Farmers Archives - தேசிய முரசு - Desiya Murasu

விவசாயச் சட்டங்களை 5 ஆண்டுகளுக்கு நிறுத்தி வையுங்கள் : விவசாயிகள் வைக்கும் புதிய கோரிக்கை
கடந்த 2020 ஆம் ஆண்டின் பெரும் பகுதி புதிய விவசாயச் சட்டங்களை எதிர்ப்பதிலேயே இந்திய விவசாயிகள் செலவிட்டுள்ளனர். ஒரு வருடத்துக்கு விவசாயச் சட்டங்களை நிறுத்தி வைப்பதற்காக மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் டோமர் கூறுகிறார். இது குறித்து ஆய்வு செய்ய கமிட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளாக தங்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் மத்திய அரசு பிரயோகித்துவிட்டது. தங்கள் உரிமைக்காக போராடும் விவசாயிகளின் கோரிக்கையே பரிசீலிக்காமல், அவர்களைத் தீவிரவாதிகள் என்றும் தேச விரோதிகள் என்றும் கட்டமைப்பதிலேயே குறியாக உள்ளனர்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விவசாயச் சட்டங்களை நிறுத்தி வைத்தது அரசாங்கத்தின் வியூகங்களுக்குக் கிடைத்த தோல்வியே. சிறு அளவிலான விவசாய சமுதாயம் நடத்தும் போராட்டம் தான். அதனை எளிதில் கையாளலாம் என்பது பாஜகவின் எண்ணம்.

ஆனால், அரசு எதிர்பார்த்ததை விடப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போனது. டெல்லி எல்லைக்கு வெளியே 40 கி.மீ தொலைவுக்கு டிராக்டர்கள் அணிவகுத்து நின்றன. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளே இதில் திரளாகப் பங்கு பெற்றனர்.

எந்த ஒரு போராட்டமும் நீண்ட காலத்துக்கு நீடிப்பது சமுதாய நலனுக்கு ஏற்றதல்ல என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி கூறுகிறார். பாஜக கொள்கையின் பிறப்பிடமான ஆர்எஸ்எஸ் அமைப்பு, இந்த போராட்டம் விரைவாக முடிய வேண்டும் என்று விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.

மத்திய விவசாயத்துறை அமைச்சர் டோமர் கூறும்போது, விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தால், அது இந்திய ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டார். இதற்கு எல்லாம் விவசாயிகள் மயங்கிவிடவில்லை. விவசாயச் சட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என்பதே, போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் தந்திரமே என்பதால், விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இது அரசு மீதான விவசாயிகளின் நம்பிக்கைக்குத் தொடர்பான விஷயம். மீண்டும் இந்த சட்டங்களைச் செயல்படுத்த மாட்டார்கள் என்பது என்ன உத்தரவாதம்? என்று கேட்கிறார் விவசாயச் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத். 3 விவசாயச் சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 6 மாதங்கள் ஆனாலும் நாங்கள் போராட்டத்தை விடப்போவதில்லை என்பதே விவசாயச் சங்கங்களின் திட்டவட்டமான முடிவு.

5 ஆண்டுகளுக்குத் தற்காலிகமாக இந்த புதிய விவசாயச் சட்டங்களை நிறுத்தி வைத்தால் தொடர்ந்து பேசலாம் என்பதும் விவசாயிகள் வைத்துள்ள முக்கிய யோசனை.

புதிய விவசாயச் சட்டங்களைத் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தி என விமர்சிக்கின்றனர் விவசாயச் சங்கங்கள்.

டெல்லி காவல் துறையினருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. டிராக்டர் பேரணியை அனுமதிப்பது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சங்கடம் என அரசு சொல்லிக் கொண்டிருந்தது. உத்தரப் பிரதேச அரசோ, ஒரு வாரத்துக்கு முன்பே டிராக்டர்களுக்கு டீஸல் விநியோகம் செய்வதை நிறுத்திவிட்டது.

இதன்பிறகும், டிராக்டர் பேரணிக்கு அனுமதி தரப்பட்டது. அரசு தரப்பு மற்றும் விவசாயிகள் தரப்பில் முதல் முறையாக அடுத்த சந்திப்புக்கான தேதியை முடிவு செய்யவில்லை. பேச்சுவார்த்தையை கண்ணுக்குப் புலப்படாத சக்திகள் முறியடிப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர்.

அமைதியாக வந்த டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டதற்கு தாங்கள் காரணமில்லை என விவசாயிகள் மறுத்து வருகின்றனர். எனினும், போராட்டத்தை வலுவிழக்கச் செய்ய, இந்தக் கலவரத்தைக் கையில் எடுத்திருக்கிறது மத்திய அரசு. எனினும், 3 புதிய விவசாயச் சட்டங்களை முழுமையாகத் திரும்பும் வகையில், வேறு வடிவத்தில் தங்கள் போராட்டம் நடைபெறும் என விவசாயச் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

கடும் பனியிலும் கடந்த 2 மாதங்களாக டெல்லியில் விவசாயச் சங்கங்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இருந்தாலும், 3 விவசாயச் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக நிராகரிப்பதிலிருந்தே, மோடியின் தந்திரம் தங்களுக்குப் புரிகிறது என்கின்றனர் விவசாயிகள்.

The post விவசாயச் சட்டங்களை 5 ஆண்டுகளுக்கு நிறுத்தி வையுங்கள் : விவசாயிகள் வைக்கும் புதிய கோரிக்கை appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

தலைநகர் டெல்லியில் விவசாயிகள் மீது பா.ஜ.க. அரசின் காவல்துறை காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்! தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம்!
தலைநகர் தில்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று மாபெரும் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தனர். விவசாயிகள் நடத்த இருந்த டிராக்டர் பேரணியை முடக்குவதற்கும், சீர்குலைப்பதற்கும் காவல்துறையினர் சதித் திட்டம் தீட்டி விவசாயிகள் மீது அடக்குமுறையை ஏவிவிட்டனர். காவல்துறையினரின் அனுமதியுடன் அமைதியாக சென்ற பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் பேரணியை கலைக்க முற்பட்டனர். இதனால் கடும் வன்முறை வெடித்துள்ளது.

தங்களது கோரிக்கைகளை முன்வைத்து டிராக்டர் பேரணி நடத்தி போராடுகிற விவசாயிகள் மீது வரலாறு காணாத வகையில் காவல்துறையினர் கடுமையாக தாக்கியதில் 46 வயது நிரம்பிய நவ்ஜித் என்ற விவசாயி உயிரிழக்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. தலைநகரில் போராடுகிற விவசாயிகள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலுக்கு பா.ஜ.க. ஆட்சியாளர்கள்தான் பொறுப்பாகும்.

தலைநகர் தில்லியில் போராடுகிற விவசாயிகள் மீது விழுந்த அடி, இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளின் மீதும் விழுந்த அடியாகும். காவல்துறையினர் நடத்திய தாக்குதல், பா.ஜ.க. ஆட்சியாளர்களின் காட்டுமிராண்டித்தனமான போக்கையே காட்டுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக போராடுகிற விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பரிவுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் காவல்துறையினரை ஏவிவிட்டு நடத்தப்பட்ட அராஜக தாக்குதலை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். கடந்த இரண்டு மாதங்களாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் காந்திய வழியில் அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா  முழுப் பொறுப்பேற்க வேண்டுமென கேட்டுக் கேட்டுக் கொள்கிறேன்.

The post தலைநகர் டெல்லியில் விவசாயிகள் மீது பா.ஜ.க. அரசின் காவல்துறை காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்! தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம்! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

டிசம்பர் 28இல் வேலூரில் விவசாயிகளின் ஏர்கலப்பை சங்கமம்! மோடியின் விவசாய விரோத சட்டங்களை அம்பலப்படுத்த அணிதிரள்வோம்! தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு
மத்திய பா.ஜ.க. அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்த 30 நாட்களுக்கு மேலாக 96 ஆயிரம் டிராக்டர்கள், 20 லட்சம் விவசாயிகள் டிசம்பர் மாத கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தலைநகர் தில்லியை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலைகளை முற்றுகையிடுகிற வகையில் பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேச விவசாயிகள் வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இதுவரை 40 விவசாயிகள் மடிந்துள்ளனர். ஆனால், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்கிற வகையில் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக இல்லை. புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்று குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்கிற வகையிலும், கார்ப்பரேட்டுகளை வளர்க்கும் ஒப்பந்த விவசாயத்தை நீக்குகிற வகையிலும் கொண்டு வர வேண்டுமென்பதே விவசாயிகளின் ஒரே கோரிக்கை. இதை நிறைவேற்றுகிற வரை விவசாயிகளின் போராட்டம் ஓயப் போவதில்லை.

நேற்று மறைமலைநகரில் நடைபெற்ற பா.ஜ.க. கூட்டத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசும் போது, ‘தமிழகத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு இல்லை’ என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்திருக்கிறார். சமீபத்தில் வள்ளுவர் கோட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பாக தளபதி மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சியினர் பங்கேற்ற வரலாறு காணாத உண்ணாவிரதப் போராட்டம் தமிழகத்தில் எத்தகைய எழுச்சியை ஏற்படுத்தியது என்பதை பிரகாஷ் ஜவடேகர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்களை தமிழகத்தில் விற்பனை செய்கிற ஜவடேகரின் முயற்சி கொல்லன் தெருவில் ஊசி விற்கிற கதையாகத் தான் முடியும். தமிழகத்தில் கொழுந்து விட்டு எரிகிற பா.ஜ.க. எதிர்ப்புத் தீயை ஆயிரம் ஜவடேக்கர்கள் வந்தாலும் அணைக்க முடியாது.

புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் எதிர்ப்பதற்கு நியாயமான காரணங்கள் நிறைய இருக்கின்றன. விவசாயிகள் நலனில் மோடி அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றுவோம், குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்குவோம் என கூறிய பிரதமர் மோடி, புதிய வேளாண் சட்டத்தில் அதுகுறித்து குறிப்பிடாதது ஏன் ? குறைந்தபட்ச ஆதரவு விலையைக் குறிப்பிட்டால் விவசாயச் சந்தையை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்தமாகத் தாரை வார்க்க முடியாது என்பதுதான் காரணமாகும். அதனால்தான் ஒப்பந்த விவசாயத்தின்படி தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களை விவசாய விளைப்பொருட்களை கொள்முதல் செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதை அனுமதித்தால் பொது கொள்முதல் முறை முற்றிலும் அழிந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் அமல்படுத்துகிற போது தனியார் வர்த்தகர்களும் அந்த விலைக்குக் குறைவாகக் கொள்முதல் செய்ய முடியாத நிலை இருந்தது. குறைந்தபட்ச ஆதரவு விலை மறுக்கப்பட்ட பிறகு, விவசாய உற்பத்தி சந்தைக்குழுக்கள் மூலம் நடைபெறும் கொள்முதல் ரத்து செய்யப்படும் போது, குறைந்தபட்ச ஆதரவு விலை முறையும் தானாக ரத்தாகிவிடும் என்பதே போராடும் விவசாயிகளின் அச்சமாக உள்ளது.

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடுகிற விவசாயிகள் பா.ஜ.க.வின் ஒரே நாடு, ஒரே சந்தையை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. அதற்கு மாறாக, ஒரே நாடு, ஒரே குறைந்தபட்ச ஆதரவு விலை என்கிற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இதன்மூலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்பட்டால் அந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் வெளிச் சந்தையிலும் அதற்குக் குறைவான விலையில் தனியார் வர்த்தகர்கள் கொள்முதல் செய்ய முடியாது. இந்த பாதுகாப்பைத் தான் போராடி வருகிற விவசாயிகள் கேட்கிறார்கள். ஆனால், பா.ஜ.க. அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை ஒழித்து விட்டு, கார்ப்பரேட்டுகளுக்கு வழிவகுத்து அம்பானி, அதானி மூலமாக உணவு தானிய கிடங்குகளைக் கட்டி, அங்கே தானியங்களை இருப்பு செய்து விவசாயிகளின் விளைப் பொருட்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் முடிவு செய்வதற்கு பா.ஜ.க. அரசு வழிவகுத்திருக்கிறது. இதன்மூலம் இந்தியாவின் பிரதமராக மோடி செயல்படுகிறாரா ? அல்லது அம்பானி, அதானியின் தொழில் வளர்ச்சி மேலாளராக செயல்படுகிறாரா ? என்கிற கேள்வி எழுகிறது. பிரதமர் மோடி ஆட்சியில் அதானியின் சொத்து மதிப்பு 230 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. இதன்படி, அதானியின் இன்றைய சொத்து மதிப்பு ரூபாய் 1 லட்சத்து 92 ஆயிரத்து 400 கோடி. நாட்டின் முதுகெலும்பாக இருக்கிற விவசாயிகளின் முதுகெலும்பை ஒடித்துவிட்டு, அதானியை வாழ வைக்கும் பிரதமர் மோடியை விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள்.

பிரதமர் மோடி அறிவித்த கிசான் நிதியுதவி திட்டத்தின்படி ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டிற்கு ரூபாய் 6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் 2015-16 விவசாய சென்செஸ்படி 14.64 கோடி விவசாயிகள். இந்த விவசாயிகளுக்கு ரூபாய் 6 ஆயிரம் வீதம் ரூபாய் 88 ஆயிரம் கோடி வழங்கியிருக்க வேண்டும். ஆனால், மோடி அரசு வழங்கியதோ 2018-19 இல் ரூபாய் 6,005 கோடி. 2019-20 இல் ரூபாய் 49,196 கோடி. 2020-21 இல் ரூபாய் 38,872 கோடி. நாட்டில் மொத்தமுள்ள 14.64 கோடி விவசாயிகளில் 9.24 கோடி விவசாயிகளுக்குத் தான் பிரதமர் விவசாய நிதியுதவி திட்டம் பயனளித்திருக்கிறது. ஏறத்தாழ 5.40 கோடி விவசாயிகளுக்கு நிதியுதவி திட்டம் மறுக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடி பேசுவதற்கும், செயல்படுத்துவதற்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா ?

எனவே, இந்தியாவின் ஒட்டுமொத்த விவசாயிகளின் எதிரியாக இருக்கிற பிரதமர் மோடி தமது போக்கை மாற்றிக் கொண்டு, போராடுகிற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்து விவசாயிகளின் விளைப் பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குகிற வகையில் புதிய சட்டம் கொண்டு வரவில்லையெனில் அதற்குரிய பாடத்தை விவசாயப் பெருங்குடி மக்கள் பா.ஜ.க. அரசுக்குப் புகட்டுவார்கள்.

தமிழகத்தில் விவசாயிகளின் எதிர்ப்புக் குரலை ஒலிக்கிற வகையில் டிசம்பர் 28 அன்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வேலூரில் நடைபெற இருக்கிற ஏர் கலப்பை சங்கமம் தமிழகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பா.ஜ.க.வின் அவதூறு பிரச்சாரங்களையும், மோடியின் விவசாய விரோத நிலையையும் அம்பலப்படுத்துகிற வகையில் அமையும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post டிசம்பர் 28இல் வேலூரில் விவசாயிகளின் ஏர்கலப்பை சங்கமம்! மோடியின் விவசாய விரோத சட்டங்களை அம்பலப்படுத்த அணிதிரள்வோம்! தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

ஒரே நாடு, ஒரே சந்தை ஏன் ?: ஒரே நாடு, ஒரே குறைந்தபட்ச ஆதரவு விலையே தீர்வு
விவசாயச் சட்டங்கள் போன்ற கடுமையான சட்டங்கள் மூலம், ஒடுக்கப்பட்ட, பலவீனமான மக்களை உலகெங்கிலும் உள்ள கார்பரேட்கள் சுரண்டுகின்றனர்.

சமீப காலங்களில் விவசாய நில ஒப்பந்தங்கள் அரசியல் ரீதியாகவே உள்ளன. சில சமயங்களில் இத்தகைய இயக்கங்கள் ஆளும் அரசுகளைக் கவிழ்ப்பதிலும் வெற்றி பெற்றுள்ளன.

விவசாயிகளின் போராட்டத்தைப் பொறுத்தவரை, இந்தியாவுக்கு நீண்ட வரலாறு உண்டு. 1917 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தலைமையில் நடந்த விவசாயிகள் போராட்டம் சுதந்திரத்தை முன்னெடுத்தது. விவசாயிகளின் பிரச்சினைகளை செவிமடுக்காத அரசுகள் தூக்கிய எறியப்பட்டதையே வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

2005 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி, ஒடிசாவில் உலகின் 5 ஆவது பெரிய இரும்பு ஆலை நிறுவனத்தின் இந்திய கிளையை தொடங்க அம்மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. 12 மில்லியன் டன் இரும்பு தயாரிக்கும் ஆலைக்கு 4 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு 12 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய போஸ்கோ நிறுவனம் முடிவு செய்தது. இதன்மூலம், இரும்பு உற்பத்தியில் இந்தியா சூப்பர் பவர் ஆகும் என்று சொல்லப்பட்டது.

அங்குள்ள கிராம மக்களின் போராட்டத்தின் காரணமாக, போஸ்கோவுக்கு வழங்கப்படும் நிலம் 2700 ஆகக் குறைக்கப்பட்டு, ஆண்டுக்கு உற்பத்தி அளவு 8 மில்லியன் டன்னாகக் குறைக்கப்பட்டது.

கடந்த 2006 ஆம் ஆண்டு, மேற்கு வங்க மாநிலம் சிங்கூர் மாவட்டத்தில் 997 ஏக்கர் பரப்பளவில் விலை குறைவான காரை தயாரிக்க டாடா நிறுவனம் முடிவு செய்தது. இந்த கார் தொழிற்சாலைக்காக தங்கள் நிலத்தை அரசு வலுக்கட்டாயமாகப் பறிப்பதாகக் கூறி, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

30 ஆண்டுக் காலம் மேற்கு வங்கத்தை ஆண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சியை இழப்பதற்கு இந்த போராட்டம் முக்கிய காரணமாக அமைந்தது.

கடந்த 2015 ஆம் ஆண்டு தனியார் நில ஆர்ஜிதம் செய்து கொள்ள அனுமதித்துக் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தை, ராகுல் தலைமையிலான காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது. 2013 ஆம் ஆண்டு சட்டத்தின்படி, சில திருத்தங்களைச் செய்ய மத்திய அரசை ராகுல் காந்தி நிர்ப்பந்தித்தார்.

2020 ஆம் ஆண்டில் விவசாயத்துறையில் சீர்திருத்தத்தைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. ஜூன் 2 ஆம் தேதி அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி 3 விவசாயச் சட்டங்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

3 விவசாயச் சட்டங்களையும் கொண்டு வரும் முன்பு,விவசாயிகளின் நம்பிக்கையைப் பெறாதது ஏன்? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இதுபோன்று சம்பவங்கள் நிகழ்வது இது முதல் முறையல்ல. சம்பந்தப்பட்டவர்களைக் கலந்தாலோசிக்காமலேயே இது போன்ற சட்டங்களை அவசரமாக் கொண்டு வருவது பாஜக அரசுக்கு வாடிக்கையாகியிருக்கிறது.

மண்டி முறையை நீக்குவதன் மூலம் விவசாயச் சட்டங்களால் சிறு விவசாயிகள் மற்றும் வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த சட்டங்கள் விவசாயிகளை வலுவிழக்கச் செய்வதோடு, மொத்த வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் கருணைப் பார்வையிலேயே வாழ வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்படும். சந்தைப்படுத்துதலில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாமல் இருக்கவே, கார்பரேட் நிறுவனங்களிடம் சந்தையை மாற்றியதாக அரசு சொல்வது பொய்.

அளவுக்கு அதிகமாகச் சேமித்துக் கொள்ளவும், செய்கையாக விலை ஏற்றத்தைச் செய்யவும் இத்தகைய சட்டங்கள் கார்பரேட்களுக்கு உதவுகின்றன என்பதில் சந்தேகமில்லை.

அறுவடைக்குப் பிறகு விவசாயிகளுக்கு ஏற்ற, இறக்கங்களுடன் குறைவான விலையே கிடைக்கும். இந்த சட்டம் அரசியல் சாசனத்தைத் தோல்வியுறச் செய்வதோடு,விவசாயிகளுக்கு எதிரானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்த சட்டங்களைப் பயன்படுத்த அரசியல் சாசனத்தின் 33 ஆவது பிரிவை மத்திய அரசு பயன்படுத்துவது விவேகமற்றது. மாநில அரசு வரம்புக்குள் இருக்கும் விவசாயத்தை இந்த பிரிவின் கீழ் மத்திய அரசு பயன்படுத்துவது கூட்டுறவு கூட்டாட்சி உணர்வைப் பலவீனப்படுத்துவதாகும்.

ஒப்பந்த விவசாயம் உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு வருவாயை அதிகரிக்கவும் உதவும் என்று அரசு சொல்கிறது. ஆனால், அவர்கள் இயற்றியுள்ள சட்டத்தின்படி ஒப்பந்ததாரரை விட விவசாயிகள் குறைவான வருவாயை மட்டுமே பெறும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் விவசாயிகளைப் பெரிய கார்பரேட் நிறுவனங்கள் ஆட்டுவிக்கும் நிலையே ஏற்படும்.

விலை நிர்ணயத்தில் நிலவும் சமச்சீரற்ற தன்மை, விவசாயிகளுக்கு மேலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்.

கடந்த 2019 ஆம் ஆண்டு குஜராத் விவசாயிகளை எதிர்த்து அமெரிக்காவின் முன்னணி உணவு நிறுவனமான பெப்ஸிகோ வழக்கு தொடர்ந்தது. விவசாயிகளிடம் செய்து கொண்ட ஒப்பந்தம் மீறப்பட்டதாக இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த பிரச்சினையில் தலையிடுமாறு மத்திய அரசை விவசாயிகள் கேட்டுக் கொண்டனர். இது இப்போது நிகழ்ந்தது.

புதிய சட்டங்களாலும் விவசாயிகளுக்கு இத்தகைய பிரச்சினைகள் ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேபோன்று, கடந்த 2006 ஆம் ஆண்டு பீகாரில் விவசாய உற்பத்தி சந்தைக் குழு ரத்து செய்யப்பட்டபோது, விளைபொருட்கள் 15 சதவிகிதத்துக்கும் குறைவாகவே விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அரசின் இத்தகைய நடவடிக்கையால், முதலீடு செய்ததில் பாதியைக் கூட விவசாயிகளால் மீட்டெடுக்க முடியவில்லை. இத்தகைய பரீட்சார்த்த நடவடிக்கைகள் எல்லாம் நல்ல உதாரணமாக நம் முன்னே நிற்கின்றன. புதிய சட்டங்களும் இதே போன்று விவசாயிகளை இக்கட்டான சூழலுக்குத் தள்ளிவிடும் என்பதில் சந்தேகிப்பது நியாயம்தானே.

விவசாயச் சட்டங்கள் விவசாயிகளுக்கு வரப்பிரசாதம் என்று மத்திய அரசு சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால், அவர்கள் இயற்றியுள்ள சட்டத்தில் அப்படி ஏதும் இல்லை. இந்த சட்டம் மண்டி முறையைப் பலவீனப்படுத்துவதோடு, பெரிய வர்த்தகர்களுக்கு அதிக அதிகாரத்தை அளித்து, கறுப்புச் சந்தையை ஊக்கப்படுத்தும்.

மத்திய அரசின் ஒரே நாடு,ஒரே சந்தை என்ற திட்டத்தை மாற்றிவிட்டு, ஒரே நாடு, ஒரே குறைந்தபட்ச ஆதார விலை என்று மாற்றினால் மட்டுமே விவசாயிகள் முகத்தில் புன்னகையைப் பார்க்க முடியும்.

The post ஒரே நாடு, ஒரே சந்தை ஏன் ?: ஒரே நாடு, ஒரே குறைந்தபட்ச ஆதரவு விலையே தீர்வு appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

குடியரசுத் தலைவரிடம் 2 கோடி கையெழுத்து மகஜரை சமர்ப்பித்தார் ராகுல் காந்தி: பிரியங்கா கைது
3 விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தும் வகையில், குடியரசுத் தலைவர் ராம் நாத் கோயங்காவை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை டெல்லி காவல் துறையினர் கைது செய்தனர்.

3 விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், இதற்கு எதிராகப் பெறப்பட்ட 2 கோடி கையெழுத்துகளைக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்திடம் சமர்ப்பிக்க, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அப்போது அவர்களை டெல்லி காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர், 2 கோடி கையெழுத்துடன் கூடிய மகஜரை சமர்ப்பிக்க ராகுல் காந்தி தலைமையிலான சிறு குழுவைக் காவல் துறை அனுமதித்தது. குடியரசுத் தலைவர் தலையிட்டு, விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களையும் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மகஜரில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதற்கிடையே, இந்த ஊர்வலத்தில் பங்கேற்ற பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்களைக் கைது செய்த காவல் துறை, அவர்களைப் பேருந்துகளில் ஏற்றி அழைத்துச் சென்றது.

2 கோடி பேரிடம் கையெழுத்துப் பெற்ற மகஜரை சமர்ப்பித்துவிட்டு வெளியே வந்த ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறும்போது, ”3 விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை, போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப மாட்டார்கள் என்பதைப் பிரதமருக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன். விரைவில் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி, 3 சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும். விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் எதிர்க்கட்சிகள் ஆதவராக நிற்போம். இந்தியாவில் ஜனநாயகம் இல்லை. பிரதமரை எதிர்த்துப் பேசுபவர்கள் எல்லாம் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். பிரதமரை மட்டுமல்ல, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாவத்தை விமர்சித்தால் கூட தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துகிறார்கள்” என்றார்.

கைது செய்யப்பட்டு பேருந்தில் ஏற்றப்பட்டபின் பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, ”இந்த அரசுக்கு எதிரான கருத்துகள் தீவிரவாதமாகப் பார்க்கப்படுகிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக நமது குரலை ஒலிக்கவே இந்த ஊர்வலத்தை நடத்துகிறோம். மத்திய அரசு பாவிகளின் அரசாக இருக்கிறது. இந்த பாவிகள் தான் விவசாயிகளை வெவ்வேறு பெயர்களைச் சொல்லி அழைக்கின்றனர். போராடும் விவசாயிகள் தேச விரோத சக்திகள் என்று சொன்னால், அரசு ஒரு பாவி தான். நாங்கள் எதிர்க்கட்சிக்கு லாயக்கற்றவர்கள் என்றும் பலவீனப்பட்டுவிட்டதாகவும் கூறும் அவர்களே, கடந்த ஒரு மாதத்தில் லட்சக்கணக்கான விவசாயிகளை எல்லையில் திரட்டும் அளவுக்கு சக்தி வாய்ந்தவர்கள் என்றும் நம்மைப் பார்த்துக் கூறுகிறார்கள். அவர்கள் யார் என்பதை முதலில் முடிவு செய்துகொள்ள வேண்டும்” என்றார்.

நாடாளுமன்றத்தில் 3 விவசாயச் சட்டங்களையும் மோடியின் அரசு நிறைவேற்றிய பின், அந்த சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என, குடியரசுத் தலைவரை எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்டன. மாநிலங்களவையில் ஜனநாயகத்துக்கு விரோதமாக இந்த 3 சட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டன. எனினும், 3 விவசாயச் சட்டங்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

இந்த நிலையில் தான், தங்களுக்கு எதிரான 3 விவசாயச் சட்டங்களையும் எதிர்த்து டெல்லி எல்லையில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் பயந்து ஓடாமல் நெஞ்சை நிமிர்த்தி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

பேச்சுவார்த்தை நடத்த வருமாறு விவசாயச் சங்கப் பிரதிநிதிகளை மத்திய அரசு அழைத்துள்ளது. எனினும், திறந்த மனதுடன், தங்கள் கோரிக்கையின் அடிப்படையில் நடத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கத் தயார் என விவசாயச் சங்கங்கள் அறிவித்துள்ளன.

The post குடியரசுத் தலைவரிடம் 2 கோடி கையெழுத்து மகஜரை சமர்ப்பித்தார் ராகுல் காந்தி: பிரியங்கா கைது appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

விவசாயிகளை அழித்து, கார்பரேட்டுகளை ஆதரிக்கவே மோடி அரசின் ஒப்பந்த விவசாயம்!
விவசாய உத்தரவாதம் மற்றும் விவசாயப் பணிகள் சட்டத்தின் விவசாய ஒப்பந்தம், தனியார் நிறுவனங்களுக்குச் சாதமாகவே இருக்கும். குறிப்பிட்ட பயிர்களை மட்டும் விளைவிக்க, விவசாயிகளுடன் தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தம் போடுவார்கள். விலையையும் அவர்களே நிர்ணயிப்பார்கள். ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கே தனியார் நிறுவனங்களுக்கு விளைபொருட்களை விவசாயிகள் விற்க வேண்டும். வேறு யாருக்கும் அதிக விலைக்கு விற்க முடியாது. இது குறைந்தபட்ச ஆதரவு விலை முறைக்கு முற்றிலும் மாறுபட்டதாகும். குறைந்தபட்ச ஆதரவு விலையைவிடத் தனியார் வர்த்தகர்கள் அதிக விலை கொடுத்தால், விளைபொருட்களை அவர்களுக்கு விவசாயிகள் விற்க முடியும். இனி அதுபோல் செய்ய முடியாது.

விவசாயிகளின் வருவாய்க்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை மூலம் செய்யப்படும் கொள்முதல் உத்தரவாதம் அளித்தது. ஒப்பந்த முறையைவிட இது விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருந்தது. பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் போது, ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அவர்களை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தும் அளவுக்கு விவசாயிகளுக்கு வலிமை இல்லை. அதனால் தான் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர வேண்டும் என்றும், கொள்முதல் கொள்கைகளை அரசு நல்ல முறையில் அமல்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

சந்தைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம், வெளிச்சந்தையில் தனியார் நிறுவனங்களை அனுமதித்தால், இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை ஊக்கப்படுத்துவதாக அமையும்.

குறைந்தபட்ச ஆதரவு விலை முறை உடனே முடிவுக்கு வரவில்லை என்றாலும், அரசே கொள்முதல் செய்யாவிட்டால் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் என்பது வெறும் சம்பிரதாயமாகவே இருக்கும். இதுவரை, குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் நிர்ணயிக்கப்படும் விளைபொருட்கள் விலை, வெளிச்சந்தையில் நிர்ணயிக்க வேண்டிய விலையின் சமிக்ஞையாக இருந்தது. இனி, வெளிச்சந்தையில் எவ்வளவு விலை வேண்டுமானாலும் நிர்ணயிக்கும் நிலை ஏற்படும். மேலும், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் தங்கள் விளைபொருட்களைத் தொடர்ந்து குறைந்த விலைக்கே விற்கும் நிலையும் ஏற்படும்.

உதாரணமாக, கடந்த 2012-13 ஆம் ஆண்டு என்எஸ்எஸ்ஓ எனப்படும் தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் மேற்கொண்ட கணக்கெடுப்பில், 2012 ஆம் ஆண்டு கரிப் பருவத்தில் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளிடம் இருந்து 50 சதவீதம் நெல் உள்ளூர் வர்த்தகர்களுக்கு விற்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1,150 என்ற வீதத்தில் உள்ளூர் வர்த்தகர்களுக்குச் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் விற்றுள்ளனர். அதேசமயம், 2 ஹெக்டேர் நிலத்துக்கு அதிகமாக வைத்திருக்கும் பெரிய விவசாயிகள், குவிண்டால் நெல் ரூ. 1,300 -க்கு விற்றுள்ளனர். 2012&13 ஆம் ஆண்டில் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.1,250 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சராசரியாகப் பார்த்தால், குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட குறைவான விலைக்கே நடுத்தர விவசாயிகள் விற்றுள்ளனர். அதேசமயம், பஞ்சாப் நடுத்தர விவசாயிகளோ, கடந்த 2012 ஆம் ஆண்டு, தாங்கள் அறுவடை செய்த நெல்லில் பாதியை மண்டிகளில் விற்றனர். 33 சதவீத நெல்லை உள்ளூர் வர்த்தகர்களிடம் விற்றனர். அதன்படி, பஞ்சாப் விவசாயிகளுக்கு நெல் குவிண்டாலுக்கு ரூ.1,500 கிடைத்தது. இது, அப்போது மாநில அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட 20 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாய உற்பத்தி சந்தைக் குழுவின் விலை சமிக்ஞை இல்லாமல், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் இந்த அளவு பேரம் பேசி விற்கும் நிலையைப் பெற்றிருக்க முடியாது. அதேசமயம், அதே ஆண்டில் உத்தரப்பிரதேச விவசாயிகளின் நிலை மாறுபட்டிருந்தது. உத்தரப்பிரதேச விவசாயிகள் 16 சதவிகிதம் மட்டுமே நெல் உற்பத்தி செய்திருந்தனர். இவற்றை 30 சதவிகிதம் மண்டிகள் மூலமும்,70 சதவிகிதம் உள்ளூர் வர்த்தகர்கள் மூலமும் விற்றனர். ஆனால், நெல் குவிண்டாலுக்கு ரூ.1,010 மட்டுமே கிடைத்தது. உத்தரப்பிரதேசத்தில் குறைந்த நெல் உற்பத்தி, பஞ்சாபைப் போல் விலை பாதுகாப்பை அளிக்கத் தவறிவிட்டது.

எவ்வாறு விலை நிர்ணயம் செய்வது?

பெரும் தொழில் அதிபர்களோடு கைகோர்த்து, பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்க மோடி அரசு தயாராகி வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, இந்த புதிய சட்டங்களைப் பார்த்தால் வியப்பு ஏதும் அளிக்காது. இதுபோன்ற ஜனநாயகத்துக்கு எதிரான சட்டங்களை இயற்ற கொரோனா காலம் அரசுக்கு வாய்ப்பளித்திருக்கிறது. விவசாயம் மாநில அரசின் வரையறைக்குள் வந்தாலும், முட்டுக்கட்டை ஏற்படுமோ என்ற அச்சத்தில் இது போன்ற சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. விவசாயிகளை தெருவில் இறங்கிப் போராட வைத்தது இந்த ஒரு கேள்விதான்:
விவசாயிகளின் பாதுகாப்புக் கருதி இந்த சட்டங்கள் திரும்பப் பெறப்படுமா? என்பதுதான்.

கோதுமை மற்றும் நெல் கொள்முதல் 40 சதவீதம் செய்யப்படும்போது, அனைத்து விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும் என்ற உத்தரவாதம் தரப்படுகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிப்பதன் மூலம், அரசின் கொள்முதலும் தானாகச் சிறந்த முறையில் அமலாகும். விவசாய உற்பத்தி சந்தைக் குழு முறையை ஒழித்துவிட்டு, தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்புக் கொடுத்தால் பெரும்பாலான விவசாயிகளுக்கு இழப்பையே ஏற்படுத்தும். இது இந்தியாவின் முறைப்படுத்தப்பட்ட பயிர் சாகுபடி திட்டத்தைப் பாதிக்கும். மண்டிகளுக்கு வெளியே விளைபொருட்களை விற்க அனுமதிப்பதால் மட்டும் எளிதாகக் கையாண்டுவிட முடியாது.

இந்த சட்டங்கள் பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ள விவசாயிகளைப் பாதிக்கக்கூடிய வகையில் உள்ளன. விவசாயிகளின் நண்பன் என்று சொல்லிக் கொண்டே, மில்லியன் கணக்கான பொய்களைச் சொல்லி ஏழை விவசாயிகளை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

The post விவசாயிகளை அழித்து, கார்பரேட்டுகளை ஆதரிக்கவே மோடி அரசின் ஒப்பந்த விவசாயம்! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

டெல்லி : பிரதமர் மோடியின் ஆழ்ந்த உறக்கத்தைக் கலைத்த விவசாயிகள் போராட்டம்
பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் நாட்டின் பல பகுதிகளிலிருந்து டெல்லியில் திரண்டு, கடந்த நவம்பர் 27 ஆம் தேதி விவசாயிகள் நடத்திய போராட்டம், பிரதமர் மோடியின் ஆழ்ந்த உறக்கத்தைக் கலைத்துள்ளது.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளைக் கால்நடைகளை அடைத்து வைப்பதைப் போல், 36 மணி நேரம் அடைத்து வைத்திருக்கிறது டெல்லி காவல் துறை.

விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு டெல்லி அரசு ஒத்துழைப்புக் கொடுத்தாலும், அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இதில் உடன்பாடு இல்லை என்றே தெரிகிறது. டெல்லி காவல் துறை உள்துறை அமைச்சகத்துக்குக் கீழ் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் உள்ள 9 மைதானங்களில் விவசாயிகளை அடைத்து வைக்க டெல்லி மாநில அரசு அனுமதிக்கவில்லை. எனினும், உள்துறை அமைச்சகத்தின் உத்தரவைப் பெற்று, டெல்லி துணை நிலை ஆளுநர் மூலம் உத்தரவு பெற்று, விவசாயிகளை மைதானங்களில் அடைத்து வைத்தனர்.

மேலும், பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகளுக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவாக இருந்ததும், விவசாயிகள் போராட்டத்தை முன்னின்று நடத்தும் ஸ்வராஜ் மஞ்ச் கிஷான் அமைப்பின் செயற்பாட்டாளரும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கமான ஆம் ஆத்மி கட்சியின் யோகேந்திர யாதவும், டெல்லி அரசின் தயக்கத்துக்குக் காரணம்.

கடந்த செப்டம்பர் மாதம் 3 விவசாயச் சட்டத் திருத்தங்களையும் கொண்டுவந்ததிலிருந்து, ஆம் ஆத்மி கட்சியும், ஸ்வராஜ் மஞ்ச் இயக்கமும் இணைந்து பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது. இவர்கள் நடத்தும் போராட்டங்களில் அதிகமான நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகள் பெரும்பாலும் பங்கேற்று வருகின்றனர்.

5 ஏக்கருக்குக் குறைவான நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகள் குறைந்த அளவில் போராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர். விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்களில், தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கவிடாமல் செய்யும் இடைத்தரகர்களின் தலையீடு அவர்களைப் பாதிப்படையச் செய்துள்ளதே இதற்குக் காரணம். சந்தைக்குழுக்களுக்கு வெளியே நல்ல விலைக்கு விளைபொருட்களை விற்று வருகிறார்கள். அதனால், புதிய விவசாய சட்டத்தில் சந்தைக் குழுக்களுக்கு வெளியே விவசாயிகள் நேரடி விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டதை அவர்கள் வரவேற்கிறார்கள்.

டெல்லி போராட்டத்தில், பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தரப்பிரதேச மாநிலங்களை உள்ளடக்கிய பாரதிய கிஷான் சங்கம் தலைமையிலான விவசாய அமைப்புகளை மத்திய அரசு எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

போர்க்களத்துக்குப் புறப்பட்ட வீரர்களைப் போல் திரண்டு வந்த விவசாயிகளைப் பார்த்து டெல்லி காவல் துறை திகைத்துப் போனது. டெல்லி எல்லைக்குள் வந்து கொண்டிருந்த விவசாயிகளைத் தடுக்க காவல் துறை மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், ஒரு விஷயத்தில் மட்டும் தெளிவாக இருந்தார்கள். குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற அம்சம் சட்டத்தில் இடம் பெறாதது, தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருந்தார்கள்.

இருந்தாலும், குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்று வெறும் வாயில் சொல்லிக் கொண்டிருக்கும் பிரதமர் மோடியின் பேச்சை நம்ப விவசாயிகள் தயாராக இல்லை. 3 விவசாயச் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்பதே அவர்களது ஒட்டுமொத்த குரலாக இருக்கிறது.

மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தால் தான் இந்த விவசாயிகள் விரோதச் சட்டங்களை ரத்து செய்ய முடியும் என்பதும் விவசாயிகளுக்குப் புரிந்திருக்கிறது. ஆனால், 2024 ஆம் ஆண்டு வரை அதற்குச் சாத்தியமில்லை. குறிப்பாக, பெரிய அளவிலான விளைவுகள் ஏற்படும் வரை, இந்த 3 சட்டங்களையும் பாஜக அரசு ரத்து செய்வது சாத்தியமில்லை.

விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்கள் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை இல்லையென்றால், அரசின் கொள்முதல் முறையைப் பெரிய கார்பரேட் நிறுவனங்கள் பலவீனப்படுத்திவிடும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அஞ்சுகிறார்கள். கோதுமை மற்றும் அரிசியைக் குறைந்தபட்ச ஆதரவு விலை மூலமே அரசு தொடர்ந்து வாங்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள். அமேசான் மற்றும் ரிலையன்ஸ் மூலம் தங்கள் விளைபொருட்களை விற்க அவர்கள் விரும்பவில்லை.

பெரும் தொழிலதிபர்களுடன் மட்டுமே மோடி அரசு நட்புடன் இருப்பதாகவும், பெரிய அல்லது சிறு விவசாயிகள் பற்றி அவருக்கு அக்கறையில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். விவசாய சட்டங்களை பெரும்பாலான மாநிலங்கள் எதிர்க்கின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட பீகார் பின்னர் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் விவசாயிகளையும், வர்த்தகர்களையும் மீறி. விவசாயச் சந்தைகளைப் பெரிய நிறுவனங்கள் ஆக்கிரமிக்கவே இந்தச் சட்டங்கள் வழிவகுக்கின்றன என்பதில் விவசாயிகள் உறுதியாக இருக்கின்றனர்.

டெல்லியில் திரண்ட விவசாயிகளின் மனோதிடம், போர்க் குணம், அடக்குமுறையை எதிர்கொண்ட விதம், பிரதமர் மோடியின் ஆழ்ந்த உறக்கத்தைக் கலைத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

The post டெல்லி : பிரதமர் மோடியின் ஆழ்ந்த உறக்கத்தைக் கலைத்த விவசாயிகள் போராட்டம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

கோவையில் விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடு! தமிழகம் முழுவதும் ஏர் கலப்பை பேரணி! தலைவர் கே.எஸ்.அழகிரி கடிதம்
என் உயிரினும் மேலான தேசியத் தோழருக்கு, வணக்கம்,

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காகக் கூட்டுவோம், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்குவோம் என வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி, கடந்த 6 ஆண்டுகளாகக் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக, விவசாயிகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குகிற வகையில் மூன்று வேளாண் சட்டங்களை பா.ஜ.க. அரசு நிறைவேற்றியிருக்கிறது.

விவசாயிகளோ, விவசாயச் சங்கங்களோ எந்த கோரிக்கையையும் முன்வைக்காத நிலையில், வேளாண் சட்டங்களை அவசர அவசரமாக மோடி அரசு நிறைவேற்றியிருக்கிறது. இதன்மூலம் விவசாயிகள் பெற்று வந்த குறைந்தபட்ச ஆதரவு விலையும் பறிக்கப்பட்டிருக்கிறது. விளைபொருட்களை விற்று வந்த விற்பனைக் கூடங்கள் ஒழிக்கப்பட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு பா.ஜ.க. அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதன்மூலம் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு விலையை கார்ப்பரேட் நிறுவனங்களே முடிவு செய்கிற அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.

பா.ஜ.க. அரசின் விவசாய விரோதச் சட்டங்களை எதிர்த்து தலைவர் ராகுல் காந்தி அவர்களின் வழிகாட்டுதலோடு, பலகட்ட போராட்டங்களைத் தமிழக காங்கிரஸ் நடத்தி வருகிறது. தமிழகத்தில் மாவட்ட, வட்டார, நகர, பேரூர், ஊராட்சிகள் உள்ளடக்கிய மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் வேளாண் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியிருக்கிறது. அதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி திருவண்ணாமலையில் விவசாய விரோதச் சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம் என்ற மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்தினோம். இதன்மூலம் தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் வெளிப்படுத்தினோம். மேலும், மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் மூலம் விவசாய விரோதச் சட்டங்களுக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு நிறைவு பெற்றிருக்கிறது.

விவசாய விரோதச் சட்டங்களை மத்திய பா.ஜ.க. அரசு திரும்பப் பெறுகிற வரை தொடர்ந்து போராடுவதென தமிழ்நாடு காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறது. வருகிற நவம்பர் 22 ஆம் தேதி கோயம்பத்தூர், கருமத்தம்பட்டி, சோமனுர் மெயின் ரோடில் மாபெரும் விவசாயில்கள் பாதுகாப்பு எழுச்சி மாநாடு மாலை 3 மணிக்கு தொடங்குகிறத. நிறைவாக மலை 5.30 மணி அளவில் ஏர் கலப்பை பேரணியை நடத்துவதென முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் திரு. தினேஷ் குண்டு ராவ், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கே.ஆர். ராமசாமி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், செயல் தலைவர்கள், முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற இன்னாள் – முன்னாள் உறுப்பினர்கள், காங்கிரஸ் முன்னோடிகளுடன் நானும் பங்கேற்க இருக்கிறேன். தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்துகிற அளவில் கோவையில் நடைபெறும் ஏர் கலப்பைப் பேரணியில் பெருந்திரளான விவசாயிகள் பங்கேற்க இருக்கிறார்கள்.

இந்நிலையில், நவம்பர் 28 ஆம் தேதி மாவட்டக் காங்கிரஸ் கமிட்டிகள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட ஏதாவது ஒரு சட்டமன்றத் தொகுதியில் ஏர் கலப்பைப் பேரணி நடத்த வேண்டும். கள்ளக்குறிச்சியில் நடைபெறும் ஏர் கலப்பைப் பேரணியில் நான் பங்கேற்க இருக்கிறேன். அதேபோல, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் திரு. கே.வீ. தங்கபாலு சேலத்திலும், திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் ஈரோட்டிலும், திரு. சு. திருநாவுக்கரசர், எம்.பி., திருச்சியிலும் பங்கேற்க இருக்கிறார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர்கள் டாக்டர் கே. ஜெயக்குமார், எம்.பி., டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத், எம்.பி., திரு. மயூரா ஜெயக்குமார், திரு. மோகன் குமாரமங்கலம் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் ஏர் கலப்பைப் பேரணியைத் தலைமையேற்று மிகச் சிறப்பாக நடத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

இதைத் தொடர்ந்து, நவம்பர் மாதத்திற்குள்ளாக தங்கள் மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி எல்லைக்குட்பட்ட எஞ்சியுள்ள மற்ற சட்டமன்றத் தொகுதிகளிலும் ஏர் கலப்பைப் பேரணி நடத்தி முடிக்க வேண்டும். ஏர் கலப்பைப் பேரணி நடைபெறும் பகுதிகளில் உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற இன்னாள் – முன்னாள் உறுப்பினர்கள், மூத்த காங்கிரஸ் தலைவர்கள், மாநில, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னணிப் பங்கு வகிக்கிறது என்கிற உணர்வை ஏற்படுத்துகிற வகையில் மேலே கூறப்பட்டுள்ள நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்த வேண்டுமென, மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் அன்புள்ள,

(கே.எஸ். அழகிரி)

The post கோவையில் விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடு! தமிழகம் முழுவதும் ஏர் கலப்பை பேரணி! தலைவர் கே.எஸ்.அழகிரி கடிதம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

விவசாயிகளை பாதுகாக்க தலைவர் ராகுல் பங்கேற்கும் ஏர்கலப்பை பேரணி! தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாக நிலவி வருகிற மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற வகையில் தமிழக பாரதிய ஜனதா கட்சி பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. கந்தசஷ்டி கவசம், மனுஸ்மிரிதி குறித்துச் சொல்லப்படாத கருத்துக்களைச் சொல்லியதாக திரித்து, ஆதாரமற்ற அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய பா.ஜ.க. அரசால் தமிழக மக்கள் பல்வேறு நிலைகளில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் நீட் தேர்வில் நியாயம் கிடைப்பதற்காக நீதிமன்றத்தில் போராட வேண்டிய நிலை இருக்கிறது.

விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு உரிய விலை வழங்கப்படுவதில்லை. கொரோனா தொற்றினால் பொது ஊடரங்கு அமலில் உள்ள காலத்தில் கூட விவசாயிகள் வாங்கிய கடனுக்கு வட்டிக்கு அபராத வட்டி விதிக்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக பா.ஜ.க. கவலைப்படாமல் வேல் யாத்திரை நடத்துவதன் மூலம் மக்களைப் பிளவுபடுத்த முயல்கிறது.

கடந்த காலங்களில் மகாத்மா காந்தியடிகளின் கையில் ராமர் இருந்தவரை அவர் பாதுகாப்பாக இருந்தார். அத்வானி கைக்கு இராம பிரான் மாறிய பிறகு நாடு முழுவதும் ரத்தக்களரி ஏற்பட்டு நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழக்கிற நிலை ஏற்பட்டது. அதேபோல, கிருபானந்த வாரியார் பிரச்சாரத்தில் முருக வழிபாட்டின் மூலம் தமிழகத்தில் பக்தர்கள் பெருகி மகிழ்ச்சியோடு இருந்தார்கள். ஆனால், முருகன் பெயரை வைத்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவர், வேல் யாத்திரை நடத்தி தமிழகத்தில் ரத்தக் களரியை ஏற்படுத்த தூபம் போட்டு வருகிறார். கடந்த காலத்தில் சூலாயுதத்தினால் ஏற்பட்ட விளைவுகளைப் போல, வேல் யாத்திரை மூலம் சமூக அமைதியைச் சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேட தமிழக பா.ஜ.க. முயற்சி செய்கிறது. இந்த முயற்சிகளை ஜனநாயக, மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கையுள்ள சக்திகள் முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

சமீபத்தில் மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களால் நாடு முழுவதும் விவசாயிகள் கடுமையான போராட்டங்களை நடத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். வேளாண் சட்டத்தினால் விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த குறைந்தபட்ச ஆதரவு விலை பறிக்கப்பட்டுள்ளது. இனி விவசாயிகளின் விளைப் பொருட்களின் விலையை அரசு நிர்ணயம் செய்ய முடியாது. கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் முடிவு செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும்.

விவசாயிகள் விளை பொருளை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பதன் மூலமாக நியாயமான விலை கிடைத்து வந்தது. அந்த முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டில் விவசாயிகளின் சந்தை மாற்றப்பட்டுள்ளது. இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அப்பட்டமாகப் பறிக்கிற செயலாகும். இதை எதிர்த்து  விவசாயிகளைத் திரட்டி பலமுனைகளில் தமிழ்நாடு காங்கிரஸ் போராடி வருகிறது.

மத்திய வேளாண் சட்டங்களினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதை மக்களிடையே பரப்புரை செய்வதற்காக 150 இடங்களில் இருந்து விவசாய டிராக்டர்களில் ஏர் கலப்பை பொருத்தப்பட்ட ஊர்வலத்தை  நடத்துவதற்குக்  காங்கிரஸ் கட்சி  திட்டமிட்டுள்ளது. இந்த ஊர்வலத்தின் மூலமாக வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்பு, விவசாயக் கடன்களை ரத்து செய்ய மறுப்பு மற்றும் மத்திய பா.ஜ.க. அரசின் விவசாய விரோத நடவடிக்கைகளைக் கண்டிக்கிற வகையில் பரப்புரை மேற்கொள்ளப்படும். இதன்மூலம் விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பா.ஜ.க.வின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மக்களின் ஆதரவைத் திரட்டுகிற முயற்சியில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஈடுபடத் திட்டமிட்டிருக்கிறது.

தமிழகத்தில் 150 இடங்களில் இருந்து விவசாய டிராக்டர்களில் ஏர் கலப்பை பொருத்தப்பட்ட ஊர்வலத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், தலைமை நிலைய பேச்சாளர்கள் ஆகியோர் பங்கேற்கிற வகையில் பரப்புரை பயணத்தை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் திட்டமிட்டு நடத்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகம் முழுவதும் நடைபெறும்  ஏர் கலப்பை ஊர்வலங்களின் இறுதியில் மாநில அளவில் நடைபெறும் விவசாயிகளின் பேரணியில் காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் பங்கேற்க இருக்கிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பஞ்சாப், அரியானா மாநிலங்களில் டிராக்டர் ஊர்வலத்தின் மூலமாக விவசாயிகளின் எதிர்ப்புணர்ச்சியை தலைவர் ராகுல்காந்தி வெளிப்படுத்தியதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அதேபோல, தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கிற விவசாயிகள் பேரணி தமிழகத்தின் அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிற வகையில் அமையும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் முழுவதும் எந்த தேதியில் ஏர் கலப்பை ஊர்வலம் தொடங்கும் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

The post விவசாயிகளை பாதுகாக்க தலைவர் ராகுல் பங்கேற்கும் ஏர்கலப்பை பேரணி! தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

மத்திய பா.ஜ.க. அரசின் விவசாய விரோதப் போக்கு – வாழ்வாதாரம் பறிப்பு!
விவசாயிகளின் முதுகெலும்பை முறிக்கும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் கொதித்தெழுந்துள்ளனர். இந்தியாவின் மொத்த வேலை வாய்ப்பில் 53 சதவிகிதம் – 243 மில்லியன் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கக் கூடிய துறையாக விவசாயம் விளங்குகிறது. ஆனால், 1950- 51 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண் துறையின் பங்களிப்பு 54 சதவிகிதமாக இருந்தது. தற்போது 20 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

ஆனால், உணவு தானியங்களின் உற்பத்தி ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. 1960&களில் தொடங்கிய பசுமைப் புரட்சித் திட்டத்தின் காரணமாக உணவு தானியங்களின் உற்பத்தி பெருகி வருவதை காண முடிகிறது. 1950-51 இல் உணவு தானியங்களின் உற்பத்தி 51 மில்லியன் டன்னாக இருந்தது 2019-20 இல்  291.95 மில்லியன் டன்னாக உயர்ந்திருக்கிறது. அதேநேரத்தில், சாகுபடியின் பரப்பளவு உயர்ந்திருக்கிறது. ஆனால், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நியாயமான உரிய விலை கிடைக்காத நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.

விவசாயிகள் உற்பத்தி செய்கிற பொருட்களின் விலையை விவசாயிகளே நிர்ணயம் செய்ய முடியாது. அதேநேரத்தில், ஒரு தொழிற்சாலையில் உற்பத்தி செய்கிற பொருளை அவர்களே விலை நிர்ணயம் செய்ய முடிகிறது. ஆனால், அந்த வாய்ப்பு விவசாயிகளுக்கு மறுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான், விவசாயிகள் உற்பத்தி செய்கிற விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க விவசாயிகள் கடுமையான போராட்ட வழிமுறைகளை கையாண்டு வந்தனர். இதன் விளைவாக மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை ஏற்று விவசாயிகளுக்கு கட்டுப்படியாகக் கூடிய நியாயமான விலையை வழங்க வேண்டுமென்று அனைத்து எதிர்கட்சிகளும், விவசாய சங்க அமைப்புகளும் கோரிக்கை வைத்தன. இந்நிலையில், 2014 மக்களவை தேர்தலுக்கு பிறகு, ஆட்சியில் அமர்ந்த பா.ஜ.க. அரசு இக்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் கோரின.

ஆனால், 2014 தேர்தல் தேர்தல் அறிக்கையிலும், பிரச்சாரத்திலும் நரேந்திர மோடி குறிப்பிட்டபடி, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றும் வகையில் விவசாயிகளின் உற்பத்தி செலவோடு 50 சதவிகிதம் கூடுதலாக கிடைக்கும் வகையில் திட்டம் வகுக்கப்படும் என்று குறிப்பிட்டதை அனைத்து எதிர்கட்சிகளும் எடுத்துரைத்தன. ஆனால், அதை நிறைவேற்றுவதற்கு மோடி அரசு தயாராக இல்லாமல் பல்வேறு சால்ஜாப்புகளைக் கூறி காலம் தாழ்த்தி வந்தது. இறுதியாக, எதிர்கட்சிகளின் நிர்ப்பந்தம் காரணமாக எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றுவதாக 2019 தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், அக்குழுவின் பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகள் பெறுவதற்கு எவ்விதமான கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தவில்லை. இதனால், குறைந்தபட்ச ஆதரவு விலையை விட, சந்தை விலை குறைவாக இருந்த நிலையில் விவசாயிகள் தங்களுடைய விளைப் பொருட்களை நஷ்டத்தில் விற்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.

இந்நிலை காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, கடன் சுமை நாளுக்கு நாள் அதிகரித்து, தற்கொலை சாவுகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன. இதற்கு மோடி ஆட்சியின் தவறான விவசாயக் கொள்கை தான் காரணம். இதன் காரணமாக தேர்தல் நேரத்தில் மோடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகளின் கடனை ரத்து செய்வதால் எந்த பயனும் ஏற்படாது என பிரதமர் மோடி கூறியது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் இருப்பதாக விவசாயிகள் கருதுகிறார்கள். விவசாயிகள் பெற்ற கடனில் ரூ.2 லட்சத்திற்கும் மேலான கடனை தவிர்த்து விட்டால், மொத்த கடன் சுமை நிலுவையில் உள்ளது, ரூ.1.90 லட்சம் கோடி தான். இதனை தள்ளுபடி செய்வதற்கு மத்திய பா.ஜ.க. அரசு தயாராக இல்லை. ஆனால், தமது 15 பணக்கார நண்பர்கள் வங்கியில் பெற்ற கடனில் ரூ.3.50 லட்சம் கோடியை மோடி தள்ளுபடி செய்து சலுகை காட்டியிருக்கிறார். விவசாயிகளுக்கு இதைவிட  பெரிய துரோகத்தை வேறு எவரும் செய்ய முடியாது.

ஏற்கனவே, பா.ஜ.க. ஆட்சியில் ஆகஸ்ட்  2014 இல் அமைக்கப்பட்ட சாந்தகுமார் தலைமையிலான குழு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவதை நிறுத்த வேண்டுமென்றும், உணவு தானிய கொள்முதல் மற்றும் சேமிப்பிற்கு தனியார் துறையை ஊக்கப்படுத்த வேண்டுமெனவும் ஜனவரி 2015 இல் பரிந்துரை செய்தது.

இந்நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற வகையில் கடந்த ஜூன் 5 ஆம் நாள் மூன்று அவசர சட்டங்களை மத்திய பா.ஜ.க. அரசு பிறப்பித்தது.

அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் (திருத்தம்) 1955

வேளாண் விளை பொருட்கள் வியாபாரம் மற்றும் வர்த்தகம்

விவசாயிகள் (அதிகாரப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு, விலை உறுதி, வேளாண்மை சேவைகள் சட்டம்)

இச்சட்டங்கள் மூன்றும் ஏன் நிறைவேற்றப்பட்டன ? எதற்காக நிறைவேற்றப்பட்டன ? யாருடைய நலனைக் காப்பாற்ற நிறைவேற்றப்பட்டன என்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த மூன்று அவசரச் சட்டங்களும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை, பிரிக்க முடியாதவை. இவை ஒட்டு மொத்தமாகவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் முடக்கி விடக் கூடியதாகும்.

அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955 (திருத்தம்) என்பது தானியங்கள், பயிறு வகைகள், பருப்பு, எண்ணெய் வித்துக்கள், உணவாகப் பயன்படும் எண்ணெய் வகைகள், உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்டவற்றை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலிலிருந்து நீக்க  வகை செய்யும். இந்தப் பொருட்களின் விலை நிலவரத்தை சீராக வைத்துக் கொள்வதற்காகவும், பதுக்கலை ஒழிப்பதற்காகவுமே இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இத்திருத்தத்தின் மூலம் இவை அனைத்தும் செயலற்றதாக ஆக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இருந்த இன்றியமையாத பொருட்களின் கீழ் வெங்காயம், பருப்பு போன்றவை செயற்கையாக விலை உயர்வதை தடுக்க மத்திய அரசு அவற்றை சேமித்து வைக்கவும், சில கட்டுப்பாடுகளை விதிக்கவும் வாய்ப்பு இருந்தது. தற்போது, அத்தகைய வாய்ப்புகள் நீக்கப்பட்டுள்ளன.

‘ஒரே நாடு, ஒரே வேளாண் சந்தை’ என்பதை நிலைநாட்டி தனியார் பங்களிப்பை இச்சட்டம் ஊக்குவிக்கிறது. இதன்மூலம் விவசாயிகளுக்கு உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை பறிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவாதத்தை மூன்று அவசரச் சட்டங்களும் புறக்கணித்துள்ளன. இது விவசாயிகளுக்கு மோடி அரசு இழைத்த மிகப்பெரிய அநீதியாகும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வோம். 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக கூட்டுவோம் என தேர்தலில் வாக்குறுதி கொடுத்த நரேந்திர மோடி ஆட்சியில் கடந்த ஆறு ஆண்டுகளாக விவசாயிகள் அனுபவிக்கிற துன்பங்களுக்கு அளவே இல்லை.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் விவசாயம் முழுக்க முழுக்க மாநிலப் பட்டியலில் உள்ளதாகும். விவசாயம் குறித்த மாநில பட்டியலில் உள்ள அம்சங்கள் மீது சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. இந்த அவசரச் சட்டமானது கூட்டாட்சித் தத்துவத்தை குழிதோண்டிப் புதைக்கிற செயலாகும். அரசமைப்புச் சட்டத்தில் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு தனி அதிகாரங்கள் வழங்கப்பட்டதோடு, இரண்டிற்கும் பொதுவாக பொதுப் பட்டியல் மூலமும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அரசும் தமக்கென வகுக்கப்பட்ட பட்டியல்களில் குறிப்பிடப்பட்ட பொருட்கள் குறித்து சட்டம் இயற்ற வேண்டும். ஓர் அரசு இன்னொரு அரசிற்குரிய பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் குறித்து சட்டம் இயற்றுதல் கூடாது. மத்திய அரசோ, மாநில அரசுகளோ தமது வரம்புகளைத் தாண்டி தமக்கென குறிக்கப்பட்ட பொருள் அல்லாததில் சட்டம் இயற்றுவது வரம்பு மீறிய சட்ட விரோதச் செயலாகும்.

கடந்த ஜூன் மாதம் பிறப்பித்த அவசரச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற பா.ஜ.க. அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டது. இதற்கான மசோதா செப்டம்பர் மாதத்தில் மக்களவையில் பா.ஜ.க.வின் மிருகபல மெஜாரிட்டியின் மூலம் நிறைவேற்றி விட்டது. ஆனால், மாநிலங்களவையில் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில்,  மசோதா மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்ற எதிர்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து, சட்டவிரோதமாக பெரும் அமளிகளுக்கிடையே குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேறியதாக மாநிலங்களவையில் அறிவித்தது. இதன்மூலம் பாராளுமன்ற ஜனநாயகத்தை பா.ஜ.க. அரசு படுகுழிக்குள் தள்ளியது. குடியரசுத் தலைவரும் இந்தச் சட்டங்களுக்கான ஒப்புதலை வழங்கிய பிறகு, மூன்று வேளாண் சட்டங்களும் இந்திய விவசாயிகள் மீது திணிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கி வருவதை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்பது தான் பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களின் நோக்கம்.

இன்றைக்கு விவசாயிகளின் விளை பொருட்கள் சந்தைக்கு வெளியே விற்பதற்கான வாய்ப்பு இச்சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பிறகு குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகள் கனவில் கூட காண முடியாது.

விவசாயிகளுக்கு விரோதமான அவசரச் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா மாநிலங்களிலும் கடுமையான போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகிறார்கள். இதையொட்டி காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த டிராக்டர் ஊர்வலத்தில் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக களம் இறங்கியிருக்கிறார். ஏற்கனவே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்தபடி, நாடு முழுவதும் பலகட்ட போராட்டங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்று வருகின்றன. பா.ஜ.க. அரசின் விவசாய விரோதச் சட்டங்கள் குறித்து விரிவான விளக்கத்தை வழங்குவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் தலைமையில் கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு தினேஷ் குண்டுராவ் அவர்கள் பங்கேற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற்றது.

தமிழகத்திலும் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளின் சார்பாக கடந்த செப்டம்பர்  28 -ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதேபோல, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்களின் அறிவிப்பின்படி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் விவசாயச் சட்டங்களை எதிர்த்து அக்டோபர்  6 முதல் 31 வரை கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது. இவை அனைத்தும் சேகரிக்கப்பட்டு நவம்பர் 14 ஆம் தேதி குடியரசுத் தலைவரிடம் வழங்கப்படும்.

விவசாய விரோதச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் கொழுந்து விட்டு எரியும் போராட்டங்களுக்கு இணையாக தமிழ்நாடும் போர்க்கோலம் பூணும் வகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்களின் செயல் திட்டத்தின் அடிப்படையில் போராட்டக் களம் வலிமை பெற்று  வருகிறது.

திருவண்ணாமலையில் அக்டோபர்  11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை  10 மணிக்கு விவசாயிகள் கண்டன மாநாடு தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நடைபெறுகிறது. இதில் தமிழகத்திலிருந்து பெருந்திரளானவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டின் மூலம் மோடி அரசு  ஒரு விவசாய விரோத அரசு என்பதை உறுதி செய்கிற வகையில் பஞ்சாப், அரியானா மாநிலங்களுக்கு இணையாக தமிழகமும் போர்க்கோலம் பூண்டிருப்பது உறுதி செய்யப்படுகிறது.

The post மத்திய பா.ஜ.க. அரசின் விவசாய விரோதப் போக்கு – வாழ்வாதாரம் பறிப்பு! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.