Pongal Festival 2021 Archives - தேசிய முரசு - Desiya Murasu

தமிழ் உணர்வையும், தமிழர் கலாச்சாரத்தையும் நசுக்க நினைப்பது நாட்டுக்குச் செய்யும் கேடு : பா.ஜ.க.வுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை
ஜல்லிக்கட்டுப் போட்டி முடிந்ததும் டெல்லி திரும்ப மதுரை விமான நிலையத்துக்கு ராகுல் காந்தி வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

ஜல்லிக்கட்டைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இன்று வந்தேன். அனைவருக்கும் மகிழ்ச்சியான பொங்கல் வாழ்த்துகள். ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்த்தேன். ஜல்லிக்கட்டால் மாடுகளுக்கு ஆபத்து வரும் என்று நிறையப் பேர் சொன்னார்கள். இன்று நான் நேரில் பார்க்கும் போதுதான் தெரிந்தது. எந்த ஒரு மாட்டுக்கும் காயம் ஏற்படவில்லை. மாறாக, மாடு பிடி வீரர்களுக்குத் தான் காயம் ஏற்பட்டது. யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், இன்னும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நான் எதற்கு இங்கு வந்தேன் என்றால், இன்று டெல்லியில் ஆட்சியில் இருப்பவர்கள் நம் நாட்டின் கலாச்சாரங்களை அழிக்க முயன்று வருகிறார்கள். தமிழர்கள் உணர்வுகளைத் தடுக்க முடியும் என்று நம்புகிறார்கள். தமிழர்களின் தமிழ் மொழியை நசுக்கப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு ஒரு செய்தி சொல்லவே இங்கு வந்துள்ளேன். முதலாவது, தமிழ் உணர்வை யாராலும் தடுக்க முடியாது. இரண்டாவது, தமிழ் உணர்வைத் தடுக்க நீங்கள் முயன்றால், அது நம் நாட்டுக்கு நீங்கள் செய்யும் கேடு. தமிழ் என்பது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் கொண்டது. அது நம் நாட்டுக்குத் தேவை.

இவர்களின் இது போன்ற எண்ணங்களுக்கு நான் எதிரானவன். குறிப்பிட்ட சிந்தனைகள், குறிப்பிட்ட மொழி, குறிப்பிட்ட கருத்து நம் நாட்டில் உள்ளது. ஏராளமான மொழிகளும், ஏராளமான சிந்தனைகளும் இருப்பதே நமது பலம்.

நான் பலமுறை தமிழகத்துக்கு வந்திருக்கிறேன். இன்னும் வருவேன். தமிழக மக்களிடம் நான் நிறைய கற்றுள்ளேன். கடந்த காலத்தில் நிறைய அவர்கள் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார்கள். நாட்டை எப்படி வழி நடத்த வேண்டும் என்றும் அவர்கள் எனக்குக் காட்டியிருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

அரசாங்கம் விவசாயிகளைப் புறக்கணிக்க மட்டும் செய்யவில்லை. அவர்களை அழிக்கவும் பார்க்கிறது. இதில் வித்தியாசத்தைப் பார்க்க வேண்டும். விவசாயிகளைக் கண்டுகொண்டால் அவர்கள் மீது அக்கறை இருக்கிறது என்று அர்த்தம். அவர்களைப் புறக்கணித்தால் அழிக்க முயல்கிறார்கள் என்று அர்த்தம். விவசாயிகளை அழித்துவிட்டு அவர்களது 2 அல்லது 3 நண்பர்களுக்கு உதவ நினைக்கிறார்கள்.

விவசாயிகளிடம் இருப்பதை எல்லாம் பறித்து, அவர்கள் நண்பர்களிடம் கொடுக்கப் பார்க்கிறார்கள். விவசாயிகளின் நிலத்தை எடுக்கப் பார்க்கிறார்கள், விவசாயிகளின் உற்பத்தியை எடுக்கப் பார்க்கிறார்கள். விவசாயிகளை இந்த அரசு அலட்சியப்படுத்துகிறது என்பது சிறிய வார்த்தை. விவசாயிகளை அழிக்கப் பார்க்கிறார்கள் என்பது தான் சரியான வார்த்தை.

விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு. விவசாயிகளை நசுக்கிக் கொண்டே இருந்தால், நாடு வளர்ச்சி அடையுமா? இதை எங்காவது வரலாற்றில் பார்த்திருப்போமா? எப்போது இந்திய விவசாயிகள் பலவீனப்படுகிறார்களோ, இந்தியாவும் பலவீனப்படும்.

கொரோனா காலத்தில் சாதாரண மக்களுக்கு நீங்கள் உதவவில்லை. நீங்கள் யாருக்கான பிரதமர்? நீங்கள் இந்திய மக்களுக்குப் பிரதமரா? அல்லது குறிப்பிட்ட 2 அல்லது 3 தொழிலதிபர்களுக்கு மட்டும் பிரதமரா?

கடைசியாக ஒரு கேள்வி. நம் எல்லையில் சீனா என்ன செய்து கொண்டிருக்கிறது? நம் நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் சீனாவைப் பற்றி ஏன் இதுவரைக்கும் பிரதமர் வாய் திறக்காமல் இருக்கிறார்.

போராடும் விவசாயிகளை நினைத்துப் பெருமைப்படுகிறோம். நாங்கள் முழு ஆதரவைக் கொடுத்து வருகிறோம். பஞ்சாபில் யாத்திரை மேற்கொண்ட போது, இந்த பிரச்சினையை எழுப்பினேன். தொடர்ந்து போராடி வருகிறோம். நான் சொல்வதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். 3 வேளாண் சட்டங்களையும் இந்த அரசு திரும்பப் பெற வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும்.

இவ்வாறு ராகுல் காந்தி பேட்டியளித்தார்.

The post தமிழ் உணர்வையும், தமிழர் கலாச்சாரத்தையும் நசுக்க நினைப்பது நாட்டுக்குச் செய்யும் கேடு : பா.ஜ.க.வுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

தை பிறந்தால் வழி பிறக்கும். தை பிறந்து விட்டது. வழியும் பிறக்கப் போகிறது! தலைவர் கே.எஸ்.அழகிரி பொங்கல் வாழ்த்து செய்தி!
தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் தனிப்பெரும் விழாவாகப் பொங்கல் பண்டிகை திகழ்கிறது. உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.

உழைக்கும் மக்களின் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.

சாதி, மதங்களைக் கடந்து தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதுதான் நம் மண்ணின் சிறப்பு. இத்தகைய உணர்வு நம் ரத்தத்துடன் ஊறியதால் தான், தமிழனை சாதியால், மதத்தால் பிரிக்க நினைக்கும் சக்திகள் காணாமல் போய்விடுகின்றன.

பொங்கலுக்கு முந்தைய நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ‘பழையன கழிந்து புதியது புகும்’ நாளாகப் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தேவையில்லாத பொருட்களை வெளியே தூக்கி எறிவது வழக்கம். அதேபோன்று தேவையற்ற ஆட்சிகளை வெளியே தூக்கி எறிய இந்த போகித் திருநாளில் உறுதி எடுப்போம்.

விவசாயிகள் தங்கள் உரிமைக்காக கடும் குளிரிலும் டெல்லி வீதிகளில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பொங்கல் பண்டிகையின் கதாநாயகர்களான நம் விவசாயிகள் மோடி அரசின் விவசாய விரோதச் சட்டங்களை எதிர்த்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களது குரல் மத்திய அரசுக்கு இதுவரை கேட்கவில்லை.

மறுநாள் தை பிறக்கிறது. தை பிறந்தால் வழியும் பிறக்கும். நம்பிக்கையை விதையுங்கள். நல்லாட்சி மலர இந்த பொங்கல் திருநாள் வழிகாட்டும். பொங்கலிட்டு நீங்கள் வணங்கும் சூரியன், உங்கள் கண்ணீரைத் துடைக்கும் என்ற நம்பிக்’கை’யோடு சொல்லுங்கள்… பொங்கலோ பொங்கல்

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post தை பிறந்தால் வழி பிறக்கும். தை பிறந்து விட்டது. வழியும் பிறக்கப் போகிறது! தலைவர் கே.எஸ்.அழகிரி பொங்கல் வாழ்த்து செய்தி! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.