீட்’ : நீதி கேட்டு போராடிய 25 இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறி appeared first on தேசிய முரசு - Desiya Murasu.