KS Alagiri Archives - தேசிய முரசு - Desiya Murasu

டிசம்பர் 28: இந்திய தேசிய காங்கிரசின் 136 ஆவது ஆண்டு நிறுவனநாள் விழா ! தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கொடி ஊர்வலம் ! காந்தியடிகள் சிலை முன் உறுதிமொழி ஏற்பு: தலைவர் கே.எஸ். அழகிரி அறிவிப்பு
இந்திய தேசிய காங்கிரஸின் 136 வது ஆண்டு நிறுவன நாள் விழா நாடு முழுவதும் வருகிற டிசம்பர் 28 அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. 200 ஆண்டுக் கால ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அண்ணல் காந்தியடிகள் தலைமையில் அகிம்சை வழியில் போராடி, விடுதலை பெற்றுத் தந்த பெருமை இந்திய தேசிய காங்கிரசுக்கு உண்டு. அதேபோல, இந்திய விடுதலைக்குப் பிறகு பண்டித நேரு தலைமையில் நவஇந்தியாவை உருவாக்கிய பெருமையும் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு உண்டு. சுதந்திரம் பெற்று கடந்த 74 ஆண்டுகளில், 54 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்து வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற வரலாற்றுப் பெருமை காங்கிரஸ் இயக்கத்திற்கு மட்டுமே உண்டு. இன்றைக்கு இந்தியாவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியில் பெரும் பங்கு காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே ஏற்பட்டது.

இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவன நாள் விழா நடைபெறுகிற டிசம்பர் 28 ஆம் தேதியன்று, மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சிறப்பான முறையில் நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று காலை மாவட்டத்தில் காந்தியடிகள் சிலை இருக்கும் முக்கிய பகுதிகளின் அருகில் உள்ள இடத்தில் புதிய கம்பத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்து, அதனைத் தொடர்ந்து 136 வது நிறுவன நாளை நினைவுகூறும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் 136 காங்கிரஸ் கொடிகளை கைகளில் ஏந்தி, தலையில் காந்தி குல்லா அணிந்து  ஊர்வலமாக நடந்து சென்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும். அங்கே புதிய வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வரும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராகச் செயல்படவும், தமிழகத்தில் நடைபெற்று வரும் அராஜக ஊழல் ஆட்சியை அகற்றி நல்லாட்சி அமைந்திடவும் காங்கிரஸ் கட்சியினர் உரத்த குரலில் உறுதிமொழி ஏற்க வேண்டும்.

அதே நாளில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் காலை 9.30 மணி அளவில் 150 அடி உயரக் கம்பத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றி சிறப்புரை நிகழ்த்த இருக்கிறேன். சேவா தள அணிவகுப்பும் அங்கே நடைபெறும். அதனைத் தொடர்ந்து உறுதிமொழி எடுக்கப்படும். இந்திய விடுதலையிலும், வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றிய பெருமை மிக்க இந்திய தேசிய காங்கிரஸின் 136 வது ஆண்டு நிறுவன நாள் என்பது, இந்திய மக்களோடு இரண்டறக் கலந்து விட்ட ஒன்றாகும். அந்நாளில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கொடி ஊர்வலத்தைச் சிறப்பாக நடத்திடுமாறு அனைத்து காங்கிரஸ் நண்பர்களையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

The post டிசம்பர் 28: இந்திய தேசிய காங்கிரசின் 136 ஆவது ஆண்டு நிறுவனநாள் விழா ! தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கொடி ஊர்வலம் ! காந்தியடிகள் சிலை முன் உறுதிமொழி ஏற்பு: தலைவர் கே.எஸ். அழகிரி அறிவிப்பு appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. நீதி வழங்கவில்லை. மேல்முறையீடு செய்ய வேண்டும்! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை!
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு 28 ஆண்டுகள் கழித்து லக்னோ சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனைத்து குற்றவாளிகளையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்திருக்கிறது. போதிய ஆதாரங்களோ, சதித் திட்டத்திற்கான தடயங்களோ இல்லாததால் அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி கூறியிருக்கிறார். இந்த தீர்ப்பு சட்டத்தின் ஆட்சி மீது நம்பிக்கை வைத்திருக்கிற அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.

பா.ஜ.க. உள்ளிட்ட சங் பரிவாரங்கள் கரசேவை செய்வதாக அறிவித்து, ஆயிரக்கணக்கானவர்களை திரட்டி, 464 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாபர் மசூதியை 1992 இல்   பலவந்தமாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. கரசேவகர்களை தூண்டும் வகையில் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, உத்தரபிரதேச அன்றைய முதல்வர் கல்யாண் சிங் உள்ளிட்டோர் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்களை மத்திய புலனாய்வுத்துறை திரட்டவில்லை. சதித் திட்டத்திற்கான சாட்சியங்களையும் சேகரிக்கவில்லை. இந்த வழக்கை நிரூபித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில்  மத்திய புலனாய்வுத்துறை முற்றிலும் தோல்வியடைந்திருக்கிறது. இதன்மூலம் மத்திய புலனாய்வுத்துறை  மத்திய பா.ஜ.க. அரசின் கைப்பாவையாக செயல்பட்டதோ என்கிற பலத்த சந்தேகம் எழுகிறது. இதன் காரணமாகவே பாபர் மசூதி இடிப்பில் சம்மந்தப்பட்ட பா.ஜ.க.வினர் அனைவரும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த ஏப்ரல் 2017 இல் பாபர் மசூதி இடிப்பு குறித்து உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட போது, ‘இது ஒரு கிரிமினல் நடவடிக்கை. இது அதிர்ச்சி தரத்தக்க வகையில் அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பற்ற கொள்கைக்கு கேடு விளைவிக்கிற செயல். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருப்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்த கூற்றுக்கு நேர்மாறாக லக்னோ சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளை விடுவித்திருக்கிறது.

சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனால், நீதி வழங்கவில்லை. எனவே, இந்த தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

The post சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. நீதி வழங்கவில்லை. மேல்முறையீடு செய்ய வேண்டும்! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைந்திட காங்கிரஸ் துணைநிற்கும்! தினேஷ் குண்டுராவ் அறிக்கை!
கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தினேஷ் குண்டுராவ் குறிப்பிட்ட சில வார்த்தைகளை தவறாக புரிந்து திரித்து வெளியிடப்பட்ட செய்தியின் காரணமாக அதற்கு விளக்கம் தர வேண்டிய நிலை ஏற்பட்டது. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி குறித்து குழப்பமான செய்திகளை வெளியிட்டு, விரிசலை ஏற்படுத்த வேண்டுமென்று சில ஊடகங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. அத்தகைய குழப்பவாதிகளின் முயற்சிகளை முறியடிக்கிற வகையில் தினேஷ் குண்டுராவ் வெளியிட்ட அறிக்கை அமைந்து விட்டது. இதன்மூலம் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 2021 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய அரசியல் பாதையை தினேஷ் குண்டுராவ் அவர்களது அறிக்கை கோடிட்டு காட்டி விட்டது. இதன்மூலம் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி எஃகு கோட்டையாக இருப்பது உணர்த்தப்பட்டது.

அகில இந்திய காங்கிரஸ் தமிழ்நாடு பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் விடுத்த அறிக்கை:

2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று ஆட்சியமைக்க தமிழக காங்கிரஸ் கட்சி பாடுபடும்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட எங்கள் தலைவர் திரு. ராகுல்காந்தி, தமிழ்நாடு முதலமைச்சராக திரு. மு.க.ஸ்டாலின் வரவேண்டும் என்ற தமது விருப்பத்தை தெரிவித்திருந்தார்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பே, திரு. ராகுல் காந்தியை அடுத்த பிரதமர் என முதன்முதலாக திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்ததை, நாங்கள் நன்றியுணர்வுடன் நினைவில் கொண்டுள்ளோம்.

இத்தகைய அறிவிப்பால் கவரப்பட்ட தமிழக மக்கள், மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளில், 39 தொகுதிகளில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியை அமோக வெற்றி பெறச் செய்தனர்.

அதேபோன்று, திரு.மு.க.ஸ்டாலின் அடுத்த   முதலமைச்சராக வேண்டும் என்ற திரு. ராகுல்காந்தியின் கனவை நிஜமாக்கும் வகையில், வரும் தேர்தலை தி.மு.க.வுடன் காங்கிரஸ் இணைந்து  சந்திக்கும்.

2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நிலை இதுதான் என்பதை நான் வலியுறுத்திக் கூறுகின்றேன். வியாழக்கிழமை காலை சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், நான் தெரிவித்த கருத்துகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால், இந்த விளக்கத்தை அளிக்கின்றேன். தயவு செய்து இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டுகின்றேன்.

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர், திமுக கூட்டணியை வெற்றியடையச் செய்து மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவோம் என்று கூறினார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய மேலிட பொறுப்பாளராக தினேஷ் குண்டு ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை வந்த அவருக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, வேளாண் மசோதாக்களுக்கு எதிராக போராட்டத்தை நடத்துவது குறித்தும், சட்டமன்ற தேர்தல் மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், பிரிவு தலைவர்கள், மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் தினேஷ் குண்டு ராவ் சந்தித்து பேசினார். அப்போது, மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 28ஆம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த போராட்டம் குறித்தும், வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன், தினேஷ் குண்டு ராவ் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது. அப்போது திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, ஊடக பிரிவு தலைவர் ஆ. கோபண்ணா ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த சந்திப்புக்கு பின்பு தினேஷ் குண்டு ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. திமுகவும், காங்கிரசும் இணைந்து சிறப்பாக செயல்படுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற காங்கிரஸ் கடுமையாக பாடுபடும். கட்சியை பலப்படுத்துவதுடன், கூட்டணியையும் பலப்படுத்துவோம்.  திமுக கூட்டணியை வெற்றியடையச் செய்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவோம். வரும் 28ம்தேதி திமுக கூட்டணி நடத்த உள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் குறித்து மு.க.ஸ்டாலினுடன் விவாதித்தோம். மற்ற விஷயங்கள் குறித்து தேர்தல் நெருங்கும் நிலையில் பேசுவோம்.

The post தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைந்திட காங்கிரஸ் துணைநிற்கும்! தினேஷ் குண்டுராவ் அறிக்கை! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.