Modi Government Archives - தேசிய முரசு - Desiya Murasu

சர்ச்சிலும் ராகுலும்; ட்ரம்பும் மோடியும் : வார்த்தைகளில் வெளிப்படும் உண்மை முகம்
மோடி அரசை ‘சூட் பூட் கி சர்க்கார்’ (விலை உயர்ந்த கோட் மற்றும் பூட்ஸை மோடி போடுவது வழக்கம்) என்று முத்திரை குத்தினார் ராகுல் காந்தி. சமீபத்தில் ‘நாம் இருவர் நமக்கு இருவர் அரசு’ என்று விமர்சித்தார்.

ராகுல் காந்தியின் இத்தகைய விமர்சனங்கள் இங்கிலாந்து பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலை நினைவுபடுத்துகிறது.

இரக்கக் குணம் மற்றும் கருத்தியலில் புகழ்பெற்ற வின்ஸ்டன் சர்ச்சிலுடன் ஒப்பிடும் அளவுக்கு ராகுல் காந்தி இருக்கிறார். அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்தப்பட்ட போதும், அவரது நகைச்சுவை மேலோங்கியிருக்கும்.

மோடியைப் போல் தனிப்பட்ட தாக்குதலை ராகுல் காந்தி நடத்துவதில்லை. தன் அரசியல் எதிரிகளைத் தனிப்பட்ட முறையில் யாரையும் சர்ச்சில் தாக்கியதில்லை. இந்த குணம் ராகுல் காந்தியிடமும் பிரதிபலித்தது.

பிரிட்டிஷ் முதல் பெண் எம்பியான நான்ஸி ஆஸ்டர் ஒருமுறை நாடாளுமன்றத்தில் பேசும்போது,” சர்ச்சிலை நான் திருமணம் செய்து கொண்டிருந்தால், விஷம் வைத்துக் கொன்றிருப்பேன்” என்றார். அதற்கு உடனே பதில் அளித்த சர்ச்சில், ” நான்ஸி எனக்கு மனைவியாகியிருந்தால் நானே விஷம் குடித்து செத்துருப்பேன்” என்றார்.

மற்றொரு பெண் எம்பி பெஸ்ஸி பிராடோக் பேசும்போது, சர்ச்சிலை குடிகாரன் என்றார். அதற்குப் பதில் அளித்த சர்ச்சில், நான் நாளைக்கே செத்துவிடுவேன், நீங்கள் மட்டும் இன்றைக்கு இருப்பது போலவே அப்போதும் இருப்பீர்கள் என்றார். பெஸ்ஸி அசிங்கமாக இருப்பார். அவரை உடல் ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ விமர்சிக்காமல், எவ்வளவு நாசூக்காக விமர்சித்துள்ளார்.

சர்ச்சில் அளவுக்கு தன்னை அவமானப்படுத்தியவர்களுக்கு ராகுல்காந்தி பதிலடி தரவில்லை. எனினும், மோடி அரசாங்கத்தை ‘சூட் பூட் கி சர்க்கார் என்று முத்திரை குத்தினார். தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சர்க்கார் என்று விமர்சிக்கிறார். வின்ஸ்டன் சர்ச்சிலின் வார்த்தைகளையே ராகுல் காந்தியின் வார்த்தைகள் பிரதிபலிக்கின்றன.

ராகுல் காந்தியை விமர்சித்த பத்திரிகை ஆசிரியர்கூட, ராகுல் காந்தியை சர்ச்சிலுடன் ஒப்பிடுகிறார்.

ராகுல் காந்தி ஏன் சர்ச்சிலை நினைவுபடுத்துகிறார். சர்ச்சிலைப் போல், எதிரிகளின் அவதூறுகளைத் தவிர்த்து விடுகிறார். ஆனால், பொருத்தமான நேரத்தில் பதிலடி கொடுக்கிறார். அந்த நகைச்சுவை எல்லோர் மனதிலும் நிலைத்து நிற்கிறது.

தேசிய அரசியலுக்கு வரும் முன்பே சோனியா காந்தியை வெளிநாட்டுக்காரர் என்பதைச் சுட்டிக்காட்டித் தனிப்பட்ட முறையில் விமர்சித்தார். சசிதரூருக்கும் பெரும் பணக்காரரான சுனந்தாவுக்கும் திருமணமானபோது, சுனந்தாவை சசிதரூரின் 50 கோடி ரூபாய் நண்பர் என்று குறிப்பிட்டார். இத்தனைக்கும் சுனந்தா அப்போது மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகவில்லை.

டொனால்டு ட்ரம்ப் அதிபராகும் முன்பே கெல்லியை தனிப்பட்ட முறையில் விமர்சித்தார். அதேபோல், தேசிய அரசியலுக்கு வரும் முன்பு, சோனியா காந்தியையும், சுனந்தாவையும் தனிப்பட்ட முறையில் மோடி விமர்சித்தார். பெண்கள் அல்லது ஆண்கள் மீதான தனிப்பட்ட தாக்குதலை ராகுல் காந்தி தொடுத்ததே கிடையாது.

சர்ச்சிலுக்கும் ட்ரம்புக்கும் இருந்த வித்தியாசம் தான், மோடிக்கும் ராகுல் காந்திக்கும் இருக்கிறது என்பதே, அவரவர் வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் உணர்த்துகின்றன

The post சர்ச்சிலும் ராகுலும்; ட்ரம்பும் மோடியும் : வார்த்தைகளில் வெளிப்படும் உண்மை முகம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

மோடி ஆட்சியில் 100 கோடிஸ்வரர்கள் கடந்த ஆண்டில் மட்டும் குவித்த சொத்து மதிப்பு ரூ.13 லட்சம் கோடி! சமமற்ற வருவாய் மற்றும் சொத்து : பானைக்குள் யானையை அடைத்த மத்திய பட்ஜெட்
நரேந்திர மோடியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் இறுதிப் பகுதி இது. பொருளாதார அதிசயம் நடத்துவேன் என்று அளித்த வாக்குறுதி ஏதும் நடக்கவில்லை. நாட்டின் பொருளாதார மந்தநிலைக்கு கொரோனா மீது மோடி அரசு குற்றம் சாட்டலாம். எனினும், கொரோனா வந்திருக்காவிட்டாலும் மோடியின் பொருளாதாரக் கொள்கை எப்படி இருந்திருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும்.

வாக்குறுதி அளித்தபடி, வேலை வாய்ப்பை பாஜக ஏற்படுத்தவில்லை. கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச்சில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 3.1 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. கடந்த 4 தசாப்தங்களில் பணவீக்கம் சரிசெய்யப்பட்ட நிகழ்வு தற்போது நடந்துள்ளதாகத் தேசிய மாதிரி சர்வே அலுவலகத்தின் (என்எஸ்எஸ்ஓ) கசிந்த சர்வே அறிக்கை கூறுகிறது. அப்போது, உச்சத்துக்குச் சென்ற ஒரே விஷயம், இந்தியாவின் 100 கோடீசுவரர்களின் சொத்து மதிப்பு ரூ.13 லட்சம் கோடியாக உயர்ந்தது தான். இந்த பணத்திலிருந்து இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கு 1 சதவிகிதம் கொடுத்திருந்தாலே, ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1 லட்சம் கிடைத்திருக்கும்.

பட்ஜெட் கண்களால் அளவிடப்படுவது அல்ல. அதன் விளைவுகளால் அளவிடவேண்டும். இது நமது இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவுமா?,நுகர்வு வளர்ச்சியில் புத்துயிர் பெற வழிவகுக்குமா? முக்கியமாக, கொடும் நோய்த் தொற்றிலிருந்து மக்களை மீட்க உதவுமா?, மக்களுக்கு உண்மையான வளர்ச்சியை அளிக்குமா?

இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. அடுத்த 2024 மக்களவை தேர்தல் பிரச்சாரத்துக்கு நாடு தயாராகிவிட்டது. இந்தநிலையில், சென்னை தேர்தல் பிரச்சாரத்தில் இளைஞர்களுக்கு அளித்த வாக்குறுதியைப் பிரதமர் மோடி நிறைவேற்றுவார் என்பது சந்தேகமே. 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மோடி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதே நாட்டின் மிகப்பெரிய முன்னுரிமையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

பொருளாதாரத்தில் என்ன பிரச்சினை என்று நாம் ஆழமாகப் புரிந்து கொள்ளும் முன்பு, கொரோவால் மோசமாகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதைப் புரிந்து கொள்வதும், அதவை மீட்டெடுக்கும் வாய்ப்புகளை ஆராய்வதும் முக்கியம்.

பெட்ரோலியப் பொருட்களுக்கு அநியாயமாக வரி விகிதத்தை வசூலித்தபோதிலும், அரசு வருவாய் ரூ.7 லட்சம் கோடி அளவுக்குப் பற்றாக்குறை எனக் காட்டப்பட்டுள்ளது. வருவாயை ஈட்ட அரசு உத்தேசித்துள்ள ரூ.26.33 லட்சம் கோடியில், பற்றாக்குறை நான்கில் ஒரு பங்குக்கும் குறைவாக உள்ளது. மீதமுள்ள ரூ.2.5 லட்சம் கோடியை ஈடுசெய்ய பெட்ரோலியப் பொருட்கள் மீது வானுயர வரிகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, பொருளாதாரம் மற்றும் அரசு வருவாய் வரும் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி ஊக்கிகளுக்கு பெரும் சேதம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

பொருளாதார வீழ்ச்சிக்கு நீங்கள் கொரோனாவைக் குற்றம் சாட்டலாம். ஆனால், கொரோனா காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்படுவதற்கு முன்பே நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையில் இருந்தது. ஒவ்வொருவருக்கும் தெரியும். 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8.2 சதவிகிதமாக இருந்த வளர்ச்சி விகிதம், 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் (பொது முடக்கத்துக்கு முன்பு) 3.1 சதவிகிதமாக இருந்தது. எனவே, பொது முடக்கத்துக்குப் பிறகு தான் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது என்பதற்கான் எந்த அறிகுறியும் இல்லை.

கொரோனா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தின. சந்தைகள் மீண்டுகொண்டிருந்தபோதும், மக்கள் வலியை உணர்ந்தார்கள்.

பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் காலாண்டு நிதி குறித்த பகுப்பாய்வு சுவாரஸ்யமானது. அதேநேரத்தில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் வருமானம், செலவுகள் மற்றும் லாபங்கள் மார்ச் சற்றும் ஜூன் காலாண்டுகளில் சரிவைக் குறைத்தன. செப்டம்பர் காலாண்டில் போக்கே மாறியது. செப்டம்பர் காலாண்டில் வருவாய் மற்றும் செலவுகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்த நிலையில், நிறுவனங்களின் நிகர லாபம் 45.3 சதவிகிதம் அதிகரித்தது. டிசம்பர் காலாண்டின் ஆரம்பத்திலிருந்தே செலவுகள் குறைந்தும், லாபம் அதிகரித்தும் காணப்பட்டன. நிறுவனம் பணம் சம்பாதிப்பது தவறில்லை. ஆனால், செலவும், லாபமும் எதிரும் புதிருமாகச் செல்லும் போது, அநேகமாக அதனை ஆழ்ந்து கவனிக்க வேண்டியது அவசியம்.

விற்கப்படாத சரக்குகள் சந்தைக்குள் நுழைவதைக் கண்டுபிடிப்பதால் செலவினம் குறைவதாக ஒரு விளக்கம் கூறுகிறார்கள். அதேசமயம், ஊதிய செலவினங்களை குறைப்பதாலும் செலவு குறைந்ததாக இந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பரில், 4,234 நிறுவனங்களின் மாதிரி எடுக்கப்பட்டதில், இதில் 2,150 நிறுவனங்கள் அல்லது 50 சதவிகித நிறுவனங்கள் ஊதிய குறைப்பைச் செய்துள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட அதிகம். மற்றொரு 463 நிறுவனங்களில் ஊதிய உயர்வு ஏதும் இல்லை. 339 நிறுவனங்களில் 6.92 சதவிகிதம் என்ற அளவுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2,952 நிறுவனங்கள் அல்லது 70 சதவிகித பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் ஊதிய உயர்வைக் குறைத்து பணவீக்கத்தை ஈடு செய்துள்ளன என சிஎம்ஐஇ அறிக்கை கூறுகிறது.

சந்தைகள் பழைய நிலைக்குத் திரும்பி, நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் தலால் தெருவில் பணம் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டபோதிலும், பொது முடக்கத்தால் நீண்ட காலம் பாதிக்கப்பட்ட உழைக்கும் வர்க்கத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 சதவிகித இந்தியர்கள் கடந்த ஆண்டு நான்கில் ஒரு பங்கு வருமானத்தை இழந்தனர்.

இந்தியாவின் தேசிய வருமானத்தில், 10 சதவிகித பணக்காரர்களின் வருமானம் 56 சதவிகிதமாக இருந்தது. அதேநேரத்தில், சீனாவில் பணக்காரர்களின் வருமானம் 41 சதவிகிதமாக இருந்தது.

அதன்பிறகு வந்த ஆக்ஸ்ஃபேம் அறிக்கையில், ‘சமமற்ற வைரஸ்’ சுவாரஸ்யமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ”100 கோடீசுவரர்களின் வருமானம் ரூ.13 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதில் 11 கோடீசுவரர்களுக்குக் கிடைத்த வருவாயிலிருந்து மட்டும், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை 10 ஆண்டுகளுக்கும், சுகாதார அமைச்சகம் மூலம் சுகாதார வசதிகளை 10 ஆண்டுகளுக்கும் செய்திருக்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமானம் அதிகரிப்பதும், சமமற்ற பொருளாதாரமும் நீண்ட காலமாக இருக்கும் ஒன்றுதான். ஆனால், கடந்த ஆறரை ஆண்டு மோடி ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டத்துக்கு மாறிவிட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால், மக்கள் நுகரும் தன்மையை அடைய நீண்ட காலம் பிடிக்கும்.

அடுத்த 6 மாதங்களில் பொருளாதார நடவடிக்கைகள் பழைய நிலைக்குத் திரும்பும் என்று மத்திய அரசு எண்ணுகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றால் தடம்புரண்ட பொருளாதாரத்தைச் சரிசெய்து மீண்டும் பயணிக்க வைக்க சில ஆண்டுகள் ஆகும் என்பது மறுப்பதற்கில்லை. நம் இளைஞர்களும் யுவதிகளும் இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதுதான் சோகமான செய்தி. அதற்கு முன்பாக நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தால், அவர்களுக்கு நல்ல வாழ்க்கையின் தொடக்கமாக இருக்கும்.

வரும் காலங்களில் இந்த பிரச்சினை எவ்வாறு அரசியல் ரீதியாக வடிவம் தரப்படும் என்பது தான் பெரிய கேள்வியாக முன்னே நிற்கிறது. உண்மையில் முக்கியமான பிரச்சினைகளுக்கு இந்தியா தீர்வு காணுமா அல்லது கடந்த 7 ஆண்டுகளில் இந்திய அரசியலை வரையறுத்துள்ள கவனச் சிதறல்களிலேயே காலத்தைக் கழிக்குமா?

பொருளாதார ரீதியில் வல்லமை படைத்த நாடாக இந்தியாவை மாற்றுவோம் என்றும், 2025 ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலரை(இந்திய மதிப்பில் ரூ. 5 லட்சம் கோடி) எட்டும் என்றும் பிரதமர் அறிவித்தார். 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என்றால், கொரோனா பொது முடக்கத்துக்கு முன்பே கடினமான 9 சதவிகித பொருளாதார வளர்ச்சியைப் பெற்றிருக்க வேண்டும். இன்றைக்கு 11.5 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சி இருந்தால் மட்டுமே 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்குப் பொருளாதாரத்தை எட்டமுடியும். இது நடக்காத காரியம். எனவே, பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு குறித்த வியாக்கியானத்தை ஆளும் பாஜக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்,அல்லது விலகியிருக்க வேண்டும்.

அரசியல் ரீதியாக நீங்கள் எந்த நிலை எடுக்கிறீர்கள் என்பது விஷயமில்லை. வேலை வாய்ப்புகள் இல்லாததால், அடுத்த சில ஆண்டுகள் வலியுடன் தான் நகரும். நிறுவனங்கள் லாபம் பெறவேண்டும், பங்குச் சந்தைகள் தொடர்ந்து உயர வேண்டும். ஆனால் ஊதிய வளர்ச்சியும் உண்மையான நுகர்வும் அப்படியே இருக்க வேண்டும். இத்தகைய சமமற்ற நிலையால், நீண்ட கால நுகருதல் மற்றும் பொருளாதாரம் பாதிக்கும்.

பொருளாதாரத்தின் உண்மை நிலை குறித்து மறுக்க முடியாமல் போகும் ஒரு கட்டத்துக்கு நாம் அனைவரும் செல்கிறோம். நம் அரசியலில் அது மையப் பிரச்சினையாக மாறுவது எப்போது? என்பது தான் விஷயம். அது ஒரு கேள்வி அல்ல, எதிர்பார்ப்பு.

The post மோடி ஆட்சியில் 100 கோடிஸ்வரர்கள் கடந்த ஆண்டில் மட்டும் குவித்த சொத்து மதிப்பு ரூ.13 லட்சம் கோடி! சமமற்ற வருவாய் மற்றும் சொத்து : பானைக்குள் யானையை அடைத்த மத்திய பட்ஜெட் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

ஊட்டச்சத்துக் குறைவால் குழந்தைகள் இறப்பு 50 சதவிகிதம் உயரும் : மோடி அரசின் மோசமான கொள்கையால் கொடுமை
மோடி ஆட்சியில் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகரித்துள்ளது 5 ஆவது தேசிய குடும்பல நல சர்வே மூலம் தெரியவந்துள்ளது.

ஒரு நாட்டின் நிலவும் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் பொறுத்தே நாட்டின் உண்மையான வளர்ச்சியும் அமையும். ஆனால், தங்கள் ஆட்சியில் நாடு வளர்ச்சி பெற்றுள்ளதாக மோடி மார்தட்டி வருகிறார். இது பொய் என்று நிரூபிக்கும் வகையில், இந்த சர்வே அமைந்துள்ளது.

உலகிலேயே ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகம் உள்ளது. பொது முடக்கம் காரணமாக ஐந்தாவது தேசிய குடும்ப நல சர்வே எடுப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து மட்டுமே தரவுகள் கிடைத்துள்ளன.

இந்தியாவில் முழுமையான தரவுகள் கிடைக்காவிட்டாலும், யுனிசெஃப் வெளியிட்டுள்ள தரவு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலையின் போது உலகம் முழுவதும் 6 ஆயிரம் குழந்தைகள் இறக்கக்கூடும் என்றும், இதில் 1,600 இந்திய குழந்தைகள் என்றும் கூறப்பட்டுள்ளது.

அரசின் பரீட்சார்த்த கொள்கை முடிவுகளால் ஏற்பட்டுள்ள குடும்பங்களின் வருவாய் இழப்பால், நிலைமை இன்னும் மோசமாகும். 5 வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் அங்கன்வாடிகளும் மூடப்பட்டுள்ளன. ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை, கொரோனா பாதிப்புக்குப் பிறகு அதிகரித்திருப்பதாக ஐந்தாவது தேசிய குடும்ப நல சர்வேயின் முதல் கட்ட ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, பணக்கார மாநிலங்களான கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, கோவா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்திருப்பதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கும், கடந்த 45 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பொருளாதார முடக்கத்தால் ஏற்பட்டுள்ள வேலை இழப்புக்கும் தொடர்பு உண்டு. 22 மாநிலங்களில் எடுக்கப்பட்ட சர்வேயின்படி, 5 வயகுட்பட்ட குழந்தைகளில் நான்கில் ஒரு பங்கு குழந்தைகள் ஊட்டச் சத்துக்குறைபாட்டுடன் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை சிக்கிமில் 22.3 சதவிகிதமும்,மேகாலயாவில் 46.5 சதவிகிதமும், குஜராத், கர்நாடகா, அசாம், மகாராஷ்டிரா மற்றும் தாத்ரா நாஹர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் 35 சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் வரை ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும் சர்வே முடிவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குழந்தைகளின் எடைக் குறைவுக்கு போதிய உணவு இல்லாததே காரணம். அந்தவகையில், எடை குறைவாக உள்ள குழந்தைகளில் 41 சதவிகிதத்தை எட்டி பீகார் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து 39.7 சதவிகிதத்தை எட்டி, குஜராத் இரண்டாம் இடத்தில் உள்ளது.

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு அரசின் மோசமான கொள்கைகளே காரணம். குழந்தைகளின் ஊட்டச்சத்துக்குறைபாடுகளைப் போக்க பட்ஜெட்டில் எந்த அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை. போதிய நிதி இல்லாததால், ஊட்டச்சத்து திட்டங்களின் செயல்பாடு 19 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி, ஊட்டச்சத்துக் குறைபாட்டால் 5 வயதுக்குக் குறைவான 8 லட்சத்து 83 ஆயிரம் குழந்தைகள் இறந்திருக்கிறார்கள். கொரோனா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைக் கணக்கில் கொண்டு பார்க்கும்போது, ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தை இறப்பு எண்ணிக்கை 50 சதவிகிதம் அதிகரித்து மோசமான சூழல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

The post ஊட்டச்சத்துக் குறைவால் குழந்தைகள் இறப்பு 50 சதவிகிதம் உயரும் : மோடி அரசின் மோசமான கொள்கையால் கொடுமை appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

விவசாயிகளை அழித்து, கார்பரேட்டுகளை ஆதரிக்கவே மோடி அரசின் ஒப்பந்த விவசாயம்!
விவசாய உத்தரவாதம் மற்றும் விவசாயப் பணிகள் சட்டத்தின் விவசாய ஒப்பந்தம், தனியார் நிறுவனங்களுக்குச் சாதமாகவே இருக்கும். குறிப்பிட்ட பயிர்களை மட்டும் விளைவிக்க, விவசாயிகளுடன் தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தம் போடுவார்கள். விலையையும் அவர்களே நிர்ணயிப்பார்கள். ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கே தனியார் நிறுவனங்களுக்கு விளைபொருட்களை விவசாயிகள் விற்க வேண்டும். வேறு யாருக்கும் அதிக விலைக்கு விற்க முடியாது. இது குறைந்தபட்ச ஆதரவு விலை முறைக்கு முற்றிலும் மாறுபட்டதாகும். குறைந்தபட்ச ஆதரவு விலையைவிடத் தனியார் வர்த்தகர்கள் அதிக விலை கொடுத்தால், விளைபொருட்களை அவர்களுக்கு விவசாயிகள் விற்க முடியும். இனி அதுபோல் செய்ய முடியாது.

விவசாயிகளின் வருவாய்க்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை மூலம் செய்யப்படும் கொள்முதல் உத்தரவாதம் அளித்தது. ஒப்பந்த முறையைவிட இது விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருந்தது. பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் போது, ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அவர்களை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தும் அளவுக்கு விவசாயிகளுக்கு வலிமை இல்லை. அதனால் தான் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர வேண்டும் என்றும், கொள்முதல் கொள்கைகளை அரசு நல்ல முறையில் அமல்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

சந்தைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம், வெளிச்சந்தையில் தனியார் நிறுவனங்களை அனுமதித்தால், இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை ஊக்கப்படுத்துவதாக அமையும்.

குறைந்தபட்ச ஆதரவு விலை முறை உடனே முடிவுக்கு வரவில்லை என்றாலும், அரசே கொள்முதல் செய்யாவிட்டால் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் என்பது வெறும் சம்பிரதாயமாகவே இருக்கும். இதுவரை, குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் நிர்ணயிக்கப்படும் விளைபொருட்கள் விலை, வெளிச்சந்தையில் நிர்ணயிக்க வேண்டிய விலையின் சமிக்ஞையாக இருந்தது. இனி, வெளிச்சந்தையில் எவ்வளவு விலை வேண்டுமானாலும் நிர்ணயிக்கும் நிலை ஏற்படும். மேலும், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் தங்கள் விளைபொருட்களைத் தொடர்ந்து குறைந்த விலைக்கே விற்கும் நிலையும் ஏற்படும்.

உதாரணமாக, கடந்த 2012-13 ஆம் ஆண்டு என்எஸ்எஸ்ஓ எனப்படும் தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் மேற்கொண்ட கணக்கெடுப்பில், 2012 ஆம் ஆண்டு கரிப் பருவத்தில் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளிடம் இருந்து 50 சதவீதம் நெல் உள்ளூர் வர்த்தகர்களுக்கு விற்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1,150 என்ற வீதத்தில் உள்ளூர் வர்த்தகர்களுக்குச் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் விற்றுள்ளனர். அதேசமயம், 2 ஹெக்டேர் நிலத்துக்கு அதிகமாக வைத்திருக்கும் பெரிய விவசாயிகள், குவிண்டால் நெல் ரூ. 1,300 -க்கு விற்றுள்ளனர். 2012&13 ஆம் ஆண்டில் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.1,250 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சராசரியாகப் பார்த்தால், குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட குறைவான விலைக்கே நடுத்தர விவசாயிகள் விற்றுள்ளனர். அதேசமயம், பஞ்சாப் நடுத்தர விவசாயிகளோ, கடந்த 2012 ஆம் ஆண்டு, தாங்கள் அறுவடை செய்த நெல்லில் பாதியை மண்டிகளில் விற்றனர். 33 சதவீத நெல்லை உள்ளூர் வர்த்தகர்களிடம் விற்றனர். அதன்படி, பஞ்சாப் விவசாயிகளுக்கு நெல் குவிண்டாலுக்கு ரூ.1,500 கிடைத்தது. இது, அப்போது மாநில அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட 20 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாய உற்பத்தி சந்தைக் குழுவின் விலை சமிக்ஞை இல்லாமல், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் இந்த அளவு பேரம் பேசி விற்கும் நிலையைப் பெற்றிருக்க முடியாது. அதேசமயம், அதே ஆண்டில் உத்தரப்பிரதேச விவசாயிகளின் நிலை மாறுபட்டிருந்தது. உத்தரப்பிரதேச விவசாயிகள் 16 சதவிகிதம் மட்டுமே நெல் உற்பத்தி செய்திருந்தனர். இவற்றை 30 சதவிகிதம் மண்டிகள் மூலமும்,70 சதவிகிதம் உள்ளூர் வர்த்தகர்கள் மூலமும் விற்றனர். ஆனால், நெல் குவிண்டாலுக்கு ரூ.1,010 மட்டுமே கிடைத்தது. உத்தரப்பிரதேசத்தில் குறைந்த நெல் உற்பத்தி, பஞ்சாபைப் போல் விலை பாதுகாப்பை அளிக்கத் தவறிவிட்டது.

எவ்வாறு விலை நிர்ணயம் செய்வது?

பெரும் தொழில் அதிபர்களோடு கைகோர்த்து, பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்க மோடி அரசு தயாராகி வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, இந்த புதிய சட்டங்களைப் பார்த்தால் வியப்பு ஏதும் அளிக்காது. இதுபோன்ற ஜனநாயகத்துக்கு எதிரான சட்டங்களை இயற்ற கொரோனா காலம் அரசுக்கு வாய்ப்பளித்திருக்கிறது. விவசாயம் மாநில அரசின் வரையறைக்குள் வந்தாலும், முட்டுக்கட்டை ஏற்படுமோ என்ற அச்சத்தில் இது போன்ற சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. விவசாயிகளை தெருவில் இறங்கிப் போராட வைத்தது இந்த ஒரு கேள்விதான்:
விவசாயிகளின் பாதுகாப்புக் கருதி இந்த சட்டங்கள் திரும்பப் பெறப்படுமா? என்பதுதான்.

கோதுமை மற்றும் நெல் கொள்முதல் 40 சதவீதம் செய்யப்படும்போது, அனைத்து விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும் என்ற உத்தரவாதம் தரப்படுகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிப்பதன் மூலம், அரசின் கொள்முதலும் தானாகச் சிறந்த முறையில் அமலாகும். விவசாய உற்பத்தி சந்தைக் குழு முறையை ஒழித்துவிட்டு, தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்புக் கொடுத்தால் பெரும்பாலான விவசாயிகளுக்கு இழப்பையே ஏற்படுத்தும். இது இந்தியாவின் முறைப்படுத்தப்பட்ட பயிர் சாகுபடி திட்டத்தைப் பாதிக்கும். மண்டிகளுக்கு வெளியே விளைபொருட்களை விற்க அனுமதிப்பதால் மட்டும் எளிதாகக் கையாண்டுவிட முடியாது.

இந்த சட்டங்கள் பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ள விவசாயிகளைப் பாதிக்கக்கூடிய வகையில் உள்ளன. விவசாயிகளின் நண்பன் என்று சொல்லிக் கொண்டே, மில்லியன் கணக்கான பொய்களைச் சொல்லி ஏழை விவசாயிகளை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

The post விவசாயிகளை அழித்து, கார்பரேட்டுகளை ஆதரிக்கவே மோடி அரசின் ஒப்பந்த விவசாயம்! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் சாதனைகள் இங்கே! அமித்ஷாவே! பிரதமர் மோடியின் சாதனைகள் எங்கே?
சமீபத்தில் தமிழகத்திற்கு வருகை புரிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் நாகரீகமற்ற முறையில் மரபுகளை மீறி அரசியல் பேசியிருக்கிறார். அவர் உரையாற்றும் போது, ‘காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மத்தியில் 10 ஆண்டுகள் இருந்த போது தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்த திட்டங்களைப் பட்டியலிடத் தயாரா ? எங்கள் தரப்பில் பணிவுடன் தெருவில் நின்று கொண்டு பட்டியல் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் அதற்குப் பதில் கொடுக்க தயாரா ?’ என்று சவால் விட்டுப் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அமித்ஷாவின் யோக்கியதையை அறியாதவர்கள் அல்ல.

குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த போது, உள்துறை அமைச்சராக இருந்தவர் அமித்ஷா. இவர்கள் இருவரும் இணைந்து தான் 2002 ஆம் ஆண்டு ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுபான்மையின மக்களைக் கலவரத்தில் பலியாக்கப்பட்டதைத் தடுத்து நிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத கொடுங்கோல் ஆட்சி புரிந்தார்கள். வகுப்புவாத கலவரத்தில் சம்மந்தப்பட்டதாக, உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா மீது வழக்கு தொடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை எவரும் மறந்திட இயலாது. ஏறத்தாழ 6 மாதங்கள் சிறையிலிருந்த போது, மும்பையில் தங்கியிருக்க வேண்டும், குஜராத் மாநிலத்தில் நுழையக் கூடாது என்ற நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தவர்  தான் அமித்ஷா.

ஆனால், உச்ச நீதிமன்றம் நியமித்த ஆர்.கே. ராகவன் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக்குழு உரிய விசாரணை நடத்தாமல் பாரபட்சமான போக்கில் செயல்பட்டதால் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் விசாரணையிலிருந்து தப்பிக்கிற நிலை ஏற்பட்டது. இதற்குப் பிறகு 2014-ல் நரேந்திர மோடி பிரதமராகவும், அமித்ஷா பா.ஜ.க. தலைவராகவும்  ஆன பிறகு அவர்கள் மீதான வழக்குகள் மத்திய புலனாய்வுத்துறையால் விசாரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டன. இந்த வகையில் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்தவர் தான் இன்றைய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதில் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் செயல்பட்ட 10 ஆண்டுக்கால காங்கிரஸ் தலைமையிலான தி.மு.க. உள்ளிட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தமிழகத்தைச் சேர்ந்த 13 அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர். இதில் ஐவர் கேபினட் அமைச்சர்களாக முக்கிய பொறுப்புகளை வகித்தனர். 2004-ல் 39 உறுப்பினர்களை இக்கூட்டணி பெற்றது. இதனால் தமிழகத்திற்கு அதிக நிதியையும், வளர்ச்சித் திட்டங்களையும் தமிழகம் பெறுகிற நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் இன்றைய   நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் உள்ளிட்ட பல மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை நிறைவேற்றிய பெருமை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு உண்டு என்பதை ஆயிரம் அமித்ஷாக்கள் உரத்த குரலில் கூறினாலும் மறைத்திட இயலாது.

எனவே, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்த திட்டங்களைப் பட்டியலிடத் தயாரா ? என்று சவால் விட்ட அமித்ஷாவுக்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தமிழகத்திற்கு வளம் சேர்த்த திட்டங்களைப் பட்டியலிடுகிறோம்.

தமிழகத்திற்கு வளம் சேர்த்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் திட்டங்கள் (2004 – 2014):

தமிழ் – செம்மொழித் திட்டம் நிறைவேற்றப்பட்டு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் 18.8.2007 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின்மூலம், தேசிய அளவில் சிறந்து விளங்கும் தமிழறிஞர் ஒருவருக்கு ஐந்து லட்ச ரூபாய் விருதுத்தொகை கொண்ட தொல்காப்பியர் விருதும், அயல்நாட்டுத் தமிழறிஞர்களில் ஒருவருக்கும், அயல்நாடுகளில் வாழும் இந்தியத் தமிழ் அறிஞர்களில் ஒருவருக்கும் ஆக, தலா ஐந்து லட்ச ரூபாய் விருதுத்தொகை கொண்டுள்ள இரண்டு குறள் பீட விருதுகளும், தலா ஒரு லட்ச ரூபாய் விருதுத்தொகை கொண்டுள்ள இளம் தமிழறிஞர்களுக்கான ஐந்து விருதுகளும் ஆண்டுதோறும் நமது குடியரசுத் தலைவரால் வழங்கப்பட மத்திய அரசு அனுமதித்தது.

சென்னைக்கு அருகில் ஒரகடத்தில் 470 கோடி ரூபாய் முதலீட்டில் மத்திய அரசின் தேசிய மோட்டார் வாகனச் சோதனை மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட வளர்ச்சிக் கட்டமைப்பு மையம் (National Automotive Testing Research and Development Infrastructure Project – NATRIP) 04.11.2006 அன்று அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெற்றன.

தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம் தாம்பரத்தில் நிறுவப்பட்டது.

சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே மண்டலம் அமைக்கப்பட்டுள்ளது. சேலம் உருட்டாலையைச் சர்வதேச அளவுக்கு உயர்த்தி, புதிய குளிர் உருட்டாலை (Cold Rolling Mill) 1,553 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது.

120 கோடி ரூபாய் செலவில் சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவக் கல்லூரியாக மேம்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் உள்ள 4 ஆயிரத்து 676 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலைகளில் 3 ஆயிரத்து 226 கிலோ மீட்டர் நீள சாலைகள் நான்கு வழிச் சாலைகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன. 650 கிலோ மீட்டர் நீள மாநில நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

கத்திபாரா சந்திப்பு, பாடி சந்திப்பு, கோயம்பேடு சந்திப்பு ஆகிய இடங்களில் மொத்தம் 490 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமான மேம்பாலங்கள் கட்டும் பணிகள் 2005 இல் தொடங்கப்பட்டு, கத்திபாரா சந்திப்பு, பாடி சந்திப்புகளில் பணிகள் முடிவடைந்து, மேம்பாலங்கள் திறக்கப்பட்டு, போக்குவரத்துகள் மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் பயன்பட்டு வருகின்றன.

கோயம்பேடு சந்திப்பில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று நிறைவு பெற்றது.

சென்னை விமான நிலையத்தின் எதிரே திரிசூலத்தில் மேம்பாலமும், தாம்பரம் இரும்புலியூர் அருகே வாகன சுரங்கப் பாதையும் அமைக்கப்பட்டுள்ளன.

1655 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை துறைமுகம், மதுரவாயல் இடையே பறக்கும் சாலை அமைத்திட அனுமதிக்கப்பட்டு, 8.1.2009 அன்று பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அடிக்கல் நாட்டி, பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் காழ்ப்புணர்ச்சி அரசியலால் இத்திட்டம் முடக்கப்பட்டன.

தமிழகத்தில் 2004-2009 வரை 34 ஆயிரத்து 102 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டன. ரூபாய் 1605 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டிலான பிற சாலைகள் மேம்பாடு தொடர்பான மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

நூறாண்டு கால கனவை நனவாக்கிடும் 2 ஆயிரத்து 427 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான சேது சமுத்திரத் திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டன. ஆனால், அ.தி.மு.க. அரசும், வகுப்புவாத சக்திகளும் வழக்குத் தொடுத்ததால் அத்திட்டம் முடக்கப்பட்டது. இது தமிழக தென் மாவட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியாகும்.

கப்பல் போக்குவரத்து மற்றும் கடல்வழி வர்த்தகம் பெருகும் வகையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு துறைமுக வசதிகளை மேம்படுத்தும் திட்டங்கள். குறிப்பாக, எண்ணூர் துறைமுக விரிவாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.  சென்னைத் துறைமுகத்தின் இரண்டாவது சரக்குப் பெட்டக முனையம் ஏற்படுத்தும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.

உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் திட்டம் உட்பட 20 ஆயிரத்து 956 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பல திட்டங்கள் எனக் கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மூலம் மொத்தம் 56 ஆயிரத்து 664 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு திட்டங்கள் 2004 முதல் 2009 வரை தமிழகத்திற்கு அனுமதிக்கப்பட்டுப் புதிய வரலாறு படைக்கப்பட்டது.

நெசவாளர் சமுதாய மக்கள் பெரும்பயன் எய்திடும் வகையில் சென்வாட் வரி நீக்கப்பட்டது.

மதம் மற்றும் சிறுபான்மைப்பிரிவினரின் பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாகப் பின்தங்கியோர் நலன் காக்கும் தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது.

சென்னை மாநகர குடிநீர்ப் பிரச்சினை தீர 908 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெம்மேலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டது.

செல்போன் கட்டணங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டது. 50 காசு செலவில் இந்தியா முழுவதும் தொலைப்பேசியில் பேசும் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதனால் செல்பேசி இணைப்புகள் பலமடங்காகக் கூடியது.

தஞ்சாவூர் – திருவாரூர், மதுரை – இராமேஸ்வரம் உட்பட தமிழகத்திலுள்ள மீட்டர்கேஜ் ரயில் பாதைகள் அனைத்தும் அகல ரயில் பாதைகளாக மாற்றிட அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்கள் பயன்பெறும் வகையில், சென்னை – புதுடெல்லி ‘ஏழைகளின் ரதம்’ முழு ஏ.சி. வசதியுடன், வாரம் ஒருமுறை செல்லும் அதிவேக விரைவு ரயில், சென்னை- கோவை விரைவு ரயில் வாரம் ஒருமுறை செல்வது, மதுரை- திருப்பதி விரைவு ரயில் வாரம் ஒருமுறை செல்வது, சென்னை – மங்களூர் விரைவு ரயில் வாரம் மூன்றுமுறை செல்வது, சென்னை – திருவனந்தபுரம் அதிவேக விரைவு ரயில் தினமும் செல்வது, சென்னை- திருவனந்தபுரம் விரைவு ரயில் வாரம் ஒருமுறை செல்வது, சென்னை எழும்பூர் – நாகர்கோவில் விரைவு ரயில் வாரம் ஒருமுறை செல்வது, புதுச்சேரி – புவனேஸ்வர் விரைவு ரயில் வாரம் ஒருமுறை செல்வது, சென்னை – பிளாஸ்பூர் விரைவு ரயில் வாரம் ஒருமுறை செல்வது, பெங்களூரு – டார்பங்கா விரைவு ரயில் வாரம் ஒருமுறை செல்வது, சென்னை – இராமேசுவரம் அகல ரயில் பாதையில் தினமும் செல்லும் புதிய ரயில் எனப் பல்வேறு புதிய ரயில்கள் இயக்கப்பட்டன.

சென்னை – விஜயவாடா- ஐதராபாத் மார்க்கத்திலும், சென்னை – பெங்களூரூ – எர்ணாகுளம் மார்க்கத்திலும், மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக புல்லட் ரயில்கள் விடப்படும் என  மத்திய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. பயண தூரம் நீட்டிக்கப்பட்ட ரயில்கள் சென்னை – வாரணாசி விரைவு ரயில் வாரம் நான்கு நாள்கள் செல்வது, இரண்டு நாள்கள் சாப்ரா வரையிலும், ஜெய்ப்பூர் – சென்னை விரைவு ரயில் கோவை வரையிலும், திருச்சி – கும்பகோணம் பயணிகள் ரயில் மயிலாடுதுறை வரையிலும், மைசூர்- கும்பகோணம் விரைவு ரயில் மயிலாடுதுறை வரையிலும், திருச்சி – தஞ்சாவூர் பயணிகள் ரயில் மயிலாடுதுறை வரையிலும், மதுரை – மானாமதுரை பயணிகள் ரயில் ராமேஸ்வரம் வரையிலும், இவ்வாறாக, இதுவரை இல்லா அளவுக்கு ரயில் போக்குவரத்து வசதிகள் தமிழகத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசினால் பெருகி மக்களுக்குப் பயன்பட்டன.

1,828 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 90 ரயில்வே மேம்பாலங்களைக் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதித்து, 19 கோடி ரூபாய் செலவில் மதுரை எல்லீஸ் நகர் மேம்பாலம், 9 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே மேம்பாலம், 16 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் ஈரோடு அருகே ஊத்துக்குளி மற்றும் திம்மநாயக்கன்பாளையம் அருகே இரண்டு மேம்பாலங்கள், 18 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி மற்றும் ஓமலூர் அருகே இரண்டு மேம்பாலங்கள், 29 கோடி ரூபாய் செலவில் வேலூர் மாவட்டம் குடியாத்தம், திருப்பத்தூர் மற்றும் அரக்கோணம் அருகே மூன்று மேம்பாலங்கள், 40 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் சென்னை கத்திவாக்கம் மற்றும் மடுவங்கரை அருகே இரண்டு மேம்பாலங்கள்; 32 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் மற்றும் வாளாங்குளம் அருகே இரண்டு மேம்பாலங்கள், 7 கோடி ரூபாய் செலவில் மதுரை மாவட்டம் கோவில்பட்டி அருகே மேம்பாலம், 11 கோடி ரூபாய் செலவில் திருச்சி பாலக்கரை மேம்பாலம், 12 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கரூர் நகரில் மேம்பாலம்; 9 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் மதுரை கூடல் நகர் அருகே மேம்பாலம், 17 கோடி ரூபாய் செலவில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மேம்பாலம் என 223 கோடி ரூபாய் செலவில் 18 ரயில்வே மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டன.

ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கி நிதியுதவியுடன், 16 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகிய 1,330 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகியவை அனுமதிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன.

57 கோடி ரூபாய் செலவில் 6 ஹெக்டேர் நிலப்பரப்பில் தூத்துக்குடி துறைமுகத்தில் 9வது தளம் அமைக்கப்பட்டு, 14.7.2008 அன்று திறந்து வைக்கப்பட்டது.

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவிகித இட ஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

கோவையில் உலகத் தரத்திலான மத்திய பல்கலைக் கழகம் (World Class University),  திருச்சியில் மேலாண்மைக்கான இந்தியக் கல்வி நிறு வனம் ((Indian Institute of Management),  திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் ஆகிய மூன்று மத்திய கல்வி நிறுவனங்களைத் தமிழகத்தில் அமைத்திட அனுமதிகளை வழங்கப்பட்டு, சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

245 கோடி ரூபாய் முதலீட்டில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் இந்திய கடல்சார் பல்கலைக் கழகம் சென்னையில் 31.12.2008 தொடங்கிவைக்கப்பட்டன.

ஆசியாவிலேயே முதலாவதாகச் சென்னைக்கு அருகில் பலவகை உடல் ஊனமுற்றோர்க்கான தேசிய நிறுவனம் நிறுவப்பட்டது.

சென்னை வண்டலூருக்கு அருகில் மத்திய அதிரடிப்படை மையம் (என்.எஸ்.ஜி.) தொடங்கப்பட்டது.

இந்தியா முழுவதும் விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பெற்றிருந்த ரூ. 72,000 கோடி மதிப்பிலான கடனும் வட்டியும் மத்திய அரசால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் 4 கோடி விவசாயிகள் பயன் பெற்றனர்.

இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வழியாக 24 லட்சம் மாணவர்களுக்கு ரூபாய் 57 ஆயிரம் கோடி ரூபாய் கல்விக் கடன் வழங்கப்பட்டு ஏழை,எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் மருத்துவ, பொறியியல்  படிப்பதற்கு அரிய வாய்ப்பு ஏற்பட்டது. இதன்மூலம் கல்வியில் புரட்சி நடந்தது.

ஸ்ரீபெரும்புதூரில் 4,821 ஏக்கர் நிலப்பரப்பில் இந்திய வானூர்தி ஆணையத்தின் மூலம் புதிதாக மற்றுமொரு பன்னாட்டு விமான நிலையம் ‘கிரீன்பீல்டு விமான நிலையம்’ எனும் பெயரில் அமைத்திட மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்து அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் கடந்த 6 ஆண்டுகளாக மத்திய பா.ஜ.க. அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

திருச்சி விமான நிலையம் அதிநவீன விமான நிலையமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தினை விரிவாக்கி, நவீனமயமாக்கிடும் நோக்கில் 128 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த முனையக் கட்டடம் கட்டுவதற்கும், கூடுதல் விமான நிறுத்துத் தளம் அமைப்பதற்கும் 26.04.2008 அன்று அடிக்கல் நாட்டப்பட்டுப் பணிகள் நடைபெற்றன.

கோவை விமான நிலைய விரிவாக்கம், தூத்துக்குடியில் விமான நிலையம் புதிதாக அமைத்திடவும் மத்திய அரசின் உதவியுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

பொருளாதார வளர்ச்சியும், மேம்பாடும், சமூக நல்லிணக்கமும், சமூக நீதியும் நாணயத்தின் இருபக்கங்களாகக் கருதும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே! அனைத்து மக்களின் குறிப்பாக தலித்துகள், ஆதிவாசிகள், சிறுபான்மையினர், பெண்கள் போன்ற நலிவடைந்த பிரிவினரின் அனைத்துப் பிரச்சினைகளுக்காகவும் நாம் தான் குரல் கொடுக்கிறோம். நாம் தான் போராடுகிறோம்.

– அன்னை சோனியா காந்தி

The post மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் சாதனைகள் இங்கே! அமித்ஷாவே! பிரதமர் மோடியின் சாதனைகள் எங்கே? appeared first on தேசிய முரசு - Desiya Murasu.