Parliament Archives - தேசிய முரசு - Desiya Murasu

கோத்ரா வன்முறையில் 18 ஆண்டுகளாகியும் நிவாரணம் வழங்கவில்லை : முன்னாள் துணை குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரி குற்றச்சாட்டு
2002 ஆம் ஆண்டு நடந்த கோத்ரா வன்முறைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குஜராத் அரசு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை என்று முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக நேஷனல் ஹெரால்டுக்கு அவர் அளித்த நேர்காணல்:

நமது அமைப்புகளில் கடமை உணர்வு குறித்துக் கற்பிக்கப்பட வேண்டும். நமது உச்ச நீதிமன்றம் மற்றும் நாடாளுமன்றம் மட்டுமல்ல, நம் அனைத்து அமைப்புகளும் இந்த விஷயத்தில் தோல்வியடைகின்றன.

பல சம்பவங்களில் சகிப்பின்மையைக் காண முடிகிறது. அரசாங்கமே இத்தகையைச் சகிப்பின்மையை ஆதரிப்பதால், இன்னும் நிலைமை மோசமாகியிருக்கிறது. அனைத்து சிறுபான்மையினத்தவர் மத்தியிலும் இது மோசமான விளைவை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் மற்ற குடிமக்களுக்கு இணையாக சிறுபான்மை மக்களும் நடத்தப்படவேண்டும். நம் நாட்டில் சமமாக நடத்தப்பட வேண்டும். அரசியல் சாசனத்தின் அம்சங்களை நாம் படிக்க வேண்டும். சமத்துவம், நீதி மற்றும் சகோதரத்துவத்தை நமது அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது. அரசியல் சாசனத்தில் இது உரக்கவும் தெளிவாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. சகோதரத்துவத்துடன் கூடிய ஒவ்வொரு சமுதாயத்திலும் நீதி என்பது அடித்தளம். உங்கள் குடிமக்களை நீங்கள் சமமாக நடத்தாவிட்டால், நீங்கள் நீதியை நிலைநாட்டவில்லை என்று அர்த்தம். அநேகமாக இன்றைக்கு இத்தகைய நீதி பெருமளவு காணாமல் போயிருக்கிறது.

2002 ஆம் ஆண்டு நடந்த கோத்ரா வன்முறைக்குப் பிறகு, நியாயமான நிவாரண உதவிகளைக் குஜராத் மாநில அரசு வழங்கவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையை அவர்களே சீரமைத்துக் கொண்டார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கம் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களிடம் இல்லை. அங்கு முஸ்லிம்கள் வாழ முடியாத சூழல் ஏற்பட்டது. கோத்ரா சம்பவம் நடந்து 18 ஆண்டுகளாகிறது. இந்த காலகட்டத்தில் ஒரு தலைமுறையே வளர்ந்து நிற்கிறது. தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதை வாழ்க்கை அவர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளது. இதே மோசமான சூழ்நிலை தான் சிறுபான்மையினர் வாழும் எல்லா இடங்களிலும் இருக்கிறது.

சமுதாயத்தில் வளர்ச்சி மற்றும் வறுமை போன்ற பிரச்சினைகளைத் திசை திருப்பவே லவ் ஜிகாத், தாய் மதம் திருப்பும் கோஷம் மற்றும் மதமாற்றத் தடைச் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளனர்.

மதச்சார்பின்மை என்பது அரசியல் சாசனத்தின் ஒரு அங்கம். மதச்சார்பின்மையை நாம் கடைப்பிடிக்காவிட்டால், நாம் அரசியல் சாசனத்தை அமல்படுத்தவில்லை என்று அர்த்தம். எல்லா மதத்தையும் இந்திய சமுதாயம் சமமாக நடத்தும் போது, சில மாநிலங்கள் மட்டும் இதில் மாறுபட்டு நிற்கின்றன.

பாஜக அரசின் மதப் பெரும்பான்மை போக்கால் சமுதாயத்துக்குப் பாதிப்பு ஏற்படும். அதோடு சகோதரத்துவம் மற்றும் சமத்துவமும் பாதிக்கப்படும். ஒவ்வொரு குடிமக்களுக்கும் உரிமை வழங்கும் நீதியும் மறுக்கப்படும்.

அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவை செயல்படுத்தும்போது, நடைமுறைகளைப் பின்பற்றியிருக்க வேண்டும். அத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதே என் கருத்து. மெஹ்பூபா முப்தி பாஜக அரசின் கூட்டணியில் இருந்தார். அதனால் அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டிருக்க வேண்டும்.

இந்திய-சீன உறவைப் பொறுத்தவரை, இதுவரை இருந்த அரசுகள் நன்றாக நிர்வகித்து வந்துள்ளன என்று நினைக்கிறேன். மன்மோகன் சிங் அரசு சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், இப்போது சில சிக்கல்கள் உள்ளன. நிலைமை கை மீறிப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தற்போது நிலைமை சற்று தடம்புரண்டுள்ளது. இரண்டு கைகளைத் தட்டினால் தான் ஓசை வரும் என்பதை அதிகாரத்தில் இருப்போர் புரிந்து கொள்ள வேண்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் அண்டை நாடான வங்கதேசத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எனினும், அது குறித்த விவாதத்தில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், அதில் தெளிவு தேவைப்படுகிறது. நாம் இந்தியர்கள் என்பதே ஒன்றுபட்ட எண்ணமாக இருக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் கேள்விக்குரியதாகும் போது, அதை எதிர்த்துப் போராட எனக்கு உரிமையும் கடமையும் உள்ளது” என்றார்.

The post கோத்ரா வன்முறையில் 18 ஆண்டுகளாகியும் நிவாரணம் வழங்கவில்லை : முன்னாள் துணை குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரி குற்றச்சாட்டு appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

ஆபத்தின் அறிகுறி : பிரதமர் கைக்கு மாறும் நாடாளுமன்ற ஜனநாயக அதிகாரம்! ஜனநாயகத்தில் சர்வாதிகாரியாக மோடி!
அதிகாரம் என்பது ஒரு தனி நபர், பிரதமர் அல்லது ஒரு குழுவின் கீழ் மையப்படுத்தப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு அரசியல் சாசனம் அளித்த அதிகாரம், தற்போது குறைந்து கொண்டு வருகிறது.

1668 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நிகழ்த்தப்பட்ட கத்தியின்றி ரத்தமில்லா புரட்சியால், இந்த மண்ணில் நாடாளுமன்ற ஜனநாயகம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை நிகழ்ந்தது. மன்னர் மற்றும் நாடாளுமன்றத்துக்கு இடையிலான முடிவைப் புரட்சி வெளிப்படுத்தியது. முழுமையான முடியாட்சியின் வீழ்ச்சி, நாடாளுமன்ற இறையாண்மையாக எழுச்சி பெற்றது.

கடந்த 1625 ஆம் ஆண்டு அரியணையில் ஏறிய முதலாம் மன்னர் சார்லஸ், தெய்வீக நம்பிக்கையுடையவராக இருந்தார். இதனால், தனது செயல்களுக்குக் கடவுளுக்கு மட்டுமே பொறுப்பு என்றும், வேறு யாருக்கும் பொறுப்பில்லை என்ற கருத்தைக் கொண்டிருந்தார். 1628 ஆம் ஆண்டு, தனிப்பட்ட பாதுகாப்புகளைக் கட்டமைக்க உரிமைச் சட்டத்தை அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை தமது அதிகாரத்துக்கு விடப்பட்ட சவாலாக எடுத்துக் கொண்ட மன்னர், இறுதியில், நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.

இந்த விவகாரம், மன்னருக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையே உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தது. 1649 ஆம் ஆண்டு மன்னரின் தலை துண்டிக்கப்பட்டது. முதலாம் சார்லர் மன்னருக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து ஜவஹர்லால் நேரு தனது ‘க்ளிப்ஸஸ் ஆஃப் வேல்டு ஹிஸ்டரி’ என்ற புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

”எப்போதும் மிகவும் பழமைவாதத்துடனும், விரைவான மாற்றங்களை வெறுத்து வந்த இங்கிலாந்து மக்கள், ஒரு கொடுங்கோலன் மற்றும் துரோக மன்னனை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

அதோடு, உள்நாட்டுப் போர் முடியவில்லை. இரண்டாம் மன்னர் ஜேம்ஸுக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையே மீண்டும் மோதல் தொடர்ந்தது. இரண்டாம் மன்னர் ஜேம்ஸை, மன்னர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அவரது மகள் மேரி மற்றும் டச்சு கணவர் வில்லியம் ஆகியோர் பதவியில் அமர்த்தியது நாடாளுமன்றம். இதைத்தான் புகழ்பெற்ற புரட்சி என்றும் கூறுகிறார்கள். இங்கிலாந்தில் முடியாட்சி முடிவுக்கு வந்து, நாடாளுமன்ற இறையாண்மை ஆரம்பமானது. கத்தியின்றி ரத்தமின்றி மலர்ந்த நாடாளுமன்ற ஜனநாயகமாக இது பார்க்கப்பட்டது.

மன்னர் வில்லியம்ஸின் ஆதரவுடன் 1689 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட உரிமைகள் சட்டத்தை நாடாளுமன்றம் வெற்றிகரமாக நிறைவேற்றியது. இதன்மூலம், நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி நிதி கையாளுதல் மற்றும் ராணுவத்தைப் பராமரிப்பதற்கு மன்னருக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் மன்னரின் அதிகாரம் ரத்து செய்யப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் சுதந்திரமாக நடைபெறவும், நாடாளுமன்றத்தின் பேச்சுச் சுதந்திரம் மற்றும் விவாதங்களில் வெளியே இருந்தோ அல்லது நீதிமன்றங்கள் மூலமோ தலையிடுவதற்கு இந்த சட்டம் தடை விதித்தது. நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட சட்டத்தை ஆதரிப்பதாக சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்ட பின், மேரி மற்றும் அவரது கணவர் வில்லியமுக்கு முடி சூட்டப்பட்டது.

புகழ்பெற்ற புரட்சி என்பது தெய்வீகக் கோட்பாட்டைச் சட்டவிரோதமாக்கியது. ஜான் லோக்கின் சமூக ஒப்பந்தக் கோட்பாட்டை ஆதரித்ததோடு, அரசியலமைப்பையும் உருவாக்கியது.

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் புகழ்பெற்ற புரட்சியின் மூலம் ஒரே இடத்தில் அதிகாரம் குவிவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அமைச்சரவை என்பது கருவாகும். அந்த அமைச்சரவையில் முதன்மையானவர் பிரதமர்.

அதிகாரத்தை ஒரே கையில், சிலரது கையில், குழு அல்லது பரம்பரை கையில் குவிப்பது கொடுங்கோன்மை என்று தாராளமாகச் சொல்லலாம் என்கிறார் அமெரிக்க அரசியலமைப்பின் தந்தையான ஜேம்ஸ் மேடிசன். அதிகாரத்தைப் பரவலாக்குவதில் நாடாளுமன்றம் முக்கியப் பங்காற்றுகிறது. கொடுங்கோன்மை மற்றும் எதேச்சதிகாரத்தைத் தடுப்பதில் நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இங்கிலாந்தில் நாடாளுமன்ற எதிர்க்கட்சியை, மாட்சிமைக்கு விசுவாசமான எதிர்ப்பாளர் என்று அழைக்கிறார்கள். நாடாளுமன்ற நடவடிக்கைகளில் நிழல் அமைச்சரவை முக்கிய பங்காற்றுகிறது.

இந்திய அரசியல் சாசனத்தின் தந்தைகள், அரசியல் சாசனத்தை உருவாக்கியபோது, புகழ்பெற்ற புரட்சியையும், அமெரிக்க அரசியல் சாசனத்தையும் கருத்தில் கொண்டனர்.

தற்போது இந்தியா புகழ்பெற்ற புரட்சிக்கு எதிர்த்திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஒருவர் கையில், பிரதமர் கையில், அல்லது ஒரு குழுவின் கையில் அதிகாரம் குவிந்துள்ளது. அரசியலில் இரட்டைத் தன்மை உருவாக்கப்படுகிறது. அரசியல் சாசனப்படி நாடாளுமன்றத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் குறைக்கப்படுகின்றன. முடிவு எடுக்கப்படுவது அமைச்சரவையிலிருந்து மற்ற சில அரசியல் சாசன நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. அசுரப் பெரும்பான்மை காரணமாக, நாடாளுமன்ற அதிகாரம் பிரதமரின் அதிகாரமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சர்வாதிகாரப் பிரதமர், வலுவற்ற அமைச்சரவை மற்றும் பலமற்ற எதிர்க்கட்சிகள் என்ற ஆபத்தான கலவை, இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும். மக்களவையில் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவர் கிடையாது. இந்தியாவின் பன்முகத் தன்மை கொண்ட இடமாக நாடாளுமன்ற ஜனநாயகம் பார்க்கப்படுகிறது. மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சி ஆகியவற்றின் அரசியலமைப்புக் கொள்கைகள், இந்த நோக்கத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய கொள்கைகளைத் தகர்க்கும் வகையிலேயே, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து, தலாக் தடைச் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவை கொண்டு வரப்பட்டன. இதன்மூலம், ஆளுபவர்கள் நாடாளுமன்றத்தை அவமதிக்கும் போக்கு தொடர்ந்தது. இத்தகைய சட்ட மசோதாக்கள் நாடாளுமன்ற தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படவில்லை. ராஜ்யசபையில், உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமலேயே மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன.

கடைசியாக நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டது. 3 விவசாயச் சட்டங்களை வலுக்கட்டாயமாக அரசு நிறைவேற்றியது. நாடாளுமன்றக் குழுக்கள் நீண்ட காலமாகச் செயலற்ற நிலையில் உள்ளன.

குடிமக்களின் தனியுரிமை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட ஆரோக்கிய சேது செயலி, நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் வெளியிடப்பட்டது. அதோடு, குளிர்காலக் கூட்டத்தொடர் தவிர்க்கப்பட்டதும், சமீபத்தில் நாடாளுமன்றத்துக்கு விழுந்த அடியாகும்.

இன்றைய இந்தியாவில் இங்கிலாந்தின் முதலாம் மன்னர் சார்லஸ் மற்றும் இரண்டாம் மன்னர் ஜேம்ஸ் ஆகியோர், இந்தியாவில் மறு அவதாரம் எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இரண்டாம் மன்னர் ஜேம்ஸ் மற்றும் முதலாம் மன்னர் சார்லஸ் மற்றும் பேராயர் வில்லியம் சான்கிராஃப்டை பதவி நீக்கம் செய்ய ஆலிவர் க்ரோம்வெல் இருந்தார். அவருக்கு மக்களும் ஆதரவு கொடுத்தார்கள். இரண்டாம் மன்னர் ஜேம்ஸ் மற்றும் பேராயர் வில்லியமை லேண்டன் டவருக்கு சிறைக் கைதியாக அனுப்பியபோது, அவர்கள் ஆசீர்வாதத்தைப் பெற காலில் விழுந்து வீரர்கள் மண்டியிட்டனர்.

இங்கிலாந்தின் புகழ்பெற்ற புரட்சியின் இந்நாளில், இந்தியாவில் ஓர் ஆலிவர் க்ரோம்வெல்கூட இல்லையே என்பதுதான் வருத்தமான செய்தி.

The post ஆபத்தின் அறிகுறி : பிரதமர் கைக்கு மாறும் நாடாளுமன்ற ஜனநாயக அதிகாரம்! ஜனநாயகத்தில் சர்வாதிகாரியாக மோடி! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

நீரோ மன்னனை மிஞ்சிய மோடி : கொரோனாவால் மக்கள் சாகும்போது ரூ.20,000 கோடியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடமா?
கொரோனா தொற்று பரவல் காரணமாக பொது முடக்கத்தை நரேந்திர மோடி அமல்படுத்துவதற்கு 4 நாட்களுக்கு முன்பு, தலைநகர் டெல்லியின் முகத்தையே மாற்றி அமைக்கும் மத்திய விஸ்டா மறுசீரமைப்புத் திட்டத்தின்கீழ், டெல்லியின் மையப்பகுதியில் உள் 90 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்துவது தொடர்பாகப் பாரதிய ஜனதா அரசு சட்டத்தையே மாற்றி அமைத்தது.

அந்த நிலத்தில் பிரதமருக்கான வீடு உட்பட புதிய நாடாளுமன்றம் கட்ட ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டம் வகுக்கப்பட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு சுகாதாரம் மற்றும் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளில் நாடே போராடிக் கொண்டிருக்கும் போது, இவ்வளவு செலவு செய்து நாடாளுமன்றக் கட்டிடம் கட்ட வேண்டியது அவசியமா? என்பது குறித்து சர்ச்சை எழுந்தது.

கொரோனா தொற்றுப் பரவலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பொதுச் சுகாதாரத்தை வலுப்படுத்தக் கூடுதல் பணம் தேவைப்படும் நிலையில், ரூ.20 ஆயிரம் கோடியில் நாடாளுமன்றக் கட்டிடம் அவசியமா? எனக் கேள்வி எழுப்பி, பிரதமர் மோடி மற்றும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சர் ஹர்தீப் புரி ஆகியோருக்கு சில நாட்களுக்கு முன்பு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் 60 பேர் கடிதம் எழுதினர். இந்த நேரத்தில் மத்திய அரசின் மறுசீரமைப்புத் திட்டம் தேவையற்றது என்று குறிப்பிட்டிருந்தனர். அந்த கடிதத்தை முடிக்கும் போது, ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த போது, நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டியிருந்தனர்.

அலங்கோல மோடி ஆட்சியின் அவலங்களை பாரீர்!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த திட்டம் தொடங்கியதிலிருந்தே சர்ச்சைகள் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்துவிட்டன. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் இந்திய அரசின் நாடாளுமன்றம் செயல்படுவதை, மாற்றியமைப்பது அவசரமும் அவசியமும் ஆகும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.

பரவலாகப் பார்க்கும் போது, இந்த மத்திய நகர்ப்புற சீரமைப்புத் திட்டத்தின் அவசியம் என்ன? நகரின் முக்கிய அடையாளமாக விளங்கும் இடங்களை இந்த திட்டம் எவ்வாறு மாற்றும்? இந்த திட்டத்தைச் செயல்படுத்த முறையான ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா? போன்ற கேள்விகள் எழுகின்றன.

பிரதமர் மோடிக்கு விருப்பமான இந்த திட்டத்துக்கு, நகர்ப்புற வளர்ச்சி நிபுணர்களும், அரசு அதிகாரிகளும், கட்டிடக்கலை நிபுணர்களும் வடிவம் கொடுத்துள்ளனர்.

தலைநகர் டெல்லியை அழகுபடுத்தும் வகையில், குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து இந்தியா கேட் வரை 4 கி.மீ தொலைவுக்கு மறுசீரமைப்புப் பணி நடைபெறவுள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் இப்போதைய குடியரசுத் தலைவர் மாளிகை கட்டப்பட்டது. திறந்த வெளியாகவும், சுற்றி பசுமை வெளியாகவும், பல்வேறு அரசு அலுவலகங்கள், நாடாளுமன்ற கட்டிடம், நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் ஆகியவற்றையும் குடியரசுத் தலைவர் மாளிகை பகுதி உள்ளடக்கியுள்ளது.

மறுசீரமைப்புத் திட்டம்

இதற்கான டெண்டரை மத்திய பொதுப் பணித்துறை கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்டது. 2022 ஆம் ஆண்டுக்குள் நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டி முடிக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டது.

இடப்பற்றாக்குறை காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டிடமும், மத்திய தலைமைச் செயலகமும் கட்ட வேண்டி அவசியம் ஏற்பட்டுள்ளதாக டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கான ஒப்புதலை மத்திய விஸ்டா குழு கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி அளித்தது. அப்போது நடந்த கூட்டத்தில், குழுவின் அரசு சாரா உறுப்பினர்களாக இருக்கும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆர்க்கிடெக்ட்ஸ் மற்றும் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டவுன் பிளானர்ஸ் பங்கேற்கவில்லை. வெளியில் உள்ள நிபுணர்கள் இல்லாமல் இந்த திட்டத்துக்கு அவசர, அவசரமாக ஒப்புதலைப் பெறவேண்டிய அவசியம் என்ன?

தேசிய நலன் கருதி இந்த திட்டம் செயல்படுத்துவதாக மத்திய விஸ்டா கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டம் குறித்து விவாதம் விஸ்டா குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை.

திட்ட மதிப்பீடு

புதிய நாடாளுமன்றம் மற்றும் மத்திய தலைமைச் செயலகம் கட்ட ரூ. 20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. கொரோனாவை எதிர்த்துப் போராட கேரள அரசு ஒதுக்கியிருக்கும் தொகைக்கு இணையானது இந்த தொகை. இந்த திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணத்தைவிட, 3 மடங்கு அதிகம் மட்டுமே (ரூ.67,111 கோடி) சுகாதாரத்துக்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

பட்ஜெட் ஒதுக்கீட்டிலிருந்து 3 கட்டமாக நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்து, முதல்கட்டமாக, இந்த ஆண்டுக்கு ரூ.3,033 ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், மறுசீரமைப்புக்கான ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டில் கூறப்படவில்லை.

மேலும், இந்த திட்டத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் ஒப்புதலைத் திரும்பப் பெறுமாறு, கடந்த மே மாதம் 20 ஆம் தேதி மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டணி மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

90 ஏக்கர் இடத்தில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டுவது குறித்து ஆட்சேபனைகள் வரவேற்கப்படுவதாக, கடந்த 2019 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக 1,292 ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன. சுற்றுச்சூழல் மோசமாகப் பாதிக்கப்படுவதோடு, பழமையான கட்டிடங்களை இடிப்பது தேவையற்றது என அந்த ஆட்சேபனைகளின் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டத்துக்கு எதிராக பொது நலன் கருதித் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் டெல்லி உயர் நீதிமன்றத்திலும், பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.

கடந்த 2016 ஆம் ஆண்டு டெல்லியில் 7 காலனிகளை ரூ.32 ஆயிரத்து 885 கோடியில் மறுசீரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது. அப்போது, பொதுமக்களின் கருத்தைக் கோரவில்லை. இந்த திட்டத்தைச் செயல்படுத்த, 14,031 மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. விதிமுறைகளை மீறி இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது. இதேபோன்று, ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான கிழக்கு கிட்வாய் நகர் திட்டத்திலும் ஏராளமான மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. இந்த இரு திட்டங்களிலும் விதிமீறல் இருப்பதாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

அதேபோன்று மத்திய விஸ்டா திட்டத்திலும் விதிமீறல்கள் நடந்துள்ளன. பிரிட்டிஷ் ஆட்சியைவிட மோடி அரசு மிகவும் மோசம் எனப் பல தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்த வெளியைப் பிரிட்டிஷ் ஆட்சியாளர் எட்வின் லுட்டியென்ஸ் போன்றோர் உருவாக்கினர். இப்போது அந்த திறந்தவெளி முழுவதும் அரசு அலுவலகங்களால் நிரப்பப்படவுள்ளது.

சுமையை ஏற்றும் மத்திய அரசு

கொரோனா பரவல் காரணமாக நாடே முடங்கியது. இதனால் அனைத்து தொழில்களும் முடங்கின. பொருளாதார நிலைமை அதலபாதாளத்துக்குச் சென்றது. ஏராளமானோர் வேலையிழந்தனர். இந்நிலையில்,ரூ.20 லட்சம் தொகுப்பு நிதியை மத்திய அரசு அறிவித்தது. இந்த தொகை பல்வேறு பிரிவினர் மீண்டு எழுந்து வர உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டது.

ஆனால், இதுவரை வெறும் ரூ. 3 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியில், ரூ.1.20 லட்சம் கோடி வரை மாநில அரசுகளுக்குக் கடனாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கோடி இந்தியர்கள் வாழும் நம் நாட்டில், ஒவ்வொருவக்கும் ரூ.8 வரை கடன் சுமை ஏற்றப்பட்டுள்ளது.

மீதமுள்ள ரூ.17 லட்சம் கோடி இதுவரை வழங்கப்படவில்லை. இதன்மூலம், இந்திய மக்களை மோடி அரசு ஏமாற்றியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், ரூ.20 ஆயிரம் கோடி செலவில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் அவசியம்தானா? என்ற கேள்விக்கு மத்திய அரசிடமிருந்து இதுவரை பதில் இல்லை. மோடி அரசு மக்கள் நலன் மீது அக்கறை இல்லாத அரசு என்பதற்கு, இதைவிடப் பெரிய சான்று தேவையில்லை.

மத்திய விஸ்டா திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிலிருந்த 80 சதவீத நிலம் பறிக்கப்பட்டுள்ளது.

தேசிய அருங்காட்சியகம், கலை மற்றும் தேசிய காப்பகங்களுக்கான இந்திரா காந்தி தேசிய மையம் இடிக்கப்படும்.

இந்த திட்டம் குறித்து நாடாளுமன்றத்திலோ, பொதுவெளியிலோ விவாதிக்கப்படவில்லை.

மரங்களை வெட்ட அனுமதி கொடுக்கும் முன்பு, அங்கு இருந்த மரங்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கவில்லை.

இந்த திட்டத்தின் மூலம் நாடாளுமன்றம் அருங்காட்சியகமாகவும், தேசிய அருங்காட்சியகம் அரசு கட்டிடமாகவும் மாற்றப்படும். தேசிய அருங்காட்சியகத்தின் கலைப்பொருட்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வடக்கு மற்றும் தெற்கு பிளாக்குகளில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகச் சொல்லி, அங்குள்ள கட்டிடங்களை இடிக்கப் போகிறார்கள். இதே போன்ற அச்சுறுத்தல் குடியரசுத் தலைவர் மாளிகை, சன்ஸாட் பவன், தேசிய கலைப்பொருட்கள் மற்றும் இந்தியா கேட்டுக்கு இல்லையா? என்ற கேள்விக்கு மத்திய அரசு மவுனம் சாதிக்கிறது.

சுதந்திர அறிவிப்பை வெளியிட்ட நள்ளிரவில், தற்போதைய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மத்திய மண்டபத்திலிருந்து பண்டிதர் ஜவஹர்லால் நேரு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை மறக்க முடியுமா? போராடிப் பெற்ற சுதந்திரத்தை அவர் வார்த்தைகளால் வரவேற்ற விதம், உற்சாகத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தின. பிரிட்டிஷாரிடம் போராடி நாம் பெற்ற சுதந்திரத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன டெல்லியின் இதுபோன்ற பழமையான கட்டிடங்கள். பழைய கட்டிடங்களை இடித்துத்தான் புதிய வரலாறு படைக்க வேண்டுமா?

அடிக்கடி மாற்றுவதற்கு, வரலாறு என்பது காலில் போடும் செருப்பு அல்ல!

The post நீரோ மன்னனை மிஞ்சிய மோடி : கொரோனாவால் மக்கள் சாகும்போது ரூ.20,000 கோடியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடமா? appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

கேள்வி நேரம் ரத்து: ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தும் மோடி அரசு
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தை ரத்து செய்ததன் மூலம், இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தின் மீது மோடி அரசு தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அரசின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்ப நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இடமுண்டு. பெரும் பிரச்சினைகளில்,  அரசாங்கத்தை உறுப்பினர்கள் கேள்வி கேட்பது இதுவரை வழக்கமாக இருந்தது.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவலுக்குப் பிறகு, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கும் என்றும், கேள்வி நேரம் ரத்து செய்யப்படுவதாகவும் மோடி அரசு அறிவித்தது.

நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் என்பது இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்த நடைமுறை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் இந்தியாவில் இந்த நடைமுறை தொடர்ந்து கொண்டிருந்தது. அரசை கண்காணிக்க இத்தகைய கேள்வி நேரம் மூலம் நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலால் முன் எப்போதும் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.  நாடாளுமன்ற கேள்வி நேரத்தை தவிர்க்க, ஒரு தொற்றுநோயை பயன்படுத்தியுள்ளனர்.  நூற்றுக்கணக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி, அரசு செயல்பாடுகளுக்கு ஆலோசனை வழங்கவும் இந்த கேள்வி நேரம் பயன்படுகிறது. உதாரணமாக, புதுடெல்லி மறுசீரமைப்பு போன்ற திட்டங்களை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. இது தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள், இத்திட்டங்களை செவ்வனே செயல்படுத்த ஒரு கருவியாக உள்ளது. அதிகாரிகளும் இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் பொறுப்பில்  உள்ளனர்.

கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டதால் எழுந்துள்ள கடும் விமர்சனங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ள நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, ”கேள்வி நேரத்தின் போது எழுத்துப்பூர்வமான கேள்விகளே அதிகம் இருக்கும். அவை, பொது நலன் சார்ந்ததாக இல்லை. இங்கிலாந்தின் கேள்வி நேரம் நடைமுறைக்கு இந்தியாவில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக” தெரிவித்தார்.

ஜனநாயக ரீதியில் எழுப்பப்படும் குரல்களை தடுத்து நிறுத்தவும், தங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் கேள்விகளை தடுக்கவும் இத்தகைய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
உதாரணத்துக்கு, சுரங்க மற்றும் கனிம (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்ட முன்வடிவுக்கு கருத்து தெரிவிக்க, வழக்கத்துக்கு மாறாக 10 நாட்கள் குறுகிய காலம் வழங்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோத சுரங்க வரையறையை மாற்றக்கூடியது. இந்த முக்கியமான சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க பொதுமக்கள் பங்கேற்பதில் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை என்பது தெளிவாகிறது.

கடந்த சில ஆண்டுகளாக அதிகாரக் குவியல் மற்றும் ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மோடி அரசு மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் பட்சத்தில், மழைக்கால கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு செயல்பாடும் முழுமையாக நடைபெறும் என்பதை, மோடி அரசு உறுதி செய்ய வேண்டும்.

( Source: Scroll.in )

The post கேள்வி நேரம் ரத்து: ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தும் மோடி அரசு appeared first on தேசிய முரசு - Desiya Murasu.