sonia gandhi Archives - தேசிய முரசு - Desiya Murasu

என் ராஜிவ்! … சோனியா காந்தி எழுதிய தொடர் – 4
பிரதமர் இந்திராவின் படுகொலை குறித்து அன்னை சோனியா!

கடந்த சில ஆண்டு நானும் ராஜிவும் அரசியலை நெருங்கிய சூழ்நிலையில் பார்க்கிறோம். அரசியலின் தரம் தாழ்ந்த நிலைகளை நாங்கள் பார்த்திருக்கிறோம். என் மாமியாரோடு இணைந்து கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்த சில மூத்த தோழர்கள், திடீரென அவரை எதிர்த்தனர். அவர் முழுமையாக நம்பிய அரசியல் நண்பர்கள், துரோகம் இழைத்தனர். அவரைக் கடுமையாக விமர்சித்தனர். அவரை எதிர்த்தவர்கள் பழிவாங்க மேற்கொண்ட பிரச்சாரம் கண்டு, சாதாரண மக்களும் திகைப்படைந்தனர். அரசியல்வாதியானால், வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பதை நானும் ராஜிவும் நன்கு அறிவோம்.

அன்றைய சிக்கலால் ராஜிவ் மன வேதனையுற்றார். என் மாமியார் தனியாக இம்சிக்கப்பட்டார். இப்படிப் பட்ட நிலையில், அவருக்கு இளைப்பாற மகனின் தோள்கள் தேவைப்படும்போது, ராஜிவ் எவ்வாறு சுகவாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க முடியும்? அவருடைய தாயரை நான், மிகவும் நேசித்ததால், மன உளைச்சல் அடைந்தேன். தம் தாய்க்குத் துணையாக நின்று ராஜிவ் பொறுப்புடன் செய்ய வேண்டிய கடமைகளை நான் உணர்ந்தேன்.

அதே வேளையில், அவரைப் பலி ஆடாக ஆக்கும் சமுதாய முறை பற்றி நான் கோபமும், வெறுப்பும் அடைந்தேன். அது அவரை நசுக்கி அழித்துவிடும் என்பதை நான் முழுவதுமாக அறிவேன். அந்த நீண்ட நெடிய ஆண்டு, ஒவ்வொரு நிமிடமும், ஒரு அதல பாதாளத்தை நோக்கிச் சென்றது. எங்களுக்கு உதவி செய்ய எவருமில்லை! எல்லோரும் ஏற்கத்தக்க நியாயமான ஒரு தீர்வை – அற்புதத்தை நான் எதிர்பார்த்தேன்! ராஜிவ் சிதைவடைவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. அவர் என்னுடைய ராஜிவ்! ஏனென்றால், அந்த அளவுக்கு நாங்கள் ஒருவரை ஒருவர் நேசித்தோம்! அவர் தம் தாயாருக்குக் கை கொடுத்து உதவ எண்ணினால், அதற்காக அவரோடு எங்குச் சென்றும் போரிடத் தயாரானேன்.

ராஜிவ் அரசியலில் நுழைந்த வினாடி முதல் எங்கள் வாழ்க்கை மாறியது. இதற்குமுன் அவர் வாழ்க்கை வேறு விதமானது ! கவனமான வேலை! அதன்பின் ஓய்வு! – எத்தகைய காலம் அது? முன்னதாக இருந்த எங்கள் வாழ்க்கை உலகம் மிகமிக நெருக்கமானது! புரிந்து கொள்ளத் தக்கது! இப்போது அவர் வாழ்க்கை மக்கள் கூட்டத்தின் மத்தியில்! தினமும் நூற்றுக்கணக்கானோர் – அரசியல்வாதிகள், கட்சி ஊழியர்கள் அமேதித் தொகுதி மக்கள் – தங்கள் பிரச்சினை களை தீர்க்க வேண்டுதல் போன்றவை. அவர் எங்களோடு இருக்கும் நேரம் விலைமதிக்க முடியாதது! அவரது பயணத்தின் போதும் இரவில் வெகுநேரம் விழித்திருந்த போதும் உடனிருக்க, நாங்கள் எங்களை மாற்றிக் கொண்டு, அதற்கேற்பப் பழக்கப்படுத்திக் கொண்டு விட்டோம்.

அந்தக் காலத்திய திடீர் எதிர்பார்ப்புகளைப் பற்றி அவர் பரபரப்பு அடையவில்லை. தமக்கு இருக்கும் அரசியல் சுமை, தனிமை, இழப்பு என எது பற்றியும், ஒருபோதும் அவர் புகார் கூறியதில்லை . எவ்விதப் பரப்பரப்புமின்றி, வேலையில் ஈடுபடுவது அவரது இயல்பு. ராகுலுக்கு எழுதிய கடிதங்களுள் ஒன்றிலும் இது வெளிப்படுகிறது!

“ஏதாவது ஒன்றைச் செய்தால், அதைச் செய்மையாகச் செய்யவேண்டும்! நல்லது எதையும் அரை குறையாகச் செய்யக் கடாது.! உன்னால் எவ்வளவு சிறப்பாகச் செய்ய முடியுமோ அவ்வளவு சிறப்பாகச் செய்ய, மேலும் கடினமாக உழை! வாழ்க்கை ஒரு பந்தயம் போன்றது. சற்று அதிகமாக உழைத்து முன்னேறு! முழுமை அடையும் வரை முயன்று உழை! சிறு சிற விஷயங்கள்தான் மாற்றங்களை உண்டாக்கும்” என்று ராகுலுக்கு ஒரு கடிதத்தில் எழுதியிருந்தார்.

அரசியல் பணியில் ஈடுபட்டிருந்தாலும், ராஜிவுக்குக் குடும்பம் மிகவும் தேவையாக இருந்தது. அரசியலை அறிந்த ராஜிவ் தாம் நன்கறிந்த, நம்பத்தக்க, நேர்மையான, நிலையான உலகையே விரும்பினார். அரசியலுக்கு மாறுபட்ட, உண்மையான, அன்பு நிறைந்த புகலிடமாக அது அவருக்குத் தெரிந்தது.

அக்காலத்தில், அவர் எனக்கு இவ்வாறு எழுதிய கடிதம் ஒன்றில், “இந்து மரபின்படி, ஒரு ஆடவன் அரை மனிதன்தான். அவன் மனைவியே அவனை முழுமையாக்குகிறாள். இதுபோலவே நானும் எண்ணுகிறேன். நீ இல்லாவிட்டால், என் வாழ்க்கை மிகவும் கடினமானதாக இருக்கும். அரசியலில் நான் இருக்கும்போது இது மிகவும் உண்மையாக இருப்பதாக என்னுகிறேன்.”

ராஜிவின் அரசியல் பிரவேசத் தீர்மானத்தை நான் ஏற்றாலும், எங்கள் வாழ்க்கையில் அதனால் ஏற்பட்ட பின்விளைவுகளால், சிறிதுகாலம் கழித்தே எனக்கு மனதார ஈடுபாடு ஏற்பட்டது. குடும்பத்தை நடத்துவதோடு, நான் முன்பு தொடங்கி இடையில் விட்டுவிட்டிருந்த வண்ண ஓவியங்களை வரையும் பயிற்சியில் மீண்டும் ஈடுபடத் தொடங்கினேன். ராஜிவ், அவரது தாயார் ஆகியோரின் ஓய்வு நேரங்களுக்கேற்ப, என் பயிற்சி நேரத்தையும் வெளி உலக நிகழ்ச்சிகளையும் மாற்றி அமைத்துக்கொண்டேன். என் மாமியாரின் ஆழ்ந்த மனக் காயங்களை உணர்ந்து, நானும் ராஜிவும் அவருக்கு ஒரு பாதுகாப்பு அரணாக இருந்து செயல்பட்டோம்.

இக்காலகட்டத்தில், குடும்பத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டன. 1982இல் ராகுலுக்கு ராஜிவ் எழுதிய கடிதத்தில், “நான் அமேதி போகிறேன். அம்மாவும் செல்கிறார். தொடக்கத்தில் ஒவ்வொருவரும் அவரையே இமை கொட்டாது பார்ப்பார்கள். பழக்கப்படும் வரை இது ஒரு தர்மசங்கடமாக இருக்கும். அவள் மிகவும் தைரியசாலி!” என்று குறிப்பிட்டு நிலைமையை உணர்த்தினார்.

1982 இல் ராகுல் அங்கேயே தங்கிப் படிக்கும் விடுதி இணைந்த பள்ளி ஒன்றுக்கு அனுப்பப்பட்டான். 1983 இல் பிரியங்கா செல்ல வேண்டியிருந்தது. ‘அனுபவமே ஒருவரை வலுவுடையவராகவும் தற்சார்பு உடையவராகவும் மாற்றும்’ என்பது ராஜிவின் உறுதியான நம்பிக்கை. ஆனால்,
குடும்பத்தின்மீது ஏற்பட்ட தாக்குதலால், தங்களைத் தாங்களே எவ்வாறு சமாளித்துக் கொள்ளப் போகிறார்கள் என ராஜிவ் கவலைப்பட்டார். டெல்லியில், பள்ளித் தோழர்கள் அவர்களைத் துன்புறுத்திய
பிரச்சினைகளை முன்பே எதிர்கொண்டுள்ளார்கள். அப்போது அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருந்தோம்.

எனவே, மனோதிடத்தை வளர்த்துக்கொள்ளுமாறு ராஜிவ் அடிக்கடி ராகுலுக்குக் கடிதம் எழுதினார். “சில சமயம் அப்பா, பாட்டி, அம்மா பற்றி டெல்லியில் பத்திரிகைகளில் செய்திகள் வரும். அதற்காகக் கவலைப்படாதே! அதுபற்றிச் சில பள்ளித் தோழர்கள்கூட உன்னை மனக் கவலையடையச் செய்யலாம். ஆனால், அச்செய்திகளில் பல, உண்மை அன்று! அத்தகைய புகைச்சல்களை எதிர்கொள்ளக் கற்றுக்கொள்! உன்னை எரிச்சலடையச் செய்யும் செய்திகளைப் பற்றிக் கவலை கொள்ளாதே!” என ராஜிவ், ராகுலுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், பஞ்சாபில் நிலவியிருக்க நிலை, தேச ஒற்றுமைக்குப் பேரபாயமாகத் தோன்றியது. பிரிவினை சக்திகள் பலம்பெற்றன. மிருகத்தனமான பயங்கரவாதக் கொலைகள், மேலும் மேலும் அதிகரித்தன. ராகுலையும் பிரியங்காவையும் பயங்கரவாதிகள் குறி வைத்திருப்பதாக எங்களுக்கு எச்சரிக்கை தரப்பட்டது. ஆபத்து அதிகரித்தபோது, அந்தப் பள்ளியில் வைத்து அவர்களைப் சமாளிப்பது மிகவும் கடினமாக இருந்தது. 1984இன் வசந்த காலத்தில் டெல்லி பள்ளிகளில் அவர்கள் சேர்க்கப்பட்டார்கள்.

அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட பல இடைஞ்சல்களில் இது முதன்மையானது. ஆனால், இதற்கு ஈடான வேறு நிகழ்வுகளும் உண்டு. அவர்கள் பாட்டியின் வாழ்க்கையில் கடைசி ஆறு மாதங்களை அவர்களுடன் கழித்தார். அவர்களின் பாதுகாப்பு பற்றி அச்சப்பட்டாலும் அவர்களோடு இருக்கதில் பாட்டிக்கு அளவற்ற மகிழ்ச்சி.

அக்பர் சாலை அலுவலகத்தை எங்கள் வீட்டோடு இணைத்த வாயில் படியைத் தாண்டி, வெளியே விளையாடப் போகக் கூடாதெனப் பலமுறை என் மாமியார் ராகுலுக்கும் பிரிங்காவுக்கும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த இடத்தில்தான், பின்னர் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சில மாதங்களுக்குப் பிறகு, ராஜிவ் குழந்தைகளுக்கு எழுதிய கடிதத்தில், “என் தாயார் தாம் இறக்கும் நாளை நன்கு அறிந்திருந்தார் என உறுதியாக நம்புகிறேன். அவ்வாறு அவர் ஏன் நினைத்தார் என எனக்குத் தெரியாது. ஆனால், அது உண்மை! அவர் செய்த பல செயல்கள், அவர் எங்களைப் பிரியத் தயாராக இருந்தார் என்பதையே உணர்த்தின. ஏனென்றால், அவர் அவ்வாறு செய்ய விரும்பாவிடினும், அவர் எடுத்த முடிவுகள், தலைவர் என்ற முறையில் அவர் செய்த கடின முடிவுகள், வாழ்க்கையைப் பற்றி அவரை அவ்வாறு எண்ணக் தூண்டின” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சீக்கிய பொற்கோயிலை ராணுவம் மீட்ட நிகழ்வுக்குப் பிறகு, எங்கள் வாழ்வில் ஒரு சோக நிழல் அலை பரவியது. தாம் இறந்தபின் தம்முடைய மரணச் சடங்குகள் எப்படி இருக்க வேண்டும் என்பன பற்றி ராஜிவிடமும் என்னிடமும் முன்பே பேசினார். தாம் கூற விரும்பிய அறிவுரைகளை எழுதினார். ராகுவிடம் தனியாகப் பேசினார். தைரியமாக இருக்குமாறு அவரிடம் கூறினார். தாம் வாழ்த்து முடித்துவிட்டதாகவும் தம்மால் இயன்ற பணிகளைச் செய்துள்ளதாகவும் தாய் இறந்தால் அழக்கடாது எனவும் கூறினார்.

வாழ்க்கையில் நாள்கள் கடந்து சென்றன. தீபாவளி வந்தது. எங்களோடு தீபாவளி நாள்களைக் கழிக்க ஒரிஸ்ஸாவிலிருந்து ராஜிவ் வந்தார். இதுபோன்ற நல்ல விழா நேரங்களில் அவர் வரத் தவறுவதில்லை, பழைமையான கணேச விக்ரகத்தின் முன்னால் என் மாமியார் தீபங்களை ஏற்றினார். வீட்டை ஒளி அலங்காரம் செய்வதில் தாங்கள் ஈடுபட்டோம். பட்டாசுகள் வெடித்தோம்!

தீபாவளி கொண்டாட்டம் முடிந்த மறுநாள் காலை, ராஜிவ் மேற்கு வங்கம் சென்றார். அன்று இரவு அதிகாலை 4 மணிக்கு நான் எழுந்திருந்தேன். எனக்கு ஆஸ்த்துமா மருந்து தேவைப்பட்டது. படுக்கை அறை விளக்கை ஏற்றி, மருந்துப் பெட்டிப் பக்கம் சென்றேன். அடுத்த அறையில் இருந்த என் மாமியாருக்குத் தொல்லைதரக் கூடாதென எண்ணினேன். ஆனால், என் அறைக்கதவு திறந்தது! எனக்கு ஒரே வியப்பு! அவர் கையில் டார்ச் விளக்கை வைத்துக்கொண்டு எனக்கு மாத்திரை தேடிக்கொடுத்து, ஒரு கோப்பைத் தண்ணீரையும் அளித்தார். மறுபடியும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் தம்மைக் கூப்பிடச் சொன்னார். அனேகமாக அவர் தூங்காமல் விழித்திருந்திருப்பார் என எண்ணுகிறேன்.

அந்த வார இறுதியில், காஷ்மீர் செல்வது பற்றி மறுநாள் பேசத் தொடங்கினார். இலையுதிர் காலத்தில், சினார் மர வண்ண இலை பூக்களை அவர் பார்க்க மிகவும் விரும்பினார். அவற்றைக் கண் குளிரக் காண்பது என்பது அவருக்கு ஒரு முக்கிய சம்பவமாகத் தோன்றியது. காஷ்மீர் பற்றித் தம் உள்ளத்தில் அவர் கொண்டிருந்த எண்ண ஓட்டங்களுக்கு அது பிரியாவிடையோ என்னவோ? இருந்தும் என் உடல் நலக் குறைவு பற்றிய கவலை காரணமாக இரவில் அங்குத் தங்க அவர் தயங்கினார். நான் தனியாக வீட்டில் தங்க நேர்ந்தது பற்றிக் கவலை கொண்டார். இறுதியாகக் குழந்தைகளுடன் சென்றார்.

அக்டோபர் 28இல் அவர் காஷ்மீரிலிருந்து திரும்பினார். அன்றைய மாலைப் பொழுதை எங்கள் அறையில் அமைதியாகக் கழித்தார். வழக்கம்போல் தம் முராவினை (பிரம்பு நாற்காலி) எடுத்து வந்து அதில் அமர்ந்து அலுவலகப் பணிகளைக் கவனித்தார். இடையிடையே தொலைக்காட்சி பார்த்தலும் எங்களோடு அளவளாவுதலும் நடந்தன.

அடுத்த நாள் அதிகாலை ஒரிஸ்ஸா பயணம் முடித்துக்கொண்டு மாலையில் வீடு திரும்பினார். அன்று புவனேஸ்வரத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், “நான் வாழ்வேனா அல்லது சாவேனா என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. என் இறுதி மூச்சு உள்ளவரை தேசப்பணி ஆற்றுவேன், நான் இறந்தால்கூட, நான் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தமும் ஒன்றுபட்ட சுதந்திர இந்தியாவைப் பலப்படுத்தி வலுப்படுத்தும்” என்று உரையாற்றினார்.

அக்டோபர் 31, அரசு விருந்தோடு முடிவடையும்படி ஒரு பரபரப்பான நாளாக வீடு இருக்கும். காலையில் பள்ளிக்குப் போக முத்தமிட்டு விடைபெற்றபோது, பிரியங்காவை அவர் இறுக்கமாகத் தழுவினார். ராகுலைக் கூப்பிட்டு, தாம் முன்பு கூறியவற்றை நினைவூட்டினார். அவர் அலுவலகம் புறப்படத் தயாராகும்போது, அறைக்குள் நான் நுழைத்தேன். மாலை விருந்து பற்றிச் சிறிது நேரம் பேசினார். காலதாமதமாகிவிட்டதால், மதிய உணவின்போது, இரவு விருந்து பற்றிப் பேச எண்ணினார்.

நான் குளிக்கச் சென்றேன். அப்போது வழக்கத்துக்கு மாறாகத் தீபாவளி பட்டாசு வெடிப்பது போன்ற ஒரு ஒலி கேட்டது. ஆனால், பட்டாசு வெடி போலல்லாமல், முற்றிலும் மாறான இசை அது! குழந்தைகளின் தாதியிடம் (ஆயா), என்ன என்று பார்க்க சொன்னேன். எனினும், ஏதோ பயங்கரம் நிகழ்ந்ததை நான் உணர்ந்தேன். வெளியே ஓடி வந்தேன். ஒரு அம்பாசிடர் கார் ஒன்றின் பின் இருக்கையில் என் மாமியார் கிடத்தப்பட்டிருந்தார். அவர் இறந்தவர் போன்று தோன்றினார். அவர் அருகில் நான் மண்டியிட்டு அமர்ந்தேன். பலத்த ஜனநெரிசல்களுக்கிடையே கார், மெதுவாக மருத்துவமனை நோக்கிச் சென்றது. எனக்குப் பேயறைந்த உணர்வு, ஏதேதோ எண்ணங்கள்! அவர் மூர்ச்சையாய் இருக்கிறாரா? அவர் காப்பாற்றப்படுவாரா? ராஜிவ் எங்கே? குழந்தைகள் எங்கே? படுபயங்கரம் ஒன்று நிகழ்ந்ததை என்னால் நம்ப முடியவில்லை. ஆனால், எல்லாமே முடிந்துவிட்டது!

மணித்துளிகள் உருண்டோடின. பெருந்திரளாக மக்கள், உற்றார் உறவினர் சென்றனர். குழந்தைகள் பள்ளியிலிருந்து அழைத்துவரப்பட்டு, சப்தர்ஜங் சாலையில் இருப்பதாக யாரோ கூறினார். ராஜிவ் மேற்கு வங்கத்தில் இருந்தார். தாயாருக்குக் காயமேற்பட்டதாக அவருக்குச் செய்தி அனுப்பப்பட்டது. டெல்லி திரும்பும் விமானத்தில் வானொலிச் செய்தியை அவர் கேட்டுள்ளார். மாலை 3.15 மணிக்கு மருத்துவமனையை அடைந்தார். மற்றவர்களோடு அவர் இருந்தார். ராஜிவுடன் ஒரே ஒரு வினாடி தனிமையில் இருக்க எனக்கு விருப்பம்! அவரைக் கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்க அனைவரும் அழைப்பதாக ராஜிவ் என்னிடம் கூறினார். ராஜிவைப் பிரதமராக்க ஏற்பாடுகள் நடந்தன. அப்பதவி வேண்டாமென நான் மன்றாடினேன்; கெஞ்சினேன்! மாற்றார்கள் மத்தியில் இந்த வேண்டுகோளை விடுத்தேன். அவரும் கொல்லப்படுவார் என்றேன். அவர் என் கைகளை இறுகப் பிடித்துக்கொண்டு என்னைத் தழுவி அணைத்து, விரக்தியடையக்கூடாது’ என்றார். அவருக்குப் பிரதமர் பொறுப்பு ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை!

“எப்படியும் ஒருநாள் நான் கொல்லப்படலாம்” என்றார்.

… மீண்டும் அடுத்த ஞாயிறு தொடரும்

The post என் ராஜிவ்! … சோனியா காந்தி எழுதிய தொடர் – 4 appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

என் ராஜிவ்! … சோனியா காந்தி எழுதிய தொடர் – 3
ராஜிவ் கலாரசனையுள்ளவர் என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். அவற்றுள் ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிட வேண்டும். எங்கள் உறைவிடத் தோட்டத்திலிருந்த, சற்று வேறுபட்ட செடி கொடிகளை வைத்து வளர்த்ததிலிருந்து பிள்ளைகளது உயர்ந்த பார்வையையும் புலனுணர்வையும் வளர்க்கும் வழிவகைகளைப் பிரித்து உணர்த்தினார். புகைப்படம் எடுக்கும் அவர்களது கலை ஆர்வம் வளர்ந்ததும், அக்கலையின் தொழில் நுட்பம் குறித்த ஆலோசனைகளை வழங்கினார். ராகுல் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவனுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், ‘‘நீ புகைப்படங்களை எடுக்கிறாய் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டார். அதில் ‘‘நீ புகைப்படம் எடுக்கும்போது, இருக்கிற வெளிச்சம், புகைப்படச் சுருளுக்கு நீ தரும் ஒளி ஆகியன பற்றி ஒரு குறிப்பு எழுத முயற்சி செய். அதன்மூலம் படம் காட்சியாக வெளியாகும்போது, அதில் நீ தவறு செய்திருந்தால், அந்தத் தவற்றை உணரலாம். நீ இதற்காக ஒரு குறிப்பேடோ, அல்லது ஒரு கையேடோ வைத்திருத்தல் வேண்டும். அதில் இதுபோன்ற செய்திகளைக் குறிக்கலாம். அதாவது, படம் & 1 சூரிய ஒளி, வேகம் 250, எஃப் 16 என்றோ, அல்லது நீ கொடுத்த அளவையோ குறித்துக்கொள். இதன் மூலமாக உன் தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம்” என அறிவுரை வழங்கியிருந்தார்.

ராஜிவிடமிருந்த மற்றொரு அளவிடமுடியாத ஆர்வம், ஒருவகைப் பொழுதுபோக்கு, ‘ஹாம் வானொலி’ நிலையத்தை இயக்குவது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலுமுள்ள ஹாம் வானொலி (Radio Ham) வைத்திருப்பவர்களோடு தொடர்புகொள்வதை, இரவில் வெகுநேரத்திற்குப்பின் அவரருகில் உட்கார்ந்து கவனித்திருக்கிறேன். 1974இல் ‘நீயே செய்து கற்றுக்கொள்’ என்னும் அடிப்படையில் ‘ஹாம் வானொலிக் கருவிகள் கொண்ட பெட்டி’ ஒன்றை வாங்கிப் பயன்படுத்தி, கடினமாக உழைத்து, முதன்முதலாக அவர் ஹாம் வானொலியைத் தாமே உருவாக்கிக் கொண்டார். என்னையும் குழந்தைகளையும் பொழுதுபோக்காக இந்த ஹாம் வானொலியை இயக்கிப் பழக வலியுறுத்தினார்.

தம் தாத்தாவுடன் வாழ்ந்த காலத்தில், பல்வேறு விலங்குகளை வளர்த்தார். பாண்டா கரடி, புலிக்குட்டிகள் போன்றன அவற்றில் சில. வேறு நாட்டு விலங்கினங்களும் அவற்றில் உண்டு. அவைகளுள் குறிப்பாகப் பொன்னிற வேட்டை நாய்களைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். அவற்றுள் ஒன்று ‘சோனா’ என்ற கலப்பின நாயாகும். சிறுவனாக இருந்தபோது, பஹல்காம் சென்றபோது அதை அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டுவந்தார். குழந்தைப் பருவத்தில் அவர் எடுத்த புகைப்படங்கள் பலவும், நாய்கள் பற்றியனவாகவே இருந்தன.

பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, ராகுலுக்கு ராஜிவ் ஒரு கடிதம் எழுதினார். அது தம் மகனை எதிர்காலத்தில் எப்படி வாழவேண்டும் என ஆயத்தப்படுத்தும் அறிவுரைக் கடிதமாக இருந்தது எனக் கூறலாம். அதன் உள்ளடக்கத்தைச் சற்றே கவனியுங்கள். ‘‘1969இல் எங்களிடம் ஒரு நாய்க்குட்டி தரப்பட்டது. அதனை ‘ரெஷ்மா’ என நாங்கள் அழைத்தோம். அந்தப் பெண் நாய், எனக்கு மிகவும் விருப்பமான வளர்ப்பு நாயாக மாறியது. ஆனால், 1982இல் அது இறந்தபோது, நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். ராகுல், நீ இந்தக் கடிதத்தைத் திறக்கும்போது, உனக்குத் தெரிந்திருக்கும். இன்று பிற்பகல் 12.25க்கு ரெஷ்மா இறந்துவிட்டது. நீண்ட காலமாக, புற்றுநோயால் அது பாதிக்கப்பட்டிருந்தது. நாங்கள் அதனால் மிகவும் மனச்சோர்வு அடைந்தோம். ஆனால் இதுபோன்ற நேரத்தில், ரெஷ்மாவோடு நாங்கள் கழித்த மகிழ்ச்சியான நேரத்தை நினைவுகூர்தல் வேண்டும். அதை வெளியே அழைத்துச் சென்றபோது, அதனுடன் நீ எப்படி விளையாடினாய், அது எப்படி எல்லாம் வேடிக்கை செய்தது என்பதை எண்ணிப் பார்! முதல் தடவை அது நோயுற்றது, இப்போது எனக்கு நினைவுக்கு வருகிறது! அன்று இரவு முழுவதும் அதனுடன் உட்கார்ந்து இருந்தோம். சொட்டுக் குழாய் மூலம் அதற்கு உணவு அளித்தோம். அது வளர்ந்த காலத்தில், சிறு குட்டியானாலும், ஒரு எஜமான விசுவாசமுடையதாக மாறியது. நாமெல்லாரும்கூட ஒருநாள் இறந்துதான் ஆகவேண்டும் என்பதை உணர்ந்து வாழவேண்டும். உயிரோடிருப்பவர்களுக்கு நான் கூறுவது கசப்பாக இருக்கலாம். இதுபோன்ற சமயத்தில், கடந்த காலத்தை நினைவுகூரும்போது, அவைகளிடம் ஒருவர் எவ்வாறு நடந்துகொண்டார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். உண்மையாகவே கடந்த காலம்பற்றி வருத்தம் இல்லையானால், நீங்களே உங்களைப் பாராட்டிக் கொள்ளலாம். அதற்கு மாறாக இருந்ததாக நீங்கள் எண்ணினால், உங்களைத் திருத்திக்கொள்ள முயற்சி எடுக்க வேண்டும். இதன்மூலம் எதிர்காலத்தில் அத்தகைய துயரம் உங்களுக்கு வராது” என்று அந்தக் கடித்தில் எழுதியிருந்தார்.

சப்தர்ஜங் சாலை வீட்டின் ஜன்னல்மூலம், ராஜிவ் ‘புல்புல்’ என்னும் பறவை ஒன்றின் கூட்டைக் கவனிப்பது வழக்கம். புதிதாகச் சிறகு முளைத்ததுபோன்ற அந்தப் பறவை எப்போதாவது வந்தால், அதை விருப்பத்தோடு பேணிப் போற்றுவார். அது காயமடைந்திருந்தால், சாந்தினி சவுக்கில் உள்ள பறவைகள் மருந்தகத்துக்கு அனுப்புவார். ‘ரேஸ் கோர்ஸ்’ சாலையில் ஒருமுறை ஒரு மரப்பொந்தில் ஒரு நாகப்பாம்பைக் கண்டபோது, அதற்குத் தீங்கிழைக்க எவரையும் அனுமதிக்கவில்லை. தோட்டத்தில் பறவைகளுக்கு ஒரு மண் கலத்தில் சாமை, தினை போன்றவற்றை அவை சாப்பிடப்போட்டு வைத்திருப்பார்.

ஜன்பத் இல்லத்திற்குக் குடிபெயர்ந்தபோது, எங்கள் வீட்டு அறைகளில் சிட்டுக் குருவிகள் கட்டிய கூடுகளைக் கலைக்கக் கூடாதென்று கட்டளையிட்டார். எங்கள் படுக்கை அறைக் கதவைத் திறந்து வைக்க வேண்டும் என்பதற்காகவே அதிகாலையிலேயே எழுந்திருப்பார். அப்போது பறவைகள் குஞ்சுகளுக்கு இரைதேட வெளியே பறந்து செல்லும். அப்போதெல்லாம் மின் விசிறியைச் சுழலவிட மாட்டார். சுற்றுச்சூழல் வெப்பமாக இருந்தாலும் அவற்றிக்கு மின் விசிறியால் காயம் ஏற்படுமாகையால் அவை வெளியே பறந்துபோகும்வரை மின் விசிறியை இயக்க மாட்டார்.

பயணம் செய்யும்போது வழியில் சாலை விபத்து ஏதேனும் ஏற்பட்டிருந்தால், விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி தேவைதானா எனக் கேட்காமல் மேலே செல்ல மாட்டார். தேவைப்பட்டால் அவர்களை மருந்தகத்திற்கு அழைத்துச் சென்று தனிக் கவனமும் செலுத்துவார். இத்தகைய சிறந்த குணமுடையவர் ராஜிவ். ராஜிவின் வெளிப்படையான அன்பு, இயல்பான பரிவு, நகைச்சுவை உணர்வு, படாடோபமான பகட்டுத்தனம் இல்லாமை ஆகியவை பலரை அவரிடம் ஈர்த்தன. தூரத்து உறவினர்கள், நண்பர்கள், பழக்கப்பட்டவர்கள் எனப் பரந்துவிரிந்த குழாத்தோடு அவர் அன்போடும் அக்கறையோடும் கலந்து உறவாடினார். அவருக்குள்ளே அடங்கியிருந்த மனநிறைவின்மூலம், அவரது கனிவு, பரிவு, அன்புடைமை, கருணை முதலிய பண்புகள் வெளிப்பட்டமையை இப்போதும் என்னால் எண்ணிப் பார்க்கத்தான் முடிகிறது. அதை விவரிக்க முடியாத அமைதியான தன்னிறைவு என்பேன். நட்பு வட்டத்தின் ஆழ்ந்த தன்மையின் தேவையைத் தாம் மட்டும் அனுபவித்தார் எனலாம். தம் குடும்பத்தாரைத் தவிர, அவருக்கிருந்த மகிழ்ச்சி யுணர்வையோ, துக்கத்தையோ, பரபரப்பையோ அவர் மற்றவர்களிடம் பகிர்ந்துகொண்டது கிடையாது.

தூரத்து உறவினர்களில் தம் தாயோடு நெருங்கிய அன்புடையவர்களிடம் அவர் சற்று அணுக்கமாகவே இருந்தார். தம் தாயார் போலவே காந்தி குடும்பம், கவுல் குடும்பம், நேரு குடும்பம் ஆகியவற்றோடு மிகவும் நெருக்கமாகப் பழகினார் எனலாம்.

இனக் கூட்டங்களில் கலந்துகொள்வதை அவர் விசேஷமாகக் கருதவில்லை. ஆரம்ப காலத்தில், வீட்டைவிட்டு வெளியில் சென்று, ஒத்த வயதுடையோருடன் பொழுதைக் கழித்த ராஜிவ், தம் காலத்துப் பிற இளைஞர்களைப் போன்றே காணப்பட்டார்.

பள்ளியில் படித்த காலத்திலோ, கல்லூரியில் கற்ற காலத்திலோ, அல்லது தொழிலில் ஈடுபட்ட காலத்திலோ ராஜிவுடன் பழகியவர்களே ராஜிவின் நண்பர்களாக இருந்தார்கள். 1982இல் ராகுலுக்கு எழுதிய கடிதங்களுக்குள் ஒன்றில், நட்பு பற்றிய தீர்க்க தரிசனமான கருத்தை அவர் கூறி இருக்கிறார். ‘‘நல்ல நண்பர்கள் கிடைப்பது கடினம் என்பதை நீ உணர்வாய்! உனக்கு அதிர்ஷ்டம் இருக்குமானால், நீ ஓரிரு நல்ல, நம்பத்தக்க நண்பர்களைப் பெறுவாய்! அவர்கள் உன் சுகதுக்கங்களில் உன்னோடு இருப்பார்கள்! அப்படி இல்லையெனில், மனம் கலங்காதே! நீ வயது முதிர்ந்தபின், உன்னுடைய நண்பர்கள் என்று நினைத்தவர்கள், அப்படி இல்லையே என்பதை உணர்வாய். நீ நல்ல நண்பர்களை அடைய விரும்பினால், நீ அப்படியிருக்கக் கற்றுக்கொள்! எதையும் கொடுத்து மகிழ்வடையக் கற்றுக்கொள்!” என்று ராஜிவ் அக்கடித்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

ராஜிவ் மிகவும் ஆழ்ந்து உணர்ந்து நம்பிய ஓர் அரிய வாசகம் இது!

‘‘ஒன்றைத் திரும்பப் பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் நீ மற்றொருவருக்கு ஒன்றைக் கொடுத்தால், அது பயனற்றதாகும். சுயநலமின்றி, எதிர்பார்ப்பின்றி ஒன்றைக் கொடுப்பதிலேதான் மனநிறைவை ஒருவன் அடையலாம்”.

இப்படி எண்ணியதன் விளைவாகத்தான் தம்மை ஏமாற்றிய நண்பரிடம்கூட ராஜிவ் வெறுப்புணர்வு கொண்டதில்லை. தாம் ஏமாற்றி வஞ்சிக்கப்பட்டதாக ராஜிவ் மனத்தளவில் காயப்பட்டார். ஆனால், அதற்குத் தாமே காரணம் என்று எண்ணிக் கொள்வார். தம்மை வஞ்சித்த நண்பரைக் குறைகூறுவதற்குப் பதில், தம்மிடம் உள்ள தீர்மானிக்கும் திறனை நொந்து கொள்வார். பிற்காலத்தில் அரசியல் உலகில் கருத்து வேறுபாடுகள் காரணத்தால் மிகமோசமான விளைவுகளைச் சந்திக்க நேர்ந்தபோதுகூட, ராஜிவ் இவ்வாறே எண்ணித் திருப்தி அடைந்துகொண்டார். இதுவே அவருடைய இயல்பு. ஒருவேளை ராஜிவ் இத்தகைய மனச் சமநிலையைப் பெற்றிருந்த காரணத்தால்தான், தம்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை அவர் சமாளிக்க முடிந்திருக்குமோ என இப்போதும் நினைக்கிறேன்.

ராஜிவுடன் விமானம் ஓட்டிய சகதோழர்கள், அவரின் திட்டமிடுதல், அட்டவணைப் படுத்துதல், விமானத் தொழில் நுட்பப் பிரச்சினைகளை எதிர்கொள்வதில் காட்டும் நுணுக்கமான கவனம் ஆகியவற்றை விரும்பாமல் எதிர்ப்புத் தெரிவித்தாலும், ஆத்மார்த்தமான தொழில் ஈடுபாடு கொண்டவர் எனப் போற்றி மதித்தார்கள். அரைகுறையாகச் செய்யப்படும் பணி ராஜிவுக்குப் பிடிக்காது. அவருடன் பணிபுரிந்த சக விமானிகள், ஏதாவது அசௌகரியம் காரணமாக முன்வைக்கும் அவர்களின் வேண்டுகோள்களை ஏற்றுக்கொள்வார். பதவி உயர்&தாழ்வு முறைமை பற்றிச் சிறிதும் கவலைப்பட மாட்டார். தொழிலை மதிப்பதை அவர் தம் தந்தையிடம் கற்றார். சில நேரங்களில் ‘‘தொழில் செய்யும்போது கையில் எண்ணெய் அழுக்குப்படிவதை எண்ணி, பணி செய்யத் தயங்காதே” என்று அறிவுரை கூறுவார். வேலை நேரத்தில், சட்டையை மடித்து விட்டுக்கொண்டு, தொழிலின் தவற்றைத் திருத்த, பொறிகளைப் பொறுத்தப் பொறியாளர்களுக்கு மகிழ்ச்சியுடன் உதவி செய்வார். செய்யும் தொழில்மீது அவர் கொண்டிருந்த மதிப்பு காரணமாக வேலையில் கவனமின்மையை ஏற்றுக்கொள்ள மறுத்தார்.

எதிர்பாராத விமான விபத்தொன்றில், 33 வயது சஞ்சய் இறந்த சோக சம்பவத்தின்போது, ராஜிவும் நானும் என் பெற்றோரைக் காணக் குழந்தைகளுடன் இத்தாலி சென்றிருந்தோம். குடும்பத்திலிருந்த ஒவ்வொருவரையும் பெரிதும் பாதித்த இந்த நிகழ்வு, ஒரு ஈடுசெய்ய முடியாத, கொடுமையான சோக நிகழ்வாகவே அமைந்தது. குறிப்பாக, ராஜிவின் தாயார், தைரியமும் நிதானமுமுடைய என் மாமியார் மனம் நொறுங்கிப் போனார். அவர் இனி உதவி என்று நாடுவதற்கு ஒரே ஒரு மனிதர்தான் உலகில் உண்டு!

பதினைந்து ஆண்டு காலம் தெளிவாக, ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொண்டிருந்த எனக்கும் ராஜிவுக்கும் இப்போது ஒரு மன இருக்கம்! அவருக்காக, எங்களுக்காக, குழந்தைகளுக்காக, நாங்கள் ஒருவரையொருவர் விரும்பும் வாழ்க்கைக்காக, அவர் நேசிக்கும் தொழில் விமானம் ஓட்டுதல்! நாங்கள் கட்டிக்காத்த நட்புக்காகவும் மனித உரிமை காப்பாற்றப்படவும் அச்சிக்கலான தொழிலை நான் எதிர்த்தேன்; புலி போலச் சீற்றத்தோடு எதிர்த்தேன்.

இதுவரை, தூரத்திலிருந்தே உலக அரசியலை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆசைக்கும் நோக்கத்திற்கும் இடையே இடப்பட்ட ஓர் இக்கட்டான கோட்டை, இப்போது புரிந்துகொள்ளத் தொடங்கினோம். அரசியல், பண்பாடு பற்றிய பாரம்பரியம் காப்பாற்றப்படவும், வாழும் சமுதாயம் முன்னேறவும் சிலருக்கு அதிகாரம் ஒரு முக்கியக் கருவி! லட்சியம் நிறைவேற மிகவும் தேவையான ஒன்று அதிகாரம்! சிலருக்குத் தனிப்பட்ட, அல்லது குழு ஆதிக்கத்திற்கு இது தேவையான ஆயுதம். முதல் வகையில் கிட்டும் பலன் தன்னிறைவு தரும்! இரண்டாம் வகையில், ஆதிக்க வலை & வெளியுலக மாயை, முகஸ்துதி, டம்பம், ஆடம்பரமே மிஞ்சும்!

ராஜிவுக்கு அதிகாரத்தின் சுமை நன்கு தெரியும். வேண்டுமென்றே திரித்துப் பேசி ஏற்பட்டதால் உண்டான கருத்து வேறுபாட்டால் உருவாகும் தனிமனிதனின் இயலாநிலையை அவர் நன்கு அறிவார். எனவே, அமைதியாக இருக்கத் தேவையான மனோபலத்தைப் பெற ராஜிவ் வேண்டினார். முடியாத ஒன்றை எதிர்த்துத் தேச முன்னேற்றத்திற்காக நாள்தோறும்-, ஆண்டாண்டாகவும் தம் தாய் நடத்திய போராட்டத்தை அவர் அருகிலிருந்து கண்கூடாக் கண்டுள்ளார். என் மாமியார், அவரைப் பதவிப் பித்தர்போல எண்ணியோரை எதிர்த்துத் துணிந்து நின்றதை ராஜிவ் நேரில் கண்டவர் அல்லவா?

… மீண்டும் அடுத்த ஞாயிறு தொடரும்

The post என் ராஜிவ்! … சோனியா காந்தி எழுதிய தொடர் – 3 appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

என் ராஜிவ்! … சோனியா காந்தி எழுதிய தொடர் – 2
1965 பிப்ரவரி முதல் 1966 ஜூலை முடிய ராஜிவும் நானும் கேம்பிரிட்ஜிலும் லண்டனிலும் ஒன்றாக இருந்தோம். அதன்பிறகு நான் என் சொந்த வீட்டிற்குச் சென்றேன். ராஜிவ் லண்டனில் விமானப் பயிற்சியைத் தொடங்கினார். பிரிந்திருந்த நாள்களில், ஒவ்வொரு நாளும் நாங்கள் கடிதங்கள் எழுதிக்கொள்வோம். இத்தாலி வருவதற்காக அவர் பணம் சேமித்தார்.

‘‘முன்பே நான் எழுதாததற்கு வருந்துகிறேன். நாங்கள் (ராஜிவும் அவர் நண்பரும்) கட்டடப் பணியாளர்களாகப் பணி செய்கிறோம். ஒருநாளைக்கு 10 மணி நேரம் பணி. பணிக்களத்திற்குப் போய் வர 1.30 மணி நேரம் ஆகும். பணி முடிந்தபின், செத்த மாடுபோல் வீடு திரும்புவோம். என் கைகள் விரைப்பாக உள்ளன. என்னால் மெதுவாகவே எழுத முடிகிறது” என்று ராஜிவ் ஒருமுறை ஒரு கடிதத்தில் எழுதியிருந்தார்.

நவம்பர் மாத இறுதியில் விமானம் ஓட்டும் உரிமம் (லைசன்ஸ்) பெற்றவுடன், தம் திட்டங்கள் பற்றி என் தந்தையுடன் பேச ராஜிவ் இத்தாலிக்கு வந்தார். இந்தியா திரும்பி ஒரு வர்த்தக விமானி உரிமம் (லைசன்ஸ்) பெற்று, ஒரு விமானி வேலை பெற்று, என்னைத் திருமணம் செய்ய எண்ணினார்.

ராஜிவின் நேர்மையில் என் தந்தைக்கு எவ்வித ஐயப்பாடும் இல்லை. ‘‘ஒருவரை அவர் கண்களால் அறியலாம்” என்றார் என் தந்தை. ஆனால், என் தந்தைக்கு அவருடைய மகள் பற்றியே கவலை. ‘அவளுக்கு வயது மிகவும் குறைவு. இந்திய வாழ்க்கை முறையில் ஈடுபடுவது கடினம்! மாறுபட்ட மக்கள் – மாறுபட்ட பழக்க வழக்கங்கள்.’

நான் உரிய வயது பெறும்வரை – சிறிய விடுமுறைக்குக்கூட – என்னை அனுமதிக்க அவர் விரும்பவில்லை. இருப்பினும், ராஜிவும் நானும் ஓர் ஆண்டு பிரிந்திருந்து, அதன் பின்னர் அதேபோல் நான் அவரை விரும்பினால் – இந்தியா செல்ல என்னை என் தந்தை அனுமதிப்பார் என்பதுதான் நிலை.

அப்போதும் நான், என் தந்தையைப் பற்றி ‘அவர் என் வாழ்க்கையைக் குளறுபடி செய்வதாக’ எண்ணவில்லை. ‘ஒரு சில மாதங்களில் எல்லாம் சரியாகிவிடும்’ என என் தந்தை உறுதியாக எண்ணினார். ஆனால், அவர் எண்ணியது நடைபெறவில்லை. அவர் தம் வாக்கைக் காப்பாற்றினார். எனக்கு 21 வயது ஆனவுடன் இந்தியா செல்ல அனுமதித்தார்.

1968 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் நாள், நான் டெல்லியை வந்தடைந்தேன். என்னைக் கூட்டிச் செல்ல தம் சகோதரர் சஞ்சய், நண்பர் அமித் ஆகியோருடன் விமான நிலையத்திற்கு ராஜிவ் வந்தார். அவரைப் பார்த்தவுடன் எனக்கு ஏதோ விடுதலை பெற்ற உணர்வு ஏற்பட்டது. இப்போது ராஜிவ் அருகில் நான் உள்ளேன். இனிமேல் எதுவும் யாரும் எங்களைப் பிரிக்க முடியாது!

எங்கள் திருமண நாளான பிப்ரவரி 25க்கு முந்திய நாள்வரை, அலகாபாத்தில் ராஜிவின் குடும்ப நண்பரான பச்சன் வீட்டில் நான் தங்கியிருந்தேன். என்னைச் சுற்றிலும் – நிறங்கள், சுவைகள், மணங்கள், மக்கள் – எல்லாம் புதியவை! மாறுபட்டவை! அங்குள்ளோர் என்னை ஆர்வத்துடன் பார்த்தனர்! என்னை எங்கும் பின்தொடர்ந்தனர். எனக்கு வியப்பளித்தாலும், அது ஒரு எரிச்சலூட்டும் அனுபவம்தான்! தனி ஒதுக்கிடம் இல்லை! என்னைக் கட்டுப்படுத்தி, என் உணர்வுகளை அடக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது.

எனக்குக் கோபம் ஏற்பட்டது. ‘அவர்களின் கண்கள் என்னையே ஏன் உற்றுக் கவனிக்கின்றன?’ என எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். ‘நான் அந்நியமானவள் மட்டுமன்றி, வெளிநாட்டவளும்கூட என்பதுமட்டும் காரணம் அன்று! காலம் காலமாக இந்திய நாட்டு மக்கள் அனைவருக்கும் பழக்கமாகிவிட்ட ஒரு குடும்பத்தில், நான் ஒரு புதுவரவு என்பதுவும்கூட!’ என்பதைக் காலப்போக்கில் தெளிவாகப் புரிந்துகொண்டேன். அவர்கள் செய்தது, செய்யாதது, சொன்னது, சொல்லாதது என ஒவ்வொன்றும் ஆராயப்பட்டு, அதன் பின்னரே அவை முடிவு செய்யப்பட்டன. இவ்வாறு வாழ்வது எப்படிச் சாத்தியமாகும்!

என்னுடைய பிறவிக் குணமாகப் பிரதிபலிப்பது, எங்கும் எப்போதும் பின்வாங்கி ஒதுங்குவதாகும். என்னுடைய கூச்ச சுபாவத்தை அறிந்த ராஜிவும் அவரது தாயாரும் என் உணர்வுகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டனர். ஆனால், சில பழக்க வழக்கங்களைப் புரிந்துகொள்வதும் ஏற்றுக்கொள்வதும் எனக்குக் கடினமாக இருந்தது. இந்திய உடைகளை அணிவது எனக்குப் பொருத்தமற்றதாகவும் வசதி குறைந்ததாயுமிருந்தது. இந்திய உணவு வகைகளின் காரச்சுவையை என் வாய் ஏற்றுக்கொள்ள மறுத்தது. ராஜிவோ, என் மாமியாரோ இவற்றை என்மீது வற்புறுத்தித் திணிக்கவில்லை. என் தயக்கமும் அவ்வப்போது என்னிடம் தோன்றும் விருப்பமின்மையும் என் மாமியாருக்கு மனத்துயரளித்தாலும், அவர் தம் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டார். இந்திய உணவு வகைகளை நான் ஏற்றுக்கொள்ள முயற்சி செய்வதற்கு ஊக்கம் அளித்தார். நான் நானாகவே இருக்கவும், ராஜிவின் உலகில் என்னை ஒன்றிணைத்துக்கொள்ள விரும்புவதையும் அனுமதித்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் குடும்ப நடவடிக்கைகளில் படிப்படியாக என்னை நான் ஈடுபடுத்திக் கொண்டேன். ஆரம்பத்தில் வீட்டிலும், பிறகு டெல்லியில் ஒரு நிறுவனத்திலும் இந்தி மொழியைக் கற்கத் தொடங்கினேன். குடும்பத்தோடும் குடும்ப நண்பர்களோடும் பேசிப் பழக, இந்தி கற்பது எளிதாகவும் உதவியாகவும் இருந்தது. எல்லாரும் உணவு மேஜையில் சூழ அமர்ந்து சாப்பிடும் போது, பொதுவாக நாங்கள் இந்தியில் உரையாடுவதுதான் வழக்கம்.

தீன்மூர்த்தி இல்லத்தில் வாழ்ந்த காலந்தொட்டு, குடும்பத்தில் எல்லாரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதுதான் வழக்கம். அலுவலகப் பணிகள் குறுக்கிட்டாலொழிய, எங்கிருந்தாலும் குடும்பத்தினர் ஒன்றுகூடி உணவு அருந்துவதையே வழக்கமாகக்கொண்டு பின்பற்றி வந்தோம். எப்படிப்பட்ட வேலை இருந்தாலும் சிறு பிராயம் முதலே, ராஜிவும் சஞ்சயும் வீட்டிற்குச் சென்று குடும்பதோடு சேர்ந்து உணவு உண்பது என்பதே வழக்கமாய் இருந்துள்ளது. ராஜிவ் தம் தாயாருடன் சேர்ந்து உணவு அருந்திய பின்னர்தான் பிற பணிகளைச் செய்வார். மாலை வேளைகளில் நண்பர்களைக் காண நானும் ராஜிவும் வெளியில் செல்வது உண்டு.

இப்படிக் குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து உணவு அருந்துவது என்பது ஒரு சுமையான வேலையன்று. உணவு அருந்தும்போது, சுவாரஸ்யமான உரையாடல்கள் இடம் பெறுவது உண்டு. சீரிய கருத்துப் பரிமாற்றங்களும் நகைச்சுவைப் பேச்சுகளும் அங்கே வெளிப்படுவது உண்டு. தம் கருத்துக்களைத் தெரிவித்து உரையாடுவதில் என் மாமியார் திறமைசாலி. வினாடி வினா விளையாட்டுக்கள், கதை சொல்லுதல் போன்றவற்றில், குறிப்பாகக் குழந்தைகளோடு குழந்தையாய் இருப்பதில் என் மாமியார் அதிகம் கவனம் செலுத்தினார். கடந்த காலத்தில் வாழ்ந்த தலைவர்களைப் பற்றியும் இந்திய சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள் பற்றியும் கூறி, பழைய வரலாற்று நிகழ்ச்சிகளை உயிரோட்டமுடையதாக்குவார். எங்களையும்கூட அவற்றில் ஈடுபாடு கொள்ளச் செய்து மகிழ்ச்சி அடைவார். அவர் பேசும் அனைத்திலும் பங்கு கொள்ளச் செய்வார்.

அந்தக் குடும்பத்தின் அச்சாகவே அவர் திகழ்ந்தார். இந்நிலை அவரது அதிகாரத்தால் ஏற்பட்டதன்று. அன்பாலும் அதைக் கொடுக்கும் தன்மையாலும் ஏற்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, எங்களைப் பொறுத்தவரை, எங்கள்மீது அவர் ஆர்வம் காட்டினார்; அன்பு செலுத்தினார்; அக்கறை காட்டினார். பொதுவாகச் சொல்வதானால், பல்வேறு வகையில் குடும்பத்தில் மட்டுமல்லாமல், தம் தாய் நாட்டின்மீதும் ஈடுபாடு கொண்டவராக அவர் வாழ்ந்தார். அவர் ஆட்சிப் பொறுப்பு காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம், அவரின் சந்திப்புக்கள் குறித்தும், அனுபவங்கள் பற்றியும் எங்களுக்கு எழுதுவார். தமக்குப் பல்வேறு பணிகள் இருக்கும் நாள்களிலும், வீட்டுப் பணிகள் குறித்து நாங்கள் ஒன்றாக இருக்கையில் எங்களுக்கு நினைவூட்டுவார். இங்கே ஒரு நிகழ்ச்சியைக் கட்டாயம் நான் குறிப்பிட்டாக வேண்டும்.

என் திருமணம் முடிந்தபிறகு, என் தாயார் இத்தாலி செல்லுகையில், அந்த நாளில் – அத்தகைய முதல் குறிப்பு ஒன்றை, என் மாமியார் அலுவலகத்திலிருந்து பெற்றேன். அந்தக் குறிப்பு என்ன தெரியுமா? ‘‘சோனியா! உனக்கு ‘ஹலோ’ கூறத்தான்! உன்னை நேசிக்கிறோம் என்பதைக் கூறத்தான்!” என்பதேயாகும் அது. இன்னொன்றையும் சொல்லலாம்! ராஜிவுக்கு அவர் அனுப்பிய ஒரு குறிப்பு, புகைப்படக் கலை பற்றியது. ‘‘ராஜிவ் ஒரு அழகிய படத்தை எடுக்கும் வாய்ப்பை நீ நழுவவிட்டுவிட்டாய்! இன்று காலையில், அக்பர் சாலையில் ஒரு மரக்கிளையில் வால் நீண்ட கிளிகள் இரண்டு நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தன. ஒரு ஜோடி அழகான மரங்கொத்திப் பறவைகளும் இருந்தன. அவை ஏதோ பரப்பரப்புடன் சிறகடித்தன” என்பதே அந்தக் குறிப்பாகும். எப்போதாவது எனக்கும் அவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டால், இதே வழிமுறையைக் கையாண்டு, ஒரு குறிப்புச் செய்தியை அனுப்பியே தீர்த்து வைத்து விடுவார். ‘‘நாளை நவ்ரோஸ். ஆனால் நாளை அதிகாலையே நான் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே இப்போதே வந்து அன்பு முத்தம் தரலாமா?”

என் மாமியாரிடம் நான் அறிந்தமட்டில், போலி கௌரவமே கிடையாது. அவர் மிகவும் இயல்பானவர். புறத்தூண்டுதலுக்கு ஆட்படாதவர்.

இந்திய நாட்டு வரலாற்றில் தம் குடும்பத்தின் பெருமைமிகு பணிப் பங்கை நன்கு அறிந்தவர். அந்த விழிப்புணர்வைத் தம் மகன்களுக்கும் உணர்த்தி, அவர்களையும் அந்தப் பொறுப்பில் ஈடுபாடு கொள்ளச் செய்தவர்.

பள்ளியில் படித்தபோது ராஜிவுக்கு எழுதிய கடிதங்களை நான் கண்டபோது, இந்த நம்பிக்கை என்னுள் உறுதிப்பட்டது. குடும்பத்தின் மற்றொரு உறுப்பினர் செய்த தவறைப் பற்றி 1958 இல் ராஜிவுக்கு எழுதிய கடிதத்தில், ‘‘ஒருவர் தம் நடை உடை பாவனை பற்றி அதிகக் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் அவர் தம் குடும்பத்திற்கு மட்டுமன்றி, நாட்டுக்கும் அவப்பெயர் பெற்றுத் தந்தவராகிவிடுவார்” என்று குறிப்பிட்டிருந்த செய்தி எவ்வளவு சிறந்த அறிவுரை, காலத்தால் அழிக்க முடியாத உண்மை என்பதை உணர்த்தியது.

என் மாமியாரின் திருமணம் மேடு பள்ளங்கள் நிறைந்தது. இருப்பினும், ஃபிரோஸைத் தவிர வேறு யாரையும் தம்மால் திருமணம் செய்திருக்க முடியாது என்று என்னிடம் ஒருமுறை கூறினார். அவர் நேசித்த ஒரே மனிதர் அவர்தான். பலமுறை அவரைப் பற்றி நேச பாவத்தோடு பேசியுள்ளார். அவரது மரணத்துக்குப்பின் நான் கண்ட ஒரு கடிதத்தில், ‘‘சோனியா, உனக்கு நான் ஏன் எழுதுகிறேன் என்றால், நீ இந்தக் குடும்பத்தில் பாசம் கொண்டுள்ளாய். மேலும் உன்னில் என்னைக் காண்கிறேன். உன் கணவரும் என் மகனுமாகிய ராஜிவிடம் என் கணவரின் பல பண்புகள் அப்படியே உள்ளன” எனக் குறிப்பிட்டிருந்ததை மீண்டும் படித்துச் சுவைத்தேன். தோற்றத்திலும் மனோபாவத்திலும் ராஜிவ், ஃபிரோஸை நினைவூட்டுவதை அடிக்கடி குறிப்பிடுவார்.

‘‘தந்தையைப் போலவே ராஜிவும் சாதுவானவன். அலட்டிக்கொள்ளாதவன். கோபப்படாதவன். ஒருவேளை கோபப்பட்டால், உடனே அதற்காக வருந்துபவன். ராஜிவ், சஞ்சய் ஆகிய இருவரும் இயற்கையிலும் இசையின்பாலும் நாட்டமுடையவர்கள். முழுவதும் பிரத்தியக்ஷ உலகில் வாழ்பவர்கள். கைவினை விற்பன்னர்கள்” என்றெல்லாம் கூறியதை எண்ணிப் பார்த்தேன்.

என் மாமியாருடைய கணவருக்குத் தோட்டக்கலையில் உள்ள ஆர்வம் குறித்து, சிறையிலிருந்தபோது, தம் தந்தைக்கு அவர் எழுதிய கடிதம் ஒன்றிற்கு, ‘‘டிசம்பர் மாத ரம்மியமான குளிரில் வீட்டில் இதமான சூரிய ஒளி நுழையும்போது, ஆனந்தபவன் எப்படி இருக்கும் என்பதை எண்ணுகிறேன். தோட்டத்தில் நீயும் ஃபிரோஸும் மகிழ்ச்சியாக இருப்பதையும் வீட்டினுள் மாற்றங்கள் செய்து வாழ்வை மகிழ்வோடு அனுபவிப்பதையும் எண்ணுகிறேன்” என்று பதில் எழுதியதில் ஜவஹர் தத்ரூபமாகக் குறிப்பிட்டிருந்தார்.

டெல்லியின் புறநகர்ப் பகுதியில் 1950 இன் பிற்பகுதியில் ஃபிரோஸ் வாங்கிக் கொண்டுவந்து நட்ட மரங்கள் பல மண் தரையில் நன்கு வளர்ந்துள்ளன. அழகிய தோட்டங்களில் தகப்பனாரோடு ராஜிவ் மகிழ்ச்சியைப் பங்கிட்டுக் கொண்டவர் என்பதை நான் அறிந்தேன். தமக்கு விருப்பமான மரங்களையும் செடி கொடிகளையும் நாங்கள் எங்கு வசித்தாலும் நட்டுப் பேணுவதில் இன்பம் கண்டவர். வீட்டின் முறைமையையும் தூய்மையையும் உயர்வையும் ராஜிவ் விரும்பினார். வீட்டின் புறத்தே இயற்கையாய் அமைந்த தன்மையைப் பெரிதும் விரும்பினார். அங்கெல்லாம் செயற்கைத் தோட்டங்களை, வெட்டிக் கத்தரித்து முறைப்படுத்தப்பட்ட செடிகளை அவர் விரும்பவில்லை. ராஜிவின் பேணிப் பாதுகாக்கப்பட்ட பொக்கிஷங்கள் சில. அவற்றில் அவருடைய தகப்பனாரின் திரைப்படக் கருவியும் குடும்பத் திரைப்படச் சுருள்களும் அடங்கும்.

ராஜிவ் தம்முடைய தகப்பனாரின் தொழில் பட்டறையைக் கவனமாகவும் முறையாகவும் பராமரித்தார். பொறிகளையும் எந்திரங்களையும் பழுது பார்ப்பதிலும் சுத்தம் செய்வதிலும் அதனைப் பொருத்துவதிலும் ராஜிவுக்கு ஆர்வம் மிகுதி. சில சமயங்களில் வீட்டுப் பொருள்களில் ஏதாவது ஒன்றை நான் தேடும்போது, அது அவருடைய ‘பணிமனை’யில் காணப்படும்.

எங்கள் மணவாழ்க்கையின் தொடக்க நாள்கள் முதலே, இசையும் புகைப்படக் கலையும் முக்கியப் பங்கு வகித்தன. கீழ்த் திசை மற்றும் மேற்கத்திய இசை ஆகிய இரண்டிலுமே எங்களுக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. தரமான ஒலி, இந்திய இசை ஆகியவற்றில் சீரிய ஆர்வம் காரணமாக ராஜிவ் தாமே பல சிறந்த இசைக் கலைஞர்களின் பாடல்களை ஒலிப்பதிவு செய்வார். சிறப்பாக, ஜாஸ் எனப்படும் ஒருவகை இசையை அவர் விரும்பிக் கேட்பார். சில சமயங்களில் ‘பாப்’ இசையையும் ரசிப்பார். பல ஆண்டுகளாக அவர் தமக்கு விருப்பமான இசைப் பாடல்களைச் சேர்த்து வைத்தார். அந்தப் பாடல் தொகுப்பை எல்லாம் கவனத்துடன் பாதுகாத்தார். தம்மைப் போலவே பிறரும் அவற்றைக் கவனமாகக் கையாள்வார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டாலொழிய, யாரையும் தம் இசைக் கருவியையோ அல்லது இசைத்தட்டுக்களையோ தொட அனுமதிக்க மாட்டார்.

தம்மிடம் உள்ள புகைப்படங்களிலும் இசைத் தகடுகளிலும் அவருக்கு அளவற்ற ஈடுபாடு காணப்பட்டது. பாரம்பரிய ஒழுங்குமுறையில் அவற்றைப் பட்டியலிட்டுப் பேணிக் காத்து வந்தார். தம் குழந்தைகளையும் புகைப்படம் எடுக்கும் கலைத்துறையில் ஈடுபாடுகொள்ள ஊக்குவித்தார்.

… மீண்டும் அடுத்த ஞாயிறு தொடரும்

The post என் ராஜிவ்! … சோனியா காந்தி எழுதிய தொடர் – 2 appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

19 ஆண்டு அரசியல் பயணம் : ஆணாதிக்க சமுதாயத்தில் சாதனை படைத்த சோனியா காந்தி
சோனியா காந்தி பிரதமர் ஆவதற்கு முலாயம் சிங் யாதவ் மற்றும் சரத்பவார் போன்றவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் முட்டுக்கட்டை போட்டுள்ளனர். இருப்பினும், இத்தகைய சக்திகளால் அவரை கட்டிப் போட்டுவிட முடியவில்லை. இத்தகையோர் அவரை வெறுத்தாலும், 2004 முதல் 2014 ஆம் ஆண்டுவரை இந்தியாவின் பெரும் சக்தி வாய்ந்த பெண்மணியாகவே சோனியா காந்தி திகழ்ந்தார்.

இந்திரா காந்தியின் இத்தாலி மருமகளும், ராஜிவ் காந்தியின் மனைவியான சோனியா மைனோ காந்தி இந்த அமைப்பின் ஒவ்வொரு கட்டமைப்புக்குள்ளும் பொருந்தி, பல கோடி இந்தியர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் அளவுக்கு உயர்ந்தார். இந்த ஒட்டுமொத்த அமைப்பு அவரை வெளிநாட்டவர் என்றது. கடந்த 1999 ஆம் ஆண்டு அவர் பிரதமராவது, முலாயம் சிங் மற்றும் இடதுசாரிகள் மூலம் தடுக்கப்பட்டது. வெளியே உள்ளவர்களை மட்டுமல்ல, தன் கட்சிக்குள்ளேயும் சரத்பவார் போன்றவர்களின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது. எனினும், 1990களில் தேக்கத்தைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியைத் தூக்கி நிறுத்தியதில் ஆகட்டும், கடந்த 10 ஆண்டுகளாக மதச்சார்பற்ற சக்திகளுடன் இணைந்து இந்திய அரசியலில் வகுப்புவாதத்தைத் தடுத்ததில் ஆகட்டும் சோனியா காந்தியின் பங்கெடுப்பு மகத்தானது.

அவரை வெளிநாட்டவர் என்று சொன்னது நகைச்சுவையாக இருந்தது. தனது கணவர் அரசியலுக்கு வருவதையே அவர் விரும்பியதில்லை. இந்திரா காந்திக்குப் பிறகு அவர் வழியில் ராஜிவ் காந்தி அரசியலுக்கு வருவதை சோனியா காந்தி தடுத்து நிறுத்த முயன்றார். இந்திரா காந்தியைப் போல் தன் கணவரின் உயிருக்கும் ஆபத்து நேரிடுமோ என்ற அச்சம் அவருக்கு இருந்தது. கடந்த 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, அவரது பயம் உண்மையானது.

அப்போது சோனியா முன்பு 2 சோதனைகள் இருந்தன. ஒன்று, நேரு-காந்திய அரசியல் குடும்பத்தைப் பாதுகாத்து வளர்க்க வேண்டிய பொறுப்பு. மற்றொன்று, காங்கிரஸ் ஒரு கடந்த கால வரலாறாக மாறுவதைத் தடுக்க வேண்டும். இந்த இரண்டு சோதனைகளிலும் சோனியா நன்றாகவே செயல்பட்டதை வரலாறு நிச்சயம் பதிவு செய்யும்.

இந்தியாவை மற்றொரு பாகிஸ்தானாக மாற்றிக் கொண்டிருக்கும் நரேந்திர மோடிக்குச் சவாலாக இருக்கும் இந்தியர்களில் ஒருவராக அவரது மகன் ராகுல் காந்தி படிப்படியாக மாறிக் கொண்டிருக்கிறார். கடந்த 2004 மற்றும் 2009 ஆகிய இரு மக்களவைத் தேர்தல்களிலும் இந்திய அரசியலில் பாஜகவின் வளர்ச்சியை சோனியா காந்தி தடுத்து நிறுத்தியுள்ளார்.

19 ஆண்டுக் கால அரசியல் வாழ்க்கையில் இதற்கு மேல் சோனியாவால் என்ன தான் செய்ய முடியும்? மக்கள் செல்வாக்கு இல்லாத சீதாராம் கேசரி காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, அழிவின் விளிம்பில் கட்சி இருந்தது. அந்த சூழலில், கடந்த 1998 ஆம் ஆண்டு சோனியா காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற முதல் சுற்று, அவ்வளவு எளிதானது அல்ல. சோனியா காந்தி கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றபோது, தேர்தலுக்கு நாடு தயாராக இருந்தது.

இந்த சூழ்நிலையில் தான் காங்கிரஸ் கட்சிக்குப் புத்துயிரூட்ட வேண்டிய சூழல் சோனியா காந்திக்கு ஏற்பட்டது. சோனியா வெளிநாட்டவர் என்பதால், காங்கிரஸ் தலைவராகக் கூடாது என்று காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த சரத்பவார் வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்தார். 1998 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், மதச்சார்பற்ற சக்திகள் தனித்தனியே போட்டியிட்டதால், காங்கிரஸ் கட்சியால் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. எனினும், ஒரு சில மாதங்களிலேயே வாஜ்பாய் அரசை சோனியா கவிழ்த்தார். 1999 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், வெளிநாட்டவர் என்ற காரணத்தைச் சொல்லி, சோனியா காந்தி பிரதமராவதை முலாயம் சிங் யாதவ் தடுத்துவிட்டார்.

ஆனால், அப்போது அரசியலுக்கு ஏற்றவராக சோனியா மாறியிருந்தார். வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தனித்து நின்று எதிர்த்தால், அது காங்கிரஸைப் பலவீனப்படுத்தும் என்று சோனியா உணர்ந்திருந்தார். 2004 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக முகாமை எதிர்க்க மதச்சார்பற்ற சக்திகளைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்டார்.

வழக்கமாக ஆட்சி அதிகாரத்தை மற்றவர்களுடன் பகிராத காங்கிரஸ்,கூட்டணி ஆட்சி அமைக்க முயன்றது நல்ல முடிவாக இருந்தது. யாருடனும் கூட்டணி வைப்பதற்கு பிரணாப் முகர்ஜி போன்ற தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்புகளை எல்லாம் சரி செய்து, மதச்சார்பற்ற சக்திகளுடன் இணைந்து 2004 ஆம் ஆண்டு தேர்தலை சோனியா காந்தி சந்தித்தார்.

அப்போது யாதவ் மற்றும் பஸ்வானின் கட்சிகள் காங்கிரஸ் குடையின் கீழ் வர மறுத்துவிட்டன. கடைசிவரை இந்த கட்சியினர் காங்கிரசுக்கு எதிரான அரசியலையே செய்தனர். இருப்பினும், வாஜ்பாய் ஆட்சியை அகற்ற, மறைந்த ஜோதிபாசுவும், வி.பி.சிங்கும் சோனியாவுக்குப் பின்னே இருந்து உதவினர்.

2004 ஆம் ஆண்டு தேர்தல், பழம்பெரும் தலைவர் வாஜ்பாய்க்கு எதிரான சோனியாவின் முதல் வெற்றியாக இருந்தது. இதன்மூலம் அவரை வெளிநாட்டவர் என்று கூறி வந்த இந்த அமைப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். வெற்றி பெற்றதும், காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா தேர்வு செய்யப்பட்டதும், சோனியாவுக்கு எதிராக வெளிநாட்டவர் என்ற பிரச்சாரம் தலைதூக்கியது. இதனைக் கண்டு சோனியா அதிர்ந்தார். மன்மோகன் சிங்கை பிரதமராக்கிவிட்டு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரானார்.

பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என்று நட்வர்சிங் வேண்டிக் கேட்டுக் கொண்டும், பிரதமர் பதவியை ஏற்க சோனியா காந்தி மறுத்துவிட்டார். இன்னும் சொல்ல வேண்டுமானால், அந்த நேரத்தில் பிரதமராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டிருந்தால், சோனியாவை யாராலும் தடுத்திருக்க முடியாது. இன்றைக்கு அவர் மீது எத்தனையோ விமர்சனங்கள் எழுந்தாலும், பிரதமர் பதவியை அவர் நிராகரித்ததை வரலாறு பதிவு செய்துள்ளது.

இப்போது சோனியாவின் போக்கு ஏழை மக்களுக்காகவே அமைந்தது. நாட்டை வழிநடத்துவது குறித்த குழப்பம் ஏதும் அவரிடம் இல்லை. அவரது மாமியார் இந்திரா காந்தியைப் போலவே, இந்தியாவின் ஏழை மக்களுக்கான ஆதரவு நிலையை எடுத்தார். ஏழைகளின் மீதான கரிசனத்துக்கு முதலில் பாதை அமைத்துக் கொடுத்தவர் நேரு என்பதை மறக்க முடியாது.

உலகமயமாக்கல் மற்றும் சந்தைப் பொருளாதாரத்தை மக்களை விடப் பெரிதாக நினைத்தாரா? இல்லை. தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவராகி, அருணா ராய் மற்றும் ஜீன் ட்ரென் போன்ற பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையின்படி, ஏழைகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இதன் முதல் படி தான், வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களுக்கான 100 நாள் வேலை உறுதித்திட்டம். சந்தைச் சக்திகள் இதனைக் கடுமையாக எதிர்த்தன. தமது சொந்த அரசாங்கத்திலேயே இதற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டபோதும், அதையும் மீறி மக்களுக்குக் கொண்டு சென்றவர் சோனியா காந்தி.

சோனியா காந்தியின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் (100 நாள் வேலை உறுதித் திட்டம்) ஏழைகள் மக்கள் மத்தியிலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலும் மாயாஜாலத்தை ஏற்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் 10 சதவீத இந்தியர்கள் வறுமைக் கோட்டுக்கு மேலே வந்துவிட்டதாக உலக வங்கி அறிக்கை வெளியிட்டது. சோனியாவின் ஏழைகளுக்கு ஆதரவான பொருளாதார நடவடிக்கை, சுதந்திரத்துக்குப் பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியக் கிராமப்புற பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சியைக் கண்டது.

இது அடுத்து வந்த 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றியைச் சுவைக்கக் காரணமாக இருந்தது. இதற்கு சோனியா காந்திக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். 2014 ஆம் ஆண்டு தேர்தலுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு உணவு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. எனினும், 2015 ஆம் ஆண்டு தேர்தல் முடிவு ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குத் தோல்வியை ஏற்படுத்தியதன்மூலம், இந்திய அரசியல் வரலாறு மாறுபட்டது என்பது உணர்த்தப்பட்டது.

19 ஆண்டுகள் அவரை பிரதமராக விடாமல் தடுக்கப்பட்டு, 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் நரேந்திர மோடிக்கும் பெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதன்பிறகு சோனியா காந்தி உடல் நலிவுற்றார். தன் மகன் ராகுல் காந்தியை கட்சிக்குத் தலைமையேற்க வைத்தார்.

தமது 71 ஆவது வயதிலேயே அரசியலிலிருந்து ஓய்வு பெற சோனியா காந்தி நினைத்தார். கட்சிக்குத் தலைமை பொறுப்பேற்கும் முன், அவர் முன்னே இருந்த 2 சோதனைகளிலும் வெற்றி பெற்றார்.வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த காங்கிரஸ் கட்சிக்குப் புத்துயிரூட்டினார்.

கட்சியை வழி நடத்த ராகுல்காந்திக்கு வழிவிட்டுள்ளார். இன்னும் ஒரு வார காலத்துக்குள் கட்சியை வழிநடத்த ராகுல் காந்தி தயாராக உள்ளார்.

சோனியாவின் அரசியல் ஆளுமை குறித்து இனி வரலாறு தீர்ப்பளிக்கும். ஏழைகளைப் பற்றிச் சிந்தித்து கோடிக்கணக்கான மக்களை வறுமைப் பிடியிலிருந்து அவர் மீட்டார். இது எந்த அரசியல்வாதியும் செய்யாதது. இந்த ஆணாதிக்க சமுதாயத்தில், அரசியல் தரகர்கள் இருக்கும் நாட்டில் ஒரு பெண் நிகழ்த்திய சாதனை என்றென்றும் நினைவுகூரப்படும் என்பதில் சந்தேகமில்லை.

The post 19 ஆண்டு அரசியல் பயணம் : ஆணாதிக்க சமுதாயத்தில் சாதனை படைத்த சோனியா காந்தி appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

அன்னை சோனியா தலைமையில் அயராது உழைப்போம்! வகுப்புவாத சக்திகளை வீழ்த்த அவரது பிறந்த நாளில் சூளுரை ஏற்போம்!
135 ஆண்டுகால வரலாற்றுப் பழமையையும் புகழையும் பெருமையையும் நிலைப்படுத்தியுள்ளதோடு, இந்தியாவின் சமயச்சார்பற்ற இறையாண்மையையும் தேசிய ஒற்றுமையையும் பாதுகாத்து வருகிற மகோன்னதமான இயக்கம்தான் இந்திய தேசிய காங்கிரஸ்!

சுதந்திர இந்திய வரலாற்றின் 73 ஆண்டுகளில் 52 ஆண்டுகாலம் இந்தியாவை ஆண்ட பெருமை காங்கிரஸ் பேரியக்கத்தையே சாரும்! இதில், 38 ஆண்டுகள் நேரு, இந்திரா, ராஜிவ் ஆகிய அரும்பெருந்தலைவர்கள் பிரதமர்களாகப் பொறுப்பேற்று, நவஇந்தியாவை நிர்மாணித்தார்கள். இன்று அன்னை சோனியா காந்தி, காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ஏற்று, நேரு, இந்திரா, ராஜிவ் ஆகியோர் வரிசையில் நின்று வழிநடத்தி வருகிறார்.

அன்னை இந்திரா, அமரர் ராஜிவ் ஆகியோரின் படுகொலைகளைத் தொடர்ந்து அரசியலை முற்றிலும் வெறுத்த அன்னை சோனியா, 1991 முதல் 1998வரை – ஏழாண்டு காலம் காங்கிரஸ் கட்சியோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் விலகியே இருந்தார். இந்தக் காலகட்டங்களில், குறிப்பாக 1996, 1998, 1999 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில், காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியதால், மதவாத பா.ஜ.க. வெற்றி பெற்று 1998முதல் 2004வரை ஆட்சி நடத்தக்கூடிய நிலை உருவாயிற்று. இந்நிலை தொடர்ந்தால், எந்த இலட்சியங்களுக்காக அன்னை இந்திராவும் ராஜிவ் காந்தியும் வாழ்ந்தார்களோ, தங்கள் உயிரைத் தியாகம் செய்தார்களோ அவற்றிற்கு எதிரான ஒரு நிலை உருவாகி விடும் என்பதை உணர்ந்த அன்னை சோனியா, தமது முடிவை மறுபரிசீலனை செய்தார்.

தோல்வி மேல் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருந்த காங்கிரஸைத் தூக்கி நிறுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் தமக்கிருப்பதைத் தெளிவாக உணர்ந்த அன்னை சோனியா, டிசம்பர் 28, 1998இல் காங்கிரஸ் இயக்கத்திற்குத் தலைமைப் பொறுப்பேற்க முன்வந்தார். அப்போது, மூன்றே மூன்று மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது! இந்த நிலையைப் புரட்டிப் போட்டுப் பதினைந்து மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பேற்கும் தகுதியை ஏற்படுத்தி, காங்கிரஸை வலிமைப்படுத்தியவர் அன்னை சோனியாவே!

நாட்டில் நச்சுக் களையாகப் பல்கிப் பெருகி வந்த மதவாத சக்திகளை வீழ்த்துவதற்காகக் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை உருவாக்கி, 2004இல் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான பொறுப்புள்ள ஆட்சி அமைய வியூகம் வகுத்து வெற்றி பெற்றவர் அன்னை சோனியா!

இவரே பிரதமர் பொறுப்பை ஏற்க வேண்டுமென்று நாடாளுமன்றக் காங்கிரஸ் கட்சியும் கூட்டணிக் கட்சிகளும் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், அந்தப் பொறுப்பை ஏற்க மறுத்ததோடு, டாக்டர் மன்மோகன் சிங்கைப் பிரதமர் பதவியில் அமரச் செய்தவர் அன்னை சோனியாவே ஆவார்!

விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமையேற்று, இந்தியாவிற்கு விடுதலை பெற்றுத் தந்த காந்தியடிகள், சுதந்திர இந்தியாவில் எந்தப் பதவியையும் ஏற்க மறுத்து, பிரதமராக ஜவஹர்லால் நேருவைப் பரிந்துரை செய்தார். காந்தியடிகளின் பதவி மறுப்புக்கு இணையாக, காங்கிரஸ் பேரியக்கத்திற்குப் புத்துயிரூட்டி, பாராளுமன்றத் தேர்தலில் பெரு வெற்றியை ஈட்டித் தந்த நிலையில், அன்னை சோனியாவும் பதவியை மறுத்து, வரலாற்றில் உன்னதமான இடத்தைப் பெற்று, உலக அளவில் உயர்ந்து நிற்கிறார்.

இந்திய தேசிய காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ஏற்று, இந்தியாவை எதிர் நோக்குகிற தீவிரவாத, பயங்கரவாத, மதவாத சக்திகளை எதிர்த்து வழிநடத்தி வருவதோடு, டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சியில், 9 சதவிகித வளர்ச்சியைப் பெற்று, உலக வல்லரசுகளுள் சீனாவுக்கு அடுத்த நிலையில் இந்தியா உயர்ந்து நிற்பதற்குக் காரணகர்த்தாவாகவும் இருப்பவர் அன்னை சோனியாவே என்பதில் ஐயமில்லை!

கடந்த 2004 முதல் 2014 வரை டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நிலைத்த தன்மையுடன் நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்தவர் அன்னை சோனியா காந்தி. அனைத்து கூட்டணி கட்சிகளையும் ஒருங்கிணைக்கிற வகையில் செயல்பட்டு, இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றவர். சுதந்திர இந்தியா காணாத வளர்ச்சியை 2004 முதல் 2009 வரை உருவாக்கி காட்டுவதற்கு பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கு உற்ற துணையாக இருந்தவர். பொருளாதார நிபுணரான டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கு அரசியல் ரீதியாக பக்கபலமாக இருந்து, ஆட்சியையும், கட்சியையும் ஒருங்கிணைத்த பெருமை அன்னை சோனியா காந்திக்கு உண்டு.

டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி 2009 இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. இதற்கு காரணமாக இருந்தவர் அன்னை சோனியா காந்தி. ஆனால், அந்த ஆட்சிக்காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் எழுப்பப்பட்டு, அதை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. 10 ஆண்டுகால டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சியில் மாற்றம் ஏற்படுகிற வகையில் 2014 இல் தீர்ப்பு வழங்குகிற சூழ்நிலையை பாரதிய ஜனதா கட்சி தனது பிரச்சார வலிமையை ஊடகங்கள் மூலமாக செயல்படுத்தி, வெற்றியை பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

கடந்த 19 ஆண்டுகளாக இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக இருந்த அன்னை சோனியா காந்தி, 16 டிசம்பர் 2017 அன்று தலைநகர் தில்லியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் ராகுல்காந்தி தலைமைப் பொறுப்பை ஏற்றார். அன்று அந்த மாநாட்டில் ராகுல்காந்தி ஆற்றிய உரை, வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாக கருதப்பட்டது. பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் லாகூர் காங்கிரசில் நிகழ்த்திய உரைக்கு இணையாக ராகுல்காந்தியின் உரை ஒப்பிட்டு பேசப்பட்டது. அரங்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான காங்கிரஸ் கட்சியினரிடையே உணர்ச்சியை ஊட்டுகிற வகையில் ராகுல்காந்தி உரையாற்றினார்.

காங்கிரஸ் கட்சிக்கு சோதனை ஏற்படுகிறபோதெல்லாம் நேரு பாரம்பரிய தலைமையே தொடர்ந்து பாதுகாத்து செயல்பட்டு வருகிறது. 1991-க்கு பிறகு காங்கிரசிற்கு ஏற்பட்ட சோதனையிலிருந்து மீட்பதற்காக அன்னை சோனியா காந்தி, 1998 இல் தலைமை பொறுப்பை ஏற்றார். அதேபோல, நீண்ட காலமாக காங்கிரஸ் தலைமைப் பொறுப்பேற்றிருந்த அன்னை சோனியா காந்தி, இளைய தலைமுறைக்கு வழிவிட வேண்டுமென்ற நோக்கத்தில் ராகுல்காந்தி தலைமைப் பொறுப்பை வழங்குகிற சூழலை உருவாக்கினார். இதன்மூலம் மத்தியில் ஆட்சியிலிருந்து வகுப்புவாத பா.ஜ.க.வுக்கு வலிமைமிக்க எதிர்கட்சித் தலைவராக ராகுல்காந்தி செயல்பட்டார்.

2019 இல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல்காந்தி அவர்கள் பதவியிலிருந்து விலகினார். அவரது பதவி விலகல் கடிதம் அவரது உள்ளக் குமுறலை வெளிப்படுத்துவதாக இருந்தது. மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு சோதனை ஏற்பட்டது. இந்த சோதனையிலிருந்து காங்கிரஸ் கட்சியை மீட்டெடுப்பதற்காக தனது உடல்நிலையை பொருட்படுத்தாமல் அன்னை சோனியா காந்தி இடைக்கால தலைவராக பொறுப்பேற்று கட்சியை வழிநடத்தி வருகிறார்.

130 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டு மக்களின் நம்பிக்கையை பெற்ற 135 ஆண்டு கால இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக பொறுப்பு வகிக்கிற அன்னை சோனியா காந்தி அவர்களுக்கு டிசம்பர் 9 ஆம் நாள் 74 ஆவது பிறந்தநாள். அன்னை சோனியாவின் தலைமையில் ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியினரும் அயராது உழைத்து காங்கிரசின் லட்சியங்களை நிறைவேற்றுகிற வகையிலும், நாடு முழுவதும் தலைவிரித்தாடுகிற வகுப்புவாத சக்திகளை முறியடிப்பதிலும் தீவிர முனைப்புடன் செயல்படுவோம் என்று சூளுரை ஏற்போம். அதுவே அன்னை சோனியா காந்தி அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியினரின் பிறந்தநாள் செய்தியாக அமைவதே இன்றைய அரசியலில் மிகமிக அவசியமாகும்.
அன்னை சோனியா காந்தி நீண்ட ஆயுளுடன் உடல் நலத்தோடு வாழ்ந்து இந்திய தேசிய காங்கிரசிற்கும், இந்திய மக்களுக்கும் தொடர்ந்து பணியாற்ற வேண்டுமென்று வாழ்த்துகிறோம், வணங்குகிறோம்.

The post அன்னை சோனியா தலைமையில் அயராது உழைப்போம்! வகுப்புவாத சக்திகளை வீழ்த்த அவரது பிறந்த நாளில் சூளுரை ஏற்போம்! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

சோனியா காந்தி : அடித்தட்டு மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 74 ஆவது பிறந்தநாள் விழா இன்று காங்கிரஸ் கட்சியினரால் வெகுவாகக் கொண்டாடப்படுகிறது. கட்சியின் தலைவராக, ஆட்சியின் ஆலோசகராக இந்த நாட்டு மக்களின், குறிப்பாக அடித்தட்டு மக்களுக்காக அவர் ஆற்றிய சேவை இங்கு நினைவுகூரப்படுகிறது…
இந்திய தேசிய காங்கிரஸின் நீண்ட காலம் தலைவராக இருந்த பெருமையை சோனியா காந்தி பெற்றுள்ளார். இந்திய வரலாற்றில் மிகப் பழமையான மற்றும் மிகுந்த செல்வாக்குள்ள அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ். ராஜிவ் காந்தி படுகொலை நடந்து 7 ஆண்டுகளுக்குப் பின்னர், கடந்த 1998 ஆம் ஆண்டு தான் சோனியாவின் தோள்களில் தலைவர் என்று பொறுப்பு ஏற்றப்பட்டது. அவரது தலைமையின் கீழ், காங்கிரஸ் கட்சி புத்துயிர் பெற்றதோடு, இந்தியாவைக் கட்டமைப்பதற்கான நம் முன்னோர்கள் கண்ட கனவை நிறைவேற்றும் பயணமாகவும் அமைந்தது.

2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவராகவும் சிறப்பாகப் பணியாற்றினார்.

சோனியா காந்தி வாழ்க்கை வரலாறு:
1946 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி சோனியா காந்தி பிறந்தார். பள்ளிப்படிப்பை முடித்ததும், ஆங்கிலம் படிக்க கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்குள்ள ட்ரினிட்டி கல்லூரியில் பொறியியல் படிப்பு படித்துக் கொண்டிருந்த ராஜிவ் காந்தியை சோனியா காந்தி சந்தித்தார்.
மனதைப் பரிமாறிக் கொண்ட இவர்கள் 1968 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அப்போது பிரதமராக இருந்த மாமியார் இந்திரா காந்தி வீட்டில் மருமகள் என்ற பொறுப்பை சோனியா காந்தி ஏற்றுக் கொண்டார். தன் குடும்பத்தின் மீது தீவிர கவனம் செலுத்துவதிலேயே சோனியா காந்தி தன் முழு நேரத்தையும் செலவிட்டார். இருந்தாலும், அவ்வப்போது, அரிதாக அரசியலில் தலை காட்டி வந்தார்.

அதேசமயம், இந்திரா காந்தியின் அலுவலகப் பணியிலும் சோனியா காந்தி உதவியாக இருந்தார். ராஜிவ் காந்தி பிரதமரானபோதும், பின்னர் எதிர்க்கட்சித் தலைவரான போதும் சோனியா காந்தி கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.

அப்போது, ராஜிவ் காந்தியுடன் நாடு முழுவதும் அவர் பயணம் மேற்கொண்டார். ராஜிவ் காந்தி வெற்றி பெற்ற அமேதி தொகுதியில் சுகாதாரம் மற்றும் நலப்பணிகளை மேற்கொண்டார்.  இவ்வளவு பணிகளுக்கு இடையேயும் தன் குடும்பத்தின் மீதும், குடும்பத்தை வலுப்படுத்துவதிலும் அவர் அதிக கவனம் செலுத்தினார்.

சோனியா காந்தியின் கல்வி :
13 வயதிலேயே பள்ளிப் படிப்பை முடித்த சோனியா காந்தியை, புத்திசாலி, விடாமுயற்சியுடையவர், அர்ப்பணிப்புடையவர் என அவரது ஆசிரியர்கள் பாராட்டியிருக்கின்றனர். அதன்பிறகு, வெளிநாட்டு மொழிகளைக் கற்பதற்காக, ரஷ்யன், ப்ரெஞ்ச் மற்றும் ஆங்கிலம் கற்பிக்கும் பள்ளியில் சேர்ந்தார்.

சோனியாவின் அரசியல் பயணம் :
ராஜிவ் காந்தியை திருமணம் செய்து கொண்ட புதிதில் சோனியா காந்திக்கு அரசியலில் அவ்வளவு ஈடுபாடு கிடையாது. குடும்பத்தைக் கவனிப்பதற்கே அவருக்கு நேரம் போதவில்லை. 1991 ஆம் ஆண்டு நடந்த ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பிறகு,ராஜிவ் காந்தி பவுண்டேஷனை தொடங்கினார். அதோடு தற்கால ஆய்வுகள் குறித்த படிப்பை ராஜிவ் காந்தி பெயரில் ஆரம்பித்தார். இவற்றுக்குத் தலைமையேற்றுச் சிறப்பான நிர்வகித்தார். 1997 ஆம் ஆண்டு கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்தார். அதன்பிறகு 1998 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவரான அவர், கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார்.

1999 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது, மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பேற்றார். 2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்ற கட்சியாக உருவெடுத்தது. இதனால், கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது, ரேபரலி தொகுதியிலிருந்து சோனியா வெற்றி பெற்றிருந்தார்.

தலைவராக சோனியா காந்தி :
காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின், வாஜ்பாய் தலைமை வகித்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின், ஒளிரும் இந்தியா என்ற கோஷத்தை, சோனியா காந்தியின் சாமானிய மனிதர் என்ற கோஷம் வெற்றி கொண்டது. மதச்சார்பின்மை, பிரதிநிதித்துவம், சமத்துவம் மற்றும் நலத்திட்டங்களில் சோனியா ஆற்றிய சேவை காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்வூட்டியது. சோனியா காந்தியின் சிறந்த தலைமையின் கீழ், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2 முறை ஆட்சி பொறுப்பேற்றது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்:
2004 ஆம் ஆண்டு தேர்வுக்குப் பிறகு, கூட்டணி ஆட்சி அமைக்கும்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி உருவானது. இதன் தலைமைப் பொறுப்பைச் சோனியா காந்தி ஏற்றார். அப்போது, சோனியா காந்தி பிரதமராகும் வாய்ப்பு இருந்தது. அவரது ஆதரவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக அவர் பிரதமர் பதவியை ஏற்கவில்லை. அவர் வெளிநாட்டவர் என்ற காரணம் முன் வைக்கப்பட்டதால், சோனியா காந்தியே பிரதமர் பதவியை உதறித் தள்ளினார்.

அதன்பின்னர், மன்மோகன் சிங்கை பிரதமராக்கினார். அதேசமயம், நாட்டின் சமூக பொருளாதார மேம்பாடு குறித்து அரசுக்குப் பரிந்துரைக்கும் தேசிய ஆலோசனை குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றுச் சிறப்பாகப் பணியாற்றினார். அப்போது தான் கிராமப்புற வளர்ச்சிக்காகத் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டம், ஜவஹர்லால் நேரு நகர மறுசீரமைப்புத் திட்டம்,தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆகியவை கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒரு அரசுப் பதவியில் மட்டுமே வகிக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்ட போது, தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, எம்பியாக தொடர்ந்து, அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தார். 2007 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் பிறந்தநாள் அன்று ஐக்கிய நாடுகள் சபையில் சோனியா காந்தி உரையாற்றினார்.  இதனையடுத்து, அக்டோபர் 2 ஆம் தேதியை வன்முறை இல்லாத சர்வதேச தினமாக அறிவித்து ஐ.நா சபை தீர்மானம் நிறைவேற்றியது.

2009 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீண்டும் ஆட்சிக்கு வருவதில் சோனியா காந்தி முக்கிய பங்காற்றினார். அந்த தேர்தலில் காங்கிரஸ் மட்டும் 206 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மீண்டும் தேசிய ஆலோசனைக் குழுவின் தலைவரான சோனியா காந்தி, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் பெண்கள், குழந்தைகள் நலனுக்காக பெரும் பங்காற்றினார். அதோடு, சமூக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதற்கும் அவர் முக்கிய காரணமாக இருந்தார்.

சோனியா காந்தி பெற்ற விருதுகள்:
*  2004 ஆம் ஆண்டு உலகத்திலேயே 3 ஆவது சக்திவாய்ந்த பெண்மணி என்று ஃபோர்ப்ஸ் இதழின் அங்கீகாரம்* 2006 ஆம் ஆண்டு புருஷெல் பல்கலைக்கழக கவுரவ டாக்டர் பட்டம்*2007 ஆம் ஆண்டு சோனியாவை உலகின் ஆறாவது சக்திவாய்ந்த பெண்மணி என ஃபோர்ப்ஸ் அங்கீகரித்தது.

* 2007. 2008 ம் ஆண்டுகளில்  மக்களிடம் செல்வாக்கு பெற்ற உலகின் 100 பேரில் ஒருவராக சோனியா காந்தியை டைம் இதழ் தேர்வு செய்தது.

* 2008 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

* பிரிட்டிஷ் நியூ ஸ்டேட்ஸ்மேன் இதழ், 2010 ஆம் ஆண்டின் உலகில் மிகவும் மக்கள் செல்வாக்குள்ள 50 பேரில் ஒருவராக சோனியாவை தேர்வு செய்தது.

* சோனியா காந்தி 2 புத்தகங்கள் எழுதியுள்ளார். ராஜீவும் ராஜீவின் உலகமும் என்ற தலைப்பிட்டு ஒரு புத்தகமும், சுதந்திரத்தின் மகள் என்ற தலைப்பிட்டு, நேரு மற்றும் இந்திராவுக்கு இடையான தந்தை, மகள் உறவை அழகாக வெளிப்படுத்தி மற்றொரு புத்தகமும் எழுதியுள்ளார்.

The post சோனியா காந்தி : அடித்தட்டு மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

என் ராஜிவ்! … சோனியா காந்தி
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர் ராஜிவ்காந்தி படுகொலைக்குப் பிறகு, ‘MY RAJIV’ என்ற ஆங்கில நூலை 1992இல் அன்னை சோனியா காந்தி தொகுத்து வெளியிட்டார். அரிய புகைப்படங்களுடன் இந்நூல் அமைந்துள்ளதே இதன் தனிச் சிறப்பு! தமிழ் வாசகர்கள் இதுவரை அறிந்திராத புதிய தகவல்கள் இத்தொடரில் வெளிவர உள்ளன. இத்தொடரில் ராஜிவ் காந்தியோடு சோனியா காந்தியின் முதல் சந்திப்பிலிருந்து அவர் படுகொலை செய்யப்படுவதற்கு முதல் நாள்வரை நிகழ்ந்த சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூலின் சில பகுதிகளைத் தமிழாக்கம் செய்து அன்னை சோனியா காந்தி அவர்களின் 74வது பிறந்த நாளை (டிசம்பர் 9) முன்னிட்டு இன்று தொடங்கி ஞாயிறு தோறும்  desiyamurasu.com இணையத்தில் தொடராக வெளிவரும். அனைவரும் படித்து பகிர்வீர். – ஆ .கோபண்ணா

முதல் சந்திப்பு

1965ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் நாள், நான் கேம்பிரிட்ஜ் வந்து சேர்ந்தேன். அப்போது என் வயது பதினெட்டு. வெளிநாட்டு மாணவர்களுக்கான ஆங்கில மொழிப் பள்ளியில் நான் சேர்ந்தேன். அப்பள்ளி எனக்கு ஒதுக்கிய ஒரு ஆங்கிலக் குடும்பத்தில், பணம் செலுத்தித் தங்கும் விருந்தாளியாகத் தங்கி வாழ்ந்தேன். என் வாழ்க்கையில் முதல்முறையாக வீட்டைவிட்டு வெளியே தங்கினேன்!

Varsity Restaurant, where Rajiv and Sonia first met in January 1965.

அந்த ஆண்டில், அந்தப் பருவத்தில் கேம்பிரிட்ஜில் மிகுந்த குளிர். வெளிச்சம் குறைவு. அப்போது என்னால் சரளமாக ஆங்கிலம் பேசவோ, புரிந்துகொள்ளவோ முடியாது. இதற்கும்முன் வேகவைத்த முட்டைக் கோசையோ குழைவாகச் சமைக்கப்பட்ட ஒருவகையான இடியாப்ப உணவையோ சாப்பிட்டுப் பழக்கமில்லை. ஒவ்வொரு நாளும் குளிப்பதற்குப் பணம் செலுத்தியும் பழக்கமில்லை. மிகவும் அந்நியமான அத்தகைய இடத்தில், நான் படிக்க வேண்டியிருந்தது என்ன சோதனை! எனது நிலை மிகவும் தர்மசங்கடமாய் இருந்தது.

வீட்டை விட்டு வெளிவந்ததே எனக்கு மிகவும் பயங்கரமான அனுபவம். வெளிநாடு செல்லும் பெரும்பாலான இத்தாலியர்கள் போன்று, எனக்கும் இத்தாலிய சமையல் உணவு கிட்டவில்லை. வீட்டுச் சமையல் போன்ற உணவு கிடைக்கும் ஒரே இடம், வர்சிடி (Varsity) எனும் கிரேக்க விடுதி ஒன்றுதான். கேம்பிரிட்ஜில் அதைத் தவிர வேறு இடம் இல்லை. மதிய உணவுக்காக, வழக்கமாகத் தினமும் அங்கே போகத் தொடங்கினேன்.

அந்த விடுதியில், ஒரு நீளமான மேஜையில், எனக்கு எதிரில், ஒரு பெரிய மாணவர் கும்பலாக உட்கார்ந்து கும்மாளமடிப்பதை நான் பல தடவை பார்த்திருக்கிறேன். அந்தக் கும்பலிலிருந்த இளைஞன் ஒருவன் மட்டும் அவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவனாகத் தோன்றினான். தோற்றத்திலும் பழக்கவழக்கங்களிலும் அவன் தனித்துத் தோன்றினான். மற்றவர்களைப்போல் அவன் கிளர்ச்சிக் கூச்சல் போட மாட்டான்; கூச்சமும் அடக்கப் பண்பாடும் மிக்கவன். அவனுடைய கண்கள் பெரிதாகவும் கருமையாகவும் இருந்தன. வியக்கத்தக்க, களங்கமற்ற, எவரையும் கவரக் கூடிய புன்சிரிப்புடையவன்.

ஒருநாள், நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, நான் முன்பு குறிப்பிட்ட அந்த இளைஞன் ‘கிறிஸ்டியன்’ என்ற எனது ஜெர்மானிய நண்பனுடன் நான் இருந்த இடத்திற்கு வந்தான். கிறிஸ்டியனுக்கு இத்தாலிய மொழி நன்கு தெரியும். வழக்கமான வரவேற்பு உபசாரங்களுக்குப் பிறகு, என்னை அந்த இளைஞனுக்குக் கிறிஸ்டியன் அறிமுகப்படுத்தினான். அந்த இளைஞன் பெயர் ராஜிவ். முதல் தடவை அவனை என் கண்கள் கண்டபோது, என் இதயம் அவன்பால் ஈர்க்கப்பட்டது. இருவருமே ஒருவரை ஒருவர் வரவேற்றோம். என்னைப் பொறுத்தவரை அந்த முதல் சந்திப்பே ஒரு ‘கண்டதும் காதல்தான்’. பிறகு அந்த இளைஞனும் அதுபோலவே தானும் காதல் கொண்டதாகக் கூறினான். உண்மையில் அந்த இளைஞன் கிறிஸ்டியனிடம் தன்னை எனக்கு அறிமுகம் செய்து வைக்குமாறு கூறியிருக்கிறான்.

எவ்வளவுக்கெவ்வளவு முடியுமோ அவ்வளவு க்கவ்வளவு தடவை நாங்கள் சேர்ந்திருப்பதை விரும்பினோம். எங்களுக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் இருவரும் ஒன்றாக இருப்போம். அந்த நாள்களில், எனக்கு இந்தியாவைப் பற்றி ஒரு தெளிவற்ற எண்ணமே இருந்தது! அது உலகில் எங்கோ உள்ளதென்றும் அங்குப் பாம்புகள், யானைகள், காடுகள் அதிகமென்றும் எண்ணினேன். அது திட்டவட்டமாக எங்குள்ளதென்றோ, அது எப்படிப்பட்டதென்றோ எனக்குத் தெரியாது. ஆனால் விரைவிலேயே என் பள்ளி நண்பன் ஒருவன்மூலம் இந்தியாவைப் பற்றி அறியும் வாய்ப்பு கிட்டியது. என்னைவிட அவனுக்குப் பூகோள அறிவு சற்று அதிகம். அவன்மூலம், உலகின் மறுமுனையில் இந்தியா உள்ளதென்பதையும் வெகு தொலைவில் இருப்பதையும் அறிந்தேன்.

கேம்பிரிட்ஜ் வாழ்க்கை இப்போது எளிதாக, இனிதாக இருந்தது. எனக்குப் பல நண்பர்கள் இருந்தனர். அவர்களுள் ராஜிவ் விசேஷமானவர்! எல்லாருக்கும்போல எனக்கும் வீட்டைவிட்டு வெளிவந்த எண்ணம், தனிமைப் பயம் மறைந்தது. ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து கொண்டபின், ராஜிவும் நானும் எங்களைப் பற்றியும் எங்கள் குடும்பங்கள் பற்றியும் எங்கள் அபிலாஷைகள் பற்றியும் பேசுவோம். எங்கள் குடும்பங்கள் மாறுபட்டு இருக்கவில்லை. என் தந்தையை, அவரது மாகாணச் சூழலில் மட்டும், திருவாளர் மைனோ எனப் பிறர் அறிவர்.

இத்தாலியில் கட்டுமான வேலை ஓங்கியிருந்த அந்தக் காலத்தில், அவர் ஒரு கட்டட நிறுவன உரிமையாளராக வசதியுடன் இருந்தார். திறமையால் கண்டிப்பால், ஒவ்வொரு பைசாவையும் கடின உழைப்பால் சம்பாதித்தார். அவர் ஒரு நேர்மையான கறார் பேர்வழி.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ராஜிவ் குடும்பத்தின் பங்கு, இந்தியாவில் மட்டுமன்றி உலகத்திற்கே தெரியும். ராஜிவ்மூலம், அவரது தாத்தா ஜவஹர்லால் நேரு, ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்ததை அறிந்தேன். அவரது தாயார் இந்திய அமைச்சர்களுள் ஒருவர் என்பதையும் அறிந்தேன். அந்த ஆண்டு இறுதியில், அவர் தன் தாயாருக்கு லண்டனுக்கு வரும்போது என்னைப் பார்க்கும்படி கடிதம் எழுதினார். என்னைப் பொறுத்தவரை, அந்த இளைஞன்பால் எனக்குள்ள ஈடுபாட்டை என் பெற்றோரிடம் கூறும் தைரியம் எனக்கு வரவில்லை. என் குடும்பத்தைப் பொறுத்தவரை, அவர் ஒரு அந்நியர் மட்டுமன்றி, ஒரு வெளிநாட்டவருங்கூட.

ராஜிவின் தாயார், லண்டன் வரும் நாள் நெருங்கியது. அவரைப் பார்க்கும் சமயத்தை எண்ணும்போதே, எனக்கு மனத்தில் ஒருவகைக் கலக்கம். அவரை நான் சந்திக்கவும் அவர் என்னைப் பார்க்கவும் நேரம் குறிக்கப்பட்டது. கேம்பிரிட்ஜிலிருந்து அவரிடம் என்னை ராஜிவ் கூட்டிச் சென்றார். அவர் இருந்த இடத்திற்குச் சென்றதும் எனக்கு ஒரே அச்சம். என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. என்னிடம் அவர் என்ன சொல்வாரோ, அல்லது என்ன செய்யச் சொல்வாரோ & கடவுளே அதை அறிவார். (அந்த இளைஞனின் தாயின் சக்தி இந்தியாவுக்கு மட்டும் உரித்தானது அன்று.) ராஜிவ் என்னைச் சமாதானப்படுத்தித் தைரியமூட்டினார். அதனால் ஏதும் பயன் விளையவில்லை. எனவே, தன் தாயிடம் நான் அவர்களைச் சந்திக்க முடியாது என்பதைக் கூறினான். அந்தச் சந்திப்பு ரத்தாயிற்று.

மீண்டுமொரு நாள் அந்த இளைஞனால் தன் தாயுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முறை நான் முன்புபோல் செய்யக் கூடாது என மனத்தில் உறுதிப்படுத்திக் கொண்டேன். இந்தியத் தூதரகத்தில் இருந்த அறையில் ராஜிவின் தாயாரைச் சந்தித்தேன். அவர் இயல்பாகவும் அன்போடும் நடப்பதைக் கண்டு எனக்குள் பயம் அகன்றது. என்னை அச்சப்படாதிருக்குமாறு கூறினார். அவர் மிகவும் அன்போடு இருந்தார்.

ஆங்கிலத்தைவிட, பிரெஞ்சு மொழியில் நான் சரளமாகப் பேசுவேன் என்பதை அறிந்து, பிரெஞ்சு மொழியில் பேசினார். என்னைப் பற்றியும் நான் கற்கும் கல்வி பற்றியும் விசாரித்தார். எனக்குப் பயப்படாதிருக்க அறிவுரை வழங்கினார். இளம் வயதில் தாமும் கூச்ச சுபாவமுடையவராக இருந்ததைப் பற்றிக் கூறினார். காதலிப்பது பற்றியும் அவர் மனம் திறந்து பேசினார். என்னை முழுமையாக அறிந்து கொண்டார்.

அன்று மாலை நானும் ராஜிவும் ஒரு மாணவர் விருந்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. முகப்பு அறைகளுள் ஒன்றில் என் மாலை உடையை அணிந்தேன். என்னுடைய காலணி ஆடை விளிம்பில்பட்டுச் சற்றுத் தையல் பிரிந்துவிட்டது. அமைதியாக (பிற்காலத்தில் அருகிலிருந்து இதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்) ராஜிவின் தாயார், ஒரு கறுப்பு நூல், ஊசியைக்கொண்டு எந்த ஆரவாரமுமின்றி என் ஆடையில் தையல் பிரிந்ததைச் சரி செய்தார். இதுபோல்தானே என் தாயாரும் செய்திருப்பார்! அந்த நேரத்தில், அவர் பற்றி இருந்த சில சிறுசிறு ஐயப்பாடுகளும் நீங்கின.

… மீண்டும் அடுத்த ஞாயிறு தொடரும்

The post என் ராஜிவ்! … சோனியா காந்தி appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

அன்னை இந்திராவுக்கு உறுதுணையாக ராஜிவ் – சோனியா!
‘My Rajiv’ என்கிற நூலில் அன்னை சோனியா எழுதிய சில பகுதிகளின் தமிழாக்கம் அன்னை இந்திரா நினைவு நாளையொட்டி (அக்டோபர் – 31) வெளியிடுகிறோம்:

கடந்த சில ஆண்டுகளாக நானும் ராஜிவும், அரசியலை நெருங்கிய நிலையில் பார்க்கிறோம். அரசியலின் தரம் தாழ்ந்த நிலைகளை நாங்கள் பார்த்திருக்கிறோம். என் மாமியாரோடு இணைந்து கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்த சில மூத்த தோழர்கள், திடீரென அவரை எதிர்த்தனர். அவர் முழுமையாக நம்பிய அரசியல் நண்பர்கள், துரோகம் இழைத்தனர். அவரைக் கடுமையாக விமர்சித்தனர். அவரை எதிர்த்தவர்கள் பழிவாங்க மேற்கொண்ட பிரச்சாரம் கண்டு, சாதாரண மக்களும் திகைப்படைந் தனர். அரசியல்வாதியானால், வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பதை நானும் ராஜிவும் நன்கு அறிவோம்.

அன்றைய அரசியல் சிக்கலால், ராஜிவ் மன வேதனையுற்றார். என் மாமியார் தனியாக இம்சிக்கப் பட்டார். இப்படிப்பட்ட நிலையில், அவருக்கு இளைப்பாற மகனின் தோள்கள் தேவைப்படும்போது, ராஜிவ் எவ்வாறு சுக வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க முடியும்? அவருடைய தாயாரை நான் மிகவும் நேசித்ததால், மன உளைச்சல் அடைந்தேன். ராஜிவ், தம் தாய்க்குத் துணையாக நின்று, பொறுப்புடன் செய்யவேண்டிய கடமைகளை நான் உணர்ந்தேன். அதேவேளையில், அவரைப் பலி ஆடாக ஆக்கும் சமுதாயமுறை பற்றி நான் கோபமும் வெறுப்பும் அடைந்தேன். அது அவரை நசுக்கி அழித்துவிடும் என்பதை நான் முழுவதுமாக அறிவேன்.

அவர் என்னுடைய ராஜிவ்!

அந்த நீண்ட நெடிய ஆண்டு, ஒவ்வொரு நிமிடமும், ஓர் அதள பாதாளத்தை நோக்கிச் சென்றது. எங்களுக்கு உதவி செய்ய எவருமில்லை! எல்லாரும் ஏற்கத்தக்க நியாயமான ஒரு தீர்வை – அற்புதத்தை நான் எதிர்பார்த்தேன்! ராஜிவ் சிதைவடைவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. அவர் என்னுடைய ராஜிவ்! ஏனென்றால், அந்த அளவுக்கு நாங்கள் ஒருவரை ஒருவர் நேசித்தோம்! அவர் தம் தாயாருக்குக் கைகொடுத்து உதவ எண்ணினால், அதற்காக அவரோடு எங்குச் சென்றும் போரிடத் தயாரானேன்!

ராஜிவ் அரசியலில் நுழைந்த விநாடிமுதல் எங்கள் வாழ்க்கை மாறியது. இதற்குமுன் அவர் வாழ்ந்த வாழ்க்கை வேறு விதமானது! கவனமான வேலை! அதன்பின் ஒய்வு! – எத்தகைய காலம் அது? முன்னதாக இருந்த எங்கள் வாழ்க்கை உலகம் மிகமிக நெருக்கமானது! புரிந்து கொள்ளத் தக்கது! இப்போது அவர் வாழ்க்கை , மக்கள் கூட்டத்தின் மத்தியில்! தினமும் நூற்றுக்கணக்கானோர் – அரசியல்வாதிகள், கட்சி ஊழியர்கள், அமேதி தொகுதி மக்கள் – தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுதல் போன்றவற்றை முன்வைக்கின்றனர்! அவர் எங்களோடு இருக்கும் நேரம் விலை மதிக்க முடியாதது! அவரது பயணத்தின்போதும் இரவில் வெகுநேரம் விழித்திருந்தபோதும், உடனிருக்க, நாங்கள் எங்களை மாற்றிக்கொண்டு, அதற்கேற்பப் பழக்கப்படுத்திக்கொண்டு விட்டோம்.

ராகுலுக்கு ராஜிவ் எழுதிய கடிதம்

அந்தக் காலத்திய திடீர் எதிர்பார்ப்புகளைப் பற்றி அவர் பரப்பரப்பு அடையவில்லை. தமக்கு இருக்கும் அரசியல் சுமை, தனிமை, இழப்பு என எது பற்றியும், ஒருபோதும் அவர் புகார் கூறியதில்லை . எவ்விதப் பரப்பரப்புமின்றி, வேலையில் ஈடுபடுவது அவரது இயல்பு. ராகுலுக்கு அவர் எழுதிய கடிதங்களுள் ஒன்றில் இது வெளிப்படுத்துகிறது.

“ஏதாவது ஒன்றைச் செய்தால், அதைச் செம்மையாகச் செய்ய வேண்டும். நல்லது எதையும் அரைகுறையாகச் செய்யக்கூடாது. உன்னால் எவ்வளவு சிறப்பாகச் செய்ய முடியுமோ, அவ்வளவு சிறப்பாகச் செய்ய, மேலும் கடினமாக உழை! வாழ்க்கை ஒரு பந்தயம் போன்றது. சற்று அதிகமாக உழைத்து முன்னேறு! முழுமை அடையும்வரை முயன்று உழை! சிறுசிறு விஷயங்கள்தான் மாற்றங்களை உண்டாக்கும்” என்று ராகுலுக்கு ஒரு கடிதத்தில் எழுதியிருந்தார்.

அரசியல் பணியில் ஈடுபட்டிருந்தாலும், ராஜிவுக்குக் குடும்பம் மிகவும் தேவையாக இருந்தது. அரசியலை அறிந்த ராஜிவ், தாம் நன்கறிந்த, நம்பத்தக்க, நேர்மையான, நிலையான உலகையே விரும்பினார். அரசியலுக்கு மாறுபட்ட, உண்மையான, அன்பு நிறைந்த புகலிடமாக அது அவருக்குத் தெரிந்தது.

அக்காலத்தில், அவர் எனக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இவ்வாறு இருந்தது, “இந்து மரபின்படி, ஆடவன் ஒருவன் அரை மனிதன்தான். அவன் மனைவியே அவனை முழுமையாக்குகிறாள். இதுபோலவே நானும் எண்ணுகிறேன்.

நீ இல்லாவிட்டால், என் வாழ்க்கை மிகவும் கடினமானதாக இருக்கும். அரசியலில் நான் இருக்கும் போது, இது மிகவும் உண்மையாக இருப்பதாக எண்ணுகிறேன்.”

ராஜிவின் அரசியல் பிரவேசம்

ராஜிவின் அரசியல் பிரவேசத் தீர்மானத்தை நான் ஏற்றாலும், எங்கள் வாழ்க்கையில் அதனால் ஏற்பட்ட பின்விளைவுகளால், சிறிது காலம் கழித்தே எனக்கு மனதார ஈடுபாடு ஏற்பட்டது. குடும்பத்தை நடத்து வதோடு, நான் முன்பு தொடங்கி இடையில் விட்டிருந்த வண்ண ஓவியங்களை வரையும் பயிற்சியில் மீண்டும் ஈடுபடத் தொடங்கினேன். ராஜிவ், அவரது தாயார் ஆகியோரின் ஓய்வு நேரங்களுக்கேற்ப, என் பயிற்சி நேரத்தையும், வெளி உலக நிகழ்ச்சிகளையும் மாற்றி அமைத்துக்கொண்டேன். என் மாமியாரின் ஆழ்ந்த மனக்காயங்களை உணர்ந்து, நானும் ராஜிவும் அவருக்கு ஒரு பாதுகாப்பு அரணாக இருந்து செயல்பட்டோம். இக்கால கட்டத்தில், குடும்பத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டன.

1982 இல் ராகுலுக்கு ராஜிவ் எழுதிய கடிதத்தில், “நான் அமேதி போகிறேன். அம்மாவும் உடன் வருகிறாள். தொடக்கத்தில் ஒவ்வொருவரும் அவளையே இமை கொட்டாது பார்ப்பார்கள். பழக்கப்படும்வரை இது ஒரு தர்மசங்கடமாக இருக்கும். அவள் மிகவும் தைரியசாலி!” என்று குறிப்பிட்டு நிலைமையை உணர்த்தியிருந்தார்.

ராகுலுக்கு மன உறுதி அளித்த ராஜிவ்

1982இல் அங்கேயே தங்கிப் படிக்கும் விடுதி இணைந்த பள்ளி ஒன்றுக்கு ராகுல் அனுப்பப்பட்டான். 1983இல் பிரியங்காவும் அங்குச் செல்ல வேண்டியிருந்தது. ‘அனுபவமே ஒருவரை வலுவுடையவராகவும், தற்சார்பு உடையவராகவும் மாற்றும்’ என்பது ராஜிவின் உறுதியான நம்பிக்கை. ஆனால், குடும்பத்தின்மீது ஏற்பட்ட தாக்குதலால், தங்களைத் தாங்களே எவ்வாறு சமாளித்துக்கொள்ளப் போகிறார்கள் என ராஜிவ் கவலைப்பட்டார். டெல்லியில், பள்ளித் தோழர்கள் அவர்களைத் துன்புறுத்திய பிரச்சினைகளை முன்பே எதிர் கொண்டுள்ளார்கள். அப்போது அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருந்தோம். எனவே, மனோதிடத்தை வளர்த்துக்கொள்ளுமாறு ராஜிவ் அடிக்கடி ராகுலுக்குக் கடிதம் எழுதினார்.

“சில சமயம், அப்பா, பாட்டி, அம்மா பற்றி டெல்லியில் பத்திரிகைகளில் செய்திகள் வரும். அதற்காகக் கவலைப்படாதே! அதுபற்றிச் சில பள்ளித் தோழர்கள்கூட உன்னை மனக்கவலை அடையச் செய்யலாம். ஆனால், அச்செய்திகளில் பல, உண்மை அன்று ! அத்தகைய புகைச்சல்களை எதிர்கொள்ளக் கற்றுக்கொள்! உன்னை எரிச்சலடையச் செய்யும் செய்திகளைப் பற்றிக் கவலை கொள்ளாதே!” என ராஜிவ், ராகுலுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில், பஞ்சாபில் நிலவியிருந்த நிலை, தேச ஒற்றுமைக்குப் பேரபாயமாகத் தோன்றியது. பிரிவினை சக்திகள் வலிமை பெற்றன. மிருகத்தனமான பயங்கரவாதக் கொலைகள், மேலும் மேலும் அதிகரித்தன. ராகுலையும் பிரியங்காவையும் பயங்கரவாதிகள் குறிவைத்திருப்பதாக எங்களுக்கு எச்சரிக்கை தரப்பட்டது. ஆபத்து அதிகரித்தபோது, அந்தப் பள்ளியில் வைத்து அவர்களைச் சமாளிப்பது மிகவும் கடினமாக இருந்தது.

ராகுல், பிரியங்கா பாதுகாப்பு குறித்து இந்திரா கவலை!

1984இன் வசந்த காலத்தில், டெல்லி பள்ளிகளில் ராகுலும் பிரியங்காவும் சேர்க்கப்பட்டார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட பல இடைஞ்சல்களில் இது முதன்மையானது. ஆனால், அதற்கு ஈடான வேறு நிகழ்வுகளும் உண்டு. அவர்களது பாட்டியின் கடைசி ஆறுமாத வாழ்க்கையை அவர்களுடன் கழித்தார். அவர்களின் பாதுகாப்பு பற்றி அச்சப்பட்டாலும், அவர்களோடு இருந்ததில் பாட்டிக்கு அளவற்ற மகிழ்ச்சி!

அக்பர் சாலை அலுவலகத்தை, எங்கள் வீட்டோடு இணைத்த வாயில் படியைத் தாண்டி, வெளியே விளையாடப் போகக் கூடாதென ராகுலுக்கும் பிரிங்காவுக்கும் என் மாமியார் பலமுறை எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த இடத்தில்தான், பின்னர் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மரணத்தை எதிர்பார்த்த இந்திரா!

சில மாதங்களுக்குப் பிறகு, குழந்தைகளுக்கு ராஜிவ் எழுதிய கடிதத்தில், “என் தாயார் தாம் இறக்கும் நாளை நன்கு அறிந்திருந்தார் என உறுதியாக நம்புகிறேன். அவ்வாறு அவர் ஏன் நினைத்தார் என எனக்குத் தெரியாது. ஆனால், அது உண்மை ! அவர் செய்த பல செயல்கள், அவர் எங்களைப் பிரியத் தயாராக இருந்தார் என்பதையே உணர்த்தின. ஏனென்றால், அவர் அவ்வாறு செய்ய விரும்பாவிடினும், அவர் எடுத்த முடிவுகள், தலைவர் என்ற முறையில் அவர் செய்த கடின முடிவுகள், வாழ்க்கையைப் பற்றி அவரை அவ்வாறு எண்ணத் தூண்டின” எனக் குறிப்பிட்டிருந்தார்.

சீக்கிய பொற்கோயிலை ராணுவம் மீட்ட நிகழ்வுக்குப் பிறகு, எங்கள் வாழ்வில் ஒரு சோக நிழல் அலை பரவியது. என் மாமியார் தாம் இறந்தபின் தம்முடைய மரணச் சடங்குகள் எப்படி இருக்கவேண்டும் என்பன பற்றி ராஜிவிடமும் என்னிடமும் முன்பே பேசினார். தாம் கூற விரும்பிய அறிவுரைகளை எழுதினார். ராகுலிடம் தனியாகப் பேசினார். தைரியமாக இருக்குமாறு அவனிடம் கூறினார். தாம் வாழ்ந்து முடித்துவிட்டதாகவும், தம்மால் இயன்ற பணிகளைச் செய்துள்ளதாகவும், தாம் இறந்தால் அழக்கூடாது எனவும் கூறினார்.

நாள்கள் கடந்து சென்றன. தீபாவளி வந்தது! எங்களோடு தீபாவளி நாள்களைக் கழிக்க ஒரிசாவிலிருந்து ராஜிவ் வந்தார். இதுபோன்ற நல்ல விழா நேரங்களில் அவர் வரத் தவறுவதில்லை . பழைமையான கணேச விக்ரகத்தின் முன்னால் என் மாமியார் தீபங்களை ஏற்றினார். வீட்டை ஒளி அலங்காரம் செய்வதில் நாங்கள் ஈடுபட்டோம். பட்டாசுகள் வெடித்தோம்!

மருமகளை அரவணைத்த மாமியார்!

தீபாவளி கொண்டாட்டம் முடிந்த மறுநாள் காலை, ராஜிவ் மேற்கு வங்கம் சென்றார். அன்று இரவு அதிகாலை நான்கு மணிக்கு நான் எழுந்தேன். எனக்கு ஆஸ்த்துமா மருந்து தேவைப்பட்டது. படுக்கை அறை விளக்கை ஏற்றி, மருந்துப் பெட்டிப் பக்கம் சென்றேன். அடுத்த அறையில் இருந்த என் மாமியாருக்குத் தொல்லைதரக் கூடாதென எண்ணினேன். ஆனால், என் அறைக்கதவு திறந்தது! எனக்கு ஒரே வியப்பு! அவர் கையில் டார்ச் விளக்கை வைத்துக்கொண்டு எனக்கு மாத்திரை தேடிக் கொடுத்து, ஒரு கோப்பைத் தண்ணீ ரையும் அளித்தார். மறுபடியும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் தம்மைக் கூப்பிடச் சொன்னார். அநேகமாக அவர் தூங்காமல் விழித்திருந்திருப்பார் என எண்ணுகிறேன்.

அந்த வார இறுதியில், காஷ்மீர் செல்வது பற்றி மறுநாள் பேசத் தொடங்கினார். இலையுதிர் காலத்தில், சினார் மர வண்ண இலைப் பூக்களை அவர் பார்க்க மிகவும் விரும்பினார். அவற்றைக் கண் குளிரக் காண்பது என்பது அவருக்கு ஒரு முக்கிய சம்பவமாகத் தோன்றியது. காஷ்மீர் பற்றித் தம் உள்ளத்தில் அவர் கொண்டிருந்த எண்ண ஓட்டங்களுக்கு அது பிரியாவிடையோ என்னவோ? இருந்தும், என் உடல் நலக்குறைவு பற்றிய கவலை காரணமாக இரவில் அங்குத் தங்க அவர் தயங்கினார். நான் தனியாக வீட்டில் தங்க நேர்ந்தது பற்றிக் கவலை கொண்டார். இறுதியாகக் குழந்தைகளுடன் சென்றார்.

அக்டோபர் 28இல் காஷ்மீரிலிருந்து அவர் திரும்பினார். அன்றைய மாலைப்பொழுதை எங்கள் அறையில் அமைதியாகக் கழித்தார். வழக்கம்போல் தம் முராவினை (பிரம்பு நாற்காலி) எடுத்து வந்து அதில் அமர்ந்து அலுவலகப் பணிகளைக் கவனித்தார். இடையிடையே தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே எங்களோடு அளவளாவினார்.

அடுத்த நாள் அதிகாலை ஒரிசா பயணம்; அதை முடித்துக்கொண்டு மாலையில் வீடு திரும்பினார். அன்று புவனேஸ்வரத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில், “நான் வாழ்வேனா, அல்லது சாவேனா என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. இறுதி மூச்சு உள்ளவரை தேசப்பணி ஆற்றுவேன். நான் இறந்தால்கூட, நான் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தமும், ஒன்றுபட்ட சுதந்திர இந்தியாவைப் பலப்படுத்தி, வலுப்படுத்தும்” என்று உரையாற்றினார்.

அக்டோபர் 31, அரசு விருந்தோடு முடிவடையும்படி ஒரு பரப்பரப்பான நாளாக வீடு இருக்கும். காலையில் பள்ளிக்குப்போக விடைபெற்ற பிரியங்காவை முத்தமிட்டு, இறுக்கமாகத் தழுவினார்; ராகுலைக் கூப்பிட்டு, தாம் முன்பு கூறியவற்றை நினைவூட்டினார். அவர் அலுவலகம் புறப்படத் தயாராகும்போது, அவரது அறைக்குள் நான் நுழைந்தேன். மாலை விருந்து பற்றிச் சிறிது நேரம் பேசினார். கால தாமதமாகிவிட்டதால், மதிய உணவின்போது, இரவு விருந்து ஏற்பாடுபற்றிப் பேச எண்ணினார்.

அன்னை இந்திரா படுகொலை!

நான் குளிக்கச் சென்றேன். அப்போது, வழக்கத்துக்கு மாறாகத் தீபாவளி பட்டாசு வெடிப்பது போன்ற ஒரு ஒலி கேட்டது. ஆனால், பட்டாசு வெடிபோலல்லாமல், முற்றிலும் மாறான ஓசை அது! குழந்தைகளின் தாதியிடம் (ஆயா), என்ன என்று பார்க்கச் சொன்னேன். எனினும், ஏதோ பயங்கரம் நிகழ்ந்ததை நான் உணர்ந்தேன். வெளியே ஓடி வந்தேன். அம்பாசிடர் கார் ஒன்றின் பின் இருக்கையில் என் மாமியார் கிடத்தப்பட்டிருந்தார். அவர் இறந்தவர்போன்று தோன்றினார். அவர் அருகில் நான் மண்டியிட்டு அமர்ந்தேன். பலத்த ஜனநெரிசல்களுக்கிடையே கார், மெதுவாக மருத்துவமனை நோக்கிச் சென்றது. எனக்குப் பேயறைந்த உணர்வு. ஏதேதோ எண்ணங்கள்! அவர் மூர்ச்சையாய் இருக்கிறாரா? அவர் காப்பாற்றப்படுவாரா? ராஜிவ் எங்கே? குழந்தைகள் எங்கே? படுபயங்கரம் ஒன்று நிகழ்ந்ததை என்னால் நம்ப முடியவில்லை;

எல்லாமே முடிந்துவிட்டது!

ஆனால், எல்லாமே முடிந்துவிட்டது! மணித்துளிகள் உருண்டோடின. பெருந்திரளாக மக்கள், உற்றார் உறவினர் வந்து சென்றனர். குழந்தைகள் பள்ளியிலிருந்து அழைத்துவரப்பட்டு, சப்தர் ஜங் சாலையில் இருப்பதாக யாரோ கூறினார்.

ராஜிவ் மேற்கு வங்கத்தில் இருந்தார். தாயாருக்குக் காயமேற்பட்டதாக அவருக்குச் செய்தி அனுப்பப் பட்டது. டெல்லி திரும்பும் விமானத்தில் வானொலிச் செய்தியை அவர் கேட்டுள்ளார். மாலை 3.15 மணிக்கு மருத்துவமனையை அடைந்தார். மற்றவர்களோடு அவர் இருந்தார். ராஜிவுடன் ஒரே ஒரு விநாடி தனிமையில் இருக்க எனக்கு விருப்பம்! அவரைக் கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்க அனைவரும் அழைப்பதாக ராஜிவ் என்னிடம் கூறினார். ராஜிவைப் பிரதமராக்க ஏற்பாடுகள் நடந்தன. அப் பதவி வேண்டாமென நான் அவரிடம் மன்றாடினேன்; கெஞ்சினேன்! மாற்றார்கள் மத்தியில் இந்த வேண்டுகோளை நான் விடுத்தேன். அவரும் கொல்லப்படுவார் என்றேன். அவர் என் கைகளை இறுகப் பிடித்துக்கொண்டு என்னைத் தழுவி அணைத்து, ‘விரக்தியடையக்கூடாது’ என்றார். அவருக்குப் பிரதமர் பொறுப்பு ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை !

“எப்படியும் ஒருநாள் நான் கொல்லப்படலாம்” என்றார். அவர் எதிர்பார்த்தபடி கொல்லப்பட்டார்.

அன்னை இந்திரா மறைவிற்குப் பிறகு…

அன்று நவம்பர் மாதம் 19ஆம் நாள்!
என் மாமியார், இந்திய மண்ணில் முதன்முதலாய்ப் பாதம் பதித்த நாள்! ஆம், பிறந்த நாள்!

இறுதிச் சடங்குகள் குறித்த இந்திரா!

எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் இருவரும் ஒரே மாதிரியான, ஆயினும் தனித்தனியாகச் சில அறிவுரைகளை வழங்கினோம். “சோனியாவும் நானும் ஒரே நேரத்திலோ, ஒரே இடத்திலோ, வேறுவேறு இடங்களிலோ, இந்தியாவிலோ, அன்றி வெளியிலேயோ, எப்படி – எங்கே இறக்க நேர்ந்தாலும், எங்கள் உடல்கள் டெல்லிக்குக்கொண்டு வரப்படவேண்டும்! அங்கு இந்துசமயச் சடங்குகள் அனைத்தும் செம்மையாகச் செய்யப்பட்டுத் திறந்தவெளியிலே தகனம் செய்யப்பட வேண்டும்! எரிமின் நிலையத்தில் எங்கள் உடல்கள் எரிக்கப்படக் கூடாது! எங்கள் வழக்கப்படி, மூத்த குழந்தை ராகுல், தகனம் செய்யத் தீவைக்க வேண்டும். பின்னர், அலகாபாத் திரிவேணியில் கங்கையில் எங்கள் அஸ்தி கரைக்கப்பட வேண்டும்! அங்குதான் என் மூதாதையர்களின் அஸ்தி கரைக்கப்பட்டது” என்று ராஜிவ் கூறினார்.

எங்களுக்கு எல்லாமே அன்னை இந்திராதான்!

எங்கள் உலகத்தின் மையமாகத் திகழ்ந்தவர் என் மாமியார்தான்! நான் சிறுபெண்ணாக, அவர்களுக்கு மருமகளாக, இந்த எங்கள் வீட்டில் நுழைந்தபோது, கஷ்ட நஷ்டங்கள், இன்ப துன்பங்கள் ஆகியவற்றிலும் அவர்தான் முக்கியப் பங்கு வகித்தார். எங்கள் வாழ்க்கைச் சக்கரத்தின் மையம் அவர்தான்! எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், சச்சரவாக இருந்தாலும், சிறப்பு நிகழ்ச்சியானாலும் எதிலும் அவரையே நாங்கள் எதிர்கொண்டோம்! எங்களுக்கு நல்ல வழிகாட்ட, தவறு செய்தால் திட்டித் திருத்த, ஒரு செயலைச் செய்ய, ஊக்கமளிக்க, அன்பு காட்ட இதுவரை அவர் இருந்தார்!

ராஜிவைப் பொறுத்தவரை, அவருடைய குடும்பமே அவரது அன்னைதான்! குறிப்பிட்டுச் சொல்வதானால், ராஜிவினுடைய தாயார், அவருடைய வாழ்நாளின் கடைசி நான்கு ஆண்டுகளில் ஒரு கனிவான தாயாக, நல்ல நண்பனாக, இவற்றிற்கெல்லாம் மேலானவராகத் தோன்றினார்.

ராஜிவுக்கு என் மாமியார்தான் ஆசான், தலைவர் என எல்லாமுமே! ஆயினும், தாயாரின் எதிர்பாராத மரணம் குறித்து ராஜிவால் துக்கம்கொள்ள முடியவில்லை! தாங்கமுடியாத தமது துயரத்தையோ, மனக்காயத்தையோ ராஜிவால் வெளியில் காட்டிக்கொள்ள நேரமே இல்லை!

மீளமுடியாத துயரம்!

தம் தாயாரின் அகால மரணமாகிய துயர நிகழ்வுக்குப் பின்னர் நடந்த ஒரு சம்பவம் என் நினைவில் இப்போதும் நிழலாடுகிறது. ராஜிவை நான் ஒரு நாள் வீடு முழுவதும் தேடினேன்! யாருக்கும் அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. அவர் தம் தாயாரின் அறையில் இருந்தார்! தாயாரோடு தொடர்புடைய பொருள்களை ஒவ்வொன்றாக அவரது அறையில் தனியே அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார். ராஜிவுக்கு அந்தத் தனிமை அப்போது தேவைப்பட்டிருக்கிறது. எனவே, தனிமையில் மூழ்கியிருந்தார்.

தாயார் உயிருடன் இல்லாததை எண்ணிப் பலமுறை ராஜிவ் உணர்ந்து உருகியது உண்டு. பொதுவாழ்வில் ஈடுபட்டுப் பல பிரச்சினைகளை உறுதியுடன் எதிர்கொள்ள நேர்ந்த சூழ்நிலைகளிலெல்லாம் ராஜிவ் தம் தாயை நினைத்துக்கொண்டதுண்டு, இவ்வகையில், அவரிடமிருந்து ஆன்ம பலத்தையும் தைரியத்தையும் பெற்றார் எனலாம். பழமையும் பண்பாட்டுச் சிறப்பும் நிறைந்த ஒரு தேசத்தை வழிநடத்திச் செல்லும் பொறுப்பு இப்போது ராஜிவின் இளம் தோள்களில் சுமத்தப்பட்டிருந்தது!

The post அன்னை இந்திராவுக்கு உறுதுணையாக ராஜிவ் – சோனியா! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

வெறுப்பின் உச்சத்தில் இந்திய ஜனநாயகம் : காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் விமர்சனம்
இன்றைய அரசியல் நிலைமையின் போக்கு மற்றும் அதன் ஆபத்தை எச்சரித்து, இந்துஸ்தான் டைம்ஸில் வெளியான காங்கிரஸ்  தலைவர் சோனியா காந்தியின் கட்டுரை:

உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் இன்று கூனிக் குறுகிப் போயிருக்கிறது. பொருளாதாரமும் கடும் நெருக்கடியில் உள்ளது தெளிவாகத் தெரிகிறது. ஜனநாயக  ஆட்சியின் அனைத்து தூண்களும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படை உரிமை, அடக்குமுறை மற்றும் அச்சுறுத்தல் மூலம் தடுக்கப்படுகிறது.

கருத்துவேறுபாடுகள் வேண்டுமென்றே பயங்கரவாதம் என்றும், தேச விரோத நடவடிக்கை என்றும் முத்திரை குத்தப்படுகின்றன. குடிமக்கள் மற்றும் சமுதாயத்தின் உரிமைகளை நிலைநிறுத்துவதாக கருதப்படும் பல நிறுவனங்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.

தேசியப் பாதுகாப்பு என்ற போலியான அச்சுறுத்தல்கள் மூலம், மக்களின் உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனம் திசைதிருப்பப்படுகிறது.

உண்மையிலேயே நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தால், சமரசம் செய்து கொள்ளாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி அரசும், பாரதிய ஜனதா கட்சியும் ஒவ்வொரு போராட்டத்துக்குப் பின்னே சதி இருப்பதாகப் பார்க்கிறார்கள். அவர்களின் ஒவ்வொரு பார்வையும் எதிரானதாகவே இருக்கிறது.

எதிர்ப்பாளர்கள் மீது புலனாய்வு அமைப்புகளைக் கட்டவிழ்த்துவிடுவது, ஊடகங்கள் மற்றும் இணையத்தின் வழியே பொய் பிரச்சாரம் செய்வது மூலம் இந்திய ஜனநாயகம் வெறுக்கப்படுகிறது. காவல்துறை, அமலாக்கப் பிரிவு, சிபிஐ,  தேசிய புலனாய்வு ஏஜென்சி மற்றும் போதைப் பொருள் தடுப்புத் துறை அரசியல் எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. இனியும் அதிகார துஷ்பிரயோகம் செய்வதற்கு மோடி அரசுக்கு ஒன்றும் இல்லை. இந்த அமைப்புகள் எல்லாம் இப்போது பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சகம் போடும் ஆட்டத்துக்கு ஆடிக் கொண்டிருக்கின்றன.

அரசியல் அமைப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டே அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தவேண்டும். நிறுவப்பட்ட ஜனநாயக மரபுகளை மதிக்கவேண்டும். எவ்வித பாகுபாடு இன்றி அனைத்து குடிமக்களின் நலனுக்காக அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும். அடுத்ததாக, அரசியல் எதிரிகளுக்கு எதிராக அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது. சுதந்திரத்துக்குப் பிறகு இதுவரை எந்த அரசாங்கமும் செய்யாத அடிப்படை விதி மீறலை மோடி அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

முதல் 5 ஆண்டு ஆட்சியில் இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளை எல்லாம் எதிரிகளாகச் சித்தரித்தனர். போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது வழக்குப் போடுவது பாஜக  அரசியலாக இருந்தது.  கடந்த 2016 ஆம் ஆண்டு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இளம் மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்குகளைத் தொடுத்ததிலிருந்து ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து பிரபல சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் மீது கடுமையான வழக்குகளை தொடர்ந்தனர். முந்தைய ஆட்சிகளில் இது போன்று நிகழ்ந்ததில்லை.

பாஜகவுக்கு எதிரான போராட்டங்களை எல்லாம் இந்தியாவுக்கு எதிரான சதி என முத்திரை குத்துவது மோடி அரசின் வாடிக்கையாகிப் போனது. குடியுரிமை திருத்தச் சட்டம், உத்தேசிக்கப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற பெரிய அளவிலான போராட்டங்களை மோடி அரசு சதி என்றே கட்டமைத்தது.

இத்தகைய போராட்டங்களை ஆரம்பத்தில் பெண்களே முன்னெடுத்தனர். அதன்பின், ஷாஹீன்பாக் மற்றும் எண்ணற்ற போராட்டங்களிலும் ஆண்கள் ஆதரவு கொடுப்பவர்களாகவே இருந்தனர். இந்தப் போராட்டங்களில் அரசியலமைப்பு, தேசியக் கொடி உள்ளிட்ட நமது தேசிய சின்னங்களைப்  பயன்படுத்தியது பெருமைக்குரியதாகும்.

இந்தப் போராட்டத்துக்கு, அரசியல் கட்சிகளைத் தாண்டி சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், இந்த மாபெரும் போராட்டத்தை மோடி அரசு கண்டுகொள்ளவே இல்லை. மாறாக, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் இதனைப் பிரச்சினையாக்கினார்கள். போராட்டம் நடத்துவோர் மீது தாக்குதல் நடத்துமாறு மத்திய நிதித்துறை இணை அமைச்சரும், மத்திய உள்துறை இணை அமைச்சரும் உத்தரவிட்டனர்.

மற்ற டெல்லி பாஜகவினர், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்துமாறு வெளிப்படையாக அச்சுறுத்தினர். வடகிழக்கு டெல்லியில் கலவரம் ஏற்படுவதற்கு ஆளும் கட்சியே காரணமாக இருந்தது. பிப்ரவரியில் நடந்த இந்த கலவரத்தை அடக்க மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை.

சில மாதங்கள் கழித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எல்லாம் நாட்டுக்கு எதிராகச் சதி செய்ததாக மோடி அரசு எல்லை மீறி அபாண்டமாகக் குற்றம் சாட்டியது. இதனையடுத்து, விசாரணையே இன்றி 700 வழக்குகள் பதியப்பட்டன. நூற்றுக்கணக்கானோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். உலகம் முழுவதும் அறியப்பட்ட பிரபல சமுதாய தலைவர்கள் தான் இந்த போராட்டம் கலவரமாக மாற மூளையாகச் செயல்பட்டதாக பாஜக அரசு குற்றம் சாட்டியது. இதே தலைவர்கள் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகவும் போராடியவர்கள் தான். ஆனால், அவர்கள் மீது வகுப்புவாத கலவரத்தை ஏற்படுத்தி தேசத்துக்கு எதிராகச் சதி செய்ததாக வழக்குத் தொடுக்கிறார்கள். இது ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்தாகும்.

ஹத்ராஸில் இளம்பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டபின், உடலை உத்தரப்பிரதேச காவல்துறையினரே எரித்தனர். அந்த பெண்ணின் குடும்பத்தினர் நீதி கேட்டுக் கதறி அழுகின்றனர். எதற்கும் உத்தரப்பிரதேச அரசு செவிசாய்க்கவில்லை. ஆனால்,   நிர்பயா சம்பவத்தில் நீதி கிடைக்க அப்போதைய காங்கிரஸ் ஆட்சி அரும்பாடுபட்டதும், நேர்மையாக நடந்து கொண்டதும் நாட்டு மக்களுக்குத் தெரியும்.

சுதந்திரம் மற்றும் பேச்சுரிமையின் அடிப்படை தத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவது அரசியலிலும் சமுதாயத்திலும் நஞ்சை விதைப்பதற்குச் சமம். பாஜக மட்டுமல்ல, எந்தவொரு அரசியல் கட்சியும் இந்திய அரசியல் சாசனத்துக்குட்பட்டு கொள்கையை வகுத்துக் கொள்ள உரிமை உண்டு. ஒவ்வொருவருக்கும் வாக்குரிமையையும், பேச்சு சுதந்திரத்தையும் இந்தியனின் அடிப்படை உரிமை என அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது. பொதுமக்களுக்கு இடையூறின்றி அமைதியாகப் போராடவும் அரசியல் சாசனம் அனுமதிக்கிறது. அப்படியிருக்கும் போது, மக்களுக்காக முன் நிற்கும் சமுதாயத் தலைவர்கள் மீது சதியாளர்கள் என்றும், தீவிரவாதிகள் என்றும் சாயம் பூசுவது முறையல்ல.

தன்னை 130 கோடி மக்களின் பிரதிநிதியாக பிரதமர் மோடி அடிக்கடி கூறிக்கொள்கிறார். ஆனால், எதிர்க்கட்சிகளையும், எதிர் கருத்துள்ளவர்களையும், தங்களுக்கு வாக்களிக்காதவர்களையும் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்ட இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்துகிறார். அவர்கள் மட்டும் தான் நாடு என்று நினைக்கிறார்கள். இவர்களுக்கும் சேவை செய்யவே அரசாங்கங்கள் உள்ளன. அவர்களை இழிவுபடுத்துவதற்கு அல்ல.

நமது அரசியலமைப்பு மற்றும் சுதந்திர இயக்கத்தால் உருவாக்கப்பட்ட ஜனநாயகத்தை பின்பற்றினால் மட்டுமே இந்த நாடு செழிக்கும். இவ்வாறு சோனியா காந்தி கூறியுள்ளார்.

The post வெறுப்பின் உச்சத்தில் இந்திய ஜனநாயகம் : காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் விமர்சனம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

இந்த நூற்றாண்டின் அதிசய அரசியல்வாதி மன்மோகன் சிங்!
உலக பொருளாதார அறிஞர்களில் முக்கியமானவரும்,இந்தியாவின் முன்னாள் பிரதமரும்,காங்கிரசின் முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் தனது 88வது பிறந்த நாளை மிக அமைதியாக எதிர்கொண்டார்!

இந்த நாட்டில் ஒரு வார்டு கவுன்சிலராக இருப்பவர் கூட தன் பிறந்த நாளில் போஸ்டர்கள், பேனர்கள், விழாக்கள் என ஆர்ப்பாட்டமாக  எதிர்கொள்வதை நாம் பார்க்கிறோம்.

மன்மோகன் சிங் எளிமையானவராக இருப்பதால் ஊடகங்களும் அவரது பிறந்த நாளுக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை! ஆனால், அவர் நாம் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய, பின்பற்ற வேண்டிய ஒரு அற்புதமான முன்னோடி என நான் கருதுகிறேன்!

அவரது பிறந்த நாளன்று பிரதமர் மோடி ஒரு சம்பிரதாய வாழ்த்தை டிவிட்டரில் தெரிவித்தார்!

சிதம்பரமோ, ’’மன்மோகன் சிங்கிற்கு பாரதரத்னா விருது தந்து கௌரவிக்க வேண்டும்’’ என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும் மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட முதல்வர்கள் வாழ்த்தினர். ஆனால், இவர்களைவரைக் காட்டிலும் ராகுல்காந்தியின் வாழ்த்து மனதைத் தொடுவதாக இருந்தது!

’’மன்மோகன்சிங் போன்ற பிரதமர் இல்லாததை நாடு ஆழமாக உணர்கிறது. அவர் நேர்மை, கண்ணியம், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உதாரணமானவர்! ’’ என ராகுல்காந்தி கூறியுள்ளார். இது வெற்றுப் புகழ்ச்சியில்லை!

இந்தியாவின் சக்தி வாய்ந்த நிதி அமைச்சராக ஐந்தாண்டுகள் பணியாற்றிப் பல அதிரடி பொருளாதார மாற்றத்திற்கு வித்திட்டவர், பத்தாண்டுக் காலம் பிரதமராக இருந்தவர் என்ற வகையில் அவர் மீது இது வரை ஒரு சின்ன ஊழல் குற்றச்சாட்டு கூட எழுந்ததில்லை! அப்பழுக்கற்ற நேர்மையாளராகத் தன்னை உறுதியாகக் கட்டமைத்துக் கொண்டவர் மன்மோகன் சிங்! பல ஆயிரம் கோடிகளைச் சுலபமாகச் சம்பாதிக்கக் கூடிய இடத்தில் அவர் இருந்தார்! அவர் கேட்காமலே அவருக்குக் கொட்டித்தரப் பல பெருந்தொழில் அதிபர்கள் காத்திருந்தனர். ஆனால், அந்த எண்ணத்தில் அம்பானிகளோ, அதானிகளோ, டாட்டாக்களோ, பிர்லாக்களோ அவரை நெருங்கக் கூட முடியாத ஒரு நெருப்பு வளையத்தைக் கண்ணுக்குத் தெரியாமல் அவர் கட்டமைத்திருந்தார். அதனால் தான் பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதியான நரசிம்மராவ் அவர்களே மன்மோகன்சிங்கை பூரணமாக நம்பி அவரது புதிய பொருளாதாரத் திட்டங்கள், அணுகுமுறைகள் அத்தனையையும் ஆதரித்தார்.

அதே போல நரசிம்மராவ் அவர்களையடுத்து காங்கிரஸின் பிரதமராகும் வாய்ப்பு  சோனியாகாந்திக்கு இருந்தும், அதை ஏற்காமல் தவிர்த்து, ’’இதற்கு இன்னார் தான் பொருத்தமானவர்’’ என சோனியா புத்திசாலித்தனமாக ஒரு முடிவு எடுத்து மன்மோகன் சிங்கை பிரதமராக்கினார்! இந்தியாவில் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமரானது அதுவே முதல் நிகழ்வாகும்.

அப்போதும் பலர், ’’சும்மா பேருக்குத் தான் சிங் பிரதமர்! ஆனால், அதிகாரமெல்லாம் சோனியா தான்! கூடிய விரைவில் மன்மோகனை தகுதி இறக்கம் செய்துவிட்டு சோனியா பிரதமராகலாம் எனப் பேசினர். ஆனால், கடைசி வரை அது நடக்காதது மட்டுமல்ல, அடுத்த முறையும் முழு ஐந்தாண்டுகள் டாக்டர். சிங் தான்  பிரதமராகச் செயல்பட்டார்!

அப்போது பாஜகவும், அவர்களின் ஆதரவாளர்களும், ’’சிங் அதிகாரமற்றப் பிரதமர். சோனியாவால் ஆட்டுவிக்கப்படுகிறார்’’ என்ற பிரச்சாரத்தைப் பரப்பினர்! ஆனால், அது முற்றிலும் பொய் என்பது மட்டுமல்ல, மன்மோகன்சிங், தன்நிகரற்ற சுதந்திர மனிதராக இயங்கினார் என்பது அன்றைய அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் நன்கு தெரியும்!

கட்சி அரசியலிலிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு, அரசு நிர்வாகத்தில் மட்டுமே முழுமையான கவனத்தைச் செலுத்தியதால் மன்மோகன் மீது அப்படியொரு தோற்றம் உருவானது. அரசியல் தொடர்பான சிக்கல்களோ, கவலைகளோ மன்மோகனுக்கு தராமல் சோனியா காந்தியும் அவரை பாதுகாத்தார். இதன் மூலம் நாட்டுக்கும், மக்களுக்கும் டாக்டர். சிங்கின் தொண்டு முழுமையாகப் பயன்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை கருதியது. எனவே, அரசியல் சூதுவாது இல்லாதவராக அவரும் தன் இயல்பு படியே செயல்படமுடிந்தது.

மன்மோகன்சிங் பற்றி மேலதிகமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அவர் இன்றைய பாகிஸ்தானில் இருக்கின்ற மேற்கு பஞ்சாபில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர். பல மைல்கள் நடந்து சென்று பள்ளிக் கல்வியை கற்றவர்! சிம்னி விளக்கு ஒளியில் படித்து அறிவை வளர்த்தவர்! சிறந்த மாணவனாகத் திகழ்ந்த அவர் உலக புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலையில் பொருளாதாரம் படித்தார்!

பிரபல ஆக்ஸ்போர்ட் பல்கலையில் டாக்டரேட் முடித்தார்! பஞ்சாப் பல்கலையிலும், தில்லி ஜவகர்லால் நேரு பல்கலையிலும் பேராசிரியராக வேலை பார்த்தவர். அதன் பிறகு நிதி அமைச்சகம், வெளி நாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் ஆலோசகராக இருந்தவர்! ரிசர்வ் வங்கியின் இயக்குநர், ஆளுனர் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

மன்மோகன் சிங் அடம்ஸ்மித், ஆசியமணி… உள்ளிட்ட பல முக்கிய உலக விருதுகளைப் பெற்றவர்.

மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் ஆட்சியின் முக்கிய சாதனையாக தகவல் பெறும் உரிமைச் சட்டம், வன உரிமைகள் அங்கீகரிப்பு சட்டம், கல்வி உரிமைச் சட்டம், உணவு உரிமைச் சட்டம்,எட்டு ஐ.ஐ.டிக்கள், ஏழு ஐ.ஐ.எம்கள் முப்பது மத்திய பல்கலைகள் என உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்கியது, ரயில்வே துறையை லாபகரமாக்கியது, தனி நபர் வருமானத்தை 250% அதிகரித்தது உள்ளிட்டவற்றைக் கூறலாம்!

தற்போதைய அரசின் தவறான பொருளாதார போக்குகளை, தவறுகளை உடனுக்குடன் சிங் சுட்டிகாட்டி விமர்சிக்கிறார்!  இந்த 88 வயதிலும் தன்னை சுறுசுறுப்பாக, தெளிவாக வைத்துக் கொண்டிருக்கிறார் என்றால், அவர் பற்றற்றவராக வாழ்வதும் ஒரு காரணமாயிருக்கலாம்!

(பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணன்  அறம் ஆன்லைனில் பதிவு செய்தது.)

The post இந்த நூற்றாண்டின் அதிசய அரசியல்வாதி மன்மோகன் சிங்! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.