CBI Archives - தேசிய முரசு - Desiya Murasu

நீதித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை சுதந்திரமாகச் செயல்படாவிட்டால், ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் : மும்பை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
அமலாக்கத்துறையின் சம்மனை ரத்து செய்யக் கோரி, 2020 ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் காட்ஸே தொடர்ந்த வழக்கில் தான் மேற்கண்ட கருத்தை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்எஸ். ஷிண்டே மற்றும் மணிஷ் பிட்டாலே ஆகியோர் கொண்ட அமர்வு தெரிவித்துள்ளது.

” நீதித்துறை, ஆர்பிஐ, சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். இந்த அமைப்புகள் சுதந்திரமாகச் செயல்படாவிட்டால், ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும்…”

-மும்பை நீதிமன்றத்தில் முக்கியமான கருத்து மட்டுமல்ல…இது எச்சரிக்கையும் கூட. இந்த வழக்கில் நீதிபதிகள் இந்த அளவுக்கு வேதனையை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?

தொடர்ந்து படியுங்கள்…

அமலாக்கத்துறை நடவடிக்கைக்குத் தடை கோரி தொடரப்பட்ட இந்த வழக்கு நிலுவையில் உள்ளவரை, இடைக்காலத் தடை கேட்டார் காட்ஸே தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆபாத் பாண்டா.

ஜனவரி 25 ஆம் தேதி திங்கட்கிழமை வரை, காட்ஸே மீது நடவடிக்கை எடுக்கமாட்டோம் என்று உத்தரவாதம் அளித்தார், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங்.

இந்த வழக்கை உயர் நீதிமன்றம் வரும் திங்கட்கிழமைக்குத் தள்ளிவைத்த நீதிபதிகள், திங்கட்கிழமையையும் தாண்டி மனுதாரருக்குக் கால அவகாசம் ஏன் தரக்கூடாது என்று அவரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இன்னும் சில நாட்களுக்கு நடவடிக்கையைத் தள்ளிவைத்தால், ‘வானம் இடிந்து கீழே விழுந்துவிடவா போகிறது’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய போதெல்லாம், மனுதாரர் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்திருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ” விசாரணைக்கு ஒத்துழைத்த ஒருவரைக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதில் அளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அணில் சிங், ” காட்ஸேயின் மனுவை ஆரம்பக் கட்டத்திலேயே ஏன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோருவதற்கான காரணத்தை அடுத்த கட்ட விசாரணையின்போது விளக்குகிறேன்” என்றார்.

இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வரும் 25 ஆம் தேதி திங்கட்கிழமைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

The post நீதித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை சுதந்திரமாகச் செயல்படாவிட்டால், ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் : மும்பை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

ஜெயராஜ், பென்னிக்ஸ் இறப்புக்கு சாத்தான்குளம் காவல்துறையினரின் 7 மணி நேர சித்ரவதையே காரணம் : சிபிஐ
தூத்துக்குடியில் ஜெயராஜும் அவரது மகன் பென்னிக்ஸும் 7 மணி நேரம் சித்ரவதை செய்யப்பட்டு இறந்துள்ளது, பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜெயராஜும் அவரது மகன் பென்னிக்ஸும் மோசமாகத் தாக்கப்பட்டதில் அவர்கள் உடலிலிருந்து ரத்தம் தெறித்து சுவரில் படிந்துள்ளது. ஆடைகளில் படிந்த ரத்தத்தைச் சுத்தம் செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளனர். இரவு 7.45 மணியிலிருந்து அதிகாலை 3 மணி வரை தொடர்ந்து இருவரும் மோசமாகச் சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் படிந்திருந்த ரத்தக்கறையும், தந்தை, மகனது ரத்தமும் ஒன்று என டிஎன்ஏ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இருவரையும், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியது உறுதியாகியுள்ளது. டெல்லியில் உள்ள மத்திய தடயவியல் ஆய்வகத்தில் செய்யப்பட்ட சோதனையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தை ஜெயராஜும் அவரது மகன் பென்னிக்ஸும் இறப்பதற்கு, காவல் துறையினர் தொடர்ந்து சித்ரவதை செய்ததே காரணமாக இருந்துள்ளது.

இவ்வாறு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

The post ஜெயராஜ், பென்னிக்ஸ் இறப்புக்கு சாத்தான்குளம் காவல்துறையினரின் 7 மணி நேர  சித்ரவதையே காரணம் : சிபிஐ appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. நீதி வழங்கவில்லை. மேல்முறையீடு செய்ய வேண்டும்! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை!
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு 28 ஆண்டுகள் கழித்து லக்னோ சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனைத்து குற்றவாளிகளையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்திருக்கிறது. போதிய ஆதாரங்களோ, சதித் திட்டத்திற்கான தடயங்களோ இல்லாததால் அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி கூறியிருக்கிறார். இந்த தீர்ப்பு சட்டத்தின் ஆட்சி மீது நம்பிக்கை வைத்திருக்கிற அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.

பா.ஜ.க. உள்ளிட்ட சங் பரிவாரங்கள் கரசேவை செய்வதாக அறிவித்து, ஆயிரக்கணக்கானவர்களை திரட்டி, 464 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாபர் மசூதியை 1992 இல்   பலவந்தமாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. கரசேவகர்களை தூண்டும் வகையில் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, உத்தரபிரதேச அன்றைய முதல்வர் கல்யாண் சிங் உள்ளிட்டோர் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்களை மத்திய புலனாய்வுத்துறை திரட்டவில்லை. சதித் திட்டத்திற்கான சாட்சியங்களையும் சேகரிக்கவில்லை. இந்த வழக்கை நிரூபித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில்  மத்திய புலனாய்வுத்துறை முற்றிலும் தோல்வியடைந்திருக்கிறது. இதன்மூலம் மத்திய புலனாய்வுத்துறை  மத்திய பா.ஜ.க. அரசின் கைப்பாவையாக செயல்பட்டதோ என்கிற பலத்த சந்தேகம் எழுகிறது. இதன் காரணமாகவே பாபர் மசூதி இடிப்பில் சம்மந்தப்பட்ட பா.ஜ.க.வினர் அனைவரும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த ஏப்ரல் 2017 இல் பாபர் மசூதி இடிப்பு குறித்து உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட போது, ‘இது ஒரு கிரிமினல் நடவடிக்கை. இது அதிர்ச்சி தரத்தக்க வகையில் அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பற்ற கொள்கைக்கு கேடு விளைவிக்கிற செயல். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருப்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்த கூற்றுக்கு நேர்மாறாக லக்னோ சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளை விடுவித்திருக்கிறது.

சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனால், நீதி வழங்கவில்லை. எனவே, இந்த தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

The post சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. நீதி வழங்கவில்லை. மேல்முறையீடு செய்ய வேண்டும்! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ரூ. 150 கோடிகள் மதிப்புள்ள  லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலை,  வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு குறைந்த விலைக்கு விற்று அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய வழக்கில் கடந்த புதன்கிழமை தீர்ப்பளித்த சிபிஐ நீதிமன்றம், லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலை  அரசுக்கே திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.

இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலை விற்கும் முடிவை, கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி அப்போதை பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான கேபினட் குழு எடுத்தது. லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலுடன் சேர்த்து, இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மற்ற 2 சொத்துகளான குதாப் ஓட்டல் மற்றும் லோதி ஓட்டல் ஆகியவற்றையும் விற்க கேபினட் குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, குதாப் ஓட்டல் ரூ.36 கோடிகளுக்கும், லோதி ஓட்டல் ரூ.76 கோடிகளுக்கும் விற்பனை செய்யப்பட்டன.

கடந்த 1996 மற்றும் 2001 ஆண்டுக்கு இடையில் லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டல் பெரும் இழப்பை சந்தித்தது. இதனையடுத்தே, இந்த ஓட்டலை விற்க மத்திய அரசு முடிவு செய்தது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் விற்பனை கொள்கையின் அடிப்படையில், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஏராளமான ஓட்டல்கள் ஏலம் விடப்பட்டு, அவற்றை தனியார் துறையினர் வாங்கினர். லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலை விற்கும் முடிவை எடுத்தபோது, ஓட்டலை மதிப்பீடு செய்யவில்லை. வெளிப்படைத் தன்மை இல்லாமலும் இருந்தது.

இது குறித்த புகாரின்பேரில் சிபிஐ பதிந்த முதல் தகவல் அறிக்கையில், லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலின் விலை குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. அதன்பிறகு, பாரத் ஓட்டல் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ. 7.52 கோடிக்கு(தோராயமாக) விற்கப்பட்டுள்ளது. அரசின் மதிப்பீட்டின்படி, லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலின் மதிப்பு ரூ.150 கோடிகள் ஆகும். அப்போதை சந்தை விலை ரூ.280 கோடிகள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அப்போதைய கம்பெனி விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அருண் ஷோரி, கம்பெனி விவகாரங்கள் துறை செயலர் பிரதீப் பைஜால், லஜார்டு இந்தியா பிரைவேட் லிமிட்டெட் நிர்வாக இயக்குனர் ஆஷிஷ் குமார் குஹா, காண்டி கரம்சே அண்ட் கோ உரிமையாளர் காண்டிலால் கரம்ஸே விக்ரம்ஸே, பாரத் ஓட்டல்ஸ் இயக்குனர் ஜ்யோத்சனா சுரி மற்றும் பெயர் குறிப்பிடப்படாத அதிகாரிகள் மற்றம் தனி நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 120பி (கிரிமினல் கூட்டுச் சதி), 420 (மோசடி)மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் 13(1) ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி பூரன் குமார் சர்மா அளித்த தீர்ப்பின் முழு விவரம்:

ரூ.151 கோடி மதிப்புள்ள லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலை வெறும் ரூ. 7 கோடியே 52 லட்சத்துக்கு பாரத் ஒட்டல்ஸ் லிமிடெடுக்கு விற்கப்பட்டுள்ளது.  இந்த ஓட்டலை மத்திய அரசிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும்.  மேலும் லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலை விற்றதன் மூலம் ரூ. 252 கோடி அளவுக்கு மத்திய அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டிருப்பதை, கடைசி வரை கண்டுபிடிக்காத சிபிஐ புலனாய்வு அமைப்புக்கு கண்டனத்தை தெரிவிக்கின்றேன்.

பாரத் ஓட்டல்ஸ் லிமிடெட்டுக்கு லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலை அடிமாட்டு விலைக்கு விற்றதில் அதிகாரிகளின் பங்களிப்பும் உள்ளது. லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலை விற்கும்போது, இந்த ஓட்டல் அமைந்திருக்கும் பகுதியில் ஒரு சதுர மீட்டர் ரூ.1,000 என மாநில அரசின் நில மதிப்பு விலையிலிருந்து தெரிகிறது.

அதாவது, லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டல் மட்டும் ரூ.150 கோடி மதிப்பு என்று தெரிகிறது. இந்த ஓட்டலை மத்திய அரசு விற்க முடிவு செய்தபோது, இவற்றை எல்லாம் வேண்டுமென்றே கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. மத்திய அரசிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டபின், லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலை இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மீண்டும் நடத்தலாம்.

இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. இதனை ஏற்காத சிபிஐ நீதிமன்றம், மீண்டும் விசாரணை நடத்த கடந்த 2019 ஆகஸ்ட்டில் உத்தரவிட்டது. சாட்சியங்கள் கிடைக்காததால் விசாரணையை தொடர முடியவில்லை என மீண்டும் வழக்கை முடித்து வைக்கும் அறிக்கையை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது. இதனை நீதிமன்றம் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, பெருமைக்குரிய லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலை தன் கட்டுப்பாட்டுக்குள் உதய்பூர் மாவட்ட நிர்வாகம் கொண்டுவந்துள்ளது. நீதிமன்ற உத்தரவையடுத்து, இந்த நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் சேத்தன் தியோரோ மேற்கொண்டுள்ளார்.  ஓட்டலை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தனி அதிகாரியை நியமித்த மாவட்ட நிர்வாகம், இது குறித்த தகவலை மத்திய அரசுக்கும் தெரிவித்துவிட்டது.

The post ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

சுவாமி அக்னிவேஷ் மரணத்தை கொண்டாடிய சிபிஐ முன்னாள் இயக்குனர் நாகேஸ்வர ராவ்: எதிர்ப்பு குவிகிறது
சுவாமி அக்னிவேஷின் மரணத்தை கொண்டாடி ட்விட்டரில் பதிவிட்ட சிபிஐ புலனாய்வு அமைப்பின் முன்னாள் இயக்குனர் நாகேஸ்வர ராவுக்கு  நாடு முழுவதும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

ஆரிய சமாஜ கொள்கையை பின்பற்றி ஆரிய சபா என்ற கட்சியை சுவாமி அக்னிவேஷ் தொடங்கினார். கொத்தடிமைகளாக நடத்தப்படும் தொழிலாளர்களை மீட்டதன் மூலம் அவர் பிரபலமானார்.

கடந்த 1977 ஆம் ஆண்டு ஹரியானாவில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அடுத்த 2 ஆண்டுகளில் கல்வி அமைச்சரானார். கொத்தடிமை தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியடைந்த அக்னிவேஷ், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு சபரிமலை விவகாரத்தில் கேரள அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு கண்டனம் தெரிவித்த அவர். ”மோடியின் கருத்து அரசியல் சாசனத்தை மீறுவதாக உள்ளது” என்றார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா இளைஞர் அமைப்பினரால் அக்னிவேஸ் தாக்கப்பட்டார். அதன்பின்னர், 2011 ஆம் ஆண்டு, அமர்நாத் யாத்திரை குறித்து பொதுக்கூட்டம் ஒன்றில் விமர்சித்த அக்னிவேஷை, மதத்தலைவர் நித்யானந்த் தாஸ் தாக்கினார். அமர்நாத் யாத்திரையை பாசாங்குத்தனம் என்று அக்னிவேஷ் விமர்சித்ததை உச்ச நீதிமன்றமும் கண்டித்தது.

இந்நிலையில் தமது 80 ஆவது வயதில்,  கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சில தினங்களுக்கு முன் டெல்லி மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.

இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சிபிஐ புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குனர் நாகேஸ்வர ராவ், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தார்மீகத்தை மீறியுள்ளதாக பல தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அவரது ட்விட்டர் பதிவில், நீங்கள்  காவி உடை அணிந்த இந்து மதத்துக்கு எதிரானவர். இந்து மதத்துக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள். நீங்கள் புலித் தோல் போர்த்திய ஆடு. இவரை இவ்வளவு நாள் இந்த உலகில் ஏன் வாழ வைத்தாய் என எமராஜனிடம் கேட்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு இந்தியன் போலீஸ் பவுன்டேஷன் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அரசாங்கத்தை திருப்திப் படுத்துவதற்காக இதுபோன்ற வெறுக்கத்தக்க கருத்துகளை வெளியிடுவது ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அகாரிக்கு அழகல்ல. நீங்கள் நாடு முழுவதும் உள்ள காவல் படையை சீர்குலைப்பதோடு, குறிப்பாக இளம் அதிகாரிகளை தவறாக வழி நடத்த காரணமாகிவிட்டீர்கள் என்று ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தது.

இதன்பின்னரும்,  ”காட்டுமிராண்டி இறந்ததை, சமூகத்தை அழிக்கும் பூச்சி இறந்ததை ஏன் கொண்டாடுகிறோம் ” என்று நாகேஸ்வர ராவ் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டிருந்தார். நாகேஸ்வர ராவின் கருத்துக்கு அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா, நாகேஸ்வர ராவை முட்டாள்தனமான வெறுப்பாளர் என்று விமர்சித்துள்ளார்.  ஆர்எஸ்எஸ் வளர்ச்சியை ஆரிய சமாஜம் மூலம் தடுத்து நிறுத்தியவர் சுவாமி அக்னிவேஷ் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது மனிதர்களை அவமதிக்கும் செயல் என ஐபிஎஸ் அதிகாரி ஆர்கே விஜி கூறியுள்ளார்.

The post சுவாமி அக்னிவேஷ் மரணத்தை கொண்டாடிய சிபிஐ முன்னாள் இயக்குனர் நாகேஸ்வர ராவ்: எதிர்ப்பு குவிகிறது appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

நரேந்திர தபோல்கர் படுகொலை வழக்கு; முடிச்சுகளை அவிழ்க்காத சிபிஐ-க்கு விருது
மருத்துவரும் பகுத்தறிவாளருமான மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த நரேந்திர தபோல்கர் தீவிர இந்து அமைப்புகளால் சுட்டுக் கொல்லப்பட்டு 7 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. 5 புலனாய்வு அமைப்புகள் விசாரணை, பல்வேறு கைது நடவடிக்கை என ஆரம்பத்தில் குதிரை வேகமெடுத்த விசாரணை,  இப்போது ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இந்து ராஜ்யம் என்ற கோஷத்துடன் திரிந்த கும்பலுக்கு எதிராக பிரச்சாரம் செய்த நரேந்திர தபோல்கர், அவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்தார். இந்நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த தபோல்கரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடினர்.

இந்த படுகொலையை செய்தது, தீவிர இந்துமத அமைப்புகள் என குற்றம் சாட்டப்பட்டது. சில கைது நடவடிக்கைக்குப் பின்னர், இந்த வழக்கில் சிறு முன்னேற்றம் கூட இல்லை. தபோல்கரின் குடும்பத்தாரும் அவர்களது நண்பர்களும் நீதிக்காக காத்திருக்கிறார்கள்.

தபோல்கரின் மகன் ஹாமித் கூறும்போது, “சிபிஐ போன்ற பெரும் புலனாய்வு அமைப்புகூட, என் தந்தை கொலை வழக்கை முடிக்க முடியாதது வலியை ஏற்படுத்துகிறது” என்றார். தபோல்கரின் மகள் முக்தா கூறும்போது, “என் தந்தை படுகொலைக்குப் பிறகு  2015 ஆம் ஆண்டு நிகழ்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் கோவிந்த் பன்சாரே மற்றும் கன்னட அறிஞர் கல்புர்கி படுகொலை மற்றும் 2017 ஆம் ஆண்டு நிகழ்ந்த பெங்களூரு பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் போன்றோர் படுகொலைகள் எதற்காக நிகழ்ந்தது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. எங்கள் தந்தை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கிடைக்கும் போதுதான் நாங்கள் மகிழ்ச்சியும் அமைதியும் அடைவோம். ‘சனாதன் சன்ஸ்தா’ என்ற இந்து அமைப்பு தான் என் தந்தையின் படுகொலைக்கு பின்னணியில் இருந்ததாகக் கூறி, அந்த அமைப்பைச் சேர்ந்த சிலரை கைது செய்தனர். ஆனால், அதற்குப் பிறகு வழக்கு விசாரணை என்ன ஆனது என்றே தெரியவில்லை” என்றார்.

தபோல்கர் கொலை வழக்கை கடந்த 2014 ஆம் ஆண்டு   சிபிஐ-க்கு மாற்றி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, சிபிஐ-யும் மகாராஷ்ட்ரா அரசும் இணைந்து தபோல்கர் கொலையில் துப்புக்  கொடுத்தால் ரூபாய் 10 லட்சம் வெகுமதி தரப்படும் என்றும் அறிவித்தன. மகாராஷ்ட்ரா சிஐடி, ஏடிஎஸ் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளான என்ஐஏ, சிபிஐ உள்ளிட்ட 5 அமைப்புகள் விசாரித்துவிட்டன.

கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு எடுத்துக் கொண்டதும்,’சனாதன் சன்ஸ்தா’ என்ற இந்து தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய புள்ளியான மருத்துவர் வீரேந்திரசின் தாவ்டே உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். தபோல்கர் படுகொலையை நிகழ்த்த தாவ்டே மூளையாக செயல்பட்டதாக அப்போது சி.பி.ஐ கூறியது. அதேசமயம், கம்யூனிஸ்ட் தலைவர் கோவிந்த் பன்சாரே கொலை வழக்கிலும் தாவ்டேவை மும்பை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்து ராஜ்யம் என்ற கோஷத்துடன் தொடங்கப்பட்ட ‘சனாதன் சன்ஸ்தா’ என்ற அமைப்பின் மீது, 2008 ஆம் ஆண்டு மகாராஷ்ட்ரா மாநிலம் தானே, பன்வேல் குண்டுவெடிப்புகள், 2009 ஆண்டு கோவாவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தபோல்கர், கோவிந்த் பன்சாரே மற்றும் எம்.எம். கல்புர்கி ஆகியோர் படுகொலையில் ‘சனாதன் சன்ஸ்தா’ அமைப்புக்கு நேரடி தொடர்பு உள்ளதும் விசாரணையில் உறுதியாகியுள்ளது. எனினும், தபோல்கர் படுகொலை வழக்கு விசாரணையில் ,எந்த முன்னேற்றமும் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் கூறும்போது, ”இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கையும் சி.பி,ஐ. விசாரணைக்கு எடுத்துள்ளது. இதுவும் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கைப் போல் தான் தீர்வு காணப்படாமல் முடியும்” என்று கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இந்நிலையில், தபோல்கர் கொலை வழக்கில் சிறப்பாக செயல்படுவதாகக் கூறி, கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கி கவுரவித்தது மத்திய உள்துறை அமைச்சகம் என்பதையும் இந்த நேரத்தில் நினைவுகூர்வது அவசியம்.

The post நரேந்திர தபோல்கர் படுகொலை வழக்கு; முடிச்சுகளை அவிழ்க்காத சிபிஐ-க்கு விருது appeared first on தேசிய முரசு - Desiya Murasu.