Punjab Assembly special session Archives - தேசிய முரசு - Desiya Murasu

மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டம் இயற்றிய பஞ்சாப் அரசைப் போல தமிழக அரசு சட்டம் இயற்றுமா? விவசாயிகளை பாதுகாக்குமா? தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி
மத்திய  பா.ஜ.க அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பஞ்சாப் சட்டப்பேரவையில் ஏகமனதாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருந்த பா.ஜ.க. கூட எதிர்த்து வாக்களிக்கவில்லை. பஞ்சாப் சட்டப்பேரவை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது ஐந்து மணிநேர விவாதத்திற்குப் பிறகு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கிற வகையில் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் மின்சார சட்டத்தில் மத்திய அரசு மேற்கொள்ளும் திருத்தங்களிலிருந்து பாதுகாக்கிற வகையிலும் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பஞ்சாப் சட்டப்பேரவையில் மசோதாக்களைத் தாக்கல் செய்து முதலமைச்சசர் அமரீந்தர் சிங் பேசும்போது, ‘விவசாயிகளுக்கு ஆதரவாக மசோதாக்கள் நிறைவேற்றியதால் ஆட்சியை இழக்க நேர்ந்தாலும் அதற்காகக் கவலைப்படப் போவதில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைக் காங்கிரஸ் அரசு ஒருபோதும் அனுமதிக்காது’ என்று குறிப்பிட்டார். விவசாயிகளின் நலனைக் காக்க மசோதாக்களை துணிவுடன் நிறைவேற்றிய காங்கிரஸ் முதலமைச்சர் அமரீந்தர் சிங் அவர்களை தமிழக காங்கிரஸ் சார்பாகப் பாராட்டுகிறேன், போற்றுகிறேன்.

பஞ்சாப் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா மூலம் ‘கோதுமை, நெல் ஆகியவற்றின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் கீழ் கொள்முதல் செய்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கவும், வேளாண் விளை பொருள்களைப் பதுக்குபவருக்கு தண்டனை விதிக்கவும்’ வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதரவு விலை பாதுகாக்கப்பட்டுள்ளது.

அரசமைப்பு சட்டத்தில் மாநில அரசின் பட்டியலிலுள்ள விவசாயம் குறித்தும், விவசாய விளைபொருள்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பறிக்கிற வகையிலும் சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. அப்படி சட்டம் இயற்றியது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவும் யோசித்துவருவதாக முதலமைச்சர் அமரீந்தர் சிங் கூறியுள்ளார். இதைப் போலவே ராஜஸ்தான் அரசும் விவசாயிகள் நலனை பாதுகாக்கத் தனி சட்டம் இயற்றியுள்ளது. இதன் மூலம் மத்திய அரசின் வேளாண் சட்டங்களிலிருந்து விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கிற வகையில் ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு செயல்பட்டிருக்கிறது.

எனவே, மத்திய வேளாண் சட்டங்களிலிருந்து விவசாயம் சம்பந்தப்பட்ட மாநில உரிமைகளையும், விவசாயிகள் பெற்றுவந்த குறைந்த பட்ச ஆதரவு விலையை உறுதி செய்யவும் பஞ்சாப், ராஜஸ்தான் மாநில அரசுகள் கொண்டுவந்துள்ள மசோதாக்களைப் போல தமிழக அரசும் உடனடியாக சிறப்புச் சட்டமன்றத்தை கூட்டி நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இதன்மூலம் மத்திய வேளாண் சட்டங்களைக் கண்மூடித்தனமாக ஆதரித்து தமிழக விவசாயிகளுக்குத் துரோகம் இழைத்ததற்குப் பிராயச்சித்தம் தேடியதாகவும் இருக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக முதலமைச்சர் இக்கோரிக்கையை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளின் உரிமைகளைக் காப்பாற்றுகிற வகையில் சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி புதிய விவசாய மசோதாவைத் தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இதை செய்யவில்லை என்றால் மத்திய பா.ஜ.க. அரசின் விவசாய விரோதச் சட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் தமிழக விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்பட்ட பழியை அ.தி.மு.க. அரசு சுமக்கவேண்டி வரும் என எச்சரிக்கிறேன்.

The post மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டம் இயற்றிய பஞ்சாப் அரசைப்  போல தமிழக அரசு சட்டம் இயற்றுமா? விவசாயிகளை பாதுகாக்குமா? தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

அக்டோபர் 19 ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவை கூட்டம்: விவசாய சட்டங்களுக்கு எதிராக நடவடிக்கை?
மத்திய அரசு கொண்டு வந்துள்ள, ஆபத்தான விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களுக்குப் பதிலடி தரும் வகையில், அக்டோபர் 19 ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்ட பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற 3 விவசாயச் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. புதிய விவசாயச் சட்டங்களை எதிர்த்து தமது அரசு போராடும் என காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் அமரீந்தர் சிங் ஏற்கனவே தெரிவித்துள்ளார். கூட்டாட்சிக்கு எதிரானது என்றும் அவர் விமர்சித்துள்ளார். ஆணிவேர் வரை சென்று சட்டரீதியாகவும். சட்டப்பேரவை வழியாகவும் போராடுவோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

சட்ட வழியாக என்றால், அரசியல் சாசனத்தின் 131 ஆவது பிரிவின் கீழ், 3 விவசாயச் சட்டங்களையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். இதுபோன்ற சட்டங்களைக் கொண்டு வர மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டா? அல்லது மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டா என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் விவாதம் நடைபெறலாம்.

மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை மாநில அரசு திரும்பப் பெற இயலாது. அந்த சட்டத்தைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்லவும் முடியாது. நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த சட்டம் நாடு முழுவதற்கும் பொருந்தும். எனவே, இந்த சட்டத்தை மாநில அரசால் நீக்க முடியாது. நாடாளுமன்றம் மட்டுமே அந்த சட்டங்களை நீக்க முடியும்.

அரசியல் சாசனத்தின் 7 ஆவது அட்டவணையின்படி, மத்திய அரசின் வரையறைக்குள்ளோ, மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்த வரையறைக்குள்ளோ வந்தால் மட்டுமே, நாடாளுமன்றம் சட்டம் இயற்ற முடியும்.

மாநில அரசின் அதிகார வரம்புக்குட்பட்ட விசயத்தில், மத்திய அரசு சட்டமியற்றினால், அது செல்லாது என மாநில அரசுகள் வாதாட முடியும். எனினும், மத்திய, மாநில அரசுகளின் கூட்டு வரையறைக்குள் குறிப்பிட்ட விசயம் வந்தால், சட்டம் இயற்ற முடியும் என மத்திய அரசும் வாதிட முடியும்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டம் (பிரிவு 14) மாநில வரையறைக்குள் வரும் என மாநில அரசுகளும், விவசாய உற்பத்தியின் வர்த்தகம் மற்றும் வணிகம் தொடர்பான விசயமாக இருப்பதால் (பிரிவு 33) இத்தகைய சட்டங்களை இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் வாதாட முடியும்.

மத்திய, மாநில அரசுகளின் இணைந்த வரையறைக்குள் வந்தால் மட்டுமே, மாநில அரசு அதே சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடியும். மத்திய அரசின் வரையறைக்குள் வரும் விசயம் என்றால், பஞ்சாப் அரசால் மத்திய அரசின் விவசாயச் சட்டங்களை மாற்றியமைக்க முடியாது.

உதாரணத்துக்கு, குற்றவியல் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகிவை மத்திய மற்றும் மாநில அரசுகளின் இணைந்த வரையறைக்குள் வருகிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் என்பது மத்திய அரசின் சட்டம். மாநில அரசும் அதிகார வரையறைக்குள் இருப்பதால், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டனையில் திருத்தம் கொண்டு வரமுடியும்.

இந்த விவகாரத்தில் பஞ்சாப் அரசு தனியாகச் சட்டத்தை இயற்ற முடியுமா?

மத்திய, மாநில அரசுகளின் இணைந்த அதிகார வரையறைக்குள் 3 விவசாய சட்டங்களும் வருகின்றன என்ற மத்திய அரசின் வாதத்தின்படி, பஞ்சாப் மாநில அரசு தனியாக சட்டமியற்ற முடியாது. எனினும், புதிய சட்டம் இயற்றப் போவதில்லை என்று பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த அவர், விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களுக்கும் ராம் நாத் கோவிந்த் எப்படி ஒப்புதல் அளித்தார் என தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒருவேளை பஞ்சாப் சட்டப்பேரவையில் விவசாயச் சட்டம் கொண்டு வரப்பட்டால், அதற்குப் பஞ்சாப் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என்பது சந்தேகமே. அரசியல் சாசனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தைப் பஞ்சாப் அரசு அணுகுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

வரும் 19 ஆம் தேதி பஞ்சாப் சட்டப்பேரவையில் என்ன நடக்கும்?

மத்திய அரசின் விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறவோ அல்லது அந்த சட்டங்களுக்கு முரணான சட்டங்களை இயற்றவோ பஞ்சாப் அரசால் முடியாது. சட்ட ரீதியாக போராடுவதற்குப் பேரவையில் முடிவுகள் எட்டப்படக்கூடும் என்றே தெரிகிறது.

The post அக்டோபர் 19 ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவை கூட்டம்: விவசாய சட்டங்களுக்கு எதிராக நடவடிக்கை? appeared first on தேசிய முரசு - Desiya Murasu.