Modi Archives - தேசிய முரசு - Desiya Murasu

உணவுப் பாதுகாப்பு அமைப்பை அழித்துவிட்டார் பிரதமர் மோடி! தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
நாட்டின் ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பு  அமைப்பை மோடி அரசு அழித்துவிட்டதாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

பஞ்சாபில் 2 நாட்கள் நடந்த விவசாய பாதுகாப்பு யாத்திரையில் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். முன்னதாக, பாட்டியாலாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது :

ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பு இழப்பு நடவடிக்கைகளின் மூலம் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் மற்றும் கடை உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை மோடி முடிவுக்கு கொண்டு வந்துவிட்டார். அதேபோல், விவசாயிகளின் கழுத்தை நெரிக்கும் 3 சட்டங்களை கொண்டு வந்து விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் முடிக்க முயற்சித்து வருகிறார்.

வரும் காலங்களில் இளைஞர்களுக்கு நம் நாட்டில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர முடியாது. வேலை வாய்ப்பு முறையையும் மோடி சீர்குலைத்துவிட்டார். மோடி அரசு சொல்வதைப் போல் 3 சட்டங்களால் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றால், நாடாளுமன்றத்தில் ஏன் விவாதம் நடத்தவில்லை. விவசாய  உற்பத்தி மற்றும் சந்தைக் குழு முறையில் காங்கிரஸ் கட்சி தெளிவாக உள்ளது.

நரேந்திர மோடி அரசு செய்வது போல், ஒட்டுமொத்த உணவு பாதுகாப்பு முறையையும் அழிக்க நாங்கள் விரும்பவில்லை. உணவு பாதுகாப்பை வலுப்படுத்த செய்ய வேண்டியதை கடந்த தேர்தலின் போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். தற்போதைய முறையில் குறைபாடுகள் இருந்தால் சரி செய்யவேண்டும் என்று தான் சொல்லியிருந்தோம். மோடியைப் போல் ஒட்டுமொத்த அமைப்பையும் அழிக்க நாங்கள் முயற்சிக்கவில்லை.

விவசாய முறையை மேம்படுத்தும் நோக்கிலும், விவசாய கட்டமைப்பை மேம்படுத்தும் வகையிலும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இருந்தது. விவசாயிகளுக்கு கூடுதல் சந்தைகளை திறக்கவும், தற்போது இருக்கும் 40 கி.மீ தொலைவுக்குப் பதிலாக, 4 கி.மீ தொலைவுக்கு ஒரு மண்டியை உருவாக்கவும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தோம்.

ஒட்டுமொத்த இந்தியாவிலும் உள்ள விவசாயிகள் மற்றும் நமது தொழிலாளர்கள் மீது மோடி அரசு நடத்தும் தாக்குதல், காங்கிரஸ் மற்றும் ஒட்டுமொத்த இந்தியாவும் இணைந்து எதிர்ப்பதால் தோல்வியுறும்.

ஹத்ராஸில் அன்புக்குரிய சிறுமி தாக்கப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். ஆனால், பிரதமர் இதுவரை அது குறித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

லடாக் எல்லையில் சீனப் படைகள் ஊடுருவல் குறித்து பிரதமர் மோடி மவுனம் காத்து வருகிறார். இந்தியாவுக்குச் சொந்தமான 12 ஆயிரம் சதுர அடி நிலம் சீனா வசம் சென்றுவிட்டது.

அனைத்து கட்டிடக்கலைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. நாட்டின் ஆன்மாவை முழுமையாகக் கைப்பற்றியுள்ளனர். எனக்கு சுதந்திரமான அமைப்பும், சுதந்திரமான ஊடகமும் கொடுங்கள். ஆறே மாதத்தில் மோடியை அகற்றிக் காண்பிக்கின்றேன்.

சிறப்பு விமானங்களை வாங்க மக்கள் பணத்திலிருந்து பல கோடிகளைச் செலவு செய்துள்ளார் பிரதமர் மோடி. ஏனென்றால், மோடியின் நண்பர் ட்ரம்ப்பும் அதேபோன்ற விமானத்தை வைத்துள்ளார்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

The post உணவுப் பாதுகாப்பு அமைப்பை அழித்துவிட்டார் பிரதமர் மோடி! தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

உடையும் மோடியின் புனிதர் பிம்பம்: களையும் பா.ஜ.க. யோக்கியர் வேடம்
பிரதமர் மோடி உலகப் புனிதர் போலவும், பா.ஜ.க. தான் உலகத்திலேயே மிகவும் யோக்கியர்களின் கட்சி என்பது போலவும்  மாயத் தோற்றம் கட்டமைக்கப்படுகிறது. இவற்றைத் தவிடுபொடியாக்கும் கீழ்கண்ட 20 கேள்விகளுக்கு  யாரிடமாவது பதில் இருக்கிறதா?

எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கப் பயன்படும் பணம் யாருடைய நேர்மையான சம்பாத்தியம்?

ரபேல் கோப்புகள் ஏன் மாயமாகின?

பா.ஜ.க.வை கேள்வி கேட்கும் நீதிபதிகளின் மீது மட்டுமே பாலியல் பலாத்கார புகார்களும், கொலை மிரட்டல்களும், கொலையும் செய்யப்படுவதும் ஏன்?

மோடியை ‘பிரமோட்’ செய்யப் பயன்படுத்தப்பட்ட ரூ. 10,000 கோடி யாருடையது? பிரசாந்த் கிஷோர் சம்பளம் உட்பட…

அத்தனை ஊழல்வாதிகளும் பா.ஜ.க.வில் இணைந்தவுடன் பரிசுத்தமாவது எப்படி?

பா.ஜ.க. மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு  கூறியவுடன், அவர்கள் மீது மட்டும் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ரெய்டுகள் நடப்பது ஏன்? குற்றச்சாட்டுகள் கூறியவர் அமைதியானவுடன் அந்த வழக்குகள் மாயமாவது ஏன்?

பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு மிக முக்கியமான காரணமான  2ஜி வழக்கில் ஏன் மேல்முறையீடு செய்யவில்லை? அதை ஜோடித்த வினோத் ராய்க்கு ஓய்வு பெற்ற பின்னர் பதவி வழங்கியது ஏன்?

வெளிநாடுகளில் பதுக்கியதாகச் சொல்லப்பட்ட கருப்புப் பணத்தில் இதுவரை ஏன் ஒரு பைசாகூட மீட்கப்படவில்லை? குறைந்தபட்சம் கருப்புப் பணம் பதுக்கியவர் பட்டியலைக்கூட வெளியிட முடியவில்லை?

பா.ஜ.க. ஆட்சிக்கு வரும்வரை கருப்புப் பணமாக இருந்தவை, பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டுப் பணமாக மாறிய மர்மம் என்ன? ஜீ பூம்பா சொன்ன சூத்திரதாரி யார்?

நாட்டின் பாதுகாப்புத் துறை உட்பட அத்தனை துறைகளும் தனியாருக்கு ஏன் விற்கப்படுகின்றன?

கடந்த தேர்தலில்  2 கண்டெய்னர்களில் கைப்பற்றபட்ட பணம் யாருடையது என்பதை ஏன் வெளிப்படையாக இதுவரை அறிவிக்க முடியவில்லை? பத்திரிக்கைகளில் இவ்வளவு வெட்டவெளிச்சமான கண்டெய்னர்களின் கதியே இதுவென்றால், தெரியாமல் கைமாறிய கண்டெய்னர்களின் எண்ணிக்கை என்ன?

பல்லாயிரம் கோடி அரசு பணத்தை செலவழித்து மோடி வெளி நாடுகளுக்குச் செல்வது முதலீடுகளை ஈர்க்கத்தான் என்றால்,  ஏன் இதுவரை ஒரு பைசா வெளிநாட்டு முதலீடு கூட இந்தியாவிற்கு வரவில்லை?

மோடியின் வெளிநாட்டு பயணங்களில் அவரோடு செல்லும் தொழிலதிபர்கள் மட்டும் வெளிநாடுகளில் பல லட்சம் கோடிகள் முதலீடு செய்வது எப்படி?

மோடியின் வெளிநாட்டு பயணம் இந்தியாவிற்கு முதலீடுகளை கொண்டு வரவா? அல்லது அவரது நண்பர்கள்  வெளிநாடுகளில் முதலீடு செய்ய,  மோடி முகவராக செல்கிறாரா?

இந்தியாவின் முக்கிய ஊழல்வாதியாக கூறப்பட்டு தண்டனை அனுபவிக்கும் லாலுவின் காலத்தில் லாபத்தில் இயங்கிய ரயில்வே, தனியாருக்கு விற்கும் அளவிற்கு நஷ்டம் அடைந்தது ஏன்?

இன்னமும் 50 சதவீதத்திற்கு மேலான பெட்ரோல் தனியார் வசம் இருப்பது ஏன்?

தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்து 15 ஆண்டுகள் கடந்த பின்னரும், டோல் கட்டணம் வசூலிக்க தனியாருக்கு தொடர்ந்து அனுமதி வழங்குவது ஏன்?

யாரிடமும் கொடுக்காமல் மிக ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளிக்கப்பட்டு பெறப்பட்ட ஆதார் தகவல்கள், ரிலையன்சின் ஜியோ நிறுவனத்திற்கு முழுவதுமாக வழங்கப்பட்டதற்கு காரணம் என்ன?

ஏழை விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் கூட  கடன்கள்  தள்ளுபடி செய்யப்படவில்லை. ஆனால், பெரு நிறுவனங்களுக்கு மட்டும் பல்லாயிரக்கணக்கான கோடிகள் தள்ளுபடி செய்யப்படுவதன் மர்மம் என்ன?

பல்லாயிரம் கோடிகள் உபரி பணம் இருக்கும் எல்ஐசி பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் காரணம் என்ன? எல்ஐசியில் எந்த விதமான நஷ்டம் ஏற்பட்டது?

( திரு. நாஞ்சில் பீட்டரின் முகநூல் பதிவிலிருந்து…)

The post உடையும் மோடியின் புனிதர் பிம்பம்: களையும் பா.ஜ.க. யோக்கியர் வேடம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.