PM Modi Archives - தேசிய முரசு - Desiya Murasu

பிரதமர் மோடியை வீழ்த்திய திஷா ரவி : வெகுண்டெழுந்த மக்களால் ஆடிப்போன அரசாங்கம்
இந்தியாவின் பலத்தில் தங்களது பங்களிப்பும் இருப்பதாகப் பல இளைஞர்கள் எண்ணுகிறார்கள்.

நம் நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?. 22 வயது கல்லூரி மாணவியை வீட்டுக்குள் புகுந்து கைது செய்கிறது டெல்லி காவல் துறை. எவ்வித சட்டப்பூர்வ ஆவணங்கள் இல்லாமல் டெல்லிக்கு அழைத்துச் செல்கிறார்கள். இணையத்தைப் பயன்படுத்தி அவர் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார் என்பது குற்றச்சாட்டு. கைது செய்யப்பட்ட திஷா ரவி அரசியல்வாதியல்ல. எந்த கட்சியையும் சார்ந்தவரும் இல்லை. சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான போதுமான அறிவு கொண்ட இளம்பெண் அவ்வளவுதான். தாங்களும் இந்தியாவின் பலம் என்று பல இளைஞர்கள் நினைக்கிறார்கள். ஆனால்,அந்த இளைஞர்களை, மாணவர்களைச் சிறையில் தள்ளி அச்சுறுத்துவது தேவை தானா?

இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், ” மவுன்ட் கார்மெல் கல்லூரியில் படிக்கும் 22 வயது மாணவி இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார் என்றால், இந்தியாவின் அடித்தளம் ஆடிப்போயிருக்கிறது என்று அர்த்தம். இந்தியா அபத்தமான நிலைக்கு மாறிக் கொண்டிருக்கிறது” என்று விமர்சித்தார். காங்கிரஸ் எம்பி சசிதரூர் கூறும்போது, ”சமூக செயற்பாட்டாளர்கள் எல்லாம் ஜெயிலில் இருக்கிறார்கள், தீவிராதிகள் எல்லாம் பெயிலில் இருக்கிறார்கள்” என்றார். மக்கள் ஆதரவு குறையும்போது ஆட்சியாளர்கள் எதேச்சதிகாரம் கொண்டவர்களாக மாறுகிறார்கள். வெளிநாட்டுப் பார்வையாளர்கள் இதனைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்கிறார்கள். மிகவும் எதேச்சதிகாரமான 10 நாடுகள் பட்டியலில், இந்தியாவையும் சுவீடனின் வி-டெம் நிறுவனம் சேர்த்துள்ளது.

ஊடகங்கள், மக்கள் சமுதாயம் மற்றும் எதிர்க்கட்சிகள் மோசமாக ஊசலாடிக் கொண்டிருப்பதால், ஜனநாயக நாடு என்ற தகுதியை இந்தியா இழந்து வருகிறது. இது குறித்து ‘டைம்’ இதழ் எழுதும்போது, ”நரேந்திர மோடியின் இந்தியா, ஒரு ஜனநாயக ரீதியிலான நாடு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எவ்வளவு காலம் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளது. வெறுக்கத்தக்கப் பேச்சு பரவலாக உள்ளது. அமைதியான கருத்து வேறுபாடு குற்றப்படுத்தப்படுகிறது. கருத்துச் சுதந்திரம் புதிய தடைகளை எதிர்கொள்கிறது. அரசியல் வாதிகள் மற்றும் எதிர்ப்பாளர்களால் சிறைகள் நிரப்பப்படுகின்றன. இந்தியா வளருவதை உலகம் நம்புவது கடினம். நேபாளத்திலும் இலங்கையிலும் பாஜக கட்சி தொடங்கப்படும் என அமித்ஷாவின் மூளையில் உதித்ததை, திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் தேப் சமீபத்தில் பொதுவெளியில் தெரிவித்திருந்தார். இரு நாடுகளிலும் பாஜகவைத் தொடங்க அமித்ஷா உறுதி அளித்தார் என்றும் அவர் குறிப்பிட்டார். ஒருபுறம் வங்காள தேசத்தையும் மறுபுறம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானை கைப்பற்றும் திட்டத்தை, அமித்ஷா ஏன் விரும்பவில்லை என்பது மர்மமாக உள்ளது. பாஜகவின் எழுச்சியூட்டும் வண்ணங்களின் கீழ், அவர்களும் வளரவேண்டும் என அமித்ஷா விரும்பவில்லையா?

சுபாஷ் சந்திர போஸ், பிஆர்.அம்பேத்கர் மற்றும் சர்தார் படேல் ஆகியோரது பெயர்களை, முன்பு ஆண்ட அரசு எந்த இடத்துக்கும் சூட்டவில்லை என்று மற்றவர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடியும் கோரஸ் பாடுகிறார். எதுவுமே தெரியாமல் பேசி வியப்பின் அளவை அதிகப்படுத்துகிறார் மோடி. இந்தியாவில் நேதாஜி சாலை, அம்பேத்கர் சிலைகள் இல்லாத இடமே இல்லை. சுபாஷ் சந்திர போஸ் அளவுக்கோ அல்லது அம்பேத்கர் அளவுக்கோ படேல் பிரபலமானவர் இல்லை என்றாலும், பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் தெருக்களுக்கு அவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்மைகளை எல்லாம் தவிர்த்துவிட்டு, தன் வாதத்தையே மோடி பலவீனப்படுத்துகிறார். தான் எதைச் சொன்னாலும் இந்த நாடு கேட்க வேண்டும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார். மோடியின் புதிய நகர்வுகள், உலகின் பார்வையில் அவரை சுயநலமுள்ள, எதேச்சதிகார தலைவராகக் காட்டிக் கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கு நல்லதைவிட தீங்கு செய்கிறார். திஷா ரவி காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட போது, இந்தியாவில் நடந்த ஆர்ப்பாட்டங்களை உலகமே கவனித்தது என்பதில் சந்தேகமில்லை. திஷா ரவி கைது செய்யப்பட்டது அடிப்படை உரிமையை மீறும் செயல் என, பாஜக தவிர அனைத்துக் கட்சிகளும் கூறின. எதிர்க்கட்சிகளின் வாயை அடைப்பதற்கான மிரட்டல் தான் திஷா ரவி கைது. ஹரியானாவைச் சேர்ந்த பயங்கரவாதி உள்துறை அமைச்சர் அனில் விஜ் கூறும்போது,” தேசத்துரோக விதைகள் அழிக்கப்பட வேண்டும் என்று வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டார். தேச விரோதத்தை சரியாக அர்த்தப்படுத்தினால், அந்த பட்டியலில் முதல் நபராக அனில் விஜ் இருப்பார்.

திஷா ரவி கைது செய்யப்பட்டதும் நடந்த போராட்டங்கள், மக்களின் உணர்வுக்கும் பாஜக உணர்வுக்கும் இடையே இடைவெளி இருப்பதை உணர்த்தியது. திஷா ரவி கைது செய்யப்பட்டதை எதிர்த்து, பெங்களூருவில் செயற்பாட்டாளர்கள் மட்டுமல்ல, விவசாயிகள், மாணவர்கள், எழுத்தாளர்கள் திரண்டு வந்தனர். இதுபோன்ற கைது நடவடிக்கையை, மோடி அரசின் பாதுகாப்பற்ற மற்றும் பித்துப்பிடித்துப்போன உணர்வின் அடையாளமாகப் பலரும் பார்த்தனர். மக்களை மோடி அரசு எப்படி எல்லாம் நசுக்குகிறது என்பதை டிஜிட்டல் பிரச்சாரத்தின் மூலம் திஷா ரவியின் ஆதரவாளர்கள் வெளிப்படுத்தினர். எல்லா திசைகளிலும் மோடிக்கு இழப்பே ஏற்பட்டுள்ளது. ஒரு தலைமுறை இளைஞர்கள் சர்வாதிகார ஆட்சியை அனுபவிக்க நேரிட்டாலும், இந்த விளையாட்டின் இறுதியில் மக்களே வெற்றி பெறுவர். இப்போதும் களத்தில் இருக்கும் கேள்வி இதுதான்.

”மோடியா? மக்களா?”

அடடா! என்னவொரு உச்சகட்ட எதிர்மறைக் காட்சி.

The post பிரதமர் மோடியை வீழ்த்திய திஷா ரவி : வெகுண்டெழுந்த மக்களால் ஆடிப்போன அரசாங்கம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

சர்ச்சிலும் ராகுலும்; ட்ரம்பும் மோடியும் : வார்த்தைகளில் வெளிப்படும் உண்மை முகம்
மோடி அரசை ‘சூட் பூட் கி சர்க்கார்’ (விலை உயர்ந்த கோட் மற்றும் பூட்ஸை மோடி போடுவது வழக்கம்) என்று முத்திரை குத்தினார் ராகுல் காந்தி. சமீபத்தில் ‘நாம் இருவர் நமக்கு இருவர் அரசு’ என்று விமர்சித்தார்.

ராகுல் காந்தியின் இத்தகைய விமர்சனங்கள் இங்கிலாந்து பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலை நினைவுபடுத்துகிறது.

இரக்கக் குணம் மற்றும் கருத்தியலில் புகழ்பெற்ற வின்ஸ்டன் சர்ச்சிலுடன் ஒப்பிடும் அளவுக்கு ராகுல் காந்தி இருக்கிறார். அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்தப்பட்ட போதும், அவரது நகைச்சுவை மேலோங்கியிருக்கும்.

மோடியைப் போல் தனிப்பட்ட தாக்குதலை ராகுல் காந்தி நடத்துவதில்லை. தன் அரசியல் எதிரிகளைத் தனிப்பட்ட முறையில் யாரையும் சர்ச்சில் தாக்கியதில்லை. இந்த குணம் ராகுல் காந்தியிடமும் பிரதிபலித்தது.

பிரிட்டிஷ் முதல் பெண் எம்பியான நான்ஸி ஆஸ்டர் ஒருமுறை நாடாளுமன்றத்தில் பேசும்போது,” சர்ச்சிலை நான் திருமணம் செய்து கொண்டிருந்தால், விஷம் வைத்துக் கொன்றிருப்பேன்” என்றார். அதற்கு உடனே பதில் அளித்த சர்ச்சில், ” நான்ஸி எனக்கு மனைவியாகியிருந்தால் நானே விஷம் குடித்து செத்துருப்பேன்” என்றார்.

மற்றொரு பெண் எம்பி பெஸ்ஸி பிராடோக் பேசும்போது, சர்ச்சிலை குடிகாரன் என்றார். அதற்குப் பதில் அளித்த சர்ச்சில், நான் நாளைக்கே செத்துவிடுவேன், நீங்கள் மட்டும் இன்றைக்கு இருப்பது போலவே அப்போதும் இருப்பீர்கள் என்றார். பெஸ்ஸி அசிங்கமாக இருப்பார். அவரை உடல் ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ விமர்சிக்காமல், எவ்வளவு நாசூக்காக விமர்சித்துள்ளார்.

சர்ச்சில் அளவுக்கு தன்னை அவமானப்படுத்தியவர்களுக்கு ராகுல்காந்தி பதிலடி தரவில்லை. எனினும், மோடி அரசாங்கத்தை ‘சூட் பூட் கி சர்க்கார் என்று முத்திரை குத்தினார். தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சர்க்கார் என்று விமர்சிக்கிறார். வின்ஸ்டன் சர்ச்சிலின் வார்த்தைகளையே ராகுல் காந்தியின் வார்த்தைகள் பிரதிபலிக்கின்றன.

ராகுல் காந்தியை விமர்சித்த பத்திரிகை ஆசிரியர்கூட, ராகுல் காந்தியை சர்ச்சிலுடன் ஒப்பிடுகிறார்.

ராகுல் காந்தி ஏன் சர்ச்சிலை நினைவுபடுத்துகிறார். சர்ச்சிலைப் போல், எதிரிகளின் அவதூறுகளைத் தவிர்த்து விடுகிறார். ஆனால், பொருத்தமான நேரத்தில் பதிலடி கொடுக்கிறார். அந்த நகைச்சுவை எல்லோர் மனதிலும் நிலைத்து நிற்கிறது.

தேசிய அரசியலுக்கு வரும் முன்பே சோனியா காந்தியை வெளிநாட்டுக்காரர் என்பதைச் சுட்டிக்காட்டித் தனிப்பட்ட முறையில் விமர்சித்தார். சசிதரூருக்கும் பெரும் பணக்காரரான சுனந்தாவுக்கும் திருமணமானபோது, சுனந்தாவை சசிதரூரின் 50 கோடி ரூபாய் நண்பர் என்று குறிப்பிட்டார். இத்தனைக்கும் சுனந்தா அப்போது மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகவில்லை.

டொனால்டு ட்ரம்ப் அதிபராகும் முன்பே கெல்லியை தனிப்பட்ட முறையில் விமர்சித்தார். அதேபோல், தேசிய அரசியலுக்கு வரும் முன்பு, சோனியா காந்தியையும், சுனந்தாவையும் தனிப்பட்ட முறையில் மோடி விமர்சித்தார். பெண்கள் அல்லது ஆண்கள் மீதான தனிப்பட்ட தாக்குதலை ராகுல் காந்தி தொடுத்ததே கிடையாது.

சர்ச்சிலுக்கும் ட்ரம்புக்கும் இருந்த வித்தியாசம் தான், மோடிக்கும் ராகுல் காந்திக்கும் இருக்கிறது என்பதே, அவரவர் வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் உணர்த்துகின்றன

The post சர்ச்சிலும் ராகுலும்; ட்ரம்பும் மோடியும் : வார்த்தைகளில் வெளிப்படும் உண்மை முகம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

12,232 பேரின் மனநிலைதான் 130 கோடி தேச மக்களின் மனநிலையா?: அம்பலமாகும் இந்தியா டுடேவின் காமெடி சர்வே
இந்தியா டுடே கடந்த வியாழக்கிழமை வெளியிட்டுள்ள சர்வே, சமூக வலைத்தளங்களில் கேலியும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது.

”நாட்டின் மனநிலை என்று பிரதமரின் மன் கீ பாத் சர்வே முடிவுகளை மட்டும் தான் வானொலியிலும் தூர்தர்ஷனிலும் பிரதமர் அறிவிக்கவில்லை” என்று ட்விட்டரில் விமர்சித்துள்ளனர்.

”கொரோனாவை பிரதமர் மோடி அணுகிய விதத்தை பெரும்பாலான மக்கள் பாராட்டுவதாகவும், இன்றைக்குத் தேர்தல் வைத்தாலும் பாஜக வெற்றி உறுதி” என்று கூறி, தன் எஜமானர்களுக்கு இந்தியா டுடே சேவகம் செய்திருக்கிறது.

19 மாநிலங்களில் 97 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 194 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 12,232 பேரிடம் கருத்துக் கேட்டதில் பாஜகவுக்கே ஆதரவு அதிகரித்திருப்பதாகவும் இந்தியா டுடே தெரிவித்துள்ளது. 74 சதவிகிதம் பேர் மோடியின் செயல் திறனுக்கு ஆதரவு அளித்துள்ளனர். 66 சதவிகிதம் பேர் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீது திருப்தி அடைந்துள்ளதாக சர்வேயின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியா டுடேவின் சர்வே முடிவுகள் வெளியிடப்பட்டதும் ட்விட்டரில் பலரும் தங்கள் கருத்தை நகைச்சுவையாக வெளியிட்டு வருகின்றனர்.

அவற்றில் சில…

நாட்டின் மனநிலை மற்றும் சர்வே எல்லாம், டிஆர்பி ரேட்டிங் போன்றது தான். தாங்கள் நினைத்ததை சர்வே முடிவுகளாக வெளியிட வேண்டும் என்பதை பாஜக விரும்புவதைச் சுயமரியாதை உள்ள பத்திரிக்கை ஆசிரியர்கள் மறுக்க முடியாது.

130 கோடி மக்களின் மனநிலையை 12,232 பேர் பிரதிபலித்துவிட்டார்களா?

வண்ணமயமான பணமே நாட்டின் மனநிலையை முடிவு செய்கின்றது.

இந்த போலி சர்வே எடுக்க மோடியும் யோகியும் எவ்வளவு பணம் கொடுத்தார்கள்?

ஊடகங்கள் அனைத்தும் 24 மணிநேரமும் விலை போனதால், செல்வாக்கைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் மோடி.

வேலையின்மை, இனவாதம், விவசாயிகள் போராட்டம்,புலம்பெயர்ந்தோர் பிரச்சினை, சிறு, குறு தொழிற்சாலைகள் மூடல், மொத்த உள்நாட்டு உற்பத்தி, எரிபொருள் விலை, பொருளாதாரம் மற்றும் வங்கிகள் மூடல், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, மாட்டிறைச்சி விவகாரம், முஸ்லீம் கப்ராஸ்தான் ஆகியவை தான் நாட்டின் மனநிலையாக இருக்கின்றன.

இந்தியாவின் மக்கள் தொகை: 135 கோடிகள் + ஆக உள்ளது. நாட்டின் மனநிலையை வெறும் 13 ஆயிரம் பேர் முடிவு செய்ய முடியுமா?. இந்த எண்ணிக்கையில் சர்வே எடுத்தால் ஒரு நகரின் மனநிலையைக் கூட நீங்கள் முடிவு செய்ய முடியாது. இந்தியா டுடே-வை நினைத்து வெட்கப்படுகிறேன்.

ரிபப்ளிக் தொலைக்காட்சியும், ஜீ தொலைக்காட்சியும் அரசின் ஊதுகுழலாக இருக்கின்றன. இந்த சர்வே மூலம், நாங்களும் உங்களுக்கு விசுவாசமாக இருக்கிறோம் என்று இந்தியா டுடே காட்டியிருக்கிறது.

மக்களின் மனநிலை : 2 நிமிடங்கள் அமைதியாக இருப்போம்.

மக்கள் மனநிலை : இது போன்ற சர்வேக்கு இனி வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தலாம்.

மக்கள் மனநிலை : இந்த வாரத்தின் சிறந்த நகைச்சுவை

இந்த சர்வேயில் அர்னாப் கோஸ்வாமியின் சாயலே தெரிகிறது.

இதுவரை இல்லாத அளவுக்குப் பெருமளவில் பெட்ரோல் விலையை ஏற்றுவதே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தோல்விக்குச் சிறந்த உதாரணம்.

இப்படி…இந்தியா டுடேவின் போலி சர்வேக்கு லட்சக்கணக்கானோர் ட்விட்டர் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

”12,232 பேரிடம் கருத்துக் கேட்டுவிட்டு, பிரதமர் நரேந்திர மோடியை யாரும் அசைக்க முடியாது” என்று ஒரு நகைச்சுவை சர்வேயை வெளியிட்டுள்ளது இந்தியா டுடே. இதை 130 கோடி மக்களின் மனநிலை என்று வேறு சொல்கிறது.

அப்படி என்றால், இந்த சர்வேக்கு எதிராக லட்சக்கணக்கானோர் ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்களே? இதுவும் நாட்டின் மனநிலை தானே?. இதை என்ன சொல்வது?

ஆயிரங்கள் பெரிதா? லட்சங்கள் பெரிதா என்பதை, தங்கள் எஜமானர்களிடம் கேட்டு இந்தியா டுடே பதில் சொல்லட்டும்.

The post 12,232 பேரின் மனநிலைதான் 130 கோடி தேச மக்களின் மனநிலையா?: அம்பலமாகும் இந்தியா டுடேவின் காமெடி சர்வே appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

பிஎம் கேர்ஸ் நிதியில் வெளிப்படைத் தன்மை இல்லாதது ஏன்?: பிரதமருக்கு 100 ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் கடிதம்
பிஎம் கேர்ஸ் நிதியைக் கையாளுவதில் வெளிப்படைத் தன்மை இல்லாதது குறித்து விமர்சித்து, பிரதமர் மோடிக்கு 100 ஐஏஎஸ் அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

பிஎம் கேர்ஸ் (பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரக் கால நிவாரண உதவி) குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டால், இது அரசு தொடர்பான நிதி அல்ல என்பதால், பொதுவெளியில் வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசு சொல்லி வருகிறது. இதன்மூலம், பிஎம் கேர்ஸின் ஒவ்வொரு அம்சத்திலும் வெளிப்படைத்தன்மை இல்லாதது தெளிவாகத் தெரிகிறது. நன்கொடை கொடுத்தவர்களின் தகவலும் இல்லை, செலவு செய்த விவரமும் வெளிப்படையாக இல்லை.

கொரோனா தடுப்புக்காக ஏற்படுத்தப்பட்ட பிஎம் கேர்ஸ் நிதி எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்ற விவரமும் இல்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ள மாநில அரசுகள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு உதவாமல் வேறு எதற்குச் செலவிடப்படுகிறது என 100 முன்னாள் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகளும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மத்திய மற்றும் மாநில அரசுகளில் முக்கிய பதவிகளை வகித்த 100 முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகளின் அந்த கடிதத்தின் விவரம்:

அன்புள்ள பிரதமருக்கு,

நாங்கள் எந்த அரசியல் கட்சிகளையும் சார்ந்தவர்கள் இல்லை. ஆனால், அரசியல் சாசனத்துக்கு உட்பட்டவர்கள்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிஎம் கேர்ஸ் நிதி பயன்படுத்தப்படுகிறதா? என்று எழுந்துள்ள விவாதத்தை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். எதற்காக இந்த நிதி உருவாக்கப்பட்டதோ, அதன் நோக்கம் நிறைவேறவில்லை. அதோடு, பல எண்ணற்ற கேள்விகளுக்கு விடையும் கிடைக்கவில்லை.

தேசிய அளவில் முதல்முறையாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட மூன்றே நாட்களில், கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி அவசர, அவசரமாக பிஎம் கேர்ஸ் நிதி உருவாக்கப்பட்டது. இந்த நிதி உருவாக்கப்பட்ட ஒரே வாரத்தில் அதன் இணைய தளத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, ரூ. 3 ஆயிரத்து 76 கோடியே 62 லட்சம் நன்கொடையாக வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மையாக எவ்வளவு தொகை வந்துள்ளது என்பது குறித்து இதுவரை வெளியிடப்படவில்லை.

பிஎம் கேர்ஸ் குறித்த விவரத்தைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டுள்ள பதிலில், அரசு சார்ந்த அறக்கட்டளை இல்லை என்பதால் வெளியிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் தான் இந்த கடிதத்தை உங்களுக்கு நாங்கள் அவசரமாக எழுத வேண்டியதாகிவிட்டது.

பிஎம் கேர்ஸ் அரசின் அறக்கட்டளை இல்லை என்றால், பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் இதில் எப்படி அரசின் பிரதிநிதிகளாக இருக்கிறீர்கள்? நீங்கள் தனி நபர்களா?

பிஎம் கேர்ஸ் தனியார் அறக்கட்டளையாக இருந்தால், இதில் கிடைத்த நன்கொடைகள் சிஎஸ்ஆர் எனப்படும் கூட்டாண்மை சமூக பொறுப்புக்கு உட்படுமா? சமூக பொருளாதார மற்றும் நிவாரணப் பணிகளை அரசு மேற்கொள்வதற்கு மட்டுமே கூட்டாண்மை சமூக பொறுப்பிலிருந்து கம்பெனிச் சட்டம் விதிவிலக்கு அளிக்கிறது. 2013 ஆம் ஆண்டு கம்பெனிச் சட்டத்தின் கீழ், மத்திய அரசின் பிஎம் கேர்ஸ் தனியார் அறக்கட்டளை என்றால், கூட்டாண்மை சமூக பொறுப்பு செலவினங்களுக்கு இந்த நிதி பொருந்தாது என்பது தெளிவாகிறது.

கடந்த 2020 மார்ச் 28 ஆம் தேதி, கூட்டாண்மை சமூகப் பொறுப்பு நிதியை பிஎம் கேர்ஸ் நிதிக்காகப் பெறலாம் என கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டது. ஏற்கனவே 7 ஆவது அட்டவணையில் உள்ள பிரதமரின் தேசிய நிவாரண நிதியின் பட்டியலிலேயே இந்த பிஎம் கேர்ஸ் நிதியும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேசிய அளவில் ஒரு நிதி இருக்கும்போது, புதிய நிதியை உருவாக்க வேண்டிய அவசியம் என்ன?

பிஎம் கேர்ஸ் நிதி மத்திய அரசு அல்லது மாநில அரசுகளைச் சார்ந்து இருக்காது. எந்த ஓர் அரசு சார்ந்த துறைகளின் நிதிக் கட்டுப்பாடு நேரடியாகவே அல்லது மறைமுகமாகவோ இருக்காது என்று பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசுப் பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்து நன்கொடை வாங்கியது ஏன்? இந்த பணம் மக்கள் பணம் இல்லை என்றால், வெளிநாட்டிலிருந்து ஏன் நிதியைப் பெற்றீர்கள்?

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், பிஎம் கேர்ஸ் நிதிக்கு வெளிநாட்டினரிடம் நிதி திரட்ட தூதுவர்களைக் காணொளி காட்சி மூலம் நடந்த கூட்டத்தில் கேட்டுக் கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது. பிஎம் கேர்ஸ் தலைமைப் பொறுப்பு வகிப்பவர் என்ற முறையில், நீங்களும் வெளிநாட்டு நன்கொடையை வரவேற்றுள்ளீர்கள்.

பிஎம் கேர்ஸ் நிதியில் இடம்பெற்றுள்ள நீங்களும் உங்கள் அமைச்சர்களும் நிச்சயம் நிதியைத் திரட்ட முடியும். இதில் மக்களின் பங்களிப்பும் இருக்கும். ஐசிஏஐ எனப்படும் சாட்டர்டு அக்கவுண்டன்ட் நிறுவனத்திடமிருந்து அப்போதைய கம்பெனி விவகாரத்துறை அமைச்சக செயலாளர் நன்கொடை கேட்டுள்ளார். இவ்வாறு ஒரு நிறுவனத்திடமிருந்து செயலாளர் ஒருவர் அதிகாரப்பூர்வமாக நேரிடையாக நன்கொடை கேட்க முடியுமா?

2019 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு, பிஎம் கேர்ஸ் அரசு சார்ந்தது இல்லை என்று கூறினாலும், அறக்கட்டளைகள், சொஸைட்டிகள், அரசு சாரா அமைப்புகள் (அரசு மற்றும் தனியார்) அரசு நிதியைக் கையாளும்போது, அதனை அரசு நிதியாகவே கருத வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

பிஎம் கேர்ஸ் நிதிக்காக அரசு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. 2020 மே 19 ஆம் தேதி ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ வெளியிட்ட செய்தியில், பிஎம் கேர்ஸ் நிதிக்கு கிடைத்த 10 ஆயிரத்து 600 கோடி ரூபாய் நன்கொடையில், அரசுப் பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் 3 ஆயிரத்து 200 கோடி ரூபாயும், பொதுத் துறை ஊழியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மூலம் 1,200 கோடி ரூபாயும் பெறப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிஎம் கேர்ஸின் ஒவ்வொரு அம்சத்திலும் வெளிப்படைத்தன்மை கிடையாது என்பது இதன்மூலம் தெளிவாகிறது. நன்கொடை கொடுத்தவர்களின் விவரங்களோ, செய்யப்பட்ட செலவு குறித்த விவரங்களோ பொது வெளியில் வைக்கப்படவில்லை. இந்நிலையில், கொரோனாவை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் மாநில அரசுகளுக்கு பிஎம் கேர்ஸிலிந்து உதவி செய்யப்படவில்லை.

பிரதமர் அவர்களே, மக்களுக்கு ஞாபக மறதி அதிகம். 1980 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா முதலமைச்சராக இருந்த ஏ.ஆர். அந்துலேயைப் பற்றி நம் இளைஞர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் முதலமைச்சராக இருந்தபோது, இந்திரா காந்தி பிரதிபா பிரதிஷ்ட்தான் என்ற நிதியை உருவாக்கினார். இது அரசு சார்ந்த நிதி அல்ல. தனிப்பட்ட முறையில் உருவாக்கிய நிதி. ஆனால், அரசு நிதி என்று அப்போது குற்றம் சாட்டப்பட்டது. அந்துலே மீது பாஜகவினர் அப்போது குற்றம் சாட்டினர். அதோடு அவர்கள் நீதிமன்றத்துக்கும் சென்றனர். இதன் காரணமாக அந்துலே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

அரசு கையாளும் நிதி தொடர்பான விஷயங்களின் சந்தேகம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும். கடந்த 1975 ஆம் ஆண்டு ராஜ் நாராயண் வழங்கில் நீதிபதி மேத்யூ கூறும்போது, ”அரசின் நடவடிக்கைகள் அனைத்தையும் தெரிந்து கொள்ளும் உரிமை இந்த நாட்டு மக்களுக்கு உண்டு” என்றார். பிரதமர் தொடர்புடைய விஷயத்தில், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வது, அவரது நிலைப்பாட்டுக்கும் அந்தஸ்துக்கும் அவசியம்.

வாய்மையே வெல்லும்!

இவ்வாறு கடிதத்தை நிறைவு செய்து, 100 ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளும் கையெழுத்திட்டுள்ளனர்.

The post பிஎம் கேர்ஸ் நிதியில் வெளிப்படைத் தன்மை இல்லாதது ஏன்?: பிரதமருக்கு 100 ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் கடிதம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

3 புதிய சட்டங்களையும் ரத்து செய்து விவசாயிகளிடம் மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் : ரன்தீப் சிங் சுர்ஜேவாலா
3 புதிய சட்டங்களையும் ரத்து செய்து விவசாயிகளிடம் மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நீதி கேட்டுக் கடந்த 30 நாட்களாக நடுங்கிக் கொண்டே கடும் குளிரில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 3 புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து நடந்த போராட்டத்தில் இதுவரை 44 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஒரு சில முதலாளிகளுக்குச் சேவகம் செய்வதிலேயே பிரதமர் மோடி ஆர்வம் காட்டுகிறார். விவசாயிகள் மீது அவர் இரக்கப்படவே இல்லை.

போராடும் விவசாயிகள் சோர்வாகி அவர்களே ஓடிவிடுவார்கள் என்பது பாரதிய ஜனதா கட்சியின் எண்ணமாகவும் கொள்கையாகவும் இருக்கிறது. பிரதமர் தொலைக் காட்சியில் விளக்கங்களை அளித்து வருகிறார். அவருடைய அமைச்சர்கள் ஏதோ சாக்குப்போக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமது நெருக்கமான முதலாளிகளுக்குச் சேவகம் செய்து கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மை.

அரசியல் நேர்மையின்மையுடன் நாடகம் ஆடுகிறார்கள். விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்க்க அவர்களுக்குச் சிறிதளவும் ஆர்வமில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

சாலைகளில் நின்று கொண்டிருந்த விவசாயிகள் மீது தண்ணீரைப் பீய்ச்சியும், தடியடி பிரயோகமும் நடத்தித் தாக்கிய பிரதமர் தான், விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்குவதாகக் கூறுகிறார்.

கடந்த 2015-6 விவசாய கணக்கெடுப்பின்படி, 14 கோடியே 64 லட்சம் விவசாயிகள், 15,78 கோடி ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் செய்வதாகக் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கான ரூ.6 ஆயிரம் உதவித் தொகை திட்டத்தை மோடி அரசு தொடங்கியது. 3 தவணைகளாக இந்தியாவில் உள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி, 2018-19 ஆம் ஆண்டில் 88 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கணக்குகளில் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை வெறும் 6 ஆயிரத்து 5 கோடி ரூபாய் மட்டுமே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலுக்கு முன்பு, விவசாயிகள் கணக்கில் 49 ஆயிரத்து 196 கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது. 2020-21 ஆம் ஆண்டில் இதுவரை 38 ஆயிரத்து 872 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் வங்கிக் கணக்குகளின் செலுத்த வேண்டிய 88 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு முழுமையாக இதுவரை வழங்கவில்லை.

தற்போது விவசாயிகளின் கணக்குகளில் 18 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய செலுத்தியபோதும், 3 சட்டங்களை நியாயப்படுத்தியே பிரதமர் மோடி பேசுகிறார்.

5 கோடியே 40 லட்சம் விவசாயிகளுக்கு உதவித் தொகையைத் தராதது ஏன்? இந்த திட்டத்தின் கீழ், மொத்தமுள்ள 14 கோடியே 64 லட்சம் விவசாயிகளில் 9 கோடியே 24 லட்சம் விவசாயிகளுக்கு மட்டும் அவர்களது வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்துவது ஏன்?

மோடி அவர்களே, உங்களை சிம்மாசனத்தின் மீது அமர வைத்த மக்களை நீங்கள் கொடுமையுடனும், அக்கறையின்றியும் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

இன்று விவசாயிகளைத் தீவிரவாதிகள் என்றும், ஒட்டுண்ணிகள் என்றும், துண்டாடும் கும்பல் என்று காலிஸ்தானியர்கள் என்றும் பாரதிய ஜனதா கட்சி முத்திரை குத்துகிறது. 3 புதிய சட்டங்களையும் திரும்பப் பெற்று, விவசாயிகளிடம் மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

The post 3 புதிய சட்டங்களையும் ரத்து செய்து விவசாயிகளிடம் மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் : ரன்தீப் சிங் சுர்ஜேவாலா appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

ஆபத்தின் அறிகுறி : பிரதமர் கைக்கு மாறும் நாடாளுமன்ற ஜனநாயக அதிகாரம்! ஜனநாயகத்தில் சர்வாதிகாரியாக மோடி!
அதிகாரம் என்பது ஒரு தனி நபர், பிரதமர் அல்லது ஒரு குழுவின் கீழ் மையப்படுத்தப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு அரசியல் சாசனம் அளித்த அதிகாரம், தற்போது குறைந்து கொண்டு வருகிறது.

1668 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நிகழ்த்தப்பட்ட கத்தியின்றி ரத்தமில்லா புரட்சியால், இந்த மண்ணில் நாடாளுமன்ற ஜனநாயகம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை நிகழ்ந்தது. மன்னர் மற்றும் நாடாளுமன்றத்துக்கு இடையிலான முடிவைப் புரட்சி வெளிப்படுத்தியது. முழுமையான முடியாட்சியின் வீழ்ச்சி, நாடாளுமன்ற இறையாண்மையாக எழுச்சி பெற்றது.

கடந்த 1625 ஆம் ஆண்டு அரியணையில் ஏறிய முதலாம் மன்னர் சார்லஸ், தெய்வீக நம்பிக்கையுடையவராக இருந்தார். இதனால், தனது செயல்களுக்குக் கடவுளுக்கு மட்டுமே பொறுப்பு என்றும், வேறு யாருக்கும் பொறுப்பில்லை என்ற கருத்தைக் கொண்டிருந்தார். 1628 ஆம் ஆண்டு, தனிப்பட்ட பாதுகாப்புகளைக் கட்டமைக்க உரிமைச் சட்டத்தை அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை தமது அதிகாரத்துக்கு விடப்பட்ட சவாலாக எடுத்துக் கொண்ட மன்னர், இறுதியில், நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.

இந்த விவகாரம், மன்னருக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையே உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தது. 1649 ஆம் ஆண்டு மன்னரின் தலை துண்டிக்கப்பட்டது. முதலாம் சார்லர் மன்னருக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து ஜவஹர்லால் நேரு தனது ‘க்ளிப்ஸஸ் ஆஃப் வேல்டு ஹிஸ்டரி’ என்ற புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

”எப்போதும் மிகவும் பழமைவாதத்துடனும், விரைவான மாற்றங்களை வெறுத்து வந்த இங்கிலாந்து மக்கள், ஒரு கொடுங்கோலன் மற்றும் துரோக மன்னனை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

அதோடு, உள்நாட்டுப் போர் முடியவில்லை. இரண்டாம் மன்னர் ஜேம்ஸுக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையே மீண்டும் மோதல் தொடர்ந்தது. இரண்டாம் மன்னர் ஜேம்ஸை, மன்னர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அவரது மகள் மேரி மற்றும் டச்சு கணவர் வில்லியம் ஆகியோர் பதவியில் அமர்த்தியது நாடாளுமன்றம். இதைத்தான் புகழ்பெற்ற புரட்சி என்றும் கூறுகிறார்கள். இங்கிலாந்தில் முடியாட்சி முடிவுக்கு வந்து, நாடாளுமன்ற இறையாண்மை ஆரம்பமானது. கத்தியின்றி ரத்தமின்றி மலர்ந்த நாடாளுமன்ற ஜனநாயகமாக இது பார்க்கப்பட்டது.

மன்னர் வில்லியம்ஸின் ஆதரவுடன் 1689 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட உரிமைகள் சட்டத்தை நாடாளுமன்றம் வெற்றிகரமாக நிறைவேற்றியது. இதன்மூலம், நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி நிதி கையாளுதல் மற்றும் ராணுவத்தைப் பராமரிப்பதற்கு மன்னருக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் மன்னரின் அதிகாரம் ரத்து செய்யப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் சுதந்திரமாக நடைபெறவும், நாடாளுமன்றத்தின் பேச்சுச் சுதந்திரம் மற்றும் விவாதங்களில் வெளியே இருந்தோ அல்லது நீதிமன்றங்கள் மூலமோ தலையிடுவதற்கு இந்த சட்டம் தடை விதித்தது. நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட சட்டத்தை ஆதரிப்பதாக சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்ட பின், மேரி மற்றும் அவரது கணவர் வில்லியமுக்கு முடி சூட்டப்பட்டது.

புகழ்பெற்ற புரட்சி என்பது தெய்வீகக் கோட்பாட்டைச் சட்டவிரோதமாக்கியது. ஜான் லோக்கின் சமூக ஒப்பந்தக் கோட்பாட்டை ஆதரித்ததோடு, அரசியலமைப்பையும் உருவாக்கியது.

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் புகழ்பெற்ற புரட்சியின் மூலம் ஒரே இடத்தில் அதிகாரம் குவிவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அமைச்சரவை என்பது கருவாகும். அந்த அமைச்சரவையில் முதன்மையானவர் பிரதமர்.

அதிகாரத்தை ஒரே கையில், சிலரது கையில், குழு அல்லது பரம்பரை கையில் குவிப்பது கொடுங்கோன்மை என்று தாராளமாகச் சொல்லலாம் என்கிறார் அமெரிக்க அரசியலமைப்பின் தந்தையான ஜேம்ஸ் மேடிசன். அதிகாரத்தைப் பரவலாக்குவதில் நாடாளுமன்றம் முக்கியப் பங்காற்றுகிறது. கொடுங்கோன்மை மற்றும் எதேச்சதிகாரத்தைத் தடுப்பதில் நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இங்கிலாந்தில் நாடாளுமன்ற எதிர்க்கட்சியை, மாட்சிமைக்கு விசுவாசமான எதிர்ப்பாளர் என்று அழைக்கிறார்கள். நாடாளுமன்ற நடவடிக்கைகளில் நிழல் அமைச்சரவை முக்கிய பங்காற்றுகிறது.

இந்திய அரசியல் சாசனத்தின் தந்தைகள், அரசியல் சாசனத்தை உருவாக்கியபோது, புகழ்பெற்ற புரட்சியையும், அமெரிக்க அரசியல் சாசனத்தையும் கருத்தில் கொண்டனர்.

தற்போது இந்தியா புகழ்பெற்ற புரட்சிக்கு எதிர்த்திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஒருவர் கையில், பிரதமர் கையில், அல்லது ஒரு குழுவின் கையில் அதிகாரம் குவிந்துள்ளது. அரசியலில் இரட்டைத் தன்மை உருவாக்கப்படுகிறது. அரசியல் சாசனப்படி நாடாளுமன்றத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் குறைக்கப்படுகின்றன. முடிவு எடுக்கப்படுவது அமைச்சரவையிலிருந்து மற்ற சில அரசியல் சாசன நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. அசுரப் பெரும்பான்மை காரணமாக, நாடாளுமன்ற அதிகாரம் பிரதமரின் அதிகாரமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சர்வாதிகாரப் பிரதமர், வலுவற்ற அமைச்சரவை மற்றும் பலமற்ற எதிர்க்கட்சிகள் என்ற ஆபத்தான கலவை, இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும். மக்களவையில் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவர் கிடையாது. இந்தியாவின் பன்முகத் தன்மை கொண்ட இடமாக நாடாளுமன்ற ஜனநாயகம் பார்க்கப்படுகிறது. மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சி ஆகியவற்றின் அரசியலமைப்புக் கொள்கைகள், இந்த நோக்கத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய கொள்கைகளைத் தகர்க்கும் வகையிலேயே, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து, தலாக் தடைச் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவை கொண்டு வரப்பட்டன. இதன்மூலம், ஆளுபவர்கள் நாடாளுமன்றத்தை அவமதிக்கும் போக்கு தொடர்ந்தது. இத்தகைய சட்ட மசோதாக்கள் நாடாளுமன்ற தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படவில்லை. ராஜ்யசபையில், உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமலேயே மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன.

கடைசியாக நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டது. 3 விவசாயச் சட்டங்களை வலுக்கட்டாயமாக அரசு நிறைவேற்றியது. நாடாளுமன்றக் குழுக்கள் நீண்ட காலமாகச் செயலற்ற நிலையில் உள்ளன.

குடிமக்களின் தனியுரிமை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட ஆரோக்கிய சேது செயலி, நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் வெளியிடப்பட்டது. அதோடு, குளிர்காலக் கூட்டத்தொடர் தவிர்க்கப்பட்டதும், சமீபத்தில் நாடாளுமன்றத்துக்கு விழுந்த அடியாகும்.

இன்றைய இந்தியாவில் இங்கிலாந்தின் முதலாம் மன்னர் சார்லஸ் மற்றும் இரண்டாம் மன்னர் ஜேம்ஸ் ஆகியோர், இந்தியாவில் மறு அவதாரம் எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இரண்டாம் மன்னர் ஜேம்ஸ் மற்றும் முதலாம் மன்னர் சார்லஸ் மற்றும் பேராயர் வில்லியம் சான்கிராஃப்டை பதவி நீக்கம் செய்ய ஆலிவர் க்ரோம்வெல் இருந்தார். அவருக்கு மக்களும் ஆதரவு கொடுத்தார்கள். இரண்டாம் மன்னர் ஜேம்ஸ் மற்றும் பேராயர் வில்லியமை லேண்டன் டவருக்கு சிறைக் கைதியாக அனுப்பியபோது, அவர்கள் ஆசீர்வாதத்தைப் பெற காலில் விழுந்து வீரர்கள் மண்டியிட்டனர்.

இங்கிலாந்தின் புகழ்பெற்ற புரட்சியின் இந்நாளில், இந்தியாவில் ஓர் ஆலிவர் க்ரோம்வெல்கூட இல்லையே என்பதுதான் வருத்தமான செய்தி.

The post ஆபத்தின் அறிகுறி : பிரதமர் கைக்கு மாறும் நாடாளுமன்ற ஜனநாயக அதிகாரம்! ஜனநாயகத்தில் சர்வாதிகாரியாக மோடி! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

விவசாயிகள் குரல்வளையை நெறிப்பதா? : மோடி அரசுக்குப் பிரியங்கா காந்தி கண்டனம்
ஒரே நாடு, ஓரே தேர்தல் என்று கூறும் பிரதமர் மோடி, மக்களை ஒரே மாதிரியாக நடத்தவும் வேண்டும் என்று கூறியுள்ளார்.

‘டெல்லி சலோ’ போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 அவசரச் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானது என்றும், கார்பரேட் மற்றும் பெரும் தொழிலதிபர்களுக்குச் சாதகமானது என்றும் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

3 விவசாயச் சட்டங்களையும் எதிர்த்துக் கடந்த சில மாதங்களாகவே விவசாயிகள் போராடி வருகின்றனர். மண்டிகளை நீக்கிவிட்டு விவசாயிகள் நேரடியாக விளைபொருட்களை விற்கலாம் என்றும் சட்டத்தில் சொல்லப்படும் பிரிவு, கார்பரேட்களை களம் இறக்கும் செயல் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

கார்பரேட்களின் கட்டுப்பாட்டுக்குள் விவசாயிகள் கொண்டு சேர்க்கும் நடவடிக்கை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். அதோடு, விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பற்றி சட்டத்தில் குறிப்பிட வேண்டும் என்றும் விவசாயிகள் கோரி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 3 தினங்களாக டெல்லியில் உள்ள விளையாட்டு மைதானங்களில் அடைக்கப்பட்டுள்ள விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச பொதுச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், சாலைகளில் குழியைத் தோண்டி தடுத்தும் விவசாயிகளின் குரல்வளையை நெரிக்கிறார்கள்.

ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்குவோம் என்று சொல்ல அரசு தயாராக இல்லை. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதில் ஆர்வம் காட்டும் பிரதமர், ஒரே நாடு, மக்களை ஒரே மாதிரியாக நடத்தவும் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post விவசாயிகள் குரல்வளையை நெறிப்பதா? : மோடி அரசுக்குப் பிரியங்கா காந்தி கண்டனம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

எதிர்த்து நின்ற ரத்தன் டாடா, தனிஷ்க் விளம்பரத்தில் தலைகுனிந்தது ஏன்?
தொழிற்சங்கங்களும் தீவிரவாதிகளும் மிரட்டிய போது, பணியாத ரத்தன்  டாடா, தனிஷ்க் விளம்பரத்தைத் திரும்பப் பெற்றதன் மூலம் நன்மதிப்பை இழந்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சி  ஒன்றுக்குப்  பேட்டியளித்த  ரத்தன் டாடா, மன்மோகன் சிங் ஆட்சியில் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்வதாகக் குறிப்பிட்டார். இந்தியாவின் செழிப்பை அனுபவிக்க 20 வயது இளைஞராக இருந்திருக்கக் கூடாதா ? என்றும் ஏங்கினார்.

உலகிலேயே இந்தியா தான் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறப்பாக இருப்பதாகவும், பொருளாதாரத்தில் வலுவான நிலையை  மன்மோகன் சிங்கின்  நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் பாராட்டினார். தனக்கு வயதாகிவிட்டதற்காக வருத்தப்பட்ட அவர், 20 வயது இளைஞர்களை நினைத்துப் பெருமைப்பட்டார்.

6 ஆண்டுகளுக்குப் பின்பு, இந்த நாட்டின் இளைஞர்களைப் பற்றி டாடா  என்ன சிந்திக்கிறார் என்று தெரியவில்லை. நாம் உண்மையிலேயே இருண்ட இந்தியாவை விட்டு விலக விரும்பினால், இந்து-முஸ்லீம் மோதல்கள் மற்றும் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் பொறுத்துக் கொள்ள விரும்பாத இளைஞர்களையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இந்து மருமகளுக்கு முஸ்லிம் குடும்பத்தினர் இந்து முறைப்படி வளைகாப்பு நடத்துவதாக அமைந்துள்ள அழகான விளம்பரம் அது. இந்த விளம்பரத்தை மிரட்டிப் பணிய வைத்து திரும்பப் பெறவைத்துள்ளார்கள். ஊழியர்கள் நலன் கருதியும் பாதுகாப்புக்காகவும் சர்ச்சைக்குரிய விளம்பரம் நீக்கப்படுவதாக டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.

இவ்வளவு பெரிய நிறுவனத்துக்குச் சொந்த நம்பிக்கை மீதும் தத்துவங்கள் மீதும் தைரியமாக நிற்பதற்கு முதுகெலும்பே கிடையாதா?

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பெரு மற்றும் சிறு தொழிலதிபர்களை மிரட்டிப் பணிய வைத்து வருகிறது. நூறாண்டுகளைக் கடந்து உயர்ந்து நிற்கும் டாடா  நிறுவனம் முதுகெலும்பற்றதாகிப் போனது.

பஜாஜ் மற்றும் பார்லே ஜி நிறுவனங்களுக்கும் இதேபோன்று அழுத்தம் வந்தபோது, அவர்கள் பணிந்தா போனார்கள். இந்த விசயத்தில் டாடாவின்  பயத்துக்குக் காரணம் என்ன? பத்திரிக்கையாளரும் பொருளாதார  வல்லுனருமான அருண் ஷோரி கூறியதைப் போல், பல தொழிலதிபர்கள் அரசை எதிர்க்கப் பயப்படுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் முதுகெலும்பு இருக்கும். ஆனால், தொழிலதிபர்களுக்கு அறவே இல்லை என்பது தான் உண்மை.

எனினும், குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்தபோது,  அதானி, அம்பானி மற்றும் டாடா ஆகிய 3 தொழிலதிபர்கள் தான் பலன் பெற்றார்கள். டாடா நிறுவனத்தைப் பொறுத்தவரை, அனைத்துக் கட்சிகளுக்கும் தேர்தல் நிதி  சமமாகக் கொடுக்கும். யாருக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததில்லை. ஆனால், துரதிருஷ்டவசமாக டாடா நிறுவனத்தின் செயல்பாடுகள் இன்று தலைகீழாக மாறிவிட்டன.

டாடா நிறுவனம் எவ்வளவு தைரியம் கொண்டது என்பதற்குச்  சான்றுகள் உள்ளன. மகாராஷ்டிராவில் சரத் பவார்  முதலமைச்சராக இருந்தபோது, சில தொழிற்சங்கங்களும், தீவிரவாதிகளும் மிரட்டினர். பவாரும் சமரச முயற்சி மேற்கொண்டார். ஆனால், எந்த மிரட்டலுக்கும் அஞ்சாமல் துணிவுடன் செயல்பட்டு வெற்றியும் கண்டது டாடா.  சில ஆண்டுகளுக்கு முன்பு அசாமில் டாடா டீ நிறுவனத்தைத்  தீவிரவாதிகள் தீயிட்டுக் கொளுத்தினர். அப்போதும் தங்கள் நிலைப்பாட்டில் வலுவாக நின்றதோடு, அரசாங்கத்தோடு சமரசம் செய்து கொள்ளவும் டாடா நிறுவனம் மறுத்துவிட்டது.

ஆனால், தனிஷ்க் விளம்பரத்தை இன்று நிர்ப்பந்தத்தின் பேரில் வாபஸ் பெறும் நிலைக்கு ரத்தன் டாடா சென்றுள்ளார். டாடா  நிறுவனம் தனக்குத் தானே குழி தோண்டிக் கொள்கிறது என்றே தெரிகிறது.

வெறுப்பு மற்றும் லாபம் என, இரண்டில் ஒன்றை எதிர்கொண்டாலும், குறைந்தபட்சம் ரத்தன் டாடா உறுதியாக நிற்க வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.

குறிப்பு: பிரதமர் மோடி ஆட்சியில் ரூ.860 கோடி செலவில் புதிய பாராளுமன்ற கட்டடத்தை ரத்தன் டாடா நிறுவனம் கட்ட ஒப்பந்தம் போட்டுள்ளது.

The post எதிர்த்து நின்ற ரத்தன் டாடா, தனிஷ்க் விளம்பரத்தில் தலைகுனிந்தது ஏன்? appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

ஆளே இல்லாத கடையில் ‘டீ’ ஆற்றிய பிரதமர் மோடி: குகைப் பாதை திறப்பு விழாவில் உச்சக்கட்ட நகைச்சுவை
இமாச்சலப்பிரதேசத்தில்  மணாலி-லே பகுதியில் உள்ள லாஹாவ்-ஸ்பிட்டி பள்ளத்தாக்குப் பகுதியை இணைக்கும் வகையில் 9.10 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. உலகின் மிக நீளமான இந்த குகைப் பாதைக்குக் கடந்த 2010 ஜூன் 28 ஆம் தேதி காங்கிரஸ் ஆட்சியில் சோனியா காந்தி அடிக்கல் நாட்டினார். தேசிய ஆலோசனை குழுத் தலைவர் என்ற முறையில் அவர் அடிக்கல் நாட்டினார்.

6 ஆண்டுகளில் இந்த குகைப் பாதையைக் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. மலையைக் குடைந்து குதைப் பாதை அமைக்கப்பட்டதால், சாலைப் பணி நிறைவடைய 10 ஆண்டுகளாகிவிட்டது.

இந்தக் குகைப் பாதைக்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த குகைப் பாதை மூலம் இமாச்சலப்பிரதேசத்தின் மணாலி- லடாக்கின் லே நகருக்கு இடையேயான பயண நேரம், 4 மணி நேரம் வரை குறையும். குளிர் காலத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும்போது, லாஹாவ்- ஸ்பிட்டி பள்ளத்தாக்குப் பகுதிகளில் 6 மாதங்கள் வரை போக்குவரத்து தடைப்படும்.

இனிமேல் போக்குவரத்து எவ்வித இடையூறுமின்றி தொடர்ந்து நடைபெறும். இந்தப் பாதையில் தினசரி 3 ஆயிரம் கார்கள் மற்றும் 1500 லாரிகள் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் செல்ல முடியும்.

https://twitter.com/annaverbee/status/1312636949119733760

”இந்த குகையைத் திறந்து வைக்க வரும் பிரதமர் மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளிப்பார்கள்” என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த குகைப் பாதையைப் பிரதமர் திறந்து வைத்தபோது பாதுகாவலர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. ஜீப்பில் நின்றவாறு, பிரதமர் கையசைத்துக் கொண்டே வந்தார். அப்போது குகைக்குள் யாருமே இல்லை.

இத்தகைய செயல் சமூக வலைத்தளங்களின் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மோடி சிறந்த நடிகர் என ஏராளமானோர் ட்விட் செய்திருந்தனர். ஏற்கனவே ஒருமுறை, படகு சவாரியின் போது ஆளே இல்லாத திசையை நோக்கி பிரதமர் மோடி கையை அசைத்து ‘போட்டோ’ எடுத்துக் கொண்டது, கடும் விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

The post ஆளே இல்லாத கடையில் ‘டீ’ ஆற்றிய பிரதமர் மோடி:  குகைப் பாதை திறப்பு விழாவில் உச்சக்கட்ட நகைச்சுவை appeared first on தேசிய முரசு - Desiya Murasu.