MSME Archives - தேசிய முரசு - Desiya Murasu

1,000 பதவியிடங்களுக்கு போட்டியிடும் 5 லட்சம் பேர்: திணறும் மோடி அரசின் ‘எம்எஸ்எம்இ சம்பர்க்’ வேலைவாய்ப்பு தளம்
எம்எஸ்எம்இ எனப்படும் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் திறமையான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ‘எம்எஸ்எம்இ சம்பர்க்’ என்ற வேலைவாய்ப்பு தளத்தை தொடங்கினார்.

வேலை வேண்டி இந்த தளத்தில் பதிவு செய்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க இந்த தளம் தவறிவிட்டது. அரசு தரவுகளின்படி, 131 பதவிகளுக்கான 936 காலிப்பணியிடங்களுக்கு 4 லட்சத்து 71 ஆயிரத்து 596 பேர் பதிவு செய்தனர். வேலைவாய்ப்பு தளத்தை தொடங்கியதிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் வரை, 6 ஆயிரத்து 80 உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் தகுதியான ஆட்கள் வேண்டி இந்த தளத்தில் பதிவு செய்திருந்தன. இந்த நிலையில், வேலைவாய்ப்பு தளம் தொடங்கியதிலிருந்து கடந்த ஏப்ரல் வரை, பதிவு செய்தவர்களில் 28 ஆயிரத்து 746 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்தது. அதாவது மாதம் ஒன்றுக்கு 845 பேருக்கு என்ற விகிதத்தில் இந்த வேலைவாய்ப்பு தளம் மூலம் வேலை கிடைத்துள்ளது. ‘எம்எஸ்எம்இ சம்பர்க்’ வேலைவாய்ப்பு தளத்தில் 31 ஆயிரத்து 941 பேர் வேலை கேட்டும், 1913 நிறுவனங்கள் தகுதியான ஆட்கள் கேட்டும் பதிவு செய்துள்ளனர்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, எம்எஸ்எம்இ சம்பர்க் வேலைவாய்ப்பு தளம் தொடங்கப்பட்டது. ஏற்கெனவே எம்எஸ்எம்இ துறையில் 30 சதவிகிதம் பேர் வேலை இழந்தும், பல நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில், சரியான நபர்களை நிறுவனங்களுக்குக் கண்டுபிடித்துத் தருவதற்காக இந்த எம்எஸ்எம்இ சம்பர்க் தளம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் அரசால் எப்படி வேலை வாய்ப்பை உருவாக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. இப்போது சில மாநிலங்களில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் மேலும் பாதிப்பு ஏற்படும்.

எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மையங்களிலிருநது பயிற்சி பெற்று வரும் மாணவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு அளிப்பதை இந்த எம்எஸ்எம்இ சம்பர்க் தளத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. ஆட்கள் தேவைப்படுவோரும் தங்களுக்குத் தேவையானவர்களை பணிக்கு அமர்த்த பதிவு செய்யலாம்.

எம்எஸ்எம்இ சம்பர்க் தரவுகளின்படி, இந்தியாவில் உள்ள 18 எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மையங்கள் மூலம் ஆண்டுதோறும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்எஸ்எம்இ அமைச்சகத்தின் வருடாந்திர அறிக்கையின்படி, 2019 டிசம்பர் 31 ஆம் தேதி வரை, 53 ஆயிரத்து 295 பேர் வேலை கேட்டு பதிவு செய்திருந்தனர். 5,397 நிறுவனங்கள் ஆட்கள் கேட்டு பதிவு செய்திருந்தனர். 2021 ஜனவரி 20 ஆம் தேதி வரை, 4 லட்சத்து 68 ஆயிரத்து 804 பேர் வேலை கேட்டு எம்எஸ்எம்இ சம்பர்க் தளத்தில் பதிவு செய்திருந்தனர். அதேசமயம், ஆட்கள் கேட்டு 5 ஆயிரத்து 951 நிறுவனங்கள் பதிவு செய்திருந்தன. அனிமேஷன், அடோப் ஃபோட்டோஷாப், சின்சி மில்லிங், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், வெல்டிங், சோஷியல் மீடியா மார்க்கெட்டிங், பாதணிகள் வடிவமைப்பு, ரோபோடிக்ஸ் போன்றவற்றிலிருந்து தங்களுக்குப் பொருந்தக்கூடிய பணிகளை வேலை கேட்டுப் பதிவு செய்வோர் தேர்வு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

வேலைவாய்ப்பை உருவாக்க மாறுபட்ட இரண்டு கொள்கைகள் இருப்பது நல்லது தான். ஆனால், அதிகபட்ச பயனுள்ளதாக அவை இருக்கவில்லை. வகுக்கப்படும் கொள்கை பிரச்சினைகளுக்குப் பதில் அளிப்பதாக இருக்க வேண்டும். அடுத்த 6 மாதங்களில் அதிகப்படியான வேலை வாய்ப்புகளை ஒருவர் எதிர்பார்க்க முடியாது. அதிகபட்ச வேலைவாய்ப்பு கிடைக்க, நிறுவனங்கள் தான் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். அவ்வாறு வேலை வாய்ப்பை உருவாக்கும் சூழலை உருவாக்க, எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி செய்ய வேண்டும். அவ்வாறு நிதியுதவி செய்யும் போது, அந்த நிறுவனங்கள் வியாபார வாய்ப்புகளை அதிகரித்து வேலைவாய்ப்பை தாங்களாகவே அதிகரிப்பார்கள். அப்போது தான் வேலைவாய்ப்பு தளத்தில் பதவிகள் குறித்த விவரத்தைப் பட்டியலிட முடியும்.

முக்கியமாக, ‘எம்எஸ்எம்இ சம்பர்க்’ தளத்தின் வழியே 28 ஆயிரத்து 746 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது. இதுவரை எம்எஸ்எம்இ துறையில் 11 கோடி வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், 0.026 சதவிகிதத்தினருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. எம்எஸ்எம்இ எனப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு.

ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 இல் ஒரு பங்களிப்பாகவும், ஏற்றுமதியின் பாதி அளவாகவும் 11 கோடி வேலைவாய்ப்புகளை எம்எஸ்எம்இ துறை உருவாக்கியுள்ளதாக, அமேசானின் வருடாந்திர விழாவில் பேசிய எம்எஸ்எம்இ துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

The post 1,000 பதவியிடங்களுக்கு போட்டியிடும் 5 லட்சம் பேர்: திணறும் மோடி அரசின் ‘எம்எஸ்எம்இ சம்பர்க்’ வேலைவாய்ப்பு தளம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.