Pranab Mukherjee Archives - தேசிய முரசு - Desiya Murasu

பண்டித நேருவின் நூலை வெளியிட்டு புகழ்மாலை சூட்டியவர் பிரணாப் முகர்ஜி!
நவ இந்தியாவின் சிற்பி ஜவஹர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அரிய நிழற்ப்படங்களுடன் முதலில் ஆங்கிலத்திலும், பிறகு தமிழிலும் நூலை வெளியிட வேண்டுமென முடிவு செய்தேன். அதற்காக 2007 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தலைநகர் தில்லியில் நேரு நினைவு நூலகம் மற்றும் இந்திய அரசின் புகைப்படப் பிரிவின் மூலமாக 7,000 படங்களை விலை கொடுத்து வாங்கி சேகரித்தேன். இதில் 700 அரிய நிழற்படங்களைக் கொண்டு நவீன வடிவமைப்பில் Jawaharlal Nehru – An Illustrated Biography என்ற நூலை எழுதி, தயாரித்தேன்.

அந்நூலுக்கு அன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் அணிந்துரை எழுத வேண்டுமென்று விரும்பினேன். இதற்காக அவரை புதுச்சேரி மாநில முதலமைச்சர் திரு. வி. நாராயணசாமி அவர்களுடன் சேர்ந்து சந்தித்து நூலின் பிரதியை வழங்கினேன். அந்நூலை முழுவதும் பார்த்த 20 நிமிடங்களுக்குப் பிறகு ‘இந்நூல் மிகவும் அற்புதமாக வெளிவந்திருக்கிறது. அணிந்துரையும் எழுதுகிறேன், நூலை வெளியிடதயாராக இருக்கிறேன்’ என்று கூறினார். அதன்படி அவர் எழுதிய அணிந்துரையுடன் நூல் வெளியீட்டு விழா 27 மே 2018 அன்று தலைநகர் தில்லியில் உள்ள கான்ஸ்டிட்யூஷன் கிளப்பில் நடைபெற்றது.

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நூல் வெளியிட்டு விழாவில் பங்கேற்றவர்கள்.

இந்நூலை குடியரசு முன்னாள் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி வெளியிட, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், முன்னாள் துணை குடியரசுத் தலைவர் டாக்டர் அமீத் அன்சாரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்து குழும தலைவராக இருந்த திரு. என். ராம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் திரு. ப. சிதம்பரம், திரு. ஜெய்ராம் ரமேஷ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் திரு. டி. ராஜா மற்றும் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர்.

என் வாழ்க்கையில் அன்று மறக்க முடியாத நாளாகும். இந்நூலை வெளியிடுவதற்கு முன்வந்த திரு. பிரணாப் முகர்ஜி அவர்களை என்றும் நன்றியோடு நினைவு கூர்வேன். அதேநேரத்தில், எனது ஆங்கில நூலுக்கு அவர் எழுதிய அணிந்துரையின் தமிழாக்கத்தை கீழே வழங்கியிருக்கிறேன். அதில், ஜவஹர்லால் நேரு குறித்து வெளிவந்த நூல்களிலேயே கருத்து ரீதியாகவும், நிழற்படத்தின் அடிப்படையிலும் இதுவரை இன்நூலைப் போல வெளிவந்ததில்லை என்று அவர் கூறியது என் வாழ்க்கையில் மறக்க முடியாத அங்கீகாரமாக கருதுகிறேன். திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள் வழங்கிய அணிந்துரையின் தமிழாக்கம் :-

‘பாரத ரத்னா’ மேதகு பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு நூலை வழங்குகிறார்     ஆ. கோபண்ணா

” இந்திய தேசம் பெற்றுள்ள உயரிய தலைவர்களில் பண்டிட் ஜவஹர்லால் நேருவும் ஒருவர். அவர் மிகச்சிறந்த தொலைநோக்குப் பார்வை கொண்டவர்.உலக அரங்கில் முக்கியமான பங்கினை ஆற்றக்கூடிய வலிமைமிக்க, ஒற்றுமையான ஜனநாயக இந்தியாவைப் பற்றி அவர் கனவுகண்டார். வறுமை ஒழிப்பிற்கும், இளைஞர்களிடையே அறிவியல் மனப்பாங்கை வளர்ப்பதற்குமென விதியை எதிர்கொள்ளும் ஒரு வாய்ப்பினை (Tryst with destiny)  அவர் நமக்கு அளித்தார்.

மாணவனாக இருந்த நாள்களில் இருந்தே எனக்கு அகத்தூண்டுதல் அளிப்பவவராக அவர் இருந்துவந்தார். அரசியல், தேசியம், உலக வரலாறு, வாழ்க்கைத் தத்துவம், இவை பற்றிய அவரது எழுத்துக்கள் என்னுடைய பொது வாழ்விற்கும், அரசியல் வாழ்விற்குமான மனநிலையை உருப்பெறச் செய்தன. நேருவிடமிருந்தும், அவருடைய போதனைகளிலிருந்தும் கற்றுக் கொண்டு, நம்முடைய இளைஞர்கள் இந்தியாவின் பெருமை மிகுந்த வரலாற்றை நன்கு அறிந்தவர்களாக ஆக முடியும் என்று நான் எப்போதும் நம்புகிறேன்.

முன்னாள் குடியரசு துணைத்தலைவர் டாக்டர் ஹமீத் அன்சாரி அவர்களுக்கு நுலை வழங்கிறார் ஆ. கோபண்ணா

காங்கிரஸ் தலைவர் ஆ.கோபண்ணா அவர்கள் உருவாக்கியிருக்கும் ‘ஜவஹர்லால் நேரு – விளக்கப்படங்களுடன் கூடிய வாழ்க்கை வரலாறு’ எனும் நூல் பண்டித நேரு அவர்களின் கொள்கைகள், அவரது தலைமை, மனித குலத்திற்கு முழுமையான அவரது அர்ப்பணிப்பு, அவரது தியாகங்கள், நவீன இந்தியாவின் அடித்தளத்தை அமைப்பதற்கு தடுமாற்றமில்லாத அவரது அர்ப்பணிப்பு ஆகியவை பற்றிய முழுமையான காட்சியை அளித்து அனைத்து வாசகர்களுக்கும் சத்தும், சாறும் உள்ள ஒரு வழிகாட்டியாக சேவைபுரியும் என்று நான் நம்புகிறேன்.

பொதுவாகவே, விளக்கப்பட வாழ்க்கை வரலாற்று நூல்கள் படங்கள் பற்றிய ஆழமும், விரிவும் உள்ள விளக்கங்களை அளிக்கத் தவறி விடுகின்றன. இதன் காரணமாக படிப்பவர்களுக்கு தெளிவற்ற தகவல்களே கிடைக்கின்றன. ஆனால், இந்தப் புத்தகம் படங்கள், அதற்கான விளக்கங்கள் ஆகிய இரண்டிலுமே ஊக்கம் தளராத வகையில் சிறப்புற அமைக்கப்பட்டு, வரலாற்று முக்கியத்துவம் உடைய கால வரிசை முறைப்படியான படத்தொகுப்பையும், நன்கு ஆராயப்பட்டு, செயல்திறத்துடன் தெளிவாகப் பேசக்கூடிய கட்டுரைகளையும் கொண்டதாகவும், பண்டிட் நேருவின் வாழ்க்கை, அரசியல் பயணம் ஆகியவை பற்றிய நுணுக்கமான விவரங்களையும் கொண்டதாகவும் அமைந்திருக்கிறது.

ஜவஹர்லால் நேருவின் ஆரம்பகால வாழ்க்கையிலிருந்து திருப்புமுனையாக அமைந்த அவரது அரசியல் வெற்றிகள் வரை தனிச் சிறப்புமிக்க படங்கள், கவனமாக கைத்திறத்துடன் எழுதப்பட்டிருக்கும் விவரக்குறிப்புகள் ஆகியவற்றின் ஊடாக வரலாற்றின் அரிய நிகழ்வுகளுக்குள் வாசகர்களை இந்தப்புத்தகம் அழகுற அழைத்துச் செல்கிறது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியா அவர்களுக்கு நூலை வழங்குகிறார் ஆ. கோபண்ணா

நேருவின் ஆரம்பகால வாழ்க்கையிலிருந்து (நவம்பர், 1889) தொடங்கி அவரது இறுதிப்பயணம் வரை இந்த நூல் பத்து வாழ்க்கைக் கட்டங்களைக் கொண்டதாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பண்டிட்ஜியின் வரலாற்றுப் பதிவுகள் நிறைந்த வாழ்க்கை இதில் 33 தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளது. நேருவின் சிந்தனைகளான மதச்சார்பின்மை, வெளிநாட்டுக்கொள்கை, அரசியல் அமைப்பை உருவாக்குவதில் அவரது பங்கு ஆகியவை பற்றிப் பேசும்பகுதிகள் பெருந்தகைமையுடன் சொல்லப்பட்டிருப்பதை நான் மெச்சுகிறேன்.அறிவியலைப் பரப்புவதில் நேரு கொண்டிருந்த நம்பிக்கை, சுதந்திரமான இளைய இந்தியாவை தொழில்நுட்ப வளர்ச்சிப்பாதையில் கொண்டு செலுத்துவதற்கு அவருக்கிருந்த விடா முயற்சி ஆகியவற்றிற்கு சமமான உத்வேகம் தரப்பட்டுள்ளது.

தேசத்தில் அறிவியல் முன்னேற்றத்தைக் கொண்டு வருவது என்ற தன் இலக்கை அடைவதற்கு நேரு ஒரு பிரதமராக எப்படியெல்லாம் முயன்று உழைத்தார் என்பதை இந்தப்புத்தகம் சொல்வன்மையோடும், படங்கள் வாயிலாகவும் வெளிக் கொணர்ந்துள்ளது.

பக்ரா நங்கல் அணை கட்டப்பட்ட போது அந்த இடத்திற்கு நேரு தனிப்பட்ட முறையில் சென்றதையும், ஆரம்பகட்ட உருவாக்கத்தில் இருந்து வந்த பல்வேறு அறிவியல் அமைப்புகளுக்கும் அவர் சென்று வந்த படங்களையும் பதிவிட்டிருப்பதன் மூலம் இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் நினைவு உரிய விதத்தில் போற்றப்பட்டிருப்பதோடு, ஒரு அரசியல் தலைவராக ஒரு தனிப்பாங்குடன் நேரு செயலாற்றியதில் நம்முடைய ஆர்வத்தை மீண்டும் எழுப்புகிறது..

அனைத்திற்கும் மேலாக, நேரு மறைந்தபோது தேசத்தின் மன உணர்வுகளை இதுவரை எந்த ஒரு புத்தகமும் செய்திராத அளவிற்கு சிறப்பாக இந்த புத்தகம் சிறைபிடித்திருக்கிறது. நேரு உடல்நலக்குறைவு அடைந்தது, உடல்நலம் தேறி விடுமுறையைக் கழிப்பதற்காக சென்றது, உயிரிழந்தது, இறுதிச்சடங்கு, அவரது சாம்பல் இந்தியா முழுவதும் வலம் வந்தது ஆகிய ஒன்றன்பின் ஒன்றாக படிப்படியாக வளர்ச்சி பெற்ற படிநிலைகளைப் பற்றிய நேர்முக வர்ணனைகளை . படங்களும் அவற்றோடு இணைந்திருக்கும் உரைகளும் வழங்குகின்றன.

என்னைப் பொறுத்தவரை இந்தப் புத்தகம் பழைய நினைவுகளின் பயணம். எளிய வாழ்க்கை வாழ்ந்து, ஏழைகள், விளிம்புநிலை மக்கள் ஆகியோருக்கான சமத்துவம், ஒப்புரவு என்ற ஒற்றை இலக்கிற்காக வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட பண்டித நேரு போன்ற உன்னதமான ஆளுமைகளின் காலத்தை இந்தப் பதிவுகள் எனக்கு நினைவூட்டுகின்றன. ஒரு அரசியல் மெய்ஞானியான அவர் வகுப்புவாதத்திற்கு எதிராகத் துணிவுடன் நின்றார்.

போற்றத் தகுந்த இந்தப்பணியைச் செய்து அதன் மூலம் இத்தகைய நினைவுகளைக் கிளர்ந்தெழ வைத்ததற்கு திரு. கோபண்ணாவிற்கு எனது நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப்புத்தகம் பண்டித நேரு பயணித்த பாதையைப் பின்பற்றி நமது இளைஞர்கள், தேச நிர்மாணத்திற்கு தங்களது பங்களிப்பை செய்வதற்கு இந்தப் புத்தகம் ஊக்கம் அளிக்க வேண்டும் என்பது என் அவா.”

பிரணாப்முகர்ஜி

3 நவம்பர், 2017
10 ராஜாஜி மார்க், புதுதில்லி – 110 001.

The post பண்டித நேருவின் நூலை வெளியிட்டு புகழ்மாலை சூட்டியவர் பிரணாப் முகர்ஜி! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

அரசியல் சாணக்கியர் பிரணாப் முகர்ஜி
இந்தியாவின் 13-வது குடியரசுத் தலைவரும், நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா பெற்ற மேதகு பிரணாப் முகர்ஜி அவர்கள் மறைவு செய்தி நாட்டு மக்கள் அனைவரையும் துக்கத்திலும், துயரத்திலும் ஆழ்த்தியது. பொதுவாழ்விலும், அரசியலிலும் ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுமையுடன் விளங்கிய பிரணாப் முகர்ஜி மறைந்து விட்டார். அவரது மறைவு தேசத்திற்கே மிகப்பெரிய பேரிழப்பாகும்.

இந்தியாவின் குடியரசுத் தலைவராக மொத்தம் பதிவான வாக்குகளில் 70 சதவிகிதம் பெற்று எதிர்த்து போட்டியிட்ட பி.ஏ. சங்மாவை விட 4 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடிய பெருமை பிரணாப் முகர்ஜிக்கு உண்டு. காங்கிரஸ் கட்சியால் பரிந்துரை செய்யப்பட்ட வேட்பாளராக இருந்தாலும், மாற்று கட்சியினரின் ஆதரவைப் பெருமளவில் பெற்றவர். மலைவாழ் மக்கள் அதிகம் வாழ்கிற மாநிலங்களில் கூட பி.ஏ. சங்மாவை விட அதிக வாக்குகளை பெற்றவர். ஐக்கிய முற்போக்கு கூட்டணியைத் தவிர, பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா போன்ற கட்சிகளும் ஆதரவு வழங்கியதிலிருந்து குடியரசுத் தலைவர் பதவிக்கு அவரது தகுதி உறுதி செய்யப்பட்டது. இதுதவிர, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினரும் இவரை ஆதரித்து வெற்றியை உறுதி செய்தனர்.

பிரணாப் முகர்ஜி வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், தொடக்கத்தில் இருந்தே கருத்து வேறுபாடு கொண்டிருந்த மம்தா பேனர்ஜி கூட கடைசி நேரத்தில் வேறு வழியின்றி பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

1936 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி பிறந்த பிரணாப் முகர்ஜி, 1969 ஆம் ஆண்டில் தமது 34 ஆவது வயதில் அரசியல் பிரவேசம் செய்தார். அன்று மிட்னாபூர் தொகுதி இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட வி.கே. கிருஷ்ண மேனனுக்கு தேர்தல் பிரச்சாரக் குழு மேலாளராக பணியாற்றியவர் பிரணாப் முகர்ஜி. அந்த தேர்தலில் அவர் ஆற்றிய பணியை கூர்ந்து கவனித்த இ;ந்திரா காந்தி, அவரை காங்கிரஸ் கட்சியில் சேர்த்துக் கொண்டார். அதே ஆண்டில் அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பதவி ஏற்பு நிகழ்ச்சியின் ஓவியத்தை காட்டி விளக்குகிறார் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி.

அந்த காலக் கட்டத்தில் நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி உரையாற்றும் போது, பிரதமர் இந்திரா காந்தி அவையினுள் நுழைந்து தம் இருக்கையில் அமர்ந்தார். இளம் உறுப்பினர் ஒருவர் சிக்கலான பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து மிக எளிய முறையில், ஆனால் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தார். பிரதமர் இந்திராவிற்கு அந்த பேச்சில் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. தலையை உயர்த்தி, வியப்புடன் அவரைப் பார்த்தார். உரையை முடித்தவுடன் அவருக்கு பிரதமரிடம் இருந்து அழைப்பு வருகிறது. அன்று ஏற்பட்ட சந்திப்பிற்குப் பிறகு ஆற்றல்மிக்க அவரது அரசியல் பிரவேசம் தொடங்கி விட்டது. அன்று முதல் பிரணாப் முகர்ஜியின் அரசியல் வாழ்வில் உயர்வு, வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் விரிவடையத் தொடங்கியது. அந்த வகையில் பிரதமர் இந்திரா காந்தியின் கவனத்தையும், மதிப்பையும், எடுத்த எடுப்பிலேயே கவர்ந்தவர் தான் பிரணாப் முகர்ஜி.

பிரதமர் இந்திரா காந்தியுடன் பிரணாப் முகர்ஜி

1969 முதல் அன்னை இந்திரா காந்தியின் நம்பிக்கைக்குரியவராக விளங்கியவர் பிரணாப் முகர்ஜி. 1973-லேயே மத்திய துணை அமைச்சராகவும், பிறகு 1982 இல் இருந்து 84 வரை நிதியமைச்சராகவும் இருந்தவர் பிரணாப் முகர்ஜி. பிரதமர் இந்திரா காந்திக்கு உற்ற துணையாக, குறிப்பாக நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட 1975 முதல் 1977 வரை உடனிருந்து உரிய ஆலோசனைகளை வழங்கியவர்.

அன்று ஜெயபிரகாஷ் நாராயனண் தலைமையில் நாட்டின் பல பகுதிகளில் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வந்தன. குறிப்பாக பீகார், குஜராத் மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை பதவி விலகக் கோரி மாணவர்களை தூண்டி விட்டு ஜனநாயகத்திற்கு விரோதமாக போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதையொட்டி, நாட்டின் பல பகுதிகளில் கலவரங்கள் வெடித்தன. இத்தகைய சோதனையான ஒரு காலக்கட்டத்தில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது, பிரதமர் இந்திரா காந்தியுடன் உறுதியாக நின்றவர் பிரணாப் முகர்ஜி.

பிரதமர் ராஜீவ்காந்தியுடன் பிரணாப் முகர்ஜி

1991 தேர்தல் முடிந்து பிரதமராக பொறுப்பேற்க இருக்கிறார் என்று நாட்டு மக்கள் எதிர்பார்த்த வேளையில், ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளால் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். அந்த தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருந்த பி.வி. நரசிம்மராவ், பிரதமராக வர வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர்கள் விரும்பினார்கள். அதன் அடிப்படையில் பிரதமர் பொறுப்பை ஏற்ற பி.வி. நரசிம்மராவ் அவர்களுக்கும், பிரணாப் முகர்ஜிக்கும் நல்லுறவு இருந்தது. அந்த அடிப்படையில் திட்டக் குழுவின் துணைத் தலைவராக பிரணாப் முகர்ஜி நியமிக்கப்பட்டார். 1991 இல் ராஜீவ்காந்தி படுகொலைக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவராக சீதாராம் கேசரி 1996 இல் பொறுப்பேற்றார். அந்த காலக் கட்டங்களில் கட்சி பலகவீனமடைவதை பார்த்த பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூத்த தலைவர்கள், 1998 இல் அன்னை சோனியா காந்தியை சந்தித்து காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அன்று காங்கிரஸ் பேரியக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தலைமைப் பொறுப்பை அன்னை சோனியா காந்தி ஏற்றுக் கொண்டார். 1998 முதல் 2004 வரை காங்கிரஸ் கட்சியில் அவர் ஆற்றிய கடமைகள் ஏராளம். அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுவில் நீண்ட நெடுங்காலம் பதவி வகித்த பெருமை இவருக்கு உண்டு. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, மத்திய தேர்தல் குழு, ஆட்சிமன்றக் குழு, எதிர்கால பிரச்சினைகள் குறித்த குழு என அனைத்து குழுக்களிலும் பிரணாப் முகர்ஜி அங்கம் வகித்தவர்.

அன்னை சோனியா காந்தி, பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் ஆகியோருடன் பிரணாப் முகர்ஜி

அன்னை சோனியா காந்தியின் தலைமையில் கடுமையான உழைப்பிற்குப் பிறகு 4 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி என்கிற நிலையில் இருந்து 14 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிற நிலை ஏற்பட்டது. அதேபோல, 2004 மக்களவை தேர்தலில் அன்னை சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் வெற்றி பெற்று டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்தது. அப்போது பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அடுத்த இரண்டாவது நிலையில் முக்கிய பொறுப்புகளை ஏற்று செயல்பட்டவர் பிரணாப் முகர்ஜி. அப்போது 2004 முதல் 2006 வரை பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், 2006 முதல் 2009 வரை வெளியுறவுத்துறை அமைச்சராகவும், 2009 முதல் 2012 வரை நிதியமைச்சராகவும் பணியாற்றியவர் பிரணாப் முகர்ஜி. மேலும் பல்வேறு மத்திய அமைச்சக குழுக்களின் தலைவராகவும் திறம்பட பணியாற்றியவர். மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவராக பொறுப்பேற்று பாராளுமன்ற விவாதங்களில் தனி முத்திரையை பதித்தவர். அதன்மூலம் சிறந்த பாராளுமன்றவாதி என்கிற விருதைப் பெற்றவர்.  அதுமட்டுமல்லாமல், மிகச் சிறந்த நிர்வாகி என்ற விருதும் 2011 இல் அவருக்கு வழங்கப்பட்டது.

தமது 34 வயதில் அகில இந்திய அரசியலில் அடியெடுத்து வைத்த பிரணாப் முகர்ஜி, மிகச் சிறந்த அறிஞராக, நிர்வாகியாக, நிபுணராக, பேச்சாளராக, மதியூகியாக நாளும் வளர்ந்து உயர்நிலைக்கு வந்தார். சிக்கல்கள் நிறைந்த பிரச்சினையில் பேச்சுவார்த்தைகளை ராஜதந்திர நுணுக்கங்களுடனும், மேதமையுடனும் அவர் கையாண்ட அணுகுமுறை அனைத்து தரப்பினராலும் போற்றி பாராட்டப்பட்டது.

கடந்த 2007-08 ஆம் ஆண்டுகளில், இந்திய அரசியலையே புரட்டி போட்டு விடும் என்று அச்சப்பட வைத்த இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற அன்னை சோனியா காந்தியின் வழிகாட்டுதலில், பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசனையைப் பெற்று புயல் வேகத்தில் செயல்பட்ட பிரணாப் முகர்ஜியை அன்று பாராட்டாதவர்களே இருக்க முடியாது.

ராகுல்காந்தியுடன் பிரணாப் முகர்ஜி

உள்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் தொடர்பு கொண்டு விளக்கம் அளித்த விவேகம், அணுசக்தி ஒப்பந்தத்துடன் தொடர்பு கொண்ட நாடுகளுக்கு அவர் அளித்த நம்பிக்கை, அமெரிக்க நாடாளுமன்றத்தில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை அவர் காட்டிய கவனம், கரிசனம், கண்காணிப்பு இவை ராஜதந்திர வரலாற்றில் வைர வரிகளாக இடம் பெறத்தக்கவை. ஜப்பான், சுவிட்சர்லாந்து, பிரிட்டன், அமெரிக்கா என பறந்து பறந்து சென்று சூறாவளியாய் சுழன்று பணியாற்றியதை மறக்க முடியாது.

கடந்த 2009 நவம்பர் மாதம் மும்பையில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுடன் உள்ள உறவு, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு பிறகு, இலங்கை அரசோடு காட்ட வேண்டிய புதிய அணுகுமுறை இவற்றையெல்லாம் வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற முறையில் விழிப்போடும், லாவகமாகவும் பிரணாப் கையாண்டு வந்ததை நாடு உன்னிப்பாக கவனித்து பாராட்டியது.

தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி அவர்களுடன் பிரணாப் முகர்ஜி

அன்று இலங்கையில் நடந்த இறுதிப் போரில் இந்திய அரசு ஆயுத உதவி செய்ததாக பரவலான குற்றச்சாட்டை தமிழகத்தில் உள்ள ஒருசில கட்சிகள் எழுப்பியது. அதுகுறித்து  முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்களை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துவிட்டு, வீட்டிற்கே வெளியே செய்தியாளர்களிடம் பேசும் போது, ‘இலங்கை அரசுக்கு இந்திய அரசு எந்த வகையான ஆயுதங்களையும் வழங்கவில்லை. வழங்க வேண்டிய அவசியமும் இல்லை. யாருக்கும், எவருக்கும் தெரியாமல் ஒரு நாடு இன்னொரு நாட்டிற்கு ஆயுத உதவிகளை செய்ய முடியாது. அப்படி செய்வதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது. அரசியல் உள்நோக்கம் கொண்டது’ என்று தெளிவாக மறுத்து பேசியவர் பிரணாப் முகர்ஜி. அதுமட்டுமல்லாமல், இந்த மறுப்பையே மாநிலங்களவையிலும் பதிவு செய்தார். அந்த மறுப்பு உண்மைக்கு புறம்பானதாக இருந்தால் ஆயுதம் வழங்கியதாக கூறுகிறவர்கள் அவர்மீது உரிமை பிரச்சினை கொண்டு வந்திருக்கலாம். ஆனால், ஆயுதங்கள் வழங்கவில்லை என்ற உண்மையை அன்று உலகிற்கு உணர்த்தி, தமிழகத்தில் உள்ள சில கட்சிகளின் அவதூறு பிரச்சாரத்தை முறியடித்தவர் பிரணாப் முகர்ஜி.

பிரதமர் மன்மோகன்சிங் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில், நிதியமைச்சக பொறுப்பும் பிரணாப் முகர்ஜியிடம் ஒப்படைக்கப்பட்டது. மந்திரி சபை என்பது கூட்டுப் பொறுப்பில் இயங்குவது என்பதால், பிரதமர் மன்மோகன்சிங் சிகிச்சை பெறும் வரையில் இடைக்கால ஏற்பாடு என்று எதுவும் இல்லை என்பது தெளிவாக்கப்பட்டது. அக் காலக்கட்டங்களில் நிர்வாகத்தை சிக்கலின்றி நடத்திச் செல்லும் பொறுப்பை, மந்திரிசபை எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை முன்னதாகவே பிரதமர் மன்மோகன்சிங் வகுத்து வைத்திருந்தார். என்றாலும், மத்திய அமைச்சரவையில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் என்ற முறையில் அரசியல் விவகாரக் குழுவிற்கு பிரணாப் முகர்ஜி தலைமை தாங்கினார். அதன்மூலம் மற்றவர்களுடன் கலந்து முக்கியமான முடிவுகளை எடுக்கும் பொறுப்பை அவர் நிறைவேற்றினார்.

பிரணாப் மீது சுமத்தப்பட்ட நிதித்துறை சாதாரணமானதன்று. உலகப் பொருளாதார நிலவரத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் காரணமாக, இந்திய பொருளாதாரம் சேதமடைந்து விடக் கூடாது என்பதால் 24 மணி நேரமும் விழிப்புடன் செயல்பட வேண்டிய நிலை, பல்வேறு தரப்பில் ஆலோசனைகள், விவாதங்கள், கருத்து கேட்புகள், நாடாளுமன்றப் பணிகள் என அவர் ஆற்றிய பணிகள் அனைவரையும் பிரமிக்க வைத்ததன.

எவராலும் வெற்றி கொள்ள முடியாத நுட்ப அறிவும், சாமர்த்தியமும், பேச்சுத் திறனும் கொண்டவர் என்பதால் இடதுசாரிகளானாலும், பா.ஜ.க. போன்ற வலதுசாரிகளானாலும் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பு பிரணாப் முகர்ஜியிடமே வழங்கப்பட்டது. பிரணாப் முகர்ஜி அவர்களை பொறுத்தவரை இந்திரா காந்தி, ராஜிவ்காந்தி, பி.வி. நரசிம்மராவ், மன்மோகன்சிங் ஆகிய நான்கு பிரதமர்களிடம் பணியாற்றிய பெருமை இவருக்கு உண்டு.

இத்தகைய பெருமைகளையும், சிறப்புகளையும் பெற்றவரை இந்திய அரசியலில் காண்பது மிகமிக அரிதாகும். இத்தகைய நீண்ட நெடிய பாரம்பரியப் பின்னணியை அங்கீகரிக்கிற வகையில் ஜூலை 2012 இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு குடியரசுத் தலைவர் பதவிக்கு பிரணாப் முகர்ஜியை தேர்வு செய்து பெருமைப்படுத்தியது.

ஆனால், 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் பேரியக்கத்தின் அனைத்து நிலைகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய உயர்ந்த மனிதரான பிரணாப் முகர்ஜி, குடியரசுத் தலைவர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு 2018 இல் நாகபுரியில் ஆர்.எஸ்.எஸ். நடத்திய கூட்டத்தில் பங்கேற்றது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காங்கிரஸ் கட்சியினரின் வருத்தத்திற்கும், விமர்சனத்திற்கு ஆளாக வேண்டிய நிலை பிரணாப் முகர்ஜிக்கு ஏற்பட்டது. ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பங்கேற்றதை அவர் தவிர்த்திருக்க வேண்டும் என்று என்னைப் போன்ற லட்சக்கணக்கான காங்கிரஸ் கட்சியினரும் நினைத்தார்கள்.

இந்தப் பின்னணியில் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது பிரணாப் முகர்ஜிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

இந்தியாவின் வளர்ச்சியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அளப்பரிய பங்காற்றிய மகத்தான மனிதரை அற்புதமான சுமைதாங்கியை, அரசியல் சாணக்கியரை பன்முகத்தன்மை கொண்ட திரு. பிரணாப் முகர்ஜி அவர்களுடைய மறைவு எந்த வகையிலும், எவராலும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். இவரை இந்திய அரசியலின் சாணக்கியர் என்றே அழைப்பார்கள்! அவரது மறைவிற்கு தேசிய முரசு டாட் காம் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

The post அரசியல் சாணக்கியர் பிரணாப் முகர்ஜி appeared first on தேசிய முரசு - Desiya Murasu.