karnataka Archives - தேசிய முரசு - Desiya Murasu

நான் மாட்டுக் கறி சாப்பிடுவதைத் தடுக்க நீங்கள் யார்? : கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கேள்வி
நான் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார்? என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

பசுவதை தடைச் சட்டத்துக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸின் 136 ஆவது தொடக்க விழாவில் சீதாராமையா பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது;

மாட்டுக்கறி சாப்பிடுவது எனக்குப் பிடிக்கும். எந்த உணவைச் சாப்பிடுவது என்பதைத் தேர்வு செய்வது என் உரிமை. மாட்டுக்கறி சாப்பிடுவேன் என்று ஏற்கனவே ஒரு முறை சட்டப்பேரவையில் தெரிவித்தேன். மாட்டுக்கறியைச் சாப்பிடக் கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார்? நீங்கள் சாப்பிடவில்லை என்றால் விட்டுவிடுங்கள். மாட்டுக் கறியைச் சாப்பிடுங்கள் என்று நான் உங்களை வலுக்கட்டாயப்படுத்தப் போவதில்லை.

பசு வதைத் தடுப்புச் சட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியினரே மாறுபட்ட நிலை எடுக்கின்றனர். தங்களுக்கு ஏதும் பின்னடைவு ஏற்பட்டுவிடுமோ என்று அவர்கள் அஞ்சுகின்றனர். முதலில் குழப்பத்திலிருந்து நீங்கள் வெளியே வரவேண்டும்.

புதிய சட்டம் தனிப்பட்ட உணவுத் தேர்வை மட்டும் பாதிக்கவில்லை. விவசாயிகளையும் பாதிக்கிறது. வயதான மாடுகளை விவசாயி எங்கே அனுப்புவார்? தினமும் ரூ.100 செலவழித்து அவர்களால் வயதான மாடுகளைப் பராமரிக்க முடியுமா? விவசாயிகளுக்கு இந்த தொகை அதிகம் இல்லையா? இந்த பணத்தை விவசாயிகளுக்கு யார் தருவது. பசுக்களை விவசாயிகளும்தான் தெய்வமாக நினைத்து வணங்குகிறார்கள். அதற்காகப் பயன்தராத மாடுகளை இறைச்சிக்கு அனுப்பாமல், தாங்களே வைத்துக் கொண்டு இழப்பைச் சந்திக்கவேண்டுமா? என்றார்.

The post நான் மாட்டுக் கறி சாப்பிடுவதைத் தடுக்க நீங்கள் யார்? : கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கேள்வி appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

விவசாயிகளை தொடரும் துன்பம் : வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கர்நாடகாவின் பசுவதை தடுப்புச் சட்டம்
2020 ஆம் ஆண்டு பசுவதைத் தடைச் சட்டம் மற்றும் கால்நடை பாதுகாப்பு மசோதா, கடந்த 9 ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்து தேசிய அரசியலின் ஒரு பகுதியாக, பசு பாதுகாப்பு என்ற போர்வையில் இத்தகைய சட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

எனினும், அதே பாஜக ஆளும் மற்ற மாநிலங்களில் கொண்டு வரப்பட்டுள்ள இதேபோன்ற சட்டத்தை விட, கர்நாடகாவில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் மிகவும் மோசமானதாகும். பசு, காளை, எருமை மற்றும் கன்றுகள் கொல்லப்படுவதை மட்டும் கர்நாடகாவின் சட்டம் தடை செய்யவில்லை. மாடுகளைக் கடத்துவது மற்றும் வாகனங்களில் ஏற்றிச் செல்வதும் குற்றம் என்று சட்டம் சொல்கிறது.

இந்த சட்டத்தின்படி, மாடுகளைக் கொன்றால் 3 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். உள்நோக்கமின்றி ஒருவரைக் கொலை செய்யும் நபருக்குக்கூட இந்திய சட்டத்தில் இவ்வளவு பெரிய தண்டனை கிடையாது. சந்தேகத்தின் அடிப்படையில், சோதனை நடத்தவும் காவல்துறைக்கு இந்த சட்டம் அதிகாரம் அளிக்கிறது.

இந்த சட்டம் கர்நாடக சட்டமேலவையில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இருந்தாலும், அவசரச் சட்டத்தைப் பிறப்பித்து இந்த சட்டத்தின் பிரிவுகளை அமலுக்குக் கொண்டு வருவோம் என்று கர்நாடகா பாஜக அரசு சொல்கிறது.

முஸ்லீம்களும் விவசாயிகளும்:

பசுக்கள் தொடர்பான இந்துத்துவா கொள்கையின் அடிப்படையிலான இந்தச் சட்டத்தின் மூலம், இந்தியர்களின் உணவு முறை குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் குறைந்த விலையில் கிடைக்கும் புரோட்டீன் நிறைந்த உணவாக மாட்டுக்கறி உள்ளது. ஏற்கனவே இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகளவில் உள்ளது. மேலும், இறைச்சி மற்றும் தோல் தொழிற்சாலைகளில் அதிக அளவில் பணியாற்றும் முஸ்லீம்களைத் தண்டிப்பதே இந்த சட்டத்தின் நோக்கமாக உள்ளது.

இந்தச் சட்டத்தால் பால் உற்பத்தித் துறையும் பெரிதும் பாதிக்கப்படும். இந்தியாவின் பால் உற்பத்தித் துறையின் வருடாந்திர விற்பனை ரூ.6.5 லட்சம் கோடிகளாகும். இது, இந்திய விவசாயத் துறையின் அதிகபட்ச உற்பத்தியாகும். கோதுமை மற்றும் நெல் உற்பத்தியைவிட, பால் உற்பத்தியில் இந்திய விவசாயிகள் அதிகம் வருவாய் ஈட்டுகின்றனர்.

பால் உற்பத்தி பொருளாதாரம்:

பால் உற்பத்தித் துறையின் பொருளாதார நடவடிக்கையைப் பாதிப்பதாக இந்த சட்டம் இருப்பதுதான் பிரச்சினை. இந்தியாவில் உள்ள பால் பண்ணைகள் சிறிய அளவிலான லாபத்திலேயே இயங்குகின்றன. இந்நிலையில், பால் கறக்காத மாடுகளைப் பராமரித்தால் செலவு இன்னும் அதிகமாகும். காளைக் கன்று பிறந்தாலோ அல்லது பால் தருவதை நிறுத்துவதைப் பசு நிறுத்தினாலோ, அவற்றை அகற்ற வேண்டிய அவசியம் விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. சாதாரண நாட்களிலேயே, பயன்தராத மாடுகளை விற்றால் அது விவசாயிகளின் மூலதனமாக மாறும். கடந்த 2014 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் பசுவதைச் சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன் வரை, ஆண்டுதோறும் ரூ.1,180 கோடி அளவுக்குப் பயன்படாத மாடுகள் விற்பனையாயின.

இந்தியாவின் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டவரும் அமுல் நிறுவனருமான வர்கீஸ் குரியன் தமது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில், ”ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கொடுக்கும் நிர்ப்பந்தம் காரணமாகவே பசுவதைத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள். பயன்படாத மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதையே, பால் பொருளாதாரம் விரும்புகிறது. உடல்நலமற்ற மாடுகளை அகற்றிவிட்டு, நலத்துடனும், பால் கறக்கும் திறனுடனும் இருக்கும் மாடுகளைப் பயன்படுத்துவதே பால் பண்ணைத் தொழிலில் முக்கிய அம்சமாகும்.

இறைச்சிக்காகப் பசுவைக் கொல்வதற்கு இந்தியா முழுவதும் தடை விதிக்கச் சொல்கிறார் பூரி சங்கராச்சாரியார். பால் தராத, பயன்படாத பசுக்களைப் புனிதமாகக் கருதி, இவை இறக்கும் வரை உணவளிப்பீர்களா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

குரியனின் கேள்விக்கு இதுவரை சங்கராச்சாரியாரிடமிருந்து பதில் இல்லை.

பாஜக மாநில அரசுகளின் பசுவதைச் சட்டம், பால் பண்ணைத் தொழிலை ஏற்கனவே பெரிதும் பாதித்துள்ளது. மாடுகள் கொல்லப்படுவதை இந்த சட்டம் உண்மையிலேயே முடிவுக்குக் கொண்டு வருமா? என்பது குறித்துக் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வுகளின் புள்ளிவிவரங்களே அம்பலப்படுத்துகின்றன.

பசுவதைச் சட்டம் கொண்டு வரப்பட்ட மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில், 2012 முதல் 2019 வரை மாடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, மகாராஷ்டிராவில் 10.07 சதவிகிதமும், மத்தியப் பிரதேசத்தில் 4.42 சதவிகிதமும், உத்தரப்பிரதேசத்தில் 3.93 சதவீதமும் மாடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பசுவதைச் சட்டம் இல்லாத மேற்கு வங்கத்தில் மாடுகளின் எண்ணிக்கை 15.18 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே மாடுகள் அதிகம் உள்ள மாநிலமாக மேற்கு வங்காளம் திகழ்கிறது.

பயன்தராத மாடுகளை அப்படியே விட்டால், மற்றொரு பிரச்சினையும் உள்ளது. சுற்றித்திரியும் அந்த மாடுகள் பயிர்களை மேய்ந்து விவசாயிகளுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தும். உத்தரப்பிரதேசத்தில் இந்த பிரச்சினை பூதாகரமாக வெடித்ததை மறந்துவிடமுடியாது. இது தவிர, பயன்தராத மாடுகளால் விபத்துகளும் நிகழ்கின்றன. ஹரியானாவில் மட்டும், சுற்றித்திரியும் மாடுகளால் ஏற்பட்ட விபத்தில் 241 இரு சக்கர வாகன ஓட்டிகள் உயிரிழந்துள்ளனர்.

எருமை மாடுகளின் தேசம்:

பசுவதைத் தடுப்புச் சட்டத்துக்கும், பயன்தராத மாடுகளின் எண்ணிக்கைக்கும் இயற்கையாகவே தொடர்புள்ளது. பயன்தராத மாடுகளின் எண்ணிக்கை உத்தரப்பிரதேசத்தில் 17.34 சதவிகிதமும், மத்தியப் பிரதேசத்தில் 95 சதவிகிதமும், குஜராத்தில் 17.59 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. ஆனால், பசுவதைத் தடுப்புச் சட்டம் இல்லாத மேற்கு வங்கத்தில், பயன்தராத மாடுகளின் எண்ணிக்கை 73.59 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

பசுவதைச் சட்டம் கொண்டு வந்துள்ள மாநிலங்களில் பசுக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மாறாக, எருமை மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2012-2019 வரை, மகாராஷ்டிராவில் 0.71 சதவிகிதமும், மத்தியப் பிரதேசத்தில் 25.88 சதவிகிதமும் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் 7.81 சதவிகிதமும் எருமை மாடுகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

எருமை மாடுகளைக் கொல்லுவதற்கு இந்துத்துவா அனுமதிக்கிறதா? என்ற கேள்வியும் தானாகவே எழுகிறது.

கர்நாடக சட்டத்தின் ஆபத்து என்னவென்றால், எருமைகளையும் கொல்ல அனுமதி மறுக்கிறது. உத்தரப்பிரதேச விவசாயிகளுக்காவது மாற்றாக எருமைகள் உள்ளன. ஆனால், கர்நாடக விவசாயிகளுக்கு அந்த வாய்ப்பும் இல்லை.

மோசமாகும் நிலைமை:

பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில், மோடி அரசு பல கொள்கை முடிவுகளை எடுத்திருக்கிறது. அதன் தொடர்ச்சி தான் கர்நாடகா பாஜக அரசின் பசுவதைத் தடுப்புச் சட்டம்.

விவசாயத்தை நவீனப்படுத்தாததாலும்,நீர்ப்பாசனம் இல்லாததாலும், விஞ்ஞானப்பூர்வமற்ற விவசாயத்தாலும் கிராமப்புற பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய விவசாயியின் சராசரி மாத வருமானம் ரூ.6,427 ஆக உள்ளது. சிறு விவசாயிகளுக்கு, விவசாயத்துக்குச் செய்யும் செலவைவிட, வருவாய் குறைவாகக் கிடைக்கிறது.

83 சதவிகித இந்திய விவசாயிகளின் நிலை மோசமாக உள்ளது. தங்கள் உரிமையை மீட்க டெல்லியில் விவசாயிகள் போராடிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முயலாமல், பால் உற்பத்தித்துறையையே பாதிப்படையச் செய்யும் பசுவதைச் சட்டத்தைக் கர்நாடகா அரசு கொண்டு வந்திருப்பது எந்த வகையில் நியாயம்?

The post விவசாயிகளை தொடரும் துன்பம் : வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கர்நாடகாவின் பசுவதை தடுப்புச் சட்டம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

கொரோனாவிலும் ரூ. 2 ஆயிரம் கோடி ஊழல்: பா.ஜ.க. அரசு மீது கர்நாடக காங்கிரஸ் குற்றச்சாட்டு
மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் கர்நாடக பாஜக அரசு 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது.

கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே. சிவகுமாருடன் இணைந்து பங்கேற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா இந்த மெகா மோசடியை அம்பலப்படுத்தினார்.

அவர் பேசும்போது, தரமற்ற மருத்துவ உபகரணங்களை அதிக விலை கொடுத்து கர்நாடக அரசு வாங்கியுள்ளது. அதுவும் கொள்முதல் செய்வதற்கு முன்பே பணத்தை கொடுத்துள்ளனர். கொரோனாவை எதிர்கொள்வதில் கர்நாடக அரசுடன் இணைந்து நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இத்தகைய ஊழலுக்கு நாங்கள் ஒருபோதும் ஒத்துழைக்கமாட்டோம் என்றார்.
இதே காலக்கட்டத்தில் தமிழ்நாடு அரசும், கேரள அரசும் குறைந்த விலையில் மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்ததையும், சித்தராமையாவும், சிவகுமாரும் செய்தியாளர்களுக்கு சுட்டிக் காட்டினர்.

தொடர்ந்து பேசிய அவர்கள், தெர்மல் ஸ்கேனர் கருவி ரூ. 1500 முதல் 2 ஆயிரம் வரை சந்தையில் கிடைக்கிறது. ஆனால் கர்நாடக அரசு ஒரு தெர்மல் ஸ்கேனர் வாங்க ரூ. 5,945 செலவு செய்துள்ளது. 500 மி.லி. சானிடைசர் ரூ. 80 முதல் ரூ.100 வரை கிடைக்கிறது. ஆனால், ரூ. 250 முதல் ரூ.600 வரை கொடுத்து வாங்கியுள்ளனர்.
இவ்வாறு தரமற்ற மருத்துவ உபகரணங்களை அதிக விலை கொடுத்து வாங்கியதில், ரூ. 2 ஆயிரம் கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேட்டை உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரிக்க வேண்டும். மேலும், இது குறித்து விவாதிக்க சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

மத்திய அரசு 50 ஆயிரம் வெண்டிலேட்டர்களை ரூபாய் 4 லட்சம் வீதம் வாங்கியது. ஆனால், கர்நாடக பா.ஜ.க. அரசு மார்ச் 22 ஆம் தேதி வாங்கிய முதல்கட்ட வெண்டிலேட்டர்கள் ரூபாய் 5.6 லட்சத்திற்கும், இரண்டாவது கட்டமாக ரூபாய் 12.3 லட்சத்திற்கும், இறுதியாக ரூபாய் 18.2 லட்சத்திற்கும் அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கிறது. பாதுகாப்பு கவசங்கள் சந்தையில் ரூபாய் 330 விலையில் விற்கப்படுவதை கர்நாடக அரசு ரூபாய் 2,117க்கு வாங்கியிருக்கிறது. இந்த உபகரணங்கள் தரம் குறைந்ததாக இருப்பதாக பல குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டன.
அதேபோல, கொரோனா நோய் தடுப்பு உபகரணங்கள் வாங்கியதில் குஜராத் மாநில பா.ஜ.க. அரசும் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டிருக்கிறது. தரம் குறைந்த உபகரணங்களை வழங்கிய நிறுவனம் பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பருக்கு சொந்தமானதாகும். குஜராத் அரசு வாங்கிய 5 ஆயிரம் வெண்டிலேட்டர்கள் தரம் குறைந்தவை என புகார்கள் எழுந்துள்ளன. இதை வழங்கிய நிறுவனம் ராஜ்கோட்டில் அமைந்துள்ள ஜோதி சி.என்.சி. ஆட்டோமேஷன் லிமிடெட். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ரமேஷ்குமார் பிகாபாய் விரானி. இவர் தான் நரேந்திர மோடி அணிந்திருந்த சூட்டில் தங்கத்தினால் பெயர் பொறித்து வழங்கியிருந்தார். அந்த உடையோடு தான் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை ஜனவரி 2015 இல் பிரதமர் மோடி சந்தித்தார். இந்த உடையை வழங்கியதன் மூலம் பிரபலமான சூரத்தை சேர்ந்த விரானி தான் குஜராத் அரசுக்கு அனைத்து கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்களை வழங்கியிருக்கிறார். இதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதாக நிறைய குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

குஜராத், கர்நாடகா பாணியில் தமிழகத்திலும் சுகாதாரத்துறை அதிக விலை கொடுத்து முக கவசங்கள் வாங்கியதில் மெகா ஊழல் நடைபெற்றுள்ளது. இதனால் சென்னை மாநகராட்சிக்கு ரூபாய் 31.50 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடக்க காலமான மார்ச் மாதம் சென்னை மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு 14 லட்சம் மூன்றடுக்கு முக கவசங்கள் தனியார் நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டன. இதன்படி,  முக கவசத்தின் விலை ரூ.9.25 என்ற விலையில் 14 லட்சம் முக கவசங்களை 1.2 கோடி ரூபாய்க்கு வாங்க சென்னை மாநகராட்சி ஒரு அனுமதி அளித்தது. இதற்கு ஜி.எஸ்.டி. ரூபாய் 6.47 லட்சம் உட்பட மொத்தம் 1 கோடியே 35 லட்சத்து 97 ஆயிரத்து 500 ரூபாய் ஒதுக்கீடு செய்து மாநகராட்சியின் ஒப்புதல் பெறப்பட்டது.

ஆனால், அதேநேரத்தில் மாநகராட்சி கொள்முதல் செய்த விலையை விட குறைவான விலைக்கு சுகாதாரத்துறை சார்பில் மூன்றடுக்கு முக கவசங்கள் வாங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதன்படி சென்னை மாநகராட்சி வாங்கிய முக கவசத்தின் விலை ரூபாய் 9.25. அதே முக கவசத்தை சுகாதாரத்துறை ரூ.7 விலைக்கு வாங்கியிருக்கிறது. இதன்மூலம் சென்னை மாநகராட்சிக்கு ரூபாய் 31.50 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள், அதிகாரிகள் இணைந்து கூட்டுக் கொள்ளை அடித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன.

அதேபோல, தெர்மல் ஸ்கேனர்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததும் அம்பலமாகியிருக்கிறது. அதிக விலை கொடுத்து தெர்மல் ஸ்கேனர்கள் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன.

கொரோனா தொற்று காரணமாக மக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிற வேளையில் அதன் பயன்பாட்டிற்குரிய வெண்டிலேட்டர்கள், முக கவசங்கள், தெர்மல் ஸ்கேனர்கள், பரிசோதனை கருவிகள் போன்றவற்றில் மாநில அரசுகள் ஊழல் செய்வது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே, பொருளாதார பேரழிவை சந்தித்துக் கொண்டிருக்கும் மக்கள் கொரோனா தடுப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் ஊழல் செய்திருப்பதை அறிந்து கடும் வேதனையில் உள்ளனர். இதற்கு உரிய நேரத்தில், சரியான பாடம் புகட்ட மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

The post கொரோனாவிலும் ரூ. 2 ஆயிரம் கோடி ஊழல்: பா.ஜ.க. அரசு மீது கர்நாடக காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on தேசிய முரசு - Desiya Murasu.