Pandit Jawaharlal Nehru Archives - தேசிய முரசு - Desiya Murasu

ஒவ்வொரு இந்தியரும் இந்துவே; பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் சாகாவரம் பெற்ற வார்த்தை – மிருதுலா முகர்ஜி
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற கோஷத்தை எழுப்பியபோதே, இந்துயிசத்தின் கம்பீரம் வீழ்ந்துவிட்டது. கடந்த 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 1945 ஜூன் மாதம் வரை சிறையிலிருந்தபோது, ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ என்ற புத்தகத்தைப் பண்டிதர் ஜவஹர்லால் நேரு எழுதினார். அதில் இந்துயிசம் என்றால் என்ன? என்பது குறித்த தகவலையும், அதன் பிரதிபலிப்பு மற்றும் அறிவுசார்ந்த விவாதத்தையும் அதன்மூலம் நேரு தொடங்கி வைத்தார்.

எதிர்காலத்தில் இந்து மதம் எவ்வாறு எல்லாம் தவறாகக் கையாளப்பட வேண்டும் என்பதைத் தீர்க்கதரிசனத்தோடு பதிவு செய்திருக்கிறார்…

” இந்து என்ற வார்த்தை நமது பண்டைய இலக்கியத்தில் இல்லை. இந்து என்பதற்கு ஓர் இந்திய புத்தகத்தில் குறிப்பு இருப்பதைப் பற்றிச் சொல்கிறேன். கிறிஸ்து பிறப்புக்குப் பின் எட்டாம் நூற்றாண்டில் வெளியான தாந்த்ரிக் படைப்பில், ‘இந்து’ என்றால் மக்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து மதம் என்பது, குறிப்பிட்ட மக்களால் பின்பற்றப்பட்ட மதம் அல்ல. ஆனால், அவெஸ்டாவிலும் பழைய பாரசீக மொழியிலும் இது காணப்படுவதால், இந்த வார்த்தை மிகவும் பழமையானது என்பது தெளிவாகிறது. மேற்கு மற்றும் மத்திய ஆசியாவின் மக்களால் இந்தியாவிற்காக ஆயிரம் ஆண்டுகள் அல்லது அதற்குப் பிறகு பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அல்லது சிந்து நதியின் மறுபுறத்தில் வசித்த மக்களுக்காக இந்து என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

இந்த சிந்து என்ற பழைய வார்த்தை தான் இந்துவாக மாறியிருக்கிறது. இந்து, இந்துஸ்தான், இந்தியா என்று மாறியிருக்கிறது. இந்து என்பது குறிப்பிட்ட மதத்துடன் தொடர்புடையது என்று அதன்பின்னர் தான் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் ஆரிய தர்மம் தான் பழமையான மதம், இது ஒரு நெறிமுறைக் கருத்தாகும். இது தார்மீக நெறிமுறையும் நீதியுமானதாகும். மனிதனின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் முழுவதையும் உள்ளடக்கியது. ஆரிய தர்மத்தில் இந்தியாவில் தோன்றிய அனைத்து நம்பிக்கைகளும் (வேத மற்றும் வேதமற்ற) அடங்கும். இதனை புத்த மதத்தினர், ஜெயின்கள் போன்ற, வேதங்களை ஏற்ற அனைவரும் பயன்படுத்தினர். புத்த மதத்தில் இதனை ஆரிய வழி இரட்சிப்பு என்று அழைப்பார்கள்.

மிருதுலா முகர்ஜி

இந்தியாவின் எந்த ஒரு பழமையான நம்பிக்கைக்கும் (புத்த மதம் மற்றும் ஜெயின் மதம் உட்பட) சனாதன தர்மம் என்று அர்த்தம். இத்தகைய வெளிப்பாடு பண்டைய பண்பாட்டைப் பின்பற்றுவதாகக் கூறும் இந்துக்களிடையே சில மரபுவழி அம்சங்களால் இன்று ஏகபோகமாக உள்ளது.

புத்த மதமும் ஜெயின் மதமும் நிச்சயம் இந்துயிசமோ அல்லது வேத தர்மம் கூட இல்லை. அவர்கள், இந்திய வாழ்க்கை முறை, கலாச்சாரம் மற்றும் தத்துவத்தோடு இந்தியாவில் வளர்ந்தனர்.

புத்த மதத்தினரும் ஜெயின் மதத்தினரும் இந்து நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்தாலும், அவர்கள் நூறு சதவீத இந்திய தயாரிப்புகளே. ஏன் இதைக் கூறுகிறேன் என்றால், இந்திய கலாச்சாரம் என்பது இந்து கலாச்சாரம் என்று தவறாக வழிநடத்தப்படுகிறது. பிற்காலத்தில் இந்த கலாச்சாரம் இஸ்லாத்தின் தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆனாலும், இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையும், தனித்துவமும் நிலைத்திருந்தது. இந்துயிசம் என்பது ஒரு நம்பிக்கையாக, தெளிவற்ற, உருவமற்ற, பல தரப்புகளைக் கொண்டதாகவும், எல்லா மனிதர்களுக்குமானதாகவும் இருக்கிறது. இத்தகைய இந்துயிசத்தை குறிப்பிட்ட மதம் சார்ந்ததாக வரையறுப்பது கடினம். இந்து மதம் ஒரு மதமா? என்பதை நிச்சயமாக சொல்ல முடியாது. அதன் தற்போதைய வடிவத்திலும், கடந்த காலங்களிலும் பல்வேறு நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் தழுவுகிறது. பெரும்பாலும் ஒருவருக்கொருவர் எதிர்ப்பு அல்லது முரண்பாட்டை வளர்த்திருக்கிறது.

இந்து மதம் என்ன என்பதை, மகாத்மா காந்தி வரையறுக்க முயன்றார். இந்து மதத்தை வரையறுக்குமாறு என்னிடம் கேட்டபோது, அகிம்சை வழிமுறை மூலம் உண்மையைத் தேடுங்கள் என்றேன். ஒருவர் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவராக இருந்தாலும், அவர் இந்து என்று தான் அழைக்கப்படுகிறார். இந்துயிசம் என்பது மதத்தின் உண்மை. கடவுளின் உண்மை. கடவுள் மறுப்பையும் நாம் அறிவோம். ஆனால், உண்மை மறுப்பை நாம் அறிந்ததில்லை…

எனவே, பழங்காலத்தைக் குறிப்பிட்டு இந்து அல்லது இந்துயிசம் என்பது இந்திய கலாச்சாரத்துக்கு சரியற்றதாகவோ, விரும்பத்தகாததாகவோ இருக்கிறது. எனினும், சிந்தனையின் பல்வேறு அம்சங்கள் பண்டைய எழுத்துகளில் பொதிந்துள்ளன. அவை, கலாச்சாரத்தின் மேலாதிக்க வெளிப்பாடாகவே இருந்தன. அந்த சொற்களை இன்று வரை பயன்படுத்துவது இன்னும் தவறானதாகும்.

நீண்ட கால பழமையான நம்பிக்கையும் தத்துவமும் முக்கியமான வாழ்க்கை முறையாகவும், உலகத்தைப் பற்றிய கண்ணோட்டமாகவும் இருந்தவரை, அவை பெரும்பாலும் இந்திய கலாச்சாரத்துடன் ஒத்து இருந்தன. ஆனால், அனைத்து விதமான சடங்கு மற்றும் ஆன்மீகம் மற்றும் கொண்டாட்டங்களால் மதம் வளர்ந்தபோது, அது மேலும் ஒன்றாகவும் கலப்பு கலாச்சாரத்தை விடக் குறைவானதாகவும் இருந்தது. தங்கள் மதத்தில் தீவிரப் பற்று கொண்ட கிறிஸ்தவர் அல்லது முஸ்லீம்கள் கூட இன்னும் இந்திய கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையோடு தங்களைப் பொருத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் மதத்தை மாற்றாமல், தங்களை இந்தியராக ஐக்கியமாக்கிக் கொண்டனர்.

நாடு அல்லது கலாச்சாரம் அல்லது நமது மாறுபட்ட மரபுகளின் வரலாற்றுத் தொடர்ச்சியைப் பொருத்தவரை, ‘இந்தியன்’ என்பதற்கான சரியான சொல் ‘இந்தி’. இந்துஸ்தானின் சுருக்கப்பட்ட வடிவமான ‘ஹிந்த்’ என்ற சுருங்கிய வார்த்தையிலிருந்து இந்தியன் என்ற வார்த்தை உருவாகியிருக்கிறது. ‘ஹிந்த்’ என்ற வார்த்தை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. மேற்காசிய நாடுகளான ஈரான், துருக்கி, ஈராக், ஆப்கானிஸ்தான், எகிப்து போன்ற நாடுகளில் இந்தியாவை ‘ஹிந்த்’ என்று தான் இன்றும் அழைக்கிறார்கள். ஒவ்வொரு இந்தியரும் இந்து என்றே அழைக்கப்படுகிறார்கள். இந்து என்பது மதம் அல்ல; இந்துயிசத்தை மதமாக பின்பற்றுபவர்கள் போலவே, முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் நம் நாட்டில் இந்துக்களே.

துரதிருஷ்டவசமாக, ‘இந்தி’ என்ற சொல் சமஸ்கிருதத்தின் தேவநாகரி எழுத்துகளுடன் தொடர்புடையதாகிவிட்டது. எனவே, அதனைப் பெரிய அளவில் இயற்கையாக முக்கியத்துவம் கொடுத்துப் பயன்படுத்துவது கடினமாகியிருக்கிறது. இன்று இந்துஸ்தானி என்ற சொல் இந்தியருக்குப் பயன்படுத்தப்படுகிறது. அது நிச்சயமாக இந்துஸ்தானிலிருந்து தான் பெறப்பட்டது.

நமது கலாச்சார மரபுக்கு நாம் எந்த வார்த்தையைப் பயன்படுத்தினாலும், இந்தி அல்லது இந்துஸ்தானி என்பது கடந்த காலங்களில் இந்திய தத்துவ கண்ணோட்டத்திலிருந்தே பெறப்பட்டதாகும். இது இந்திய கலாச்சார மற்றும் இன வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்திய அம்சமாகும்.

வெளிநாட்டுக் கூறுகளில் ஒவ்வொரு ஊடுருவலும் இந்த கலாச்சாரத்துக்கு ஒரு சவாலாக இருந்தது. புதிய அணுகுமுறை மற்றும் உற்றுநோக்குதலால் அந்த சவாலை முறியடித்து வெற்றி கண்டோம். இது புத்துயிர் பெறுவதற்கான ஒரு செயல்முறையாகவும், அத்தகைய கலாச்சார செடிகளிலிருந்து புதிய பூக்களும் பூத்தன. எனினும், அதன் பின்னணியும் அத்தியாவசிய அடிப்படையும் அப்படியே உள்ளன”.

நேருவின் இந்த எழுத்து, இந்தியர்களின் தலையெழுத்தை மாற்றக்கூடிய வல்லமை பெற்றது. இந்து மதத்தை தங்களுக்குப் பட்டா போட்டுக் கொண்டதாகச் சொல்லித் திரியும் அழிவு சக்திகளிடமிருந்து தப்பிக்க, நேருவின் இந்த எழுத்துகள் தான் இன்றைக்கும் மக்களுக்கான ஆயுதமாக இருக்கிறது.

The post ஒவ்வொரு இந்தியரும் இந்துவே; பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் சாகாவரம் பெற்ற வார்த்தை – மிருதுலா முகர்ஜி appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வுகண்ட தீர்க்கதரிசி ! ராஜாஜிக்கு புகழ்மகுடம் சூட்டிய நேரு!
சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் 1948 ஆம் ஆண்டு ஜுலை 24 ஆம் தேதி சி. ராஜகோபாலாச்சாரி அவர்களின்  உருவப்படத்தை, அப்போதைய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அப்போதைய சென்னை சட்டப்பேரவை சபாநாயகர் ஜே. சிவசண்முகம் பிள்ளை மற்றும் பீதாபுரம் இளவரசர் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் ஜவஹர்லால் நேரு ஆற்றிய உரை :

திரு. சபாநாயகர் அவர்களே, இளவரசரே, நண்பர்களே!

இந்த நிகழ்வில் எதைச் சொன்னாலும் அது எனக்குப் பெருமையாகவும் சங்கடமாகவும் இருக்கும். இந்த நிகழ்வில் பங்கேற்க என்னை அணுகியபோது, எதார்த்தமாகவும், மகிழ்ச்சியுடனும் நான் ஒத்துக்கொண்டேன். அப்போது, இந்த நிகழ்வில் ஏதாவது பேச வேண்டுமே என்று நினைத்தபோதே சிரமம் தொடங்கியது. பல்வேறு நிகழ்வுகளில் பல்வேறு விஷயங்களைப் பேசியிருக்கிறேன். ஆனால், என் நெருங்கிய நண்பரும், சகாவுமான ராஜாஜியைப் பற்றிப் பேசுவது எப்போதும் கடினம்தான். அவரைப் பற்றி தற்செயலாகவோ அல்லது அலட்சியமாகவோ ஒருவரால் பேசிவிட முடியாது. ஒருவரைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதாலேயே, அவருக்கு மிக  நெருக்கமானவராக இருக்க முடியாது. அதனால் விஷயத்தை எங்கிருந்து தொடங்குவது? எனினும் இந்த நிகழ்ச்சியில் நீங்கள் என்னுடன் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது.

கடந்த 28 ஆண்டுகளாக ராஜாஜியுடன் நெருங்கிப் பழகி வருகிறேன். இருவரும் இணைந்து பல்வேறு நெருக்கடிகளை, பல சிரமங்களை, பல பிரச்சினைகளை சந்தித்துள்ளோம். நாங்கள் அடிக்கடி ஒருவருக்கொருவர் வேறுபட்டுள்ளோம். அரசியல் களத்தில் நாங்கள் அடிக்கடி இணைந்தே பணியாற்றியுள்ளோம். அதனால், என்னுடன் பல ஆண்டுகள் இணைந்து பணியாற்றிய சகா என்பதைவிட, அவர் இந்திய கவர்னர் ஜெனலராக இருந்ததை அரிதாகத் தான் நினைப்பேன். பல கட்டங்களில் எங்கள் இருவரிடையே நெருங்கிய நட்பு தொடர்ந்தபோதிலும், ராஜாஜி கவர்னர் ஜெனரல் ஆனது எனக்கு மிகுந்த திருப்தியை அளித்தது.

இந்த 28 ஆண்டு காலத்தைப் பற்றி உங்களிடம் இப்போது குறிப்பிடுகிறேன். அரசியல் குறித்து எப்போதாவது பேசும்போது,   நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் வேறுபட்டு நின்றதுண்டு.  சில முக்கிய பிரச்சினைகளில் எங்கள் அணுகுமுறை வித்தியாசமாக இருந்ததாக நாங்கள் உணர்ந்தோம்.

அணுகுமுறையில் அந்த வேறுபாடு இப்போது அல்லது எதிர்காலத்தில் எந்தவொரு விஷயத்திலும் தெளிவாகத் தெரியவில்லையா? என்று எனக்குத் தெரியவில்லை. நபர்கள் ஒன்றாகச் செயல்படும்போது, அவர்கள் எல்லாவற்றிலும் உடன்படுகிறார்கள் என்று அர்த்தமல்ல. மாற்றுக் கருத்து இருப்பது தவிர்க்க முடியாதது. ஆனால், ஒரு விஷயத்தில் மற்றும் அதனை அணுகுவதில் அடிப்படை அடையாளம் இருந்தால், இருவருக்கிடையே நம்பிக்கையும் நல்ல நோக்கமும் இருந்தால் கருத்து வேறுபாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. அவ்வாறு அவர்கள் செயல்படும்போது, ஒருவருக்கொருவர் தீங்கோ, காயமோ ஏற்படுத்திக் கொள்வதில்லை. கட்டுப்பாடுகளோ அல்லது ஒத்த கருத்து இல்லாததோ ஜனநாயகம் என்று அர்த்தம் ஆகாது. ஆனால், கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருப்பதற்கான திறன், அவற்றிலிருந்து வேறுபாட்டைச் சகித்துக் கொள்வதற்கும், ஒவ்வொரு கருத்து வெளிப்பாட்டுக்கும் ஒவ்வொரு சுதந்திரத்தை வழங்குகிறது. ஆனால், எந்த முடிவு ஏற்பட்டாலும், அது நம் கருத்துக்கு மாறுபட்டதாக இருந்தாலும் அவர்களுடன் இசைந்து போக வேண்டும். இல்லையென்றால், நாம் சிதறுண்டு போகலாம்.

அதனால் ராஜாஜியை நினைக்கும் போது, இந்த விஷயங்கள் எல்லாம் என் மனதில் வந்து செல்கின்றன. எனது சிறு வயதிலேயே பல ஆண்டுகளுக்கு முன்பு  பல்வேறு கொள்கைகளோடு என்னை இணைத்துக் கொண்டேன். நன்றாகவே இருந்தது. அவற்றுக்கு இன்றுவரை நான் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால், அவை குறிப்பிட்ட குறிக்கோள், குறிப்பிட்ட வேலை முறை, அணுகுமுறை போன்றவற்றைக் குறிக்கின்றன. ஆனால், நான் இன்றும் அவற்றுடன் இணைந்திருந்தாலும், முன்பைவிட முக்கியத்துவம் குறைவாகவே உள்ளது. ஏன்? முதன்மையான விஷயமாக நான் உணர ஆரம்பித்தது, மதத்தையோ, அரசியலையோ, பொருளாதாரத்தையோ அல்லது வேறு எவற்றையோ போதித்தாலும், தனிப்பட்ட நபர் மிகவும் பெரிதல்ல. இதில் முதன்மையான விஷயம் என்னவென்றால், அந்த தனிப்பட்ட நபர் நேர்மையானவராக இருக்க வேண்டும். அந்த நபர் நேர்மையானவராக இல்லாவிட்டால், அவர் போதிக்கும் உயர்ந்த அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் நன்மை அளிப்பதாக இருக்காது.

ஆரம்பக் காலங்களில்  நான் நேர்மைக்கு மதிப்பு கொடுத்தேன். குறிப்பிட்ட கொள்கை மீது கருத்தை வெளிப்படுத்துவது முக்கியம்.  பல்வேறு கொள்கைகள் மற்றும் கருத்துகளை வெளிப்படுத்தியவர்களின் நேர்மையை எடுத்துக் கொள்ளலாம் என்று நான் உணர்ந்ததுண்டு.  ஆனால், அதன்பிறகு கிடைத்த அனுபவம், அதனைக் குறைவாக எடுத்துக் கொள்ள முடியாது என்று காட்டியது. உண்மையில், உயர்ந்த லட்சியங்கள், குறைந்தபட்சம் உயர்ந்த கொள்கைகளை முன்வைப்பது பெரும்பாலும் அடிப்படை நோக்கத்துக்காகச் சுரண்டப்பட்டது. அடிப்படை நோக்கங்கள் வேண்டுமென்றே சுரண்டப்படுவதைத் தவிர,அறியாமலேயே ஒரு குறிப்பிட்ட உன்னதமான உணர்வின்  வெளிப்பாட்டின் மூலமும், உன்னதமான நடவடிக்கைகள் மூலமும் அவர்கள் தங்கள் நாட்டிற்குக் கடமையைச் செய்திருக்கிறார்கள் என்றும் நம்மில் பலர் நினைத்தார்கள். எனவே, தனிப்பட்ட நபர் வெளிப்படுத்தும் குறிப்பிட்ட அரசியல் அல்லது பொருளாதாரக் கொள்கையை விட, தனிப்பட்ட நபரின் நேர்மைக்கு நான் பெரும் மதிப்பளிக்கத் தொடங்கினேன். இருந்தபோதிலும், ஒருவேளை தேசிய, சர்வதேச விவகாரங்களைக் கையாளும்போது, அது முக்கியமானதாக இருந்தாலும் ஒருவர் நேர்மையின் அடிப்படையில் செல்ல வேண்டியதில்லை. சில கொள்கைகளை நாம் தொடர வேண்டும். நேர்மை என்பது அடிப்படை விஷயம், அதில் கொள்கைகள் வளரக்கூடும். இரண்டு நேர்மையாளர்கள் முழுவதும் ஒருவருக்கொருவர் எதிர்க்கக்கூடும். தாங்கள் வேறுபட்டவர்களாக அவர்கள் நினைக்கக் கூடும் என்பதை ஒருவர் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ஒருவரை ஒருவர் ஏன் எதிர்க்கக் கூடாது என்பதற்கான காரணம் அவர்களிடம் இருப்பதில்லை. அவர்கள் ஒருவரையொருவர் மதிக்கலாம், ஒருவருக்கொருவர் சண்டையிடலாம். ராஜாஜி தீவிரமான  வலுவான நம்பிக்கைகளை கடைப்பிடித்தவர் என்பதாலும், அதன்படி நடப்பவர் என்பதாலும், இந்த உண்மையை நான் வலியுறுத்தினேன்.

தமது ஆரம்பக் காலங்களில் மகாத்மா காந்தியிடம் பெரும் செல்வாக்கு பெற்றிருந்தவர் ராஜாஜி  என்பது உங்களுக்குத் தெரிந்ததே. பல்வேறு பிரச்சினைகளில் மகாத்மா காந்தியின் அணுகுமுறையை அவர் ஏற்றுக் கொண்டவர். அதேசமயம், ஒருவர் சொல்வதை எல்லாம் ஏற்றுக் கொண்டவர் அல்ல, அது மகாத்மா காந்தியாக இருந்தாலும்கூட. சிலவற்றை அவர் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அவருடன் விவாதித்திருக்கிறேன், விட்டுத்தரமாட்டார். மகாத்மா காந்தி கூறியதைப் போல் குறிப்பிட்ட விஷயங்களில் நல்ல சூழ்நிலை இருந்தால் அவர் விட்டுக் கொடுப்பார். எழுத்துக்கள் மற்றும் வாதங்களின் கடுமையான போருக்குப் பின், அதனை விட்டுக் கொடுப்பது கடினம். மகாத்மா காந்தியைப் போன்ற ஆதிக்க ஆளுமை கொண்ட ஒருவரிடம், அவர் முன்னே நிற்கும் நபர் உருக்குலைந்துவிடுவார்; அதாவது, மனரீதியாக உருக்குலைவதைச் சொல்கிறேன். அவரது முடிவில் ஒருவர் நம்பிக்கை வைத்துவிட்டால், அவர் சொல்வதை எல்லாம் ஏற்பார். இரண்டாவதாக, இவரைப் போன்ற ஆதிக்க ஆளுமைமிக்கவர் முன்பு, ஒருவரது மனது விமர்சன ரீதியாக செயல்படாது. அது நம் எல்லோருக்கும் பொருந்தும். ஏனென்றால், பல்வேறு விஷயங்களில் அவர் மீது நம்பிக்கை வைப்பதால், விமர்சன ரீதியாகவோ, திறனுடனோ நமது மனது செயல்படாது. மகாத்மா காந்தி மீதான ராஜாஜியின் நம்பிக்கை மிகப் பெரியதாக இருக்கலாம். ஆனால், என்ன நடந்தாலும் கண்டுகொள்ளாமல் உறங்குவதற்கு தன் மனதை அவர் அனுமதித்தது இல்லை. சாதக, பாதக அம்சங்களின் அடிப்படையிலேயே அவர் பரிசீலிக்க விரும்புவார்,அதன் அடிப்படையில் சொந்தமாக முடிவுக்கு வருவார். அவர் யாருக்காவது விட்டுக் கொடுத்தால், அது நிதானம் மற்றும் நம்பிக்கையுடையதாக இருக்கும். இவை இரண்டும் இல்லாவிட்டால் அவர் விட்டுக் கொடுக்கமாட்டார். எனவே, சில சமயங்களில் ராஜாஜி எங்களுடன் ஏற்புடையவரல்லாதவராக இருந்திருக்கலாம், இல்லை, அவர் எங்களுடன் அடிக்கடி ஏற்புடையவராக இருந்திருக்கலாம். எனினும், அவருடனான எங்கள் விவாதத்தின்போது ஒவ்வொரு கேள்விக்கும் அவர் சிறப்பாக பகுத்தாய்வு செய்வார். அதேபோல், எங்களின் கருத்தை அவர் ஏற்கிறாரோ, இல்லையோ, அவர் எழுப்பும் ஒவ்வொரு கேள்வியையும் நாங்கள் அவருடன் விவாதிப்போம். சிக்கலான கேள்விகளையோ, பிரச்சினைகளையோ இந்தியாவிலேயே ராஜாஜியைப் போன்ற ஒரு சிலரிடமே நான் விவாதிக்க விரும்புவேன். அது சிறிய பிரச்சினையாக இருந்தாலும் விவாதத்துக்குப் பின் அவரது முடிவை நான் ஏற்பேனா?, இல்லையா? என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அவருடனான விவாதம் எனக்கு நன்மையாகவே இருக்கும்.  பிரச்சினை வெளிச்சத்துக்கு வருவதோடு, அநேகமாக அவருடன் உடன்படுவேன். அது முக்கியமல்ல. இதுபோன்ற புத்திக் கூர்மை உடையவர்கள், புத்திக் கூர்மை மட்டுமல்ல, புத்தியுள்ளவர்கள் உயர்ந்த நேர்மை மற்றும் சுயமான தியாக மனம் கொண்டவர்கள் நாட்டுக்குக் கிடைத்த விலைமதிப்பற்ற சொத்து.

இப்போது மற்றொரு விஷயத்தை உங்கள் முன் வைக்கிறேன். ஒவ்வொரு நாடும் ஒன்றுக்கொன்று ஒத்தாசையாக இருக்கின்றன. மேலும் ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிட்ட தனித்துவம் அல்லது அதற்கென மேதாவித்தனம் இருக்கும். இன்று இந்தியாவில் பொதுவாகப் பேசுவது, பெருமை  எவ்வாறு தூண்டுகிறது என்பது குறித்துத்தான். நிச்சயமாக, மனிதனிடம் இருக்கும் பணம், அவனுக்குக் குறிப்பிட்ட கவுரவத்தைத் தரலாம். மற்றவர்களுக்கும் அவ்வாறே நடக்கலாம். நம்மிடம் கூட்டம் கூட்டமாக ராஜாக்கள் கூட்டமும், நவாபுகள், மகாராஜாக்கள் மற்றும் நிஜாம்கள் இருந்தபோதிலும், இந்தியாவின் மதிப்புமிக்க மற்றும் மதிக்கப்படும் கவுரவம் என்பது நமது உடைமைகளாக இருக்கவில்லை.  அவர்களுக்கு உண்மையான  சிந்தனை நிறைய இருந்தது. அவை உண்மையிலேயே அதிகம் சிந்திக்கப்படவில்லை. ஏனென்றால், அவை உயர்ந்த மேன்மைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கக் கூடும். இது தனி நபருக்கு எந்த வேறுபாட்டையும் ஏற்படுத்தாது. ஒருவர் நல்லவராகவோ, மோசமானவராகவோ அல்லது அலட்சியமாகவோ இருந்தாலும், அவரது மேன்மைகள் சிறு வித்தியாசத்தையும் ஏற்படுத்திவிடாது. அதிகாரம் இந்தியர் மனதில் சிறிய வேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளது. நிச்சயமாக, அதிகாரம் அல்லது அந்தஸ்து அல்லது பணத்தின் முன்பு பலர் மண்டியிடுவார்கள். கடந்த காலத்திலும், இன்றும் இந்தியா பெருமையுடன் இருப்பதற்கு முக்கியக் காரணமாக இருப்பது, கவுரவம், ஞானம் மற்றும் கற்றல். குறிப்பாக, அதைவிடக் குறிப்பிட்ட கடமை உணர்ச்சியும்கூட. அதுதான் அடிப்படையான விஷயம். இதுதான் இந்தியர்களின் மனதில் எப்போதும் முதன்மையாக நிறைந்திருக்கும். நல்லது, அதேசமயம், இந்தியர்களின் மனதில் நிறைந்திருக்கும் என்று நான் சொல்லும்போது, ஒவ்வொரு தனிப்பட்டவர்களின் மனதில் அல்ல. ஆனால், குழுவாகவோ அல்லது தேசிய மனமாகவோ இருக்கலாம் என்று நான் சொல்ல வந்தேன். அதனால் மகாத்மா காந்தி போன்ற மனிதர்களை நாம் பிரம்மாண்டமாக மதிக்கிறோம். அவரது அந்தஸ்து அல்லது பெயர் அல்லது அது, இது எதுவாகவும் இருக்காது. ஆனால், இறுதி நேரத்தில் கூட மிகவும் நேர்மாறான விஷயத்துக்காக   விட்டுக்கொடுப்பதைப் பார்க்கிறோம். ஏனென்றால், பலர் அவற்றைக் கைவிடுகிறார்கள். ஆனால், கடமையுணர்ச்சியைப் பொறுத்தவரை, தனது மொத்தத் தனித்துவத்தையும், சேவையையும் தியாகம் போன்றவற்றையும் அவர் எப்படி அர்ப்பணித்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. அடிப்படையில் அவர் இந்தியாவின் உயர்ந்த மனதைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அதை, இந்தியாவும் அவருக்குத் திருப்பி அளித்தது.

இன்று, நாட்டின் உயர்ந்த அந்தஸ்த்தில் ராஜாஜி  இருப்பதை நாம் பார்க்கிறோம். இது ஓர் அடையாளமாகும்.  ராஜாஜியைப் போன்று தனிப்பட்ட வாழ்க்கை, எளிமை, அவரது உடை, பழக்க வழக்கங்கள், உணவு ஆகியவற்றைக் கடைப்பிடிப்பவர்கள் அதிகாரம் மற்றும் பேரரசின் மகிமையின் அடையாளமாகத் திகழ்வர். இது ஒற்றைப்படை மாற்றம். மிகவும் குறிப்பிடத்தக்க, பொருள் நிறைந்ததாகும். இயற்கையாக, ஒவ்வொரு அரசுக்கும் ஒரு சின்னம் அவசியம் இருக்கவேண்டும், அரசுக்கான குறிப்பிட்ட கண்ணியம் இருக்க வேண்டும். எல்லாவற்றையும் விட இது மிகவும் எளிதானது அல்ல. உயர்ந்த சிந்தனை மற்றும் எளிமையான வாழ்வியலின்படி, நமது அரசு அலுவலர்கள் அனைவரையும் மண் குடிசைகளில் தங்க வைக்க வேண்டும். ஏனென்றால், கட்டிடங்களில் வாழ்ந்தால் கண்ணியத்தையும் எளிமையையும் கடைப்பிடிப்பதில் சிக்கல் ஏற்படும். அனைத்து அரசுக் கட்டிடங்களும் அழகானதும், கண்ணியமானதும் ஆகும். ஒருவேளை சில சமயங்களில் நாட்டின் ஒவ்வொரு கட்டிடமும் கண்ணியம் மற்றும் அழகு மற்றும் நிலைத்தன்மை மற்றும் ஸ்திரத்தன்மை மற்றும் ஆறுதலாக இருக்கும்.  ஆனால் இதில் கெட்ட விசயம் என்னவென்றால், அதைச் செய்வது அரசு அல்ல. மாறாக, தனிநபர் தனக்குச் செய்து கொள்ள முயல்கிறார். இது கட்டிடத்தின் மீதும் மட்டுமல்ல, கட்டிடத்தில் குடியிருப்பவர் மீதும் ஒரு வலியுடன் கூடிய பார்வையைச் செலுத்தும். ஆனால், நான் உங்களுக்குக் கூறிய ஆர்வமுள்ள சுவாரஸ்யமான நிகழ்வு என்னவென்றால், அவரது வாழ்க்கை முறை போன்றவை, இந்தியர்களின் நிகழ்காலத்தில் மிகவும் குறிப்பிடத்தக்கவை. இன்றைய இந்தியாவின் சூழலில், ராஜாஜியின் மிகவும் எளிய வாழ்க்கை குறிப்பிடத்தக்கது. கடந்த காலத்தில் எளிமையின் தலைகீழ் அடையாளமாக இருந்த ஓர் இடம், சிறந்த கண்ணியத்தாலும் மிகுந்த விளைவுகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

ராஜாஜியின் உருவப் படத்தைத் திறந்து வைப்பதற்கான  வாய்ப்பை வழங்கியதற்காக, உங்களுக்கு நன்றியைத் தெரிவிக்கின்றேன்.

The post சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வுகண்ட தீர்க்கதரிசி ! ராஜாஜிக்கு புகழ்மகுடம் சூட்டிய நேரு! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

நேரு இல்லாத இந்தியா சாத்தியமா? : மறுக்கும் 8 அம்சங்கள்
ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளிப் புத்தகத்திலிருந்து நேரு குறித்த பாடம் நீக்கப்பட்டுள்ளது. நவீன இந்தியாவின் சிற்பியான பண்டித ஜவஹர்லால் நேருவின் வரலாற்றை முற்றிலும் அழிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேருவை சமன்பாட்டிலிருந்து வெளியேற்றிவிட்டு, நீங்கள் இந்தியாவைக் குறைவான மதிப்பீட்டுக்கு உட்படுத்துகிறீர்கள்.

ஆனால், நேரு இல்லாத இந்தியா எப்படி இருக்கும் ?

இந்தியச் சுதந்திரப் போராட்டத்துக்காக போராடியவர்களைத் தனிமைப்படுத்துவது மிகக் கடினம். ஆனால், முக்கிய பிரச்சினைகளில் பெரும்பங்காற்றிய தலைவர்கள் உள்ளனர். அவர்களின் முதன்மையானவர் நேரு.

பின்வரும் 8 அம்சங்களைத் தவிர்த்து நேருவை இந்தியா தவிர்க்க முடியுமா ? :

கடந்த 1927 ஆம் ஆண்டு பெல்ஜியம் தலைநகர் புரூஷெலில் நடந்த ஒடுக்கப்பட்ட தேசியங்களின் மாநாட்டில் கலந்து கொண்டு, சுதந்திர இயக்கத்துக்குச் சர்வதேச தோற்றத்தை ஏற்படுத்தினார் நேரு. அவரது ஏகாதிபத்திய எதிர்ப்பு இந்தியச் சுதந்திரப் போராட்டத்துக்கு ஒரு நவீன வேட்கையை ஏற்படுத்தியது.

கடந்த 1928 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு ஆதிக்க தகுதி பெற மகாத்மா காந்தி முன்மொழிந்தார். ஆனால், முழு சுதந்திரம் என்ற கோரிக்கை நேரு மட்டுமே முன்வைத்தார். இதனையடுத்து, அரசியல் சாசன சபை தேர்வு செய்யும் இந்திய அரசின் 1935 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை நேரு எதிர்த்தார். இதனை மனதில் வைத்தே, இந்தியாவை தமது ஆதிக்கத்தில் வைத்திருக்க வேண்டும் என பிரிட்டிஷ் விரும்பியபோதிலும், கடந்த 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி இந்தியாவைச் சுதந்திர இறையாண்மை குடியரசாக முன்மொழிந்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தைக் கொண்டு வர நேரு முடிவு செய்தார்.

கடந்த 1947 ஆம் ஆண்டு இந்தியாவின் அதிகாரத்தை மேம்படுத்தும் வகையில், பம்பாய், மெட்ராஸ், உத்தரப்பிரதேசம், வங்காளம் என மாகாணங்களை உருவாக்குவது குறித்த திட்டத்தை மவுன்ட்பேட்டன் அனுப்பினார். இதன் மூலம் அதிகாரப் பரவல் சாத்தியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் பல மாநிலங்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும் தமது பரிந்துரையில் மவுண்ட் பேட்டன் குறிப்பிட்டிருந்தார். இந்த திட்டத்துக்கு பிரிட்டிஷ் அரசு ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து இந்தியத் தலைவர்களுடன் மவுன்ட் பேட்டனின் சந்திப்பு நடைபெற்றது. நேருவிடமும் இந்த திட்டத்தை மவுன்ட்பேட்டன் தெரிவித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நேரு, இதனைக் காங்கிரஸ் ஏற்பதற்கான சூழல் இல்லை என்று கூறி, மவுன்ட் பேட்டனுக்கு நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பினார். இந்த திட்டத்தின் ஒன்றான பலுசிஸ்தானுக்கு சுய நிர்ணய உரிமை அளிப்பதையும் அவர் எதிர்த்தார். அதன் பிறகு தமது முடிவை மவுன்ட் பேட்டன் தள்ளிப்போட்டார். இதனையடுத்து, இந்தியாவைப் பிரித்து 2 ஆதிக்கத்திடம் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் திட்டத்தை வி.பி.மேனன் உருவாக்கினார்.

பிரதமர் என்ற நிலையில், அரசியல் சாசனத்தை உருவாக்க நேருவால் முக்கிய பங்காற்ற முடியவில்லை. மத்திய அரசியல் குழுத் தலைவர் என்ற முறையில், வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் வகையில், மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கான அதிகாரத்தை மத்திய அதிகாரக் குழு நிர்ணயித்தது. அவரது அரசியல் கண்ணோட்டமும், ஜனநாயகம் மீதான அவரது உயர்ந்த நம்பிக்கை ஆவணங்களிலிருந்து பிரதிபலித்தது. மதச்சார்பின்மை என்ற வார்த்தையைப் பயன்படுத்தாவிட்டாலும், சாதி, சமூகம் மற்றும் மதம் ஆகியவற்றின் சிக்கலைத் தவிர்க்கும் வகையில் அரசியலமைப்பு இருந்தது.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நேரு கையாண்ட விதத்தைப் பலரும் விமர்சித்தனர். நேருவுக்கும் ஷேக் அப்துல்லாவுக்கும் இடையே இருந்த நட்பு இந்த விமர்சனங்களைப் பொருட்படுத்தவில்லை. நேருவின் முயற்சியால் இந்தியாவுடன் கடந்த 1952 ஆம் ஆண்டு காஷ்மீர் இணைந்தது.

தனியார் மற்றும் பொதுத் துறையை சமநிலைப்படுத்தும் பொருளாதார வடிவத்தை நேரு முன்னெடுத்தார். இது இந்தியத் தொழிலதிபர்களின் மும்பைத் திட்டத்தோடு ஒத்துப்போனது.

சமுதாயத்தில் சீர்திருத்தத்தை ஏற்படுத்திய 4 முக்கிய இந்து குறியிட்டு சட்டங்களை நிறைவேற்றியதில் நேரு முக்கிய பங்காற்றினார். அரசியல் சபையால் முதலில் உருவாக்கப்பட்ட இதனை, பழமை வாதிகளும் இந்து தேசியவாதிகளும் கடுமையாக எதிர்த்தனர். இருந்தாலும், இந்த சீர்திருத்தத்துக்குப் பின்னே பி.ஆர்.அம்பேத்கர் வலுவாக நின்றார். இந்துயிசத்தை அவர் முற்றிலும் நிராகரித்தார். முதல் நாடாளுமன்றக் கூட்டத்திலேயே இந்த சட்டங்களை நிறைவேற்ற நேரு பெரும் உதவியாக இருந்தார். இந்து சமுதாயத்தின் மீதான அடக்குமுறைகளை அகற்றிய இந்த நவீனமயமாக்கலை, ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் கண்மூடித்தனமாக எதிர்த்தன. இந்த சட்டங்கள் கலப்புத் திருமணம்,விவாகரத்தை எளிதாக்குதல், சொத்துக்களில் மகன்களுக்கு இணையாக மகள்களுக்குப் பங்கு தர வழிவகுத்தன.

நேருவின் தனிப்பட்ட முத்திரை, இந்தியாவின் அணு மற்றும் விண்வெளி திட்டங்களிலும் பிரதிபலித்தது. கடந்த 1939 ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து திரும்பிய இந்திய அணு ஆயுத விஞ்ஞானத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஹோமி பாபா, நேருவுடன் இணைந்தார். இந்திய அணு ஆயுத திட்டப் பொறுப்பை ஹோமி பாபாவிடம் ஒப்படைத்தார். பிரதமரிடம் மட்டும் அவர் பதில் அளித்தால் போதும் என அறிவிக்கப்பட்டது. அரசியல் சபையில் அணு சக்தி சட்டத்தைக் கொண்டுவந்தார். இதனையடுத்து, பிரதமர் தலைமையிலான அணு சக்தி ஆணையம் உருவாகக் காரணமானது.

நவீன இந்திய மரபணுவின் ஒரு பகுதியாகவும், முத்திரையாகவும் விளங்கும் நேருவின் வரலாற்றை மறைக்க, மறக்கடிக்க, அழிக்க முயற்சி நடக்கிறது. நேருவை சமன்பாட்டிலிருந்து வெளியேற்றி, நீங்கள் இந்தியாவைக் குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்துகிறீர்கள்.

The post நேரு இல்லாத இந்தியா சாத்தியமா? : மறுக்கும் 8 அம்சங்கள் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

என்றென்றும் வாழும் நவீன சிற்பி : இந்தியாவால் மறக்கமுடியாத ஜவஹர்லால் நேரு
இந்தியாவிலும், உலக அளவிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க தமது அடையாளத்தை விட்டுச் சென்ற ஜவஹர்லால் நேருவை உலகம் எப்போதும் அங்கீகரிக்க மறுக்காது. ஆனால், இதை நரேந்திர மோடி ஏற்கமாட்டார். கடந்த 1964 ஆம் ஆண்டு நேரு மறைந்தபோது, இந்தியாவின் நவீன சிற்பி என அவருக்கு நியூயார்க் டைம்ஸ் புகழாரம் சூட்டியது. நேரு இல்லாத உலகம் என்ற தலைப்பில் பொருளாதார நிபுணர்கள் கட்டுரை எழுதினார்கள். இது மக்கள் மீது அவர் கொண்டிருந்த மந்திரப் பிடியை நினைவுகூர்ந்ததுடன், பெரிய மனிதர் இல்லாமல் உலக அரங்கம் ஏழ்மையாக இருக்கும் என வருத்தமும் தெரிவித்தனர்.

இந்தியாவில் நேருவைப் பற்றிய கருத்தில் கணிசமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் வாழ்ந்தபோது, பொதுமக்களால் வணங்கப்பட்டார். இப்போது அவரை மறக்கச் செய்ய அல்லது அவரது பங்கெடுப்பைக் குறைக்கும் முயற்சி நடக்கிறது. இன்றைய பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பேசும்போது, பண்டித நேரு இல்லை என்றால் இந்தியா ஜனநாயக நாடாக மாறியிருக்காது என்று நம்மை நம்ப வைக்கக் காங்கிரஸ் முயல்கிறது என்று தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக, ராஜஸ்தான் மாநிலத்தில் 8 ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களிலிருந்து நேரு நீக்கப்பட்டார். வெள்ளையனே வெளியேறு இயக்கம் குறித்த தேசிய காப்பகக் கண்காட்சியில் அவரது ஒரு குறிப்பைக் காணவில்லை. நேருவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தை அனைத்து இந்தியப் பிரதமர்களின் வாழ்க்கையையும் பிரதிபலிக்கும் சிக்கலான இடமாக மாற்ற மத்திய கலாச்சார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது சமமான வாய்ப்புகளின் மர்மமான வடிவமாகும்.

நேரு மீது குறிவைப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை நேரு தடை செய்ததும், மதச் சார்பற்ற நாடாகக் கட்டமைத்ததும் இதற்கு முக்கிய காரணம்.

கடந்த 1962 ஆம் ஆண்டு சீனாவுக்கு எதிரான போரில் ஏற்பட்ட தோல்வி, நேருவுக்கு எதிராக மக்களை எளிதாகத் திசைதிருப்ப இவர்களுக்குக் கைகொடுத்தது. நேருவின் அணிசேரா வெவிநட்டுக் கொள்கையும், மாநில திட்டமிடல் குறித்த அவரது நம்பிக்கையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.

அரசியல் ரீதியாக நேருவுக்குச் சிலைகள் அமைத்தும், சாலைகள் மற்றும் அரசுத் திட்டங்களுக்கு அவரது பெயரை வைத்ததையும், பொது வாழ்க்கையில் அவருக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தையும், செய்தித் தாள்களில் வெளியிடப்பட்ட அவரது படத்துடன் கூடிய விளம்பரங்களையும் நிறுத்திவிட்டனர். இதனையடுத்து, நேரு மாபெரும் மனிதர் என்ற பிம்பத்தை உடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவுக்கு அன்று என்ன சொன்னார்? இப்போது, அவர் நாட்டுக்கு என்ன வழிகாட்டுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள நேருவின் வாழ்க்கை நினைவுகூரத்தக்கது. நேரு தன் சுயசரிதைகளில் வெளிப்படுத்தியதைவிட, புத்தகங்கள், கட்டுரைகள், தனிப்பட்ட கடிதப் பரிமாற்றங்கள் மற்றும் உரைகள் ஆகியவற்றின் மூலம் எழுதினார்.

2003 ஆம் ஆண்டு வரலாற்று ஆய்வாளர் எம். பிரவுன், நேரு ஓர் அரசியல் வாழ்க்கை என்ற தலைப்பில் நேருவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். இதற்கான, பழைய ஆவணங்களை அவரிடம் சோனியா காந்தி வழங்கினார்.

அவரது புத்தகத்தில், செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து வழக்குரைஞராகி அரசியல் தலைவரான மோதிலால் நேரு மற்றும் அவரது மகன் ஜவஹர்லால் நேரு குறித்துக் குறிப்பிட்டுள்ளார். காலனிய ஆதிக்கத்தின்போது, பெரும் சவாலாக இருந்த இந்திய மதங்கள் மற்றும் மரபுகள் குறித்து இந்தியக் கல்வியாளர்களுக்கு அரசியல் ரீதியான வாய்ப்புகளை நேரு வழங்கியது குறித்தும் பிரவுன் சுட்டிக்காட்டியுள்ளார். நேருவின் அரசியல் பார்வை, அவர் படித்த ஹார்வேடு மற்றும் காம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தில் செதுக்கப்பட்டது. மகாத்மா காந்தியால் கவரப்பட்டு அரசியலுக்கு வந்த நேரு, சுதந்திரப் போராட்டங்களில் பங்கெடுத்த வரலாற்றையும் அவர் பதிவு செய்துள்ளார்.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 1921 முதல் 1945 வரை 9 முறை சிறை சென்றவர் நேரு. தமது 23 ஆவது வயதிலேயே அவர் முதல் சிறை வாழ்க்கை தொடங்கியது. மொத்தம் 3,259 நாட்கள் அவர் சிறையில் இருந்தார். அதாவது, கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் அவர் சிறையில் இருந்தார். அந்த காலகட்டத்தில் 188 புத்தகங்களைப் படித்தார். நிறைய எழுதினார். சிறையில் தான் அவர் அரசியல் முதிர்ச்சி அடைந்தார் என்பதை பிரவுன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவில் பல ஆண்டுகளைக் கழித்தாலும், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து உரையாடியிருக்கிறார். காலணி ஆதிக்கம், நாடுகளுக்கிடையேயான சமத்துவம், நிலச் சீர்திருத்தத்தின் அவசியம், பொருளாதாரம் மற்றும் சமுதாயத்தில் மாநில அரசுகளின் குறுக்கீட்டின் அவசியம், நாட்டுக்கு விஞ்ஞானத்தின் அவசியம், பெண்களின் பங்கெடுப்பு, உலக அரங்கில் இந்தியாவை உயர்ந்த இடத்துக்குக் கொண்டு செல்வது அவரது லட்சியமாக இருந்தது.

இந்த லட்சியம் அவரை 1930 ஆம் ஆண்டு காங்கிரஸின் தலைவராக உயர்த்தியது. நேருவின் தொடர் போராட்டப் பங்கெடுப்பு, தீண்டாமைக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றால் கவரப்பட்ட மகாத்மா காந்தி, நேருவை தமது அரசியல் வாரிசாக அறிவித்தார்.

வகுப்புவாத கலவரம், இந்தியாவில் சேரலாமா, பாகிஸ்தானில் சேரலாமா என்ற ஊசலாட்டத்திலிருந்த காஷ்மீர் பிரச்சினை, இந்திய இளவரசர்களின் எதிர்காலம் என முக்கிய பிரச்சினைகளைக் கையாண்டு கொண்டிருந்த நிலையில், அடுத்த 6 மாதங்களில் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதையும் பிரவுன் தமது புத்தகத்தில் நினைவுகூர்ந்துள்ளார்.

3 முக்கிய நிகழ்வுகள்

சுதந்திர இந்தியாவைக் குடியரசு நாடாக்கியது உள்ளிட்ட 3 முக்கிய நிகழ்வுகள் நேரு தலைமையில் நடந்தன.

முதலாவதாக, அரசியல் சாசன சபையை அமைத்து, சுதந்திர இந்தியாவின் அதிகாரம் மக்களுக்கே என்று அறிவித்தார். சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி, சம அந்தஸ்து மற்றும் அரசியல் வாய்ப்புகள் அனைவருக்கும் வழங்கப்படும் என இதன் மூலம் உறுதியளிக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவில் 1951 ஆம் ஆண்டு 10 கோடியே 73 லட்சம் பேருக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. இது குறித்து வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா தமது புத்தகம் ஒன்றில் எழுதும்போது, நமது ஜனநாயகத்தின் தலைமைச் சிற்பி நேரு என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார். நேருவால் கிடைத்த பொக்கிஷங்களான அம்பேத்கர், வல்லபாய் பட்டேல், மவுலானா ஆசாத், ராஜாஜி போன்றோர் நாட்டின் அரசியல் கட்டமைப்பை உருவாக்க பெரும் பங்காற்றினர்.

இரண்டாவதாக, உலக அளவில் நேருவின் அரசியல் பாதிப்பு அனைவரும் அறிந்ததே. இனவெறிக்கு எதிராக அவரது குரல் ஓங்கி ஒலித்தது. நேருவின் வெளிநாட்டுக் கொள்கை, தனது நாட்டுக்கான தனித்துவம் மற்றும் சர்வதேச அடையாளத்தை உருவாக்கியது.

மூன்றாவதாக, உள்ளூர் சமுதாய மாற்றத்துக்கு நேரு முக்கியத்துவம் கொடுத்தார். மாநில திட்டங்களே வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும், சமமற்ற போக்கைக் களையும் என்றும் நம்பினார். வன்முறை இல்லாத சோவியத் ஒன்றியத்தின் சோசலிஷத்தை இந்தியாவில் கட்டமைக்க நேரு முயற்சித்தார் என்பதை பிரவுன் தமது புத்தகத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.. சுதந்திரத்துக்குப்பின் வறுமை ஒழிப்பில் தீவிரம் காட்டினார். அணு ஆயுதம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார்.

சீனா ஊடுருவல் உள்ளிட்ட சில விசயங்களில் நேருவுக்குத் தோல்வி ஏற்பட்டிருக்கலாம். ஆனால், மக்களுக்கு உதவவே நேரு விரும்பினார். தனக்காக எதையும் அவர் விரும்பியதில்லை என்று மக்கள் பெருமளவில் உணர்ந்தார்கள். அவர்கள் ஒருபோதும் அந்த உணர்வை இழக்கவில்லை.

நேரு தன்னை முழுமையாக இந்தியாவுக்காக அர்ப்பணித்தார். எந்த ஒரு அரசின் பொது நிறுவனத்தையும் நேருவைத் தவிர்த்துப் பார்ப்பது அரிதே. நேருவைக் கொண்டாடுவதற்கும், போற்றுவதற்கும் ஏராளமாக உள்ளன. அவரது பங்கெடுப்பைக் குறைத்து மதிப்பிடுவது அல்லது அவரை மறக்கடிக்கச் செய்வது சீரழிவையே ஏற்படுத்தும்.

The post என்றென்றும் வாழும் நவீன சிற்பி : இந்தியாவால் மறக்கமுடியாத ஜவஹர்லால் நேரு appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

1962 சீன ஊடுருவல் : திரிக்கப்பட்ட நேருவின் வானொலி பேச்சும், கோயபல்ஸ் கும்பலின் தொடர் பிரச்சாரமும்
வரலாற்று உண்மைகளைத் திரும்பத் திரும்பத் திரித்துக் கூறும்போது, தவறான உள்நோக்கம் கொண்ட தகவல் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. உள்நோக்கம் கொண்டவர்களால் வேண்டுமென்றே திரும்பத் திரும்பச் சொல்லப்படும் தவறான தகவல்களை, உளவியல் ரீதியாக மக்கள் உண்மை என நம்ப ஆரம்பிக்கிறார்கள். இதன் விளைவைத் தான் உளவியல் நிபுணர்கள் சமீபகாலமாக ‘சத்தியத்தின் மாயை’ என்று குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு திரித்து எழுதப்படும் இந்திய வரலாற்றிலிருந்து, உள்நாட்டிலும் உலக அளவிலும் ராஜதந்திரியாகவும், தத்துவவாதியாகவும், கல்விமானாகவும் திகழ்ந்த உயர்ந்த மனிதன் இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவும் தப்பிக்கவில்லை.

1962 ஆம் ஆண்டு சீன ஊடுருவல், அசாம் மக்களுக்காக நேரு ஆற்றிய சிறப்பு உரை அப்போதே வரலாற்றுச் சிதைவுக்குள்ளாக்கப்பட்டது.

1962 ஆம் ஆண்டு சீன ஊடுருவல், முந்தைய என்இஎஃப்ஏ (வடகிழக்கு எல்லை மாகாணம்)-வின் பொமிடிலாவுக்குள் ஊடுருவியது. அதனால், தேஜ்பூரில் வளர்ந்த பெரும் ஆபத்து குறித்த கருத்து எழும்போதெல்லாம், காயப்படுத்துவது மற்றும் காட்டிக் கொடுப்பது போன்ற கருத்துகள் பரவி வந்ததைக் காணலாம். பண்டித நேருவின் பேச்சைக் கேட்ட அசாம் மக்கள் இதனை உணர்ந்தார்கள். நேருவின் இந்த உரை, கடந்த 1962 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி அகில இந்திய வானொலியில் நேரடியாக ஒலிபரப்பப்பட்டது.

சீன ஊடுருவல் குறித்த வரலாற்றுப் புத்தகங்கள், சுயசரிதைகள் மற்றும் செய்தித்தாள் கட்டுரைகள் ஆகியவற்றைக் கூகுள் தேடல்களில் அறிந்து கொண்டால், போட்டி அரசியல்வாதிகளின் பேச்சில் இருக்கும் பொய்யை அம்பலப்படுத்தும். நெட்டிஜன்கள் கூட நேருவின் உரை மீதான தாக்குதல்களை ஏற்கவில்லை. இந்த நேரத்தில் ”இந்த நேரத்தில் அசாம் மக்களுக்காக என் இதயம் வேதனைப்படுகிறது…” என்று நேரு ஆற்றிய அந்த உரையை, சீனர்களின் கருணைப் பார்வைக்காக அசாமை நேரு கைவிட்டுவிட்டதாக திரித்துக் கூறினார்கள்.

நேரு உரையின் வரலாற்று உண்மையை மறைத்துவிட்டு, அசாம் மக்களை நேரு கைவிட்டுவிட்டார் என்ற விசயம் அரசியல் எதிரிகளால் இன்று வரை மீண்டும் மீண்டும் பரப்பப்படுகிறது.
ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய உரையின் சொல்லாடலை, ஆங்கிலம் அறிந்தோர் தவறு என்று சொல்லமாட்டார்கள். ஆனால், நேருவைத் தவறாகக் காட்டவும், அவருக்குக் கண்ணிய குறைவு ஏற்படுத்தவும் இந்த உரையைக் குறும்புத்தனமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

நேருவின் இந்த உரையை ஆய்வு செய்யும்போது, கடுமையான அக்கறை மற்றும் எந்தவொரு சூழலிலும் விட்டுக் கொடுக்காமல் வலுவாகப் போரிடுவோம் என்பதையே வெளிப்படுத்துகிறது.

ஆரம்பத்தில் இந்தியத் தரப்பில் பின்னடைவுகள் இருந்தபோதிலும், வெற்றி பெறுவோம் என நேரு உறுதியளித்தார். சீன ஊடுருவலை ஏற்கவோ அல்லது சகித்துக் கொள்ளவோ அவர் ஒருபோதும் தயாராக இருந்ததில்லை. அந்த உரையில் நேரு இவ்வாறு கூறுகிறார்:

” எந்த ஓர் அந்நிய நாட்டின் ஊடுருவலையும் இந்தியா சகித்துக் கொள்ளாது. சுதந்திரம் கிடைத்தபிறகு நடக்கும் இந்த போரின் மூலம், சுதந்திரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இந்த போர் எவ்வளவு காலம் நீடித்தாலும் இந்தியா எதையும் இழக்காது. இந்தியத் தரப்புக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு குறித்த செய்திகள் நமக்கு இன்றைக்கு வருத்தமளிக்கிறது. அசாம் மற்றும் வடகிழக்கு எல்லை மாகாண (என்இஎஃப்ஏ) மக்களுக்கும், இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கும் விசேஷமாக என் வாழ்த்துகளைத் தெரிவிக்க விரும்புகின்றேன். நாம் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை என்பதை அவர்களுக்குக் கூறிக் கொள்கிறேன். நமக்கு வருத்தம் இருக்கலாம். எனினும், இதனை தலைகீழாக மாற்ற நம்மை நாமே பயிற்றுவித்துக் கொள்ளவேண்டும். மேலும், இந்தியாவிலிருந்து ஊடுருவல்காரர்களை வெளியேற்ற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய உறுதி பூண்டுள்ளோம். ஊடுருவல்காரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் வரை அல்லது வெளியே தள்ளப்படும் வரை நாங்கள் திருப்தியடைய மாட்டோம். அவர்கள் விதிக்கும் எந்த நிபந்தனைகளையும் நாங்கள் ஏற்கமாட்டோம். அப்படி ஏற்றால், சில பின்னடைவுகளால் நாம் சிறிது அச்சம் அடைந்துவிட்டோம் என்று அவர்கள் நினைக்கலாம். இதை உங்கள் அனைவருக்கும் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். மேலும், குறிப்பாக, ‘இந்த நேரத்தில் அசாம் மக்களுக்காக என் இதயம் வேதனைப்படுகிறது’…”

இந்த வார்த்தைகளிலிருந்து நேரு என்ன சொன்னார் என்பது தெளிவாகிறது. படையெடுப்பாளரை எதிர்த்துப் போராடுவதில் உறுதியாக இருந்த ஒரு தலைவரின் வார்த்தைகள் இவை. திடீர் சவாலை நேரடியாக எதிர்கொள்ள வேண்டிய மக்களுக்குப் பரிவு காட்ட விரும்பியே அவ்வாறு கூறினார். நேரு ஓர் இளம் ஜனநாயக நாட்டின் பிரதமராக இருந்தவர். தன்னம்பிக்கை என்ற இலக்கை அடைய நாடு நீண்ட பயணத்தை அவரது தலைமையில் நாடு மேற்கொண்டது. அண்டை நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள அவர் விரும்பியதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். சீனாவை ஒரு நட்பு நாடாகவே நேரு பார்த்தார். தன்னை ஏகாதிபத்திய எதிர்ப்பாளர் என்று சீனா கூறிக் கொண்டதை நம்ப மறுக்க அவருக்கு எந்த காரணமும் இல்லாமல் இருந்தது.

எனவே, இந்த திடீர் ஊடுருவல் மூலம் துரோகம் மற்றும் கோபத்தை அவர் உணர்ந்தார். ஊடுருவிய அண்டை நாட்டின் மீது மென்மையான வார்த்தைகளை அவர் பயன்படுத்தவில்லை. அவரது உரையில் மேலும் கூறுகிறார்:

”நமது நாட்டின் எல்லைகளில், ஏகாதிபத்தியத்தின் மிகவும் ஆக்ரோஷமான முகத்தைக் காண்கிறோம். தன்னை ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடாக சீனா சொல்லிக் கொள்கிறது. இந்த சம்பவத்தைப் பார்க்கும் போது, அந்த நாடு மோசமான ஏகாதிபத்திய நாடாக மாறியிருப்பதையும், அதன் உக்கிரத்தையும், நட்பு நாட்டை ஆக்கிரமித்துவிட்டு, தாங்கள் தாக்கப்படுவதாகக் கூறி நியாயப்படுத்துவதையும் இப்போது பார்க்கிறோம். இது போன்ற உண்மையைக் கடந்து வந்திருக்கிறேன் என்பதையும், சர்வதேச நடத்தைக்கான எந்தவித கண்ணியமும் அவர்களிடம் இல்லை என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

நமக்காக மட்டும் போராடக் கூடாது. இதேபோன்று, ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட எங்கும் கண்ணியம் மிக்க நாடுகள் மற்றும் ஒழுக்கமான மக்களுக்கு ஆதரவாக நிற்கவேண்டும்.

இந்த முக்கியமான சூழலில், சர்வதேச ஆதரவைக் கோருவதில் நேரு தயங்கவில்லை. இந்தியாவின் பக்கம் நின்ற நாடுகளுக்கும் நன்றியைத் தெரிவித்தார்:

”விரைந்து உதவி செய்த நமது நட்பு நாடுகளுக்கு, குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு நாங்கள் நன்றியுணர்வுடன் இருப்போம் என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். மேலும் நமக்குத் தேவைப்படும் உதவிகளை அவர்களிடம் கேட்போம். நமக்கு இது வாழ்வா? சாவா? என்ற பிரச்சினை என்பதால், அவர்கள் தரும் அனைத்து உதவிகளையும் நாம் நிச்சயம் பயன்படுத்திக் கொள்வோம்.

வாழ்வையும் மரணத்தையும் நீங்கள் விளையாட்டாக நினைக்க விரும்பினால், நாம் ஆடுவற்கு இது ஒன்றும் விளையாட்டு கிடையாது. தேசத்தின் வாழ்க்கை மற்றும் இறப்பு, தேசத்தின் லட்சோப லட்ச மக்களின் வாழ்வு மற்றும் இறப்பு ஆகும். வெற்றி நம்முடையதாக இருக்கும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் என்ன நடந்தாலும் நாங்கள் முன்னேறுகிறோம். இந்த நம்பிக்கையில் நீங்களும் இணைய வேண்டும். எந்த நேரத்திலும் மனச் சோர்வடையக் கூடாது.

சீனாவின் ஆக்கிரமிப்பு இந்தியாவின் நேர்மைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக மட்டும் அவர் கருதவில்லை. ஆனால், அனைத்து சுதந்திர நாடுகள் மீதான தாக்குதல் எனக் கருதினார். இந்த கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொள்ள தேசத்தை அணி திரட்டுவதற்காக அசாம், லடாக் அல்லது இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள மக்களிடம், என்ன நடக்கிறது என்பதை அடிக்கடி தெரிந்துகொள்வேன். இது ஆசியாவுக்கு மட்டுமல்ல, உலகுக்கே ஓர் அச்சுறுத்தலாகும். அதனை நாம் அனைவரும் இணைந்து எதிர்கொள்வோம். ஜெய் ஹிந்த்…!”

நேருவின் இந்த உரையில், எங்காவது சீனாவிடம் சரணடைந்ததையோ அல்லது அசாமை கைவிட்டதையோ நாம் பார்க்க முடிந்ததா? நேருவின் உரைக்குப் பிறகு அவரது மகள் இந்திரா காந்தி தேஜ்பூருக்கு சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தார்.

தேஜ்பூர் நகரத்தை இந்திரா காந்தி அடைந்ததும், இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் மக்களுக்கு மளிகைப் பொருட்களையும், அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கினார். காத்தரீன் ஃப்ராங்கின் சுயசரிதை நூலில், தேஜ்பூரிலிருந்து வெளியேற மலைவாழ் மக்கள் மறுத்துவிட்டனர். அதனால், அந்த மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு அடுத்த 8 மணி நேரத்தில் இந்திரா காந்தி டெல்லி திரும்பினார். வானொலியில் சிறிய உரையாற்றிவிட்டு, உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் நிரப்பப்பட்ட விமானத்துடன் மீண்டும் அசாமுக்கு திரும்பினார். அசாமில் இந்திரா காலடி எடுத்து வைத்ததும், எதிர்பாராதவிதமாக போர் நிறுத்தத்தை அறிவித்து படைகளை சீனா திரும்பப் பெற்றது என்று குறிப்பிட்டிருந்தார்.

உண்மையைத் திரித்துக் கூறுவதையும், தவறான தகவல்களைத் திரும்பத் திரும்பக் கூறி பிரச்சாரமாகச் செய்வதும், நாஜி ஜெர்மனி அமைச்சர் ஜோசப் கோயபல்ஸ் பிரச்சாரக் கருவியாகப் பயன்படுத்திய பொய்களைப் போன்றதே. ஒரு பெரிய பொய்யை சொல்லிவிட்டு, அதனைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால் மக்கள் அதை நம்பிவிடுவார்கள் என்று கோயபல்ஸ் கூறியதை இங்குள்ளவர்களும் பின்பற்றுகிறார்கள்.

(கட்டுரையாளர் : போப்பீட்டா சர்மா. அசாம் பிரதேச காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளராகவும் செய்தி தொடர்பாளராகவும் உள்ளார்.)

The post 1962 சீன ஊடுருவல் : திரிக்கப்பட்ட நேருவின் வானொலி பேச்சும், கோயபல்ஸ் கும்பலின் தொடர் பிரச்சாரமும் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

பிரதமர் நேருவின் வாழ்க்கையில் ஒரு நாள் : ஆ. கோபண்ணா
நவம்பர் 14 : பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 132வது பிறந்த நாள்

ஜவஹர்லால் நேரு இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தியடிகள் தலைமையில் பல போராட்டங்களில் ஈடுபட்டு 3256 நாட்கள் – ஏறத்தாழ ஒன்பதரை ஆண்டுகாலம் சிறையில் இருந்தார். 1947 இல் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற அவர், 1964 வரை 16 ஆண்டுகாலம் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்று நவஇந்தியாவை வளர்த்தெடுத்தார். பேராற்றல் மிக்க இந்த மனிதர் தன்னுடைய நாளை எப்படி செலவிட்டிருப்பார் என்று அறிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

நேரு பொறுப்பு மிகுந்த பல பதவிகளை வகித்தார். சுதந்திர இந்தியாவின் பிரதமராகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார். அணுசக்தித்துறையின் தலைவர், திட்டக்கமிஷன் தலைவர் போன்ற பொறுப்புகளையும் அவர் வகித்துள்ளார். 1951 முதல் 1954 வரை காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்தார்.

நேரு குளிர் காலத்தில் கூட காலை 6.30 மணிக்கு எழுந்துவிடுவார். (கோடையில் அரை மணி நேரம் முன்னதாகவே எழுந்துவிடுவார்) அடுத்த ஒரு மணி நேரம் பத்திரிகைகளைப் படிப்பதற்கும், யோகா பயிற்சிக்கும் செலவிடுவார். தினசரி பயிற்சி செய்யும் பழக்கம் 1920கள் முதற்கொண்டே அவரிடம் இருந்து வந்தது. உடல் நலத்திற்கு இத்தகைய பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம் என்ற அழுத்தமான நம்பிக்கையை அவர் கொண்டிருந்தார்.

காலை 7.30 மணி வாக்கில் அந்த நாளின் வல்லமைமிக்க சவால்களை சந்திப்பதற்காக தயாராகிவிடுவார். தன்னுடைய தனி அறையில் தினந்தோறும் வந்து குவியும் ஏராளமான கடிதங்களை முதலில் படிப்பார். ஒரு நாளைக்கு சராசரியாக 500 கடிதங்களும், தந்திகளும் அவருக்கு வந்து கொண்டிருந்தன. காலை உணவை எடுத்துக்கொள்ள அவருக்கு 15 நிமிடங்களுக்குமேல் ஆகாது. உணவு உண்பதற்காக காத்திருப்பது அவருக்கு ஏற்புடைய விஷயமில்லை. வழக்கமாக காலை உணவில் மேற்கத்திய உணவு வகைகளுடன் பழச்சாறு, முட்டை, தானியம், வாட்டப்பட்ட ரொட்டி, காபி ஆகியவை இருக்கும். அவரது மகள் இந்திரா அநேகமாக எப்போதும் அருகில் இருப்பார். இந்திராவின் இரண்டு குழந்தைகளும் விடுமுறைக் காலங்களில் உடனிருப்பார்கள்.

அவருடைய தீன்மூர்த்தி பவன் வீட்டிலிருந்து இறங்கி தரை தளத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்கு 8.15 மணி அளவில் நேரு வருவார். அங்கு அவரை சந்திக்க எப்போதும் சிலர் காத்திருப்பார்கள். 15 நிமிடங்களுக்குள் அவர்களிடம் பேசி அனுப்பிவிடுவார். பிறகு, வளர்ப்புப் பிராணிகளுடன் சிறிது நேரத்தை செலவிடுவார். அவருடைய வீட்டின் பின்புறம் உள்ள கூண்டுகளில் அழகிய தோற்றம் கொண்ட சிறுகரடிகள் இருக்கும். சுற்றிலும் பொலிவுமிக்க அழகிய தோட்டம் இருக்கும்.

டில்லியில் ராஜ்பாத்திற்கு எதிரே ரெய்சானா ஹில் சாலையிலுள்ள செந்நிறக்கற்களால் ஆன தெற்கு வளாகத்தில் வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில் அவர் அமர்ந்திருப்பார். அதன் பின்புலத்தில் குடியரசுத்தலைவர் மாளிகை தோற்றமளிக்கும். இந்தக் கட்டடங்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மரபில் உருவானவை. அனைவரது கவனத்தையும் கவரக்கூடியவை.

பாராளுமன்ற அவை நடைபெறாத காலங்களில் நேரு தன்னுடைய வெளியுறவு அமைச்சக அலுவலக அறையில் நாள் முழுவதும் இருப்பார். காலை ஒன்பது மணி முதல் 1.30 மணி வரையிலும், மதிய உணவுக்குப்பிறகு 2.45 முதல் 6.30 அல்லது 7 மணி வரையிலும் அவர் அங்கு இருப்பார். இங்கு வெளிநாட்டுத் தூதுவர்கள், வருகைதரும் பெருமக்கள், அமைச்சரவை சகாக்கள், கட்சித் தொண்டர்கள் என்று முடிவில்லாமல் வந்துகொண்டே இருப்பவர்களை சந்திப்பார். மலைபோல் குவிந்திருக்கும் கோப்புகளை கருத்தூன்றிப் படிப்பார். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உடனடியாக முடிவெடுக்க வேண்டிய விஷயங்கள் பலவற்றை அவர் கவனிக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் சந்திப்புகள் நடைபெறும். சந்திப்புகளுக்கு இடைப்பட்ட நேரங்களில் அவரது சுருக்கெழுத்தாளர்கள் எழுதுவதற்கான விவரங்களைச் சொல்வார். உண்மையில் இதுதான் தடைப்படாத அவரது அலுவலகப் பணிகளாகும். மேலும், வந்திருப்பவர்கள் தன்னிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே நேரு குறிப்புகளை எடுத்துக் கொள்வார். நேரடியாக சந்தித்துப் பேசி முடித்த பிறகு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு அவருக்கு இது உதவும்.

பாராளுமன்றக் கூட்டத்தொடர்களின் போது, அவருடைய வேலைத்திட்டம் இதுபோலத்தான் இருக்கும். ஆனால், அவர் தெற்கு வாசல் செயலகத்திலிருந்து புறப்பட்டு பாராளுமன்றக் கட்டடத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்குச் சென்றுவிடுவார். கேள்வி நேரமாக இருந்தால் அவர் மதியம் வரையில் அவையில் இருப்பார். முக்கியமான விவாதங்களின் போது அவை முடியும் வரை அமர்ந்திருப்பார். நாளின் எஞ்சிய நேரத்தில் அவர் இரண்டாம் தளத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்தபடி அலுவல்களைக் கவனிப்பார். கூட்டத்தொடர்களின் போது நேரமின்மை காரணமாக அமைச்சரவைக் கூட்டம், கட்சியின் கூட்டங்கள் போன்றவை காலை 11 மணிக்கு முன்பாகவோ, அல்லது மாலையிலோ அவரது இல்லத்தில் நடத்தப்படும். மாலை 6.30 அல்லது 7 மணிக்கு அவர் வீடு திரும்பும் போது, அங்கு காத்திருப்பவர்களை இரவு 8.30 மணி வரை பார்க்க வேண்டியிருக்கும். வந்திருப்பவர்களை ஒவ்வொருவராக அழைத்து பேசி அனுப்பிவிட்டு இடைப்பட்ட நேரத்தில் விடுபட்டுப்போன விவரங்களை எழுதுமாறு சுருக்கெழுத்தாளர்களைப் பணிப்பார்.

இரவு உணவு குடும்பத்தாருடன் இயல்பான முறையில் நடக்கும். அரிதான ஒரு சில சமயங்களில் தனிச் சிறப்புமிக்க விருந்தினர்களுக்கு அரசாங்க விருந்து நடைபெறும். நாள் முழுவதும் வேலைப்பளுவின் காரணமாக சந்திக்கவியலாது போன அமைச்சரவை சகாக்கள், தூதர்கள் ஆகியோர் வீட்டில் நடைபெறும் இரவு விருந்திற்கு அழைக்கப்படுவர். இதுபோன்ற சமயங்களில் இரவு 10.30 மணிவரை அவர் அங்கிருப்பார். மாலையில் அரசாங்க விழாக்களில் இரவு 10.30 மணி வரை அவர் கலந்து கொள்ள நேரிடும். இதுபோன்ற நேரங்களில் அவர் வீட்டில் உள்ள தனது அலுவலக அறைக்கு வந்து நள்ளிரவு வரையிலோ அதற்கு மேலுமோ அங்கு பணி புரிவார்.அவருடனான உரையாடல்கள் அனைத்தும் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு சுருக்கமாக இருக்க வேண்டும். இல்லாவிடில் அவர் பொறுமை இழந்து ‘அன்புடையீர், உங்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டே இருப்பதற்கு எனக்கு வாழ்நாள் போதாது” என்று சொல்லிவிடுவார்.ஏற்றுக்கொள்ள முடியாதவற்றிற்கு அவர் ஆற்றும் முதல் எதிர்வினை வெடித்துக் கிளம்பக்கூடியதாக இருக்கும். ஆனால், அதனை நீங்கள் தாங்கிக் கொண்டுவிட்டால் அவர் அமைதியாகி, நீங்கள் சொல்வதைக் கேட்பார். பெரும்பாலான தருணங்களில் இறுதியில் அவர் நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளவும் செய்வார். ஏற்கமுடியாதனவற்றை தனிப்பட்ட முறையில் தனக்கு எதிரானதாக அவர் எடுத்துக்கொள்ளமாட்டார்.

அவருக்கு விருப்பமில்லாத ஒன்று நடக்கும் போது, நேரு தனது கட்டுப்பாட்டை இழந்துவிடுவார். படபடவென்று பொரிந்து தள்ளிய பிறகு, உடனடியாக அவர் அமைதியாகிவிடுவார். ஏற்பாடுகளுக்குப் பொறுப்பான தன்னைச் சேர்ந்தவர்கள் அந்த சூழ்நிலைக்கு ஏற்ற தீர்வைக் கண்டுவிடுவார்கள் என்று அவர் உணர்ந்து கொள்வார். அவர் ஒருபோதும் யாரையும் குறை கண்டுபிடித்து ஓயாது தொல்லை கொடுத்ததில்லை.

டில்லியில் அடிக்கடி அவர் பொதுமேடைகளில் பேசுவார். சுற்றுப்பயணம் செல்லும் போது தேவையின் காரணமாக பயணத்திட்டம் நெகிழ்ச்சியாக இருக்கும். இருந்தபோதிலும், பணிச்சுமை அடிப்படையில் வேறுபட்டதாக அமைந்திருக்காது. அடிப்படையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான தேவையை நேரு ஏற்றுக்கொண்டபோதிலும், சம்பிரதாயங்கள், ஒப்புக்குரிய நடைமுறைகள் போன்றவற்றிற்கு அவர் எதிரானவராகவே இருந்தார். பக்ராநங்கலில் அணிவகுப்பு மரியாதை செய்த ஒருவர், சம்பிரதாய முறைப்படி ஊதுகொம்புடனும், துப்பாக்கியுடனும் வந்து நேருவுக்கு மரியாதை தெரிவிக்க முற்பட்டார். பண்டித நேரு இதனை விரும்பவில்லை. கோபம் கொள்ள இருந்தார். பாதுகாப்பு உயர் அதிகாரி இதனைப் புரிந்துகொண்டு அணிவகுப்பைக் கலைக்கும்படி ஆணையிட்டு நிலைமையைச் சமாளித்தார்.

நேருவின் பெருவலிமை

நேருவின் பெருவலிமை பற்றி காங்கிரஸ் தலைவர் பட்டாபி சீத்தாராமையா உறுதிபடக் கூறியது:

‘நேரு தனது வலிமை பற்றி பெருமிதம் கொள்வார். எனக்கு தலைவலிக்கிறது என்று ஒருமுறை நான் நேருவிடம் சொன்ன போது, தலைவலி என்றால் என்ன என்பதே எனக்குத் தெரியாது. என் வாழ்க்கையில் ஒரு நாளும் எனக்குத் தலைவலி வந்ததே இல்லை’ என்று அவர் என்னிடம் கூறினார். அவர் ஒருபோதும் மின் தூக்கியைப் பயன்படுத்தியதில்லை. ஒரே நேரத்தில் இரண்டு படிகளைத் தாவி ஏறி தனது வெளியுறவுத்துறை அலுவலகத்திற்கு அவர் செல்வது வழக்கம். அவரோடு சேர்ந்து செல்லும் போது ஒரே நேரத்தில் இரண்டு படிகளை ஏன் கடக்க வேண்டும்? ஒவ்வொன்றாக ஏறினால் போதாதா? என்று நான் கேட்டேன். எரிச்சலடைந்தது போல் என்னைத் திரும்பிப் பார்த்து சொன்னார். ‘என்னை வயதானவன் என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?’ ஆயினும், காலம் அவரைக் காவு வாங்கிவிட்டது. பல ஆண்டுகாலக் கடும் உழைப்பு, மன அழுத்தம், கடுமையான முயற்சிகள், வசதியற்ற மோசமான சிறைகளில் நீண்டகால சிறைவாசம் போன்றவை அவரை உடல் ரீதியாகப் பாதித்துவிட்டன. போரில் வெற்றிகண்ட பின்னரும் அவருக்கு ஓய்வு என்பதே இல்லை.

தினமும் 16 மணி நேரம் இடைவெளி இல்லாமல் உழைப்பார். ஒரு சில சமயங்களில் இரவு 11 மணிக்குமேல் எனது வீட்டிற்குத் தொலைபேசியில் அழைப்பார். அவசரமான பிரச்சினைகள் பற்றிப் பேசவேண்டும். உடனே புறப்பட்டு வாருங்கள் என்று அழைப்பார். அந்த நேரம் அவரது கணக்குப்படி வேலை நேரத்திற்குள் அடங்கும். அவருக்குப் பிடித்தமான ராபர்ட் ப்ரோஸ்ட் கவிதையின்படியே அவர் வாழ்ந்தது போலத் தோன்றுகிறது:” இருளும் நீள்நெடு ஆழமும் கொண்ட அழகிய காடு – ஆனால், நிறைவேற்றவேண்டிய பணிகள் என்னிடம் இருக்கின்றன. உறங்கும் முன் பல மைல் தூரம் நான் பயணித்தாக வேண்டும்.

நேருவின் தனிச்சிறப்பு குறித்து எச்.வி.ஆர். அய்யங்கார்:

‘நேருவின் நம்பிக்கைகள், உறுதிப்பாடுகள் அனைத்தும் துண்டு துண்டாகச் சிதறி நொறுங்கிப்போனதாக அவர் நினைத்திருக்கக்கூடிய அந்த நாளைப்போன்ற இன்னொரு நாளை கற்பனையில் கூட என்னால் காண முடியவில்லை. நாங்கள் லாகூரிலிருந்து இரவு ஒன்பது மணிக்குத் திரும்பி வந்திருந்தோம். இரவு உணவைத் தாமதமாக எடுத்துக்கொண்டோம். அதனூடேயேபாகிஸ்தான் அமைச்சர்களுடன் அடுத்த நாள் பகல் பொழுதில் நடைபெறவிருக்கும் நிகழ்வுகள் பற்றிக் கலந்து பேசியிருந்தோம். நள்ளிரவு நெருங்கும் போது நாங்கள் கலைந்து சென்றோம்.

நான் சோர்ந்துபோய் படுக்கைக்குச் சென்றேன். சில சிரமங்களுடன் மறுநாள் காலை சீக்கிரமாக 6 மணிக்கு எழுந்து விமான நிலையம் செல்வதற்குத் தயாரானேன். கடிதங்கள், தந்திகள், பிரதமர் கொடுத்திருந்த நினைவுக் குறிப்புகள் ஆகியவை அடங்கிய ஒரு குவியலை உதவியாளர் என்னிடம் காட்டினார். அனைவரும் சென்ற பிறகு இந்தக் குறிப்புகள் அனைத்தும் தன்னிடம் கொடுக்கப்பட்டதாக அவர் என்னிடம் கூறினார். பிரதமர் இரவு 2 மணிக்குத்தான் தூங்கச் சென்றிருக்கிறார். ஆனால், அடுத்த நாள் காலை 5.30 மணிக்கே அவர் எழுந்து தயாராகிவிட்டார்.

அன்றைய வேலைத்திட்டம் ஒரு சிறிது வித்தியாசமாக இருந்தது. 24 மணி நேரத்தில் 16 முதல் 17 மணி நேரம் கடந்த 13 ஆண்டுகளாகத் தினமும் அவருடன் பணி செய்திருக்கிறோம். அவருடைய பணியாளர்கள் அவரை விடவும் இளமையானவர்கள். ஆனாலும் அவரது வேகத்திற்கு அவர்களால் ஒருபோதும் ஈடுகொடுக்க முடியவில்லை. 70 வயதான மனிதரின் தனித்தன்மையான ஆற்றலுக்கு என்ன காரணம்?

அவருடைய தனிச் சிறப்புடைய உற்சாகம் பற்றி அறிந்து கொள்ளாமல், அவர் பணிபுரியும் நுட்பம் பற்றிய விவாதம் எதையும் தொடங்க முடியாது” என்று கூறுகிறார் பிரதமர் நேருவின் செயலாளர்.

The post பிரதமர் நேருவின் வாழ்க்கையில் ஒரு நாள் : ஆ. கோபண்ணா appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

ஜமீன்தாரி முறை ஒழிப்பால் விவசாயிகள் ஒரு நாள் உயர்வார்கள் : ஜவஹர்லால் நேரு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரை
விவசாய மசோதாக்களை   நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தபோது, அவைக்கு உள்ளேயும் வெளியேயும் மாபெரும் போராட்டங்கள் நடைபெற்றன.

விவசாயிகளின் நிலையை மேம்படுத்த சுதந்திரத்துக்குப் பின் எடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் நடவடிக்கை என்று ஆளும் கட்சியினர் பெருமிதம் அடைந்தனர்.

நிலச் சீர்திருத்தச் சட்டத்தையும் பசுமைப் புரட்சியையும் கொண்டு வந்து இந்திய விவாயத்துறையின் முகத்தையும், இந்திய விவசாயிகளின் வாழ்க்கையையும் மாற்றியதையும்  கவனத்தில் கொள்ள இவர்கள் தவறிவிட்டனர்.

இந்த சூழ்நிலையில், கடந்த 1952 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடந்தது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவின் மற்ற மாகாணங்களிலும் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டது.

மோதி நகர் பேச்சு:

ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டதும், 1952 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் மோதி நகரில் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆற்றிய உரை…

சகோதர, சகோதரிகளே, 2 நாட்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச மாகாண முதலமைச்சர் பண்டிட் கோவிந்த் பல்லப் பந்த் என்னுடன் டெல்லியில் தங்கியிருந்தார். நான் இந்த நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எப்படியிருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று விரும்பியதோடு, இன்றைய நிகழ்ச்சியில் உங்களோடு இணைந்து பங்கேற்பதிலும் பெருமைப்படுகின்றேன்.

30 ஆண்டுகளுக்கு முன்பு,   உத்தரப்பிரதேச மாகாணத்தில் அலகாபாத், பிரதாப்கர்,ஜான்பூர், ரேபரலி, சுல்தான்பூர் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகளுடன் அலைந்து திரிந்திருக்கிறேன் என்பதை நான் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

அப்போது, ஏழை விவசாயிகளின் அவல நிலை என் மனதில் பதிந்துபோனது. விவசாயிகளுக்கு ஜமீன்தாரி முறை தீங்கு விளைவித்துக் கொண்டிருந்ததை நான் நேரில் கண்டேன். 30 ஆண்டுகளுக்கு முன்பே, ஜமீன்தாரி முறையை எதிர்த்து நாங்கள் குரல் கொடுத்தோம். பல ஆண்டுகள் எங்களது கடுமையான உழைப்பின் காரணமாக, அந்த இலக்கை அடைந்தோம். சுதந்திரத்துக்கு முன்பு, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான சவால்களும், அந்த ஆட்சியைத் தூக்கி எறிவதும்தான் எங்கள்  முதன்மையான பணியாக இருந்தது” என்றார்.

புதுடெல்லி பேச்சு:

அதன்பிறகு, 1952 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி புதுடெல்லியில் டெல்லி மாநில காங்கிரஸ் கமிட்டி ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் நேரு ஆற்றிய உரை:

உத்தரப்பிரதேச மாகாண மக்கள் தொகை 6 கோடி முதல் 7 கோடி வரை இருக்கும். இதில் பெரும்பான்மையோர் விவசாயிகள். எனவே, ஜமீன்தாரி முறையை ஒழிப்பது என்று கொண்டுவரப்பட்ட தீர்மானம், லட்சக்கணக்கான விவசாயிகளின் அடிமைச் சங்கிலியை உடைத்தெறிய வழிவகுத்துள்ளது. மற்ற நாடுகளில்  நடைபெறும் புரட்சிகளில் ரத்தமும் வன்முறையும் நிறைந்திருக்கும். ஜமீன்தாரி முறையை ஒழித்து உத்தரப்பிரதேசத்தில் கொண்டு வரப்பட்ட அமைதித் தீர்மானம், மற்ற மாகாணங்களிலும்கூட பின்பற்ற அடிகோலியது. அப்போது, நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருப்பேன் என்று நீங்கள் நினைத்துப் பாருங்கள். நான் அன்றைய தினம் செய்தது, இந்தியா சுதந்திரம் அடைந்த   உணர்வை மீண்டும் ஏற்படுத்தியது.

இந்த மிகப் பெரிய நடவடிக்கையால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்தார்கள்.  லட்சக்கணக்கான மக்கள் அந்த நிலத்தில் வாழ்வது தான் நிலப் பிரச்சினையாக இருந்தது. ஜமீன்தாரி முறையை ஒழித்ததால் நிலப் பிரச்சினை தீர்ந்ததாகவோ, அதனை நாங்கள் சாதித்தோம் என்றோ அர்த்தம் இல்லை. எங்கள் பாதையில் தடையாக இருந்தவற்றை ஓரளவு அகற்ற ஜமீன்தாரி முறை ஒழிப்பு பயன்பட்டது. விவசாயிகளின் முதுகில் ஏற்றப்பட்டிருந்த சுமையை  இறக்கி வைத்துள்ளோம். ஆனால், நாம் மற்றொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டியுள்ளது. தேவைப்பட்டால், விவசாயிகளின் நிலையை மேம்படுத்த புதிய சட்டங்களையும் கொண்டு வரலாம்..

ஜமீன்தாரி முறையை ஒழித்தவுடன், ஏராளமான விவசாயிகளுக்குச் சிறிதளவு நிலம் கிடைத்தது. ஆனால், இன்றும் ஒரு சிலர் பெருவாரியான நிலத்துக்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். இது நிலம் தொடர்பான விசயம் மட்டுமல்ல, கொள்கை சார்ந்த விசயம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நகரம் மற்றும் கிராமங்களில் நிலத்தில் உழைத்தாலோ அல்லது வியாபாரம் செய்தாலோ, அங்கு வாழ்வோர் சரிசமமான வாழ்க்கைக்கு படிப்படியாக மாறவேண்டும் என்பதையே விரும்புகின்றோம்.

எவ்வாறாக இருந்தாலும், நம் லட்சியத்தை அடைய நாம் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கின்றோம்.  உதாரணத்துக்கு, உத்தரப்பிரதேசத்தில் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டதும், நில உச்சவரம்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, எதிர்காலத்தில் எந்த ஒரு தனி நபரும் 30 ஏக்கர் நிலத்தைச் சொந்தமாக வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கின்றேன்.

இந்த நடவடிக்கை விவசாயிகளுக்கிடையேயான ஏற்றத்தாழ்வைக் களையும். இதேபோன்று, காஷ்மீரில் கொண்டு வரப்பட்டுள்ள நிலச் சட்டம், விவசாயிகளுக்கான நிலப் பிரச்சினையை விரைவாகத் தீர்த்து வைத்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகின்றேன். பல நூற்றாண்டுகளாக ஏழைகளாகவும் அடித்தட்டு மக்களாகவும் இருந்த விவசாயிகள் இந்துக்களாக இருந்தாலும், முஸ்லீம்களாக இருந்தாலும், அவர்கள் முகத்தில் புதிய ஒளியை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். இந்த நிலம் நமக்குச் சொந்தமானதா? என்ற நம்பமுடியாத நிலை அவர்களுக்கு ஏற்படும். இவ்வாறு அப்போதைய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு உரையாற்றினார்.

சுதந்திரத்துக்குப் பிறகு விவசாயிகள் மேம்பாட்டுக்காக முதன்முறை சட்டம் கொண்டு வந்தது யார்? என்று இப்போது புரியும்.

நேருவின் இத்தகைய உரையை மறைத்துவிட்டுத் தான், பாஜகவினர் தொடர்ந்து பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு, கடந்த கால வரலாற்றை மறைக்க முயல்கின்றனர்.  சுதந்திரத்துக்குப் பிறகு முதல்முறையாக விவசாயிகளுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள் .

”யார் கேட்கப் போகிறார்கள்?”.

The post ஜமீன்தாரி முறை ஒழிப்பால் விவசாயிகள் ஒரு நாள் உயர்வார்கள் : ஜவஹர்லால் நேரு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரை appeared first on தேசிய முரசு - Desiya Murasu.