Covid-19 Archives - தேசிய முரசு - Desiya Murasu

கொரோனாவினால் 2 லட்சம் பேர் பலியானதிற்கு பொறுப்பேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் உடனடியாக பதவி விலக வேண்டும்! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை முன்கூட்டியே கணிக்காமல் தவறான அணுகுமுறையை மேற்கொண்டதால் ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் பலியானதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் உடனடியாக பதவி விலக இதோ காரணங்கள் :

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 1 ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசின் கோவின் இணைய தளத்தில் முன்பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டது. முதல் நாளிலேயே 1.33 கோடி பேர் பதிவு செய்துள்ளனர்.

பதிவு செய்துள்ளவர்களுக்குத் தடுப்பூசியை இலவசமாக மத்திய அரசு போடுமா ? மாநில அரசு போடுமா ? 45 வயதிற்கு மேற்பட்டோருக்குத் தான் மத்திய அரசு இலவசமாகத் தடுப்பூசி போடும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு ஏன் முன்பதிவு செய்கிறது ?

முன்பதிவை மத்திய அரசு செய்தால் மாநில அரசு எந்த வகையில் தடுப்பூசி போட முடியும் ? கொரோனாவை எதிர்கொள்வதில் மத்திய அரசு குழப்பத்திற்கு மேல் குழப்பம் செய்து கொண்டிருக்கிறது. இதற்கு எப்போது விடிவு ஏற்படப் போகிறது ?

கொரோனா தொற்றின் ஒருநாள் எண்ணிக்கை 3.8 லட்சம். ஒருநாள் இறப்பு மூன்றாவது நாளாகத் தொடர்ந்து 3 ஆயிரத்தைக் கடந்திருக்கிறது. உலகத்தில் கொரோனாவினால் இறப்பவர்களில் நான்கில் ஒருவர் இந்தியர். உலக நாடுகளில் இந்தியா கொரோனா இறப்பில் முதன்மை இடத்தைப் பெற்றிருக்கிறது.

கொரோனாவிலிருந்து மக்கள் உயிரைக் காக்க பேராயுதமாக விளங்குவது தடுப்பூசி மட்டுமே. இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்ட 93 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போட 186 கோடி டோஸ்கள் தேவை.

தற்போது இரண்டு தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்வதோ மாதத்திற்கு 1.20 கோடி டோஸ்கள் மட்டுமே. 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் 35 கோடி மக்களுக்கு இன்னும் தடுப்பூசி போட வேண்டும். இதற்கு 70 கோடி தடுப்பூசிகள் தேவை.

தற்போது இந்தியாவில் 15 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 1 டோஸ் போட்டவர்கள் 12.12 கோடி. இரண்டு டோஸ் போட்டவர்கள் 2.36 கோடி மட்டுமே.

18 வயதிற்கு மேற்பட்ட 93 கோடி மக்களுக்கு இரண்டு டோஸ் போட தேவைப்படுகிற 186 கோடி தடுப்பூசிகளை மத்திய பா.ஜ.க. அரசு எப்போது கொள்முதல் செய்யப்போகிறது ? எப்போது போடப் போகிறது ? மக்களின் உயிரைக் காக்க ஒரே பாதுகாப்பு கவசமாக இருக்கிற தடுப்பூசி போடுவதற்கு இரண்டு தனியார் நிறுவனங்கள் அல்லாமல் வேறு திறமைமிக்க தனியார் நிறுவனங்களுக்கு ஏன் அனுமதி அளிக்கவில்லை ?

மக்கள் உயிருக்காகப் போராடுகிற நேரத்தில் இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் தடுப்பூசி தயாரிக்கிற ஏகபோக உரிமையை அனுமதித்தது ஏன் ? இந்திய மக்களின் மீது பிரதமர் மோடிக்கு அக்கறை இருந்தால் தடுப்பூசி உற்பத்தியைக் கடந்தகால அரசுகள் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கி அம்மை, போலியோ, காலரா ஆகியவற்றை ஒழித்ததைப் போல இப்போதும் தடுப்பூசி உற்பத்தியை வழங்கி கொரோனாவை ஒழிப்பதில் ஏன் அக்கறை செலுத்தவில்லை ?

இந்திய மக்கள் அனைத்து சுகங்களையும் துறந்து, வாழ்வாதாரத்தை இழந்து, எதிர்காலத்தைப் பற்றி கற்பனை கூட செய்ய முடியாமல், என்றைக்கு நமக்கு கொரோனா தொற்று வருமோ, எப்போது நமது உயிர் பறிக்கப்படுமோ? என்ற அச்சத்திலும், பீதியிலும் வாழ்ந்து வருகின்றனர்.

136 கோடி மக்களையும் ஒருசேர மரணப் பயத்தில் ஆழ்த்தியதற்குப் பிரதமர் மோடி பொறுப்பேற்றுக் கொண்டு குறைந்தபட்சம் மத்திய பா.ஜ.க. அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் உடனடியாக பதவி விலக இதைவிட வேறு என்ன காரணங்கள் வேண்டும் ?

The post கொரோனாவினால் 2 லட்சம் பேர் பலியானதிற்கு பொறுப்பேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் உடனடியாக பதவி விலக வேண்டும்! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் டெல்லியில் ஒரே நாளில் 45 பேர் பலி! பிரதமர் மோடி அவர்களே, மக்கள் உயிரை காப்பாற்ற தவறியது ஏன்? தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி
முக்கிய அம்சங்கள்:

ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக தலைநகர் டெல்லியில் கங்காராம் மருத்துவமனையில் 25 பேரும், ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர். பலமுறை மத்திய சுகாதாரத்துறையை வலியுறுத்தியும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் அழுத்தத்துக்குப் பிறகு, அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருப்பது காலம் கடந்த நடவடிக்கை.

காணொலிக் கூட்டத்தை நேரலையாக ஒளிபரப்பிய தில்லி முதலமைச்சரைக் கண்டித்ததில் காட்டிய வேகத்தை, ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாட்டைப் போக்குவதில் பிரதமர் மோடி காட்டவில்லை.

கொரோனா பிடியில் சிக்கியிருக்கும் மக்களைக் காப்பாற்ற, மத்திய, மாநில அரசுகள் பொறுப்புணர்வோடு இணைந்து செயல்பட வேண்டும்.

கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தடுப்பூசி போடுகிற முதன்மை பொறுப்பு மத்திய அரசுக்குத் தான் இருக்கிறது என்பதைத் தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பலமுறை வலியுறுத்தி வந்தன. இந்த அழுத்தத்தின் காரணமாக அனைத்து மக்களுக்கும் இலவசமாக மாநில அரசுகளின் மூலம் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது. இது காலம் தாழ்ந்த அறிவிப்பாகவே கருத வேண்டியிருக்கிறது.

அதேபோல, தலைநகர் டெல்லியில் கங்காராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மருத்துவமனையில் 510 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பலமுறை மத்திய சுகாதாரத்துறையை வலியுறுத்தியும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இந்த நிலையில் தான் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். அதேபோல, நேற்று இரவு தலைநகர் டெல்லியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு 20 பேர் பலியாகி இருக்கிற அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது.

தலைநகர் டெல்லியில் மத்திய பா.ஜ.க. ஆட்சியாளர்களின் நேரடி பார்வையில் இருக்கும்போதே இத்தகைய கொடூரமான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. தில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அவர்கள் பிரதமர் மோடியிடம் காணொலி கூட்டத்தில் ஆக்சிஜன் கேட்டுக் கெஞ்சிப் பேசியதைப் பார்க்கும் போது மிகுந்த வேதனையாக இருக்கிறது. அந்த கோரிக்கையைப் பரிவுடன் பரிசீலிக்காமல் காணொலி கூட்டத்தை ஒளிபரப்பியது குறித்து அவர்மீது கடும் கண்டனத்தைப் பிரதமர் மோடி வெளிப்படுத்துவதில் தான் கவனம் செலுத்தினார். ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறைக்குப் பரிகாரம் காண எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் கடந்த 24 மணி நேரத்தில் தலைநகர் தில்லியில் 45 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதற்கு மத்திய பா.ஜ.க. அரசுதான் பொறுப்பாகும்.

கொரோனா தொற்று ஏற்பட்டு 15 மாத காலத்தில் பா.ஜ.க. அரசின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் நடைமுறை சாத்தியம் இல்லாத வகையிலேயே எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவை எதிர்கொள்ளச் சுகாதார கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்த சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படவில்லை. இந்திய மக்கள் அனைவரும் அச்சத்திலும், பீதியிலும் இருந்து விடுபட உரிய மருத்துவச் சிகிச்சைகளை வழங்க மத்திய பா.ஜ.க. அரசு தோல்வியடைந்து விட்டது.

தடுப்பூசி தட்டுப்பாடு, ஒரே தடுப்பூசிக்கு மூன்று விலை, விற்பனையைத் தனியார் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடமே ஒப்படைத்தது, தடுப்பூசியை வாங்குவதற்குச் சந்தையில் ஆரோக்கியமற்ற போட்டி, ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கும்போது ஏற்றுமதி இவை எல்லாமே பா.ஜ.க. அரசு எடுத்த தவறான நடவடிக்கைகளின் விளைவாகும்.

எனவே, கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கியிருக்கும் மக்களைப் பாதுகாப்பதை தலையாய நோக்கமாகக் கொண்டு, பொறுப்புணர்வோடு இப்பிரச்சினையைக் கையாள மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

The post ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் டெல்லியில் ஒரே நாளில் 45 பேர் பலி! பிரதமர் மோடி அவர்களே, மக்கள் உயிரை காப்பாற்ற தவறியது ஏன்? தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

பிணங்களின் மீது ஆட்சி நடத்தும் மோடி அரசு: ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை தாமத்தால் தொடரும் உயிரிழப்பு
‘ஏப்ரல் 16…இரவு 8 மணி…’

லக்னோவைச் சேர்ந்த ஸ்ரீவத்ஸவா என்பவரின் ஆக்ஸிஜன் அளவு குறைந்து போனது. தனக்கு ஆக்ஸிஜன் வேண்டும் என்று ட்விட்டரில் கெஞ்சுகிறார். லக்னோவில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனைக்கும் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறார். ஒரு மருத்துவமனை கூட அவரது மரண ஓலத்துக்கு செவிசாய்க்கவில்லை.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 94 க்கு கீழே சென்றாலே, அது மோசமான நிலை என்று மருத்துவர்கள் கூறும் நிலையில், தனக்கு ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 53 ஆக இருந்ததாகக் கூறுகிறார்.

65 வயதான பத்திரிக்கையாளரான ஸ்ரீவத்ஸவா, ட்விட்டரில் பதிவிட்ட இந்த தகவல் வைரலானது. உத்தரப் பிரதேச முதலமைச்சரின் ஊடக ஆலோசகர் மறுநாள் பிற்பகல் ஸ்ரீவத்ஸவாவை தொடர்பு கொண்டு, அது குறித்த விவரத்தைக் கேட்டுள்ளார். அப்போது, ஸ்ரீவத்ஸாவின் ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவு 31 ஆகக் குறைந்திருந்தது.

அன்றைய தினம் பிற்பகல் 4.20 மணி அளவில், ‘தன் தந்தை இறந்துவிட்டதாக..’ ஸ்ரீவத்ஸவாவின் மகன் ஹர்ஷித் ஸ்ரீவத்ஸவா ட்வீட் செய்திருந்தார். ”ஆம்புலன்ஸ் உட்பட தாங்கள் கேட்ட எந்த உதவியும் கிடைக்கவில்லை” என்று வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார். ஆக்ஸிஜன் சிலிண்டருக்காக பல இடங்களில் தொடர்பு கொண்டும், யாரும் எங்களுக்கு உதவ முன்வரவில்லை என்ற தகவலையும் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்ரீவத்ஸவாவின் வீட்டிலிருந்து 7 கி.மீ தொலைவில் தான் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அரசு பொது மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை அமைப்பதற்காகக் காத்திருக்கிறது. இந்த மருத்துவமனை உட்பட நாட்டில் மொத்தம் 150 அரசு மருத்துவமனைகளில் மருத்துவப் பயன்பாட்டுக்கான குழாய் வழியே செலுத்தும் ஆக்ஸிஜன் தயாரிக்கும் ஆலைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசு டெண்டர் விட்டது. கடந்த 8 மாதங்களுக்கு முன்பே ஆக்ஸிஜன் ஆலைகளில் உற்பத்தியைத் தொடங்கியிருக்க முடியும்.

Mass cremation of victims who died due to coronavirus disease (COVID-19), is seen at a crematorium ground in New Delhi, India, April 22, 2021. Picture taken with a drone.

ஆனால், டெண்டர் விட்டு 6 மாதங்களாகியும் இதுவரை ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் தொடங்கப்படவில்லை. இந்நேரம் ஆக்ஸிஜன் ஆலை தொடங்கப்பட்டிருந்தால், ஸ்ரீவத்ஸவா போன்றோரை கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். லக்னோவில் உள்ள 30 லட்சம் மக்கள் தொகையில், இப்போதும் 44 ஆயிரத்து 485 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

”என் தந்தையைக் காப்பாற்றியிருக்க முடியும்..”என்று ஹர்ஷித் ஸ்ரீவத்ஸவா தற்போது கதறிக் கொண்டிருக்கிறார். தன் தந்தை இறந்தபிறகும், அவரது கொரோனா பாதிப்பு குறித்த அறிக்கையை மருத்துவமனை இன்னும் வழங்கவில்லை. இந்த கொடுமையான சம்பவத்துக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுகளே பொறுப்பு. மக்கள் மீது துளியும் அக்கறை இல்லாததையே அவர்களது அலட்சியப் போக்கு படம்பிடித்துக் காட்டுகிறது.

பிரதமர் மோடி பிறந்த குஜராத்தில் உள்ள நவசாரி மாவட்ட மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் குழாய் வழியே செலுத்தும் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை தொடங்கப்படாததால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை சிகிச்சைக்கு அனுமதிக்க மறுக்கிறார்கள் என்ற செய்தியும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் ஆக்ஸிஜன் வேண்டி இந்த மருத்துவமனையில் வரிசையில் நிற்கிறார்கள். ஆனால், மத்திய அரசின் அலட்சியப்போக்கால் அங்கும் பலரது உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இது குறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி அவினாஷ் துபே கூறும்போது, ” 175 படுக்கைகள் கொண்ட மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டர் கூட இருப்பில் இல்லை. இந்த மருத்துவமனையில் 175 படுக்கைகள் உள்ளன. கடந்த வாரம் மட்டும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாததால், 5 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இந்த மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

6 மாதங்களுக்கு முன்பே ஆக்ஸிஜன் உற்பத்தியைத் தொடங்கியிருந்தால், சூரத் நகரில் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் நவசாரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்திருக்க முடியும். தற்போது அருகில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து என்னை அழைக்கிறார்கள். எந்த நோயாளியையும் இங்கு அனுப்பாதீர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

8 மாதங்களுக்கு முன்பு விடப்பட்ட ரூ. 200 கோடி டெண்டர் :

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி கொரோனா வைரசை இயற்கைப் பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. அதன்பிறகு 10 நாட்கள் கழித்து, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பொது முடக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நாட்டின் சுகாதார திறனை மேம்படுத்த கால அவகாசம் தேவை என்பதே மத்திய அரசின் வாதமாக இருக்கிறது. கொரோனா பாதிப்புக்கு முன்பே, இதனை எதிர்த்துப் போராட ஆக்ஸிஜன் சிலிண்டர் அவசியம் என்பது தெளிவாகத் தெரியும். புதிய ஆக்ஸிஜன் ஆலைகளை தொடங்க டெண்டர் வெளியிட்டு 8 மாதங்களாகியும், நரேந்திர மோடி அரசு இதுவரை சிறு துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை.

கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி இதற்கான டெண்டரை, மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் வரும் தன்னாட்சி அமைப்பான மத்திய மருத்துவ சேவைகள் சொஸைட்டி வெளியிட்டது. நாட்டில் உள்ள 150 மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் ஆலைகளை தொடங்கும் வகையில் இந்த டெண்டர் வெளியிடப்பட்டது. இந்த ஆலைகளிலிருந்த குழாய் மூலம் நேரடியாக மருத்துவமனையின் படுக்கையில் இருக்கும் நோயாளிக்கு நேரடியாக ஆக்ஸிஜனை செலுத்த முடியும்.

இந்த ஆலைகளை நிறுவும் வகையில் டெண்டர் நடவடிக்கைகளை செயல்படுத்த போதிய நிதி இல்லை என்று மத்திய அரசு கூறுகிறது. திட்டமிடப்பட்டுள்ள மொத்தம் 162 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை தொடங்க (12 ஆலைகள் பின்னர் தொடங்க திட்டம்) ரூ.201.58 கோடி தான் செலவாகும். இதற்கான நிதி பிஎம் கேர் நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. 2020 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி பிஎம் கேர்ஸ் நிதி தொடங்கப்பட்ட அடுத்த 4 நாட்களில் 3 ஆயிரம் கோடி ரூபாய் நிதி குவிந்ததை இங்கு நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

இப்போது மோசமான இரண்டாவது கொரோனா அலை நாடு முழுவதும் உருவாகியிருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் மோடி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து மேலும் 100 ஆக்ஸிஜன் ஆலைகள் நிறுவப்படும். இதுதவிர, ஏற்கெனவே கடந்த 2020 ஆம் ஆண்டில் டெண்டர் வழங்கப்பட்ட 162 ஆக்ஸிஜன் ஆலைகளை தொடங்குவதற்கான நடவடிக்கை உன்னிப்பாகக் கவனிக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

162 ஆக்ஸிஜன் சிலிண்டர் ஆலைகளின் நிலை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில், ” திட்டமிடப்பட்டுள்ள 162 ஆக்ஸிஜன் ஆலைகளில், 33 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் தொடங்கப்பட்டுள்ளன. 2021 ஏப்ரல் இறுதிக்கும் 59 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் தொடங்கப்படும். 2021 ஆம் ஆண்டு மே மாத இறுதியில் மேலும் 80 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் தொடங்கப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளின் எண்ணிக்கை தற்போது 172 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தேதிக்கு இந்தியா முழுவதும் 20 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல மாநிலங்களில் தொழிற்சாலை தேவைக்கான ஆக்ஸிஜனை, மருத்துவ தேவைக்குப் பயன்படுத்தியுள்ளனர். அதன்பிறகும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டு அதிக அளவில் உள்ளது. இந்த சூழலில் தான் 50 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்ஸிஜனை இறக்குமதி செய்யப்போவதாக மத்திய பா.ஜ.க. அரசு தெரிவித்துள்ளது.

புதிதாக அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளில், மாதம் ஒன்றுக்கு 4,500 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியும். இரண்டாவது கொரோனா அலையில் ஏற்படும் அதிகமான பாதிப்புக்கு, இந்த உற்பத்தி போதுமானதாகவோ, உயிரைக் காப்பதாகவோ இருக்காது.

உத்தம் ஏர் ப்ரோடக்ட்ஸ், ஏரோக்ஸ் டெக்னாலஜீஸ் மற்றும் அப்ஸ்டெம் டெக்னாலாஜீஸ் ஆகிய 3 நிறுவனங்களுக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கான டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. கால தாமதத்துக்காக டெண்டர் எடுத்த இந்த நிறுவனங்கள் மீது மருத்துவமனைகள் புகார் தெரிவித்து வருகின்றன. ஆக்ஸிஜன் ஆலை அமைக்க இடம் ஒதுக்கியும், டெண்டர் எடுத்த நிறுவனம் இன்றுவரை இயந்திரங்களைக் கொண்டு வந்து நிறுவவில்லை என்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அரசு மருத்துவமனை நிர்வாகங்கள் பகிரங்கமாக புகார்கள் தெரிவித்துள்ளன. ”டெண்டர் எடுத்த நிறுவனங்களை நாங்கள் தொடர்புகொண்டாலும் அவர்களிடம் இருந்து சரியான பதில் இல்லை. என்ன பிரச்சினை என்று எனக்குத் தெரியவில்லை” என்கிறார் குஜராத்தின் நவசாரி மகாத்மா காந்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி அவ்னிஸ் துபே.

டெண்டர் எடுத்த நிறுவனங்களோ, காப்பர் குழாய்கள் மற்றும் மின்சாரத்தை மாநில அரசுகள் வழங்கினால் மட்டுமே ஆலைகளை அமைக்க முடியும். மற்றபடி எங்கள் கையில் ஏதுமில்லை என்று டெண்டர் எடுத்த நிறுவனங்கள் கைவிரித்துவிட்டன.

ஆக்ஸிஜன் ஆலைகளை தொடங்க டெண்டர் விட்ட பின், 8 மாதங்களாக ஏற்பட்டுள்ள காலதாமதத்துக்கு என்ன காரணம் என்பதை மத்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை. டெண்டர் எடுத்த 3 நிறுவனங்களுடன் அரசு மருத்துவமனை நிர்வாகங்கள் போராடிக் கொண்டிருக்கின்றன. அந்த நிறுவனங்களும் அவர்களுக்குச் சரியான பதிலைச் சொல்லாமல், அலட்சியப் போக்குடன் நடந்து கொள்கின்றன.

இந்த நாட்டில் என்ன தான் நடக்கிறது? இரண்டாவது கொரோனா அலையில், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்பும் அதிகமாகும் என்று கடந்த ஆண்டே உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது.

இந்த எச்சரிக்கையை எல்லாம் பொருட்படுத்தாமல், ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிலும், தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபடுவதை மட்டுமே முக்கியமாகக் கருதிய பிரதமர் மோடியை என்ன சொல்வது? கும்பமேளாவை அனுமதித்து ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று பரவக் காரணமாக ஒரு பிரதமரே இருந்த வரலாறு வேறு எந்த நாட்டிலாவது நடந்திருக்கிறதா?

பிஎம் கேர்ஸ் நிதியை தொடங்கி பல கோடிகளை வசூலித்தவர்களால், ரூ.200 கோடியில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் தொடங்குவதில் என்ன பிரச்சினை இருக்கப் போகிறது? ஒதுக்கியதாகச் சொல்லப்பட்ட இந்த நிதி என்ன ஆனது?

கொரோனா உயிரிழப்புகள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் தெருக்களில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

பிறந்த குழந்தை முதல் இறந்த உடல் வரை, மோடி ஆட்சியில் யாருக்கும் நிம்மதி இல்லை. ஆக்ஸிஜன் தேவையை அதிகரித்து, தங்களுக்கு வேண்டப்பட்ட தொழில் அதிபர்களை ஆக்ஸிஜன் தயாரிப்பில் இறக்க மோடி அரசு திட்டமிடுகிறதோ? என்ற சந்தேகம், அவர்களின் மோசமான செயல்கள் மூலமே வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

The post பிணங்களின் மீது ஆட்சி நடத்தும் மோடி அரசு: ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை தாமத்தால் தொடரும் உயிரிழப்பு appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

கொரோனா இரண்டாவது அலையை தடுக்க யோசனைகள்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்
பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதம் :

அன்புள்ள பிரதமருக்கு,

மீண்டும் கொரோனா வைரஸ் மையம் கொண்டிருப்பது குறித்த மிகுந்த கவலையுடன் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். கடந்த ஓராண்டாக நம் நாடு பேரிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும் தியாகங்களை மக்கள் செய்துள்ளனர். இந்த சூழலில், மீண்டும் வைரஸ் தாக்குதலுக்கு நாம் ஆளாகியுள்ளோம்.

கொரோனா வைரசுக்கு தீர்வு காண நமது விஞ்ஞானிகள் சமூகத்தினரும் மருந்து வினியோகஸ்தர்களும் உறக்கமின்றி உழைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், மத்திய அரசின் மோசமான செயலாக்கம் மற்றும் மேலோட்டமான நடவடிக்கையால் அவர்களது பணி குறைத்து மதிப்பிடப்படுவது துரதிருஷ்டவசமானது.

நமது நாட்டின் தற்போதைய சூழல் குறித்த முக்கிய அம்சங்கள்:

கொரோனா தடுப்பு மருந்தை இந்தியா தான் முதலில் கண்டுபிடித்தது. ஆனால், தடுப்பூசி போடுவதில் நாம் நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறோம். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை வடிவமைத்து, அதனை அனுபவத்தின் மூலம் இந்தியா செயல்படுத்தியது. தற்போதைய சூழலில், கடந்த 3 மாதங்களில் 1 சதவிகிதத்துக்கும் குறைவான மக்களுக்கே தடுப்பூசி போட்டுள்ளோம். நம் நாட்டின் பெருவாரியான மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது.

இதே விகிதாச்சாரத்தில் நாம் தடுப்பூசி போட்டால், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 75 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு பல ஆண்டுகள் ஆகும். இதனால் பேரழிவு ஏற்படுவதோடு, இந்திய பொருளாதாரமும் பெரிதும் பாதிக்கப்படும். பெருமளவில் கொரோனா தடுப்பூசி மருந்தை வெளிநாடுகளுக்கு மத்திய அரசு ஏன் ஏற்றுமதி செய்தது என்பதற்கான தெளிவான விளக்கம் தரப்படவில்லை. நம் நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை இருக்கும்போது, 6 கோடிக்கு அதிகமான தடுப்பூசி மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குற்றம் சாட்டுவதால், தடுப்பூசி பற்றாக்குறை திரும்பத் திரும்ப அந்த மாநில அரசுகள் சுட்டிக்காட்டுகின்றன. கூட்டுறவு கூட்டாட்சி மிகவும் அவசியம் என்று நீங்கள் கூட சொல்வீர்களே, அதே கூட்டுறவு கூட்டாட்சியை வேரோடு வெட்டும் செயல் தான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சொந்த நாட்டு மக்களைப் பாதிப்படையச் செய்து, விளம்பரத்துக்காக அரசு பல முடிவுகளை எடுத்ததே, அதைப் போன்று தான் தடுப்பூசி ஏற்றுமதியும் நடந்ததா?

மையப்படுத்துதல் மற்றும் தனிப்பட்ட பிரச்சாரம் மட்டுமே பதிலாகக் கிடைக்கிறது. பொதுச் சுகாதாரம் மாநில அரசுகளின் வரையறைக்குட்பட்ட. தடுப்பூசி மருந்துகளை மாநில அரசுகள் கொள்முதல் செய்வதற்குப் பதிவு செய்ய அனுமதிக்கப்படவில்லை. மத்திய அரசே அதனை நேரடியாகச் செய்கிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ள இணையம் வழியே பதிவு செய்ய வேண்டும் என்று கூறியதால், பெரும்பாலான ஏழைகள் அவ்வாறு செய்ய முடியாமல் போனது.

கடந்த 70 ஆண்டுகளாக தடுப்பூசி மையங்களை அமைப்பதில் உலக அளவில் இந்தியா சிறந்து விளங்கியதற்காகக் காங்கிரஸ் கட்சி பெருமை கொள்கிறது. இதன்மூலம் நன்கு திட்டமிட்டு தடுப்பூசி திட்டத்துக்கு ஆதரவளித்து, விரைந்து தடுப்பூசிகளைப் போட்டோம்.

தனிப்பட்ட நபருக்கான தடுப்பூசியாக இல்லாமல், பெருவாரியான மக்களுக்கான தடுப்பூசியாகக் காங்கிரஸ் ஆட்சியில் மாற்றினோம்.

எனவே, நான் உங்களை வேண்டிக் கொள்வது இதுதான்:

உற்பத்தித் திறனை அதிகரிக்க, தடுப்பூசி வினியோகஸ்தர்களுக்குத் தேவையான நிதி ஆதாரங்களை வழங்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதிக்கு உடனே தடை விதிக்க வேண்டும்.

நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலின்படி, மற்ற தடுப்பூசிகளுக்கும் விரைந்து ஒப்புதல் தரவேண்டும்.

ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி கிடைக்கச் செய்ய வேண்டும்.

தற்போது ரூ. 35 ஆயிரம் கோடி அளவுக்கு தடுப்பூசிகள் கொள்முதல் செய்வதை மத்திய அரசு இரட்டிப்பாக்க வேண்டும்.

தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதையும் விநியோகிப்பதையும் மாநில அரசுகளுக்குத் தருவதே சரியானது.

இரண்டாவது கொரோனா அலையில் பாதிக்கப்படுவோருக்கு நேரடியாக வருவாய் ஆதாரத்தை அளிக்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசி திட்டத்தில் எங்களது ஏகோபித்த ஆதரவு உண்டு என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறேன். இந்த யோசனைகளை விரைந்து பரிசீலிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

The post கொரோனா இரண்டாவது அலையை தடுக்க யோசனைகள்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

கொரோனவை எதிர்த்துப் போராடிய அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை ஏற்காத எடப்பாடி அரசு! போராடும் மருத்துவர்களுக்கு ஆதரவாக தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை
கொரோனா தொற்று உலகத்தையே உலுக்கியுள்ள நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளே திணறிக் கொண்டிருக்கின்றன. இருப்பினும், தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு கொரோனா தடுப்புப் பணிகளை மிகச் சிறப்பாக செய்து வருகிறார்கள். கொரோனாவை கண்டு கொஞ்சமும் அஞ்சாமல், துணிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறப்பாக பணியாற்றியதில் அரசு மருத்துவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இருப்பினும், அதைப் பொருட்படுத்தாமல் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகச் சிறப்பாக சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டதை எவரும் மறுக்க இயலாது. ஆனால், கொரோனா தொற்றிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிய மருத்துவர்களின் நலனை தமிழக அரசு காப்பாற்றியதா என்றால் மிகுந்த ஏமாற்றமே மிஞ்சுகிறது.

தமிழக அரசு மருத்துவர்கள் அரசுக்கு நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பலகட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி, முதல் கோரிக்கை, மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன்படி 12 ஆண்டுகளுக்கான தகுதிக்கு ஏற்ற ஊதியம், இரண்டாவது, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்கள், மூன்றாவது, மருத்துவ பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித இடங்கள் மீண்டும் தரப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், நான்காவதாக, மருத்துவ பட்ட மேற்படிப்பு முடிக்கும் அரசு மருத்துவர்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை இதுவரை தமிழக அரசு நிறைவேற்றாதது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

தமிழக முதல்வர் அறிவித்த, கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம், தொற்று ஏற்பட்ட மருத்துவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டதற்காக மருத்துவர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியமும் இதுவரை தரப்படாமல் கிடப்பில் போடப்பட்டள்ளது. முதலமைச்சர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத நிலையிலும் அரசு மருத்துவர்கள் தங்களது பணியில் அயராது பணியாற்றி வருகிறார்கள். ஆனால், தமிழக முதலமைச்சர் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வது நியாயமா ?

இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக தமிழகம் இருப்பதாக பெருமைப்பட்டுக் கொள்கிறோம். தமிழக அரசு கோடிக்கணக்கான ரூபாய் செலவில் புதிய மருத்துவ கல்லூரிகளையும், புதிய மருத்துவமனைகளையும் தொடங்குவதாலேயே நமது பெருமையை அடைந்துவிட முடியாது. அதற்குரிய அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். தமிழக மக்கள் தொகை 7 கோடிக்கு மேலே இருக்கிற நிலையில், அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரமாக இருப்பது குறித்து அ.இ.அ.தி.மு.க. அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை. ஆனால், மருத்துவ கல்லூரிகளை அதிகமாக தொடங்கியிருக்கிறோம்,  மருத்துவ படிப்பிற்காக அதிக இடங்களை உருவாக்கியிருக்கிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதால் என்ன பயன் ஏற்படப் போகிறது ?

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் அரசு மருத்துவர்கள் தான் மிகுந்த துணிவுடன் களப்பணி ஆற்றினார்களே தவிர, கொரோனாவை எதிர்கொள்ளாமல் பல தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அப்படியே சில மருத்துவமனைகள் செயல்பட்டாலும், நோயாளிகளால் தாங்க முடியாத அளவிற்கு வசூல் வேட்டை நடத்தியதை எவரும் மறுக்க முடியாது. இதில் மிகுந்த மனிதாபிமான உணர்வோடு செயல்பட்டது அரசு மருத்துவர்களே தவிர, தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுகிற மருத்துவர்கள் அல்ல.

கண்ணுக்கே தெரியாத கிருமியை, மருந்தே கண்டுபிடிக்காத நிலையில், ஆயுதமின்றி களமிறங்கும் போர் வீரனைப்போல, உயிரை பணயம் வைத்து பணி செய்தவர்கள் அரசு மருத்துவர்கள். கொரோனா உச்சத்தில் இருந்தபோதும் கூட, பணியிலிருந்து ஒதுங்கவில்லை. இரவு-பகல் பாராமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றிய பெருமை அரசு மருத்துவர்களுக்கு உண்டு. அவர்களின் கடுமையான உழைப்பின் காரணமாகவே கொரோனா தொற்றுப் பரவலையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையையும் தமிழகத்தில் குறைக்க முடிந்தது. இத்தகைய சாதனைக்கு சொந்தம் கொண்டாடும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிகள் என்ன ?

உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின்படி, ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற வகையில் 7 கோடி மக்கள் தொகைக்கு தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 70 ஆயிரம் மருத்துவர்கள் இருக்க வேண்டும். இருப்பதோ 18 ஆயிரம் மருத்துவர்கள் தான். ஆனால், தமிழக முதலமைச்சர் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பது குறித்தும், 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்குவது குறித்தும் தேர்தலை மனதில் கொண்டு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். போதிய மருத்துவர்கள் இல்லாத நிலையில் எந்த கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்காதபோதும், அரசு மருத்துவர்களின் கோரிக்கையை புறக்கணிக்கிற நிலையில், இதுபோன்ற அறிவிப்பால் மக்களுக்கு என்ன பயன் ஏற்படப் போகிறது ?

2 ஆயிரம் மினி கிளினிக்குகளுக்கு குறைந்தபட்சம் 3 ஆயிரம் மருத்துவர்களாவது நியமனம் செய்யப்பட வேண்டும். இதற்காக ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை இங்கே அமர வைப்பதன் மூலம் மொத்த பொது சுகாதார கட்டமைப்பே சீர்குலைந்துவிடும் என எச்சரிக்க விரும்புகிறேன்.

எனவே, கொரோனா தொற்றுக் காரணமாக கடுமையான பாதிப்பிலிருந்து மக்களின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவர்களின் நீண்டகால நான்கு அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமென தமிழக முதலமைச்சரை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

The post கொரோனவை எதிர்த்துப் போராடிய அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை ஏற்காத எடப்பாடி அரசு! போராடும் மருத்துவர்களுக்கு ஆதரவாக தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

மரியாதைக்குரிய அரசியல்வாதி அகமது படேல் : ஷாஹித் சித்திக் புகழாரம்
கடந்த 1980 ஆம் ஆண்டு ஒரு பத்திரிக்கையாளராக அகமது படேலை நான் சந்தித்தேன். ஊடக வெளிச்சத்திலிருந்து விலகி இருப்பதையே அவர் விரும்புவார். இருந்தாலும், எனது வார இதழான நய் துனியாவுக்கு பேட்டி அளிக்க அவரை வலியுறுத்திக் கொண்டே இருந்தேன். ஆத்திரமூட்டும் வகையில் அமைந்த பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் துல்லியமாகப் பதில் அளித்தது என்னை வெகுவாகக் கவர்ந்தது. கடந்த 35 ஆண்டுகளாக அவரை நண்பராகவும் அரசியல்வாதியாகவும் அறிந்திருந்தேன். டெல்லியில் அவர் எவ்வளவு பெரிய அரசியல்வாதியாக இருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்கும் மட்டுமின்றி, பொது வாழ்க்கையின் அடிப்படை தார்மீக கோட்பாடுகளுக்கும் நேர்மையாளராகவும் அர்ப்பணிப்புக் கொண்டவராகவும் இருந்தார். கட்சியை வைத்துப் பல தலைவர்கள் தங்கள் நலனைப் பாதுகாத்துக் கொள்வார்கள். ஆனால், அகமது படேலோ தனது சொந்த அரசியல் மற்றும் தனிப்பட்ட நலன்களுக்கு மேலாக எல்லாவற்றையும் செய்தார்.

Congress senior leaders Ghulam Nabi Azad (3rd L), Anand Sharma (C), Randeep Surjewala, Ahmed Patel (4th R) and others leave after a meeting with Comptroller and Auditor General (CAG), in New Delhi.

குறிப்பாக, இந்திரா காந்தியால் வளர்க்கப்பட்ட தலைவர்களின் தலைமுறையின் மறைவுக்குப் பிறகு, நவீன காலங்களில் சிறந்த காங்கிரஸ்காரர்களில் ஒருவராக அகமது படேல் விளங்கினார். நரசிம்மராவுக்கு பிந்தைய காலத்தில் காங்கிரஸ் குழப்பத்தில் இருந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி தோன்றியவுடன், காங்கிரசுக்கு எதிர்காலம் இருண்டதாகத் தோன்றியது.

அகமது படேல் மற்றும் சில தலைவர்களின் எதார்த்தமான, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் 2004 ஆம் ஆண்டு மத்தியில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தை உருவாக்க முடிந்தது. அவரது அரசியல் வியூகத் திறன், தாழ்மையான நடத்தை, அனைவருக்கும் செவிசாய்க்கும் திறன் ஆகியவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு விவேகமான மற்றும் நடைமுறை ஆலோசனைகளை வழங்க உதவியது. அதேசமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஒன்றிணைத்து மீண்டும் 2009 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வர உதவியது.

கூட்டணியிலிருந்த 24 – க்கும் மேற்பட்ட கட்சிகளின் பல முறை பிரிந்து செல்லும் நிலை ஏற்பட்டபோது, அவர்களைச் சமாதானப்படுத்தி, கூட்டணியில் தொடரச் செய்தவர் அகமது படேல். ‘சோனியாவின் பிரச்சினைகளைத் தீர்ப்பவர்’ என அரசியல் விமர்சகர்கள் அகமது படேலை அழைத்தனர். என்னைப் பொருத்தவரை, அவர் காங்கிரஸ் கட்சியின் தீயணைப்பு வீரர்.

1992 ஆம் ஆண்டு, டிசம்பர் 7 ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட மறுநாள், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலக ராஜினாமா கடிதம் கொடுத்தேன். அப்போது நான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும், பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங் மற்றும் கே.ஆர்.நாராயணன் ஆகியோரைக் கொண்ட கட்சி விவகாரக் குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன்.

Congress Vice President, Rahul Gandhi with party leader Ahmed Patel arrive to attend the 132nd foundation day of Indian National Congress at AICC in New Delhi.

இதனை அறிந்து என் வீட்டுக்கு விரைந்து வந்த அகமது படேல், நீங்கள் கட்சியிலிருந்து விலகினால் நானும் விலகுவேன். காங்கிரஸ் கட்சியிலிருந்து நம்மைப் போன்ற முஸ்லிம்கள் பெருவாரியாக விலகினால், மதச்சார்பின்மைக்கு ஆபத்து ஏற்படாதா? என்று கேட்டார்.

அதேசமயம், என் அரசியல் குரு ஹர்கிஷன் சிங் சுர்ஜித் என்னை ஆசுவாசப்படுத்தி, ராஜினாமாவைத் திரும்பப் பெற வலியுறுத்தினார்.

ஹர்கிஷன் சிங் சுர்ஜித்திடம் சொல்லி, காங்கிரஸ் கட்சியிலிருந்து நான் விலகுவதைத் தடுத்து நிறுத்துமாறு அகமது படேல் கேட்டுக் கொண்ட விசயம் பிறகுதான் எனக்குத் தெரிந்தது.

அகமது படேலின் இரவு நேர அரசியல் பிரசித்தி பெற்றது. நண்பர்களையும், எதிர்முகாமில் இருப்பவர்களையும் அழைத்து அறிவுரை மற்றும் தகவல்களை வழங்குவார்.

திடீரென ஒரு நாள் இரவு எனக்கு போன் செய்து, கபாப் உணவு எடுத்து வருகிறேன் தயாராக இருங்கள் என்று சொன்னார். சொன்னபடி வீட்டுக்கு கபாப் எடுத்து வந்தார். இருவரும் மகிழ்வுடன் சாப்பிட்டோம். அரசியலில் அவர் மிருகத்தனமாக செயல்பட்டார். 24 மணி நேரமும் காங்கிரஸ் அரசியலை அவர் சுவாசித்தார். ஆனால், அவரது மோசமான எதிர்ப்பாளர்களுக்குக் கூட அவர் தீங்கு செய்ய முயலவில்லை.

சோனியா காந்தி தலைவராக இருந்த இக்கட்டான காலகட்டத்தில், அகமது படேலின் காதுகளும் கண்களும் சோனியாஜியை நோக்கியே இருந்தன. காங்கிரஸ் கட்சியை தமது திறமையால் சோனியா காந்தி தூக்கி நிறுத்தினார். இதில் அகமது படேலின் பங்கும் குறைந்ததல்ல. சோனியா காந்திக்கு ஆலோசனை கூறிய போதெல்லாம், கட்சியின் நலனுக்காக அவரது நண்பர்களை எல்லாம் தியாகம் செய்ய அவர் தயங்கியதில்லை. நூற்றுக்கணக்கான விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகள் இருந்தாலும், அவருக்கு எதிரிகள் இருந்ததில்லை. அவர் ஒருபோதும் கட்சியைக் காட்டிக் கொடுத்ததில்லை என்பதை, காங்கிரஸ் கட்சியிலிருந்த அவரது எதிர்ப்பாளர்கள்கூட நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.

இந்த இக்கட்டான காலகட்டத்தில் அகமது படேல் அவசியம் தேவைப்பட்டார். காங்கிரஸில் அவருக்கு மாற்று யாரும் இல்லை. இந்திய ஜனநாயகத்துக்கும் மதச்சார்பின்மைக்கும் அவர் ஆற்றிய பங்கு மகத்தானது. சாமானியர்களின் பார்வையில் அரசியல்வாதிகள் மரியாதை இழந்து கொண்டிருக்கும் ஒரு நேரத்தில், அமைதியான, உணர்ச்சிவசப்படாத, நேர்மறை அணுகுமுறை கொண்ட அகமது படேலை நாம் இழந்துள்ளோம்.

கட்டுரையாளர் : ஷாஹித் சித்திக். (காங்கிரஸின் சிறுபான்மைப் பிரிவின் தலைவராக இருந்தவர். மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். நய் துனியா என்ற இந்தி இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.)

The post மரியாதைக்குரிய அரசியல்வாதி அகமது படேல் : ஷாஹித் சித்திக் புகழாரம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

வென்றது தேசிய ஜனநாயகக் கூட்டணி ; தோற்றது பீகார் மக்கள் : ‘யூ டூ ப்ரூட்டஸ்’ ஓவாய்சி?
திடீரென பிரதமர் மோடி அறிவித்த பொது முடக்கத்தால் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்காத மத்திய, மாநில அரசுகள்…

இப்படிப் பல பிரச்சினைகளால் பீகார் மக்கள் தவித்துக் கொண்டிருந்த நிலையில் தான், சட்டப்பேரவை தேர்தல் வந்தது. மத்தியில் ஆளும் பாஜக கட்சியும், மாநிலத்தில் ஆளும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியாகக் களம் கண்டன. தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் மகா கூட்டணியாகக் களம் கண்டன.

தேசிய ஜனநாயகக் கூட்டணி தோற்பதற்கான காரணங்கள் ஆயிரம் உண்டு. ஆனால், வெற்றி பெறுவதற்கான காரணம் ஒன்றுகூட இல்லை. இருப்பினும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இந்த வெற்றி எப்படிச் சாத்தியமாயிற்று ?

கடந்த 2006 ஆம் ஆண்டு நெல் மற்றும் கோதுமையைப் பீகார் மாநிலம் பெருமளவு கொள்முதல் செய்தது. இத்தகைய கொள்முதல் செய்யப்படும் விளைபொருட்களுக்கான விலை தருவதில் தாமதம் செய்யப்பட்டது. இதனால், நெல், கோதுமை, சோளம் மற்றும் வாழைப்பழம் போன்ற பழங்களை இடைத்தரகர்கள் மூலம் விவசாயிகள் விற்க ஆரம்பித்தனர். விவசாயிகளின் இத்தகைய அவலநிலை ஏன் தேர்தலில் முக்கியப் பிரச்சினையாக எதிரொலிக்கவில்லை என்ற கேள்வி இன்று தானாகவே எழுகிறது.

பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் செயல்படும் ராஷ்ட்ரீய கிஷான் சபாவின் தலைவர் ராமஷிஷ் ராய் கூறும்போது, பீகார் தேர்தல் சாதி அடிப்படையில் நடந்ததாகக் குறிப்பிட்டார். பீகார் சிறு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.என்.சிங் கூறும்போது, ”ஒரு குவிண்டால் அரிசியை ரூ.800 முதல் ரூ.1,100 க்கு வர்த்தகர்கள் மற்றும் இடைத்தரகர்களுக்கு விற்குமாறு பீகார் விவசாயிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர். கொள்முதல் முறையை கடைப்பிடிக்கவில்லை” என்றார்.

வீழ்ந்துபோன பீகார் :

பீகாரில் கோதுமை கொள்முதல் இந்த ஆண்டு 7 லட்சம் டன் என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், உண்மையான கொள்முதல் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்தது. அதாவது 5 ஆயிரம் டன் மட்டுமே கொள்முதல் இருந்தது. 2015-2016 ஆம் ஆண்டில் 9 ஆயிரம் கோதுமை கொள்முதல் மையங்கள் இருந்தன. ஆனால், 2019-20 ஆம் ஆண்டில் 1,619 ஆக குறைந்தது.

மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 10 லட்சம் பேருக்கு பணி உறுதி அட்டை வழங்கப்பட்டது. ஆனால், 2,132 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. 100 நாட்கள் வேலை தருவதற்குப் பதிலாக, 7 நாட்கள் மட்டுமே வேலை தரப்பட்டது.

பீகார் மாநிலத்தில் 36 சதவீத குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை. 62 சதவீதம் குழந்தைகள் ஆரம்பப் பள்ளி படிக்கும்போதே, படிப்பை தொடராமல் வெளியேறிவிட்டனர். கற்றோர் மிக குறைவாக 61.8 சதவீதம் மட்டுமே உள்ளது.

பீகார் மாநிலத்தில் 43 ஆயிரத்து 777 பேருக்கு ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளார். ஆயிரம் மருத்துவர்கள் இருக்க வேண்டும் என்பது விதி.

பீகார் மாநிலத்தில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 602 ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

பீகாரில் உள்ள எந்த பல்கலைக்கழகமோ, கல்லூரிகளோ நாட்டில் முதல் இடத்தைப் பிடித்தது இல்லை.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை, பீகாரில் வேலையில்லாத் திண்டாட்டம் 46.6 சதவீதமாக இருந்தது. படித்துவிட்டு வேலையில்லாமல் 17.5 சதவீதம் பேர் உள்ளனர்.

இப்படி, அனைத்து தரப்பு மக்களும் பிரச்சினைகளில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் மாநிலமாக பீகார் திகழ்கிறது. இப்படியிருக்கும் போது எந்த அடிப்படையில் பீகார் மக்கள் வாக்களித்தார்கள்?

பீகார் மக்களைக் குறைசொல்ல முடியாது. பாஜகவின் ‘பி’ டீமாக செயல்பட்ட அகில இந்திய மஜ்லீஸ் இ இட்டேஹாட் உல் முஸ்லீமின் தலைவர் அசாதுதீன் ஓவாய்சியே தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்துள்ளார். ‘யூ டூ ப்ரூட்டஸ்?’   என்ற ஜுலியஸ் ஜீஸரின் கடைசி வார்த்தைகளைத் தான், அவரை நோக்கிக் கேள்வியாக எழுப்ப வேண்டியுள்ளது.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் தலைவர் சிவானந்த் திவாரி கூறும்போது, ”பாஜக- ஆர்எஸ்எஸ் அமைப்பின் பி டீமாக ஓவாய்சி மாறவிட்டார். பீகாரில் மகா கூட்டணியைத் தோற்கடிக்க பாஜக பின்னே இருந்து கொண்டு செயல்பட்டுள்ளார். என்றைக்காவது ஓவாய்சியை சர்வாதிகாரி என்றோ, சமூக விரோதி என்றோ பாஜக-ஆர்எஸ்எஸ் கட்சியினர் என்றைக்காவது அழைத்திருக்கிறார்களா?  பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தோற்கடிக்க முடியாது என்றும், ஆட்சி அமைக்க முடியாது என்றும் தெரிந்தும், பாஜகவை வெற்றி பெற வைக்கவே முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் வேட்பாளர்களை ஓவாய்சி நிறுத்தினார்” என்றார்.

காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறும்போது, ஓவாய்சியை பாஜக பயன்படுத்திக் கொண்டது. வாக்கைப் பிரிக்கும் ஓவாய்சியிடமிருந்து வாக்காளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இவர்கள் இருவரது கருத்தும் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மையே.

ஓவாய்சி வேட்பாளர்களை நிறுத்தாமல் இருந்திருந்தால், மகா கூட்டணி எளிதாக வெற்றி பெற்றிருக்கும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

பீகார் தேர்தல் முடிவுகள் மாறியதற்கு இவையும் காரணம்:

1. குறைந்த வாக்கு வித்தியாச வெற்றி :

28 தொகுதிகளில் ஆயிரம் வாக்குகளுக்குக் குறைவான வித்தியாசத்தில் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 62 தொகுதிகளில் 2 ஆயிரம் வாக்குகளுக்குக் குறைவான வித்தியாசத்தில் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 113 தொகுதிகளில் 3 ஆயிரம் வாக்குகளுக்குக் குறைவான வித்தியாசத்தில் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

2. நிதிஷுக்கு பெண்கள் ஆதரவு ? :

சட்டப்பேரவைத் தேர்தலில் ஆண்களைவிட பெண்களே அதிக அளவில் வாக்களித்துள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. அமைதியாக இருந்த வாக்காளர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் நிதிஷ்குமாருக்கு வாக்களித்து விட்டதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இதன் உண்மைத் தன்மையை  அறிய சரியான ஆய்வு தேவை.

3. யோகி-நிதிஷ்குமார் மோதல் நாடகம் :

முஸ்லீம்களை ஊடுருவல்காரர்கள் என்று 3 ஆம் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசினார். இதற்கு நிதிஷ்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.  ”நீ அடிக்கிறது போல் அடி…நான் அழுவது போல் அழுகிறேன்…” என்ற இவர்களது நாடகம் அவர்களது தொண்டர்களைத் திருப்திப்படுத்தியிருக்கிறது.

4. இடதுசாரிகளில் எழுச்சி :

2015 ஆம் ஆண்டு சிபிஎம் (எம்எல்) 3 தொகுதிகளில் வென்றது. இந்தத் தேர்தலில் போட்டியிட்ட 19 தொகுதிகளில் 12 தொகுதிகளில் இந்த கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் 10 தொகுதிகளில் இணைந்து போட்டியிட்டு, 4 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். நக்சல்கள், மாவோயிஸ்ட்கள், நகர நக்சலைட்கள் என தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் கடுமையாக விமர்சித்தும் இடதுசாரிகள் எழுச்சியைப் பெற்றுள்ளனர். 25 ஆண்டுகளுக்குப் பின் அவர்களுக்குப் புது வாழ்வு கிடைத்துள்ளது.

5. நாலாபுறம் சிதறிய வாக்குகள் :

தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் மகா கூட்டணிக்கு 37 சதவீதம் வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. மற்ற கட்சிகளுக்கும் சுயேச்சைகளுக்கும் 25 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. எந்த ஓர் அரசியல் கட்சியும் 25 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெறவில்லை.

6. சாதியே இன்னும் ராஜா :

தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, சாதி வாக்குகளே வெற்றியை நிர்ணயிப்பது புரிகிறது. பின்தங்கிய வகுப்பினர் மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள சிறுபான்மையினர் வாக்குகளை நிதிஷ்குமாரும், உயர் சாதியினர் வாக்குகளை பாஜகவினரும் கவர்ந்துள்ளனர். ராஷ்ட்ரீய ஜனதாவுக்கு முஸ்லீம் மற்றும் யாதவ் வாக்குகள் அதிக அளவில் கிடைத்துள்ளன.

7. ஐக்கிய ஜனதா தளத்தின் எதிர்காலம் :

இந்த தேர்தல் தமக்குக் கடைசி தேர்தல் என்று தேர்தல் பிரச்சாரத்தில் நிதிஷ்குமார் அறிவித்திருந்தார். இதுவரை இரண்டாம் கட்டத் தலைவர்கள் யாரும் தென்படவில்லை. கட்சியின் எதிர்காலம் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. நிதிஷ்குமார் இல்லாமல் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தாக்குப் பிடிக்குமா? என்பது சந்தேகமே.

புது அவதாரம் எடுத்த தேஜஸ்வி யாதவ்

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தாலும், 75 தொகுதிகளில் வெற்றி பெற்றுத் தனிப் பெரும்பான்மை கட்சியாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் உருவெடுத்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு பெற்ற வாக்குகளை விட,  அதிகமான வாக்குகளைத் தேஜஸ்வி தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் பெற்றுள்ளது.

தங்களது வாக்கு வங்கியான முஸ்லீம்கள் மற்றும் யாதவர்கள் வாக்குகளை மட்டுமின்றி, பல தரப்பிலிருந்தும் தேஜஸ்வி தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் வாக்குகளைப் பெற்றிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்திய அரசியலில் புதிய ஹீரோவாக தேஜஸ்வி அவதாரம் எடுத்துள்ளார்.

தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தபோதும் எதிர்க்கட்சியாக அமரப் போகிறது. இரண்டாவது தனிப் பெரும் கட்சியான பாஜக, மூன்றாவது தனிப்பெரும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு தரப்போகிறது. இதுபோன்ற அரசியல் கூத்துகள் நமக்கு ஒன்றும் புதிதல்ல.

பீகாரில் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் நிலையில், ஓவாய்சி போன்றவர்கள் கைக்கூலியாக மாறிய நிலையில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இல்லையில்லை…பீகார் மக்களைத் தோற்கடித்துள்ளது.

The post வென்றது தேசிய ஜனநாயகக் கூட்டணி ; தோற்றது பீகார் மக்கள் : ‘யூ டூ ப்ரூட்டஸ்’ ஓவாய்சி? appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

”மலையைத் தோண்டி எலியைப் பிடிக்கும் பா.ஜ.க அரசு” : புதிய நிதித் தொகுப்புப் பற்றி ப.சிதம்பரம் விமர்சனம்
முன்னாள் மத்திய நிதி அமைச்சரும்,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்கு அளித்த காணொலி பேட்டி:

சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ள நிதித் தொகுப்பு தேவையைப் பூர்த்தி செய்யாது. மிகைப்படுத்தப்பட்ட எண்களைக் கொண்ட, மக்களைத் திகைக்க வைக்கும் மற்றொரு நயவஞ்சக முயற்சி இது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள நிதித் தொகுப்பு, ‘மலையைத் தோண்டி எலியைப் பிடித்த’ கதையாக இருக்கிறது. கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளையும்,பொருளாதாரப் பாதிப்பையும் சரிசெய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, மக்களிடம் காட்டிக் கொள்வதாகவே இந்த அறிவிப்புகள் உள்ளன.

ஏற்கனவே அறிவித்த 20 கோடி லட்சம் ரூபாய் அளவுக்கான நிதித் தொகுப்பு தோல்வியடைந்துவிட்டது. அது வெறும் புரளி என்றும் ஆகிவிட்டது. தற்போதைய புதிய அறிவிப்பின் மூலம், மக்கள் தங்களது பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தி, மக்களின் வாழ்க்கையில் அரசு குறுக்கிடுகிறது.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள நிதித் தொகுப்பில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான எந்த அம்சங்களும் இல்லை. ஏற்கனவே 20 லட்சம் கோடி ரூபாய் என்று எண்ணிக்கையை வைத்து மக்களை ஏமாற்றியது போன்றே   இந்த புதிய நிதி தொகுப்பும் உள்ளது.

புதிய அறிவிப்பின்படி, 73 ஆயிரம் கோடிகள் ரூபாய் அளவுக்கு நிதித் தொகுப்பை அறிவித்துள்ளனர். உண்மையிலேயே அவ்வளவு தொகை இல்லை. இதுவும் புரளி தான். ஆனால், அறிவிக்கப்பட்டுள்ள நிதித் தொகுப்பு மதிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.1 சதவீதம் மட்டுமே என்கின்றனர் சில பொருளாதார நிபுணர்கள்.

அதோடு,  ஊழியர்கள்  எவ்வளவு செலவு செய்ய வேண்டும், எதை வாங்க வேண்டும் என, பெற்றோரைப் போல் அரசு சொல்லிக் கொண்டிருக்கிறது. என்ன சாப்பிட வேண்டும், எந்த உடையை அணிய வேண்டும், எந்த மொழியைப் பேச வேண்டும், யாரைக் காதலிக்க வேண்டும், யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பாஜக கூறுவதைப் போல், அக்கட்சித் தலைமை தாங்கும் அரசும் கூறுகிறது. மக்கள் செலவழிப்பதைக் கட்டுப்படுத்த இப்போது முயற்சி செய்து வருகின்றனர்.

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவில் வாழும் பாதி குடும்பங்களுக்கு  இப்போது பணம் அவசியம் தேவைப்படுகிறது. பல பொருளாதார நிபுணர்கள் பரிந்துரைத்தும், மக்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தை வரவு வைக்க மத்திய அரசு மறுக்கிறது. மக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

2020-21 ஆம் ஆண்டில் 10 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும் பொருளாதாரத்தைப்  புதுப்பிக்க மத்திய அரசு மேற்கொள்ளும் பரிதாபகரமான முயற்சிகளை, மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்   என்று நம்புகிறேன்” என்றார்.

The post ”மலையைத் தோண்டி எலியைப் பிடிக்கும் பா.ஜ.க அரசு” : புதிய நிதித் தொகுப்புப் பற்றி ப.சிதம்பரம் விமர்சனம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

கொரோனாவால் இறந்த சுகாதாரப் பணியாளர்களை அவமானப்படுத்துவதா?: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்
கொரோனாவை நேரடியாக களத்தில் எதிர்த்துப் போராடி உயிரிழந்த சுகாதாரப் பணியாளர்களின் விவரம் தங்களிடம் இல்லை என்று மத்திய அரசு கூறுவது, உயிர்த்தியாகம் செய்த அவர்களை அவமானப்படுத்தும் செயல் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மாநிலங்களவையில் பேசிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே, ”சுகாதாரத்துறை என்பது மாநிலங்களுக்குப்பட்டு வருவதால், மத்திய அரசிடம் அது குறித்த தரவுகள் இல்லை” என்று கூறியிருந்தார்.

”தரவுகளே இல்லாத மோசமான மோடி அரசு” என்று தலைப்பிட்டு, டவிட்டரில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.

”சுகாதாரப் பணியாளர்களுக்காக கை தட்டுவதையும், விளக்கேற்றுவதையும் விட, அவர்களுக்கான பாதுகாப்பும் மரியாதையும் மிகவும் முக்கியம்” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். ”மோடி கூறிய கொரோனா போராளிகளை, அவரே ஏன் அவமானப்படுத்துகிறார்” என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

சவ்பே தொடர்ந்து பேசிய போது, ”கொரோனாவால் உயிரிழப்போருக்கான பிரதமரின் காரீப் கல்யாண் காப்பீட்டு திட்டத்தின் தரவுகளின்படி, தேசிய அளவில் 64 டாக்டர்கள் உள்ளிட்ட 155 சுகாதாரத்துறைப் பணியாளர்கள் இறந்துள்ளதாக” குறிப்பிட்டுள்ளார்.

சுகாதாரத்துறை மாநில ஆளுகைக்குட்பட்டு வருகிறது என்று கூறும் மத்திய அரசு, மேற்கண்ட தரவை எங்கிருந்து பெற்றது. இதைத் தான் தரவுகள் இல்லாத மோசமான மோடி ஆட்சி என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ஏற்கனவே, புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களில் உயிரிழந்தவர்களின் பட்டியலை தருமாறு மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அஞ்சலி பரத்வாஜ் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ரயில்வே அமைச்சகத்துக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவருக்கு ரயில்வே அமைச்சகம் சரியான பதில் அளிக்கவில்லை. இந்த தரவுகள் மாநில காவல் துறையிடம் இருப்பதால், அவர்களிடமே மனு செய்து விளக்கம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று பொறுப்பற்ற முறையில் பதில் அளிக்கப்பட்டது.

அதிகாரப்பூர்வமான உயிரிழந்தோர் பட்டியல் கிடைத்தால் தான்,  உறவினர்கள் இழப்பீடு கோர முடியும் என்ற உண்மை தெரிந்திருந்தும், ரயில்வே அமைச்சகம் கண்டுகொள்ளாமல் இருப்பது கவலை அளிப்பதாக, உயிரிழந்தோரின் உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

அதேபோல், பிஎம் கேர்ஸ் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கும் பதில் அளிக்க பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது. பிஎம் கேர்ஸுக்கு வரும் நிதி எவ்வாறு கையாளப்படுகிறது என்பது குறித்த தரவுகள் இல்லாமலா இருக்கும்.

தரவுகள் என்றாலே மோடி அரசு நடுங்குவதற்கு காரணம் என்னவோ?

The post கொரோனாவால் இறந்த சுகாதாரப் பணியாளர்களை அவமானப்படுத்துவதா?: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

பொது முடக்கத்தை சிந்திக்காமல் அறிவித்தார் பிரதமர் மோடி: பொருளாதார வல்லுனர்கள் குற்றச்சாட்டு
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் கடந்த திங்கள்கிழமை வெளியிட்ட தரவுகளில், கடந்த ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான இந்தியாவின்  மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9 சதவிகிதமாக இருந்தது. ஒட்டுமொத்த கூடுதல் மதிப்பீட்டின் அடிப்படையில், பொருளாதாரம் 22.8 சதவிகிதமாக இருந்தது. இது இந்திய பொருளாதாரத்தின் மந்தநிலையையே வெளிப்படுத்துகிறது.

தரவுகளின் உண்மை நிலவரம் இறுதியாக வெளியாகும்போது, நிலைமை இன்னும் மோசமாகும் என்று தெரிகிறது. இந்திய வரலாற்றில் பொருளாதார சூழல் இதுபோல் மோசமான நிலையில் இருந்ததில்லை.

இதுபோன்று பொருளாதாரம் சுருங்கியதை கடந்த 40 ஆண்டுகளில் இந்தியா சந்தித்ததில்லை. கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் காலாண்டுக்கான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தித் தரவுகளை வெளியிட்டு வரும் நிலையில், மோசமான வீழ்ச்சி ஏற்படுவது இதுதான் முதல்முறை.

ஆனால், இது ஒன்றரை நூற்றாண்டுக்கு ஒருமுறை நிகழும் அசாதாரணமான சூழல் என்று அரசு கூறுகிறது. ஆனால், அரசின் தலைமை பொருளாதார ஆலோசகரோ, கொரோனா மற்றும் அதனைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட பொது முடக்கமே இதற்கு காரணம் என்கிறார்.

முன்னதாக, இந்தியாவில் இதுவரை இல்லாத பொருளாதார வீழ்ச்சியை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘கடவுளின் செயல்’ என்று குற்றம் சாட்டியிருந்தார். வைரஸ் அனைத்து நாடுகளிலும் குறைந்துவிட்டது என்பதும், இந்தியாவின் பொருளாதார மந்தநிலையால் ஆபத்து இல்லை என்பது மத்திய அரசின் கருத்தாக உள்ளது.

ஆனால், சமூக ஊடகங்களில் இயங்கும் பா.ஜ.க.வினரோ, ஒரு படி மேலே போய், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளைவிட, இந்தியாவின் பொருளாதார மந்தநிலை குறைவாக இருப்பதாகவும், இது குறித்து போலி செய்திகள் பரப்பப்படுவதாகவும் பதிவிடுகின்றனர்.  உலகின் பல நாடுகளிலும் கொரோனா பரவல் குறைந்துவிட்டது உண்மைதான். ஆனால், சுருங்கிப் போன பொருளாதாரத்தை ஒப்பிடும் போது, மற்ற நாடுகளை விட இந்தியா மோசமான நிலையிலேயே உள்ளது.

இது குறித்து பொருளாதாரம் மற்றும் நிதி தொடர்பான கட்டுரையாளர் விவேக் கவுல் கூறும்போது, ”பெரிய நாடு, சிறிய நாடு என்ற பாகுபாடு இன்றி, கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்தியாவில் அமல்படுத்தப்படும் பொது முடக்கம் உலகிலேயே மிகக் கடுமையானது. இது பொருளாதார நடவடிக்கைகளை முடக்கிவிட்டது. விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் பிரதமர் நரேந்திர மோடி பொது முடக்கத்தை அறிவித்துவிட்டார்” என்றார்.

”பொருளாதார வீழ்ச்சிக்கு கொரோனா பரவல் முக்கிய காரணம் என்பதை மறுக்கவில்லை. ஆனால், அதற்கு முன்பே, பொருளாதார சரிவு இருந்தது என்று மத்திய அரசின் தரவுகளே தெரிவிக்கின்றன. இதன் தாக்கம் அனைத்துத் துறைகளிலும் பரவியது” என்று பொருளாதார நிபுணர்கள் குமார் தாஸ் மற்றும் ஜாய்தீப் பருவா ஆகியோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஜாய்தீப் பருவா கூறும்போது, ”கொரோனா தாக்குதலுக்கு முன்பு, இந்திய பொருளாதாரம் தொடர்ச்சியாக 2 ஆண்டுகள் மந்தநிலையில் இருந்தது. பொருளாதாரம் ஏற்கனவே தோல்வியுற்ற நிலையில், கொரோனாவினால் ஏற்பட்ட கூடுதல் தாக்குதலை தாங்க முடியவில்லை” என்றார்.

The post பொது முடக்கத்தை சிந்திக்காமல் அறிவித்தார் பிரதமர் மோடி: பொருளாதார வல்லுனர்கள் குற்றச்சாட்டு appeared first on தேசிய முரசு - Desiya Murasu.