Dr Manmohan Singh Archives - தேசிய முரசு - Desiya Murasu

மன்மோகன் சிங் ஆலோசனையை ஏற்று செயல்படுங்கள் : பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள்
”முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை கூறும்போது, அதனை ஏற்று செயல்படுங்கள்” என பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ” கொரோனா போன்ற முன் எப்போதும் இல்லாத சுகாதாரப் பிரச்சினையை நாடு எதிர்கொள்ளும் போது, எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையைப் பெற மோடி அரசு தவறிவிட்டது.

இந்த பிரச்சினையை எதிர்கொள்ள ஒட்டுமொத்த நாடே ஓரணியில் நின்றபோது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறிய ஆலோசனைகளை பிரதமர் மோடி ஏளனம் செய்தார்.

இனிமேலாவது மக்கள் பிரச்சினையில் சோதித்துப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, மக்களோடும் எதிர்கட்சிகளோடும் அவர் இணைந்து செயல்படவேண்டும். பாகிஸ்தானின் உளவுத்துறையினருடன் கூட மத்திய பா.ஜ.க. அரசு பேச தயாராக இருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகளுடன் பேச அவர்கள் தயாராக இல்லை.

இன்றைக்கு எந்த எதிர்க்கட்சித் தலைவரும் நேர்மறையான, வலுவான ஆலோசனை தரமாட்டார் என்பதை நான் நம்பவில்லை. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமித்த குரலில் கூறுகின்றன.

மன்மோகன் சிங் 10 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். அவர் எந்த அளவுக்கு கண்ணியமான மனிதராக இருந்தார் என்பதை நாம் அறிவோம். அப்போது ஆலோசனைகளைக் கேட்டுப் பெற்ற அவர், அதே கண்ணியத்துடன் அவற்றைக் கருத்தில் கொண்டு செயல்பட்டார்.

முன்னாள் பிரதமர் எழுதும் கடிதத்துக்கு அமைச்சர் மூலம் பதில் அளிக்கச் செய்து, சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொண்டு நேரத்தை மத்திய அரசு வீணடிக்கிறது.

பிரதமருக்கு மன்மோகன் சிங் எழுதிய கடிதத்தில், ”கொரோனா தடுப்பூசி போடுவதில் ஏற்படும் பதற்றத்தைத் தடுத்து, மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசிகளைப் போடுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த விஷயத்தில் முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், சில ஆலோசனைகளையும் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார். இதற்குப் பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன், ”அவர் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியினர் மன்மோகன் சிங்கின் ஆலோசனை கேட்டாலே அது வரலாறு” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவுவது குறித்துத் தான், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அந்த கடிதத்தை எழுதியிருந்தார். கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது ஏற்பட்ட பாதிப்பை விட தற்போது அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

2021 ஜனவரி முதல் மார்ச் வரை 6 கோடி கொரோனா தடுப்பூசி மருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது, மக்களுக்கு இழைத்த துரோகம். அதே காலகட்டத்தில், இந்திய மக்களுக்கு 3 முதல் 4 கோடி வரை தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டன.

இந்தியர்களுக்கு மத்திய அரசு ஏன் முன்னுரிமை அளிக்கவில்லை? இந்த நாட்டைப் பயன்படுத்தி பிரதமர் மோடி சுயவிளம்பரம் தேடுவது ஏன்? 22 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்தில், ஒரு கோடி தடுப்பூசிகள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளன. இன்றைக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு மாநில அரசுகளே காரணம் என, பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர்களும் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள். மருந்துகள் தேவை மற்றும் வினியோக விஷயத்தில், அவர்கள் மனித உயிர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து அரசியல் பேரணியை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு பிரதமரிடம் ஒருவர் எதை எதிர்பார்க்க முடியும். கொரோனா பரவலைத் தடுப்பதில் ஆர்வம் காட்டுவதை விட, மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் தான் ஆளும் பா.ஜ.கவினர் ஆர்வம் காட்டினார்கள்.

இன்றைக்கும் அவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் கதறுகிறார்கள். உதவி கேட்டு அழுகிறார்கள். ஆக்ஸிஜன், படுக்கைகள், மருந்துகள் கேட்கிறார்கள். நீங்களோ, பெரிய பேரணிகளை நடத்திக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள். எப்படி உங்களால் முடிகிறது?

இந்த விஷயத்தில் நான் அரசியல் செய்வதாக பா.ஜ.க. கூறுகிறது. இந்த விஷயத்தை நாங்கள் அரசியலாக்க விரும்பவில்லை. கொரோனாவின் இரண்டாவது அலையோடு நாடு போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால், பிரதமரோ மக்கள் மீது அக்கறை இல்லாமல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இதைச் சுட்டிக்காட்டினால் அரசியலா?” என்றார்.

The post மன்மோகன் சிங் ஆலோசனையை ஏற்று செயல்படுங்கள் : பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

இந்த நூற்றாண்டின் அதிசய அரசியல்வாதி மன்மோகன் சிங்!
உலக பொருளாதார அறிஞர்களில் முக்கியமானவரும்,இந்தியாவின் முன்னாள் பிரதமரும்,காங்கிரசின் முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் தனது 88வது பிறந்த நாளை மிக அமைதியாக எதிர்கொண்டார்!

இந்த நாட்டில் ஒரு வார்டு கவுன்சிலராக இருப்பவர் கூட தன் பிறந்த நாளில் போஸ்டர்கள், பேனர்கள், விழாக்கள் என ஆர்ப்பாட்டமாக  எதிர்கொள்வதை நாம் பார்க்கிறோம்.

மன்மோகன் சிங் எளிமையானவராக இருப்பதால் ஊடகங்களும் அவரது பிறந்த நாளுக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை! ஆனால், அவர் நாம் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய, பின்பற்ற வேண்டிய ஒரு அற்புதமான முன்னோடி என நான் கருதுகிறேன்!

அவரது பிறந்த நாளன்று பிரதமர் மோடி ஒரு சம்பிரதாய வாழ்த்தை டிவிட்டரில் தெரிவித்தார்!

சிதம்பரமோ, ’’மன்மோகன் சிங்கிற்கு பாரதரத்னா விருது தந்து கௌரவிக்க வேண்டும்’’ என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும் மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட முதல்வர்கள் வாழ்த்தினர். ஆனால், இவர்களைவரைக் காட்டிலும் ராகுல்காந்தியின் வாழ்த்து மனதைத் தொடுவதாக இருந்தது!

’’மன்மோகன்சிங் போன்ற பிரதமர் இல்லாததை நாடு ஆழமாக உணர்கிறது. அவர் நேர்மை, கண்ணியம், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உதாரணமானவர்! ’’ என ராகுல்காந்தி கூறியுள்ளார். இது வெற்றுப் புகழ்ச்சியில்லை!

இந்தியாவின் சக்தி வாய்ந்த நிதி அமைச்சராக ஐந்தாண்டுகள் பணியாற்றிப் பல அதிரடி பொருளாதார மாற்றத்திற்கு வித்திட்டவர், பத்தாண்டுக் காலம் பிரதமராக இருந்தவர் என்ற வகையில் அவர் மீது இது வரை ஒரு சின்ன ஊழல் குற்றச்சாட்டு கூட எழுந்ததில்லை! அப்பழுக்கற்ற நேர்மையாளராகத் தன்னை உறுதியாகக் கட்டமைத்துக் கொண்டவர் மன்மோகன் சிங்! பல ஆயிரம் கோடிகளைச் சுலபமாகச் சம்பாதிக்கக் கூடிய இடத்தில் அவர் இருந்தார்! அவர் கேட்காமலே அவருக்குக் கொட்டித்தரப் பல பெருந்தொழில் அதிபர்கள் காத்திருந்தனர். ஆனால், அந்த எண்ணத்தில் அம்பானிகளோ, அதானிகளோ, டாட்டாக்களோ, பிர்லாக்களோ அவரை நெருங்கக் கூட முடியாத ஒரு நெருப்பு வளையத்தைக் கண்ணுக்குத் தெரியாமல் அவர் கட்டமைத்திருந்தார். அதனால் தான் பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதியான நரசிம்மராவ் அவர்களே மன்மோகன்சிங்கை பூரணமாக நம்பி அவரது புதிய பொருளாதாரத் திட்டங்கள், அணுகுமுறைகள் அத்தனையையும் ஆதரித்தார்.

அதே போல நரசிம்மராவ் அவர்களையடுத்து காங்கிரஸின் பிரதமராகும் வாய்ப்பு  சோனியாகாந்திக்கு இருந்தும், அதை ஏற்காமல் தவிர்த்து, ’’இதற்கு இன்னார் தான் பொருத்தமானவர்’’ என சோனியா புத்திசாலித்தனமாக ஒரு முடிவு எடுத்து மன்மோகன் சிங்கை பிரதமராக்கினார்! இந்தியாவில் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமரானது அதுவே முதல் நிகழ்வாகும்.

அப்போதும் பலர், ’’சும்மா பேருக்குத் தான் சிங் பிரதமர்! ஆனால், அதிகாரமெல்லாம் சோனியா தான்! கூடிய விரைவில் மன்மோகனை தகுதி இறக்கம் செய்துவிட்டு சோனியா பிரதமராகலாம் எனப் பேசினர். ஆனால், கடைசி வரை அது நடக்காதது மட்டுமல்ல, அடுத்த முறையும் முழு ஐந்தாண்டுகள் டாக்டர். சிங் தான்  பிரதமராகச் செயல்பட்டார்!

அப்போது பாஜகவும், அவர்களின் ஆதரவாளர்களும், ’’சிங் அதிகாரமற்றப் பிரதமர். சோனியாவால் ஆட்டுவிக்கப்படுகிறார்’’ என்ற பிரச்சாரத்தைப் பரப்பினர்! ஆனால், அது முற்றிலும் பொய் என்பது மட்டுமல்ல, மன்மோகன்சிங், தன்நிகரற்ற சுதந்திர மனிதராக இயங்கினார் என்பது அன்றைய அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் நன்கு தெரியும்!

கட்சி அரசியலிலிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு, அரசு நிர்வாகத்தில் மட்டுமே முழுமையான கவனத்தைச் செலுத்தியதால் மன்மோகன் மீது அப்படியொரு தோற்றம் உருவானது. அரசியல் தொடர்பான சிக்கல்களோ, கவலைகளோ மன்மோகனுக்கு தராமல் சோனியா காந்தியும் அவரை பாதுகாத்தார். இதன் மூலம் நாட்டுக்கும், மக்களுக்கும் டாக்டர். சிங்கின் தொண்டு முழுமையாகப் பயன்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை கருதியது. எனவே, அரசியல் சூதுவாது இல்லாதவராக அவரும் தன் இயல்பு படியே செயல்படமுடிந்தது.

மன்மோகன்சிங் பற்றி மேலதிகமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அவர் இன்றைய பாகிஸ்தானில் இருக்கின்ற மேற்கு பஞ்சாபில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர். பல மைல்கள் நடந்து சென்று பள்ளிக் கல்வியை கற்றவர்! சிம்னி விளக்கு ஒளியில் படித்து அறிவை வளர்த்தவர்! சிறந்த மாணவனாகத் திகழ்ந்த அவர் உலக புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலையில் பொருளாதாரம் படித்தார்!

பிரபல ஆக்ஸ்போர்ட் பல்கலையில் டாக்டரேட் முடித்தார்! பஞ்சாப் பல்கலையிலும், தில்லி ஜவகர்லால் நேரு பல்கலையிலும் பேராசிரியராக வேலை பார்த்தவர். அதன் பிறகு நிதி அமைச்சகம், வெளி நாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் ஆலோசகராக இருந்தவர்! ரிசர்வ் வங்கியின் இயக்குநர், ஆளுனர் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

மன்மோகன் சிங் அடம்ஸ்மித், ஆசியமணி… உள்ளிட்ட பல முக்கிய உலக விருதுகளைப் பெற்றவர்.

மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் ஆட்சியின் முக்கிய சாதனையாக தகவல் பெறும் உரிமைச் சட்டம், வன உரிமைகள் அங்கீகரிப்பு சட்டம், கல்வி உரிமைச் சட்டம், உணவு உரிமைச் சட்டம்,எட்டு ஐ.ஐ.டிக்கள், ஏழு ஐ.ஐ.எம்கள் முப்பது மத்திய பல்கலைகள் என உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்கியது, ரயில்வே துறையை லாபகரமாக்கியது, தனி நபர் வருமானத்தை 250% அதிகரித்தது உள்ளிட்டவற்றைக் கூறலாம்!

தற்போதைய அரசின் தவறான பொருளாதார போக்குகளை, தவறுகளை உடனுக்குடன் சிங் சுட்டிகாட்டி விமர்சிக்கிறார்!  இந்த 88 வயதிலும் தன்னை சுறுசுறுப்பாக, தெளிவாக வைத்துக் கொண்டிருக்கிறார் என்றால், அவர் பற்றற்றவராக வாழ்வதும் ஒரு காரணமாயிருக்கலாம்!

(பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணன்  அறம் ஆன்லைனில் பதிவு செய்தது.)

The post இந்த நூற்றாண்டின் அதிசய அரசியல்வாதி மன்மோகன் சிங்! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

சாதிக்க ஆரவாரம் தேவையில்லை. அமைதி ஒன்றே ஆயுதம் : 10 ஆண்டு ஜொலித்த மன்மோகன் சிங்
(செப்டம்பர் 26: டாக்டர். மன்மோகன் சிங் பிறந்த நாள்)

நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சுங்குக்கு இன்று பிறந்தநாள். சாதிக்க ஆரவாரம் தேவையில்லை. அமைதி ஒன்றே ஆயுதம் என்பதை நிரூபித்த அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி தொடர்வோம்…

2004 ஆம்  ஆண்டு முதல் 2013 ஆம்  ஆண்டு வரை, 10 ஆண்டுகள் இந்திய பிரதமராக மன்மோகன் சிங் இருந்த காலத்தில், குறிப்பிடத்தக்க வளர்ச்சி இருந்ததாக லண்டன் பொருளாதார பேராசிரியர் மைட்ரீஸ் காதக் குறிப்பிட்டுள்ளார்.

வெளிப்படையான தலைமை இடைவெளி இங்கே முக்கிய பங்காற்றியிருக்கிறது. எதிர்காலத்தில் மன்மோகன் சிங் ஆட்சியின் உண்மையான பதிவுகளைப் பார்க்கும் போது, வரலாற்று ஆசிரியர்களை ஆச்சரியப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

3 பேராசிரியர்கள் மன்மோகன் சிங்கின் 10  ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் குறித்த தரவுகளை ஆராய்ந்து முடிவுக்கு வந்துள்ளனர். ”சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா வலுவான வளர்ச்சி அடைந்தது இந்த 10  ஆண்டுகளில் தான்” என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும்போது, கிராமங்களில் கிடைக்கும் ஊதியமும் அதிக அளவுக்கு அதிகரிக்கும்.  அமைப்பு சார்ந்த துறையில் ஊதிய வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்திருந்தாலும், பங்குச் சந்தையின் சாதனை ஜல்லிக்கட்டு காளையின் வேகத்துக்கு இருந்தது.

விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, மிகவும் ஆரோக்கியமான வளர்ச்சியைப் பதிவு செய்தன. பிரதமர் பதவிக்குப் பலர் போட்டியிட்ட போதும், மன்மோகன் சிங்கை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேர்வு செய்தார்.

நாட்டின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் சுவாரஸ்யமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர் பிரணாப் முகர்ஜி தான் என்று அவர் நினைத்திருந்தார். இதனை சமீபத்தில் மன்மோகன் சிங் வெளியிட்டிருந்தார்.  எனினும், அப்போது பிரதமராக மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டதே சரி என்பதையும், அதனால் ஏற்பட்ட பலன்களையும் நாம் கண்கூடாகப் பார்த்தோம்.

தங்கள் நலனுக்காக கவர்ச்சி அரசியல், வெகுஜன ஆதரவு, வலுவான தலைவர் என்ற பெயர், அரசியலில் புத்திசாலித்தனம் என்று அரசியல்வாதிகள் தங்களை கட்டமைத்துக் கொள்வது நம் நாட்டின் வழக்கமான ஒன்றாகும்.

எனினும், இதை எல்லாம் தவிடுபொடியாக்கி, தன்னாலும் முக்கிய முடிவுகளை எடுக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் மன்மோகன் சிங். முதல் ஐந்தாண்டு ஆட்சியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம், மகாத்மா காந்தி தேசிய  ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் ஆகியவற்றை மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்தது.

பொருளாதார சீர்திருத்தங்களை செய்தபடியே, இத்தகைய திட்டங்களையும் மன்மோகன் சிங் அரசு செயல்படுத்தியது. மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு அரசியல் கவர்ச்சி தேவையில்லை என்பதை நிரூபித்தவர் மன்மோகன் சிங். அமைதியாகவே இருந்து முக்கிய முடிவுகளை எடுத்தார். அந்த முடிவுகள் அடித்தட்டு மக்கள் வரை சென்றடைந்ததை, வரலாறு என்றென்றும் பதிவு செய்து கொண்டே இருக்கும்.

The post சாதிக்க ஆரவாரம் தேவையில்லை. அமைதி ஒன்றே ஆயுதம் : 10 ஆண்டு  ஜொலித்த மன்மோகன் சிங் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

பாரத ரத்னா விருதுக்கு மன்மோகன் சிங்கை விட தகுதியானவர் யார்?: விடை தரும் சாதனைகள்
குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ‘சுதந்திர இந்தியாவின் தலைசிறந்த தலைவர்’ என்று வர்ணித்தார். அரசுப் பொறுப்புகளில் பிரணாப் முகர்ஜி எட்டிய சாதனைகள் சந்தேகத்துக்கு இடமின்றி சிறப்பானவைதான். இந்நிலையில், தன்னிடம் நிதி அமைச்சராகப் பணியாற்றிய பிரணாப் முகர்ஜியைவிட, பாரத ரத்னா விருதுக்கு மன்மோகன் சிங் தகுதியானவரா? என்று இங்கே ஒரு புதிரான கேள்வி எழுப்பப்படுகிறது.

பிரணாப் முகர்ஜி இரு முறை மத்திய நிதி அமைச்சராக இருந்தவர். அவர் தாக்கல் செய்த பட்ஜெட்களால் புதிதாக மாற்றம் ஏதும் நிகழ்ந்துவிடவில்லை. குறிப்பாக, 2011 ஆம் ஆண்டு அவர் கொண்டு வந்த பின்னோக்கிய வரிச் சட்டம் இந்தியாவின் நிதிக் கொள்கையில் பெரும் நம்பிக்கையை இழக்கக் காரணமாக இருந்தது. 1970-களில் இந்திரா சகாப்தத்தின் சோசலிச உணர்வாளராக இருந்தவர் பிரணாப் முகர்ஜி.

1991 ஆம் ஆண்டு நிதி அமைச்சரான மன்மோகன் சிங் முற்றிலும் மாறுபடுகிறார். நிதி அமைச்சரானதும் பெரும் மாற்றத்தை உருவாக்கினார். புத்திசாலியான அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்ம ராவின் ஆதரவுடன், பல ஆண்டுகளாக கட்டுப்பாடுகளில் சிக்கியிருந்த பொருளாதாரத்தை தைரியமாக விடுவித்தார். 1991 ஆம் ஆண்டு அவர் தாக்கல் செய்த பட்ஜெட், சுதந்திர இந்தியாவுக்கு ஒரு வரையறுக்கப்பட்ட தருணமாக மாறியது. மன்மோகன் சிங் தாராளவாத சீர்திருத்தவாதியாக இருந்தார்.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில், 20 கோடியே 71 லட்சம் பேர் வறுமைக் கோட்டிலிருந்து மேலே வந்ததாக ஐ.நா. தெரிவித்தது. தற்போது ஏழைகளுக்கு ஆதரவான பல திட்டங்கள் மோடி அரசால் செயல்படுத்தப்படுவதற்கும், ஆதார் அட்டை, மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் நிதி சேர்க்கை ஆகிவற்றுக்கும் மன்மோகன் சிங் ஆட்சியில் தான் அடித்தளம் போடப்பட்டது. மன்மோகன் சிங் மீது நேரடி குற்றச்சாட்டுகள் எழுந்ததில்லை. அரசியலையும் குடும்பத்தையும் தொலைவிலேயே வைத்து, அரசியல்வாதிகளுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார்.

பொதுவாக, பாரத ரத்னா விருது அரசியல்வாதிகளுக்கு வழங்கக் கூடாது என்றும், பெரும் தொழிலதிபர் அசிம் பிரேம்ஜி போன்ற புகழ்பெற்ற குடிமக்களை மதிக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து உண்டு. எனினும், ஓர் அரசியல்வாதியை நாட்டின் உயரிய பாரத ரத்னா விருதுக்கு அரசியல் கசப்புணர்வுக்கு அப்பாற்பட்டு மோடி அரசு தேர்வு செய்ய விரும்பினால், பிரணாப் முகர்ஜிக்குப் பிறகு மன்மோகன் சிங்கை விட சிறந்த நபர் யாரும் இருக்க முடியாது.

The post பாரத ரத்னா விருதுக்கு மன்மோகன் சிங்கை விட தகுதியானவர் யார்?: விடை தரும் சாதனைகள் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.