Tamil Nadu Archives - தேசிய முரசு - Desiya Murasu

முல்லைப்பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்ட கேரளா அரசு முயற்சி! தமிழக அரசே! தடுத்து நிறுத்த நடவடிக்கை எடு: கே.எஸ்.அழகிரி கோரிக்கை
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, மேகதாது போன்ற பிரச்சினைகளில் பா.ஜ.க. ஆட்சியில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. இதனால், தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. தேனி மாவட்டத்தில் தமிழக – கேரள எல்லையில்  முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது.  தேனி, மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் விவசாயத்திற்கு நீர்ப்பாசன வசதிகளை முல்லைப் பெரியாறு அணை மூலம் நீண்டகாலமாக விவசாயிகள் பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகக் கூறி இந்த அணைக்குப் பதிலாக  ரூ. 1,000 கோடி செலவில் புதிய அணை கட்ட வேண்டுமென்று தொடர்ந்து கேரள அரசு கூறி வருகிறது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் கேரள அரசு தொடர்ந்து புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளையும், விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கிற பணிகளையும் தீவிரமாக செய்து வருகின்றது. இது விவசாயிகள் மத்தியில் கடும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

ஏற்கனவே உச்சநீதிமன்றமும், பல்வேறு வல்லுநர் குழுக்களும், நிபுணர்களும் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்து பலமாக இருக்கிறது என ஒருமுறைக்கு பலமுறை சான்றளித்த பிறகும், கேரள அரசும், அரசியல் கட்சியினரும் முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணையைக் கட்டியே தீருவோம் என்று பிடிவாதமாக செயல்படுவது இரு மாநிலங்களுக்கிடையே இருக்கிற நல்லுறவை சீர்குலைத்து வருகிறது.

மேலும், முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதற்காகக் கேரள அரசு பசுமை தீர்ப்பாயத்திடமும், மத்திய நீர்வளத்துறையிடமும் அனுமதி பெற்று நில அளவீடு செய்யத் தொடங்கியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் கேரள அரசுக்கு ஆதரவாகச் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையைத் தயார் செய்ய மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதித்திருப்பது தமிழகத்திற்கு இழைக்கப்பட்டிருக்கிற மிகப்பெரிய அநீதியாகும். கூட்டாட்சி தத்துவத்திற்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதாகும். தமிழக அரசின் எதிர்ப்பை மீறி மத்திய பா.ஜ.க. அரசின் இந்த முடிவு தமிழகத்தின் நீர்ப்பாசன உரிமைகளைப் பறிக்கிற செயலாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகக் கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் கேரள அரசிற்கு வழங்கிய தாக்க மதிப்பீட்டு வரைவிற்கான அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும். ஏற்கனவே, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த எடுத்த முயற்சிகளுக்குக் கேரள அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்த உரிமைகளை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. ஆனால், அதற்குத் தீங்கு விளைவிக்கிற வகையில் கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கான முயற்சிக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் ஆதரவாகச் செயல்படுவதைத் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.

எனவே, முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாகக் கேரள அரசு புதிய அணை கட்டுகிற முயற்சியை முற்றிலும் தடுக்கிற வகையில், மத்திய அரசோடு தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு தமிழக முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்.

The post முல்லைப்பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்ட கேரளா அரசு முயற்சி! தமிழக அரசே! தடுத்து நிறுத்த நடவடிக்கை எடு: கே.எஸ்.அழகிரி கோரிக்கை appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

கொரோனா பாதிப்பிலும் ரூ. 2,000 கோடி பாரத்நெட் டெண்டர் முறைகேடு வெட்கக்கேடானது: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம்
”தமிழகம் முழுவதும் பாரத்நெட் திட்டத்துக்காக ஆப்டிக் ஃபைபர் கேபிள் பதிப்பதற்கான ரூ.2 ஆயிரம் கோடி டெண்டரில் விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும், இந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரி, முதலமைச்சர், தலைமைச் செயலாளர், தொலைத் தொடர்பு துறை, தொழில் வளர்ச்சி, உள் வர்த்தகத் துறை மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஆகியவற்றுக்கு அறப்போர் இயக்கம் சார்பாக புகார்கள் அனுப்பப்பட்டன.

இதன் அமைப்பாளர் ஜெயராமன் அனுப்பிய புகாரில், ”டெண்டர் எடுப்பதற்காக வருவாய் மற்றும் அனுபவத்தை அதிகரித்து விதிக்கப்பட்டுள்ள நிபந்தனையால் 5 பெரிய வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமே தகுதி பெற்றுள்ளன. இந்த புதிய விதிமுறையால் அரசு நிறுவனங்களும் உள்நாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு நிறுவனங்களும் டெண்டர் எடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, தமிழ்நாடு ஃபைபர் கார்ப்பரேஷன் மூலம் தமிழக அரசு விட்ட ரூ.2 ஆயிரம் கோடி டெண்டரை நிறுத்தி வைக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய தொழில் வளர்ச்சி மற்றும் உள் வர்த்தகத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தலைமைச் செயலாளருக்கு மத்திய அரசின் கீழ் வரும் இந்த துறை கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி எழுதிய கடிதத்தில், டெண்டர் விதிமுறைகளை மாற்றி தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும், அதுவரை டெண்டரை நிறுத்தி வைக்குமாறும் கூறியிருந்தது.

இது குறித்து, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் கூறும்போது, ”இந்த பிரச்சினையை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். கொரோனா பாதிப்பால் மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்திலும் இத்தகைய விதிமீறலில் ஈடுபடுவது வெட்கக்கேடானது” என்று தெரிவித்துள்ளார்.

The post கொரோனா பாதிப்பிலும் ரூ. 2,000 கோடி பாரத்நெட் டெண்டர் முறைகேடு வெட்கக்கேடானது: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

ஜெயராஜ், பென்னிக்ஸ் இறப்புக்கு சாத்தான்குளம் காவல்துறையினரின் 7 மணி நேர சித்ரவதையே காரணம் : சிபிஐ
தூத்துக்குடியில் ஜெயராஜும் அவரது மகன் பென்னிக்ஸும் 7 மணி நேரம் சித்ரவதை செய்யப்பட்டு இறந்துள்ளது, பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜெயராஜும் அவரது மகன் பென்னிக்ஸும் மோசமாகத் தாக்கப்பட்டதில் அவர்கள் உடலிலிருந்து ரத்தம் தெறித்து சுவரில் படிந்துள்ளது. ஆடைகளில் படிந்த ரத்தத்தைச் சுத்தம் செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளனர். இரவு 7.45 மணியிலிருந்து அதிகாலை 3 மணி வரை தொடர்ந்து இருவரும் மோசமாகச் சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் படிந்திருந்த ரத்தக்கறையும், தந்தை, மகனது ரத்தமும் ஒன்று என டிஎன்ஏ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இருவரையும், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியது உறுதியாகியுள்ளது. டெல்லியில் உள்ள மத்திய தடயவியல் ஆய்வகத்தில் செய்யப்பட்ட சோதனையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தை ஜெயராஜும் அவரது மகன் பென்னிக்ஸும் இறப்பதற்கு, காவல் துறையினர் தொடர்ந்து சித்ரவதை செய்ததே காரணமாக இருந்துள்ளது.

இவ்வாறு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

The post ஜெயராஜ், பென்னிக்ஸ் இறப்புக்கு சாத்தான்குளம் காவல்துறையினரின் 7 மணி நேர  சித்ரவதையே காரணம் : சிபிஐ appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

தமிழகத்தில் நீட் தேர்வை திணித்தது யார் ? தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்!
நீட் தேர்வு குறித்து பேச தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் தகுதி கிடையாது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் பேசியிருக்கிறார். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கத் தவறிய திறமையற்ற தமிழக ஆட்சியாளர்கள் ஆதாரமற்ற முறையில் அவதூறான குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்கள்.

தமிழகத்தில் நீட் தேர்வு 2016 ஆம் ஆண்டில்  ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க. ஆட்சியில் தான் முதன்முறையாக  திணிக்கப்பட்டது என்பதை எவரும் மறுக்க முடியாது. இந்நிலையில் நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெறுவதற்கு எது காரணமாக இருந்தது என்பதை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. ஏனெனில் மத்திய காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி ஆட்சிக்காலத்தில் டிசம்பர் 2010 முதல் நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் தொடர்ந்து பா.ஜ.க. – அ.தி.மு.கவினர் பேசி வருகிறார்கள்.

நீட் தேர்வை பொறுத்தவரை, இந்தியா முழுவதும் 412 மருத்துவக் கல்லூரிகளில் 35 நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுவதாக கூறி 2009 ஆம் ஆண்டில் சிம்ரன், ஜெயின் மற்றும் சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதில் உச்ச நீதிமன்றம் நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு பல தேர்வுகள் நடத்துவதற்கு பதிலாக ஒரே தேர்வு நடத்துவதற்கான முயற்சிகளில் இந்திய மருத்துவக் கவுன்சில் ஈடுபட வேண்டுமென்று ஆணையிட்டது. இதையொட்டி, டிசம்பர் 2010 இல் இந்திய மருத்துவக் கவுன்சில் நீட் தேர்வு நடத்துவது குறித்து அறிவிக்கை வெளியிட்டது. இதற்கு, அன்றைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் அவர்களும், தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், நீட் தேர்வு நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் பிப்ரவரி 2013 இல் போடப்பட்டன. இதில், தி.மு.க. தலைமையிலான தமிழக அரசும் வழக்கு தொடுத்ததை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த வழக்கில் மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு,  நீட் தேர்வு நடத்துவதற்கு இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு எந்த உரிமையும் இல்லை என்று தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து தன்னாட்சி அதிகாரம் கொண்ட இந்திய மருத்துவக் கவுன்சில், அன்றைய சுகாதாரத்துறை அமைச்சக அறிவுரையை மீறி, மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் 11 ஏப்ரல், 2016 இல் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, 28 ஏப்ரல் 2016 முதல் நீட் தேர்வு நடத்துவதற்கான வழிவகை ஏற்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில், நீட் தேர்வுக்கு ஆதரவான நிலையை மத்திய பா.ஜ.க. அரசு எடுத்தது.  இந்தப் பின்னணியில் இருக்கிற உண்மை நிலையை மூடிமறைக்க அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், ஆதாரமற்ற கருத்துக்களை சட்டசபையில் கூறி, தி.மு.க. – காங்கிரஸ் மீது பழி சுமத்துவது கடும் கண்டனத்திற்குரியது.

காங்கிரஸ் – தி.மு.க. அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2014 வரை நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்படவில்லை. பா.ஜ.க. ஆட்சியில் ஆகஸ்ட் 2016 இல் நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு நடத்துவது குறித்து சட்டம் நிறைவேற்றப்பட்டது. இன்று தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது என்று சொன்னால், அதற்கு மத்தியில் ஆட்சி செய்கிற பா.ஜ.க. தான் காரணமே தவிர, காங்கிரஸ் கட்சியோ, தி.மு.க.வோ காரணமல்ல என்பதைத் தெளிவாகக் கூற விரும்புகிறேன்.

தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தின் அடிப்படையில் 8 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். கடந்த 2017 இல் அரசுப் பள்ளிகளில் படித்தவர்களில் 10 மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற்றனர். அதேபோல, கடந்த 2019 ஆம் ஆண்டில் அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தேர்வு எழுதிய 19,680 மாணவர்களில் அரசு ஒதுக்கீட்டின் மூலம் ஒரேயொரு மாணவர் மட்டும் தான் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர முடிந்தது.

தமிழக அரசு நடத்திய 412 பயிற்சி வகுப்புகளில் படித்த 19,355 மாணவர்களில் ஒருவர் கூட நீட் தேர்வில் வெற்றிபெற்று 2019 ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாமல் போனதற்கு யார் பொறுப்பு? அதேபோல, அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 2.1 சதவீதத்தினர் மட்டுமே தனியார் பயிற்சி மையங்களில் சேராமல் நீட் தேர்வு மூலம் மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்  என்கிற அதிர்ச்சித் தகவலை முதலமைச்சரால் மறுக்க முடியுமா? ஆனால், அரசு மருத்துவக் கல்லூரியில் சேர தனியார் பயிற்சி மையங்களில் பயின்ற 3,033 மாணவர்கள் நீட் தேர்வு மூலம் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், தனியார் பயிற்சி மையங்களில் சேராத 48 மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வு மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெற்றிருக்கிறார்கள். இதன் மூலம் 1.55 சதவீதத்தினர் மட்டுமே தனியார் பயிற்சி மையங்களில் சேராமல் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்  என்கிற அவலநிலையில் தான் தமிழகத்தின் மருத்துவக் கல்லூரி சேர்க்கை இருக்கிறது என்பதை தமிழக முதலமைச்சரால் மறுக்க முடியுமா ?

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் அனிதாவில் தொடங்கி தற்போது ஜோதி துர்கா, ஆதித்யா, மோதிலால் வரை 16 மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் மன உளைச்சல் ஏற்பட்டு தன்னம்பிக்கை இழந்து தற்கொலை செய்து கொண்டதற்கு யார் காரணம்? இதற்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பாகும். இவை வெறும் தற்கொலைகள் அல்ல. அரசியல் ரீதியான தவறான அணுகுமுறையால் ஏற்பட்ட படுகொலைகள். இந்த மரணங்களுக்கு அ.தி.மு.க. அரசு தான் முதல் குற்றவாளி. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத மாணவர்களின் தற்கொலைகள் தமிழகத்தில் மட்டும் நடைபெறுவது ஏன்? தமிழக ஆட்சியாளர்களின் தவறான அணுகுமுறையும், அலட்சியப்போக்கும் தான் இதற்கு காரணமாகும்.

மத்திய அரசு திணித்த நீட்  தேர்வை தடுப்பதற்கு சட்டமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றி பிப்ரவரி 2017 இல் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது அ.தி.மு.க அரசு. ஆனால் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த மசோதாவை எந்த காரணமும் சொல்லாமல் மத்திய அரசு திருப்பி அனுப்பியது. இந்த தகவலை ஓராண்டு காலம் வெளியே சொல்லாமல் தமிழக அரசு ஏமாற்றி வந்தது. நீட் திணிப்பை எதிர்ப்பதன் மூலம் மோடி அரசுக்கு தர்ம சங்கடம் ஏற்படக்கூடாது என்பதே அ.தி.மு.க. வின் அணுகுமுறையாகும். இத்தகைய அ.தி.மு.க. அரசின் போக்கு காரணமாக தமிழகத்தில் உள்ள கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர வாய்ப்பின்றி கடுமையாக பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு நீட் தேர்வு காரணமாக நொறுக்கப்பட்டு வருகிறது.

நீட் தேர்வு எழுதுகிற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு 412 இலவசப் பயிற்சி மையங்களை தொடங்கியது. இந்த பயிற்சி மையங்கள் முறையாக நடந்தனவா ? பாதிக்கு மேற்பட்ட நாட்கள் அவை திறக்கப்படவே இல்லை. திறக்கப்பட்டு நடந்தாலும், மாணவர்களை தயார்படுத்தக்கூடிய தகுதியான பயிற்சியாளர்கள் இல்லை.

நீட் தேர்வு மத்திய பாடத் திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. 2016 முதல் நடைமுறையில் உள்ள நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்களை தயார்படுத்துகிற வகையில் மாநில பாடத் திட்டத்தின் தரத்தை உயர்த்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது ?

எனவே,  தமிழக அ.தி.மு.க. அரசால் நீட் தேர்வையும் தடுத்து நிறுத்த முடியவில்லை. நீட் தேர்வில் பங்கேற்கிற மாணவர்களையும் அதில் வெற்றிபெறுகிற வகையில் பயிற்சி வகுப்புகளின் மூலம் தயார்படுத்தவும் முடியவில்லை. தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவுகளை சிதைத்து, சீர்குலைத்து படுகுழியில் தள்ளிய தமிழக ஆட்சியாளர்களுக்கு உரிய பாடத்தை புகட்ட வேண்டியது மிக மிக அவசியமாகும். இவர்கள் செய்த குற்றத்திற்கு தமிழக மக்கள் அ.தி.மு.க. அரசை மன்னிக்கவே மாட்டார்கள்.

The post தமிழகத்தில் நீட் தேர்வை திணித்தது யார் ? தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

பி.எம். கிசான் திட்டம் ரூ.110 கோடி மோசடி! 6 லட்சம் போலி பயனாளிகள்! குற்றவாளிகளை கண்டுபிடிக்க சி.பி.ஐ. விசாரணை தேவை! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை!
பிரதமர் உழவர் உதவித் திட்டத்தில் தமிழ்நாட்டில் ஒரே மாதிரியான முறைகேடு நடைபெற்றுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், அதிகாரிகள் பங்கேற்புடன் முதல்முறையாக நடந்த மிகப் பெரிய ஊழல் இதுதான். தமிழகத்தில் ஏற்கனவே நடந்த ஊழல்கள் எல்லாம் அரசியல்வாதிகள் தொடர்புடையவைகளாக இருந்தன. இந்த ஊழலைப் பொறுத்தவரை ஆளுங்கட்சியைச் சேர்ந்த உயர்மட்ட தலைவர்களுக்கு  தொடர்பு இருப்பதை மறுக்க முடியாது.

ஆனால், உள்ளூர் ஆளுங்கட்சியினருக்கு இதில் தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த முறைகேட்டில் ஊழல் அதிகாரிகள், விவசாயத் துறையில் உள்ள தற்காலிக ஊழியர்கள், இன்டெர்நெட் மையங்களின் உரிமையாளர்கள், சில இடங்களில் ஏஜெண்டுகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

விவசாயிகளுக்கு நிதி வழங்கும் திட்டத்தில் 6 லட்சம் போலி பயனாளிகளை சேர்த்து ரூபாய் 110 கோடி அளவில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. ஆனால், முதலமைச்சரோ இந்த ஊழலுக்கும், மாநில அரசுக்கும் தொடர்பு இல்லை என்று கூறி மத்திய அரசின் மீது பழி போடுகிறார். பிரதமர் உழவர் திட்ட உதவித் தொகை வழங்குவதற்கு பயனாளிகளை அடையாளம் காண இணைய வழியை கையாண்டது தான் இந்த ஊழலுக்கு காரணம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசு மீது குற்றம் சாட்டுகிறார். மத்திய அரசின் மீது மாநில முதலமைச்சரே குற்றம் சாட்டுவதால் ரூபாய் 110 கோடி மெகா ஊழலில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிப்பது என்றே தெரியவில்லை.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நேரத்திலும், இந்த முறைகேட்டை ஆட்சியாளர்களும் மறுக்கவில்லை. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், பிரதமரின் உழவர் உதவித் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதை ஆன்லைன் முறைக்கு மத்திய அரசு மாற்றியதால், கொரோனா காலத்தில் அதனை அதிகாரிகள் சரிபார்க்க முடியவில்லை என்று ஊழலை மூடிமறைக்க முயற்சி செய்கிறார். ஆனால், இந்த திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதை மறுக்க முடியவில்லை.

இந்த  முறைகேடு செய்யப்பட்ட பணத்தில் பாதி அளவு திரும்ப மீட்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால், முழுப் பணத்தையும் திரும்பப் பெறுவது அவ்வளவு எளிது என்று தெரியவில்லை. லாக் இன் பாஸ்வேர்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டு ஒரே மாதிரியாக முறைகேடு நடந்துள்ளதை மத்திய விவசாயத்துறையும் ஒத்துக் கொண்டுள்ளது. எனினும், இதுபோன்ற முறைகேடு நாட்டின் வேறு எந்த பகுதியிலும் நடைபெறவில்லை என்றும் மத்திய விவசாயத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 5 லட்சத்து 85 ஆயிரம் போலிப் பயனாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய  விவசாயத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர்கள் வங்கிக் கணக்கில் போடப்பட்ட ரூ.2 ஆயிரம் நிதியை அரசு திரும்ப எடுத்துக் கொண்டது. ஆனால், தமிழகத்தில் மட்டும் 5 லட்சம் போலி பயனாளிகள் பதிவு செய்யப்பட்டு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று தெரிகிறது. இந்தியாவிலேயே, பிரதமர் பெயரால் நடைமுறையில் உள்ள பிரதமர் உழவர் உதவித் திட்டத்தில் மிகப் பெரிய மோசடி நடந்த மாநிலமாக தமிழகம் இருக்கிறது.

ஏற்கனவே, உதவித் தொகை பெறும்போது அளித்த ஆதார் ஆதாரத்தின் அடிப்படையில், ஆவணங்களை திருட இத்தகைய முறைகேட்டில் இன்டெர்நெட் மையங்கள் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதுவே கிராமந்தோறும் முறைகேடு நடத்த எளிதாகிவிட்டது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான எடப்பாடியில் மட்டும் 11 ஆயிரம் போலிப் பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதில் அ.தி.மு.க.வினர் சம்மந்தப்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது. வருவாய்த்துறை, விவசாயத்துறை மற்றும் வங்கி அதிகாரிகள் கூட்டு இல்லாமல் இவ்வளவு பெரிய ஊழல் நடைபெற வாய்ப்பு இல்லை.

தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களில் பல்வேறு முறைகேடுகள் நடப்பது தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது. பிரதமர் உழவர் உதவி திட்ட மோசடியைப் போல தமிழகத்தில் மத்திய அரசின் நிதியுதவியில் கட்டப்படுகிற தொகுப்பு வீடு கட்டுவதிலும் மெகா மோசடி நடைபெற்றுள்ளது. வீடு, கழிவறை கட்டும் திட்டத்தின் பயனாளிகள் கிராமசபை கூட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதில், பாஸ்வேர்ட் மூலமாக விவசாயிகள் பெயரில் திருத்தம் செய்து மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளது அம்பலத்திற்கு வந்துள்ளது. பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் 2016 முதல் 2019 வரை கட்டப்பட்ட வீடுகளுக்காக ரூபாய் 5170 கோடி மாநில அரசின் பங்குத் தொகையுடன் மொத்தம் 8 ஆயிரத்து 968 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக வீடுகள், கழிவறைகள் கட்டுவதில் நடைபெற்ற மோசடியில் உள்ளுர் ஆளுங்கட்சியினர் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள். இதுகுறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

எனவே, பிரதமர் உழவர் உதவி திட்ட மோசடி குறித்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை தொடங்கியிருக்கிறார்கள். இந்த விசாரணையின் மூலம் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்களா ? மோசடி செய்யப்பட்ட பணம் திரும்பப் பெற முடியுமா ? என்பதெல்லாம் மிகப்பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்காமல், மத்திய புலனாய்வுத்துறை விசாரிப்பது ஒன்றே குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு உதவியாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய புலனாய்வுத்துறை விசாரணைக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியே பரிந்துரை செய்ய வேண்டும்.

The post பி.எம். கிசான் திட்டம் ரூ.110 கோடி மோசடி! 6 லட்சம் போலி பயனாளிகள்! குற்றவாளிகளை கண்டுபிடிக்க சி.பி.ஐ. விசாரணை தேவை! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.