supreme court Archives - தேசிய முரசு - Desiya Murasu

கோத்ரா வன்முறையில் 18 ஆண்டுகளாகியும் நிவாரணம் வழங்கவில்லை : முன்னாள் துணை குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரி குற்றச்சாட்டு
2002 ஆம் ஆண்டு நடந்த கோத்ரா வன்முறைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குஜராத் அரசு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை என்று முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக நேஷனல் ஹெரால்டுக்கு அவர் அளித்த நேர்காணல்:

நமது அமைப்புகளில் கடமை உணர்வு குறித்துக் கற்பிக்கப்பட வேண்டும். நமது உச்ச நீதிமன்றம் மற்றும் நாடாளுமன்றம் மட்டுமல்ல, நம் அனைத்து அமைப்புகளும் இந்த விஷயத்தில் தோல்வியடைகின்றன.

பல சம்பவங்களில் சகிப்பின்மையைக் காண முடிகிறது. அரசாங்கமே இத்தகையைச் சகிப்பின்மையை ஆதரிப்பதால், இன்னும் நிலைமை மோசமாகியிருக்கிறது. அனைத்து சிறுபான்மையினத்தவர் மத்தியிலும் இது மோசமான விளைவை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் மற்ற குடிமக்களுக்கு இணையாக சிறுபான்மை மக்களும் நடத்தப்படவேண்டும். நம் நாட்டில் சமமாக நடத்தப்பட வேண்டும். அரசியல் சாசனத்தின் அம்சங்களை நாம் படிக்க வேண்டும். சமத்துவம், நீதி மற்றும் சகோதரத்துவத்தை நமது அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது. அரசியல் சாசனத்தில் இது உரக்கவும் தெளிவாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. சகோதரத்துவத்துடன் கூடிய ஒவ்வொரு சமுதாயத்திலும் நீதி என்பது அடித்தளம். உங்கள் குடிமக்களை நீங்கள் சமமாக நடத்தாவிட்டால், நீங்கள் நீதியை நிலைநாட்டவில்லை என்று அர்த்தம். அநேகமாக இன்றைக்கு இத்தகைய நீதி பெருமளவு காணாமல் போயிருக்கிறது.

2002 ஆம் ஆண்டு நடந்த கோத்ரா வன்முறைக்குப் பிறகு, நியாயமான நிவாரண உதவிகளைக் குஜராத் மாநில அரசு வழங்கவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையை அவர்களே சீரமைத்துக் கொண்டார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கம் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களிடம் இல்லை. அங்கு முஸ்லிம்கள் வாழ முடியாத சூழல் ஏற்பட்டது. கோத்ரா சம்பவம் நடந்து 18 ஆண்டுகளாகிறது. இந்த காலகட்டத்தில் ஒரு தலைமுறையே வளர்ந்து நிற்கிறது. தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதை வாழ்க்கை அவர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளது. இதே மோசமான சூழ்நிலை தான் சிறுபான்மையினர் வாழும் எல்லா இடங்களிலும் இருக்கிறது.

சமுதாயத்தில் வளர்ச்சி மற்றும் வறுமை போன்ற பிரச்சினைகளைத் திசை திருப்பவே லவ் ஜிகாத், தாய் மதம் திருப்பும் கோஷம் மற்றும் மதமாற்றத் தடைச் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளனர்.

மதச்சார்பின்மை என்பது அரசியல் சாசனத்தின் ஒரு அங்கம். மதச்சார்பின்மையை நாம் கடைப்பிடிக்காவிட்டால், நாம் அரசியல் சாசனத்தை அமல்படுத்தவில்லை என்று அர்த்தம். எல்லா மதத்தையும் இந்திய சமுதாயம் சமமாக நடத்தும் போது, சில மாநிலங்கள் மட்டும் இதில் மாறுபட்டு நிற்கின்றன.

பாஜக அரசின் மதப் பெரும்பான்மை போக்கால் சமுதாயத்துக்குப் பாதிப்பு ஏற்படும். அதோடு சகோதரத்துவம் மற்றும் சமத்துவமும் பாதிக்கப்படும். ஒவ்வொரு குடிமக்களுக்கும் உரிமை வழங்கும் நீதியும் மறுக்கப்படும்.

அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவை செயல்படுத்தும்போது, நடைமுறைகளைப் பின்பற்றியிருக்க வேண்டும். அத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதே என் கருத்து. மெஹ்பூபா முப்தி பாஜக அரசின் கூட்டணியில் இருந்தார். அதனால் அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டிருக்க வேண்டும்.

இந்திய-சீன உறவைப் பொறுத்தவரை, இதுவரை இருந்த அரசுகள் நன்றாக நிர்வகித்து வந்துள்ளன என்று நினைக்கிறேன். மன்மோகன் சிங் அரசு சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், இப்போது சில சிக்கல்கள் உள்ளன. நிலைமை கை மீறிப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தற்போது நிலைமை சற்று தடம்புரண்டுள்ளது. இரண்டு கைகளைத் தட்டினால் தான் ஓசை வரும் என்பதை அதிகாரத்தில் இருப்போர் புரிந்து கொள்ள வேண்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் அண்டை நாடான வங்கதேசத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எனினும், அது குறித்த விவாதத்தில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், அதில் தெளிவு தேவைப்படுகிறது. நாம் இந்தியர்கள் என்பதே ஒன்றுபட்ட எண்ணமாக இருக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் கேள்விக்குரியதாகும் போது, அதை எதிர்த்துப் போராட எனக்கு உரிமையும் கடமையும் உள்ளது” என்றார்.

The post கோத்ரா வன்முறையில் 18 ஆண்டுகளாகியும் நிவாரணம் வழங்கவில்லை : முன்னாள் துணை குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரி குற்றச்சாட்டு appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு மறுப்பு! சமூக நீதிக்கு எதிராக செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசு! தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்!
அகில இந்திய தொகுப்புக்கு மாநிலங்களில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும் மருத்துவ மேற்படிப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய உயர்நீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகும் அந்த தீர்ப்பை செயலற்றதாக ஆக்கும் வகையில் மத்திய பாஜக அரசு உச்சநீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்திருப்பது இடஒதுக்கீட்டுக்கு எதிரானது. இதன் மூலம் மத்திய அரசின் சமூக நீதிக்கு எதிரான போக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டு வழங்க முடியாது என உச்சநீதி மன்றத்தில் பிராமண பத்திரம் தாக்கல் செய்து உறுதியாக கூறியிருப்பது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்திருக்கிறது. ஏற்கனவே, நீட் தேர்வினால் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். இத்தகைய மத்திய பாஜக அரசின் போக்கு வங்கித்துறைகளிலும் நடைமுறைப்படுத்தியிருப்பது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை பாஜக அரசு கொண்டு வந்தபோது, இது ஏற்கனவே இட ஒதுக்கீடு பெற்று வரும் மற்ற பிரிவினரைப் பாதிக்காது என்று கூறப்பட்டது.

ஆனால், சமீபத்தில் ‘ஐபிபிஎஸ்’ எனப்படும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில்,  பிற பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டிலிருந்து எடுத்து, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நடைமுறையில் எஸ்.சி., பிரிவினருக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளது. தற்போது 13 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. எஸ்.டி., பிரிவினருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்குப் பதிலாக,  6 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பிற பிற்படுத்தப்பட்டோருக்கு  27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 21 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.  பொதுப் பிரிவினருக்கான 50 சதவீதம் 40.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு மட்டும் 10 சதவீதமாகவே தொடர்கிறது.

மற்ற பிரிவினரிடம் இருந்த இட ஒதுக்கீட்டை, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்குப் பறித்துக் கொடுத்தால், அது அரசியல் சாசனத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும்.

கடந்த ஆண்டு ஸ்டேட் வங்கிப் பணியாளர் நியமனத்தில், பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. அப்போது, மற்ற பிரிவினருக்கான இட ஒதுக்கீடுகளில் கை வைக்கவில்லை. பொதுப் பிரிவில் மட்டும் குறைக்கப்பட்டது.

தற்போது வங்கிகளில் காலியாகவுள்ள 1,417 இடங்களுக்கு ஆட்களை நிரப்ப வேண்டும். அந்த வகையில் பிற பின்தங்கிய வகுப்பினருக்கு 300 இடங்களும், எஸ்.சி., பிரிவினருக்கு 196 இடங்களும், எஸ்.டி., பிரிவினருக்கு 89 இடங்களும் மட்டுமே கிடைக்கும். பொதுப் பட்டியலில் வருவோருக்கு 690 இடங்கள் கிடைக்கும். அதேசமயம், 10 சதவீத இட ஒதுக்கீடு பெற்ற பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 142 இடங்கள் கிடைக்கும் என்பதுதான் விநோதம்.

பிற பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., எஸ்டி., பிரிவினரிடமிருந்து 142 வங்கிப் பணியிடங்களை எடுத்து, உயர் சாதியினருக்கு மத்திய பாஜக அரசு வழங்குகிறது.

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, பொருளாதார ரீதியில் நலிந்தோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை மோடி அரசு அவசர, அவசரமாக அமல்படுத்த வேண்டிய அவசியம் என்ன? இந்த அநீதியை ஒருபோதும் ஏற்க முடியாது.

The post பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு மறுப்பு! சமூக நீதிக்கு எதிராக செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசு! தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

ஹத்ராஸ் வழக்கு: 3 நீதிபதிகள் குழு விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் முறையீடு
ஹத்ராஸ் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவை உத்தரப்பிரதேச அரசு நியமித்துள்ளது கண்துடைப்பு. இந்த வழக்கை ஓய்வு பெற்ற 3 நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் சமூக செயற்பாட்டாளர் சத்யமா துபே மனு தாக்கல் செய்துள்ளார்.

ஹத்ராஸ் சம்பவ விசாரணை நீதிமன்ற கண்காணிப்பில் நடைபெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதற்கு உத்தரப்பிரதேச அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது.

உத்தரப்பிரதேச அரசின் விளக்கத்துக்குப் பதில் அளித்து, உச்ச நீதிமன்றத்தில் துபே மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், ஹத்ராஸ் சம்பவத்தை விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை உத்தரப்பிரதேச அரசு நியமித்திருப்பது வெறும் கண்துடைப்பு என்றும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பாமலேயே உத்தரப்பிரதேச அரசு இந்த வழக்கில் பதில் அளித்திருப்பது, நீதிமன்றத்தைத் திசை திருப்பும் செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

ஆனால், உத்தரப்பிரதேச அரசு நியமித்த 3 நபர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழு வெறும் கண்துடைப்பு. இந்த வழக்கைச் சிறப்பு விசாரணைக் குழு கையாளும் விதம் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளதையும் துபே சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிபதி உதய் உமேஸ் லலித், நீதிபதி டி.ஓய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி மதன் பீமாராவ் லோகூர் ஆகியோரைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கவேண்டும் என்றும் மனுவில் மேலும் குறிப்பிட்டிருந்தார். கிரிமினல் வழக்குகளை விசாரிப்பதில் 3 பேரும் தேர்ந்தவர்கள் என்பதால், இவர்களைப் பரிந்துரைத்ததாகவும் துபே குறிப்பிட்டுள்ளார்.

கொடூரமான கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்திருக்கும் போது, இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 307 வது பிரிவின் கீழ் கொலை முயற்சி வழக்கை மட்டும் உத்தரப்பிரதேச காவல்துறையினர் பதிவு செய்துள்ளதையும் அவர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பொதுநலன் வழக்கு கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட குடும்பத்தார் தரப்பு சாட்சியங்களைப் பாதுகாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

The post ஹத்ராஸ் வழக்கு: 3 நீதிபதிகள் குழு விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் முறையீடு appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

நீதிபதி அருண் மிஸ்ரா: ஒரு மதிப்பீடு – மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு
பதவிக்காலம் முழுவதும் நீதிபதிகள் தீர்ப்புகளை வழங்குகிறார்கள். ஒரு காலக்கட்டத்தில் அவர்கள் பதவியிலிருந்து வெளியேறும்போது, அவர்களது செயல் திறன் குறித்து சட்ட சமுதாயம் மற்றும் சட்ட வர்ணனையாளர்கள் அளிக்கும் தீர்ப்புக்கு காத்திருக்க வேண்டும்.

நீதிபதிகளின் தீர்ப்புகள் தரத்தை எதிர்கொள்வதாக இருக்க வேண்டும். இத்தகைய தீர்ப்பு நேர்மையாகவும் பாரபட்சமின்றியும், துல்லியமாகவும், பகுப்பாய்வுடனும் மற்றும் அச்சமின்றி, சார்பற்ற நிலையில் இருக்க வேண்டும். அதோடு, இத்தகைய தீர்ப்புகள், மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும்.

சரியான நீதி நிர்வாகத்தின் நலன் கருதி இதுபோன்ற எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. சமீபத்தில் மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தேவ் கூறும்போது, ” நீதிபதிகள் வருவார்கள், போவார்கள், ஆனால் சட்ட சமுதாயம் தொடர்ந்து கொண்டிருக்கும்” என்றார். நீதிபதி அருண் மிஸ்ராவும், ”சட்ட சமுதாயம் தான் நீதித்துறையின் தாய்” என்று உறுதியாக தெரிவித்திருந்தார்.

மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு

கடந்த 2 ஆம் தேதி நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற அருண் மிஸ்ரா, இந்தியாவிலேயே சர்ச்சைக்குரிய நீதிபதிகளில் முதன்மையானவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கடந்த 2018 ஆம் ஆண்டு குறிப்பிட்ட நீதிபதிக்கு மட்டுமே தலைமை நீதிபதி வழக்குகளை ஒதுக்குகிறார் என்று, செய்தியாளர்களை சந்தித்து 4 மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பேட்டி கொடுத்ததை மறக்க முடியாது. அப்போது தான் நீதிபதி அருண் மிஸ்ரா வெளிச்சத்துக்கு வந்தார். நீதிபதி அருண் மிஸ்ராவுக்குத் தான் அப்போதைய தலைமை நீதிபதி முக்கிய வழக்குகளை ஒதுக்கீடு செய்ததாக 4 நீதிபதிகளும் குற்றம் சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு, அருண் மிஸ்ரா மூத்த நீதிபதியானதும், உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் இடம்பெற்றதும் சர்ச்சைகள் மேலும் அதிகமானது.

குஜராத் மாநிலத்தில் உள்துறை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்ட்யா பட்டப்பகலில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், முஸ்லீம் அமைப்பினர் மீதான விரைவில் விசாரணை நடந்து, அதன் தொடர்ச்சியாக அமர்வு நீதிமன்றமும் தண்டனை வழங்கியது. எனினும், சரியான சாட்சியங்கள் இல்லை என்று கூறி அமர்வு நீதிமன்ற தீர்ப்பை தூக்கி எறிந்தது உயர் நீதிமன்றம்.

எனினும், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்யப்பட்டபோது. அருண் மிஸ்ரா தான் வழக்கை விசாரித்தார். முஸ்லீம் அமைப்புகளுக்கு அமர்வு நீதிமன்றம் விதித்த தண்டனை செல்லும் என்று தீர்ப்பளித்தார். இதில், உச்ச நீதிமன்றம் வகுத்த வழிமுறைகளை அவரே பின்பற்றவில்லை. இந்த வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததற்கு, நீதிபதி அருண் மிஸ்ரா தெரிவித்த காரணங்கள் மோசமானதாக இருந்தன. அவர் கூறிய காரணங்கள் அடிப்படைக் குறைபாடுகள் கொண்டதாக இருந்தன.

ஒருமுறை விடுமுறை கால நீதிமன்றத்தில் வரி தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பை பிறப்பித்தார். பொதுவாக, விடுமுறை கால நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படுவது வழக்கம். இதில், இறுதி தீர்ப்பை வழங்கியது வழக்கத்துக்கு மாறாக இருந்தது. மேலும் வரி தொடர்பான தொழிலதிபர் அதானியின் வழக்கையும் விடுமுறை நீதிமன்றத்தில் முழுவதும் விசாரித்து, அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார்.

அதானி வழக்குகளை எல்லாம் நீதிபதி அருண் மிஸ்ரா விசாரித்தது, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான வழக்கு ஒதுக்கீட்டு நெறிமுறைகளுக்கு மாறாக இருந்தது. அதானி குழுமத்துக்கு ஆதரவான தீர்ப்புகளின் மூலம், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் அளவுக்கு நீதிபதி அருண் மிஸ்ரா நிவாரணம் அளித்தார். உண்மையிலேயே, அதானி குழுமத்தின் கனவுகளை செயல்படுத்தும் நீதிமன்றமாக அருண் மிஸ்ரா பணியாற்றிய நீதிமன்றம் இருந்தது.

கொச்சியில் மராடு பகுதியில் சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டப்பட்ட 4 மாடிகள் கொண்ட 343 குடியிருப்புகள் இடிக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், வீட்டு உரிமையாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த கேரள உயர்நீதிமன்றம், கட்டிடங்கள் கட்ட அனுமதிக்கப்பட்ட பகுதியாக அந்த இடம் வகைப்படுத்தப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டியது.

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு மேல்முறையீட்டுக்கு வந்தபோது, கேரள உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆச்சரியம் தெரிவித்த நீதிபதி அருண் மிஸ்ரா, 343 குடியிருப்புகளையும் இடிக்க உத்தரவிட்டார். முன்னதாக, உச்ச நீதிமன்றத்தின் தொழில்நுட்பக் கமிட்டி அனைத்து உரிமையாளர்களிடமும் விசாரிக்கவில்லை. அதேசமயம், விடுமுறை கால நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கட்டிடங்களை இடிப்பதற்கு தடை விதிப்பதற்கான போதுமான காரணங்கள் இருப்பதாகக் கூறியது. ஆனால், இதையெல்லாம் மனதில் கொள்ளாமல், 343 வீடுகளைம் இடித்துத் தள்ள நீதிபதி அருண் மிஸ்ரா உத்தரவிட்டார்.

ஏழைகளும் காயப்பட்டார்கள்: நீதிபதி அருண் மிஸ்ரா கடைசியாக அளித்த தீர்ப்பில், ரயில் பாதையோரம் வசிக்கும் ஏழைகளின் 48 ஆயிரம் குடிசைகளை, நோட்டீஸ் தராமல், விசாரிக்காமல், அவர்களுக்கு மாற்று இருப்பிட வசதி செய்து தராமல், நீதித்துறை மேம்பாட்டு நிவாரணம் தராமல் இடித்துத் தள்ள உத்தரவிட்டார்.

உரிமக் கட்டணத்தை கணக்கிட, தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வருவாயை உட்படுத்தி, மத்திய தொலை தொடர்புத் துறை பிறப்பித்த உத்தரவுக்கு ஆதரவாக நீதிபதி அருண் மிஸ்ரா தீர்ப்பளித்தார். இதனால், வோடாபோன் நிறுவனம் ரூ. 58 ஆயிரம் கோடிகளும், ஏர்டெல் நிறுவனம் 43 ஆயிரம் கோடிகளும் (ரிலையன்ஸ் ஜியோ இதில் சம்பந்தப்படவில்லை) கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த தொகையை கட்ட இரு நிறுவனங்களுக்கும் 3 மாதங்கள் கால அவகாசம் மட்டும் கொடுத்த அருண் மிஸ்ரா, அதற்குள் முழுத் தொகையையும் கட்டவேண்டும், இல்லையேல், நிறுவனங்கள் இழுத்து மூடப்படுவதை எதிர்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பளித்தார். தொலைத் தொடர்புத் துறையில் வோடாபோன், ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே போட்டி நிறுவனங்களாக உள்ளன. இதில், இரு நிறுவனங்களையும் மூடிவிட்டால், ரிலையன்ஸ் ஜியோ தான் தனிக்காட்டு ராஜா என்பது நீதிபதி அருண் மிஸ்ராவுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் தெரியும்.

நீதிபதி அருண் மிஸ்ரா 3 மாதங்கள் மட்டுமே அவகாசம் கொடுத்தார். எனினும், அரசிடம் இந்த இரு நிறுவனங்களும் இடைவிடாமல் வேண்டுகோள் விடுத்து காலக்கெடுவை நீட்டித்து வருகின்றன. அதிர்ஷ்டவசமாக, அரசும் அவர்களுக்கு கால நீட்டிப்பு செய்துவருகிறது.

நீதிபதி அருண் மிஸ்ராவின் தீர்ப்புகள் அனைத்தும், எதிர்வரும் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாத வகையில் குருட்டுத்தனமாக இருந்தது. சர்வாதிகாரிகளாக இல்லாமல் சட்டத்தின் எல்லைகளை மதித்து நடுநிலையாக செயல்படுவதற்காகத்தான் நீதிபதிகளுக்கு நாம் அதிகாரத்தைக் கொடுத்துள்ளோம்.

இவற்றை எல்லாம் மீறி நடக்கும்போது, நீதியை மீட்டெடுக்க யார் வருவார்? என்ற கேள்வி இப்போது அடிக்கடி எழுப்பப்படுகிறது. வெறித்தனமாக கட்டுப்பாடற்று ஓடிக் கொண்டிருக்கும் காவலர்களால் ஏற்படும் அபாயத்தை நமக்கு படம் பிடித்து’ காட்டியதற்காக, நீதிபதி அருண் மிஸ்ராவுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், பிரசாந்த் பூஷன் மீதான அவமதிப்பு வழக்கில் ஆர்வம் காட்டியதன் மூலம், அவர் எப்படிப்பட்டவர் என்பது வெளிப்பட்டது.

தான் தொடர்ந்த பல வழக்குகளை நீதிபதி அருண் மிஸ்ரா விசாரிக்கக் கூடாது என்று மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் கேட்டுக் கொண்டதுண்டு. ஆனால், பிரசாந்த் பூஷன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கையே நீதிபதி அருண் மிஸ்ரா விசாரிக்கும் நிலை ஏற்பட்டது. நீதிபதியே குற்றம் சாட்டுபவராகவும், அரசு வழக்குரைஞராகவும், சாட்சியாகவும் மற்றும் தீர்ப்பளிப்பவராகவும் இருக்கும்போது, இரு கைகளையும் முதுகுக்குப் பின்னால் கட்டிக்கொண்டு போராட வேண்டியுள்ளது.

தலைமை நீதிபதி தலைக் கவசம் போடாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியது குறித்து, ட்விட்டரில் பிரசாந்த் பூஷன் பதிவிட்டது, எந்த வகையிலும் தலைமை நீதிபதிக்கோ அல்லது நீதித்துறைக்கோ கெட்ட பெயரை ஏற்படுத்தப் போவதில்லை. நீதித்துறையையும், கடைசியாக பதவி வகித்த 4 தலைமை நீதிபதிகளைப் பற்றியும் அவர் விமர்சித்தது, நாட்டு மக்களின் பிரதிபலிப்பு. ஏற்கனவே, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருந்தவர்கள் விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால், அருண் மிஸ்ரோவோ, தான் ஓய்வு பெறுவதற்கு முன்பு வேகமாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்து தண்டனையும் கொடுத்திருக்கிறார். சட்ட சமுதாயத்துக்கும் நீதித்துறைக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட அருண் மிஸ்ரா காரணமாக இருந்தார். பேச்சு, கருத்து சுதந்திரத்துக்கு எதிரானவராக மிஸ்ரா இருந்தார்.

உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுபவருக்கு 45 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஆனால், 45 வயதுக்கு குறைவான அவரது சகோதரர் விஷால் மிஸ்ரா, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். விதிமுறைப்படி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி பாப்டே மற்றும் நீதிபதி ரமணா ஆகியோரைக் கொண்ட தேர்வுக் குழுவால் தன் சகோதரர் உயர் நீதிமன்ற நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படும்போது, அந்த குழுவில் அருண் மிஸ்ரா இடம்பெறவில்லை. ஆனால், 5 மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட கொலீஜியத்தில் நீதிபதி மிஸ்ரா இடம்பெற்றிருந்தார். விஷால் மிஸ்ரா உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிவிட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பல ஆண்டுகள் இருக்கும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும்போது, கொலீஜியம் மூலம் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் முறையை ரத்து செய்துவிட்டு, பழைய முறைப்படி தேசிய நீதிபதிகள் தேர்வுக் குழுவே தேர்ந்தெடுக்கலாம்.

நல்ல நீதிபதிக்கான எந்த தகுதியும் நீதிபதி அருண் மிஸ்ராவிடம் இல்லை. வழக்குரைஞர்கள் முதல் நீதிபதிகள் வரை மிரட்டல் போக்குடன் நடந்து கொள்வது, ஒரு சார்பாக நடந்து கொள்வது அவரது வழக்கமாக இருந்தது. நீதிமன்றத்தின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் செயல்பட்டதன் மூலம், அருண் மிஸ்ரா தான் நீதிமன்ற அவதிப்புக் குற்றத்தை செய்துள்ளார். அவருக்கு அரசியல் சாசனத்தின் 16 ஆவது பிரிவின் கீழ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பொருந்தாதா? பிரசாந்த் பூஷன் மற்றும் நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோருக்கிடையே ஒப்பீடு செய்தால், யார் நீதிமன்றத்தை அவமதித்து இருக்கிறார்கள் என்று தெரியும்.

தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு வாரியத் தலைவர் மற்றும் டெல்லி துணை நிலை ஆளுநர் பதவி நிரப்பப்படவுள்ளது. இந்த பழங்களை தேடும் பறவையாக நீதிபதி அருண் மிஸ்ரா மாறலாம். இப்போது, நாட்டின் நீண்டகால எதிர்காலத்தைப் பற்றி யோசிக்க வேண்டும். நீதிபதி அருண் மிஸ்ராவின் சகோதரர் விஷால் மிஸ்ராவை மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக தொடரவிட்டால், முறைகேடாக தேர்வு செய்யப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட முதல் நீதிபதியாக இருப்பார்.

(பார் அண்ட் பெஞ்ச் இணையத்தில் மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்.)

The post நீதிபதி அருண் மிஸ்ரா: ஒரு மதிப்பீடு – மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

உச்ச நீதிமன்றம் போகும் பாதை பெரும் அச்சமூட்டுகிறது !
நம் நாட்டில் சாமானிய மக்கள் தங்களின் துயரங்களை துடைத்தெறிய- அநியாயங்களை அகற்றிட எப்போதும் நம்பிக்கையுடன் அணுகுவது நீதிமன்றங்களைத் தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்புகள் மத்திய அரசின் தவறுகளை தட்டிக் கேட்பதற்கு பதிலாக அவற்றிற்கு துணை போவதாக உள்ளது. குறிப்பாக உச்ச நீதிமன்றம் அரசின் கைப்பாவையாக செயல் படுகிறதோ என்று அச்சம் பலருக்கும் தற்போது ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நேற்றும் இன்றும் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகள் எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது.

பி எம் கேர்ஸ் நிதி : இது பிரதமர் கோவிட்-19 நோயினை எதிர்த்து போராடுவதற்காக புதிதாக உருவாக்கிய நிதி. இதற்கு பலரும் தாராளமாக நன்கொடை வழங்குகின்றனர். ஆனால் இந்த நிதியின் வரவு செலவு கணக்கு பகிரங்கமாக இல்லை என்பது மட்டுமல்ல இதற்கு யார் தணிக்கை செய்வது என்பதும் மூடு மந்திரமாக உள்ளது. இது குறித்து நேற்று அளித்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் அரசின் நிலையை அப்படியே ஆமோதித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. நிதி நிர்வாகத்தில் இருக்க வேண்டிய வெளிப்படைத்தன்மை – தணிக்கை முறை என்பதைக் கூட அந்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் வலியுறுத்தி கூறாதது மிகவும் கவலை அளிக்கிறது.‌

நடிகர் சுசாந்த் தற்கொலை குறித்த விசாரணை : இது குறித்து சம்பவம் நிகழ்ந்த மும்பை காவல்துறை விசாரணை நடத்திவரும் வேளையில் அரசியல் ஆதாயம் பெறும் உள்நோக்கத்துடன் சம்பந்தமே இல்லாமல் பீகார் மாநிலத்தின் பா.ஜ.க.கூட்டணி அரசு இந்த தற்கொலை குறித்து விசாரணை செய்ய முனைகிறது. நடிகர் சுசாந்த் பல வருடங்களாக வசிக்கும் வீடு மும்பையில் தான் உள்ளது. அந்த வீட்டில் தான் அவர் தற்கொலையும் நிகழ்ந்தது. எனவே இது குறித்து மும்பை போலீஸ் விசாரணை செய்வது தான் முறையானது. இதில் பீகார் மாநிலத்தின் காவல்துறை மூக்கை நுழைத்தது தவறு. இந்த அழகில் பீகார் மாநிலத்தின் வேண்டுகோளை ஏற்று இந்த தற்கொலை வழக்கை மத்திய சி.பி.ஐ . காவல்துறை விசாரணை செய்யும் என தடாலடியாக அமீத் ஷா அறிவித்தது அரசியல் சாசன சட்டத்திற்கு புறம்பானது. இது குறித்த தீர்ப்பை நேற்று வழங்கிய உச்சநீதிமன்றம் மத்திய அரசின் சி.பி.ஐ. விசாரணை சரியே என தீர்ப்பளித்தது. இது ஒரு அப்பட்டமான நெறி பிறழல் என்பதில் சந்தேகமில்லை. நம் நாட்டில் மாநில அரசுகளுக்கு உள்ள சுயாட்சி உரிமையை பறிக்கும் மத்திய அரசின் இந்த தவறை உச்சநீதிமன்றம் ஆதரிப்பது மாபெரும் தவறு. மாநில அரசின் அனுமதியுடன் மட்டுமே சி.பி.ஐ. சம்பந்தப்பட்ட மாநில குற்றம் குறித்து விசாரணை செய்ய முடியும்.இதனை மீறியுள்ளது இன்றைய தீர்ப்பு.

இது மட்டும் அல்ல. இதுபோன்ற பல வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் தவறான தீர்ப்புகளை சுட்டிக் காட்ட முடியும்.

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து பறிப்பு குறித்த வழக்கை ஓராண்டாக விசாரணைக்கு ஏற்க மறுக்கிறது உச்சநீதிமன்றம்.

பாபர் மசூதி இடிப்பு தவறு என்றும் அதனை செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற அதே சமயத்தில் உச்ச நீதிமன்றம் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட தீர்ப்பு அளித்தது.

ரஃபேல் போர் விமானங்கள் வாங்க நடந்த பேரத்தில் முறைகேடு எதுவும் இல்லை என பிரதமர் மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கிய உச்சநீதிமன்றம் அந்த பேரத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து மெளனம் சாதித்தது .

சி.பி.ஐ. இயக்குனரை மத்திய அரசு நள்ளிரவில் மாற்றல் செய்து உத்தரவு பிறப்பித்ததுடன் அவருக்கு மாற்றாக வேறு ஒருவர் விடியற்காலையில் பொறுப்பு ஏற்றுக் கொண்டதை எல்லாம் உச்ச நீதிமன்றம் கண்டிக்க குரலின்றி மெளனமானது.

உச்சநீதிமன்றத்தின்  தலைமை நீதிபதி ஒருவர் மீது ஒரு பெண் ஊழியர் பாலியல் பலாத்காரப் புகார் செய்ததை விசாரித்து அந்த பெண் கூறிய புகார் ஆதாரமற்றது என உச்சநீதிமன்றமே தீர்மானித்தது. ஆனால் பொய்ப் புகார் கூறிய அந்த பெண் ஊழியர் மீது எந்த நடவடிக்கையும் உச்சநீதிமன்றம் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட தலைமை நீதிபதி பணிஓய்வு பெற்றதும் அந்த பெண்மணியை மீண்டும் பணியில் அமர்த்திக் கொண்டது உச்ச நீதிமன்றம். இதற்கு அர்த்தம் என்ன ? அந்த பெண் நிரபராதி என்றால் அந்த தலைமை நீதிபதி தவறிழைத்தாரா ?

உச்ச நீதிமன்றம் அதன் மாண்பை காப்பாற்றி பாதுகாத்துக் கொள்ள வேண்டியது இந்திய நாட்டின் எதிர்காலத்திற்கு மிக மிக தேவை.

(ஆதித்ய கிஷோர்)

The post உச்ச நீதிமன்றம் போகும் பாதை பெரும் அச்சமூட்டுகிறது ! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

நான் நினைத்தது போலவே எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன…!
பிரசாந்த் பூசன் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் நூறு சதவிகித உண்மை என்பது நாட்டு மக்களுக்கு நன்கு தெரிந்த நிலையில், ’அவர் ஒருவர் மட்டும் மன்னிப்பு கேட்டுவிட்டால் போதும் தங்கள் மீதான கறைகள் மறைந்துவிடும்’என அந்த நீதிபதிகள் நினைப்பது நகைப்பிற்குரியது.

பிரசாந்த் பூசனிடம் மீண்டும்,மீண்டும் நீதிபதிகள், ’’மன்னிப்பு கேள்’’ என்று கேட்டதை ’எங்களை மன்னித்துவிடு’ என்று கெஞ்சியதாகவே மக்கள் புரிந்து கொள்வார்கள்!

இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் சம்மந்தப்பட்ட நீதிபதிகள் தாங்களாகவே வந்து தங்கள் தலையை கொடுத்து சிக்கிக் கொண்டு, இப்போது எடுக்கவும் முடியாமல்,விட்டுவிடவும் முடியாமல் தவிக்கின்றனர்.

முக்கியமாக ஓய்வு பெற்ற நான்கு தலைமை நீதிபதிகள் மீது பிரசாந்த் பூசன் ஊழல்வாதிகள் என குற்றம் சாட்டியிருந்தார். தற்போது இந்த வழக்கை விசாரிக்கும் அருண் மிஸ்ரா மீதும் ஏற்கனவே குற்றம் சொல்லியிருந்தார்!( ராஜஸ்தான் எம்.எல்.ஏக்களை சபாநாயகர் நீக்கிய வழக்கில் இவர் தான் தடை விதித்து எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பு கொடுத்தவர்)

குற்றம் சாட்டப்பட்டவரே நீதிபதியாக வந்து விசாரிக்க கூடாது என்ற தார்மீக நெறிகளையாவது அவர் மதிக்க வேண்டாமா?

பிரசாந்த் பூசன் தெரிவித்த கருத்து என்ன?
கடந்த ஆறு ஆண்டுகளில் தேசத்தின் ஜனநாயகத்தை அழிப்பதில் முந்தைய நான்கு தலைமை நீதிபதிகள் பங்கு வகித்தனர் என்பது தான்!

அது குறித்த விரிவான விளக்கத்தை நீதிமன்றம் பிரசாந்த் பூசனிடம் கேட்டு பெற்றிருக்க வேண்டாமா?

மாறாக, ’’நீ எப்படி எங்க ஆட்கள் மீது குற்றச்சாட்டு வைக்கலாம்’’ என்ற கோணத்தில் விசாரித்தால், இது நியாயமற்றது என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படுமா…? இல்லையா?

அந்த மனுஷன் என்னவோ மனசு தாங்காமல் டிவிட்டரில் பதிவிட்டார்.அதை அப்படியே விட்டிருந்தால் ஏதோ சில ஆயிரம் பேர் பார்த்ததோடு விவகாரம் முடிந்திருக்கும். ஆனால்,விதி யாரைவிட்டது.

’’நாங்கள் சுப்ரீம் கோர்டு நீதிபதிகளாச்சே எங்களையே சொன்னால் விடுவோமா? எங்கள் அதிகாரத்தை காட்டுகிறோம்’’ என்று இறங்க போய் இன்று ஒட்டுமொத்த ஊடகங்களிலும் பிரசாந்த் பூசன் எழுதியது வெளியாகிவிட்டது!

இப்போது நாட்டு மக்களில் பெரும்பாலானோர் ’’பிரசாந்த் பூசன் நம்ம நினைத்தை தான் பேசியிருக்கார். ஆகா,அவரை நாம் கைவிடக் கூடாது ஆதரிக்க வேண்டும்’’என்ற நிலைமைக்கு வந்துவிட்டனர்.

ஏராளமான முன்னாள் நீதிபதிகளே பிரசாந்த்பூசனை ஆதரிக்கின்றனர். வக்கீல்கள் நாடெங்கும் பிரசாந்த் பூசனுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துகிறார்கள்!

உண்மைக்கு இருக்கும் வலிமையின் வெளிப்பாடுகளே இவை!

நீதிபதி சொல்கிறார்,’’ ஆ.. நீதிபதிகளை பற்றியும், நீதிமன்றத்தை பற்றியுமான மரியாதையை பிரசாந்த் பூசன் சீர்குலைக்கிறார்!’’

உச்ச நீதிமன்றம் என்பது ஒரு தனி மனிதனால் மரியாதையை சீர்குலைத்துக் கொள்ளும் அளவுக்கு பலவீனமானதா? நீதிமன்றத்தின் மீதான மரியாதையான தோற்றம் மக்களுக்கு அதில் நீதி வழங்கும் நீதிபதிகள் மூலமாகத் தானே உருவாக முடியும்.

அந்த பீடத்தில் இருப்பவர்களுக்கே அந்த பொறுப்பு இருக்காது என்றால் – நீதிபதிகள் தங்கள் நடத்தைகளின் மூலமாக அதை சிதைப்பார்கள் என்றால் – வெளியில் இருப்பவர்கள் தங்களை மதிக்க வேண்டும் என்று எப்படி அவர்கள் எதிர்பார்க்கலாம்?

ஒரு முன்னாள் நீதிபதி பேசியுள்ளார். ‘’பிரசாந்த் பூசனை கடுமையாக தண்டிக்க வேண்டும்.இல்லையென்றால், நீதிமன்றத்திற்கு யாரும் பயப்படமாட்டார்கள்’’

நீதிமன்றத்திற்கு மக்கள் பயப்பட வேண்டும் என்ற கருத்தே பிழையானது. நீதிமன்றத்தை நினைக்கையில் மக்கள் பாதுகாப்பாக உணர வேண்டுமேயன்றி, பயமாக உணரலாகாது!

ஆனால், நடைமுறையில் தங்கள் தீர்ப்புகளின் மூலம் உச்ச நீதிமன்றம் மக்களை அச்சப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அதற்கு சிறந்த உதராணம் வேண்டும் என்றால் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் இந்த உச்ச மன்றம் தானே மூடப்பட்ட ஆலையை 100 கோடி அபராதம் விதித்து திறந்து கொள்ளலாம் என 2011 ல் தீர்ப்பளித்தது!

பல்லாயிரக்கணக்கான மக்களின் உடல் நலனுக்கு பெரும் கேடு செய்யும் ஒரு ஆலையை அபராதப் பணம்கட்டி திறந்து கொள்ளலாம் என்ற தீர்ப்பை தொடர்ந்து தானே மீண்டும் மக்கள் பாதிப்புக்கு உள்ளானதும், போராட்டம் இடையறாது நடந்து 13 உயிர்கள் பலியானதும்!

ஊரடங்கு நேரத்தில் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் சாராயக் கடைகளை திறக்கும் தைரியத்தை தமிழக அரசுக்கு தந்தது எந்த நீதிமன்றம்?

தண்டனையைக் காட்டி தங்கள் மரியாதையை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய பரிதாப நிலைக்கு உச்ச நீதிமன்றத்தை ஆளாக்கியது யார்?

பிரசாந்த் பூசனை தண்டிக்க முன்றால், இன்னும் ஆயிரக்கணக்கான பிரசாந்த் பூசன்கள் தோன்ற அது வழிவகுக்கும் என்பதால் தானே, ’மன்னிப்பு கேள் ’என்று அவகாசம் தந்து கெஞ்சுகிறீர்கள்..!

பிரசாந்த் பூசன் தெளிவுபடுத்திவிட்டார்.

நான் வைத்த விமர்சனத்தை நீதித்துறை சிறப்பாக செயல்படுவதற்கான வாய்ப்பாக பார்க்க வேண்டும்.

நான் கடமையைச் செய்தேன்.அதனால்,கருணையை கோரவில்லை!

மன்னிப்பு கேட்க அவகாசம் தருவது நேரத்தை வீணடிப்பது ஆகும்! ஆகவே, தண்டனை தாருங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்.

அப்போதும் நீதிபதி சொல்கிறார்; உங்கள் கருத்தை மறுபரிசீலனை செய்யுங்கள் பிரசாந்த் பூசன்’’

பிரசாந்த் பூசன் கூறுகிறார்; நான் கூறிய குற்றசாட்டுகள் தொடர்பாக நீதிபதிகள் தங்களை மறுபரிசீலனை செய்து கொள்வது தான் சரியாக இருக்கும்!

சபாஷ்,உண்மைக்கான் உறுதிப்பாடே இது! என்ன முடிவு என தெரிய நாடே காத்திருக்கிறது. நீதிபதிகள் தங்களை நேர்படுத்திக் கொண்டால் நாடே அதற்கு நன்றிகாட்டும்!

(கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர், முக நூலில் வெளிவந்தது)

The post நான் நினைத்தது போலவே எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன…! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

பி எம் கேர்ஸ் நிதி விவகாரம்: உச்ச நீதிமன்றம் உணராத உண்மை
கொரோனாவை எதிர்கொள்ள பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பிஎம் கேர்ஸ் நிதி (பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாரணம்) என்ற பெயரில் பொது அறக்கட்டளையை மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் இறுதியில் தொடங்கியது. இதை தொடங்கியதும், நன்கொடை அளிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. வெளிப்படைத்தன்மை இல்லாத பிஎம் கேர்ஸின் சில அம்சங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் கடந்த புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

”தேசிய பேரிடர் பொறுப்பு நிதியைப் போல், பிஎம் கேர்ஸ் நிதியை  இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளரின் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டியதில்லை. பிஎம். கேர்ஸ் நிதி என்பது அறக்கட்டளை என்பதால், தனியார் தணிக்கையாளரின்  தணிக்கையே போதுமானது” என்ற அரசு வாதத்தை சட்ட ரீதியாக எதிர்த்தே உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

பிஎம் கேர்ஸ் நிதி, ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என விவாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஏற்கனவே, தேசிய பேரிடர் நிவாரண நிதி நடைமுறையில் இருக்கும் போது, புதிதாக பிஎம் கேர்ஸ் என்ற பெயரில் நிதியை தொடங்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்விக்கு அரசு அவசியம் பதில் தரவேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இரண்டாவதாக, சில மாதங்களாக செயல்பட்டு வரும் பிஎம் கேர்ஸ் நிதியின் செயல்பாடு சந்தேகத்துக்குரியதாக இருப்பதாக, நீதிமன்றத்தில் சமூக செயற்பாட்டாளர்களும், வழக்குரைஞர்களும் சுட்டிக்காட்டினர். பிஎம் கேர்ஸ் நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்று, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் தர பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது. இதனைப் பார்க்கும்போது, பிஎம் கேர்ஸ் நிதி வேறு பயன்பாட்டுக்கு திருப்பிவிடப்படுகிறது என்றுதான் பொருள் கொள்ளமுடியும்.  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், நிதியை வேறு பயன்பாட்டுக்கு மடைமாற்றி விடுவது குறித்த கேள்விக்குப் பதில் தராமல் தவிர்க்க முடியாது என ஏற்கனவே பல்வேறு நீதிமன்றங்களில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பிஎம் கேர்ஸ் நிதியை நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு பார்வையிடுவதற்கு, மோடி அரசு முட்டுக்கட்டை போடுவதாக, கடந்த ஜுலை மாதம் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.

தேசிய பேரிடர் நிவாரண நிதி என்பது அரசிடம் இருந்து பெறும் நிதி என்றும், பிஎம் கேர்ஸ் நிதி முற்றிலும் வெளியில் இருந்து நன்கொடை மூலமாக பெறுவது என்றும் வேறுபடுத்திக் காட்டியதோடு, பிஎம் கேர்ஸுக்கு இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளரின் தணிக்கை தேவையில்லை என்ற முடிவுக்கு உச்ச நீதிமன்றம் வந்துள்ளது. மேலும், தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், தேசிய பேரிடர் நிவாரண நிதி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், பிஎம் கேர்ஸ் பொது அறக்கட்டளை என்பதால், இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளரின்  தணிக்கை தேவையில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2005 ஆம் ஆண்டு தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தேசிய பேரிடர் நிவாரண நிதி இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளரின் தணிக்கைக்கு உட்பட்டது. ஆனால், நீதிமன்றமோ,எங்கெல்லாம் பொது அறக்கட்டளை இருக்கிறதோ, அங்கெல்லாம் இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளரின்  தணிக்கைக்கு அவசியம் இல்லை என்று சொல்கிறது.

கொரோனாவை பேரிடர் என கடந்த மார்ச் 14 ஆம் தேதி மத்திய அரசு அறிவித்ததாகவும், அதற்கு முன்பு தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு எந்த நிறுவனமோ அல்லது தனி நபரோ நிதி அளிக்கவில்லை என்பதால், பிஎம் கேர்ஸ் நிதி குறித்து மனுதாரர்கள் கேள்வி எழுப்ப முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

ஆனால், மனுதாரரின் முக்கிய கேள்வியை உச்சநீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டது. பிஎம் கேர்ஸுக்கு மத்திய பட்ஜெட் மூலம் நிதி ஒதுக்கப்படவில்லை என்றாலும்,  கொரோனாவை எதிர்த்துப் போராட மக்களிடமே பிஎம் கேர்ஸ் நன்கொடை பெற்றது என்ற உண்மையை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை.

இந்திய மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்கள் வருடாந்திர தணிக்கையை முடிக்கும் முன்பாக, பிஎம் கேர்ஸின் நிதி பரிவர்த்தனைகள் குறித்த அறிக்கையை வெளியிடுவதையாவது, உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருக்க வேண்டும். பேரிடர் காலத்தின்போது, தங்களிடம் இருந்து பெற்ற நன்கொடையை, தங்களுக்கே அரசு எப்படி பயன்படுத்துகிறது என்பது குறித்து தெளிவாகவும், விரைந்தும் தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமை உண்டு.

The post பி எம் கேர்ஸ் நிதி விவகாரம்: உச்ச நீதிமன்றம் உணராத உண்மை appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

தந்தை சொத்தில் மகளுக்கு சம உரிமை: உச்ச நீதிமன்றம் தீர்த்து வைத்த குழப்பம்
தந்தையின் சொத்தில் மகன்களைப் போல, மகள்களுக்கும் சம உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1956 ஆம் ஆண்டு இந்து வாரிசுச் சட்டத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டாலும், அதற்கு முந்தைய காலத்திலிருந்தே இந்த சட்டத்தின்படி மகள்கள் சொத்துரிமை கோர முடியும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 700-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்களுடன் பணியாற்றும் ‘சிரில் அமர்சந்த் மங்கல்தாஸ்’ சட்ட நிறுவனத்தின் பங்குதாரர் ரிஷப் ஷராப் அளித்த பதில்கள்:

2005 திருத்தம் என்ன சொல்கிறது?

வாரிசுதாரர்களான மகன்களுக்கும் மகள்களுக்கும் தந்தை சொத்தில் சம உரிமை அளிக்கும் வகையில், கடந்த 2005 ஆம் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டதிருத்தம் கொண்டுவரப்படுவதற்கு முன்பு, மகன்களுக்கு மட்டுமே சொத்துரிமை  அளிக்கப்பட்டு வந்தது.

வாரிசுதாரர் என்பவர் யார்?

பிறப்பால் வாரிசு உரிமை பெற்றவர், தந்தையின் சொத்துகளைப் பெற உரிமை உண்டு.  சொத்து  பிரிப்பை அவர் எந்நேரமும் கோரலாம்.

இதில் என்ன குழப்பம் இருந்தது. தற்போது எவ்வாறு அது தீர்க்கப்பட்டுள்ளது?

2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி இந்த சட்ட திருத்தம் அமல்படுத்தப்பட்ட சமயத்தில், தந்தை உயிருடன் இருந்தால் மட்டுமே, மகள்களுக்கு சொத்தில் பங்கு கொடுக்க முடியும் என திருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. மகன்களுக்கும் மகள்களுக்கும் சொத்தில் சம உரிமை கொடுத்தபோதிலும், தந்தை உயிருடன் இருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்ற அளவீடு குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த தீர்ப்பு வரும்வரை குழப்பம் நீடித்துக் கொண்டிருந்தது. தந்தையின் சொத்தில் மகன்களைப் போலவே, மகள்களும் திருத்தம் கொண்டு வரப்படுவதற்கு முந்தைய காலத்தில் இருந்தே சொத்தில் சம உரிமை கோர முடியும் என உச்ச நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்தன் மூலம் குழப்பம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. பிறந்தவுடனேயே தந்தையின் சொத்தில்   மகள்களுக்கு உரிமை உள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் மூலம் தற்போது தெளிவாகியுள்ளது. சட்ட திருத்தம் கொண்டு வரும்போது, தந்தை உயிருடன் இருந்தால் மட்டுமே மகள்கள் சொத்துரிமை கோர முடியும் என்பதற்கு பதிலாக, மகள் பிறந்தது முதலே சொத்துரிமை கோர அவருக்கு உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த தீர்ப்பை அமல்படுத்துவதற்கான நிபந்தனைகள் என்ன?

கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதிக்கு முன்பு சொத்து பிரிக்கப்படாமல் இருந்தால் மட்டுமே நிபந்தனைகளின் அடிப்படையில் இது பொருந்தும். நீண்ட காலம் தந்தையிடமே சொத்து இருக்கும் பட்சத்தில், அந்த சொத்து பங்கு பிரிக்கப்படாமல் இருந்தால், அந்த சொத்துக்கு மகள்கள் தற்போது உரிமை கோர முடியும்.

இந்து கூட்டுக் குடும்பத்தில் உள்ள வகைகள் என்ன?

இந்த தீர்ப்பு மூலம் தந்தை மட்டுமே சொத்துரிமை தருவது குறித்த முடிவு எடுப்பவராக இருப்பார்.  இரண்டாவது வகை, சொத்துரிமை யாருக்கும் கொடுக்க இயலாத, தந்தையின் சொத்தை பங்கு பிரித்து கொடுக்க உரிமை இல்லாதவரான குடும்பத்தலைவரின் மனைவி சொத்துகளை அனுபவிப்பராக மட்டுமே இருப்பார்.

இப்போது மகள்கள் என்ன செய்யவேண்டும்?

தந்தையின் வாரிசுகளாக மகன்கள் கருதப்பட்டதைப் போல், மகள்களும் இப்போது கருதப்பட வேண்டும். தந்தையின் சொத்தில் மகள்களுக்கு சம உரிமை உள்ளது. மகளின் திருமண வாழ்க்கை,  இந்த சட்ட திருத்தத்தில் அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட உரிமையை பாதிக்காது. எனவே திருமணத்துக்குப் பிறகும் தந்தையின் சொத்தில் மகளுக்கு பங்கு உண்டு.

இந்த தீர்ப்பு குடும்ப விவகாரங்கள் மற்றும் மற்றவர்கள் மத்தியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

இந்து கூட்டுக் குடும்பத்துக்குத் தான் இந்த தீர்ப்பு பொருந்தும் என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் தனிப்பட்ட அல்லது அவரது சொந்த சொத்துகளுக்கு பாதிப்பு வராது. உண்மையிலேயே, பெரும்பாலான வசதிமிக்க குடும்பங்களில் உள்ள சொத்துகள், தனிப்பட்ட செல்வங்களாக, ஆணாதிக்க அல்லது தனிப்பட்ட பெயர்களில், தனியார் அறக்கட்டளை மற்றும் நிறுவனங்களின் பெயரிலேயே உள்ளன.

பழைய வணிகக்  கூட்டுக் குடும்பங்களில் சில மூதாதையர் செல்வங்களை தொடர்ந்து வைத்திருக்கலாம். ஆனால், அத்தகைய பங்குகளின் அளவு மற்றும் பொருள் பொதுவாக குறைவாகவே இருக்கும். ஏறக்குறைய எந்த வணிக குடும்பமும் புதிய கூட்டுக் குடும்பங்களை உருவாக்கவில்லை. தற்போது பெரும்பாலான கூட்டுக் குடும்பங்கள் கலைக்கப்படுவதுதான் உண்மை.

The post தந்தை சொத்தில் மகளுக்கு சம உரிமை: உச்ச நீதிமன்றம் தீர்த்து வைத்த குழப்பம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

நீதிமன்ற தலையீடு: காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் கடும் எதிர்ப்பு
களத்தில் இறங்கி போராடவும், நாட்டில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு தெரிவிக்கவும் நேரம் வந்துவிட்டதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புகளை மீறி, உயர்நீதிமன்றங்கள் அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயக மதிப்பீடுகளை தகர்த்து எறிவதாகவும் அவர் அறிக்கை ஒன்றில் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.

ராஜஸ்தான் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை கூட்டத்தில் இரு முறை பங்கேற்கவில்லை.

இதனையடுத்து, 19 பேரையும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு காங்கிரஸ் கட்சியின் கொறடா பரிந்துரை செய்திருந்தார். இதனையடுத்து, இது குறித்து விளக்கம் கேட்டு, 19 எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இதனை எதிர்த்து 19 எம்எல்ஏக்களும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கு  விசாரணைக்கு உகந்தது என்றும், உச்ச நீதிமன்ற பரிசீலனைக்குட்பட்டது என்றும் தீர்ப்பளித்தது. இதில் நீதிமன்றம் முடிவு எடுக்கும் வரை நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கபில் சிபல் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:

மகாராஷ்ட்ராவில் என்ன நடந்தது என்று நமக்கு தெரியும். கடைசி நேரத்தில் முதலமைச்சருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அப்போதே குடியரசுத் தலைவர் ஆட்சி அகற்றிக்கொள்ளப்பட்டது.

கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் எம்எல்ஏக், கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தபோதும் இதேதான் நடந்தது. பின்னர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கவிழ்க்கப்பட்டது.

பொம்மை வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், பேரவையில் மட்டுமே பெரும்பான்மை நிரூபிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த நபம் துகி வழக்கில் கேபினட் விருப்பப்பட்டால்,  பேரவையை ஆளுநர் கூட்டலாம் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் மற்றும் ஜனநாயகத்தை தகர்த்தெறியும் வகையில் உயர்நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.

இந்த சூழ்நிலையில் சாலைகளில் இறங்கி போராடவும், நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிவிக்கும் கடமையும் காங்கிரஸ் கட்சிக்கும், வழக்குரைஞர்களுக்கும் உள்ளது என அவர் கூறியுள்ளார்.

The post நீதிமன்ற தலையீடு: காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் கடும் எதிர்ப்பு appeared first on தேசிய முரசு - Desiya Murasu.