Coronavirus Vaccine Archives - தேசிய முரசு - Desiya Murasu

மத்திய அரசே! 18 வயது நிரம்பிய அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போடு! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை
முக்கிய அம்சங்கள்:

மத்திய அரசே 100 சதவிகித தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு சரிசமமாக விநியோகம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது, இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற தடுப்பூசி தட்டுப்பாடுகளுக்கு உரிய தீர்வாக அமையும்.

45 வயது மேற்பட்ட 30 கோடி பேருக்குத் தடுப்பூசி போட 60 கோடி டோஸ்கள் தேவைப்படுகின்றன. இதில் 12 கோடி டோஸ்கள் ஏற்கனவே போடப்பட்டுள்ளன. மேலும் ஏறக்குறை 50 கோடி டோஸ் தேவைப்படுகின்றன.

18 வயது நிரம்பிய அனைத்து மக்களுக்கும் கடந்தகால அரசுகள் பொறுப்பை ஏற்றுக் கொண்டதைப் போல, இன்றைய மத்திய அரசு அனைத்து மக்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடுகிற பொறுப்பை ஏற்க வேண்டும்.

ஏற்கனவே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.35,000 கோடிக்குக் கூடுதலாக ரூ.7,000 கோடியை ஒதுக்கினாலே, அனைத்து மக்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி போட முடியும். மாநில அரசுகளின் தலையில் சுமையை ஏற்றாமல், மத்திய அரசே 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இலவச தடுப்பூசி போட வேண்டும்.

கொரோனா தொற்றுக் காலத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்து ஜனநாயக செயல்பாடுகள் முடங்கிய நிலையில், மத்திய அரசுக்குத் தெளிவு ஏற்படுத்துகிற வகையில் உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருப்பதை வரவேற்கிறேன். நாட்டு மக்கள் மிகுந்த அச்சத்திலும், பீதியிலும் இருக்கும் போது சரியான வழிகாட்டுதலை மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உணர்த்தியிருக்கிறது. இதுகுறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு 50 சதவிகிதமும், மாநில அரசுகள் 50 சதவிகிதமும் கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியதைத் தவிர்த்து, மத்திய அரசே 100 சதவிகித தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்குச் சரிசமமாக விநியோகம் செய்யலாம் என்று கூறியிருப்பது, இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற தடுப்பூசி தட்டுப்பாடுகளுக்கு உரிய தீர்வாக அமையும்.

ஒரு தடுப்பூசிக்கு மூன்று விலைகள் நிர்ணயம் செய்வதைத் தவிர்த்திருக்க வேண்டும். அமெரிக்காவில் தடுப்பூசி ரூ.185 விலையில் விற்கும் போது, இந்தியாவில் ரூ.400, ரூ.600, ரூ.1,200 என்று விற்பது எந்த வகையில் நியாயம் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. அதேபோல, தடுப்பூசி விலையை நிர்ணயிக்கிற உரிமையை தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஏன் வழங்கியது என்றும் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. ‘இதற்கெல்லாம் என்னால் உடனடியாக பதிலளிக்க முடியாது, கால அவகாசம் தேவை’ என்று மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா கூறியிருக்கிறார். இதன்மூலம் இந்திய மக்களை அச்சுறுத்துகிற கொரோனாவை எதிர்கொள்வதில் மத்திய அரசு எத்தகைய தடுமாற்றத்துடன், தெளிவான அணுகுமுறை இல்லாமல் இருக்கிறது என்பதற்கு இதுவொரு சான்றாகும்.

கொரோனா என்பதைப் பேரிடராகக் கருதி, போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு செயல்பட்டு உரிய முடிவுகளை எடுத்திருக்க வேண்டும். ஏற்கனவே 4 மாதங்கள் விரயமாகி உள்ளன. தடுப்பூசி உற்பத்தியை இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதோடு, கூடுதலாகப் பல நிறுவனங்களுக்கு அந்த உரிமையை வழங்கியிருக்கலாம். அதன்மூலம் உற்பத்தியைப் பெருக்கியிருக்கலாம். இன்றைக்கு சீரம் நிறுவனம் மாதம் 6 கோடி தடுப்பூசிகளையும், பாரத் பயோடெக் நிறுவனம் 1 கோடி தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்கின்றன. ஜூலை முதல் உற்பத்தியைக் கூட்டுவதாக உறுதி செய்துள்ளது. இதற்கு மத்திய அரசு ரூ.4,500 கோடி நிதியுதவி வழங்கியிருக்கிறது. இந்நிலையில், நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மக்கள் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள்.

45 வயது மேற்பட்டவர்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி போடுவதென மத்திய அரசு அறிவித்தது. இதன்மூலம் 30 கோடி பேருக்குத் தடுப்பூசி போட 60 கோடி டோஸ்கள் தேவைப்படுகின்றன. இதில் 12 கோடி ஏற்கனவே போடப்பட்டுள்ளன. மேலும் ஏறக்குறை 50 கோடி டோஸ் தேவைப்படுகின்றன. இந்நிலையில், புதிய தடுப்பூசி கொள்கையின்படி 18 வயதிற்கு மேற்பட்ட 63 கோடி பேருக்குத் தடுப்பூசி போட வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளின் தலையில் சுமத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் இரண்டு டோஸ்கள் போட 120 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் உடனடியாக தேவைப்படுகின்றன.

மத்திய அரசு கொள்முதல் விலையான ரூ.150 விலையில் கூட, தயாரிப்பு நிறுவனங்களுக்குக் குறைந்தபட்ச லாபம் இருக்கிறது. தற்போது தடுப்பூசி கொள்கையின்படி மத்திய அரசுக்கு ரூ.7,500 கோடியும், மாநில அரசுகளுக்கு ரூ.34,400 கோடியும் செலவாகும். இதன்மூலம் மொத்தம் ரூ.42,000 கோடி தான் செலவாகும். ஏற்கனவே, 2020-21 பட்ஜெட்டில் ரூ.35,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் 18 வயது நிரம்பிய அனைத்து மக்களுக்கும் கடந்தகால அரசுகள் பொறுப்பை ஏற்றுக் கொண்டதைப் போல, இன்றைய மத்திய அரசு அனைத்து மக்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடுகிற பொறுப்பை ஏற்க வேண்டும். தனியார் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்து இதற்கான நிதியை ஏற்றுக் கொண்டு, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கி உடனடியாக தடுப்பூசி போட்டு கொரோனாவின் பிடியில் சிக்கி உயிருக்காகப் போராடுகிற மக்களைப் பாதுகாக்க வேண்டும். இந்த கோரிக்கையில் உள்ள நியாயத்தை பிரதமர் மோடி புரிந்து கொண்டு ஏற்கனவே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.35,000 கோடிக்குக் கூடுதலாக ரூ.7,000 கோடியை ஒதுக்கினாலே அனைத்து மக்களுக்கும் இலவசமாக மத்திய அரசு தடுப்பூசி போட முடியும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. பிரதமர் மோடி நினைத்தால், அனைத்து மக்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி போட முடியும். இதை செய்வதன் மூலம், இந்திய மக்களைக் காப்பாற்றுகிற பொறுப்பை பிரதமர் மோடி ஏற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

The post மத்திய அரசே! 18 வயது நிரம்பிய அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போடு! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் டெல்லியில் ஒரே நாளில் 45 பேர் பலி! பிரதமர் மோடி அவர்களே, மக்கள் உயிரை காப்பாற்ற தவறியது ஏன்? தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி
முக்கிய அம்சங்கள்:

ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக தலைநகர் டெல்லியில் கங்காராம் மருத்துவமனையில் 25 பேரும், ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர். பலமுறை மத்திய சுகாதாரத்துறையை வலியுறுத்தியும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் அழுத்தத்துக்குப் பிறகு, அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருப்பது காலம் கடந்த நடவடிக்கை.

காணொலிக் கூட்டத்தை நேரலையாக ஒளிபரப்பிய தில்லி முதலமைச்சரைக் கண்டித்ததில் காட்டிய வேகத்தை, ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாட்டைப் போக்குவதில் பிரதமர் மோடி காட்டவில்லை.

கொரோனா பிடியில் சிக்கியிருக்கும் மக்களைக் காப்பாற்ற, மத்திய, மாநில அரசுகள் பொறுப்புணர்வோடு இணைந்து செயல்பட வேண்டும்.

கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தடுப்பூசி போடுகிற முதன்மை பொறுப்பு மத்திய அரசுக்குத் தான் இருக்கிறது என்பதைத் தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பலமுறை வலியுறுத்தி வந்தன. இந்த அழுத்தத்தின் காரணமாக அனைத்து மக்களுக்கும் இலவசமாக மாநில அரசுகளின் மூலம் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது. இது காலம் தாழ்ந்த அறிவிப்பாகவே கருத வேண்டியிருக்கிறது.

அதேபோல, தலைநகர் டெல்லியில் கங்காராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மருத்துவமனையில் 510 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பலமுறை மத்திய சுகாதாரத்துறையை வலியுறுத்தியும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இந்த நிலையில் தான் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். அதேபோல, நேற்று இரவு தலைநகர் டெல்லியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு 20 பேர் பலியாகி இருக்கிற அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது.

தலைநகர் டெல்லியில் மத்திய பா.ஜ.க. ஆட்சியாளர்களின் நேரடி பார்வையில் இருக்கும்போதே இத்தகைய கொடூரமான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. தில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அவர்கள் பிரதமர் மோடியிடம் காணொலி கூட்டத்தில் ஆக்சிஜன் கேட்டுக் கெஞ்சிப் பேசியதைப் பார்க்கும் போது மிகுந்த வேதனையாக இருக்கிறது. அந்த கோரிக்கையைப் பரிவுடன் பரிசீலிக்காமல் காணொலி கூட்டத்தை ஒளிபரப்பியது குறித்து அவர்மீது கடும் கண்டனத்தைப் பிரதமர் மோடி வெளிப்படுத்துவதில் தான் கவனம் செலுத்தினார். ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறைக்குப் பரிகாரம் காண எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் கடந்த 24 மணி நேரத்தில் தலைநகர் தில்லியில் 45 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதற்கு மத்திய பா.ஜ.க. அரசுதான் பொறுப்பாகும்.

கொரோனா தொற்று ஏற்பட்டு 15 மாத காலத்தில் பா.ஜ.க. அரசின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் நடைமுறை சாத்தியம் இல்லாத வகையிலேயே எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவை எதிர்கொள்ளச் சுகாதார கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்த சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படவில்லை. இந்திய மக்கள் அனைவரும் அச்சத்திலும், பீதியிலும் இருந்து விடுபட உரிய மருத்துவச் சிகிச்சைகளை வழங்க மத்திய பா.ஜ.க. அரசு தோல்வியடைந்து விட்டது.

தடுப்பூசி தட்டுப்பாடு, ஒரே தடுப்பூசிக்கு மூன்று விலை, விற்பனையைத் தனியார் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடமே ஒப்படைத்தது, தடுப்பூசியை வாங்குவதற்குச் சந்தையில் ஆரோக்கியமற்ற போட்டி, ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கும்போது ஏற்றுமதி இவை எல்லாமே பா.ஜ.க. அரசு எடுத்த தவறான நடவடிக்கைகளின் விளைவாகும்.

எனவே, கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கியிருக்கும் மக்களைப் பாதுகாப்பதை தலையாய நோக்கமாகக் கொண்டு, பொறுப்புணர்வோடு இப்பிரச்சினையைக் கையாள மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

The post ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் டெல்லியில் ஒரே நாளில் 45 பேர் பலி! பிரதமர் மோடி அவர்களே, மக்கள் உயிரை காப்பாற்ற தவறியது ஏன்? தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து : உற்பத்தியை தொடங்க ரஷ்யா மும்முரம்
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கான மருந்து கண்டுபிடிப்பின் 3 வது கட்டத்தை இன்னும் 10 நாட்களில் தொடங்க இருப்பதாக, ரஷ்யா அறிவித்துள்ளது. இந்த மருந்துக்கு ஸ்புட்னிக்  வி என்று பெயரிட்டுள்ள ரஷ்யா, முதல்கட்ட உற்பத்தியை தொடங்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் மாகாணத்தில் பிள்ளையார் சுழி போட்ட கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ், இன்று உலகம் முழுவதையும் ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. 9 மாதங்களாகியும் எந்த நாடும் இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்பும் அதிகரித்துக்  கொண்டே போகிறது. இந்தியாவில் மட்டும் இந்த எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டிவிட்டது.

இதற்கிடையே, கொரோனா வைரஸை குணப்படுத்த பல நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. பல கட்டங்களாக பரிசோதித்து இந்த மருந்தை வெளியிட இன்னும் ஓராண்டு ஆகலாம் என அந்த நாடுகள் தெரிவித்துள்ளன. பொருளாதார ரீதியாக பல மாதங்கள் முடங்கிக்  கிடக்கும் அரசுகளுக்கும், தனிநபர்களுக்கும் இது  அதிர்ச்சியை அளித்துள்ளது. ஓராண்டு வரை தாக்குப்பிடிக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில்,கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யா முதல்முறையாக கண்டுபிடித்துள்ள இந்த மருந்துக்கு ‘ஸ்புட்னிக்  வி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 1957 ஆம் ஆண்டு மாஸ்கோவிலிருந்து விண்ணுக்கு அனுப்பப்பட்ட விண்கலமான ‘ஸ்புட்னிக்  வி’ யின் பெயர்தான் கொரோனா மருந்துக்கு வைக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கீழ் வரும், எய்ட்ஸ் நோய் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் கமேலயா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் தான் இந்த தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது..

இந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் அலெக்ஸாண்டர் கின்ட்ஸ்பெர்க் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஆராய்ச்சியின் பதிவுக்குப் பிந்தைய முதல் கட்ட முடிவை திங்கள்கிழமை (இன்று) வெளியிட உள்ளோம். முதல் கட்ட கண்டுபிடிப்புக்கு சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்தபின்,  இன்னும் 10 நாட்களில் 3 வது கட்ட பணிகள் தொடங்கும். இந்தப் பணியில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபடவுள்ளனர். மாஸ்கோவிலேயே இந்த ஆராய்ச்சி நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்  குறிப்பில், ஆராய்ச்சி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதால், கொரோனா வைரஸுக்கு எதிரான முதல் கட்ட மருந்தை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையை ரஷ்யா தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. அரசு அதிகாரிகளுடன் காணொலி வழியாக நடத்திய ஆலோசனைக்குப் பிறகு, கொரோனா வைரஸுக் கு எதிரான முதல் தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டுபிடித்துள்ளது குறித்த அறிவிப்பை கடந்த செவ்வாய்க்கிழமை அதிபர் விலாடிமீர் புதின் வெளியிட்டார்.

ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சர் மிக்கையல் முரஸ்கோ கூறும்போது, ” ரஷ்யாவில் இதுவரை 9 லட்சத்து 17 ஆயிரத்து 884 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 ஆயிரத்து 617 பேர் உயிரிழந்துள்ளனர்.  7 லட்சத்து 29 ஆயிரத்து 411 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில், முதலில் ரஷ்ய மக்களுக்கு இந்த தடுப்பு மருந்தை முழுமையாக பயன்படுத்திவிட்டு, அதன்பிறகு, மற்ற நாடுகளுக்கு ரஷ்யா அனுப்பும். ரஷ்யா கண்டுபிடித்துள்ள தடுப்பு மருந்து சக்தி வாய்ந்தது இல்லை என்று எழுப்பப்படும் சந்தேகங்கள் ஆதாரமற்றவை”  என்று குறிப்பிட்டார்.

The post கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து :  உற்பத்தியை தொடங்க ரஷ்யா மும்முரம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.