Dinesh Gundu Rao Archives - தேசிய முரசு - Desiya Murasu

கே.எஸ்.அழகிரி தலைமையில் தேர்தலை சந்திப்போம்! மாநில, மாவட்ட நிர்வாகிகளை விரைவில் மாற்றம் செய்வோம் – தினேஷ் குண்டுராவ் பேட்டி
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகை, முதல்வர் பழனிசாமியின் அதிவேக நலத்திட்ட அறிவிப்புகள், திமுகவின் தேர்தல் வியூகம்ஆகியவற்றால் தமிழக சட்டப்பேரவைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிஉள்ளது. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ், பெங்களூருவில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:

2016 தமிழக‌ சட்டப்பேரவைத் தேர்த லில் காங்கிரஸ் 41 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களில் மட்டுமே வென்றது. அதனால் காங்கிரஸுக்கு இம்முறை குறைவான இடங்களே ஒதுக்க வேண்டும் என்ற பேச்சு திமுகவில் அடிபடுகிறது. அதிலும் பிஹார் தேர்தல் முடிவுக்கு பின் இந்த வாதம் அதிகரித்துள்ளதே?

பிஹார் தேர்தலையும், தமிழக தேர்தலையும் ஒன்றாகப் பார்க்க முடியாது. 2019 மக்களவைத் தேர்தலில் பிஹாரில்காங்கிரஸ் ஓர் இடத்தைக் கூட பிடிக்கவில்லை. ஆனால் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 19 இடங்களில் வென்றுள்ளது. 45 தொகுதிகளில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வாக்குகளை பெற்றுள்ளது. பாஜகவின் சதியால் எங்கள் கூட்டணிக்கு வெற்றி சாத்தியப்படாமல் போய்விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 8 இடங்களை வென்றுள்ளோம். 90 இடங்களில் திமுகவின் வெற்றிக்கு உதவியுள்ளோம். அதில் 25 இடங்களில் காங்கிரஸின் உதவியால் திமுக வென்றதை மறந்துவிடக் கூடாது. 2019 மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியையும் சேர்த்து 10 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களை கைப்பற்றினோம். அப்படிப் பார்த்தால் காங்கிரஸுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது என்றுதானே அர்த்தம்?

அப்படியென்றால் வரும் தேர்தலில் காங்கிரஸ் எத்தனை இடங்களை எதிர்பார்க்கிறது?

இப்போதைக்கு அதுபற்றி நான் வெளிப்படையாக‌ பேச விரும்பவில்லை. இதுபற்றி எங்கள் கட்சியின் மூத்த‌ தலைவர்களுடன் முதல்கட்ட ஆலோசனை நடத்தியுள்ளேன். எத்தனை தொகுதிகளில் காங்கிரஸுக்கு பலம் உள்ளது, எந்தெந்த தொகுதிகளை பெறுவது, எத்தகைய வியூகங்களை வகுப்பது, யார் யாரை வேட்பாளர்களாக நிறுத்துவது என்பது பற்றியெல்லாம் ஆராய புதிய குழுவை உருவாக்கி உள்ளோம். அண்மையில் எங்கள் கட்சியில் இணைந்த முன்னாள்ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில்உள்ளிட்டோரை கொண்டு உயர்நிலைநிபுணர் குழு ஒன்றையும் அமைத்துள் ளோம்.

இதுதவிர‌ தமிழகம் முழுக்க மூன்று வெவ்வேறு குழுக்களைக் கொண்டு முறையான‌‌ சர்வே எடுத்து வருகிறோம். அதில் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் எண்ணிக்கையை முடிவு செய்வோம்.தற்போதைய அரசின் மீதான அதிருப்தியை மட்டும் வைத்து தேர்தலில் வெல்ல முடியாது. பிஹாரைப் போல தேர்தல் களம் கடும் போட்டியாக மாறும் பட்சத்தில் 100 இடங்களில் காங்கிரஸால் திமுகவின் கூட்டணிக்கு வெற்றியை தேடித்தர முடியும். எனவே திமுக கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே சரியான முறையில் தொகுதிகளை பங்கிட்டு, நன்றாக பிரச்சாரம் மேற்கொண்டால்தான் பெரும்பான்மையான இடங்களை வெல்ல முடியும்.

திமுகவிடம் தொகுதிகளின் எண்ணிக்கைக்காக பேரம் பேச மாட்டோம் என கூறியுள்ளீர்களே?

தொகுதிகளின் எண்ணிக்கைக்காக பிடிவாதமாக, நியாயமற்ற முறையில் நாங்கள் பேரம் பேச மாட்டோம் எனக்கூறினேன். அதேவேளையில் வெளிப்படையான, நேர்மையான பேச்சுவார்த்தையை திமுகவிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். காங்கிரஸுக்கு இருக்கும் யதார்த்த‌ பலத்தையும், அறிவியல்பூர்வமான புள்ளி விவரத்தையும் கொண்டு தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்துவோம். கடந்த தேர்தல்களை காட்டிலும்இந்த தேர்தலில் காங்கிரஸ் தீவிரமாகபணியாற்றும் என்பதை உறுதியாக சொல்ல விரும்புகிறேன். வாக்குச்சாவடியில் தொடங்கி மாநில கமிட்டி வரை நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, அவர்களை கண்காணித்து இயக்க தனிக்குழு ஒன் றையும் உருவாக்கியுள்ளோம்.

கோஷ்டி பூசலால் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மாற்றப்பட‌‌ இருப்பதாக கூறப்படுகிறதே?

இந்த தேர்தலுக்கு முன்பாக கே.எஸ்.அழகிரியை மாற்றும் எண்ணம் இல்லை.மாநில‌, மாவட்ட, தொகுதி கமிட்டியில் நிர்வாகிகளை மாற்ற உள்ளோம். தேர்தலுக்காக கட்சியின் அமைப்பில் சில முக்கிய மாற்றங்களை கொண்டுவர உள்ளோம். காங்கிரஸ் ஜனநாயகப்பூர்வமான கட்சி என்பதால் அனைவரும் தங்கள் கருத்தை வெளிப்படையாக தெரிவிக்கிறார்கள். அதை கோஷ்டிப் பூசலாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. பிற கட்சிகளில் எந்த சுதந்திரமும் இல்லாததால் நிர்வாகிகளின் மோதல் வெளியே தெரிவதில்லை.

தடையை மீறி பாஜக வேல் யாத்திரை நடத்துவதை போல நீங்கள், ஏர் கலப்பை யாத்திரை நடத்த இருக்கிறீர்களே?

பாஜகவின் வேல் யாத்திரை, மக்களை மதரீதியாக பிளவுபடுத்துவதற்காக நடத்தப்படுகிறது. அந்த யாத்திரையில் மக்கள்பிரச்சினை எதுவும் பேசப்படவில்லை.ஆனால் எங்களின் ஏர் கலப்பை யாத்திரைமக்களின் பிரச்சினைகளுக்காக நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் செல்லும்இந்த யாத்திரையில் மத்திய அரசின் வேளாண் மசோதா மற்றும் விவசாயிகளின் வாழ்வாதார சிக்கல் பேசப்பட உள்ளது. இது தவிர ஜனவரி, பிப்ரவரியிலும் இரு யாத்திரைகளை நடத்த உள்ளோம்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எப்போது வரப் போகிறார்?

அமித் ஷா வருவதால் தமிழகத்தில் எதுவும் மாறிவிடாது. ராகுல் காந்தி டெல்லியில் இருந்தாலும் தமிழக அரசியலை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார். அவரது இதயத்தில் தமிழகத்துக்கென்று மிக உயர்ந்த இடம் உள்ளது. தமிழகத்தில் நீண்ட காலமாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை என்றாலும், அவர் தமிழகத்தை மிகவும் நேசிக்கிறார். ஒவ்வொரு முறை என்னிடம் பேசும்போதும் தமிழகத்தைப் பற்றி உயர்வாகவே பேசுகிறார். தேர்தல் நெருங்கும் போது ராகுல் அடிக்கடி தமிழகத்துக்கு வந்து பிரச்சாரம் மேற்கொள்வார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போன்றோர் மூன்றாம் அணி குறித்து வெளிப்படையாகவே பேசத் தொடங்கியுள்ளனர். ஒருவேளை காங்கிரஸுக்கு எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்கவில்லை என்றால் மூன்றாவது அணிக்கு மாறுவீர்களா?

திமுக – காங்கிரஸ் கூட்டணி ஏற்கெனவே பல தேர்தல்களை சந்தித்து, மக்களின் ஆதரவை பெற்றதன் மூலம் வெற்றிகரமான கூட்டணியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் இடையில் நல்ல புரிதல் உள்ளது. இந்தக் கூட்ட‌ணி மிக வலுவாக இருப்பதால், மூன்றாவது அணி பற்றி பேச விரும்பவில்லை.

The post கே.எஸ்.அழகிரி தலைமையில் தேர்தலை சந்திப்போம்! மாநில, மாவட்ட நிர்வாகிகளை விரைவில் மாற்றம் செய்வோம் – தினேஷ் குண்டுராவ் பேட்டி appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

எதார்த்த அணுகுமுறையின்படி தொகுதி பங்கீடு செய்து கொள்வோம் : தினேஷ் குண்டு ராவ் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதைக் கண்டறிந்து வருவதாகவும், பேரம் பேச மாட்டோம் எனவும், அகில இந்திய காங்கிரஸின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்துக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளைக் கட்சி தொடங்கியுள்ளது. வலுவான மற்றும் நல்ல வேட்பாளர்களை நிறுத்துவதற்கான ஆலோசனையும் தொடங்கியிருக்கிறது.

நாங்கள் அதை முக்கியமான, நடைமுறை கோணத்தில் பார்க்கிறோம். தொகுதிவாரியாக உள்ள எதார்த்தங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மற்ற விசயங்களைவிடக் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியம்.

பீகார் தேர்தல் முடிவுகள் எங்களைப் பாதிக்காது. தமிழகத்தின் அரசியல் களம் வேறு. திமுகவுடனான எங்கள் கூட்டணி ஏற்கனவே பரிசோதிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில்  கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதைப் போல் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலிலும் இணைந்து போட்டியிடுவோம். பீகாரில் மக்களவைத் தேர்தலில் எங்கள் கூட்டணி தோல்வியடைந்தது. ஆனால், தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றது. களத்தில் சிறப்பாகப் பணியாற்றியதோடு, மக்களின் ஏகோபித்த ஆதரவையும் எங்கள் கூட்டணி பெற்றது. அதேபோன்ற மக்கள் ஆதரவு இனியும் தொடரும்.

வாக்கு வித்தியாசம் குறையும் போது திமுக மற்றும் தோழமை கட்சிகளுக்கு வலுவூட்டக் காங்கிரஸ் கட்சியால் முடியும். கடும் போட்டி நிலவும் 100 தொகுதிகளில் திமுகவுக்கு நாங்கள் உதவிகரமாக இருப்போம்.

எதார்த்த அணுகுமுறையின்படி தொகுதிப் பங்கீடு நடக்கும். நேர்மையான மற்றும் வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தி எங்கள் தோழமைக் கட்சிகளை சமாதானப்படுத்த முயல்வோம். தேவையற்ற பேரங்கள்  இருக்காது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, கடந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தமிழக முதலமைச்சராக அமர வைக்கக் காங்கிரஸ் பணியாற்றும்.

தமிழகத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு தினேஷ் குண்டு ராவ் தெரிவித்தார்.

The post எதார்த்த அணுகுமுறையின்படி தொகுதி பங்கீடு செய்து கொள்வோம் : தினேஷ் குண்டு ராவ் அறிவிப்பு appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைந்திட காங்கிரஸ் துணைநிற்கும்! தினேஷ் குண்டுராவ் அறிக்கை!
கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தினேஷ் குண்டுராவ் குறிப்பிட்ட சில வார்த்தைகளை தவறாக புரிந்து திரித்து வெளியிடப்பட்ட செய்தியின் காரணமாக அதற்கு விளக்கம் தர வேண்டிய நிலை ஏற்பட்டது. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி குறித்து குழப்பமான செய்திகளை வெளியிட்டு, விரிசலை ஏற்படுத்த வேண்டுமென்று சில ஊடகங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. அத்தகைய குழப்பவாதிகளின் முயற்சிகளை முறியடிக்கிற வகையில் தினேஷ் குண்டுராவ் வெளியிட்ட அறிக்கை அமைந்து விட்டது. இதன்மூலம் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 2021 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய அரசியல் பாதையை தினேஷ் குண்டுராவ் அவர்களது அறிக்கை கோடிட்டு காட்டி விட்டது. இதன்மூலம் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி எஃகு கோட்டையாக இருப்பது உணர்த்தப்பட்டது.

அகில இந்திய காங்கிரஸ் தமிழ்நாடு பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் விடுத்த அறிக்கை:

2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று ஆட்சியமைக்க தமிழக காங்கிரஸ் கட்சி பாடுபடும்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட எங்கள் தலைவர் திரு. ராகுல்காந்தி, தமிழ்நாடு முதலமைச்சராக திரு. மு.க.ஸ்டாலின் வரவேண்டும் என்ற தமது விருப்பத்தை தெரிவித்திருந்தார்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பே, திரு. ராகுல் காந்தியை அடுத்த பிரதமர் என முதன்முதலாக திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்ததை, நாங்கள் நன்றியுணர்வுடன் நினைவில் கொண்டுள்ளோம்.

இத்தகைய அறிவிப்பால் கவரப்பட்ட தமிழக மக்கள், மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளில், 39 தொகுதிகளில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியை அமோக வெற்றி பெறச் செய்தனர்.

அதேபோன்று, திரு.மு.க.ஸ்டாலின் அடுத்த   முதலமைச்சராக வேண்டும் என்ற திரு. ராகுல்காந்தியின் கனவை நிஜமாக்கும் வகையில், வரும் தேர்தலை தி.மு.க.வுடன் காங்கிரஸ் இணைந்து  சந்திக்கும்.

2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நிலை இதுதான் என்பதை நான் வலியுறுத்திக் கூறுகின்றேன். வியாழக்கிழமை காலை சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், நான் தெரிவித்த கருத்துகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால், இந்த விளக்கத்தை அளிக்கின்றேன். தயவு செய்து இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டுகின்றேன்.

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர், திமுக கூட்டணியை வெற்றியடையச் செய்து மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவோம் என்று கூறினார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய மேலிட பொறுப்பாளராக தினேஷ் குண்டு ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை வந்த அவருக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, வேளாண் மசோதாக்களுக்கு எதிராக போராட்டத்தை நடத்துவது குறித்தும், சட்டமன்ற தேர்தல் மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், பிரிவு தலைவர்கள், மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் தினேஷ் குண்டு ராவ் சந்தித்து பேசினார். அப்போது, மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 28ஆம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த போராட்டம் குறித்தும், வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன், தினேஷ் குண்டு ராவ் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது. அப்போது திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, ஊடக பிரிவு தலைவர் ஆ. கோபண்ணா ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த சந்திப்புக்கு பின்பு தினேஷ் குண்டு ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. திமுகவும், காங்கிரசும் இணைந்து சிறப்பாக செயல்படுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற காங்கிரஸ் கடுமையாக பாடுபடும். கட்சியை பலப்படுத்துவதுடன், கூட்டணியையும் பலப்படுத்துவோம்.  திமுக கூட்டணியை வெற்றியடையச் செய்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவோம். வரும் 28ம்தேதி திமுக கூட்டணி நடத்த உள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் குறித்து மு.க.ஸ்டாலினுடன் விவாதித்தோம். மற்ற விஷயங்கள் குறித்து தேர்தல் நெருங்கும் நிலையில் பேசுவோம்.

The post தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைந்திட காங்கிரஸ் துணைநிற்கும்! தினேஷ் குண்டுராவ் அறிக்கை! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.