JNU Archives - தேசிய முரசு - Desiya Murasu

கே.ஆர்.நாராயணன் நூற்றாண்டு பிறந்தநாள் : அரசியல் சாசன பாதுகாவலரின் நினைவலைகள் – டி. ராஜா
குடியரசு முன்னாள் தலைவர் கே.ஆர்.நாராயணனை,அவரது நூற்றாண்டு பிறந்தநாளில் நாடு நன்றியுடன் நினைவுகூர்கிறது.

கடந்த 1920 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள உழவூரில் தலித் குடும்பத்தில் பிறந்தார். டாக்டர் அம்பேத்கரைப் போலவே சிறந்த கல்விமானாகத் திகழ்ந்தார்.

படித்து முடித்ததும், 1943 ஆம் ஆண்டு ‘தி இந்து’ நாளேட்டில் பத்திரிக்கையாளராகப் பணியாற்றினார். அதன்பின், ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேட்டிலும் பணியாற்றினார். வெளிநாட்டுப் பத்திரிகைகளிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

பின்னர், இந்திய வெளியுறவுத்துறைப் பணியில் சேர்ந்த அவர், சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இந்தியாவுக்கான தூதுவராக இருந்தார். 1978 ஆம் ஆண்டு வெளியுறவுத் துறை பணியிலிருந்து ஓய்வு பெற்றதும், ஓராண்டில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டார். 1980 ஆம் ஆண்டு வரை அவர் அந்தப் பதவியில் இருந்தார். அதன்பிறகு, நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய அமைச்சரானார்.  1992 ஆம் ஆண்டு துணை குடியரசுத் தலைவராகவும், பின்னர், 1997 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவராகவும் ஆனார்.

கட்டுரையாளர் : டி. ராஜா.  (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்)

இன்றைக்கு இந்துத்துவா அமைப்புகளால் வெறுக்கத்தக்கக் கலாச்சாரம் மற்றும் தரம் தாழ்ந்த அரசியலால் சமரசம் செய்து கொள்ளப்பட்ட அரசியல் சாசனத்தை, அன்றைக்குப் பாதுகாப்பதில் கே.ஆர். நாராயணன் ஆற்றிய பங்கை நாடு நினைவுகூர்கிறது.

அரசியல் சாசன சவால்களை எதிர்கொள்வதிலும், அதனை நிலைநிறுத்துவதிலும் கே.ஆர்.நாராயணன் அளவுக்கு எந்த ஒரு குடியரசுத் தலைவரும் உறுதியாகப் பங்காற்றியது இல்லை.

அரசியல் சாசனத்தை மறு ஆய்வு செய்ய அன்றைய வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு உத்தேசித்தபோது, அதற்கு சிவப்புக் கொடி காட்டிவிட்டு, நம்மால் அரசியல் சாசனம் தோல்வியடைந்துவிட்டதா? அல்லது அரசியல் சாசனத்தால் நாம் தோல்வியடைந்துவிட்டோமோ? என்பதை நாம் ஆராயலாம் என்று பதில் அளித்தார். அவரது அந்த நடவடிக்கை தார்மீக அடிப்படையில் அரசியலமைப்புக்கு வலுசேர்த்தது அரசியலமைப்பை மறு ஆய்வு செய்வதற்குப் பதிலாக, அரசியல் அமைப்பின் செயல்பாட்டை மறுபரீசிலனை செய்ய ஓர் ஆணையத்தை வாஜ்பாய் அரசு அமைத்தது.

அரசியல் சாசனம் மற்றும் அரசியல் சாசன தார்மீகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படும் போதெல்லாம், இக்கட்டான சூழ்நிலைகளில் அதனைப் பாதுகாக்க  கே.ஆர். நாராயணன் ஆற்றிய பங்கு மக்களால் கவரப்பட்டது.

மாநிலங்களவையில் விதிகளை மீறி விவசாயச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட போது, மூத்த அரசியல்வாதிகள் பலரும் கே.ஆர்.நாராயணனை நினைவுகூர்ந்தார்கள். அவர் மட்டும் இப்போது குடியரசுத் தலைவராக இருந்திருந்தால், இந்த மசோதாவைத் திருப்பி அனுப்பியிருப்பார் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

அவர் ஓர் இரக்கக் குணமுள்ளவர் என்பதற்குச் சாட்சியாக நடந்த நிகழ்வும் உண்டு. கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில் பலர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிப் போட்டது. தங்கள் சொந்த பந்தங்களை இழந்தவர்கள் அப்போதைய பிரதமர் வாஜ்பாயை சந்திக்க விரும்பினர். ஆனால், அவர்களைச் சந்திக்க வாஜ்பாய் மறுத்துவிட்டார். இதனையடுத்து, அப்போது குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர். நாராயணனைச் சந்தித்தனர். அவர்களது வேதனையைப் பொறுமையாகக் கேட்ட அவர், ”நான் உங்களுக்குத் துணை இருப்பேன்” என்று ஆறுதல் படுத்தி  அனுப்பி வைத்தார்.

நம் சமுதாயத்தில் கடந்த கால மற்றும் நிகழ்கால வரலாறுகளையும், வரலாற்றுச் சிறப்பு மிக்கவர்களையும் தமது பரந்த அணுகுமுறையால் புரிந்து கொண்டவர். இந்தியாவின் விதியை மாற்றி எழுதிய மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் டாக்டர் அம்பேத்கர் போன்ற மாபெரும் தலைவர்களின் அணுகுமுறையைப் போன்றே அவரது அணுகுமுறையும் இருந்தது. மக்களின் விடுதலை, அதிகாரமளித்தல் மற்றும் முற்போக்கான சமூக மாற்றத்துக்கான உந்துதல்களை உருவாக்கி அவற்றைச் செயல்படுத்துவதில் அந்த 3 தலைவர்களையே கே.ஆர்.நாராயணன் பின்பற்றினார்.

மகாத்மா காந்தியின் தார்மீகக் கொள்கையால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் இந்தியத் தேசிய இயக்கம், ஜவஹர்லால் நேருவின் சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கை மற்றும் உலகப் பார்வை, டாக்டர் அம்பேத்கரின் சமூக சமமற்ற சமுதாயத்திற்கான போராட்டம் ஆகியவற்றைக் கவிதை நயத்தோடு கே.ஆர்.நாராயணன் விவரிப்பதுண்டு. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நவீன இந்தியாவின் அந்த ஒப்பற்ற தலைவர்கள் பற்றிய அவருக்கு இருந்த புரிதல், அவரை நன்றாகவே செதுக்கியிருந்தது.

இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்கள், சீர்திருத்தம், நடவடிக்கை மற்றும் மாற்றத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். தீர்க்கதரிசி போல இதையெல்லாம் முன்னரே அறிந்து, நலிந்த மக்களைக் கவனத்தில் கொள்ளாமல் சுதந்திரமான மற்றும் உலகமயமாக்கல் மூலம் பொருளாதாரச் சீர்திருத்தங்களைச் செய்யக் கூடாது என்று எச்சரித்தார். தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பெண்கள் ஆகியோர் வாழத் தகுதியில்லாத நிலையில் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

சாதிய முறை, பற்றி எரியும் தலித்துகள் மற்றும் பழங்குடியின மக்களின் பிரச்சினைகளை பெரும் வலியுடனும் தீர்க்கதரிசனத்துடனும் அணுகினார். இந்த பிரச்சினையைக் குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்க்காவிட்டால், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மைக்குப் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

அரசியலமைப்பில் உயர் பதவிகளை வகிப்போரால், மதச்சார்பின்மை கேலிக்குரியதாவது மிகவும் துயரமானது. இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் இந்திய அரசியலமைப்பைக் கேலிக் கூத்தாக்குகிறார்கள். சுதந்திரப் போராட்டத்தின் நெறிமுறைகளைக் கேலிக் கூத்தாக்குகிறார்கள், அனைத்து மதத்தினரின் நம்பிக்கையைக் கேலிக் கூத்தாக்குகிறார்கள் என்று ஆவேசப்பட்டவர் கே.ஆர். நாராயணன்.

இது குறித்து அவர் கூறும்போது, ” இந்தியாவில் உள்ள பல மதங்கள், சமுதாய மதச்சார்பின்மையால் மட்டுமே மக்கள் மதநல்லிணக்கத்தோடு வாழ்வதற்கு வழி ஏற்படுத்த முடியும்” என்றார்.

எனவே, சமூக நவீனத்துவத்தின் நேர்மறை சிந்தனை,மதச்சார்பின்மை மற்றும் மதம், சமூகம், அரசியல் கலாச்சாரம் மற்றும் தினசரி வாழ்க்கை நடைமுறையின் விரிவான நிலைகளை அவர் வலியுறுத்தினார்.

ஆனால், இன்றைக்குப் பெரும்பான்மை, இந்துத்துவா மற்றும் ஏனைய குறுகிய நோக்கங்களால் சமூக நவீனத்துவ நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நாம் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம்.

முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனின் மரபு வழி அரசியலமைப்பையும், அரசியல் ஒழுக்கத்தையும், பன்முக மற்றும் மதச்சார்பற்ற சான்றுகளையும்  உறுதிப்படுத்துவதே, 21 ஆம் நூற்றாண்டில் நமது நாடு எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வாக அமையும்.

(Courtesy : National Herald )

The post கே.ஆர்.நாராயணன் நூற்றாண்டு பிறந்தநாள் : அரசியல் சாசன பாதுகாவலரின் நினைவலைகள் – டி. ராஜா appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

இந்திய முஸ்லிம் தலைமுறையினரின் முடிந்து போன ஜனநாயக வாய்ப்புகள்: யோகேந்திர யாதவ்
2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதுடெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது, வரலாறு காணாத தாக்குதல் நடத்தப்பட்டு பெரும் கலவரம் மூண்டது.  பாஜக தலைவர் கபில் மிஸ்ரா உள்ளிட்ட சிலரின் வன்முறைப் பேச்சுக்களே இந்த கலவரத்துக்கு காரணமாக அமைந்தன. இந்த கலவரத்துக்குப் பிறகு, இதன் பின்னணியில் இருந்தவர்கள் குறித்து விசாரிக்காமல், விசாரணை ஏனோ தானோவென்று போய்க் கொண்டிருக்கிறது.

கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தின் போது, நானாவதி விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, அதனை விசாரிக்க லிபரான் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று வரை யாரும் தண்டிக்கப்படவில்லை என்பது வேறு விஷயம். பாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றும், அதன் பிறகு கலவரம் நடக்கவில்லை என்றும் நாமே முடிவு செய்ய வேண்டியுள்ளது.

2002 ஆம் ஆண்டு குஜராத்தின் முதலமைச்சராக மோடி இருந்தபோது, முஸ்லிம்களுக்கு எதிரான கலவர வழக்குகளில் சிலருக்கு தண்டனை கூட கிடைத்தது. 1984 ஆம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கிலும் சிலருக்கு தண்டனை கிடைத்தது.

டெல்லி கலவரத்தை பொருத்தவரை நேரிடையாக கலவரத்தைத் தூண்டிய பாஜகவை சேர்ந்த கபில் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு ஏதும் பதியவில்லை. மாறாக, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடிய மனித உரிமை ஆர்வலர்களை சிறைக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது  இந்த அரசு.

இதுகுறித்து அரசியல்வாதியும் சமூக செயற்பாட்டாளருமான யோகேந்திர யாதவ், ‘தி பிரிண்ட்’ இணையத்தில் எழுதியுள்ள கட்டுரையில், “டெல்லி வன்முறைக்காக உமர் காலித் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம், இந்திய  முஸ்லிம்கள் தலைமுறையின் ஜனநாயக விருப்பத்துக்கு தடை போடப்பட்டுள்ளதாக” தெரிவித்துள்ளார்.

யோகேந்திர யாதவ் கட்டுரையின் முழுப் பகுதி:

‘தி பிரிண்ட்’ இணையத்தில் கட்டுரையாளரான எனது நண்பர் ஹிலால் அகமது. அவருக்கு ஏராளமான அடையாளங்கள் உள்ளன.  தர்காவில் 5 முறை தொழுவார். மார்க்சிய கோட்பாடுகளைப் பற்றிக் கொண்டு சேகுவாராவை பின் தொடர்வார். அரசியல் பார்வை மற்றும் செயல்பாடுகளில் காந்தியடிகளை பின் தொடர்வார். அவர் தன்னை ஒருபோதும் முஸ்லீமாக அடையாளப்படுத்திக் கொண்டதில்லை.

அவரது செயல்கள் விசித்திரமாக இருப்பதை சில ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். ஒரு வங்காளி வீட்டில் ராமகிருஷ்ண பரமஹம்சர் படமும் லெனின் படமும் இருப்பதை பார்த்திருக்கிறேன். மற்றவர்களை ஒப்பிடும்போது முஸ்லீம் என்பதற்கு குறுகிய அடையாளங்களே உள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடந்த கலவரம் தொடர்பாக தற்போது டெல்லி போலீசாரால் உமர் காலித் கைது செய்யப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது, இந்த அடையாளம் எனக்கு நினைவுக்கு வருகிறது.

நீங்கள் இளைஞர். நீங்கள் கிளர்ச்சியாளர். நீங்கள் இந்தியர். இருந்தாலும்  நீங்கள் முஸ்லீம். உங்கள் மனசாட்சியை தவறாகப் புரிந்து கொள்ளலாமலோ அல்லது நீங்கள் சிறையில் அடைக்கப்படாமலோ,  இருந்திட முடியுமா? இது உமர் காலித்துக்கு மட்டும் நிகழ்ந்த ஒன்றல்ல. லட்சக்கணக்கான படித்த இந்திய முஸ்லிம் இளைஞர்கள் இதனை சந்தித்து வருகிறார்கள். நான் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, ​​பல இளம் முஸ்லிம்கள் இந்தியாவுக்கு விசுவாசமாக  நடக்கிறார்களா? என்பது குறித்து அவர்களுக்கு தேர்வு வைக்கப்பட்டதுண்டு. அவர்களுக்குள் உள்ள முஸ்லிம் உணர்வை மறக்கடிக்கச் செய்வது அல்லது  கிளர்ச்சியைத் தடுப்பது அவர்களது நோக்கமாக இருந்தது.  எனக்குத் தெரிந்த பெரும்பாலான இடதுசாரிகள் முதல் பாதையைத் தேர்ந்தெடுத்தனர்.

உமர் காலித் மற்றும் கன்யா குமார் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளை 2016 ஆம் ஆண்டு சுமத்தினர். பின்னர், இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களின் லட்சியவாதமும் தியாகமும் என்னைக் கவர்ந்தன. இவர்கள் எந்த மாதிரியான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று நான் அவ்வப்போது ஆச்சரியப்பட்டதுண்டு.

உமர் காலித்தை அறிந்து கொள்வது ஒரு மகிழ்ச்சியான ஆச்சரியமாக இருந்தது. அவர் இந்திய அரசை வன்முறையில் தூக்கியெறியும் புரட்சிகர கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவர். சாதி மற்றும் பாலினம் தொடர்பான கேள்விகளைக் கையாளுவதில் கைதேர்ந்த உமர் காலித் தான், எதிர்காலத்தில் நான் காண விரும்பும் இடது சாரி தலைவன்.

ஒரு முஸ்லீமாக மாற மறுத்ததும். அவரது தந்தை ஜமாத்-இ-இஸ்லாமியைச் சேர்ந்தவர் என்பதால், உமர் ஒரு முஸ்லீம் அடிப்படைவாதி அல்லது முஸ்லீம் அடையாளத்தை முற்றிலுமாக விலக்கிக் கொண்டதும் என்னை மிகவும் கவர்ந்தது. இங்கே இளைஞர்களின் அடையாளமாக உமர் காலித் இன்று உருவெடுத்திருக்கிறார்.

மோசமான தீவிரவாத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு இன்று உமர் காலித் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் போலீஸ் பாதுகாப்புடன் வலம் வரும் உமர் காலித், டெல்லி கலவரத்தை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்புடன் இருக்கும் ஒருவன் எங்கேயோ போயி சரி செய்ய முடியும்?.

இடதுசாரிகள் மீது நீங்கள் எந்த குற்றச்சாட்டை வேண்டுமானாலும் சுமத்துங்கள். ஆனால் வகுப்புவாத கலவரத்தைத் தூண்டினார்கள் என்று மட்டும் குற்றம் காட்டாதீர்கள்.  உமர் காலித் முஸ்லிம் என்பதற்காக டெல்லி போலீசார் கதை திரைக்கதை வசனம் எழுதிக் கொண்டிருக்கின்றனர்.

ஒருவேளை உமர் காலித், நானாகவோ, யெச்சூரியாகவோ இருந்திருந்தால் அவர் மீது இதுபோன்ற வழக்கு தொடரப்பட்டு இருக்காது.

இதில் பெரும் சோகம் என்னவென்றால், இந்திய முஸ்லிம் தலைமுறையினரின் ஜனநாயக வாய்ப்புகள் முற்றிலும் தடை பட்டுள்ளன என்பதுதான்.

The post இந்திய முஸ்லிம்  தலைமுறையினரின் முடிந்து போன ஜனநாயக வாய்ப்புகள்: யோகேந்திர யாதவ் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.