NEET 2020 Archives - தேசிய முரசு - Desiya Murasu

நீட் எனும் எமனால் பறிபோன 8 உயிர்கள்: போதுமா மத்திய அரசே?
”மன்னிக்க வேண்டும்…நான் மிகவும் சோர்ந்துவிட்டேன்…”

‘நீட்’ தேர்வுக்கு தயாராகிவந்த நிலையில், ‘இரக்கமற்ற அரசு தம்மை அரவணைக்காது’ என்று மரணத்தை அரவணைத்திருக்கிறார், மதுரையைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா.

ஜோதி ஸ்ரீ துர்காவின் மரண வாக்குமூலம் கடிதமாக கையில் கிடைக்கும் முன்பே, அதே நாளில் தர்மபுரி மாணவர் ஆதித்யா, திருச்செங்கோடு மோதிலால் ஆகியோரின் உயிரையும் ‘நீட்’  பறித்துக் கொண்டது, தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2017 ஆம் ஆண்டு மருத்துவப் படிப்புகளுக்கு ‘நீட்’ எனும் கொடுமையை கடும் எதிர்ப்புகளை மீறி மத்திய அரசு அமல்படுத்தியது. இதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. பின்னர், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கையில் எடுத்துக் கொண்டது. 2016 ஆம் ஆண்டு மட்டும் விலக்கு அளித்த நீதிமன்றம், 2017 ஆம் ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அப்போது உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடினார் அரியலூர் மாணவி அனிதா.

12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் 1,200 க்கு 1,176 மதிப்பெண்கள் எடுத்திருந்த அனிதாவுக்கு, பழைய முறை தொடர்ந்திருந்தால், மருத்துவக் கல்லூரியில் படிக்க எளிதாக வாய்ப்பு கிடைத்திருக்கும்.

ஆனால், ‘நீட்’ தேர்வு என்ற பெயரில் அனிதாவின் கனவு தகர்க்கப்பட்டது. ஏழைக் குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு படித்தும் பயன் இல்லையே என்றபடி, தன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.

‘நீட்’ தேர்வால் நடந்த முதல் உயிரிழப்பு தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக தவிர அனைத்து எதிர்கட்சிகளும், பெற்றோரும், மாணவ, மாணவிகளும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

எனினும். அதன்பிறகும் ‘நீட்’ எனும் இரத்தக் காட்டேறியின் தாகம் தீரவில்லை.

2018 ஆம் ஆண்டு விழுப்புரத்தைச் சேர்ந்த பிரதீபா தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை முயற்சி மேற்கொண்ட சேலத்தைச் சேர்ந்த அஷ்டலட்சுமி காப்பாற்றப்பட்டார். அதே ஆண்டு, திருச்சியைச் சேர்ந்த சுப ஸ்ரீ  தற்கொலை செய்து கொண்டார். அடுத்த இரு ஆண்டுகளில் திருப்பூரைச் சேர்ந்த ரிது ஸ்ரீ, தஞ்சாவூரைச் சேர்ந்த வைஷியா ஆகியோர் உயிரை மாய்த்துக் கொண்டனர்.

உயிரை மாய்த்துக் கொண்ட 5 மாணவிகளில் 3 பேர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்தங்கி வகுப்பைச் சேர்ந்த இந்த மாணவிகள் அனைவரும் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள்.

இந்த சோகம் மனதில் இருந்து நீங்கும் முன், இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மதுரை ஜோதி ஸ்ரீ துர்கா, தர்மபுரி மாணவர் ஆதித்யா, திருச்செங்கோடு மாணவர் மோதிலால் ஆகிய 3 பேரும் கடந்த 12 ஆம் தேதி ஒரே நாளில் உயிரிழந்தது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.

நீட் தேர்வுக்கு இதுவரை மாணவிகள் மட்டுமே பலியாகி வந்த நிலையில், முதல்முறையாக மாணவர்களையும் பலிவாங்கத் தொடங்கிவிட்டது.

‘லட்சக்கணக்கில் பணம் செலவழித்து பெற்றோர் பட்ட கஷ்டம் வீணாகிவிடுமோ?’ என்ற அச்சம், ‘தேர்வில் தோல்வியுற்றால் மற்றவர்கள் ஏளனம் செய்வார்களோ?’ என்ற அச்சம், மருத்துவர் ஆக வேண்டும் என்று சிறு வயதிலேயே உள்ளூர புதைந்து போன ஆசை பொய்யாகும் போது, மன அழுத்தம் ஏற்படும்போது இத்தகைய முடிவுகளை மாணவர்கள் எடுப்பதாக மன உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

”மருத்துவம் மட்டுமே படிப்பல்ல. அதைவிடச் சிறந்த படிப்புகள் எல்லாம் உள்ளன. இது போன்ற தற்கொலையால் இறந்தவர்களுக்கும், இருப்பவர்களுக்கும் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை.தற்கொலை எண்ணம் வந்தாலே மனதுக்குப் பிடித்தவர்களுடன் மாணவ, மாணவிகள் பேச வேண்டும்.  எதற்கும் தற்கொலை தீர்வல்ல.” என்று  கூறுகிறார்கள் கல்வியாளர்கள்.

ஆனால், கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் 8 பிஞ்சுகள் மருத்துவர் கனவோடு மண்ணில் புதைந்து போனதை,  மத்திய அரசு மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இப்போதுகூட… மத்திய அரசு நினைத்தால் ‘நீட்’ எனும் காலனை ஒழிக்கலாம். ஆனால் நினைக்க வேண்டுமே…!

தலைமை நீதிபதியாக ஓய்வு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி கற்பகவிநாயகம் தன் சொந்த அனுபவத்தை ஒருமுறை இவ்வாறு வெளிப்படுத்தினார்…

”பியூசியில் நான் இரு முறை தோல்வியடைந்து விட்டேன். மனம் உடைந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். அப்போது, மின்னல் போல நேர்மறை எண்ணம் என்னுள் இறங்கியது. நாம் ஏன் தற்கொலை செய்ய வேண்டும்? தோல்விதான் முடிவா? நிச்சயம் நம்மாலும் சாதிக்க முடியும் என உறுதியாக நம்பினேன். தற்கொலை முடிவை மாற்றிக் கொண்டு வீடு திரும்பினேன். மீண்டும் தேர்வெழுதி வெற்றி பெற்று, வழக்குரைஞராகி தற்போது உங்கள் முன் நீதிபதியாக நிற்கிறேன்…”

மாணவர்களே, இதை மீண்டும் மீண்டும் படியுங்கள்.  ஒவ்வொருவரும் சாதிக்கப் பிறந்தவர்களே என்பதும், நம் பிறப்பின் அர்த்தமும் புரியும்..

வாழ்க்கையே போர்க் களம்… வாழ்ந்துதான் பார்க்கணும்!

The post நீட் எனும் எமனால் பறிபோன 8 உயிர்கள்: போதுமா மத்திய அரசே? appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

நீட் திணிப்பால் தமிழகத்தில் தற்கொலைகள் தொடர்வதற்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பு: தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம்
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் – தமிழ்ச்செல்வி தம்பதியரின் மகன் 19 வயது நிரம்பிய விக்னேஷ் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்விற்கு கேரளாவில் உள்ள பயிற்சி மையம் மற்றும் துறையூரில் உள்ள ஒரு நிறுவனத்திலும் பயிற்சி பெற்று வந்தார். செந்துறை தெரசா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கடந்த 2017 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு படித்து முடித்த விக்னேஷ் பொதுத் தேர்வில் 1006 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். அதன்பின் மருத்துவராக வேண்டுமென்று கடந்த இரண்டு முறை நீட் தேர்வு எழுதி, ஒருமுறை தோல்வியும், ஒருமுறை தேர்ச்சியும் பெற்ற நிலையிலும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மூன்றாவது முறையாக வருகிற செப்டம்பர் 13 அன்று நடைபெறவுள்ள நீட் தேர்வில் பங்கேற்க கடுமையாக தயார்படுத்திக் கொண்டு வந்தார்.

இந்நிலையில், அதிக மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் வெற்றி பெற முடியுமா என்கிற சந்தேகத்தில் மன உளைச்சல் ஏற்பட்டு நேற்று அதிகாலை 4 மணி அளவில் அருகில் உள்ள கிணற்றில் விழுந்து பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் செய்தி அந்தப் பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது. அதைத் தொடர்ந்து கிராம மக்கள் அனைவரும் மாணவர்களின் உயிரை குடிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவரது தந்தை அந்த கிராமத்தில் பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிற ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்.

ஏற்கனவே இதே பகுதியில் மூன்றாண்டுகளுக்கு முன்பு நீட் நுழைவுத் தேர்வு அனிதா என்ற இளம் மாணவியை பலிவாங்கியது. கடந்த 2017 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பில் 1200க்கு 1176 மதிப்பெண்கள் அனிதா பெற்றிருந்தார். மருத்துவப் படிப்பில் தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் வரை நீதி கேட்டு போராடினார். ஆனால், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அந்த மாணவிக்கு நீட் தேர்வு மூலமாக மருத்துவம் படிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவரது தந்தை கூலித் தொழிலாளியாக இருந்த நிலையில், கஷ்டப்பட்டு படித்த அனிதாவின் மருத்துவர் கனவு தகர்ந்து போனது. இந்த துயரம் தாங்காமல் அன்று அனிதா தற்கொலை செய்து கொண்டார். அதேபோல, தற்போது விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நீட் தேர்வினால் தற்கொலை சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன.

ஏற்கனவே அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடிய 25 இளைஞர்கள் மீது வழக்கு பதியப்பட்டு இதுவரை அந்த வழக்குகள் தமிழக காவல் துறையினரால் திரும்பப் பெறப்படவில்லை. இதனால் அந்த இளைஞர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது. அவர்கள் உயர்கல்வி பயிலும் வாய்ப்பையும், வேலை வாய்ப்பையும் இழந்துள்ளது குறித்து தமிழக அரசு கவலைப்படவில்லை.

வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. கொரோனா தொற்று கடுமையாக இருக்கிற சூழலில் நீட் தேர்வை ரத்து செய்து விட்டு 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை வைத்து மருத்துவப் படிப்பில் சேர அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், எந்த கோரிக்கையையும் மத்திய பா.ஜ.க. அரசு ஏற்றுக் கொள்ளாமல் நீட் தேர்வை தமிழகத்தின் மீது திணித்திருக்கிறது. இதை எதிர்கொள்ள முடியாத ஏழை, எளிய கிராமப்புற மக்கள், பின்தங்கிய ஒடுக்கப்பட்ட மக்கள் மருத்துவப் படிப்பில் சேர நீட் நுழைவுத் தேர்வு தடையாக இருக்கிறதே என்ற மன உளைச்சலின் காரணமாக அனிதா, விக்னேஷ் போன்ற மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிற பரிதாப நிலை ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் நீட் தேர்வை தடுத்து நிறுத்த தீவிரமான முயற்சிகளை அ.இ.அ.தி.மு.க. அரசு எடுக்கவில்லை. நீட் தேர்வை எதிர்ப்பதை போல கண்துடைப்பு நாடகத்தை நடத்தி விட்டு, இந்த ஆண்டிலும் நீட் தேர்வு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

எனவே, அனிதா, விக்னேஷ் போன்றவர்களின் தற்கொலை சாவுகளுக்கு மத்திய – மாநில அரசுகளே பொறுப்பாகும். இதற்குரிய பாடத்தை தமிழக மக்கள் விரைவில் வழங்குவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தற்கொலை செய்து கொண்ட விக்னேஷ் என்ற மாணவரின் குடும்பத்தாருக்கு தமிழக அரசு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மறைந்த விக்னேஷ் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post நீட் திணிப்பால் தமிழகத்தில் தற்கொலைகள் தொடர்வதற்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பு: தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

கொரோனா தொற்று காலத்தில் 25 லட்சம் மாணவர்கள் மீது நுழைவுத்தேர்வை திணிக்கும் மத்திய பா.ஜ.க அரசை கண்டிக்கிறோம்!
மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு அணைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்!

உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று காரணமாக இந்தியாவும் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்தை எட்டியிருக்கிறது. 59 ஆயிரத்து 449 பேர் இறந்திருக்கிறார்கள். 156 நாட்களாக பொது ஊரடங்கு நீடித்து வருகிறது. இந்நிலையில், மருத்துவப்  படிப்புகளுக்கான நீட் தேர்வை செப்டம்பர் 13 ஆம் தேதியும்,  தேசிய அளவில் முதன்மை நிலையில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான ஜெ.இ.இ. நுழைவுத் தேர்வை செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரை நடத்த , மத்திய பா.ஜ.க. அரசு தீவிரம் காட்டி வருகிறது.  இந்த தேர்வில் பங்கேற்க பெரும்பாலான மாணவர்களும், பெற்றோர்களும் தயாராக இல்லை.

இந்தியா முழுவதும் நீட் தேர்வில் 15 லட்சத்து 93 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்கவுள்ளனர். தமிழ்நாட்டில் 1 லட்சத்து 17 ஆயிரம் பேர் இத்தேர்வை எழுதவுள்ளனர். இது கடந்தாண்டை விட 13 சதவிகிதம் குறைவாகும். இதற்கு காரணம் நீட் தேர்வுகள் சி.பி.எஸ்.இ., என்.சி.இ.ஆர்.டி., பாடத்  திட்டங்களின் அடிப்படையில் நடத்தப்படுவதால் மாநில பாடத் திட்டத்தின் அடிப்படையில் பயிலுகிற தமிழக மாணவர்களால் வெற்றி பெறமுடியாமல் கடுமையான பாதிப்புக்குள்ளாகிறார்கள். மேலும், கொரோனா தொற்றுக் காலத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவில்லை.

நகரங்களில் இருக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் கிராமப்புற மாணவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுதுகிறவர்களின் பெரும்பாலானவர்கள் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள். இவர்கள் நீட் தேர்வு மையங்களுக்கு வருவதற்கு போக்குவரத்து வசதி இல்லை. அனைத்து ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து  நிறுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில், மருத்துவ, பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் மொத்தம் 26 லட்சம் மாணவர்கள் பங்கேற்க வேண்டியுள்ளது. இவர்களுடைய பெற்றோர்களும் சேர்ந்து வந்தால் ஏறத்தாழ 50 லட்சம் பேர் தேர்வு மையங்களுக்கு வருகிற சூழ்நிலை ஏற்படும். இதனால் சமூக இடைவெளி பாதிக்கப்பட்டு கொரோனா தொற்று கடுமையாக பரவக் கூடிய அபாயம் உள்ளது. இதில், மாணவர்களின் உயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு? மத்திய அரசா, மாநில அரசா?

பொது ஊரடங்கு மற்றும் கொரோனா தொற்றினால்,  கடந்த ஏப்ரல் மாதத்தில் நடத்துவதாக இருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அடுத்து ஜுலையில் நடத்துவதாக இருந்ததும் ஒத்தி வைக்கப்பட்டது.   அப்போது ஒரு நாளில் கொரோனா பாதிப்பு 22 ஆயிரமாக இருந்தது. அன்று நீட் தேர்வை ஒத்திவைத்த மத்திய அரசு இன்று ஒரு நாளில் கொரோனா பாதிப்பு 76 ஆயிரமாக உச்சக்கட்ட நிலையிருக்கிற போது, ஏன் ஒத்திவைக்க மறுக்கிறது? நடப்பு  ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கொரோனாவின் எண்ணிக்கை 15 லட்சம் கூடியிருக்கிறது.
கொரோனா தொற்றினால் அச்சம், பீதியோடு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ? என்ற பயத்துடன்   வீடுகளில் முடங்கியிருக்கிறார்கள். கொரோனா பாதிப்பு ஒரு பக்கம்; வேலை வாய்ப்பிழந்து, வருமானத்தைப் பறிகொடுத்து வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலை மறுபக்கம். இந்நிலையில் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டுமென நாடு முழுவதும் எதிர்ப்புக் குரல் எழுந்திருக்கிறது.

நேற்று காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி தலைமையில் 7 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில்,  ”நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும்; உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டுமென”  பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதைப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தீவிர பரிசீலனை செய்ய வேண்டும். இதில் வீண் பிடிவாதம் காட்டக் கூடாது. இது,  மாணவர்களின் எதிர்காலத்தைவிட உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும்.

எனவே, கொரோனா தொற்று காரணமாக நாட்டில் நிலவுகிற பதற்றமான சூழலின் அடிப்படையில், நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை உடனடியாக தள்ளிவைக்க வேண்டும். இதற்கு மாற்றாக மருத்துவ, பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கு 12 ஆம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களின் சேர்க்கையை முடிவு செய்ய வேண்டுமென்று மத்திய பா.ஜ.க. அரசை கேட்டுக் கொள்கிறேன்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்தலின்படி, நீட் தேர்வுக்கெதிராக தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களிலுள்ள மத்திய அரசின் அலுவலகங்கள் முன்பாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் நாளை (28.08.2020) வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு பொது ஊரடங்குக்கு கட்டுப்பட்டு சமூக இடைவெளியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

The post கொரோனா தொற்று காலத்தில் 25 லட்சம் மாணவர்கள் மீது நுழைவுத்தேர்வை திணிக்கும் மத்திய பா.ஜ.க அரசை கண்டிக்கிறோம்! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

பா.ஜ.க.வுக்கு எதிராக முதலமைச்சர்களை திரட்டிய அன்னை சோனியா காந்தி! நீட் திணிப்பை எதிர்த்து நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்!
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக் காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த 7 மாநில முதலமைச்சர்கள் கூட்டம், பா.ஜ.கவுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டிய அவசியத்தை வெளிப்படுத்தியுள்ளது.

சோனியா காந்தி தலைமையில் காணொலி காட்சி மூலம் நடந்த கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சட்டீஸ்கர் முதலமைச்சர் புபேஸ் பாகெல் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்றனர். இதுதவிர, யாரும் எதிர்பார்க்காத நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் பங்கேற்றார்.  மகாராஷ்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மற்றும் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் ஷோரன் ஆகியோரும் பங்கேற்றனர்.

அசத்திய சோனியா காந்தி

சோனியா காந்தி செயல்படவில்லை என்று 23 காங்கிரஸ் தலைவர்கள் கடிதம் அனுப்பியிருந்த நிலையில், 7 மாநில முதலமைச்சர்கள் கூட்டம் நடந்தது. சோனியா காந்தி கூட்டத்தை நடத்திய விதம் அனைவரையும் கவர்ந்தது. உடல்நிலை பாதிக்கப்பட்ட போதும், நரேந்திர மோடி அரசுக்கு எதிராக போராடும் சரியான தலைமை  ‘தான் மட்டுமே’ என்பதை வெளிப்படுத்தினார்.

மம்தா பானர்ஜிக்கு மரியாதை

காங்கிரஸ் கூட்டணியில் மம்தா பானர்ஜி அங்கம் வகிக்காத போதும், இந்த கூட்டத்தில் அவர் பங்கேற்றது கூட்டத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. மம்தாவுக்கு மரியாதை தரும் வகையில், அவரை முதலில் பேசுமாறு சோனியா காந்தி கேட்டுக் கொண்டார். மம்தா பேசி முடிந்ததும், கூட்டத்தை நடத்துமாறு அவரை சோனியா கேட்டுக் கொண்டார். அதனை மறுத்த மம்தா,. நீங்கள் மூத்த தலைவர். நீங்கள் இருக்கும் போது நான் எப்படி கூட்டத்துக்கு தலைமை தாங்க முடியும் என்று  பதில் அளித்தார். சோனியா காந்தியின் புதிய முயற்சியை பாராட்டிய மம்தா,  ராஜிவ் காந்தியையும் நினைவுகூர்ந்தார்.

நீட், ஜெஇஇ நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு

”நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் நீட் மற்றும் ஜெஇஇ நுழைவுத் தேர்வை தள்ளிவைக்க வேண்டும்” என அனைத்து முதலமைச்சர்களும் வேண்டுகோள் விடுத்தனர். ” இந்த சூழலிலும்   தேர்வுகளை நடத்தினால், மாணவர்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்றே அர்த்தம்”  என்று சோனியா காந்தி குறிப்பிட்டார்.

”ஒர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு சென்று தேர்வு எழுதுவதால், கொரோனா பரவலுக்கு வாய்ப்பு இருப்பதாக” ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் ஷோரன் எச்சரித்தார். மேற்குவங்க முதலமைச்சர் மம்தாவும், பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கும், ”இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை சட்டப்படி அணுக வேண்டும்” என ஆலோசனை தெரிவித்தனர்.

ஜிஎஸ்டி  பிரச்சினை

ஜிஎஸ்டி வருவாயில் போதிய பங்கை மத்திய அரசு தராதது குறித்த பிரச்சினையை அனைத்து முதலமைச்சர்களும் எழுப்பினர். துணை நிலை ஆளுநர் மற்றும் ஆளுநர்களால் எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் குறுக்கீடு அதிகம் இருப்பதை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சுட்டிக்காட்டினார். ” கொரோனாவை எதிர்ப்பதில் மத்திய அரசுடன் சேர்ந்து நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம். இந்நிலையில், இரு நுழைவுத் தேர்வுகளையும் நடத்துவது, கொரோனா பரவலை அதிகரிக்கும். அவ்வாறு நேர்ந்தால் மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி ஒற்றுமை

பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்துக்  கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்பதை அனைத்து முதலமைச்சர்களும் வலியுறுத்தினர். ஐக்கிய முற்போக்குக்  கூட்டணியில் இல்லாத மம்தா பானர்ஜியும், புதிதாக கூட்டணியில் இணைந்த உத்தவ் தாக்கரேவும் பேசும்போது, ”இதுபோன்ற எதிர்க்கட்சிகளின்  கூட்டம் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் ” என வலியுறுத்தினர்.

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக்  கெலாட் பேசும்போது, ” பிரதமர் நடத்தும் காணொலி கூட்டத்தைத் தவிர, மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுகளுக்கு எதுவும் கிடைக்கவில்லை” என்றார்.

உத்தவ் தாக்கரே பேசும்போது, ”நாம் பயப்பட வேண்டும் அல்லது போராட வேண்டும். நிலைமை சரியான பிறகு நுழைவுத் தேர்வுகளை நடத்தலாம். அமெரிக்காவில் பள்ளிகள் திறந்ததால், 97 ஆயிரம் குழந்தைகளுக்கு அங்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்ற நிலைமை ஏற்பட்டால், நம்மால் என்ன செய்ய முடியும் ” என்று கேள்வி எழுப்பினார்.

The post பா.ஜ.க.வுக்கு எதிராக முதலமைச்சர்களை திரட்டிய அன்னை சோனியா  காந்தி! நீட் திணிப்பை எதிர்த்து நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.