P Chidambaram Archives - தேசிய முரசு - Desiya Murasu

திறமையற்ற பொருளாதார நிர்வாகம் : மத்திய பட்ஜெட்டை கிழித்துத் தொங்கவிட்ட முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்
73 சதவிகிதம் சொத்துக்களை வைத்திருக்கும் 1 சதவிகித்தினருக்கான பட்ஜெட் என, மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் மத்திய முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்தார்.

2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மீதான விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்றது. இதில் பேசிய ப.சிதம்பரம், பட்ஜெட் குறித்து அதிருப்தி தெரிவித்ததோடு, இந்த பட்ஜெட் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவதற்கான பட்ஜெட் என்று கடுமையாக விமர்சித்தார். அதாவது நாட்டின் 73 சதவிகித சொத்துக்களை வைத்திருக்கும் 1 சதவிகித பெரும் பணக்காரர்களின் பட்ஜெட் என்று குறிப்பிட்டார். அதோடு, திறமையற்ற பொருளாதார நிர்வாகத்தை இந்த பட்ஜெட் பிரதிபலிப்பதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.

அவர் தொடர்ந்து பேசியதாவது:

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவதற்குத் தான் இந்த பட்ஜெட் வழிவகுக்கிறது. ஏழைக்காக இந்த பட்ஜெட்டில் ஏதுமில்லை. பொருளாதார மந்தநிலையை ஏற்க அரசு மறுக்கிறது. பொருளாதாரத்தில் இருக்கும் பிரச்சினை சுழற்சியானது என்றும், கட்டமைப்பு ரீதியானது அல்ல என்றும் அவர்கள் நம்புகிறார்கள். கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே பொருளாதாரத்தில் மந்தநிலை இருந்தது எதார்த்தமான உண்மை. திறமையற்ற பொருளாதார நிர்வாகத்தைக் கடந்த 3 ஆண்டுகளாக நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது.

நான் பயன்படுத்திய ‘திறமையற்ற’ என்ற வார்த்தையை விதிவிலக்காக மாண்புமிகு நிதி அமைச்சர் எடுத்துக் கொள்ள வேண்டும். என்னிடம் இருக்கும் மென்மையான வார்த்தைகளைத் தான் பயன்படுத்துகிறேன். 2020-21 இறுதி வரையிலான காலகட்டத்தையும் சேர்த்துத்தான் 3 ஆண்டு திறமையற்ற பொருளாதார நிர்வாகம் என்று கூறுகிறேன். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், 2017-18 ஆம் ஆண்டிலிருந்து என்று எடுத்துக் கொள்ளலாம். வளர்ந்த மாநிலமான தமிழ்நாடு உட்பட நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் தேவை குறைந்து போயிருக்கிறது. அப்படியென்றால், பின்தங்கிய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் ஒடிசாவின் நிலைமை என்ன என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

ஒட்டுமொத்த இந்தியாவையும் நீங்கள் கண்டுகொள்வதில்லை. பட்ஜெட் யாருக்காக? ஏற்கனவே அடைந்த வளர்ச்சியைத் திறமையற்ற நிர்வாகம் தடுக்கும். கடன் வாங்குவது, பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பெரும் பள்ளங்களை நிரப்பவே பயன்படும். நான் சொல்வதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். 2021 ஆம் ஆண்டின் இறுதியில் வளர்ச்சி கணிப்புகள் வீழ்ச்சியடையும். ஜிடிபி வளர்ச்சி 14.8 சதவிகிதமாக இருக்கும் என்பது அரசின் கணிப்பாக இருக்கிறது. ஆனால், அவர்களே 11 சதவிகிதம் வளர்ச்சி இருக்கும் என்கிறார்கள்.

வரும் ஆண்டில் குறைந்தது 5 அல்லது 6 சதவிகிதம் பணவீக்கம் இருக்கும். இந்த கணக்குப்படி பார்த்தால், உங்கள் வளர்ச்சி 9.4 சதவிகிதம் அல்லது 8.4 சதவிகிதமாக இருக்கும். கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிந்தைய மந்தநிலைக்குப் பிறகு ஏற்படும் இயற்கையான மற்றும் இயந்திரத்தனமான வளர்ச்சியாகும். வெறும் எண்களை வைத்து பெருமை கொள்ள வேண்டாம். நிலையான மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பெற உங்களுக்கு 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகும். நல்ல அர்த்தமுள்ள விமர்சனங்களை எடுத்துக் கொள்ளுங்கள். பொருளாதார கட்டமைப்புப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, ஏழைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும். அதைவிட்டு, இந்த எண்களின் பின்னே செல்லாதீர்கள்.

பெரும்பாலான எண்ணிக்கை யூகத்திலேயே இருப்பதால், இந்த நிதிநிலையைத் திரும்பப் பெறுங்கள். மொத்த கூடுதல் மூலதனச் செலவு ரூ. 51,000 கோடி என்கிறீர்கள். மீதத் தொகை எங்கே போனது?

வருவாயைப் பொறுத்தவரை, உங்கள் செலவினம் ரூ. 4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வருவாய் பற்றாக்குறை ரூ. 3 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. நான் சொல்வதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த ஆண்டுக்கான வருவாய் கணிப்புகள் உங்களுக்கு லட்சியமாக இருக்கிறது. ஆனால், நிச்சயம் பற்றாக்குறையாக இருக்கும். மூலதன செலவினத்திலிருந்து இந்த அரசு போதுமான செலவைச் செய்யவில்லை. சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்ட போதிலும், பட்ஜெட்டில் பாதுகாப்பு குறித்துக் குறிப்பிடாதது முதல் முறை நிகழ்வாகும். பட்ஜெட் உரை மீதான பேச்சு புத்திசாலித்தனமாகவும், அதிகாரத்துவமாகவும், சாக்குப்போக்கு சொல்வதாகவும் அமைந்துள்ளது.

கொரோனா வந்ததற்கும் நீங்கள் பொறுப்பு இல்லை. கொரோனா போவதற்கும் நீங்கள் பொறுப்பு இல்லை. இந்த பட்ஜெட்டை காங்கிரஸ் கட்சி நிராகரிக்கிறது. எங்களது வலுவான எதிர்ப்பையும், கருத்தையும் பதிவு செய்துள்ளோம்.

இந்த கருத்தைப் பதிவு செய்வதால், ‘போராடுவதற்காகவே வாழ்பவர்கள்’ என்றும், ‘ஒட்டுண்ணிகள்’ என்றும் நாங்கள் அழைக்கப்படலாம்.

மக்களுக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் உடனே நிவாரணம் வழங்க வேண்டும். இதனைப் பணமாகவோ, உணவுப் பொருட்களாகவோ வழங்க வேண்டும். இல்லையென்றால், ஏழை மக்கள் விழித்தெழுந்து வன்முறையின்றி, அமைதியாகச் செய்ய வேண்டியதைச் செய்வார்கள் என்று எச்சரிக்கிறேன்.

விவசாய செஸ் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயராது என்று 3 நாட்களுக்கு முன்பு சொன்னீர்கள். கெட்டிக்காரன் புழுகு 8 நாளைக்கு என்பதற்குப் பதிலாக, 3 நாட்களிலேயே வெளிப்பட்டு பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்ந்துவிட்டது.

நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதில் இந்த அரசு தோல்வியடைந்துவிட்டது. திறமையற்ற பொருளாதார நிர்வாகத்தால் 3 ஆண்டுகளுக்கு முந்தைய ஜிடிபி விகிதத்துக்குப் பொருளாதாரம் திரும்பியுள்ளது.

தேவையை அதிகரிக்க வேண்டும் என்று உலகின் ஒவ்வொரு பொருளாதார நிபுணர்களும் கூறுகின்றனர். தேவையை அதிகரிக்க மக்களின் கையில் பணத்தைக் கொடுப்பதுதான் சிறந்த வழி. இதனைக் கவனத்தில் கொள்ள இந்த அரசு தவறிவிட்டது. நான் மீண்டும் குற்றஞ்சாட்டுகிறேன். கடந்த 36 மாதங்களில் கிடைத்த அனுபவங்களில் இன்னும் நீங்கள் பாடம் கற்கவில்லை. அடுத்த 12 மாதங்களுக்கும் நீங்கள் பாடம் கற்காவிட்டால், ஏழை மக்கள் தான் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பது தான் என் பயம்.

கடந்த 2004-05 ஆம் ஆண்டில் ஜிடிபி ரூ.32.42 லட்சம் கோடியாக நிலையாக இருந்தது. 2013-14 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியை நிறைவு செய்து வெளியேறிய போது, 3 மடங்கு அதிகமாகி ரூ. 105 லட்சம் கோடியாக இருந்தது.

அதன்பிறகு என்ன ஆனது? 2017-18 ஆம் ஆண்டு ரூ. 131 லட்சம் கோடியாகக் குறைந்தது. 2018-19 ஆம் ஆண்டு மீண்டும் 139 லட்சம் கோடியாக உயர்ந்தது. 2019-20 ஆம் ஆண்டு ரூ. 145 லட்சம் கோடியாக உயர்ந்தது. 2020-21 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ரூ. 60 லட்சம் கோடியாக ஜிடிபி இருந்தது. ஆண்டு முடியும்போது ரூ.130 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது, மீண்டும் 2017-18 ஆம் ஆண்டு இருந்த இடத்துக்கே ஜிடிபி திரும்பிவிட்டது என்று அர்த்தம்.

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

The post திறமையற்ற பொருளாதார நிர்வாகம் : மத்திய பட்ஜெட்டை கிழித்துத் தொங்கவிட்ட முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

விவசாய விளைப் பொருள் சந்தை குறித்து காங்கிரசின் அணுகுமுறை என்ன ? ப. சிதம்பரம் விளக்கம்
தான் விரித்த வலையிலேயே பா.ஜ.க. மாட்டிக் கொண்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக,  தற்போது வரை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகள் ஆதிக்கம் செலுத்தும் கட்சியாகவே பா.ஜ.க. உள்ளது. சரக்கு மற்றும் சேவைகளை அவர்கள் சுரண்டியதால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. அத்தகைய நிலைமையை மாற்றியமைப்பது பசுமைப் புரட்சியின் (இந்திரா காந்தி முன்னோடியாக திகழ்ந்தார்) மூலமும், தாராளமயமாக்கல் (பி.வி.நரசிம்ம ராவ், மன்மோகன் சிங்கால் அறிமுகப்படுத்தப்பட்டது) மூலமும் தொடங்கப்பட்டது.

இன்று நமது விவசாயிகளின் விவசாய விளைபொருள் உற்பத்தி  மிகையாக உள்ளது. குறிப்பாக, அரிசி மற்றும் கோதுமை உற்பத்தி அதிக அளவில் உள்ளது. நமது விவசாயிகளின் பலத்துடன், அடுத்து வந்த காங்கிரஸ் அரசு கடந்த  2013 ஆம் ஆண்டு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வந்து, ஒவ்வொரு செங்கல்லாக எடுத்து வைத்து உணவு பாதுகாப்பு முறையை கட்டமைத்தது. நமது உணவு பாதுகாப்பு முறையின் 3 தூண்களாக குறைந்தபட்ச ஆதரவு விலை, பொது கொள்முதல் மற்றும் பொது விநியோக முறை ஆகியவை உள்ளன.

2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கோடிட்டு காட்டப்பட்ட அனைத்தும், மேற்கண்ட முறைகளின் அடித்தளக் கொள்கையின் அடிப்படையில் அமைந்தது தான். தேர்தல் அறிக்கையில் நாங்கள் அளித்திருந்த வாக்குறுதியை, பிரதமரும் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர்களும் வேண்டுமென்றே, தீங்கு விளைவிக்கும் நோக்கோடு சிதைத்தனர்.

தங்களது பகுதிகளில் உள்ள சந்தைகளை எளிதாக அணுகுதல், தொழில்நுட்பம் மற்றும் சந்தைகளை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், விவசாய உற்பத்தி நிறுவனங்கள், அமைப்புகளை மேம்படுத்துதல்.

கூடுதல் அடிப்படை கட்டமைப்பு மற்றும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம், விவசாய சந்தைகளை நிறுவுவது.

விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை பெரும்பாலான கிராமங்களுக்கும், சிறிய நகரங்களுக்கும் கொண்டு செல்ல நடவடிக்கை மற்றும் சுதந்திரமான சந்தை.

பல சந்தைகளை அணுகுவதும்,விரும்பியதை தேர்வு செய்வதும் விவசாயிகளுக்கு தேவையாக இருக்கிறது. இவற்றை எல்லாம் விவசாயிகளுக்கு வழங்க காங்கிரஸ் உத்தேசித்து இருந்தது.

அதன்பிறகு, விவசாய உற்பத்தி மற்றும் மார்க்கெட் கமிட்டி சட்டத்தை ரத்து செய்வது மற்றும் விவசாய உற்பத்தியில் சுதந்திரமான சந்தை வர்த்தகம் இயற்கையான தொடர்ச்சியாக இருக்கும் என்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

நமது வாக்குறுதி தெளிவாக இருக்கும்போது,  மோடி அரசு கார்பரேட்களிடமும் வர்த்தகர்களிடமும் சரணடைந்துள்ளது. தயவுசெய்து அதனை கவனியுங்கள்:

விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்காக தனியார் கொடுக்கும் விலை, குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைவாக இருக்கக் கூடாது என்று 2 விவசாய மசோதாக்களிலும் கிடையாது. ஏன் இந்த பிரிவை சேர்க்கவில்லை?

ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகள் மட்டுமே விவசாயிகளுக்கு கிடைக்கும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று, ஆயிரக்கணக்கான மாற்றுச் சந்தையை உருவாக்காமல் விவசாயிகளை அணுகக்கூடியதாக உள்ளது.

விவசாயிகளுக்கும் தனியார் கொள்முதல் செய்வோருக்கும்  இணையான பேரம் பேசும் அதிகாரத்தை இந்த மசோதா வழங்குகிறது.  விளைபொருட்களை வாங்கும் தனியாரின் கருணைப் பார்வையை சிறு விவசாயிகள் எதிர்பார்த்து இருக்க வேண்டும்.

விவசாயிகளுக்கும் விளைபொருளை வாங்கும் தனியாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டால், இந்த மசோதாவின்படி, எந்த ஒரு விவசாயியும் வலுவாக அல்லது பொருட்களை வாங்குவோரிடம் போராட முடியாத அளவுக்கு அதிகாரத்துவமிக்கதாக உள்ளது. இதனால், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பாதிக்கப்படுவர்.

நமது உணவு பாதுகாப்பின் மூன்று தூண்கள் இந்த மசோதாவில் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மசோதாக்களை ஒவ்வொரு நிலையிலும் எதிர்க்க காங்கிரஸும் எதிர்கட்சிகளும் கைகோர்க்க வேண்டும். தற்போதைய வடிவத்திலிருந்து அவை சட்டமாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விவசாயிகள் பின்னே இருக்கப் போகிறீர்களா? அல்லது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் பா.ஜ.க.வின் பின்னே நிற்கப்போகிறீர்களா? என்ற நிலையை ஒவ்வொரு கட்சியும் எடுக்க வேண்டும்.

The post விவசாய விளைப் பொருள் சந்தை குறித்து காங்கிரசின் அணுகுமுறை என்ன ? ப. சிதம்பரம் விளக்கம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

”மலையைத் தோண்டி எலியைப் பிடிக்கும் பா.ஜ.க அரசு” : புதிய நிதித் தொகுப்புப் பற்றி ப.சிதம்பரம் விமர்சனம்
முன்னாள் மத்திய நிதி அமைச்சரும்,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்கு அளித்த காணொலி பேட்டி:

சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ள நிதித் தொகுப்பு தேவையைப் பூர்த்தி செய்யாது. மிகைப்படுத்தப்பட்ட எண்களைக் கொண்ட, மக்களைத் திகைக்க வைக்கும் மற்றொரு நயவஞ்சக முயற்சி இது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள நிதித் தொகுப்பு, ‘மலையைத் தோண்டி எலியைப் பிடித்த’ கதையாக இருக்கிறது. கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளையும்,பொருளாதாரப் பாதிப்பையும் சரிசெய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, மக்களிடம் காட்டிக் கொள்வதாகவே இந்த அறிவிப்புகள் உள்ளன.

ஏற்கனவே அறிவித்த 20 கோடி லட்சம் ரூபாய் அளவுக்கான நிதித் தொகுப்பு தோல்வியடைந்துவிட்டது. அது வெறும் புரளி என்றும் ஆகிவிட்டது. தற்போதைய புதிய அறிவிப்பின் மூலம், மக்கள் தங்களது பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தி, மக்களின் வாழ்க்கையில் அரசு குறுக்கிடுகிறது.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள நிதித் தொகுப்பில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான எந்த அம்சங்களும் இல்லை. ஏற்கனவே 20 லட்சம் கோடி ரூபாய் என்று எண்ணிக்கையை வைத்து மக்களை ஏமாற்றியது போன்றே   இந்த புதிய நிதி தொகுப்பும் உள்ளது.

புதிய அறிவிப்பின்படி, 73 ஆயிரம் கோடிகள் ரூபாய் அளவுக்கு நிதித் தொகுப்பை அறிவித்துள்ளனர். உண்மையிலேயே அவ்வளவு தொகை இல்லை. இதுவும் புரளி தான். ஆனால், அறிவிக்கப்பட்டுள்ள நிதித் தொகுப்பு மதிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.1 சதவீதம் மட்டுமே என்கின்றனர் சில பொருளாதார நிபுணர்கள்.

அதோடு,  ஊழியர்கள்  எவ்வளவு செலவு செய்ய வேண்டும், எதை வாங்க வேண்டும் என, பெற்றோரைப் போல் அரசு சொல்லிக் கொண்டிருக்கிறது. என்ன சாப்பிட வேண்டும், எந்த உடையை அணிய வேண்டும், எந்த மொழியைப் பேச வேண்டும், யாரைக் காதலிக்க வேண்டும், யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பாஜக கூறுவதைப் போல், அக்கட்சித் தலைமை தாங்கும் அரசும் கூறுகிறது. மக்கள் செலவழிப்பதைக் கட்டுப்படுத்த இப்போது முயற்சி செய்து வருகின்றனர்.

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவில் வாழும் பாதி குடும்பங்களுக்கு  இப்போது பணம் அவசியம் தேவைப்படுகிறது. பல பொருளாதார நிபுணர்கள் பரிந்துரைத்தும், மக்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தை வரவு வைக்க மத்திய அரசு மறுக்கிறது. மக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

2020-21 ஆம் ஆண்டில் 10 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும் பொருளாதாரத்தைப்  புதுப்பிக்க மத்திய அரசு மேற்கொள்ளும் பரிதாபகரமான முயற்சிகளை, மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்   என்று நம்புகிறேன்” என்றார்.

The post ”மலையைத் தோண்டி எலியைப் பிடிக்கும் பா.ஜ.க அரசு” : புதிய நிதித் தொகுப்புப் பற்றி ப.சிதம்பரம் விமர்சனம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

ரபேல் குறித்த சிஏஜி அறிக்கை தர்மசங்கடத்தை ஏற்படுத்தவில்லையா? : மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
‘பிரெஞ்ச் டிசால்ட்’ விமான தயாரிப்பு நிறுவனமும், ஏவுகணை தயாரிப்பு நிறுவனமான எம்பிடிஏ- வும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு ரபேல் தொடர்பான தொழில்நுட்பத்தை மாற்றாததை சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

”ஒப்பந்தம் செய்துகொண்டபடி, ரபேல் போர் விமானத்தின் தொழில்நுட்பத்தைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு மாற்றியதை, அந்நிறுவனம் உறுதி செய்யவில்லை என்று சிஏஜி (தலைமை கணக்கு தணிக்கையாளர்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின்படி நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகள் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கி, முதல் வருடாந்திர அர்ப்பணிப்பு 2020 செப்டம்பர் 23 ஆம் தேதியுடன் முடிந்துவிட்டது. ஒப்பந்தப்படி கடமைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசால் சொல்ல முடியுமா? சிஏஜி வெளியிட்டுள்ள புதிய அறிக்கை மத்திய அரசுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தவில்லையா?

இலகுரக போர் விமானத்தில் பயன்படுத்தப்படும் எந்திரத்தின் தொழில்நுட்ப மாற்றத்துக்கான செலவு ரூ.60 ஆயிரம் கோடிகளாகும். தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் வகையில், வெளிநாட்டு விற்பனையாளர் இந்தியாவின் ஒப்பந்த தொகையில் 30 சதவீதத்தை முதலீடு செய்திருக்கவேண்டும். அப்போது தான் ரூ.300 கோடிகளுக்கு மேல் பாதுகாப்புத் துறை போர் விமானங்களை வாங்க முடியும் என்பது இந்திய ஒப்பந்த கொள்கையாகும். ரபேல் ஒப்பந்தத்தில் இந்த முதலீடு 50 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பிரெஞ்ச் பங்குதாரர்களான டிசால்ட் விமான நிறுவனம், எம்பிடிஏ, சஃப்ரான் மற்றும் தாலேஸ் ஆகிய 4 நிறுவனங்களும் இதனைப் பின்பற்றவில்லை” என்று ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சூரஜ்வாலா தமது ட்விட்டர் பதிவில், ”முக்கியமான பாதுகாப்பு விசயத்தில் நாட்டை மத்திய அரசு தவறாக வழி நடத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மிகப் பெரிய பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த பிரச்சினை முடியாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தொழில்நுட்ப மாற்றம் செய்யப்படவில்லை என்பதை புதிய சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது. ‘மேக் இன் இந்தியா’ இப்போது’ மேக் இன் பிரான்ஸாக’ மாறியுள்ளது. ஒப்பந்தப்படி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு தொழில்நுட்பம் மாற்றப்படவில்லை. இதையும் ‘எல்லாம் நன்மைக்கே’ என்று மோடி சொன்னாலும் சொல்வார் என குறிப்பிட்டுள்ளார்.

The post ரபேல் குறித்த சிஏஜி அறிக்கை தர்மசங்கடத்தை ஏற்படுத்தவில்லையா? :  மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் பா.ஜ.க.வின் அவசர சட்டங்கள் – முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடும் கண்டனம்!
சிறிதளவு அறிவு ஆபத்தானது; சிறிதளவு வாசிப்பும் அதைவிட அதிக ஆபத்தானது.

தான் விரித்த வலையிலேயே பாஜக மாட்டிக் கொண்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக, பா.ஜக—-ஆக இருந்தது. அந்த கட்சி தற்போது வரை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகள் ஆதிக்கம் செலுத்தும் —- கட்சியாக உள்ளது. சரக்கு மற்றும் சேவைகளை அவர்கள் சுரண்டியதால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. அத்தகைய நிலைமையை மாற்றியமைப்பது பசுமைப் புரட்சியின் (இந்திரா காந்தி முன்னோடியாக திகழ்ந்தார்) மூலமும், தாராளமயமாக்கல் (பி.வி.நரசிம்ம ராவ், மன்மோகன் சிங்கால் அறிமுகப்படுத்தப்பட்டது) மூலமும் தொடங்கப்பட்டது.

இன்று நமது விவசாயிகளின் விவசாய விளைபொருள் உற்பத்தி  மிகையாக உள்ளது. குறிப்பாக, அரிசி மற்றும் கோதுமை உற்பத்தி அதிக அளவில் உள்ளது. நமது விவசாயிகளின் பலத்துடன், அடுத்து வந்த காங்கிரஸ் அரசு கடந்த 2013 ஆம் ஆண்டு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வந்து, ஒவ்வொரு செங்கலாக எடுத்து வைத்து உணவு பாதுகாப்பு முறையை கட்டமைத்தது. நமது உணவு பாதுகாப்பு முறையின் 3 தூண்களாக குறைந்தபட்ச ஆதரவு விலை, பொது கொள்முதல் மற்றும் பொது விநியோக முறை ஆகியவை உள்ளன.

2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கோடிட்டு காட்டப்பட்ட அனைத்தும், மேற்கண்ட முறைகளின் அடித்தளக் கொள்கையின் அடிப்படையில் அமைந்தது தான். தேர்தல் அறிக்கையில் நாங்கள் அளித்திருந்த வாக்குறுதியை, பிரதமரும் பாஜக செய்தி தொடர்பாளர்களும் வேண்டுமென்றே, தீங்கு விளைவிக்கும் நோக்கோடு சிதைத்தனர்.

உள்ளீட்டு அணுகுதல், தொழில்நுட்பம் மற்றும் சந்தைகளை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், விவசாய உற்பத்தி நிறுவனங்கள், அமைப்புகளை மேம்படுத்துதல்.

கூடுதல் அடிப்படை கட்டமைப்பு மற்றும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம், விவசாய சந்தைகளை நிறுவுவது.
விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை பெரும்பாலான கிராமங்களுக்கும், சிறிய நகரங்களுக்கும் கொண்டு செல்ல நடவடிக்கை மற்றும் சுதந்திரமான சந்தை.

பல சந்தைகளை அணுகுவதும்,விரும்பியதை தேர்வு செய்வதும் விவசாயிகளுக்கு தேவையாக இருக்கிறது. இவற்றை எல்லாம் விவசாயிகளுக்கு வழங்க காங்கிரஸ் உத்தேசித்து இருந்தது.
அதன்பிறகு, விவசாய உற்பத்தி மற்றும் மார்க்கெட் கமிட்டி சட்டத்தை ரத்து செய்வது மற்றும் விவசாய உற்பத்தியில் சுதந்திரமான சந்தை வர்த்தகம் இயற்கையான தொடர்ச்சியாக இருக்கும் என்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

நமது வாக்குறுதி தெளிவாக இருக்கும்போது,  மோடி அரசு கார்பரேட்களிடமும் வர்த்தகர்களிடமும் சரணடைந்துள்ளது. தயவுசெய்து அதனை கவனியுங்கள்:

விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்காக தனியார் கொடுக்கும் விலை, குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைவாக இருக்கக் கூடாது என்று 2 விவசாய மசோதாக்களிலும் கிடையாது. ஏன் இந்த பிரிவை சேர்க்கவில்லை?

ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகள் மட்டுமே விவசாயிகளுக்கு கிடைக்கும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று, ஆயிரக்கணக்கான மாற்றுச் சந்தையை உருவாக்காமல் விவசாயிகளை அணுகக்கூடியதாக உள்ளது.

விவசாயிகளுக்கும் தனியார் கொள்முதல் செய்வோருக்கும்  இணையான பேரம் பேசும் அதிகாரத்தை இந்த மசோதா வழங்குகிறது.  சிறு விவசாயிகள் விளைபொருட்களை வாங்கும் தனியாரின் கருணைப் பார்வையை எதிர்பார்த்து இருக்க வேண்டும்.

விவசாயிகளுக்கும் விளைபொருளை வாங்கும் தனியாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டால், இந்த மசோதாவின்படி, எந்த ஒரு விவசாயியும் வலுவாகவோ அல்லது பொருட்களை வாங்குவோரிடம் போராட முடியாத அளவுக்கு அதிகாரத்துவமிக்கதாக உள்ளது. இதனால், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பாதிக்கப்படுவர்.

நமது உணவு பாதுகாப்பு 3 தூண்கள் இந்த மசோதாவில் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மசோதாக்களை ஒவ்வொரு நிலையிலும் எதிர்க்க காங்கிரஸும் எதிர்கட்சிகளும் கைகோர்க்க வேண்டும். தற்போதைய வடிவத்திலிருந்து அவை சட்டமாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விவசாயிகள் பின்னே இருக்கப் போகிறீர்களா? அல்லது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் பாஜகவின் பின்னே நிற்கப்போகிறீர்களா? என்ற நிலையை ஒவ்வொரு கட்சியும் எடுக்க வேண்டும்.

The post விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் பா.ஜ.க.வின் அவசர சட்டங்கள் – முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடும் கண்டனம்! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட மாமனிதர் சிதம்பரம்!
முன்னாள் மத்திய நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்களின் 75 ஆவது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய அரசில் பணியாளர் நலத்துறை இணையமைச்சர், வர்த்தக அமைச்சர், நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் என மிகமிக முக்கிய பொறுப்புகளை வகித்து இந்திய அரசின் சிறப்பான செயல்பாடுகளுக்கு முன்னணிப் பங்கு வகித்தவர். ஆட்சி நிர்வாகத்தில் தனி முத்திரை பதித்தவர். அவரிடம் எந்த கோப்புகளும் காலதாமதமானதாக எவருமே கூற முடியாது. விரைந்து முடிவெடுக்கக் கூடிய ஆற்றல்மிக்கவர். அவரது முடிவுகள் அனைத்துமே நாட்டு மக்கள் நலன் சார்ந்ததாகவே இருக்கும். எந்த தனிப்பட்ட நபரின் நலனை விட நாட்டின் நலனை மிக உயர்வாக கருதுபவர்.

தமிழகம் மத்திய அரசிற்கு பல திறமைசாமிகளை வழங்கியிருக்கிறது. சுதந்திரம் அடைந்ததும் பிரதமர் நேரு தலைமையில் அமைந்த முதல் ஆட்சியில் கோயமுத்தூரைச் சேர்ந்த ஆர்.கே. சண்முகம் செட்டியார் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். பிற்காலங்களில் டி.டி. கிருஷ்ணமாச்சாரி, சி. சுப்பிரமணியம், ஆர். வெங்கட்ராமன் போன்றவர்கள் நிதியமைச்சராக இருந்து சாதனை படைத்திருக்கிறார்கள். இந்த வரிசையில் நீண்டகாலம் நிதியமைச்சராக இருந்து 9 நிதிநிலை அறிக்கைகளை சமர்ப்பித்து பெருமை பெற்றவர் ப. சிதம்பரம்.

சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினராக ஏறத்தாழ 25 ஆண்டுகள் பணியாற்றியவர். அதில், 21 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் பொறுப்பு வகித்திருக்கிறார். இதன்மூலம் அந்த தொகுதி மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றவர்.

1991 இல் பி.வி. நரசிம்மராவ் பொறுப்பேற்ற போது புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த கொள்கையை நிறைவேற்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் அன்றைய நிதியமைச்சர் டாக்டர் மன்மோகன்சிங், வர்த்தகத்துறை அமைச்சர் ப. சிதம்பரம். அன்று தொடங்கிய தாராளமயமாக்கல் கொள்கை என்கிற புதிய பாதையில் பிறகு வந்த அரசுகள் இன்றுவரை அதே பாதையில் தான் பயணிக்கின்றன. 1991 இல் வர்த்தகத்துறை அமைச்சராக பொறுப்பேற்று திரு. ப. சிதம்பரம் அவர்கள் சேலத்தில் சிறுதொழில் முனைவோர் மாநாட்டில் புதிய பொருளாதாரக் கொள்கையைப் பற்றி உரையாற்றினார். அந்த உரையை கேட்ட நான் உடனடியாக அதனுடைய ஒலிநாடாவை பெற்று அந்த கருத்துக்களை நூலாக வடித்து வெளியிட முடிவு செய்தேன். அந்நூலை மக்கள் தலைவர் மூப்பனார் தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டு பெருமை சேர்த்தார். அதைத் தொடர்ந்து நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம் ஆற்றிய உரைகளை எல்லாம் தமிழில் மொழி பெயர்த்து நூலாக வெளியிட்டுள்ளேன். அதில் ஒருமுறை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி எடுத்த முயற்சியால் அவரது உரை நூலாக வெளியிடப்பட்டது.

அதேபோல, 2008 இல் தேசிய முரசு மாதம் இருமுறை இதழ் தொடங்கப்பட்டதில் இருந்து மத்தியில் காங்கிரஸ் தலைமையில் அமைந்த கூட்டணி ஆட்சியில் நிதியமைச்சர் ப. சிதம்பரம் சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில் அவர் ஆற்றிய உரைகளையும், ஊடகங்களில் வெளியிட்ட கருத்துக்களையும் பெருமளவில் வெளியிட்டிருக்கிறேன்.  அந்த வகையில் திரு. ப. சிதம்பரம் அவர்களின் கருத்துக்களை வேறு எவரையும் விட அதிகளவில் வெளியீடுகள் மூலமாக கருத்துக்களை பரப்பியவன் என்கிற பெருமை எனக்கு உண்டு. அந்த வகையில் திரு. ப. சிதம்பரம் அவர்களுடைய கருத்துக்கள் நாட்டு மக்களுக்கு அவசியம் சேர வேண்டுமென்ற நோக்கத்தில் அந்த முயற்சியில் நான் தொடர்ந்து ஈடுபட்டு வந்தேன்.

நாட்டு நலனில் மிகுந்த அக்கறையோடு ஆற்றிய பணிகளின் மூலமாக இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு அரும்பணியாற்றிய திரு. ப. சிதம்பரம் அவர்களின் 75 ஆவது பிறந்தநாளில் வாழ்த்துக்களை கூறி போற்றுகிற வகையில் சீர்திருத்தச் செம்மல் – 75 என்ற தலைப்பில் இந்த சிறப்பு கட்டுரை வெளியிடப்படுகிறது. இந்த கட்டுரை அன்று எக்கனாமிக் டைம்ஸ் என்ற ஆங்கில நாளேட்டில் வெளிவந்ததை மொழி பெயர்த்து 2013 ஆம் ஆண்டு மார்ச் மாத தேசிய முரசு இதழில் வெளியிட்டேன். அதையே மீண்டும் இப்போது வெளியிட்டு அவருக்கு பெருமை சேர்க்க விரும்புகிறேன்.

இன்றைய காலசூழலில் அவருக்கு நேரிடையாக வாழ்த்துக்களை கூறுவதற்கு வாய்ப்பு இல்லாத நிலையில் தேசியமுரசு டாட் காம் சார்பாகவும், என் சார்பாகவும் அவருக்கு மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய வர்த்தக அமைச்சர் ப.சிதம்பரம் 02.02.1992இல் சேலம் கருத்தரங்கில் நிகழ்த்திய உரையிலிருந்து…

எல்லோரும் ஒரு விதியை ஏற்றுக்கொண்டு விட்டார்கள்! அந்த விதி என்ன? Free Trade – வர்த்த கம் சுதந்திரமாக நடக்கவேண்டும். வர்த்தகத்தின் கைகளிலோ, கால்களிலோ, தளைகளையும், காப்புகளையும் போட்டு வர்த்தகம் செய்யவேண்டும் என்று சொல்லமுடியாது.

இதைத்தான் உற்பத்தி செய்ய வேண்டும்; இதற்கு இந்த விலை வைக்கவேண்டும்; இந்தத் தரம் இருக்கவேண்டும்; இந்த ஊருக்கு அனுப்ப வேண்டும்; இதைத்தான் நீ இறக்குமதி செய்யலாம் என்று உத்யோக் பவனில் இருந்துகொண்டு ஒரு துணைச்செயலாளரோ, இணைச்செயலாளரோ உத்தரவு போட்டுகொண்டி ருந்தால், அங்கு வர்த்தகம் நடக்காது! விவகாரம்தான் நடக்கும்!

எனவே வர்த்தகம் சுதந்திரமாக நடக்கவேண்டும். எதை வாங்குவது? எதை விற்பது? என்ன விலைக்கு வாங்குவது? என்ன விலைக்கு விற்பது? – யாருக்கு விற்பது? யார் விற்பது? எங்கே விற்பது? எந்த அளவு விற்பது? என்பதை யெல்லாம் சுதந்திரமாகச் சந்தை தீர்மானிக்க வேண்டும்.

சிதம்பரத்தின் முக்கிய சீர்திருத்தங்கள்

2004 : அடுத்த மூன்று ஆண்டுகளில் வேளாண் கடன் இரட்டிப்பாக்கப்படும் என்று உத்தரவாதம். இந்த இலக்கை ஓரான்டு முன்பாகவே இரண்டே ஆண்டுகளில் நிறைவேற்றிச் சாதனை.

2005 : வரி ஏய்ப்பு தடுப்பு நடவடிக்கைகள் : ஒரே நாளில் பத்தாயிரம் ரூபாய்க்குமேல் பணம் எடுப்பவர்களிடம் 0.01 சதவிகிதப் பணம் வரி வசூலிக்கப்படும்.

2007 : மூத்த குடிமக்களுக்கு எதிர் அடமான சலுகை.
தன்னாட்சி கடன் மேலாண்மை அலுவலகம்

2008 : பொதுத்துறை – தனியார் துறை கூட்டு முயற்சியில் திறன் மேம்பாட்டு இயக்கம் ஏற்படுத்தப்படும் என்று அறிவிப்பு.

சிதம்பரத்தின் ஜனரஞ்சகத் திட்டங்கள

2004 : தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 150 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் இது இந்தியாவிலுள்ள கிராமப்புற மாவட்டங்களான 693க்கும் நீட்டிக்கப்பட்டது.

2008 : தேர்தலுக்கு ஓராண்டு முன்பாக 3.7 கோடி விவசாயிகள் பயனடையும் வகையில் ரூபாய் 65 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

2008 : ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஊதிய நிலுவைத் தொகை உட்பட அரசுக்கு ரூபாய் 47ஆயிரத்து 500 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டது.

வரி விதிப்புகள்

2004 : பங்குச் சந்தையின் அனைத்து பரிமாற்றங்களுக்கும் 0.15 சதவிகித பங்கு பரிமாற்ற வரி விதிக்கப்பட்டது.

2005 : மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஆறு பொருள்களில் ஏதேனும் இரண்டு பொருள்களை எவரேனும் வைத்திருந்தால், அவர்கள் கண்டிப்பாக வரி செலுத்தியாக வேண்டும். மின்சாரத்திற்காக ஆண்டுக்கு ரூபாய் 50 ஆயிரம் செலுத்துவதும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

2006 : அதிக மதிப்புகொண்ட பரிமாற்றங்களுக்கு நிரந்தர கணக்கு எண் அட்டை கட்டாயமாக்கப்பட்டது.

2008 : யூக வணிகம் மற்றும் பொருள்கள் மீது பரிமாற்ற வரி விதிக்கப்பட்டது.

வரி சலுகைகள்

2004 : நீண்டகால முதலீட்டு லாப வரி ரத்து செய்யப்பட்டது; குறுகியகால முதலீட்டு லாப வரி 20 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது.

2007 : இந்திய பரஸ்பர நிதி மூலமாக வெளிநாடுகளில் முதலீடு செய்ய தனிநபர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

கூடுதல் வரி வருவாய்கள்

2004 : அனைத்து வரிகள் மீதும் கல்விக்காக 2 சதவிகிதக் கூடுதல் வரி.

2005 : தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்குவதற்காக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீதான வரி மேலும் 50 பைசா அதிகரிக்கப்பட்டது.

வழிகாட்டும் திருக்குறள்

சிதம்பரம் தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கைகளில் வரி விதிப்புகள் கூட இடம்பெறாமல் இருக்கலாம், ஆனால், திருக்குறள் இடம்பெறாமல் இருக்கவே இருக்காது.

2006ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து அவர் பேசியபோது, “கடந்த இரு ஆண்டுகளாக விவசாயிகள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளை நான் அறிவேன். எங்கள் அரசு கருணை உள்ள அரசு ஆகும். அதேநேரத்தில் அரசு கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இத்தகைய குழப்பமான நேரங்களில் எனக்கு …..

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு.

(பொருள் : தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்க வல்லவர்க்கு இவ்வுலகம் உரிமை உடையது) என்ற திருக்குறள்தான் நினைவுக்கு வருகிறது” என்று கூறினார்.

1996ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசும்போது, “நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து முடித்த பின்னர், எதற்காக இந்த பட்ஜெட் என்று என்னை நானே கேட்டுக் கொள்வேன். இது நமது பொருளாதாரத்தின் ஆரோக்கியத்தை அளவிடுவதற்கான கருவி என்பது ஒருபுறமிருக்க , மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் வேதனைகளை எதிரொலிக்கும் கண்ணாடியாகவும் திகழ்கிறது. மன்னரின் மந்திரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான விதியை திருவள்ளுவர் வகுத்திருக்கிறார்.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு

(பொருள் : பொருள் வரும் வழிகளை மென்மேலும் அதிகரித்தலும், அவ்வாறு வந்த பொருளைச் சேர்த்தலும், சேர்த்த பொருளைக் காத்தலும், பின்னர் அவற்றை முறையாக வகுத்து செலவிடுதலும் தான் ஒரு நல்ல அரசருக்கு அடையாளம் ஆகும்) என்று திருவள்ளுவர் தெரிவித்திருக்கிறார்” என்று தெரிவித்தார்.

1997ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசும்போது, மன்னர்களை மற்றவர்கள் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்த குறளை மேற்கோள் காட்டினார்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்

(பொருள்: தவறுகளைக் கண்டித்து திருத்துவதற்கு ஆள் இல்லாத மன்னன், எதிரியே இல்லாவிட்டாலும் கெட்டு விடுவான்.)

The post இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட மாமனிதர் சிதம்பரம்! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

சீர்திருத்த செம்மல் சிதம்பரம் – 75
தேசிய முரசு மாதம் இரு முறை இதழில் 2013, மார்ச்சில் வெளிவந்த கட்டுரையை திரு ப.சிதம்பரம் அவர்களின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு மீண்டும் வெளியிடுகிறோம் .

– ஆ. கோபண்ணா

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துடன் இணைந்து பணியாற்றியவர்கள், அல்லது அவரது பணிகளைக் கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு, அவர் செயல்பாடு சார்ந்த மனிதர்; புதிய சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளத் தயங்காதவர்; கூர்மையான சிந்தனை கொண்ட சிந்தனையாளர். இந்தியாவின் நிதி அமைச்சர் என்ற வகையில் இந்தியாவுக்காக அவர் தாக்கல் செய்த பட்ஜெட்களைப் படித்தவர்கள், அதில் இடம்பெற்றுள்ள அவரது கருத்து செழுமையை உணர்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. எட்டாவது முறையாக அவர் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள நிலையில் , ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சார்பில் இதற்கு முன்பு அவர் தாக்கல் செய்த 5 நிதிநிலை அறிக்கைகளில் இடம்பெற்றிருந்த கருத்து செழுமைகளை தேசிய முரசு வாசகர்களுக்காக முன்வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம் ஆகும்.

மாற்றத்தை ஏற்படுத்தும் சிந்தனை

நிதிநிலை அறிக்கை என்பது இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற வரைமுறையைத் தகர்த்தது, 1991ஆம் ஆண்டு அப்போதைய நிதி அமைச்சர் மன்மோகன் சிங் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைதான். ஆனால், அதன்பின் நிதிநிலை அறிக்கைகளைத் தாக்கல் செய்த ப.சிதம்பரம் ஒவ்வொரு நிதிநிலை அறிக்கை யிலும் தமது தனி முத்திரையைப் பதித்து வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. அவரது மிகவும் துணிச்சலான நிதிநிலை அறிக்கை, பத்து மாதங்களே நீடித்த தேவகவுடா தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்டதாகும்.

‘கனவு பட்ஜெட்’ என்று போற்றப்பட்ட அந்த நிதிநிலை அறிக்கையில், தனி நபர்கள் மற்றும் கம்பெனிகளுக்கான அதிகபட்ச வருமான வரி விகிதத்தை 40 விழுக்காட்டிலிருந்து முறையே தனிநபர்களுக்கு 30 விழுக்காடாகவும், கம்பெனிகளுக்கு 35 விழுக்காடாகவும் குறைத்தார். இதன்மூலம் இந்தியாவின் அதிகபட்ச வருமான வரி உலகின் பல வளரும் நாடுகளின் வரி அளவை விடவும், வரி சீர்திருத்தக் குழு பரிந்துரைத்த 40 விழுக்காடு என்ற அளவை விடவும் மிகவும் குறைந்த அளவுக்கு வந்தது.

“இத்தகைய முடிவை எடுப்பதற்குக் குறிப்பிடத்தக்க அளவுக்குத் துணிச்சல் தேவை. .அந்தத் துணிச்சலை அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திரட்டிக் கொண்டுதான் இத்தகைய முடிவை எடுத்தார்” என்று பல்வேறு மத்திய அரசு குழுக்களில் பணியாற்றிய நிதி வல்லுநர் ஒருவர் தெரிவித்தார். அவர் தற்போது அரசு பொறுப்பில் இருப்பதாலும், இதுபோன்ற விஷயங்களில் கருத்துக் கூற அவருக்கு அதிகாரம் இல்லை என்பதாலும் தமது பெயரைக் குறிப்பிட மறுத்துவிட்டார்.

“வரியின் அளவு குறைவாகவும், மக்களின் பொறுப்புடைமை அதிகமாகவும் இருக்கும் பட்சத்தில் பொறுப்புடன் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது சிதம்பரத்தின் எண்ணமாகும். அது சரியானது என்பதை சிதம்பரம் நிரூபித்தார்” என்றும் அந்த வல்லுநர் தெரிவித்தார். ப.சிதம்பரத்தால் உச்ச அளவு வரி குறைப்பு செய்யப்பட்டதற்கு, முந்தைய ஆண்டான 1995 -96இல் நிகர வரி வருமானத்தில் தனிநபர் வருமான வரியின் அளவு வெறும் 14 விழுகாடாக இருந்ததுதான். ஆனால், 2011-12ஆம் ஆண்டில் இது 18.5 விழுக்காடாக அதிகரித்தது. அதேபோல் வேளாண் கடன் அளவை அடுத்த மூன்றாண்டுகளில் இருமடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகக் கடந்த 2004ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார். ஆனால், அந்த இலக்கு அடுத்த இரண்டே ஆண்டுகளில் சாதிக்கப்பட்டது.

2008ஆம் ஆண்டில் நிதியமைச்சர் பதவியிலிருந்து உள்துறை அமைச்சர் பதவிக்கு சிதம்பரம் மாற்றப்பட்டபோது , இந்தியாவில் சுமார் பாதிபேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வேளாண் துறைக்கு வழங்கப்பட்ட கடனின் அளவு, 2004ஆம் ஆண்டின் அளவான ரூ.பாய் 60 ஆயிரம் கோடி என்ற அளவிலிருந்து மூன்று மடங்கிற்கும் மேல் அதிகரித்து ரூபாய் 2 லட்சம் கோடி என்ற அளவை எட்டியிருந்தது.

2009ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆய்வறிக்கையில், `இந்தியாவில் சிறு, குறு விவசாயிகளுக்கு அமைப்பு சார்ந்த கடன் பெரிய அளவில் கிடைப்பதில்லை என்ற போதிலும், வேளாண் கடன் அளவு அதிகரிக்கப்பட்டதன் பயனாக வேளாண் உற்பத்தியில் சாதகமான தாக்கம் ஏற்படிருக்கிறது. அவர் தமது பணியை உண்மையாக எடுத்துக்கொண்டு நிறைவேற்றியிருக்கிறார்’ என்று தில்லியைச் சேர்ந்த பொருளாதார ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி அமைப்பான Oxus Investments என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான சுர்ஜித் பல்லா தெரிவித்தார்.

“தாம் செய்யவேண்டிய பணிகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு, அதை எட்டுவதற்காகத் திட்டமிட்டு பணியாற்றுவதுதான் சிதம்பரத்தின் வழக்கம். இப்போதைய நிலையில் நிதிநிலையை ஒழுங்குபடுத்துவதுதான் முதன்மைப் பணியாகும். அதைத் தான் நிதிநிலை அறிக்கையில் ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்” என்று சுர்ஜித் பல்லா கூறினார்.

எப்போதும் சீர்திருத்தவாதி!
தேவைப்படும்போது ஜனரஞ்சகவாதி!

நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிறந்த சீர்திருத்தவாதி, சந்தைகளுக்கு ஆதரவானவர் என்றெல்லாம் கூறப்பட்டாலும், தேவைப்படும்போது மக்களைக் கவரும் ஜனரஞ்சக அறிவிப்பை வெளியிடத் தயங்காதவர். அதற்கு எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் அதற்காகப் பின்வாங்காதவர.

கடந்த மக்களவைத் தேர்தலுக்கு ஓராண்டு முன்பாக 2008ஆம் ஆண்டில் வேளாண் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை சிதம்பரம் அறிவித்தார். இதனால் 3.68 கோடி விவசாயிகள் பயனடைந்தனர். அதேநேரத்தில் அரசுக்கு ரூ.பாய் 65 ஆயிரம் கோடி செலவு ஏற்பட்டது. அதே ஆண்டில் ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அரசு செயல்படுத்தும் என்று அறிவித்தார். இதனால், மத்திய அரசு ஊழியர்களுக்கு 2006ஆம் ஆண்டிலிருந்து அளிக்கவேண்டிய ஊதிய நிலுவை ரூபாய் 27 ஆயிரம் கோடி உட்பட மொத்தம் ரூ.பாய் 47 ஆயிரம் கோடி கூடுதல் செலவு ஏற்பட்டது.

அதேபோல் 2005 முதல் 2009 வரையிலான காலத்தில், கிராமப்புற ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை வழங்குவதற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை 150 மாவட்டங்களில் இருந்து இந்தியாவின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தினார். இத்திட்டத்தின்படி மிகக்குறைந்த பணமே பயனாளிகளைச் சென்றடைகிறது; பெயரளவுக்கே சொத்துக்கள் உருவாக்கப்படுகின்றன என்றெல்லாம் ஆய்வுகளில் தெரிய வந்த போதிலும், அதைப் பொருட்படுத்தாமல் இத்திட்டத்தை சிதம்பரம் விரிவுபடுத்தினார்.

இது பற்றிக் கருத்து தெரிவித்த மூத்த பொருளாதார வல்லுநர் ஒருவர், “சிதம்பரம் நடைமுறைக்கும் காலச் சூழலுக்கும் ஏற்றவாறு தம்மை மாற்றிக்கொள்ளக் கூடிய யதார்த்தவாதி. ஒரு கொள்கையை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பவர் அல்ல. ஒரு விஷயம் தொடர்பாக முன்வைக்கப்படும் வாதங்கள் ஏற்கத்தக்கவையாக இருக்கும் பட்சத்தில் அவற்றை ஏற்று, தமது முடிவை மாற்றிக்கொள்ள தயாராக இருப்பவர்” என்று கூறினார். சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது அவருக்குக்கீழ் பணியாற்றிய இவரும் தமது பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை.

தில்லியைச் சேர்ந்த பட்ஜெட் மற்றும் நிர்வாகப் பொறுப்புடைமைக்கான மையத்தின் செயல் இயக்குநரான சுப்ரத் தாஸ், “ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் ஆட்சியில் சிதம்பரம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைகள் கூட்டணிக் கட்சிகளிடையே நிலவிய ஒருங்கிணைப்பை எதிரொலிக்கும் வகையில் அமைந்திருந்தன” என்று மனம் திறந்து பாராட்டினார்.

2004 முதல் 2009 வரையிலான காலத்தில் அரசின் வருவாய் 1.76 மடங்கு மட்டுமே அதிகரித்து, ரூபாய் 5 லட்சத்து 40 ஆயிரம் கோடியாக அதிகரித்திருந்த நிலையில், சமூக சேவை திடங்களுக்கான அரசின் நிதி ஒதுக்கீடு 2.75 மடங்கு அதிகரித்து, ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. 2008ஆம் ஆண்டில் மத்திய அரசு செயல்படுத்திய இந்த இரு சலுகைத் திட்டங்கள் குறித்து விளக்கிய , அந்த ஆண்டின் பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி கருத்து தெரிவிக்கும்போது, “இந்த நடவடிகைகளால் ஏற்படும் நிதி தாக்கம் குறித்து ஆராய்ந்துதான் சிதம்பரம் இந்த முடிவை எடுத்தார்” என்று கூறினார். “அந்த நேரத்தில் இந்தச் செலவைப் பொருளாதார நிபுணர் தாக்குபிடிக்கும் நிலையில் மத்திய அரசு இருந்தது. அந்த நேரத்தில் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வந்தது. வருவாயும் வளமாக இருந்தது” என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி தெரிவித்தார்.

அப்போது இருந்தது வேறு உலகம் என்று கூறியதன் மூலம் அந்தக் கருத்தை சுர்ஜித் பல்லாவும் வழி மொழிந்தார். “அந்த நேரத்தில் உலக அளவில் பொருளாதார நெருக்கடி நிலவி வந்ததால், விரிவாக்க நிதிக் கொள்கைகளைச் செயல்படுத்தும்படி உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வந்தது. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. தற்போதைய சூழலில் நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துதல், கடன் தரக் குறியீடு குறைக்கப்படுவதைத் தடுத்தல் ஆகிய இரு முக்கிய பணிகள் தம்முன் இருப்பதை சிதம்பரம் உணர்ந்திருக்கிறார்” என்று பல்லா கூறினார்.

சிதம்பரத்துடன் இணைந்து பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அந்த அதிகாரி, 2008ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட சலுகைத் திட்டங்கள் குறித்து மேலும் விளக்கியபோது, “2008ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட ஜனரஞ்சகத் திட்டங்களால் நினைத்துப் பார்க்காத சாதகமான விளைவுகள் ஏற்பட்டன. உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் இந்தியப் பொருளாதாரமும் முடங்கவிருந்த நிலையில், 45 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் தங்களுக்குக் கிடைத்த ஊதிய நிலுவைத் தொகையை கார் வாங்கவும், வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கவும் செலவிட்டதால், இந்தியப் பொருளாதாரம் ஊக்கம் பெற்றது. வேளாண் கடன் தள்ளுபடியும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒருவகையில் உதவியது. கடன் தள்ளுபடியால் வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டுவதற்காக மத்திய அரசு பனம் வழங்கியது. வராத கடன்களுக்குப் பதிலாக மத்திய அரசு பணம் வழங்கியதால், அதைக் கொண்டு வங்கிகளால் கூடுதலாகக் கடன் வழங்க முடிந்தது” என்று கூறினார். அந்த வகையில் ஜனரஞ்சகத்தைக் கூட சீர்திருத்தமாக மாற்றுவதில் வல்லவர் ப.சிதம்பரம் தான்!

வலிக்காமல் வரி விதிப்பு!

மத்திய நிதி அமைச்சரான ப.சிதம்பரம் வரி வளையத்திற்குள் ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையிலானவர்களை அழைத்துக்கொண்டு வருகிறார். இதை வரி செலுத்துவோருக்குத் தெரியாமலும், வலிக்காமலும் செய்து வருகிறார் என்பதுதான் இங்கு குறிப்பிடத்தக்கது. சிதம்பரத்தின் இந்த முயற்சி கடந்த 1997ஆம் ஆண்டில் தொடங்கியது. அந்த ஆண்டில் தான் ஆறில் இரண்டு திட்டத்தை அவர் அறிமுகம் செய்தார். அதன்படி மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஆறு பொருள்களில் ஏதேனும் இரண்டு பொருள்களை எவரேனும் வைத்திருந்தால், அவர்கள் கண்டிப்பாக வரி செலுத்தியாக வேண்டும் என்று அறிவித்தார். அதுமட்டுமன்றி மேலும் பல வழிகளில் வரி வருவாயை அதிகரிக்கவேண்டும் என்று சிதம்பரம் கருதினார். இதற்காக 2004ஆம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சராகப் பதவி ஏற்கும்போது 58 பொருள்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டு வந்த சேவை வரியை 2009ஆம் ஆண்டு அந்த பதவியிலிருந்து விலகும்போது 110ஆக அதிகரித்திருந்தார்.

புதிய வரியாளரைச் சேர்க்க முடியாவிட்டாலும் , ஏற்கெனவே இருப்பவர் மீது கூடுதல் வரி விதிப்பதும் அவரது வழக்கம் ஆகும். அந்த வகையில் தான் 2004ஆம் ஆண்டில் பங்குச் சந்தையின் அனைத்து பரிமாற்றங்களுக்கும் 0.15 சதவிகித பங்கு பரிமாற்ற வரியை சிதம்பரம் விதித்தார். இந்த வரி அறிமுகம் செய்யப்பட்டபோது , ஏற்கெனவே நடைமுறையில் இருந்த நீண்டகால முதலீட்டு லாப வரி ரத்து செய்யப்பட்டதுடன், குறுகியகால முதலீட்டு லாப வரி 20 சதவிகிதத்திலிருந்து பாதியாகக் குறைக்கப்பட்டது. இது சிறப்பான முறையில் வரி வசூலிப்பதற்கான தத்துவம் என்று அப்போதே பலரும் பாராட்டினார்கள். `இது வருவாய் ஆதாரத்திலேயே வரி விதிக்கும் திட்டம்’ என்று பலரும் கூறினார்கள்.

இது பற்றி விளக்கிய மூத்த வரித் துறை அதிகாரி, “பங்குச் சந்தையில் முதலீடு செய்வோரில் பலர் வரி செலுத்த மாட்டார்கள். ஆனால், பங்கு பரிமாற்ற வரியை மிகவும் எளிதாக வசூலித்துவிட முடியும். இந்த வகையான வரியைப் பிற சந்தைகளுக்கும் விதிக்கலாம்” என்று கூறினார். அதேபோல் வரி தகவல் வலையமைப்பு, வரி ஏய்போரைக் கண்டுபிடிப்பதற்காக முந்தைய வாஜ்பாய் அரசால் கொண்டுவரப்பட்டது என்ற போதிலும், அதை சிதம்பரம் தான் வலுப்படுத்தினார். “வரி தகவல் வலையமைப்பை வலுப்படுத்த முடிவு செய்த சிதம்பரம், ஒவ்வொரு நகரமாக அதைக் கட்டி எழுப்பினார்.அதன்மூலம் ஏராளமான தகவல்கள் சேகரிக்கப்பட்டன. பொருள்கள்மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வரும்போது, இந்த வலையமைப்பு முழுமையானதாகிவிடும் அதன் பின்னர், கூடுதலாக வருமானம் ஈட்டும் எவரும் தங்களின் வருவாயைக் குறைத்துக்காட்ட முடியாது” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

மகிழ்ச்சியான முதலீட்டாளர்கள்
பங்குச் சந்தைதாரர்கள்!

ப.சிதம்பரத்தைத் தொடர்ந்து 2009ஆம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சராகப் பதவி ஏற்ற பிரணாப் முகர்ஜி தமது நிதிநிலை அறிக்கையை எவ்வாறு மதிப்பிடுவார் என்றால் , ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் நிரந்தர தொல்லையாகத் திகழ்ந்த மம்தா பாணர்ஜி, நிதிநிலை அறிக்கை குறித்து என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்துகொண்டு, அவர் மகிழ்ச்சியடைந்து விட்டால், நல்ல பட்ஜெட் என்று நினைத்துக் கொள்வார். சிதம்பரத்தைப் பொருத்தவரை தொலைக்காட்சித் திரைகளின் அடிப்பகுதியில் ஓடும் பங்கு ச் சந்தை நிலவரம் குறித்த பச்சை , சிவப்பு குறியீடுகள் தான் பட்ஜெட் பற்றிய மதிப்பீடு ஆகும். தமது பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகு பங்குச் சந்தை குறியீட்டு எண் உயர்ந்தால் தமது பட்ஜெட், சிறந்த பட்ஜெட் என்பது சிதம்பரத்தின் மதிப்பீடு ஆகும். “இந்தியப் பொருளாதாரம் வலிமையாகத் திகழ ஆரோக்கியமான நிதித்துறை அவசியம் என்பதை சிதம்பரம் நன்றாக உணர்ந்தவர். அவர் தாக்கல் செய்த பெரும்பாலான நிதி நிலை அறிக்கைகளில் பங்குச் சந்தையின் வளர்ச்சிக்கென ஏதாவது ஒரு அறிவிப்பு இருக்கும்” என்று மூத்த பொருளாதார வல்லுநர் ஒருவர் தெரிவித்தார். உதாரணமாக கடந்த 2004ஆம் ஆண்டில் பங்குச் சந்தை முதலீடுகளைக் கவர்ச்சிகரமானதாக மாற்றும் நோக்குடன் முதலீட்டாளர்களின் லாபம் மீதான வரிகளைக் குறைத்தார். ஏற்கெனவே நடைமுறையில் இருந்த நீண்டகால முதலீட்டு லாப வரி ரத்து செய்யப்பட்டதுடன், குறுகியகால முதலீட்டு லாப வரி 20 சதவிகிதத்திலிருந்து பாதியாக, அதாவது 10 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது.

வணிகப் பற்றாக்குறையைக் குறைக்கவும், உள்ளூர் சந்தைகளில் நம்பிக்கையை ஏற்படுத்தவும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் முதலீடு மிகவும் அவசியம் என்பதை அவர் அறிந்திருந்தார். தாம் தாக்கல் செய்த பல்வேறு பட்ஜெட்களின் மூலம் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் செயல்பாடுகளை மிகவும் எளிதாக்கினார். வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பதிவு செய்வதற்கான நடைமுறைகளை எளிதாக்கியதுடன், அவர்கள் பங்குகளை னநசiஎயவநளஇல் வணிகம் செய்யவும், அரசு பத்திரங்களில் முதலீடு செய்யவும் வசதியாக சில வரையறை மாற்றங்களைச் செய்தார்.

சிதம்பரம் இயல்பாகவே தமக்கென நல்ல அணியை ஏற்படுத்திக் கொள்பவர் அல்ல என்ற போதிலும், தமது அமைச்சகத்தில் வலிமையான மூலதனச் சந்தை அணியை ஏற்படுத்தினார். சிதம்பரம் எப்போதுமே நல்ல அதிகாரிகளைத்தான் தேடுவாரே தவிர, திறமையான அதிகாரியைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காகப் போராட மாட்டார். 2008ஆம் ஆண்டில் நிதி அமைச்சராக இருந்தபோது அவருடன் இருந்தவர்களுள் இருவர் மட்டுமே தற்போது சிதம்பரத்துடன் இருக்கிறார்கள் என்ற போதிலும், மிகச்சிறப்பான பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார்” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

வரியும், கூடுதல் கட்டணமும்

மத்திய நிதி அமைச்சர் என்ற வகையில் வருமான வரி விகிதத்தை சிதம்பரம் குறைத்தபோதிலும், அதை நம்பி தொடங்கப்பட்ட திட்டங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக வரிகள் மீது வரி விதிக்கும் நடைமுறையை சிதம்பரம் கடைப்பிடித்து வந்தார். 2004ஆம் ஆண்டில் அனைத்து வரிகள் மீதும் 2 சதவிகித வரி விதித்த சிதம்பரம், அதன்மூலம் கிடைத்த வருவாயைக் கல்வித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக ஒதுக்கினார். வரி, கூடுதல் கட்டணம் ஆகியவை நுகர்வு சம்பந்தப்பட்டவைஆகும். இதனால் சிறிய அளவில் வரி செலுத்துபவர்களுக்குப் பெரிய அளவில் சுமை ஏற்படாது. ஆனால், இதன்மூலம் கிடைக்கும் வருவாய் மிகப்பெரியதாகும்.2011-12ஆம் ஆண்டில் கல்விக்காக வரிகள் மீது விதிக்கப்படும் வரி மூலமாக ரூபாய் 23 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்தது. அதேபோல் பெரு நிறுவன வரி மீதான கூடுதல் கட்டணம் மூலம் ரூபாய் 13 ஆயிரத்து 658 கோடி வருமானம் கிடைத்தது. பெரும் பணக்காரர்களுக்கு அதிக வருமான வரி விதிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தபோதிலும் , அத்தகைய வரி எதையும் அவர் விதிக்கவில்லை. இதற்கான காரணம் குறித்து விளக்கிய பொருளாதார வல்லுநர் சுர்ஜித் பல்லா, “இதுபோன்ற தவறுகளை சிதம்பரம் ஒருபோதும் செய்ய மாட்டார். ஏனெனில் அவர் ஒரு துடிப்பான வழக்கறிஞர்” என்றார்.

( நன்றி: எகனாமிக்ஸ் டைம்ஸ், 17 ஜனவரி 2013)

The post சீர்திருத்த செம்மல் சிதம்பரம் – 75 appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?
அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட், 24 ஆம் தேதி திங்கள் கிழமை காலை 11 மணியளவில் அன்னை சோனியா காந்தி தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் இணைய வழியாக 53 பேர் பங்கேற்றனர். இந்தக் கூட்டம் நடைபெறுகிற சூழலில், மூத்த காங்கிரஸ் தலைவர்களான குலாம் நபி ஆசாத், கபில் சிபல், ஆனந்த் சர்மா உள்ளிட்ட 23 பேர் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அன்னை சோனியா காந்திக்கு எழுதிய கடிதம் ஊடகங்களுக்கு கசிய விடப்பட்டது. இதையொட்டி அன்று நாள் முழுவதும் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடக்கிற அதே நேரத்தில் தொலைக்காட்சிகளில் இக்கடிதம் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டன. இக்கடிதத்தை அடிப்படையாக வைத்து காங்கிரஸ் கட்சிக்கு முழு நேரமாக பணியாற்றக் கூடிய தலைவர் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் விவாதங்கள் நடைபெற்றது.

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற 53 பேரும் அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீது முழுமையான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள். இதில் கடிதத்தில் கையொப்பமிட்டவர்களும் அடங்குவார்கள். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்றவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்து நாளேடுகளிலும், ஊடகங்களிலும் செய்தி வெளிவந்திருக்கிறது. அதனடிப்படையில் யார், யார் என்ன பேசினார்கள்? என்பது கீழே தரப்பட்டுள்ளது.

சோனியா காந்தி: இந்த கருத்துகள் தனிப்பட்ட முறையில் என்னை எவ்வளவு புன்படுத்தியிருந்தாலும், கட்சியின் அமைப்பிலும் தலைமையிலும் மாற்றம் செய்யவேண்டும் என்று கடிதம் எழுதிக் கேட்டுக்  கொண்டதை என்னால் தாங்கிக்  கொள்ளமுடியும். காங்கிரஸ் கட்சி என்பது பெரிய குடும்பம். நம்மிடையே கருத்து வேறுபாடுகளும், பல பிரச்சினைகளில் மாறுபட்ட கருத்துகளும் உண்டு. இறுதியில்,நாம் ஒருவராகவே வருவோம். இந்திய மக்களுக்காகவும், இந்த நாட்டிற்கு தோல்வியை ஏற்படுத்திய சக்திகளுக்கு எதிராகவும் இந்த நேரத்தில் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ராகுல் காந்தி: இந்த கடிதம் எனக்கு வலியை ஏற்படுத்தியுள்ளது. பலவீனமாக இருக்கும் நிலையில், அவர் மீது தாக்குதல் நடத்துகிறீர்கள். அவர் என் தாயும் கூட. கட்சித் தேர்தலுக்கு கால அளவை நிர்ணயிப்போம். அதற்கான நடவடிக்கைகளை 6 மாதங்களுக்குள் முடித்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தைக்  கூட்டுவோம்.

பிரியங்கா: காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி ஆன்லைனிலும், நேரிடையாகவும் நடக்க வேண்டும்.

கே.சி.வேணுகோபால்: சூழ்நிலை அனுமதித்தால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் விரைவில் கூட்டப்படும்.

அகமது பட்டேல்( அதிருப்தியாளர்களை நோக்கி): நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் கூட்டுத் தலைமை என்றால் என்ன? விமான நிலையத்தில் பாபா ராம்தேவை நீங்கள் சந்தித்தபோது, கூட்டுத் தலைமை எங்கே போனது? காங்கிரஸ் தலைவரிடமோ அல்லது அப்போதைய பிரதமரிடமோ அனுமதி பெற்றீர்களா? காந்தி குடும்பம் குறித்தும் அவர்கள் வழிகாட்டும் விளக்காக விளங்குவதை குறைக்கும் வகையிலும் நீங்கள் அப்படி ஒரு கடிதத்தை எப்படி அனுப்பலாம்?

அம்பிகா சோனி:  கட்சித் தேர்தல் அறிவித்ததும், போட்டியிட விரும்புவோர் போட்டியிடலாம். தமக்கு எதிராக கட்சி தேர்தலில் நின்ற ஜிதேந்திர பிரசாத்தை பொதுச் செயலாளராக ஏன் நியமித்தீர்கள் என்று சோனியா காந்தியிடம் கேட்டேன். அதற்கு அவர், ஜிதேந்திர பிரசாத் சட்டப்படி என்னை எதிர்த்துப் போட்டியிட்டார். அதற்காக அவரை கட்சியிலிருந்து ஓரம் கட்டமாட்டேன் என்று சொன்னார்.

ஜிதின் பிரசாத்: முடிவு எடுப்பதில் நான் தவறு இழைத்துவிட்டேன். இதற்காக காங்கிரஸ் காரிய கமிட்டியின் நடவடிக்கைக்கு உட்பட தயாராக இருக்கின்றேன். ஆனால், இங்கே சிலர் என் தந்தையை மேற்கோள் காட்டுகின்றனர். இறுதி மூச்சு இருக்கும் வரை அவர் காங்கிரசுக்கு விசுவாசமாக இருந்தவர் என்பதை நினைவுபடுத்துகின்றேன்.

ராஜீவ் சதவ்: உங்களது தற்போதைய நிலையை சிந்திக்க வேண்டும். நீங்கள் எல்லாம் அமைச்சர்களாக இருந்தபோது, எந்த அளவுக்கு கூட்டுத் தலைமை மீது நம்பிக்கை வைத்திருந்தீர்கள்?. இளைஞர் காங்கிரஸில் இருந்து உயர்ந்த நிலைக்கு வந்தவர்கள் எல்லாம், இது போன்ற கடிதத்தை அனுப்பியதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.

ரன்தீப் சுர்ஜிவாலா: ஒரு நாள் முன்பு தான் இந்த கடிதம் வெளியாகியது. பொறுப்புடன் நடந்துகொண்டிருக்க வேண்டும். கட்சியிலிருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட ஒருவர் இந்த கடிதத்தையும், கையொப்பமிட்டவர்கள் குறித்த விவரத்தையும் பகிர்ந்துள்ளார்.

ஆனந்த் சர்மா: யார் அந்த சஞ்சய் ஜா? அந்த ஆளை எனக்கு தெரியாது. அவரை நான் சந்தித்ததும் இல்லை. அந்த ஆளிடம் நான் பேசியதும் இல்லை.

ஆர்பிஎன் சிங்: எதுவாக இருந்தாலும், எனக்கு குற்ற உணர்வு ஏற்படுகிறது. ஆனால் அவர்களது பிரச்சினைகள் அல்லது ஆலோசனையை யாரும் கேட்கவில்லை. சோனியா காந்தியின் அணுகுமுறையை பின்பற்றியதால் இங்கு பலர் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் இன்னும் முன்னேறுவார்கள்.

முகுல் வாஸ்னிக்: எதுவாக இருந்தாலும் சோனியா காந்திக்கு ஆதரவாகத்தான் இருப்பேன். என் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கின்றேன். என்னை தூக்கில் வேண்டுமானாலும் போடுங்கள். ஆனால் என் நோக்கத்தின் மீது சந்தேகப்படாதீர்கள்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி:  நான் அரசியலுக்கு வந்தபோது ராஜிவ் காந்தி எங்களுக்கு கடவுள் போல் இருந்தார். தற்போது சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் கட்சிக்கு புத்துணர்வு ஊட்ட நன்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

காங்கிரசுக்கு நிரந்தரத் தலைவர் கோரி கடிதம் எழுதியோர் பா.ஜ.க வை கடுமையாக எதிர்ப்பவர்களே: ப.சிதம்பரம்

”அகில இந்திய காங்கிரசுக்கு நிரந்தர தலைவரை நியமிக்கக் கோரி கடிதம் எழுதியவர்கள், ராகுலையும் என்னையும் போல் பா.ஜ.க.வை கடுமையாக எதிர்ப்பவர்களே” என  முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்துக்குப் பின், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு ப.சிதம்பரம் பேட்டியளித்தார்.

நிரந்தரத் தலைவரை நியமிக்கக் கோரி சோனியா காந்திக்கு கடிதம் எழுதியவர்கள் பா.ஜ.க.வுடன் தொடர்புடையவர்கள் என்ற ராகுலின் கருத்து பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த அவர், ”அதிருப்தி என்பது எப்போதுமே இருக்கும். அதிருப்தி குறித்து  மனதில் பட்டதை பேச வாய்ப்பளிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், ராகுல் காந்தியின் கருத்து என்று உலவும் செய்தி, ஊடகங்களால் பற்ற வைக்கப்பட்ட நெருப்பு” என்றார். தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியவர்கள் அனைவரும் ராகுல் காந்தி மற்றும் தன்னைப் போல் பா.ஜ.க-வை கடுமையாக எதிர்ப்பவர்கள் என்பதையும் சிதம்பரம் சுட்டிக்காட்டினார்.

நிரந்தரத் தலைவரை நியமிக்கக் கோரி, 23 மூத்த தலைவர்கள் தலைமைக்கு எழுதிய கடிதம் குறித்து விவாதிக்கவே காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் கூட்டப்பட்டதாக தெரிவித்த அவர், ”அதில் கலந்து கொண்டவர்கள் நிரந்தரத் தலைவரை நியமிப்பது குறித்தும், கட்சியை வலுப்படுத்த கூட்டு தலைமையின் வழிகாட்டுதல் மற்றும் காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு தேர்தல் நடத்துவது குறித்தும் அவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்” என்றார். இறுதியில், 23 தலைவர்கள் எழுதிய கடிதத்தையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், இதில் தலைவர்கள் வெளிப்படுத்திய கவலைகள் தீர்க்கப்பட்டதாகவும்   மேலும் தெரிவித்தார்.

” அதிருப்தி என்பது எப்போதும் இருக்கும். சில அதிருப்திகள் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறிய சிதம்பரம், அதிருப்தியே இல்லை என்றால் மாற்றம் நிகழாது” என்றார்.

”கருத்துகளை தெரிவிக்கும்போதுதான், அதற்கான விடையும் கிடைக்கும்” என்று குறிப்பிட்ட அவர், “அத்தகைய கருத்தை வெளிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தரத் தலைவரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி விரைந்து நியமிக்க வேண்டும்” என்று அவர்கள் கேட்டார்கள். “கட்சி அமைப்புகளில் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்தும் வகையில், விரும்பிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சோனியா காந்திக்கு அதிகாரம் அளிப்போம் என்றும் அவர்கள் கூறியதாக” சிதம்பரம் தெரிவித்தார்.

” எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று நான் சொல்லவில்லை. கடலில் எழும் அலைகள் என்றைக்காவது அமைதியாக இருந்ததுண்டா?. அலை இல்லை என்றால், அது சவக்கடலாக இருக்கும்.  எப்போதும் சில கேள்விகள், அதிருப்திகள் இருக்கும். ஓர் அரசியல் கட்சி உயிர்ப்புடன் இருப்பதையே இது காட்டுகிறது. மேலும் கட்சி கூடுதல் வீரியத்துடனும், சுறுசுறுப்புடனும் முன்னோக்கிச் செல்ல வழிவகுக்கும்” என்றும் சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்தார்.

The post அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன? appeared first on தேசிய முரசு - Desiya Murasu.