Government Archives - தேசிய முரசு - Desiya Murasu

விவசாய சட்டங்களை திரும்பப் பெற பிரதமர் முடிவு செய்தபோது அம்பானியும் அதானியும் தடுத்தனர் : பாரதிய கிஸான் சங்க தலைவர் அதிர்ச்சி தகவல்
3 விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற பிரதமர் மோடி முடிவு செய்தபோதும், அம்பானியும் அதானியும் கொடுக்கும் அழுத்தத்தால் அதனைச் செயல்படுத்த முடியவில்லை என்று பாரதிய கிஸான் சங்கத்தின் தலைவர் ஜோகீந்தர் சிங் உக்ராஹன் புதிய தகவலை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

பஞ்சாபில் ஜலந்தர் மாவட்டத்தில் நடந்த விவசாயிகள் ஒற்றுமை பேரணியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:

நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் வியப்படைவீர்கள். மத்திய விவசாய அமைச்சர் டோமர் என்னிடம் தெரிவித்த விஷயத்தைக் கூறுகிறேன். 3 விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற பிரதமர் மோடி தயாராக இருந்ததாகவும், மறுநாளே அம்பானியும் அதானியும் பிரதமரும் அழுத்தம் கொடுத்துத் திரும்பப் பெறவிடாமல் செய்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

நவீன இயந்திரங்களைப் புகுத்தியதால் விவசாயத் தொழிலாளர்கள் தங்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடனால் தற்கொலை செய்து கொண்டார்கள். கடந்த 2014 ஆம் ஆண்டில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 2 லட்சம் விவசாயிகள், விவசாயத்தை விட்டு வெளியேறி விட்டார்கள். இந்நிலையில், புதிய 3 விவசாயச் சட்டங்களைச் செயல்படுத்தினால், நினைத்துக்கூடப் பார்க்க முடியாத கஷ்டங்களை விவசாயிகள் அனுபவிக்க நேரிடும்.

டெல்லியில் நடந்த விவசாய போராட்டம் மற்றும் மனித உரிமை மீறல் குறித்த விவாதத்தை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதித்தது எங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி. இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளில் இந்திய தூதரகங்களுக்கு முன்பு விவசாயிகளை ஆதரித்துப் போராட்டம் நடத்தியுள்ளனர். இது எங்களுக்குப் பலமாக இருக்கிறது.

தேசிய பிரச்சினையாகத் தொடங்கிய விவசாயிகள் பிரச்சினை, தற்போது உலகப் பிரச்சினையாக மாறியிருக்கிறது. மக்களின் ஏகோபித்த ஆதரவை விவசாயிகள் போராட்டம் பெற்றுள்ளது”என்றார்.

சம்யுக் கிஸான் மோர்ச்சா தலைவர் ருல்டு சிங் மான்ஸா கூறும்போது, ” ஏற்கெனவே 2 உலகப் போரைப் பார்த்திருக்கிறோம். இப்போது நடக்கும் போர் வேறுபட்டது. இங்கிலாந்து நாடாளுமன்றமோ, அல்லது வேறு உலகத் தலைவர்களோ நம் ஆதரிப்பது பெரிய வெற்றி அல்ல. மக்கள் ஆதரவைத் திரட்டுவதே உண்மையான வெற்றி. உலக நாட்டுத் தலைவர்கள் நம்மை ஆதரிக்கிறார்கள். ஆனால், தங்கள் நாட்டு மக்களை வீதிக்கு வந்து போராட அந்த தலைவர்கள் அனுமதிக்கவில்லை. உண்மையான போராட்டமே ஜனவரி 26 ஆம் தேதிக்குப் பிறகு தான் தொடங்கியது” என்றார்.

தொழிலாளர் நலச் செயற்பாட்டாளர் நோடீஸ் கவுர் கூறும்போது, ” மோடி அரசின் தொழிலாளர் சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியபோது எதிர்த்ததால் என்னைக் கைது செய்தனர். கொரோனா காலத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். நிலுவையில் உள்ள சம்பளத்தையும் தொழிலாளர்களுக்குத் தர மறுத்தனர். விவசாயிகள் போராட்டத்திலும் நான் தொடர்ந்து பங்கேற்று வருகிறேன். அதேசமயம், தொழிலாளர் சட்டத்தை எதிர்த்தும் தொடர்ந்து போராடுவேன்” என்றார்.

The post விவசாய சட்டங்களை திரும்பப் பெற பிரதமர் முடிவு செய்தபோது அம்பானியும் அதானியும் தடுத்தனர் : பாரதிய கிஸான் சங்க தலைவர் அதிர்ச்சி தகவல் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

விவசாயச் சட்டங்கள் குறித்த பிரச்சாரத்துக்கு மட்டும் ரூ. 8 கோடி செலவு : மத்திய அரசு தகவல்
விவசாயச் சட்டங்கள் குறித்த பிரச்சாரத்துக்காக இதுவரை ரூ.8 கோடி செலவு செய்துள்ளதாக மத்திய விவாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் டோமர் தெரிவித்துள்ளார்.

பயிர்க் கடன்களைக் கட்ட முடியாமல் நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. விவசாயம் பொய்த்துப் போவதால், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் இத்தகைய பரிதாப முடிவை விவசாயிகள் எடுக்கின்றனர்.

விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க மத்திய அரசு இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

இதனைத் தொடர்ந்து, விவசாயச் சட்டங்களைக் கொண்டு வந்து பெரும் தொழிலதிபர்களுக்குச் சாதகமாக நடந்து கொள்ளும் மத்திய அரசைக் கண்டித்து 3 மாதங்களுக்கு மேலாக கடும் குளிரிலும் டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களது போராட்டத்தை நசுக்குவதிலேயே மத்திய அரசு குறியாக இருக்கிறதேயொழிய, அவர்களது கோரிக்கையை செவிமடுக்கத் தயாராக இருக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் தான், விவசாயச் சட்டங்கள் குறித்த பிரச்சாரத்தை முன்னெடுக்க இதுவரை ரூ.8 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் டோமர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்பி சையது ஹுசைன் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்வியில், ” விவசாயச் சட்டங்களைக் கொண்டுவந்த பின், 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2021 ஜனவரி மாதம் வரை இது குறித்த பிரச்சாரத்துக்கு எவ்வளவு செலவானது? என்று கேட்டிருந்தார்.

இதற்குப் பதில் அளித்த மத்திய அமைச்சர் நரேந்திர சிங் டோமர், ” விவசாயச் சட்டங்கள் குறித்த கட்டுக்கதைகளை முறியடிக்கவும், உண்மை நிலவரத்தைத் தெரிவிக்கவும் இந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழி நாளிதழ்களில் விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இத்தகைய விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. இதுதவிர, 3 விவசாயச் சட்டங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல, 2 குறும்படங்கள் எடுக்கப்பட்டு காட்சி ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்டது. இதற்கு விவசாய, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறையிலிருந்து ரூ. 67 லட்சத்து 99 ஆயிரத்து 750 செலவு செய்யப்பட்டது. பத்திரிக்கைகளுக்கான விளம்பரத்தை உருவாக்குவதற்காக மட்டும் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்து 568 செலவானது. இதோடு சேர்த்து. மொத்தம் ரூ.8 கோடி அளவுக்கு விளம்பரங்களுக்காகச் செலவு செய்யப்பட்டது” என்றார்.

இந்த விளம்பரச் செலவை ஈடுகட்ட அனைத்து அரசுத் துறைகள், ஏஜென்ஸிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகத்தை நாடப்பட்டதா? என்று காங்கிரஸ் எம்பி சையது ஹுசைன் எழுப்பிய மற்றொரு கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் டோமர், ” மற்ற துறைகள் ஏதும் அந்த விளம்பரச் செலவைச் செய்யவில்லை” என்று பதில் அளித்தார். எனினும், அவை தங்கள் சமூக வலைத்தளங்களில் விவசாயச் சட்டங்களின் பயன் குறித்த தகவல்களை வெளியிட்டதாக மேலும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங் மற்றும் காங்கிரஸ் எம்பி கேசி. வேணுகோபால் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த அமைச்சர் டோமர், ” கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2021 ஆம் ஆண்டு ஜனவரி வரை, விவசாயச் சட்டங்களை எதிர்த்துப் போராடியபோது எத்தனை விவசாயிகள் இறந்தார்கள் என்பது குறித்தோ, எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது குறித்தோ மத்திய அரசிடம் ஆவணங்கள் ஏதும் இல்லை” என்று பதில் அளித்தார். அமைச்சர் மேலும் கூறும்போது, ” இது குறித்து எந்த தகவலும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாகவும், போராட்டத்தின் போது 2 விவசாயிகள் இறந்ததாகவும், ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் டெல்லி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். போராட்டத்தின் போது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை ” என்று குறிப்பிட்டார்.

விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க, விவசாயிகளின் நல நிதியிலிருந்தே விளம்பரங்களுக்குச் செலவழிக்கப்பட்டுள்ளதை மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் டோமரே மக்களவையில் கூறுகிறார். ஊடகங்களைப் பயன்படுத்திப் போராட்டத்தை ஒடுக்க முயற்சிக்கும் இந்த அரசிடம், விவசாயிகள் எந்த அடிப்படையில் நீதியை எதிர்பார்க்க முடியும்?

ஒருபுறம் போராட்டத்தை நசுக்கிக் கொண்டு, மறுபுறம் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது?

The post விவசாயச் சட்டங்கள் குறித்த பிரச்சாரத்துக்கு மட்டும் ரூ. 8 கோடி செலவு : மத்திய அரசு தகவல் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

ராக்கெட் வேகத்தில் ஏறும் எரிபொருட்கள் விலை: 15 முறை கலால் வரியை உயர்த்தி மக்களை வதைத்த மோடி அரசு
இந்தியா முழுவதும் எரிபொருள் விலை டிசம்பர் மாதத்தில் ராக்கெட் வேகத்தில் எகிறியுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டை விட, எரிபொருட்களுக்கான மத்திய கலால் வரி 5 மடங்கு அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. மக்களின் நலன் கருதி எரிபொருள் விலையைக் குறைக்க மத்திய அரசு மறுத்து வருகிறது.

கொரோனா பரவல் மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த பொது முடக்கத்தால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. வேலை இழப்பும் அதிகரித்துள்ளது.

பாஜக எதிர்க்கட்சியாக இருந்தபோது, பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மத்திய கலால் வரியை சிறிய அளவில் ஏற்றியபோது, அதனை அக்கட்சி கடுமையாக எதிர்த்தது. அப்போது, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்ததால், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. எனினும், டீசல் மற்றும் வீட்டு உபயோகத்துக்குப் பயன்படும் மண்ணெண்ணெய், கேஸ் சிலிண்டர் ஆகியவற்றுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மானியம் அளிக்கப்பட்டது.

ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசோ, மானியத்தைக் குறைப்பதில் அல்லது முழுமையாகத் திரும்பப் பெறுவதில் ஆர்வம் காட்டி வருகிறது. சர்வதேசச் சந்தையில் எரிபொருள்கள் விலை கடந்த 6 ஆண்டுகளாகக் குறைவாக இருந்தபோதிலும், இந்திய நுகர்வோர் அதிக விலை கொடுத்து எரிபொருட்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பரமபத ஆட்டம்

• தற்போது பெட்ரோலுக்கான கலால் வரி ரூ.32.98. கடந்த 2014 மே மாதம் கலால் வரி ரூ.9.48 ஆக இருந்தது.

• தற்போது டீசலுக்கான கலால் வரி ரூ. 31.83. கடந்த 2014 மே மாதத்தில் ரூ. 3.56.

• கடந்த 2014 ஆம் ஆண்டைவிட, பெட்ரோலுக்கான கலால் வரி 348 சதவிகிதம் அதிகம்.

• ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இரண்டாவது முறை ஆட்சி நடத்தியபோது, டீசலுக்கு ரூ.3.56 கலால் வரி விதிக்கப்பட்டது. ஆனால், தற்போது டீசலுக்கு அதைவிட கூடுதலாக 894 சதவிகிதம் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது.

• கடந்த 2014 ஆம் ஆண்டு பெட்ரோலுக்கு விதிக்கப்பட்ட ரூ.9.48 வரி வருவாயிலிருந்து ரூ. 6.35 ஒட்டுமொத்த வரி வருவாய்க்குச் சென்றது.

• 2020 – ல் பெட்ரோலுக்கு விதிக்கப்பட்ட ரூ.32.98 -லிருந்து ரூ.2.98 மட்டுமே ஒட்டுமொத்த வரி வருவாய்க்கு சென்றுள்ளது.

2011-2013 ஆம் ஆண்டுக்கு இடையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 110 டாலருக்கு மேல் ஏற்ற, இறக்கமாக இருந்தது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மத்திய அரசின் நிதி இருப்பு மற்றும் பற்றாக்குறைக்கு எண்ணெய் இறக்குமதிச் செலவு அச்சுறுத்தலாக இருந்தது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் அதிக அளவில் அதிகரித்ததால், மானியமும் அதிகரித்து அரசுக்கு நிதிப் பற்றாக்குறையை ஏற்படுத்தியது. எனினும், 25-06-2010 அன்று பெட்ரோல் விலையையும், 19-10-2014 அன்று டீசல் விலையையும் அரசு கட்டுப்படுத்தியது. ஆனால், சில ஆண்டுகளாக எரிபொருள் மட்டுமே மத்திய அரசின் பெரும் வருவாயாக மாறியிருக்கிறது. எரிபொருளுக்கான கலால் வரியைப் பொறுத்தவரை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து நேரடியாக வருகிறது. இது மற்ற வரிகளைப் போல் அல்லாமல், விரைவாக வருகிறது. பிபிஏசி எனப்படும் பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுத் துறையின் தரவுகளின்படி, கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 107.14 டாலராக (ரூ. 6,655.54) இருந்தது. அதேசமயம், 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 41.53 டாலராக(ரூ.3,050) குறைந்தது. (இன்றைய கச்சா எண்ணை விலை விவரம் பிபிஏசியின் இணையத்தில் உள்ளது.)

கடந்த 15-03-2014 அன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.20 ஆகவும், டீசல் விலை ரூ.55.48 ஆகவும் இருந்தது. ஆனால், இன்றைக்கு வரலாறு காணாத வகையில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 90.34 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 80.51 ஆகவும் உயர்ந்துள்ளது.

டெல்லியில் கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.83.71 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 73.87 ஆகவும் இருந்தது. எனினும், பெட்ரோல் அடிப்படை விலை லிட்டருக்கு ரூ.27.74 ஆகவும், சில்லரை விற்பனை விலை 33.1 சதவிகிதமாகவும் உள்ளது. இதன்படி, டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.83.71 -க்கும் விற்கப்படுகிறது. டீசலைப் பொறுத்தவரை, அடிப்படை விலை ரூ.28.66 ஆகவும், சில்லரை விற்பனை 38.8 சதவிகிதமாகவும் நிர்ணயிக்கப்பட்டு ரூ.73.87-க்கு விற்கப்படுகிறது.

உதாரணமாக, டெல்லியில் விற்கப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய அரசு ரூ.32.98 கலால் வரியாக வசூலிக்கிறது. இது, அடிப்படை விலையிலிருந்து 119 சதவிகிதம் அதிகமாகும். மேலும், மாநில அரசுகள் விதிக்கும் மதிப்புக் கூட்டு வரி,அடிப்படை விலையைவிட 70 சதவீதம் அதிகமாகும்.

அதேசமயம், டீசலுக்கு மத்திய அரசு விதிக்கும் கலால் வரி, அடிப்படை விலையிலிருந்து 111 சதவிகிதம் அதிகமாகும். டீசலுக்கு மாநில அரசு விதிக்கும் ரூ.10.85 சதவிகித வரி என்பது, அதன் அடிப்படை விலையிலிருந்து 37.9 சதவிகிதம் அதிகமாகும்.

பெட்ரோலிய அமைச்சகத்தின் திட்டம் மற்றும் பகுப்பாய்வு துறையின் தரவுகளின்படி, கடந்த 2019-20 ஆம் ஆண்டில் எரிபொருட்களுக்கு விதிக்கப்பட்ட கலால் வரியின் மூலம் மத்திய அரசு ரூ. 2.25 லட்சம் கோடி வசூலித்துள்ளது. 2020-21 பட்ஜெட்டில் எரிபொருட்கள் மூலம் ரூ. 2.67 லட்சம் கோடி வசூலிப்பதற்கான அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் வருவாய் திட்டமிடலான ரூ.16,539 லட்சம் கோடிகளில், இது 16.3 சதவிகிதமாகும்.

கலால் வரியை மட்டும் உயர்த்தியதோடு நிற்காமல், மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளும் ஒட்டுமொத்த வரி வருவாயையும் மத்திய அரசு மாற்றியமைத்தது. மத்திய அரசுக்குச் செல்லும் செஸ் வரியும் அதிகரித்தது. பல்வேறு திட்டங்களுக்காக மாநில அரசுடன் செஸ் வரியைப் பகிர்ந்து கொள்வதற்கான கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபிறகு, எரிபொருட்களுக்கான கலால் வரியை 15 முறை ஏற்றியுள்ளது. இந்நிலையில்,பெட்ரோலியப் பொருட்களையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

பெட்ரோலுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரி, அடிப்படை விலையிலிருந்து 189 சதவிகிதம் அதிகமாக உள்ளது. பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரையறைக்குள் கொண்டு வந்தால் மட்டுமே இந்த பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்.

The post ராக்கெட் வேகத்தில் ஏறும் எரிபொருட்கள் விலை: 15 முறை கலால் வரியை உயர்த்தி மக்களை வதைத்த மோடி அரசு appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

டெல்லி : பிரதமர் மோடியின் ஆழ்ந்த உறக்கத்தைக் கலைத்த விவசாயிகள் போராட்டம்
பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் நாட்டின் பல பகுதிகளிலிருந்து டெல்லியில் திரண்டு, கடந்த நவம்பர் 27 ஆம் தேதி விவசாயிகள் நடத்திய போராட்டம், பிரதமர் மோடியின் ஆழ்ந்த உறக்கத்தைக் கலைத்துள்ளது.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளைக் கால்நடைகளை அடைத்து வைப்பதைப் போல், 36 மணி நேரம் அடைத்து வைத்திருக்கிறது டெல்லி காவல் துறை.

விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு டெல்லி அரசு ஒத்துழைப்புக் கொடுத்தாலும், அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இதில் உடன்பாடு இல்லை என்றே தெரிகிறது. டெல்லி காவல் துறை உள்துறை அமைச்சகத்துக்குக் கீழ் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் உள்ள 9 மைதானங்களில் விவசாயிகளை அடைத்து வைக்க டெல்லி மாநில அரசு அனுமதிக்கவில்லை. எனினும், உள்துறை அமைச்சகத்தின் உத்தரவைப் பெற்று, டெல்லி துணை நிலை ஆளுநர் மூலம் உத்தரவு பெற்று, விவசாயிகளை மைதானங்களில் அடைத்து வைத்தனர்.

மேலும், பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகளுக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவாக இருந்ததும், விவசாயிகள் போராட்டத்தை முன்னின்று நடத்தும் ஸ்வராஜ் மஞ்ச் கிஷான் அமைப்பின் செயற்பாட்டாளரும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கமான ஆம் ஆத்மி கட்சியின் யோகேந்திர யாதவும், டெல்லி அரசின் தயக்கத்துக்குக் காரணம்.

கடந்த செப்டம்பர் மாதம் 3 விவசாயச் சட்டத் திருத்தங்களையும் கொண்டுவந்ததிலிருந்து, ஆம் ஆத்மி கட்சியும், ஸ்வராஜ் மஞ்ச் இயக்கமும் இணைந்து பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது. இவர்கள் நடத்தும் போராட்டங்களில் அதிகமான நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகள் பெரும்பாலும் பங்கேற்று வருகின்றனர்.

5 ஏக்கருக்குக் குறைவான நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகள் குறைந்த அளவில் போராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர். விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்களில், தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கவிடாமல் செய்யும் இடைத்தரகர்களின் தலையீடு அவர்களைப் பாதிப்படையச் செய்துள்ளதே இதற்குக் காரணம். சந்தைக்குழுக்களுக்கு வெளியே நல்ல விலைக்கு விளைபொருட்களை விற்று வருகிறார்கள். அதனால், புதிய விவசாய சட்டத்தில் சந்தைக் குழுக்களுக்கு வெளியே விவசாயிகள் நேரடி விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டதை அவர்கள் வரவேற்கிறார்கள்.

டெல்லி போராட்டத்தில், பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தரப்பிரதேச மாநிலங்களை உள்ளடக்கிய பாரதிய கிஷான் சங்கம் தலைமையிலான விவசாய அமைப்புகளை மத்திய அரசு எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

போர்க்களத்துக்குப் புறப்பட்ட வீரர்களைப் போல் திரண்டு வந்த விவசாயிகளைப் பார்த்து டெல்லி காவல் துறை திகைத்துப் போனது. டெல்லி எல்லைக்குள் வந்து கொண்டிருந்த விவசாயிகளைத் தடுக்க காவல் துறை மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், ஒரு விஷயத்தில் மட்டும் தெளிவாக இருந்தார்கள். குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற அம்சம் சட்டத்தில் இடம் பெறாதது, தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருந்தார்கள்.

இருந்தாலும், குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்று வெறும் வாயில் சொல்லிக் கொண்டிருக்கும் பிரதமர் மோடியின் பேச்சை நம்ப விவசாயிகள் தயாராக இல்லை. 3 விவசாயச் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்பதே அவர்களது ஒட்டுமொத்த குரலாக இருக்கிறது.

மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தால் தான் இந்த விவசாயிகள் விரோதச் சட்டங்களை ரத்து செய்ய முடியும் என்பதும் விவசாயிகளுக்குப் புரிந்திருக்கிறது. ஆனால், 2024 ஆம் ஆண்டு வரை அதற்குச் சாத்தியமில்லை. குறிப்பாக, பெரிய அளவிலான விளைவுகள் ஏற்படும் வரை, இந்த 3 சட்டங்களையும் பாஜக அரசு ரத்து செய்வது சாத்தியமில்லை.

விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்கள் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை இல்லையென்றால், அரசின் கொள்முதல் முறையைப் பெரிய கார்பரேட் நிறுவனங்கள் பலவீனப்படுத்திவிடும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அஞ்சுகிறார்கள். கோதுமை மற்றும் அரிசியைக் குறைந்தபட்ச ஆதரவு விலை மூலமே அரசு தொடர்ந்து வாங்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள். அமேசான் மற்றும் ரிலையன்ஸ் மூலம் தங்கள் விளைபொருட்களை விற்க அவர்கள் விரும்பவில்லை.

பெரும் தொழிலதிபர்களுடன் மட்டுமே மோடி அரசு நட்புடன் இருப்பதாகவும், பெரிய அல்லது சிறு விவசாயிகள் பற்றி அவருக்கு அக்கறையில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். விவசாய சட்டங்களை பெரும்பாலான மாநிலங்கள் எதிர்க்கின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட பீகார் பின்னர் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் விவசாயிகளையும், வர்த்தகர்களையும் மீறி. விவசாயச் சந்தைகளைப் பெரிய நிறுவனங்கள் ஆக்கிரமிக்கவே இந்தச் சட்டங்கள் வழிவகுக்கின்றன என்பதில் விவசாயிகள் உறுதியாக இருக்கின்றனர்.

டெல்லியில் திரண்ட விவசாயிகளின் மனோதிடம், போர்க் குணம், அடக்குமுறையை எதிர்கொண்ட விதம், பிரதமர் மோடியின் ஆழ்ந்த உறக்கத்தைக் கலைத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

The post டெல்லி : பிரதமர் மோடியின் ஆழ்ந்த உறக்கத்தைக் கலைத்த விவசாயிகள் போராட்டம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

”பா.ஜ.க.-விடமிருந்து உங்கள் மகள்களைக் காப்பாற்றுங்கள்” : எரிமலையாய் வெடிக்கும் எழுத்தாளர் தேவனூரா
ஹத்ராஸில் 19 வயது தலித் பெண்ணின் இறப்பை நினைத்துப் பார்க்கும் போது திகிலூட்டுவதாக உள்ளது. இல்லை, அது இயற்கையான இறப்பு இல்லை. அது கொலை-உத்தரப்பிரதேச அரசின் பக்கபலத்துடன்  காவல் துறை  செய்த கொலை.

ஒரு நிமிடம் சிந்திப்போம் : கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்முறை செய்யப்பட்ட தலித் பெண், புகார் கொடுப்பதற்காகப் பல மணி நேரம் காவல் நிலையம் முன்பு காத்துக் கிடந்துள்ளார். காவல் நிலையம் கொண்டு வரப்பட்டபோது, அந்தப் பெண்ணுக்கு நினைவு இருந்தது. ”ஆம், என்னை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தனர்” என அந்தப் பெண்ணின் வாக்குமூலம் காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிமுறைப்படி, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கான மையத்துக்கு அந்தப் பெண்ணை அனுப்பி வைத்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை. விதிமுறைகளின்படி, 24 மணி நேரத்துக்குள் அந்தப் பெண்ணை பாலியல் தாக்குதல் குறித்த தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, பரிசோதனையைத் தாமதப்படுத்தி, விந்து தொடர்பான தடயவியல் ஆதாரங்களை அழிக்க முயன்றுள்ளனர்.

கட்டுரையாளர்: தேவனூரா மகாதேவா

அந்த பெண் அளித்த மரண வாக்குமூலத்தில், தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதையும், அதனைச் செய்தவர்களின் பெயர்களையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த மரண வாக்குமூலத்தைக் கண்டுகொள்ளாமல், அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்பதை தடயவியல் அறிக்கை தெளிவுபடுத்துவதாக ஊடகங்களிடம் தெரிவித்தார் ஓர் உயர் காவல் துறை அதிகாரி.

பிரேதப் பரிசோதனை அறிக்கையில், கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த பெண் இறந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் விந்து ஏதும் தென்படவில்லை என்றும் தடயவியல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல…! உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை, ஒரு மருத்துவமனையிலிருந்து மற்றொரு மருத்துவமனைக்குக் காவல் துறையினர் மாற்றினர். அந்த பெண்ணின் குடும்பத்தினரை மாவட்ட மாஜிஸ்திரேட் மிரட்டும் காணொளியும் வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்வுகள் எல்லாம் காவல் துறையினருக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அந்தப்  பெண் உயிருடன் இருந்தாலோ அல்லது அவரது உடலை விரைந்து எரிக்காவிட்டாலோ, அந்தப் பெண்ணே சாட்சியாக்கிவிடக்கூடும் என்று பயந்துள்ளனர். எனவே, தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சாட்சியங்களை அழிப்பதற்கான அனைத்தையும் செய்திருக்கின்றனர்.

அந்தப் பெண்ணின் மரணத்தோடு மாநில அரசின் கொடுமை நின்றுவிடவில்லை.  இறந்தபிறகு காட்டுமிராண்டித்தனமான வன்முறையை நிகழ்த்தி, பிரேதப் பரிசோதனையில் வெளிப்படக்கூடிய அத்துனை ஆதாரங்களையும் காவல் துறை அழித்துள்ளது. அந்தப் பெண்ணின் உடலை எடுத்து வந்து அதிகாலை 2.30 மணிக்கு பெட்ரோல் ஊற்றிக் காவல் துறையினரே எரித்துள்ளனர்.  ”இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டும், இப்போது எரிக்காதீர்கள்” என்று அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் கதறிய கதறல், காவல் துறையினரின் காதுகளில் கேட்கவே இல்லை.

அந்தப் பெண்ணின் உடலை எரிக்கும் முன், குடும்பத்தாரைத் தடுத்ததோடு மட்டுமல்லாமல், அவர்களை வீட்டில் வைத்துப் பூட்டி, தங்கள் மகளின் முகத்தைக் கடைசியாக ஒருமுறை பார்க்கக் கூட அனுமதிக்கவில்லை அந்த காக்கி உடை பாவிகள்.

”மகள் முகத்தில் மஞ்சளைத் தடவிக் கொள்கிறேன்” என்று இறந்த பெண்ணின் தாயார் காவல் துறை அதிகாரிகளின் காலில் விழுந்து கெஞ்சினார். கல்நெஞ்சக்காரர்கள் அதனைக் கண்டுகொள்ளாமல் அந்த பெண்ணின் உடலை எரித்துவிட்டனர்.

இந்த சூழ்நிலையில், ஏதாவது நீதி  கிடைக்கும் என்று எவராலும் எதிர்பார்க்க முடியுமா? ஒருவேளை நீதி வழங்கப்பட்டால் கூட, அந்தப் பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் கிடைக்குமா? இது கடினம்,மிகவும் கடினம். இப்போது செய்திகளில், ”பாஜகவிடமிருந்து உங்கள் மகள்களைக் காப்பாற்றுங்கள்” என்ற புதிய கோஷங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றன.

அதேநேரத்தில், நமது நீதி பரிபாலன முறைகள் கூட அச்சுறுத்துகின்றன. சமீபத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில், சம்பவ இடத்திலிருந்த அனைவரையும் நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது. மறுபுறம், எல்கர் பரிஷத் வழக்கில் எந்த வன்முறையும் நடக்காத போதிலும், ஆனந்த் டெல்டும்ப்டே போன்றவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாத போதிலும், அவர்களை நீதிமன்றம் தண்டித்து சிறைக்கு அனுப்பியுள்ளது. தற்போதைய நீதி பரிபாலன முறை, பழைய மனு தர்ம முறையைப் போல், சாதி அடிப்படையில் தண்டனை வழங்குவது போல் தெரிகிறது.

எந்த திசையை நோக்கி நாம் போய்க் கொண்டிருக்கிறோம்? முன்னேயா அல்லது பின்னேயா? குற்றவாளி சாட்சிக் கூண்டில் நிற்பது போல், இன்று நமது நீதித்துறையும் நீதி பரிபாலன முறையும் நீதியின் முன்பு நின்று கொண்டிருக்கின்றன, நாடு திசைமாறிப் போய்க் கொண்டிருக்கிறது.

இறுதியாக என்னிடம் உள்ள ஒரு கோரிக்கை:

அந்த பிஞ்சு உடல் காவல் துறையினரால் எரிக்கப்பட்ட இடத்திலிருந்தோ,  நிலத்தில் அவள் நடந்து சென்ற இடத்திலிருந்தோ ஒரு பிடி மண்ணைக் கொண்டு வந்து, அந்த பெண்ணின் சிலையுடன் கூடிய நினைவுச் சின்னத்தை உருவாக்குவோம்.

எரிக்கப்படும் முன்பு, மகள் முகத்தில் மஞ்சள் பூசவேண்டும் என அந்தத் தாய் விரும்பினாள். நாம் எல்லோரும் சேர்ந்து அந்தப் பெண் சிலையாக நின்றபின்,  முகத்தில் மஞ்சளைப் பூசுவோம். இதன் மூலம் அந்தப் பெண்ணிடம் நாம் மன்னிப்பு கேட்போம்; அஞ்சலி செலுத்துவோம்.

இவ்வாறு நாம் செலுத்தும் அஞ்சலி, அந்த பெண்ணின் பெற்றோருக்கும் தாய் திருநாட்டுக்கும் ஆறுதலைத் தருமா?

இதுதான் நமது கேள்வி. இது தான் ஒட்டுமொத்த நாட்டின் மனசாட்சியின் கேள்வி.

கட்டுரையாளர்: தேவனூரா மகாதேவா (பத்மஸ்ரீ  மற்றும் சாகித்ய அகாடமி விருது பெற்ற கன்னட எழுத்தாளர். நாட்டில் சகிப்பின்மை அதிகரித்ததைக் கண்டித்து, இரு விருதுகளையும் தூக்கி எறிந்தவர். தலித் உரிமைகளுக்காகப் போராடும் செயற்பாட்டாளராகவும், நாட்டில் உள்ள சமுதாய இயக்கங்களின் வழிகாட்டியாகவும்  இருக்கிறார்.)

The post ”பா.ஜ.க.-விடமிருந்து உங்கள் மகள்களைக் காப்பாற்றுங்கள்” : எரிமலையாய் வெடிக்கும் எழுத்தாளர் தேவனூரா appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ரூ. 150 கோடிகள் மதிப்புள்ள  லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலை,  வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு குறைந்த விலைக்கு விற்று அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய வழக்கில் கடந்த புதன்கிழமை தீர்ப்பளித்த சிபிஐ நீதிமன்றம், லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலை  அரசுக்கே திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.

இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலை விற்கும் முடிவை, கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி அப்போதை பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான கேபினட் குழு எடுத்தது. லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலுடன் சேர்த்து, இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மற்ற 2 சொத்துகளான குதாப் ஓட்டல் மற்றும் லோதி ஓட்டல் ஆகியவற்றையும் விற்க கேபினட் குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, குதாப் ஓட்டல் ரூ.36 கோடிகளுக்கும், லோதி ஓட்டல் ரூ.76 கோடிகளுக்கும் விற்பனை செய்யப்பட்டன.

கடந்த 1996 மற்றும் 2001 ஆண்டுக்கு இடையில் லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டல் பெரும் இழப்பை சந்தித்தது. இதனையடுத்தே, இந்த ஓட்டலை விற்க மத்திய அரசு முடிவு செய்தது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் விற்பனை கொள்கையின் அடிப்படையில், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஏராளமான ஓட்டல்கள் ஏலம் விடப்பட்டு, அவற்றை தனியார் துறையினர் வாங்கினர். லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலை விற்கும் முடிவை எடுத்தபோது, ஓட்டலை மதிப்பீடு செய்யவில்லை. வெளிப்படைத் தன்மை இல்லாமலும் இருந்தது.

இது குறித்த புகாரின்பேரில் சிபிஐ பதிந்த முதல் தகவல் அறிக்கையில், லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலின் விலை குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. அதன்பிறகு, பாரத் ஓட்டல் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ. 7.52 கோடிக்கு(தோராயமாக) விற்கப்பட்டுள்ளது. அரசின் மதிப்பீட்டின்படி, லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலின் மதிப்பு ரூ.150 கோடிகள் ஆகும். அப்போதை சந்தை விலை ரூ.280 கோடிகள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அப்போதைய கம்பெனி விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அருண் ஷோரி, கம்பெனி விவகாரங்கள் துறை செயலர் பிரதீப் பைஜால், லஜார்டு இந்தியா பிரைவேட் லிமிட்டெட் நிர்வாக இயக்குனர் ஆஷிஷ் குமார் குஹா, காண்டி கரம்சே அண்ட் கோ உரிமையாளர் காண்டிலால் கரம்ஸே விக்ரம்ஸே, பாரத் ஓட்டல்ஸ் இயக்குனர் ஜ்யோத்சனா சுரி மற்றும் பெயர் குறிப்பிடப்படாத அதிகாரிகள் மற்றம் தனி நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 120பி (கிரிமினல் கூட்டுச் சதி), 420 (மோசடி)மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் 13(1) ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி பூரன் குமார் சர்மா அளித்த தீர்ப்பின் முழு விவரம்:

ரூ.151 கோடி மதிப்புள்ள லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலை வெறும் ரூ. 7 கோடியே 52 லட்சத்துக்கு பாரத் ஒட்டல்ஸ் லிமிடெடுக்கு விற்கப்பட்டுள்ளது.  இந்த ஓட்டலை மத்திய அரசிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும்.  மேலும் லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலை விற்றதன் மூலம் ரூ. 252 கோடி அளவுக்கு மத்திய அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டிருப்பதை, கடைசி வரை கண்டுபிடிக்காத சிபிஐ புலனாய்வு அமைப்புக்கு கண்டனத்தை தெரிவிக்கின்றேன்.

பாரத் ஓட்டல்ஸ் லிமிடெட்டுக்கு லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலை அடிமாட்டு விலைக்கு விற்றதில் அதிகாரிகளின் பங்களிப்பும் உள்ளது. லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலை விற்கும்போது, இந்த ஓட்டல் அமைந்திருக்கும் பகுதியில் ஒரு சதுர மீட்டர் ரூ.1,000 என மாநில அரசின் நில மதிப்பு விலையிலிருந்து தெரிகிறது.

அதாவது, லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டல் மட்டும் ரூ.150 கோடி மதிப்பு என்று தெரிகிறது. இந்த ஓட்டலை மத்திய அரசு விற்க முடிவு செய்தபோது, இவற்றை எல்லாம் வேண்டுமென்றே கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. மத்திய அரசிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டபின், லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலை இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மீண்டும் நடத்தலாம்.

இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. இதனை ஏற்காத சிபிஐ நீதிமன்றம், மீண்டும் விசாரணை நடத்த கடந்த 2019 ஆகஸ்ட்டில் உத்தரவிட்டது. சாட்சியங்கள் கிடைக்காததால் விசாரணையை தொடர முடியவில்லை என மீண்டும் வழக்கை முடித்து வைக்கும் அறிக்கையை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது. இதனை நீதிமன்றம் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, பெருமைக்குரிய லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலை தன் கட்டுப்பாட்டுக்குள் உதய்பூர் மாவட்ட நிர்வாகம் கொண்டுவந்துள்ளது. நீதிமன்ற உத்தரவையடுத்து, இந்த நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் சேத்தன் தியோரோ மேற்கொண்டுள்ளார்.  ஓட்டலை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தனி அதிகாரியை நியமித்த மாவட்ட நிர்வாகம், இது குறித்த தகவலை மத்திய அரசுக்கும் தெரிவித்துவிட்டது.

The post ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on தேசிய முரசு - Desiya Murasu.