Farm Bills Archives - தேசிய முரசு - Desiya Murasu

விவசாயச் சட்டங்களை 5 ஆண்டுகளுக்கு நிறுத்தி வையுங்கள் : விவசாயிகள் வைக்கும் புதிய கோரிக்கை
கடந்த 2020 ஆம் ஆண்டின் பெரும் பகுதி புதிய விவசாயச் சட்டங்களை எதிர்ப்பதிலேயே இந்திய விவசாயிகள் செலவிட்டுள்ளனர். ஒரு வருடத்துக்கு விவசாயச் சட்டங்களை நிறுத்தி வைப்பதற்காக மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் டோமர் கூறுகிறார். இது குறித்து ஆய்வு செய்ய கமிட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளாக தங்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் மத்திய அரசு பிரயோகித்துவிட்டது. தங்கள் உரிமைக்காக போராடும் விவசாயிகளின் கோரிக்கையே பரிசீலிக்காமல், அவர்களைத் தீவிரவாதிகள் என்றும் தேச விரோதிகள் என்றும் கட்டமைப்பதிலேயே குறியாக உள்ளனர்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விவசாயச் சட்டங்களை நிறுத்தி வைத்தது அரசாங்கத்தின் வியூகங்களுக்குக் கிடைத்த தோல்வியே. சிறு அளவிலான விவசாய சமுதாயம் நடத்தும் போராட்டம் தான். அதனை எளிதில் கையாளலாம் என்பது பாஜகவின் எண்ணம்.

ஆனால், அரசு எதிர்பார்த்ததை விடப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போனது. டெல்லி எல்லைக்கு வெளியே 40 கி.மீ தொலைவுக்கு டிராக்டர்கள் அணிவகுத்து நின்றன. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளே இதில் திரளாகப் பங்கு பெற்றனர்.

எந்த ஒரு போராட்டமும் நீண்ட காலத்துக்கு நீடிப்பது சமுதாய நலனுக்கு ஏற்றதல்ல என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி கூறுகிறார். பாஜக கொள்கையின் பிறப்பிடமான ஆர்எஸ்எஸ் அமைப்பு, இந்த போராட்டம் விரைவாக முடிய வேண்டும் என்று விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.

மத்திய விவசாயத்துறை அமைச்சர் டோமர் கூறும்போது, விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தால், அது இந்திய ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டார். இதற்கு எல்லாம் விவசாயிகள் மயங்கிவிடவில்லை. விவசாயச் சட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என்பதே, போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் தந்திரமே என்பதால், விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இது அரசு மீதான விவசாயிகளின் நம்பிக்கைக்குத் தொடர்பான விஷயம். மீண்டும் இந்த சட்டங்களைச் செயல்படுத்த மாட்டார்கள் என்பது என்ன உத்தரவாதம்? என்று கேட்கிறார் விவசாயச் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத். 3 விவசாயச் சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 6 மாதங்கள் ஆனாலும் நாங்கள் போராட்டத்தை விடப்போவதில்லை என்பதே விவசாயச் சங்கங்களின் திட்டவட்டமான முடிவு.

5 ஆண்டுகளுக்குத் தற்காலிகமாக இந்த புதிய விவசாயச் சட்டங்களை நிறுத்தி வைத்தால் தொடர்ந்து பேசலாம் என்பதும் விவசாயிகள் வைத்துள்ள முக்கிய யோசனை.

புதிய விவசாயச் சட்டங்களைத் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தி என விமர்சிக்கின்றனர் விவசாயச் சங்கங்கள்.

டெல்லி காவல் துறையினருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. டிராக்டர் பேரணியை அனுமதிப்பது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சங்கடம் என அரசு சொல்லிக் கொண்டிருந்தது. உத்தரப் பிரதேச அரசோ, ஒரு வாரத்துக்கு முன்பே டிராக்டர்களுக்கு டீஸல் விநியோகம் செய்வதை நிறுத்திவிட்டது.

இதன்பிறகும், டிராக்டர் பேரணிக்கு அனுமதி தரப்பட்டது. அரசு தரப்பு மற்றும் விவசாயிகள் தரப்பில் முதல் முறையாக அடுத்த சந்திப்புக்கான தேதியை முடிவு செய்யவில்லை. பேச்சுவார்த்தையை கண்ணுக்குப் புலப்படாத சக்திகள் முறியடிப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர்.

அமைதியாக வந்த டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டதற்கு தாங்கள் காரணமில்லை என விவசாயிகள் மறுத்து வருகின்றனர். எனினும், போராட்டத்தை வலுவிழக்கச் செய்ய, இந்தக் கலவரத்தைக் கையில் எடுத்திருக்கிறது மத்திய அரசு. எனினும், 3 புதிய விவசாயச் சட்டங்களை முழுமையாகத் திரும்பும் வகையில், வேறு வடிவத்தில் தங்கள் போராட்டம் நடைபெறும் என விவசாயச் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

கடும் பனியிலும் கடந்த 2 மாதங்களாக டெல்லியில் விவசாயச் சங்கங்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இருந்தாலும், 3 விவசாயச் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக நிராகரிப்பதிலிருந்தே, மோடியின் தந்திரம் தங்களுக்குப் புரிகிறது என்கின்றனர் விவசாயிகள்.

The post விவசாயச் சட்டங்களை 5 ஆண்டுகளுக்கு நிறுத்தி வையுங்கள் : விவசாயிகள் வைக்கும் புதிய கோரிக்கை appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

குடியரசுத் தலைவரிடம் 2 கோடி கையெழுத்து மகஜரை சமர்ப்பித்தார் ராகுல் காந்தி: பிரியங்கா கைது
3 விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தும் வகையில், குடியரசுத் தலைவர் ராம் நாத் கோயங்காவை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை டெல்லி காவல் துறையினர் கைது செய்தனர்.

3 விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், இதற்கு எதிராகப் பெறப்பட்ட 2 கோடி கையெழுத்துகளைக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்திடம் சமர்ப்பிக்க, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அப்போது அவர்களை டெல்லி காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர், 2 கோடி கையெழுத்துடன் கூடிய மகஜரை சமர்ப்பிக்க ராகுல் காந்தி தலைமையிலான சிறு குழுவைக் காவல் துறை அனுமதித்தது. குடியரசுத் தலைவர் தலையிட்டு, விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களையும் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மகஜரில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதற்கிடையே, இந்த ஊர்வலத்தில் பங்கேற்ற பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்களைக் கைது செய்த காவல் துறை, அவர்களைப் பேருந்துகளில் ஏற்றி அழைத்துச் சென்றது.

2 கோடி பேரிடம் கையெழுத்துப் பெற்ற மகஜரை சமர்ப்பித்துவிட்டு வெளியே வந்த ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறும்போது, ”3 விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை, போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப மாட்டார்கள் என்பதைப் பிரதமருக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன். விரைவில் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி, 3 சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும். விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் எதிர்க்கட்சிகள் ஆதவராக நிற்போம். இந்தியாவில் ஜனநாயகம் இல்லை. பிரதமரை எதிர்த்துப் பேசுபவர்கள் எல்லாம் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். பிரதமரை மட்டுமல்ல, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாவத்தை விமர்சித்தால் கூட தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துகிறார்கள்” என்றார்.

கைது செய்யப்பட்டு பேருந்தில் ஏற்றப்பட்டபின் பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, ”இந்த அரசுக்கு எதிரான கருத்துகள் தீவிரவாதமாகப் பார்க்கப்படுகிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக நமது குரலை ஒலிக்கவே இந்த ஊர்வலத்தை நடத்துகிறோம். மத்திய அரசு பாவிகளின் அரசாக இருக்கிறது. இந்த பாவிகள் தான் விவசாயிகளை வெவ்வேறு பெயர்களைச் சொல்லி அழைக்கின்றனர். போராடும் விவசாயிகள் தேச விரோத சக்திகள் என்று சொன்னால், அரசு ஒரு பாவி தான். நாங்கள் எதிர்க்கட்சிக்கு லாயக்கற்றவர்கள் என்றும் பலவீனப்பட்டுவிட்டதாகவும் கூறும் அவர்களே, கடந்த ஒரு மாதத்தில் லட்சக்கணக்கான விவசாயிகளை எல்லையில் திரட்டும் அளவுக்கு சக்தி வாய்ந்தவர்கள் என்றும் நம்மைப் பார்த்துக் கூறுகிறார்கள். அவர்கள் யார் என்பதை முதலில் முடிவு செய்துகொள்ள வேண்டும்” என்றார்.

நாடாளுமன்றத்தில் 3 விவசாயச் சட்டங்களையும் மோடியின் அரசு நிறைவேற்றிய பின், அந்த சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என, குடியரசுத் தலைவரை எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்டன. மாநிலங்களவையில் ஜனநாயகத்துக்கு விரோதமாக இந்த 3 சட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டன. எனினும், 3 விவசாயச் சட்டங்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

இந்த நிலையில் தான், தங்களுக்கு எதிரான 3 விவசாயச் சட்டங்களையும் எதிர்த்து டெல்லி எல்லையில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் பயந்து ஓடாமல் நெஞ்சை நிமிர்த்தி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

பேச்சுவார்த்தை நடத்த வருமாறு விவசாயச் சங்கப் பிரதிநிதிகளை மத்திய அரசு அழைத்துள்ளது. எனினும், திறந்த மனதுடன், தங்கள் கோரிக்கையின் அடிப்படையில் நடத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கத் தயார் என விவசாயச் சங்கங்கள் அறிவித்துள்ளன.

The post குடியரசுத் தலைவரிடம் 2 கோடி கையெழுத்து மகஜரை சமர்ப்பித்தார் ராகுல் காந்தி: பிரியங்கா கைது appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

நாட்டைத் துண்டாடுவதும், ஒற்றுமையை சீர்குலைப்பதும் பாஜக தான் : சுக்பீர் சிங் பாதல் கடும் குற்றச்சாட்டு
நாட்டைத் துண்டாடுவதும், ஒற்றுமையை சீர்குலைப்பதும் பாஜக கும்பல் தான் என்று சிரோன்மனி அகாலிதளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து, அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தது சிரோன்மனி அகாலிதளம் கட்சி. மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாயச் சட்டங்களை எதிர்த்து, இக்கட்சியைச் சேர்ந்த ஹரீஸ்ம்ராட் கவுர் பாதல் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், சிரோன்மனி அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தமது ட்விட்டர் பதிவில், ”விவசாயிகள் என்ன கேட்கிறார்களோ, அதைத் தராமல் பிடிவாதப் போக்கோடு மோடி அரசு நடந்துகொள்கிறது. அதோடு, சீக்கியர்களுக்கு எதிராக இந்துக்களைத் திசை திருப்ப முயல்கிறது. அப்படிச் செய்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கிறேன்.

மத்திய அரசுக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் தேசபக்தி உடையவர்கள் என்றும், எதிராகப் பேசுகிறவர்களை நாட்டைத் துண்டாடுபவர்கள் என்றும் பாஜகவினர் பேசி வருகின்றனர். நாட்டை உண்மையிலேயே துண்டாடும் கட்சி பாஜகதான்.

நாட்டின் ஒற்றுமையை அந்த கட்சி துண்டாடுகிறது. இந்துக்களை முஸ்லீம்களுக்கு எதிராகத் திருப்பி வெட்கக்கேடான செயலைச் செய்த பாஜக, இப்போது, சீக்கியர்களுக்கு எதிராக இந்துக்களை மோத விடப்பார்க்கிறது. அமைதியாகப் போராடும் தேசபக்தியுடைய பஞ்சாப் விவசாயிகளை, வகுப்புவாத தீக்குள் தள்ளிவிட பாஜக முயல்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

The post நாட்டைத் துண்டாடுவதும், ஒற்றுமையை சீர்குலைப்பதும் பாஜக தான் : சுக்பீர் சிங் பாதல் கடும் குற்றச்சாட்டு appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் எழுச்சி மாநாடு
.மத்திய பா.ஜ.க. அரசின் விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து அக்டோபர் 11 ஞாயிறு காலை 10 மணியளவில் திருவண்ணாமலை, செங்கம் மெயின் ரோடு, அத்;தியந்தல் பேருந்து நிறுத்தம் அருகில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் தலைமையில் மாபெரும் விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மூவாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். விவசாயிகள் மாநாட்டிற்கென பிரம்மாண்டமான மேடையும், பந்தலும் அமைக்கப்பட்டு சமூக விலகலை கடைப்பிடிக்கிற வகையில் மேடையிலும், பங்கேற்பவர்கள் பகுதியிலும் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மிகுந்த கட்டுப்பாடோடும், எழுச்சியோடும் விவசாயிகள் மாநாடு நடைபெற்றதை பார்த்தவர்கள் அனைவருமே பாராட்டி மகிழ்ந்தார்கள். மாநாட்டையொட்டி பந்தலுக்கு அருகில் டிராக்டர்கள் அணிவகுக்கும் வகையில் நிறுத்தப்பட்டிருந்தன.

மத்திய பா.ஜ.க. அரசின் அவசர சட்டங்களை எதிர்த்து தமிழக விவசாயிகளின் உள்ளக் குழுறலை வெளிப்படுத்துகிற வகையில் விவசாயிகள் மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை மாநாடு தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்துகிற வகையில் அனைவரும் பாராட்டும் விதத்தில் சிறப்பான ஏற்பாடுகளை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன் அமைப்பின் தமிழக தலைவருமான செங்கம் ஜி. குமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

விவசாயிகள் மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் டாக்டர் கே. ஜெயக்குமார், எம்.பி. துவக்கவுரை நிகழ்த்தினார். பா.ஜ.க. அரசின் விவசாய விரோதச் சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம் என்ற பிரச்சார நூலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத் வெளியிட, தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் ஆ. கோபண்ணா முதல் நூலை பெற்றுக் கொண்டார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் டி.என். முருகானந்தம், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் டி. செல்வம், கீழானூர் ராஜேந்திரன் ஆகியோர் முன்மொழிந்தனர்.

விவசாயிகளின் சங்கமமாக நிகழ்ந்த இந்த மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் சிறப்புரையாற்றினார். பகல் 1 மணியளவில் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் வேளாண் சட்டங்களை கடுமையாக விமர்சனம் செய்து மிகச் சிறப்பான உரை என்று சொல்வதை விட காங்கிரசின் ஜெயபேரிகையாக அவர் முழங்கியதை மாநாடே உன்னிப்பாக கவனித்து கரவொலி எழுப்பி வரவேற்றது.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர்கள் மயூரா எஸ். ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் டாக்டர் ஏ. செல்லக்குமார், எம்.பி., சி.டி. மெய்யப்பன், கிறிஸ்டோபர் திலக், முன்னாள் மத்திய அமைச்சர் ஆர். தனுஷ்கோடி ஆதித்தன், மக்களவை உறுப்பினர் செல்வி எஸ். ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். விஜயதரணி, எஸ். ராஜேஷ்குமார், ஜே.ஜி. பிரின்ஸ், வி.எஸ். காளிமுத்து, ஆர். கணேஷ் மற்றும் கே. கோபிநாத், உ. பலராமன், கு. செல்வப்பெருந்தகை, பொன். கிருஷ்ணமூர்த்தி, அருள் அன்பரசு, டாக்டர் கே.ஐ. மணிரத்தினம், இராம. சுகந்தன், எம்.பி. ரஞ்சன்குமார், எஸ்.பி. வரதராஜன், விவசாய அணி தலைவர் எஸ். பவன்குமார், திருச்சி ஜி.கே. முரளிதரன், விவசாய சங்கத் தலைவர் இளங்கீரன், வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன், ஹசன் மௌலானா, குங்பூ விஜயன், அஸ்லம் பாஷா, சுதர்சன் ஜெயசிம்மா, ஜி.கே. தாஸ், கே.டி. லஷ;மிகாந்தன் மற்றும் பெருந்திரளானவர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள். திருவண்ணாமலை மாவட்ட விவசாய பிரிவு தலைவர் டி. சீனிவாசன் மற்றும் டாக்டர் என். வெற்றிச்செல்வன் ஆகியோர் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.

ஐம்பது வருடங்களாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லை என்றாலும், தமது சொந்த முயற்சியின் மூலம் மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமான முறையில், பார்ப்போர் வியக்கும் வகையில் ஆளுங்கட்சி நடத்துவதைப் போல மாநாட்டு ஏற்பாடுகளை செய்த செங்கம் ஜி. குமாரை தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் மனதார பாராட்டினார். அந்த பாராட்டிற்கு தகுதியுள்ளவராக அவர் விளங்கியதை மாநாட்டை பார்ப்பவர்கள் அனைவரும் உறுதி செய்ததை பார்க்க முடிந்தது. மாநாட்டிற்கு வந்த அனைவருக்கும் உயர்தர மதிய உணவு வழங்கப்பட்டது.

தமிழக காங்கிரசை பொறுத்தவரை இந்த மாநாட்டை நடத்துகிற பொறுப்பை தலைவர் கே.எஸ். அழகிரி வழங்கிய நாள் முதல் இரவு, பகல் பாராமல், கண் துஞ்சாமல், அயராமல், சிறிதும் ஓய்வின்றி உழைத்த செங்கம் ஜி. குமார் அவர்களது உழைப்பை பாராட்டாதவர்களே இருக்க முடியாது. இவருக்கு உறுதுணையாக இருந்த செயல்வீரர் செந்தமிழ் அரசும் பாராட்டிற்கு உரியவராக அவரது செயல்பாடுகள் இருந்தது.

தமிழக காங்கிரசை பொறுத்தவரை செங்கம் குமாரைப் போல ஆற்றல்மிக்க மாவட்ட காங்கிரஸ் தலைவர்களாக செயல்படுவார்களேயானால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலிமைப் பெற்று முன்னணியில் இருக்கும் வகையில் மிகப் பெரிய வாய்ப்பு ஏற்படும் என்பதை எவரும் மறுக்க இயலாது.

The post மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் எழுச்சி மாநாடு appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

விவசாயிகளை பாதுகாக்க ராஜஸ்தான் மாநிலத்தில் இயற்றிய சட்டத்தைப் போல தமிழகத்திலும் நிறைவேற்றிடுக! முதலமைச்சருக்கு தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை!
பாஜக அரசு கொண்டு வந்த விவசாயிகள் விரோத மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்துள்ளார். காங்கிரஸ் நேரிடையாக சென்று குடியரசுத் தலைவரிடம் முறையிட்டு, இந்த சட்டத்துக்கு ஒப்புதல் தர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது. எனினும், இதற்கான ஒப்புதலைக் குடியரசுத் தலைவர் வழங்கியுள்ளார்.

விவசாயச் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் வெடித்துள்ளது. கர்நாடக மாநிலத்திலும் விவசாயிகள் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்துப் போராடி வருகின்றனர். தமிழகத்தில் 70 மாவட்டங்களில் 3500 இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக பங்கேற்று மாபெரும் போராட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள்.

விவசாயச் சட்டங்களை வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தம் என்று பாஜக கூறுகிறது. அதேசமயம், 3 விவசாயச் சட்டங்களைப் பல மாநிலங்கள் எதிர்த்து வருகின்றன.  விவசாயிகளுக்கு எதிரான இந்த சட்டங்களை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகப்போவதாக, பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

இத்தகைய சட்டங்கள் கூட்டாட்சியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.  விவசாயம் என்பது அரசமைப்புச் சட்டத்தில் மாநில பட்டியலுக்குள் வரும் போது, மாநில அரசுகளை கலக்காமல் மத்திய பா.ஜ.க. அரசு மூன்று சட்டங்களை கொண்டு வருவதன் உள்நோக்கம் எல்லோருக்கும் எளிதாக புரியும். இந்த சட்டங்களால் கார்பரேட்கள் மட்டுமே பலனடைவர். விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை என்பதை விவசாயத்துறை வல்லுநர்கள் ஆதாரத்துடன் எடுத்துரைத்துள்ளனர்.

அரசியல் கட்சிகள் சொல்வதையோ, வல்லுநர்கள் சொல்வதையோ கேட்காமல், விடாப்பிடியாக  3 சட்டங்களையும் மாநிலங்களவையில் குரல் ஓட்டு மூலம் மோடி அரசு நிறைவேற்றியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், விவசாயிகளின் நலனைக் காக்க ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு முதல் அடியை எடுத்து வைத்துள்ளது.

அரசமைப்புச் சட்டத்தில் ஒன்றியத்தின் பட்டியல், மாநில பட்டியல், பொதுப் பட்டியல் என அதிகாரங்கள் தெளிவாக பிரிக்கப்பட்டிருந்தாலும், சில உறுப்புகளின் அடிப்படையில் மத்திய அரசு தனது எச்ச அதிகாரத்தை தன்னிச்சையாக பயன்படுத்துகிறது. இதன்மூலம் மாநில அதிகாரத்திற்குட்பட்ட விவசாயம் உள்ளிட்ட சிலவற்றின் மீது மத்திய அரசு சட்டம் இயற்றியிருக்கிறது. இது கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கிற செயலாகும்.

மத்திய அரசின் சட்ட வரம்புக்குள் தலையிடாமல், மாநில வரம்புக்குட்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளது. அவசரச் சட்டங்களாகவே இருக்கும் மத்திய சட்டப் பிரிவுகள் சிலவற்றை ரத்து செய்தும் ராஜஸ்தான் மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி, சட்டம்  அல்லது துணைச் சட்டம் மூலம் விவசாயிகளுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு, மாநில அரசுகளின் வரம்பு மற்றும் கட்டணத்துக்குட்படாமல் மத்திய சட்டம் உருவாக்கும் புதிய சந்தைகளை, இதன்மூலம் ராஜஸ்தான் அரசு தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.

மத்திய சட்டத்தில் மாற்றம் செய்யாத வகையில் மாநில அரசின் சட்டம் அமையும். மத்திய சட்டத்துக்குப் பதில் அளிக்கும் வகையிலும் மாநில அரசின் சட்டத்தின் கீழ், நிர்வாக உத்தரவு பயன்படுத்தப்படும்.

ராஜஸ்தான் மாநில அரசு நிறைவேற்றிய சட்டத்தின் 6-வது பிரிவின்படி, சந்தைக் கட்டணத்தையோ அல்லது வரியையோ மாநில அரசுகளின் கீழ் உள்ள விவசாய உற்பத்தி மற்றும் சந்தைக் குழுக்கள் சட்டத்தின் கீழ் வசூலிக்க முடியாது. பண்ணை வாயில்கள்,  கிடங்குகள் மற்றும் குளிர் சேமிப்பு கிடங்குகள் மத்திய அரசின் கீழ் வரும்.

எனினும், சந்தை விவசாயம் மற்றும் துணை விவசாயம் ஆகியவை மாநில விவசாய உற்பத்தி சந்தைச் சட்டத்தின் கீழ் ராஜஸ்தானில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, தனியார் சந்தைகளும் துணை சந்தைகளும் மாநில சட்டங்களின் கீழ் தானாக வந்துவிடும்.

இந்த நிர்வாக அதிகாரத்தைத் தான் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநில அரசு பயன்படுத்தியுள்ளது. இதன்மூலம் இந்திய உணவுக்கழகம், மத்திய சேமிப்புக் கிடங்கு கழகம் மற்றும் ராஜஸ்தான் சேமிப்புக் கிடங்கு கழகம் ஆகியவை குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையிலேயே கொள்முதல் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

1961 ஆம் ஆண்டு ராஜஸ்தான் விவசாய உற்பத்தி சந்தைச் சட்டத்தின் 6-வது பிரிவின் கீழ், தமக்குள்ள அதிகாரத்தை ராஜஸ்தான் அரசு பயன்படுத்தியுள்ளது. இதன்மூலம், மத்திய அரசின் சேமிப்புக் கிடங்குகள் மாநில அரசுக்குச் சந்தைக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இத்தகைய ஆக்கப்பூர்வ நடவடிக்கையின் மூலம் விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்துள்ள ராஜஸ்தான் மாநில அரசைப் பாராட்டுகின்றேன்.

‘இதுபோன்ற சட்டத்தைக் காங்கிரஸ் ஆளும் இதர மாநில அரசுகள் பயன்படுத்தினால், மத்திய அரசின் பாதகமான சட்டங்களிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க முடியும்’ எனக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த ஆலோசனையைத் தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசும் ஏற்று, ராஜஸ்தானைப் போல், மாநில அரசின் அதிகாரத்துக்குட்பட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதன்மூலம், விவசாயச்  சட்டங்களை கண்மூடித்தனமாக ஆதரித்து தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்ததற்கு, பிராயச்சித்தம் தேடியதாகவும் இருக்கும் என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

The post விவசாயிகளை பாதுகாக்க ராஜஸ்தான் மாநிலத்தில் இயற்றிய சட்டத்தைப் போல தமிழகத்திலும் நிறைவேற்றிடுக! முதலமைச்சருக்கு தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.