Jallikattu Archives - தேசிய முரசு - Desiya Murasu

தலைவர் ராகுலின் தமிழ் வணக்கம்! விழாக்கோலம் பூண்ட மதுரை! ஜல்லிக்கட்டு வரலாறு படைத்தது!
மதுரை அவனியாபுரத்தில் இன்று நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண டெல்லியிலிருந்து தனி விமானத்தில் இன்று(14.1.2021) ராகுல் காந்தி மதுரைக்கு வருகை புரிந்தார். உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த பார்வையாளர்கள் ராகுல் காந்தியைப் பார்த்து உற்சாகமாகக் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.

ஜல்லிக்கட்டுப் போட்டியை அவர் ஆர்வமுடன் கண்டு ரசித்தார். காளைகள் சீறி வருதையும், அதை காளையர்கள் அடக்குவதையும் கண்டு உற்சாகமடைந்தார். அதேபோல், காளை வெற்றி பெற்றதையும் பார்த்து மகிழ்ந்தார்.

வாடிவாசலில் இருந்து காளைகள் சீறி வருவதைப் பார்த்த அவர், அருகிலிருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் சில தகவல்களை அவ்வப்போது கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தார்.

ஏற்கனவே, ஜல்லிக்கட்டு போட்டியை காண வருகை தந்திருந்த திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைவர் ராகுல் காந்தி அமர்ந்திருந்த பகுதிக்கு வருகை புரிந்து வணக்கம் தெரிவித்து அருகில் அமர்ந்து உரையாடினார். ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி குறித்து இருவரும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

ஜல்லிக்கட்டுப் போட்டியை கண்டு ரசித்த ராகுல் காந்தி, அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் பேசினார்.

இந்நிகழ்வில் தலைவர் ராகுல் காந்தியுடன் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் திரு கே.சி.வேணுகோபால், புதுச்சேரி மாநில முதலமைச்சர் திரு வி.நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரு கே.ஆர்.ராமசாமி, மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் திரு பி.மாணிக்கம் தாகூர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திரு சஞ்சய் தத் ஆகியோர் உடன் வருகை புரிந்து ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு களித்தனர்.

முன்னதாக, மதுரை விமான நிலையத்தில் காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் ஏராளமானோர் திரண்டு ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

The post தலைவர் ராகுலின் தமிழ் வணக்கம்! விழாக்கோலம் பூண்ட மதுரை! ஜல்லிக்கட்டு வரலாறு படைத்தது! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

தமிழ் உணர்வையும், தமிழர் கலாச்சாரத்தையும் நசுக்க நினைப்பது நாட்டுக்குச் செய்யும் கேடு : பா.ஜ.க.வுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை
ஜல்லிக்கட்டுப் போட்டி முடிந்ததும் டெல்லி திரும்ப மதுரை விமான நிலையத்துக்கு ராகுல் காந்தி வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

ஜல்லிக்கட்டைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இன்று வந்தேன். அனைவருக்கும் மகிழ்ச்சியான பொங்கல் வாழ்த்துகள். ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்த்தேன். ஜல்லிக்கட்டால் மாடுகளுக்கு ஆபத்து வரும் என்று நிறையப் பேர் சொன்னார்கள். இன்று நான் நேரில் பார்க்கும் போதுதான் தெரிந்தது. எந்த ஒரு மாட்டுக்கும் காயம் ஏற்படவில்லை. மாறாக, மாடு பிடி வீரர்களுக்குத் தான் காயம் ஏற்பட்டது. யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், இன்னும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நான் எதற்கு இங்கு வந்தேன் என்றால், இன்று டெல்லியில் ஆட்சியில் இருப்பவர்கள் நம் நாட்டின் கலாச்சாரங்களை அழிக்க முயன்று வருகிறார்கள். தமிழர்கள் உணர்வுகளைத் தடுக்க முடியும் என்று நம்புகிறார்கள். தமிழர்களின் தமிழ் மொழியை நசுக்கப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு ஒரு செய்தி சொல்லவே இங்கு வந்துள்ளேன். முதலாவது, தமிழ் உணர்வை யாராலும் தடுக்க முடியாது. இரண்டாவது, தமிழ் உணர்வைத் தடுக்க நீங்கள் முயன்றால், அது நம் நாட்டுக்கு நீங்கள் செய்யும் கேடு. தமிழ் என்பது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் கொண்டது. அது நம் நாட்டுக்குத் தேவை.

இவர்களின் இது போன்ற எண்ணங்களுக்கு நான் எதிரானவன். குறிப்பிட்ட சிந்தனைகள், குறிப்பிட்ட மொழி, குறிப்பிட்ட கருத்து நம் நாட்டில் உள்ளது. ஏராளமான மொழிகளும், ஏராளமான சிந்தனைகளும் இருப்பதே நமது பலம்.

நான் பலமுறை தமிழகத்துக்கு வந்திருக்கிறேன். இன்னும் வருவேன். தமிழக மக்களிடம் நான் நிறைய கற்றுள்ளேன். கடந்த காலத்தில் நிறைய அவர்கள் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார்கள். நாட்டை எப்படி வழி நடத்த வேண்டும் என்றும் அவர்கள் எனக்குக் காட்டியிருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

அரசாங்கம் விவசாயிகளைப் புறக்கணிக்க மட்டும் செய்யவில்லை. அவர்களை அழிக்கவும் பார்க்கிறது. இதில் வித்தியாசத்தைப் பார்க்க வேண்டும். விவசாயிகளைக் கண்டுகொண்டால் அவர்கள் மீது அக்கறை இருக்கிறது என்று அர்த்தம். அவர்களைப் புறக்கணித்தால் அழிக்க முயல்கிறார்கள் என்று அர்த்தம். விவசாயிகளை அழித்துவிட்டு அவர்களது 2 அல்லது 3 நண்பர்களுக்கு உதவ நினைக்கிறார்கள்.

விவசாயிகளிடம் இருப்பதை எல்லாம் பறித்து, அவர்கள் நண்பர்களிடம் கொடுக்கப் பார்க்கிறார்கள். விவசாயிகளின் நிலத்தை எடுக்கப் பார்க்கிறார்கள், விவசாயிகளின் உற்பத்தியை எடுக்கப் பார்க்கிறார்கள். விவசாயிகளை இந்த அரசு அலட்சியப்படுத்துகிறது என்பது சிறிய வார்த்தை. விவசாயிகளை அழிக்கப் பார்க்கிறார்கள் என்பது தான் சரியான வார்த்தை.

விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு. விவசாயிகளை நசுக்கிக் கொண்டே இருந்தால், நாடு வளர்ச்சி அடையுமா? இதை எங்காவது வரலாற்றில் பார்த்திருப்போமா? எப்போது இந்திய விவசாயிகள் பலவீனப்படுகிறார்களோ, இந்தியாவும் பலவீனப்படும்.

கொரோனா காலத்தில் சாதாரண மக்களுக்கு நீங்கள் உதவவில்லை. நீங்கள் யாருக்கான பிரதமர்? நீங்கள் இந்திய மக்களுக்குப் பிரதமரா? அல்லது குறிப்பிட்ட 2 அல்லது 3 தொழிலதிபர்களுக்கு மட்டும் பிரதமரா?

கடைசியாக ஒரு கேள்வி. நம் எல்லையில் சீனா என்ன செய்து கொண்டிருக்கிறது? நம் நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் சீனாவைப் பற்றி ஏன் இதுவரைக்கும் பிரதமர் வாய் திறக்காமல் இருக்கிறார்.

போராடும் விவசாயிகளை நினைத்துப் பெருமைப்படுகிறோம். நாங்கள் முழு ஆதரவைக் கொடுத்து வருகிறோம். பஞ்சாபில் யாத்திரை மேற்கொண்ட போது, இந்த பிரச்சினையை எழுப்பினேன். தொடர்ந்து போராடி வருகிறோம். நான் சொல்வதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். 3 வேளாண் சட்டங்களையும் இந்த அரசு திரும்பப் பெற வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும்.

இவ்வாறு ராகுல் காந்தி பேட்டியளித்தார்.

The post தமிழ் உணர்வையும், தமிழர் கலாச்சாரத்தையும் நசுக்க நினைப்பது நாட்டுக்குச் செய்யும் கேடு : பா.ஜ.க.வுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

தலைவர் ராகுல் காந்தியை வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் மதுரைக்கு அணிதிரண்டு வர தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு!
மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 2004 – 2014வரை தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. பா.ஜ.க. ஆட்சி செய்த 2015, 2016இல் ஏன் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை! தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி!

தமிழர் திருநாளாம் தைத் திருநாளில் பொங்கல் பண்டிகை சமயத்தில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நேரில் காண, தலைவர் ராகுல்காந்தி நாளை அவனியாபுரம் வருகை புரிகிறார் என்ற மகிழ்ச்சியான செய்தி தமிழக மக்களிடையே வரலாறு காணாத வரவேற்பையும், உற்சாகத்தையும் பெற்றிருக்கிறது. தமிழர்களின் நாகரீகம், பண்பாட்டை போற்றுகிற வகையில் அவரது வருகை அமைந்திருக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையையும், கலாச்சாரத்தையும், பெரிதும் மதிக்கிற பாரம்பரியத்தில் வந்த தலைவர் ராகுல்காந்தி, தமிழர்களின் வீர விளையாட்டை நேரில் கண்டு மகிழ்வதற்காகவே வருகை புரிகிறார்.

ஆனால், தலைவர் ராகுல்காந்தி ஜல்லிக்கட்டு நிகழ்வில் பங்கேற்பதைச் சகித்துக் கொள்ளாத பா.ஜ.க. உள்ளிட்ட வகுப்புவாத சக்திகள், ஊடகங்களின் மூலமாக அவதூறு செய்திகளைப் பரப்பி வருகின்றன. ஜல்லிக்கட்டு விளையாட்டிற்குத் தடை விதித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி அதில் பங்கேற்க என்ன உரிமை இருக்கிறது ? என்ற அர்த்தமற்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றனர்.

மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் எந்த தடையும் இல்லாமல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதை எவராவது மறுக்க முடியுமா ? மதுரை நீதிமன்றத்தால் 2006 இல் விதிக்கப்பட்ட தடையை மேல்முறையீடு செய்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. அதேபோல, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் 2009 இல் நிறைவேற்றப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடர்ந்து நடைபெற அன்றைய தி.மு.க. ஆட்சியில் சட்டப் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. இதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கையும், உச்ச நீதிமன்றத்தில் வாதாடி, வென்று மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் ஆதரவோடு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதை எவரும் மறுத்திட இயலாது.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு 11.7.2011 ஆம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கை தடையாக இருந்ததாகக் கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற செயலாகும். அந்த அறிவிக்கைக்குப் பிறகு 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் மதுரை உயர்நீதிமன்ற ஆணையின் பேரில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்ததை பா.ஜ.க.வினர் மூடி மறைத்துப் பேசுவதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால், மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் 2015, 2016 ஆம் ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனதற்குப் பதில் கூறாத பா.ஜ.க., தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்.

கடந்த 2014 இல் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடையாணை விதித்த பிறகு, அதை நீக்குவதற்கு மத்திய பா.ஜ.க. அரசு உருப்படியான சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்காத காரணத்தினாலேயே தொடர்ந்து மூன்றாண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த முடியாத அவலநிலை ஏற்பட்டது.

1960 இல் கொண்டு வரப்பட்ட மிருகமாவதைத் தடுப்பு சட்டப் பிரிவுகளின் அடிப்படையிலேயே உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டிற்குத் தடை வழங்கியதை இங்கு நினைவுகூர விரும்புகிறேன். இதைக் கருத்தில் கொண்டு இச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருந்தால் மட்டுமே உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்கொண்டு 2015, 2016 இல் ஜல்லிக்கட்டு நடத்தியிருக்க முடியும். அதற்கு மாறாக, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் சாதாரண துறை சார்ந்த அறிவிக்கையின் மூலம் எதிர்கொண்டதால் அதை உச்ச நீதிமன்றம் தடை செய்து விட்டது. இது தமிழக பா.ஜ.க.வை திருப்திப்படுத்துவதற்காகவே, அத்தகைய கபட நாடகத்தை அன்று மத்திய பா.ஜ.க. அரசு அரங்கேற்றியது.

உச்ச நீதிமன்றம் தடை விதித்து 32 மாதங்கள் ஆனபிறகும், அதைச் செயலிழக்கச் செய்ய மத்திய பா.ஜ.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டுமென அன்றைய மத்திய பா.ஜ.க. அரசு மனப்பூர்வமாக நினைத்திருந்தால் நாடாளுமன்றத்தில் மிருகமாவதைத் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருக்க முடியும். இல்லையெனில் எதற்கெடுத்தாலும் அவசரச் சட்டம் இயற்றுகிற பா.ஜ.க. அரசு, தமிழக மக்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்றுள்ள ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கலாம். இதை அன்றைய பா.ஜ.க. அரசு ஏன் செய்யவில்லை என்பதற்குக் காங்கிரஸ் கட்சியை இன்று விமர்சனம் செய்கிறவர்கள் பதில் கூற முடியுமா ?

இத்தகைய அவசரச் சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அன்று நாடாளுமன்றத்தில் 50 உறுப்பினர்களைப் பெற்றிருந்த அ.தி.மு.க., எந்த அழுத்தத்தையும் கொடுக்காதது ஏன் ? இந்த போக்கை எதிர்த்துத் தான் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக 2017 ஜனவரி 8 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை 15 நாட்கள் சென்னை மெரினா கடற்பரப்பில் இரவு-பகலாக 20 லட்சம் மக்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். இதற்கு பிறகும் மத்திய பா.ஜ.க. அரசு ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக அவசரச் சட்டம் கொண்டு வர மறுத்துவிட்டது. மெரினா புரட்சியை எதிர்கொள்ள முடியாத அ.தி.மு.க. அரசு இறுதியாக அவசரச் சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்தது. இதற்காக அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மாபெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டு, அதன் விளைவாகவே ஜல்லிக்கட்டு போட்டி நடத்துகிற உரிமையை தமிழ் மக்கள் பெற்றார்கள் என்கிற வரலாற்றை எவரும் மறைத்து விட முடியாது.

எனவே, தமிழ் மக்களுக்கும், பண்பாட்டு, கலாச்சாரத்திற்கு எதிராக பா.ஜ.க. செயல்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த முட்டுக்கட்டை போட்டதை மூடி மறைத்துவிட்டு காங்கிரஸ் மீது பழிபோடுவதை நிறுத்திக் கொள்வது நல்லது. உண்மையை எவராலும் மறைக்க முடியாது. தமிழர்களின் வீர விளையாட்டை நேரில் காண வருகை புரிகிற தலைவர் ராகுல்காந்தியை வரவேற்க நாளை மதுரை விமான நிலையத்தில் பெருந்திரளாக அணி திரள்வோம். தமிழர்களின் பண்பாட்டைப் போற்றுகிற வகையில் அவரது பயணம் அமைந்திருப்பதைப் பெருமைப்படுத்துகிற வகையில் அணி, அணியாக திரண்டு வரும்படி காங்கிரஸ் நண்பர்களை அன்போடு அழைக்கிறேன்.

The post தலைவர் ராகுல் காந்தியை வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் மதுரைக்கு அணிதிரண்டு வர தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.