Kafeel Khan Archives - தேசிய முரசு - Desiya Murasu

பூனைக்கு யார் மணி கட்டுவது?: தே.பா.ச-வுக்கு எதிராக குவியும் எதிர்ப்புகள்
2017 ஆம் ஆண்டு கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக 63 குழந்தைகள் உயிரிழந்தன. இது தொடர்பாக டாக்டர் கபீல் கான் மீது உத்தரப்பிரதேச அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த இறப்புகளுக்கு கான் மீது குற்றம் சாட்டடிய உத்தரப்பிரதேச அரசு, இது குறித்து விசாரிக்க குழு ஒன்றை அமைத்தது.

இக்குழு தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில், டாக்டர் கான் மீது தவறில்லை என்றும், அவர் சொந்த பணத்தைப் போட்டு ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்கியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், டாக்டர் கான் மீது அலட்சியம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்த உத்தரப்பிரதேச அரசு, அவரை 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுதலை செய்தது.

இதனையடுத்து, கடந்த ஜனவரி மாதம் அலிகார் பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்துப் பேசியதற்காக, டாக்டர் கான் மீது அலிகார் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து, ஜனவரி 29 ஆம் தேதி மும்பையில் வைத்து உத்தரப்பிரதேச காவல்துறையினர் கானை கைது செய்தனர்.

பிப்ரவரி 10 ஆம் தேதி அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உத்தரப்பிரதேச அரசு கடுமையாக எதிர்த்தது. இதனையடுத்து, கபீர் கானை  நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது. இதனையடுத்து, அவரை பிப்ரவரி 13 ஆம் தேதி தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உத்தரப்பிரதேச அரசு கைது செய்து மதுரா சிறையில் அடைத்தது.

இதனையடுத்து, தொடர்ந்து 7 மாதங்கள் சிறையில் இருந்த அவரை, அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த ஒன்றாம் தேதி விடுதலை செய்தது. பழிவாங்கும் நோக்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை உத்தரப்பிரேதச அரசு பயன்படுத்தியிருப்பது உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

பசுக்களை இறைச்சிக்காக வெட்டியவர்கள் மீது சமீபத்தில் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது. பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்தையும் எந்த விசாரணையும் இன்றி, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து உத்தரப்பிரதேச அரசு சிறையில் அடைத்தது.

கைது செய்யப்பட்டவர்களின் உரிமைகளை மறுத்து, நீண்ட நாள் அவர்களை சிறையில் வைக்க தேசிய பாதுகாப்புச் சட்டத்தை காவல் துறையினர் பயன்படுத்துகின்றனர்.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இதுபோன்று பழிவாங்கும் நடவடிக்கைக்காக நீதிமன்றத்தை அணுகினால், நீதி கிடைப்பதற்கு தாமதமாகிறது. 9 மாதங்கள் கழித்துத்தான், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் டாக்டர் கான் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதுபோன்ற வழக்குகளை அவசர வழக்குகளாக நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும் என்றும் தற்போது கோரிக்கை எழுந்துள்ளது.

இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைக்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தும் அதிகாரிகளுக்கு நீதிமன்றங்கள் தண்டனை வழங்கினால் தான், இதுபோன்ற தவறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கபீல் கானை தன்னிச்சையாக தடுப்புக் காவலில் கைது செய்ததன் மூலம், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் அதிகாரத்தை ஏன் குறைக்கக் கூடாது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த பூனைக்கு யாராவது மணி கட்டித்தானே ஆகவேண்டும்.

The post பூனைக்கு யார் மணி கட்டுவது?: தே.பா.ச-வுக்கு எதிராக குவியும் எதிர்ப்புகள் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

இது எங்கள் இந்தியா! எங்களை எவரும் வெளியேற்ற முடியாது! சிறையில் தள்ள காரணமான டாக்டர் கஃபீல் கானின் பேச்சு!
கடந்த 2019 ஆம் ஆண்டு அலிகார் பல்கலைக் கழகத்தில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் மாணவர்கள் மத்தியில் டாக்டர் கஃபீல் கான் பேசியதால், அவரை கடந்த பிப்ரவரி மாதம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரா சிறையில் அடைத்தது உத்தரப் பிரதேச பா.ஜ.க. அரசு.

7 மாதங்களுக்குப் பிறகு, கடந்த ஒன்றாம் தேதி அவரை விடுதலை செய்த அலகாபாத் உயர் நீதிமன்றம், அலிகார் பல்கலைக்கழகத்தில் அவர் பேசிய பேச்சில் எந்த தவறும் இல்லை என்று தீர்ப்பளித்தது.

அலிகார் பல்கலைக்கழகத்தில் டாக்டர் கஃபீல் கான் ஆற்றிய உரை இதுதான்:

”ஒட்டுமொத்த உலகமே நம்மை எதிர்த்து நின்றாலும். நாம் இன்னும் சிறப்புடன் இருக்க வேண்டும்” என்ற கவிஞர் அல்லாமா இக்பால் சாஹபின் கவிதை வரிகளுடன் இந்த உரையை தொடங்குகின்றேன்…(மாணவர்கள் கரகோஷம்)

அலிகார் பல்கலைக்கழகத்துக்குள் நுழையும் முன்பு, முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து எனக்கு வந்த தொலைபேசி அழைப்பில், ”உள்ளே செல்லாதீர்கள், மீறிச் சென்றால் கம்பிகளுக்கு பின்னால் வைக்கப்படுவீர்கள்” என்று மிரட்டினர். (வெட்கக்கேடு…வெட்கக்கேடு என மாணவர்கள் கோஷம்)

நமது குழந்தைப் பருவத்தில் இருந்தே, நாம் இந்துக்கள் என்றோ, முஸ்லீம்கள் என்றோ சொல்லி வளரவில்லை. ஆனால், மனிதநேயம் குறித்து நமக்கு கற்பிக்கப்பட்டது. ஆனால் அமித்ஷாவோ, நாம் மனிதர்களாக வேண்டாம், இந்துக்களாக, முஸ்லீம்களாக மாற வேண்டும் என நமக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

தன் உடையில் படிந்த ரத்தத்தை மறைக்க கொலைகாரன் எப்படி முயற்சிப்பானோ, அதுபோன்றுதான் இவர்களது செயல்பாடுகளும் அமைந்துள்ளன.  கடந்த 1928 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்தே, அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்தனர். அதனால் தான் நமது உள்துறை அமைச்சர் அமித்ஷா கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை சட்டவிரோதம் என்று திரும்பத் திரும்பச் சொல்கின்றோம். அவரது சட்டம் இந்தியாவின் பன்முகத்தன்மை, மத நல்லிணக்கம் மற்றும் சமத்துவத்துக்கு எதிராக உள்ளது.

நாம் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பாபா சாகேப் அம்பேத்காரின் அரசியல் சாசனத்தை நம்பாதவர்கள் மற்றும் அதனை இதுவரை படிக்காதவர்களுடன் தான் பேசிக் கொண்டிருக்கிறோம். கடந்த 90 ஆண்டுகளாக, நாட்டைப் பிளவுபடுத்துவதே அவர்களது முக்கிய நோக்கமாக இருக்கிறது.

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தியதால், 19 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 90 சதவிகித்தினர், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் தங்களை உட்படுத்த விரும்பியவர்கள். எதை முதலில் செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு புரியவில்லை.

நம்மைச் சுற்றி சிறிய சுவரை  எழுப்ப அவர்கள் முயற்சிக்கிறார்கள். அதன்பிறகு, அவர்கள் முழுக் கட்டுமானத்தையும் முடித்துவிடுவார்கள். கடந்த 90 ஆண்டுகளாக நம் இளைஞர்கள் மத்தியில் மதத்தின் அடிப்படையில் வெறுப்பைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சிறுபான்மையினத்தவரை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தி வருகின்றனர்.

இந்த அரசு சிறுபான்மையினருக்கானது அல்ல என்பதை தொடர்ந்து  நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் போய் நிற்கும் போது, உண்மையான முகத்தை வெளிப்படுத்துவார்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், எதிர்ப்பதற்கும் இதுவே காரணம். குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

தேசிய குடிமக்கள் பதிவேடு அசாம் மாநிலத்துக்காக கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த முயற்சிக்கின்றனர். இதன்படி, 1950 முதல் 1987 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருந்தால் மட்டுமே ஒருவர் இந்திய பிரஜையாகக் கருதப்படுவார். அதற்கான பிறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்காதவர் இந்தியர் இல்லை என்று கருதப்படுவார். இந்த சட்டத்தைப் பயன்படுத்தி முஸ்லீம்களை இந்திய குடிமக்கள் இல்லை என்று அறிவிப்பதுதான் அவர்களது உள்நோக்கம் என்பது நமக்கு புரியும்.

அவர்கள் எண்ணம் என்ன? என்பதும், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதும் நமக்கு தெரியும். அவர்கள் மனம் முழுவதும் வெறுப்பு நிறைந்துள்ளது. நமது பெற்றோரின் சான்றிதழ், சட்டப்பூர்வ ஆவணங்களைத் தேடி நம்மை அலையவிட வேண்டும் என்பதே அவர்களது உள்நோக்கமாக இருக்கிறது. இவ்வாறு தான் கோடிக்கணக்கான மக்கள் மத்தியில் அவர்கள் பிரச்சினையை ஏற்படுத்த முனைகிறார்கள்.

அனைவரையும் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பிவிடுவார்கள் என பரவும் வதந்தியை நம்பவேண்டாம். இது சாத்தியமில்லாதது. அசாமில் உள்ள 6 லட்சம் மக்களை தடுப்பு முகாம்களுக்கு அனுப்ப வேண்டுமானால், பட்ஜெட்டில் 23 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்.  தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த அசாமில் மட்டும் ரூ. 1,600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இதனை செயல்படுத்த ரூ.30 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது.

கல்வியை இலவசமாக வழங்குமாறு நாம் கேட்கும் போது, அரசிடம் பணம் இல்லை என்கிறார்கள். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டணத்தை உயர்த்துகிறார்கள்.

ஆக்ஸிஜன் வசதி  இல்லாமல் உத்தரப் பிரதேசத்தில் 70 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்தியா முழுவதும் மருத்துவ வசதி  இல்லாமல் ஆண்டுதோறும் 8  லட்சம் குழந்தைகள் இறக்கின்றன. ஐ.நா., யுனிசெப், உலக வங்கி மற்றும் உலக சுகாதார அமைப்பிடம் இருந்து பெற்ற தரவுகள் கவலையை ஏற்படுத்துகின்றன. இந்தியாவின் மக்கள் தொகையில் சரி பாதி மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

எய்ட்ஸ் பாதிப்பில் உலகத்திலேயே 3 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் உலக அளவில் இந்தியா 2 ஆம் இடத்தில் உள்ளது. 72 சதவிகித மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கவில்லை. ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால், டாக்டரிடம் செல்ல 40 கி.மீ. பயணிக்க வேண்டியுள்ளது.

கும்பலாக தாக்குதல் நடத்துவோர், அதனை வீடியோ எடுத்து முகநூலில் பதிவிடுகிறார்கள். டெல்லியில் உள்ள தங்கள் எஜமானர்கள் இதனை பார்த்து சந்தோஷப்பட வேண்டும் என்பதே அவர்கள் குறிக்கோள். அவர்கள் பேசும் தேசியம் என்பது, போலி இந்துயிசத்தின் அடிப்படையிலான போலி தேசியம்.

ஆக்ஸிஜன் இல்லாமல் குழந்தைகள் இறந்த சம்பத்தில், என் மீது கொலைப் பழி சுமத்தவும், ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்கியதில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டவும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முயற்சி செய்தார்.

இதற்காக அமைக்கப்பட்ட குழுவினர் தாக்கல் செய்த அறிக்கையில், ”என் சொந்த பணத்தில் இருந்து மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்கிக் கொடுத்ததாக” குறிப்பிட்டிருந்தனர். என்னை எப்படியாவது சிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். அதனால் தான் அரசுக்கு எதிராக நான் பேசுவதாகக் கூறுகிறார்கள். என்னை மீண்டும், மீண்டும் சஸ்பெண்ட் செய்கிறார்கள்.

இந்த நேரத்தில் கொடுமையைப் பற்றி நான் பேசாவிட்டால், வேறு யார் பேசுவது? இந்த கடுமையான சட்டத்தை எதிர்த்து முஸ்லீம்கள் மட்டுமல்ல, அனைவரும் போராட வேண்டும். மதத்தின் அடிப்படையிலான குடியுரிமை சட்டம் குறித்து, நமது அரசியல் சாசனத்தில் எழுதப்பட்டுள்ளதா? நாம் இந்த உலகத்தின் குடிமக்கள். அரசியல்வாதிகள் தான் தங்கள் சுயலாபத்துக்காக எல்லையை உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்த நாடு நம்முடையது. இந்தியா குறிப்பிட்ட ஒருவரின் சொத்து அல்ல. எங்களை வெளியேற்றும் அதிகாரம் உங்களுக்கு இல்லை. நாங்கள் 25 கோடி பேர் இருக்கிறோம். எங்களை, கும்பலை வைத்து மிரட்டவோ அல்லது இதுபோன்ற சட்டங்களை வைத்து மிரட்டவோ முடியாது. நாங்கள் ஒற்றுமையுடன் உள்ளோம். சுவரைப் போல் நாங்கள் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு அரணாக இருக்கிறோம். இது எங்கள் இந்தியா. இங்கிருந்து எங்களை எப்படி வெளியேற்ற முடியும்?

இவ்வாறு மருத்துவர் கஃபீல் கான் பேசினார். இந்த பேச்சுக்காகத்தான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவரை 7 மாதங்கள் சிறையில் அடைத்து அராஜகத்தை நிகழ்த்தியிருக்கிறது உத்தரப்பிரதேச பா.ஜ.க. அரசு.

டாக்டர் கஃபீல் கானுக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து

தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் இருந்த டாக்டர் கஃபீல் கானை அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுதலை செய்ததும், இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்தார். அப்போது, நீதியை விரும்பும் மக்களுக்கும், கான் விடுதலைக்கு பாடுபட்ட உத்தரப்பிரதேச காங்கிரஸாருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார். கான் விடுதலையானதும் அவரிடம்  தொலைபேசியில் பிரியங்கா காந்தி நலம் விசாரித்தார்.

The post இது எங்கள் இந்தியா! எங்களை எவரும் வெளியேற்ற முடியாது! சிறையில் தள்ள காரணமான டாக்டர் கஃபீல் கானின் பேச்சு! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

7 மாதங்களுக்குப் பிறகு டாக்டர் கஃபீல் கான் விடுதலை: தே.பா.ச. தவறாகப் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கஃபீல் கானை மதுரா சிறையில் இருந்து உடனே விடுதலை செய்ய, உத்தரப் பிரதேச அரசுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு, குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நடந்த பேராட்டத்தின் போது, ஆத்திரமூட்டும் வகையிலும், அவதூறாகவும் டாக்டர் கஃபீல் கான் பேசியதாகக் கூறி, கடந்த ஜனவரி 29 ஆம் தேதி கைது செய்யப்பட்டு, உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா சிறையில் அடைக்கப்பட்டார்.

7 மாதங்களுக்கும் மேலாக டாக்டர் கான் சிறையில் இருந்த நிலையில், மகனை மீட்டுத் தரக்கோரி அவரது தாயார் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் டாக்டர் கஃபீல் கானை கைது செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தனர். அதோடு, மதுரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரை உடனே விடுதலை செய்யுமாறும் உத்தரப் பிரதேச அரசுக்கு உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ”கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அலிகார் பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தில், டாக்டர் கான் பேசிய பேச்சில் எந்த தவறும் இல்லை. வெறுப்பூட்டும் வகையிலோ, வன்முறையை தூண்டும் வகையிலோ அல்லது அலிகார் பகுதியில் அமைதியை சீர்குலைப்பதாகவோ அவரது பேச்சு இல்லை. இவற்றை எல்லாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. அவரது பேச்சின் உண்மையான உள்நோக்கத்தை கவனிக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தவறிவிட்டது” என்றும் கூறியுள்ளனர்.

இது குறித்து கான் கூறும்போது, ” 2017 ஆம் ஆண்டு கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 70 குழந்தைகள் உயிரிழந்தது குறித்து கேள்வி எழுப்பியதற்காக, தம்மை தொடர்ந்து சிறையிலேயே வைத்திருக்க உத்தரப்பிரதேச அரசு திட்டமிட்டிருந்ததாகத் தெரிவித்தார். 70 குழந்தைகள் உயிரிழந்தது குறித்து கேள்வி எழுப்பியதற்காக, பெரும் விலையை கொடுத்துள்ளேன். அலிகார் பல்கலைக் கழகத்தில் ஒற்றுமை மற்றும் ஜனநாயக வழியிலான அமைதிப் போராட்டத்தை வலியுறுத்தியே பேசினேன்.

கொரோனா பரவல் குறித்து நான் பேசிவிடுவேன் என்ற காரணத்துக்காக என்னை 2022 ஆம் ஆண்டு வரை சிறையில் அடைக்க உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்திருந்தது. உத்தரப்பிரதேசத்தில் சுகாதாரத்துறை செயல் இழந்துவிட்டது. அதைப் பற்றி நான் பேசுவேன் என்பது அவர்களுக்குத் தெரியும். என் வாயை அடைப்பதற்காகவே அவர்கள் என்னை தொடர்ந்து சிறையில் வைக்க முடிவு செய்தனர்” என்று தெரிவித்தார்.

சட்ட நிபுணர்கள் கருத்து

டாக்டர் கஃபீல் கானை அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த வழக்குரைஞர் ரிபெக்கா ஜான், ”எந்த கேள்வியும் இல்லாமல், ஒருவரை ஓராண்டுக்கு சிறையில் தள்ளும் தேசிய பாதுகாப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனை தவறாகப் பயன்படுத்தும் அதிகாரிகளை தண்டிக்கவும் சட்டம் இயற்ற வேண்டும். 90 சதவிகித வழக்குகள் நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது இல்லை. கொரோனாவால் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு, நீதிமன்ற பணிகளும் முடங்கியதால், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பலர் நிவாரணம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.

உள்துறை முன்னாள் செயலர் ஜி.கே.பிள்ளை கூறும்போது, ”தேசிய பாதுகாப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் அதிகாரிகள் மீது, நீதிமன்றமே நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் தேசிய பாதுகாப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறையும்” என்றார்.

மூத்த வழக்குரைஞர் கொலின் கொன்சால்வே கூறும்போது, ”தவறான உத்தரவுகள் பெரும் அநீதிக்கு வழி வகுத்துவிடும். தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பொருத்தவரை, உச்ச நீதிமன்றமும் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிட்டது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அரசு தரப்பு சமர்ப்பிக்கும் ஆவணங்களே விசாரணைக்கு சாட்சியம் என்றும், விசாரணையின் போது குற்றம் சுமத்தப்பட்டவர் ஜாமீன் கோரினால் இந்த ஆவணங்களின் அடிப்படையில் அதை நிராகரிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உண்டு என்றும் தீர்ப்பளித்துள்ளது. பொருந்தாத மற்றும் தவறான இந்த தீர்ப்பால், நாட்டில் பெரும் அநீதி இழைக்கப்பட்டு வருகிறது” என்றார்.

The post 7 மாதங்களுக்குப் பிறகு டாக்டர் கஃபீல் கான் விடுதலை: தே.பா.ச. தவறாகப் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு appeared first on தேசிய முரசு - Desiya Murasu.