NEET Archives - தேசிய முரசு - Desiya Murasu

நடிகர் சூர்யா மீது அவமதிப்பு நடவடிக்கையா?: நீதிமன்றம் சர்ச்சையில் சிக்கக் கூடாது என 6 ஓய்வுபெற்ற நீதிபதிகள் வேண்டுகோள்
நீட் தேர்வுக்கு எதிரான அறிக்கை வெளியிட்ட சூர்யா, அதில் நீதிமன்றத்தை விமர்சித்துள்ளதால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்குமாறு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை மூத்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேசமயம், சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது நீதிமன்றத்தை சர்ச்சைக்குள் சிக்க வைக்கும் என, தலைமை நீதிபதி சாஹிக்கு  ஓய்வுபெற்ற  உயர் நீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.

சமூகப் பிரச்சினைகளில் தமது உறுதியான கருத்துகளை பிரபல நடிகர் சூர்யா தெரிவித்து வருகிறார். இந்நிலையில்,  கடந்த 13 ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்ட நடிகர் சூர்யா,  ”நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் ஒரு மாணவி மற்றும் 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. கொரோனா தொற்று இருக்கும் பேரிடர் காலத்தில் கூட, தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க மாணவர்கள் நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது. அனைவருக்கும் சமமான கல்வியை வழங்க வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்கும் கல்வி முறையை சட்டமாகக் கொண்டு வருகிறது. ஏழை, எளிய மாணவர்களின் நிலையை அறியாதவர்கள் கல்விக் கொள்கையை வகுக்கிறார்கள்.

கொரோனா அச்சத்தால் உயிருக்குப் பயந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம்,  அச்சமின்றி தேர்வு எழுதுமாறு மாணவர்களுக்கு உத்தரவிடுகிறது. நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் குறித்து ஊடகங்கள் ஒரு நாள் மட்டும் விவாதிக்கும். சில சாணக்கியர்கள் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் மீது தவறு கண்டுபிடிப்பார்கள். மக்கள் ஓரணியில் திரண்டு சாதாரண மக்களின் மருத்துவர் கனவு தகர்க்கப்படுவதை எதிர்த்துப் போராட வேண்டும். நாம் விழித்துக் கொள்ளாவிட்டால் தற்கொலைகள் மீண்டும், மீண்டும் தொடரும்.  நம் அப்பாவி மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதை இனியும் வாய் மூடி மவுனமாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எங்கள் குழந்தைகளின் தரத்தையோ, தகுதியையோ சோதிக்கும் தேர்வுகளை அனுமதிக்க முடியாது. நீட் போன்ற நியாயமற்ற தேர்வுகளுக்கு நம் குழந்தைகள் தயாராகும் போது, அவர்களுக்கு வெற்றி, தோல்வி இரண்டையும் பெற்றோர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிக்கையை யூட்யூப்பில் பார்த்ததாகவும், இது நீதிமன்றத்தின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, சூர்யாவின் தமிழ் அறிக்கையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, தலைமை நீதிபதி சாஹிக்கு மூத்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ”நம் நாட்டின் நீதித்துறை அமைப்பை தவறான வகையில் விமர்சிப்பதன்மூலம், குறைத்து மதிப்பிடும் நிலை ஏற்பட்டுவிடக்கூடாது. இதுபோன்ற கருத்துகளால் நீதித்துறை மீதான மக்கள் நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.  நீதிமன்றத்தின் கண்ணியத்தை நிலைநாட்டும் வகையில், நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை நீதிமன்றம் தாமாக முன்வந்து மேற்கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து  மனித உரிமை செயற்பாட்டாளரும், மூத்த வழக்குரைஞருமான ஹென்ரி திபாக்னே  கூறும்போது, ”நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரும் அளவுக்கு நடிகர் சூர்யாவின் அறிக்கையில் தவறு ஏதும் இல்லை. குறிப்பிட்டு எந்த ஒரு நீதிபதியின் பெயரையோ அல்லது நீதிமன்றத்தின் பெயரையோ அல்லது இழிவுபடுத்தும் கருத்துகளையோ கூறவில்லை. அவர் ஒரு சமூக சிந்தனையுள்ள நடிகர். கொரோனா காலத்தில் நீதிமன்றம் செயல்படாதது உண்மைதான். நீதிமன்ற விசாரணை நேரிடையாக நடத்த வேண்டும் என்று வழக்குரைஞர்கள் வேண்டுகோள் விடுத்தும், வீடியோ கான்பரன்ஸ் மூலம் தான் விசாரணை நடக்கிறது. நீதித்துறைக்கு சகிப்புத்தன்மை வேண்டும்” என்றார் .

இதற்கிடையே, ‘நடிகர் சூர்யாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம்’ என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை,  கே.சந்துரு, கே.என். பாஷா, டி.சுதந்திரம், டி, ஹரிபரந்தாமன், ஏ.கண்ணன் மற்றும் ஜி.எம். அக்பர் அலி ஆகிய  ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தலைமை நீதிபதி சாஹிக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், ”நடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவையில்லை. நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும்போது ஏற்படும் சூழ்நிலையில், அது குறித்து கூறும் கருத்துகளை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அகரம் பவுன்டேசன் மூலம் நூற்றுக்கணக்கான ஏழைக் குழந்தைகள் படிக்க சூர்யா உதவி செய்து வருகிறார். நீதிமன்றம் தேவையில்லாத சர்ச்சையில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதால், இதனை சுட்டிக்காட்ட வேண்டியது எங்கள் கடமை” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

The post நடிகர் சூர்யா மீது  அவமதிப்பு நடவடிக்கையா?: நீதிமன்றம் சர்ச்சையில் சிக்கக் கூடாது என 6 ஓய்வுபெற்ற நீதிபதிகள் வேண்டுகோள் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

நீட் திணிப்பால் தமிழகத்தில் தற்கொலைகள் தொடர்வதற்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பு: தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம்
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் – தமிழ்ச்செல்வி தம்பதியரின் மகன் 19 வயது நிரம்பிய விக்னேஷ் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்விற்கு கேரளாவில் உள்ள பயிற்சி மையம் மற்றும் துறையூரில் உள்ள ஒரு நிறுவனத்திலும் பயிற்சி பெற்று வந்தார். செந்துறை தெரசா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கடந்த 2017 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு படித்து முடித்த விக்னேஷ் பொதுத் தேர்வில் 1006 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். அதன்பின் மருத்துவராக வேண்டுமென்று கடந்த இரண்டு முறை நீட் தேர்வு எழுதி, ஒருமுறை தோல்வியும், ஒருமுறை தேர்ச்சியும் பெற்ற நிலையிலும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மூன்றாவது முறையாக வருகிற செப்டம்பர் 13 அன்று நடைபெறவுள்ள நீட் தேர்வில் பங்கேற்க கடுமையாக தயார்படுத்திக் கொண்டு வந்தார்.

இந்நிலையில், அதிக மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் வெற்றி பெற முடியுமா என்கிற சந்தேகத்தில் மன உளைச்சல் ஏற்பட்டு நேற்று அதிகாலை 4 மணி அளவில் அருகில் உள்ள கிணற்றில் விழுந்து பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் செய்தி அந்தப் பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது. அதைத் தொடர்ந்து கிராம மக்கள் அனைவரும் மாணவர்களின் உயிரை குடிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவரது தந்தை அந்த கிராமத்தில் பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிற ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்.

ஏற்கனவே இதே பகுதியில் மூன்றாண்டுகளுக்கு முன்பு நீட் நுழைவுத் தேர்வு அனிதா என்ற இளம் மாணவியை பலிவாங்கியது. கடந்த 2017 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பில் 1200க்கு 1176 மதிப்பெண்கள் அனிதா பெற்றிருந்தார். மருத்துவப் படிப்பில் தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் வரை நீதி கேட்டு போராடினார். ஆனால், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அந்த மாணவிக்கு நீட் தேர்வு மூலமாக மருத்துவம் படிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவரது தந்தை கூலித் தொழிலாளியாக இருந்த நிலையில், கஷ்டப்பட்டு படித்த அனிதாவின் மருத்துவர் கனவு தகர்ந்து போனது. இந்த துயரம் தாங்காமல் அன்று அனிதா தற்கொலை செய்து கொண்டார். அதேபோல, தற்போது விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நீட் தேர்வினால் தற்கொலை சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன.

ஏற்கனவே அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடிய 25 இளைஞர்கள் மீது வழக்கு பதியப்பட்டு இதுவரை அந்த வழக்குகள் தமிழக காவல் துறையினரால் திரும்பப் பெறப்படவில்லை. இதனால் அந்த இளைஞர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது. அவர்கள் உயர்கல்வி பயிலும் வாய்ப்பையும், வேலை வாய்ப்பையும் இழந்துள்ளது குறித்து தமிழக அரசு கவலைப்படவில்லை.

வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. கொரோனா தொற்று கடுமையாக இருக்கிற சூழலில் நீட் தேர்வை ரத்து செய்து விட்டு 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை வைத்து மருத்துவப் படிப்பில் சேர அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், எந்த கோரிக்கையையும் மத்திய பா.ஜ.க. அரசு ஏற்றுக் கொள்ளாமல் நீட் தேர்வை தமிழகத்தின் மீது திணித்திருக்கிறது. இதை எதிர்கொள்ள முடியாத ஏழை, எளிய கிராமப்புற மக்கள், பின்தங்கிய ஒடுக்கப்பட்ட மக்கள் மருத்துவப் படிப்பில் சேர நீட் நுழைவுத் தேர்வு தடையாக இருக்கிறதே என்ற மன உளைச்சலின் காரணமாக அனிதா, விக்னேஷ் போன்ற மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிற பரிதாப நிலை ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் நீட் தேர்வை தடுத்து நிறுத்த தீவிரமான முயற்சிகளை அ.இ.அ.தி.மு.க. அரசு எடுக்கவில்லை. நீட் தேர்வை எதிர்ப்பதை போல கண்துடைப்பு நாடகத்தை நடத்தி விட்டு, இந்த ஆண்டிலும் நீட் தேர்வு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

எனவே, அனிதா, விக்னேஷ் போன்றவர்களின் தற்கொலை சாவுகளுக்கு மத்திய – மாநில அரசுகளே பொறுப்பாகும். இதற்குரிய பாடத்தை தமிழக மக்கள் விரைவில் வழங்குவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தற்கொலை செய்து கொண்ட விக்னேஷ் என்ற மாணவரின் குடும்பத்தாருக்கு தமிழக அரசு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மறைந்த விக்னேஷ் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post நீட் திணிப்பால் தமிழகத்தில் தற்கொலைகள் தொடர்வதற்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பு: தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

அனிதாவை காவு வாங்கிய ‘நீட்’ : நீதி கேட்டு போராடிய 25 இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறி
‘நீட்’ நுழைவுத் தேர்வு அனிதாவை காவு வாங்கி 3 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அப்போது அனிதாவுக்காக நீதி கேட்டு போராடிய 25 இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, கடந்த 2017 ஆம் ஆண்டு பிளஸ் டூ தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மருத்துவம் படிக்கும் வாய்ப்பு இவருக்கு கைக்கு எட்டும் தொலைவில் இருந்தது. ஆனால், நீட் தேர்வை அந்த ஆண்டு அமல்படுத்தியதால், மருத்துவம் படிக்கும் வாய்ப்பை அனிதா இழந்தார். தந்தை கூலித் தொழிலாளியாக இருந்த நிலையில், கஷ்டப்பட்டு படித்த அனிதாவின் மருத்துவக் கனவு தகர்ந்து போனது. இந்த துயரம் தாங்காமல் அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய 25 இளைஞர்கள் மீது வழக்கு பதிந்து, அவர்களது எதிர்காலத்தை இருளுக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது காவல்துறை.

அனிதாவின் 3 ஆவது நினைவுதினத்தையொட்டி, அவரது சகோதரர் மணிரத்னம் கூறும்போது, ”25 இளைஞர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், அந்த இளைஞர்கள் உயர் கல்வி பயிலும் வாய்ப்பையும் வேலை வாய்ப்பையும் இழந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ராகுல் காந்தி என்பவர் கூறும்போது, ”வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வந்தும், வழக்கு நிலுவையில் உள்ளதால் எனது பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. நான் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு அரசு வேலை கிடைக்கவும் வாய்ப்பில்லை. என்னோடு போராடிய பல பெண்களுக்கும் இதே நிலை தான்” என தெரிவித்தார்.

ராகுல் ராஜேஸ் என்பவர் கூறும்போது, ”போராட்டம் நடத்தியதாக என் தாயார் மீது வழக்குப் பதிவு செய்தனர். என் தாயார் போராட்டத்தில் கலந்து கொள்ளவே இல்லை. எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். எங்கள் மீது வழக்குப் பதிவு செய்யமாட்டோம் என்று உறுதியளித்த காவல் துறையினர், பின்னர் எங்களோடு சேர்த்து என் தாயார் மீதும்  வழக்குப் பதிவு செய்தனர்” என்றார்.

இந்த பிரச்சினை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கவனத்துக்கும் அனிதாவின் சகோதரர் மணிரத்னம் கொண்டு சென்றுள்ளார். இது தொடர்பாக அரசிடம் பலமுறை முறையிட்டும் பலன் இல்லை என்பதால், இறுதியாக, எதிர்கட்சிகளின் உதவியை நாடியுள்ளார் மணிரத்னம்.

The post அனிதாவை காவு வாங்கிய ‘நீட்’ : நீதி கேட்டு போராடிய 25 இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறி appeared first on தேசிய முரசு - Desiya Murasu.