BJP Govt. Archives - தேசிய முரசு - Desiya Murasu

அ.தி.மு.க. ஆட்சியை அகற்றுவதன் மூலமே சிறு, குறு, நடுத்தர தொழில்களை பேரழிவிலிருந்து பாதுகாக்க முடியும்!தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை
மத்திய பா.ஜ.க. அரசு மற்றும் மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.க. அரசு ஆகியவற்றின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக சிறு, குறு, நடுத்தர தொழில்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி, கடும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. குறிப்பாக, கொரோனா தொற்று காலத்திலும், அதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளாலும் கடுமையான பாதிப்பை இத்துறை எதிர்கொண்டு வருகிறது. இதுகுறித்து மத்திய – மாநில ஆட்சியாளர்கள் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

தமிழகத்தில் 23 லட்சத்து 60 ஆயிரம் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் ரூ. 2 லட்சத்து 73 ஆயிரத்து 241 கோடி அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 1 கோடியே 51 லட்சத்து 61 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்தின் போது, இந்த நிறுவனங்களின் இயந்திரங்கள் தண்ணீரில் மூழ்கி பழுதாகின. இதனால் தொழில்முனைவோருக்குப் பேரிழப்பு ஏற்பட்டதோடு அரசிடமிருந்த நிதியுதவியும் வரவில்லை.

1980 முதல் 1990 வரை தமிழகத்தில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செழித்தோங்கின. ஆனால், இன்றைக்கு நிலைமை அப்படியே தலைகீழாகிவிட்டது. இந்த நிறுவனங்களை மத்திய மோடி அரசோடு சேர்ந்து கொண்டு தமிழக எடப்பாடி பழனிசாமி அரசு முற்றிலும் கைவிட்டுவிட்டது. குறிப்பாக, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதியை அந்த நிறுவனங்களுக்கு செய்து தர அதிமுக அரசு தவறிவிட்டது. ஒரு சில ஐடி நிறுவனங்களுக்கு ஓடிச்சென்று அடிப்படை வசதி செய்து தரும் தமிழக அரசு, தங்களை முற்றிலும் புறக்கணித்துவிட்டதாக அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் மனம் வெதும்புகின்றனர்.

கடந்த 6 மாதங்களில் மூலப்பொருட்களின் விலை பெருமளவு உயர்ந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்தவோ அல்லது வரையறுக்கவோ அதிமுக அரசு தவறிவிட்டது. மின் மிகை மாநிலம் என்று முதலமைச்சரிலிருந்து அமைச்சர்கள் வரை பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால், அறிவிக்கப்படாத மின் தடையும். சீரற்ற மின்சாரமும் வினியோகிக்கப்படுவதால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நீர் வெளியேற்றும் கட்டமைப்போ, நீர் சுத்திகரிப்பு கட்டமைப்போ இல்லாததால், மழைக்காலங்களில் ஏற்படும் பேரிழப்பை எடப்பாடி பழனிசாமி அரசு இதுவரை கண்டுகொள்ளவில்லை. சென்னை மட்டுமின்றி திருச்சி, மதுரை, கோவையில் உள்ள அனைத்து குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் இதே நிலைதான். இன்றைக்கு ஆட்கள் பற்றாக்குறையும் இந்த நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. அது குறித்து எல்லாம் தமிழக ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவே இல்லை. அடிப்படை கட்டமைப்பு, முதலீடு மற்றும் மின்சாரத்துக்காக இன்றைக்கும் தமிழக அரசையே இந்த நிறுவனங்கள் நம்பியுள்ளன. திட்ட ஒப்புதல்கள் மற்றும் நில மாற்றுச் செய்முறைகளை எளிமைப்படுத்தினால் மட்டுமே, இந்த நிறுவனங்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும்.

அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் முன்கூட்டியே தொகையை அளித்தால், இந்த நிறுவனங்களின் செயல்பாட்டுக்குக் கூடுதல் பலமாக இருக்கும். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஆர்டருக்கு ஒரு மாதம் அல்லது 45 நாட்களுக்குள் பணம் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதனை அதிமுக ஆட்சியாளர்கள் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. மத்திய அரசின் திட்டங்கள் இவர்களைச் சென்றடையவில்லை. இதில் முன்னே இருந்து செயல்பட வேண்டி தமிழக அரசு மெத்தனப் போக்குடன் செயல்பட்டது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதைத் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். ஆனால், அதிமுகவோ, பாஜகவோ தங்கள் தேர்தல் அறிக்கைகளில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை முற்றிலும் புறக்கணித்துள்ளதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், தங்கள் பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்படும் என்ற நம்பிக்கை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இப்போது ஏற்பட்டிருப்பதைக் காண முடிகிறது. அந்த அளவுக்கு அவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திமுக – காங்கிரஸ் கூட்டணி திகழ்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. வரும் மே மாதம் 6 ஆம் தேதிக்குப் பிறகு, நிலைமை மாறும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய பா.ஜ.க. அரசின் ஆட்சி முறையை அப்படியே ஏற்றுக் கொண்டு பின்பற்றி வருகிற அ.தி.மு.க. அரசால் சிறு, குறு, நடுத்தர தொழிலகள் பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இந்த பேரழிவிலிருந்து சிறு, குறு, நடுத்தர தொழில்களை பாதுகாக்க தெளிவான தொழில் கொள்கையை கடைப்பிடிக்கிற ஒரு ஆட்சி தமிழகத்தில் ஏற்பட வேண்டும். அத்தகைய ஆட்சி மாற்றத்தை தமிழக வாக்காளர்கள் வருகிற சட்டமன்றத் தேர்தலில் ஏற்படுத்துவதன் மூலமே தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில்களை பாதுகாக்க முடியும்.

The post அ.தி.மு.க. ஆட்சியை அகற்றுவதன் மூலமே சிறு, குறு, நடுத்தர தொழில்களை பேரழிவிலிருந்து பாதுகாக்க முடியும்!தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

தலைநகர் டெல்லியில் விவசாயிகள் மீது பா.ஜ.க. அரசின் காவல்துறை காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்! தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம்!
தலைநகர் தில்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று மாபெரும் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தனர். விவசாயிகள் நடத்த இருந்த டிராக்டர் பேரணியை முடக்குவதற்கும், சீர்குலைப்பதற்கும் காவல்துறையினர் சதித் திட்டம் தீட்டி விவசாயிகள் மீது அடக்குமுறையை ஏவிவிட்டனர். காவல்துறையினரின் அனுமதியுடன் அமைதியாக சென்ற பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் பேரணியை கலைக்க முற்பட்டனர். இதனால் கடும் வன்முறை வெடித்துள்ளது.

தங்களது கோரிக்கைகளை முன்வைத்து டிராக்டர் பேரணி நடத்தி போராடுகிற விவசாயிகள் மீது வரலாறு காணாத வகையில் காவல்துறையினர் கடுமையாக தாக்கியதில் 46 வயது நிரம்பிய நவ்ஜித் என்ற விவசாயி உயிரிழக்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. தலைநகரில் போராடுகிற விவசாயிகள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலுக்கு பா.ஜ.க. ஆட்சியாளர்கள்தான் பொறுப்பாகும்.

தலைநகர் தில்லியில் போராடுகிற விவசாயிகள் மீது விழுந்த அடி, இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளின் மீதும் விழுந்த அடியாகும். காவல்துறையினர் நடத்திய தாக்குதல், பா.ஜ.க. ஆட்சியாளர்களின் காட்டுமிராண்டித்தனமான போக்கையே காட்டுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக போராடுகிற விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பரிவுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் காவல்துறையினரை ஏவிவிட்டு நடத்தப்பட்ட அராஜக தாக்குதலை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். கடந்த இரண்டு மாதங்களாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் காந்திய வழியில் அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா  முழுப் பொறுப்பேற்க வேண்டுமென கேட்டுக் கேட்டுக் கொள்கிறேன்.

The post தலைநகர் டெல்லியில் விவசாயிகள் மீது பா.ஜ.க. அரசின் காவல்துறை காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்! தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம்! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

மத்திய பா.ஜ.க. அரசின் விவசாய விரோதப் போக்கு – வாழ்வாதாரம் பறிப்பு!
விவசாயிகளின் முதுகெலும்பை முறிக்கும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் கொதித்தெழுந்துள்ளனர். இந்தியாவின் மொத்த வேலை வாய்ப்பில் 53 சதவிகிதம் – 243 மில்லியன் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கக் கூடிய துறையாக விவசாயம் விளங்குகிறது. ஆனால், 1950- 51 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண் துறையின் பங்களிப்பு 54 சதவிகிதமாக இருந்தது. தற்போது 20 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

ஆனால், உணவு தானியங்களின் உற்பத்தி ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. 1960&களில் தொடங்கிய பசுமைப் புரட்சித் திட்டத்தின் காரணமாக உணவு தானியங்களின் உற்பத்தி பெருகி வருவதை காண முடிகிறது. 1950-51 இல் உணவு தானியங்களின் உற்பத்தி 51 மில்லியன் டன்னாக இருந்தது 2019-20 இல்  291.95 மில்லியன் டன்னாக உயர்ந்திருக்கிறது. அதேநேரத்தில், சாகுபடியின் பரப்பளவு உயர்ந்திருக்கிறது. ஆனால், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நியாயமான உரிய விலை கிடைக்காத நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.

விவசாயிகள் உற்பத்தி செய்கிற பொருட்களின் விலையை விவசாயிகளே நிர்ணயம் செய்ய முடியாது. அதேநேரத்தில், ஒரு தொழிற்சாலையில் உற்பத்தி செய்கிற பொருளை அவர்களே விலை நிர்ணயம் செய்ய முடிகிறது. ஆனால், அந்த வாய்ப்பு விவசாயிகளுக்கு மறுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான், விவசாயிகள் உற்பத்தி செய்கிற விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க விவசாயிகள் கடுமையான போராட்ட வழிமுறைகளை கையாண்டு வந்தனர். இதன் விளைவாக மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை ஏற்று விவசாயிகளுக்கு கட்டுப்படியாகக் கூடிய நியாயமான விலையை வழங்க வேண்டுமென்று அனைத்து எதிர்கட்சிகளும், விவசாய சங்க அமைப்புகளும் கோரிக்கை வைத்தன. இந்நிலையில், 2014 மக்களவை தேர்தலுக்கு பிறகு, ஆட்சியில் அமர்ந்த பா.ஜ.க. அரசு இக்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் கோரின.

ஆனால், 2014 தேர்தல் தேர்தல் அறிக்கையிலும், பிரச்சாரத்திலும் நரேந்திர மோடி குறிப்பிட்டபடி, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றும் வகையில் விவசாயிகளின் உற்பத்தி செலவோடு 50 சதவிகிதம் கூடுதலாக கிடைக்கும் வகையில் திட்டம் வகுக்கப்படும் என்று குறிப்பிட்டதை அனைத்து எதிர்கட்சிகளும் எடுத்துரைத்தன. ஆனால், அதை நிறைவேற்றுவதற்கு மோடி அரசு தயாராக இல்லாமல் பல்வேறு சால்ஜாப்புகளைக் கூறி காலம் தாழ்த்தி வந்தது. இறுதியாக, எதிர்கட்சிகளின் நிர்ப்பந்தம் காரணமாக எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றுவதாக 2019 தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், அக்குழுவின் பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகள் பெறுவதற்கு எவ்விதமான கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தவில்லை. இதனால், குறைந்தபட்ச ஆதரவு விலையை விட, சந்தை விலை குறைவாக இருந்த நிலையில் விவசாயிகள் தங்களுடைய விளைப் பொருட்களை நஷ்டத்தில் விற்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.

இந்நிலை காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, கடன் சுமை நாளுக்கு நாள் அதிகரித்து, தற்கொலை சாவுகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன. இதற்கு மோடி ஆட்சியின் தவறான விவசாயக் கொள்கை தான் காரணம். இதன் காரணமாக தேர்தல் நேரத்தில் மோடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகளின் கடனை ரத்து செய்வதால் எந்த பயனும் ஏற்படாது என பிரதமர் மோடி கூறியது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் இருப்பதாக விவசாயிகள் கருதுகிறார்கள். விவசாயிகள் பெற்ற கடனில் ரூ.2 லட்சத்திற்கும் மேலான கடனை தவிர்த்து விட்டால், மொத்த கடன் சுமை நிலுவையில் உள்ளது, ரூ.1.90 லட்சம் கோடி தான். இதனை தள்ளுபடி செய்வதற்கு மத்திய பா.ஜ.க. அரசு தயாராக இல்லை. ஆனால், தமது 15 பணக்கார நண்பர்கள் வங்கியில் பெற்ற கடனில் ரூ.3.50 லட்சம் கோடியை மோடி தள்ளுபடி செய்து சலுகை காட்டியிருக்கிறார். விவசாயிகளுக்கு இதைவிட  பெரிய துரோகத்தை வேறு எவரும் செய்ய முடியாது.

ஏற்கனவே, பா.ஜ.க. ஆட்சியில் ஆகஸ்ட்  2014 இல் அமைக்கப்பட்ட சாந்தகுமார் தலைமையிலான குழு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவதை நிறுத்த வேண்டுமென்றும், உணவு தானிய கொள்முதல் மற்றும் சேமிப்பிற்கு தனியார் துறையை ஊக்கப்படுத்த வேண்டுமெனவும் ஜனவரி 2015 இல் பரிந்துரை செய்தது.

இந்நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற வகையில் கடந்த ஜூன் 5 ஆம் நாள் மூன்று அவசர சட்டங்களை மத்திய பா.ஜ.க. அரசு பிறப்பித்தது.

அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் (திருத்தம்) 1955

வேளாண் விளை பொருட்கள் வியாபாரம் மற்றும் வர்த்தகம்

விவசாயிகள் (அதிகாரப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு, விலை உறுதி, வேளாண்மை சேவைகள் சட்டம்)

இச்சட்டங்கள் மூன்றும் ஏன் நிறைவேற்றப்பட்டன ? எதற்காக நிறைவேற்றப்பட்டன ? யாருடைய நலனைக் காப்பாற்ற நிறைவேற்றப்பட்டன என்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த மூன்று அவசரச் சட்டங்களும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை, பிரிக்க முடியாதவை. இவை ஒட்டு மொத்தமாகவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் முடக்கி விடக் கூடியதாகும்.

அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955 (திருத்தம்) என்பது தானியங்கள், பயிறு வகைகள், பருப்பு, எண்ணெய் வித்துக்கள், உணவாகப் பயன்படும் எண்ணெய் வகைகள், உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்டவற்றை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலிலிருந்து நீக்க  வகை செய்யும். இந்தப் பொருட்களின் விலை நிலவரத்தை சீராக வைத்துக் கொள்வதற்காகவும், பதுக்கலை ஒழிப்பதற்காகவுமே இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இத்திருத்தத்தின் மூலம் இவை அனைத்தும் செயலற்றதாக ஆக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இருந்த இன்றியமையாத பொருட்களின் கீழ் வெங்காயம், பருப்பு போன்றவை செயற்கையாக விலை உயர்வதை தடுக்க மத்திய அரசு அவற்றை சேமித்து வைக்கவும், சில கட்டுப்பாடுகளை விதிக்கவும் வாய்ப்பு இருந்தது. தற்போது, அத்தகைய வாய்ப்புகள் நீக்கப்பட்டுள்ளன.

‘ஒரே நாடு, ஒரே வேளாண் சந்தை’ என்பதை நிலைநாட்டி தனியார் பங்களிப்பை இச்சட்டம் ஊக்குவிக்கிறது. இதன்மூலம் விவசாயிகளுக்கு உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை பறிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவாதத்தை மூன்று அவசரச் சட்டங்களும் புறக்கணித்துள்ளன. இது விவசாயிகளுக்கு மோடி அரசு இழைத்த மிகப்பெரிய அநீதியாகும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வோம். 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக கூட்டுவோம் என தேர்தலில் வாக்குறுதி கொடுத்த நரேந்திர மோடி ஆட்சியில் கடந்த ஆறு ஆண்டுகளாக விவசாயிகள் அனுபவிக்கிற துன்பங்களுக்கு அளவே இல்லை.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் விவசாயம் முழுக்க முழுக்க மாநிலப் பட்டியலில் உள்ளதாகும். விவசாயம் குறித்த மாநில பட்டியலில் உள்ள அம்சங்கள் மீது சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. இந்த அவசரச் சட்டமானது கூட்டாட்சித் தத்துவத்தை குழிதோண்டிப் புதைக்கிற செயலாகும். அரசமைப்புச் சட்டத்தில் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு தனி அதிகாரங்கள் வழங்கப்பட்டதோடு, இரண்டிற்கும் பொதுவாக பொதுப் பட்டியல் மூலமும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அரசும் தமக்கென வகுக்கப்பட்ட பட்டியல்களில் குறிப்பிடப்பட்ட பொருட்கள் குறித்து சட்டம் இயற்ற வேண்டும். ஓர் அரசு இன்னொரு அரசிற்குரிய பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் குறித்து சட்டம் இயற்றுதல் கூடாது. மத்திய அரசோ, மாநில அரசுகளோ தமது வரம்புகளைத் தாண்டி தமக்கென குறிக்கப்பட்ட பொருள் அல்லாததில் சட்டம் இயற்றுவது வரம்பு மீறிய சட்ட விரோதச் செயலாகும்.

கடந்த ஜூன் மாதம் பிறப்பித்த அவசரச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற பா.ஜ.க. அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டது. இதற்கான மசோதா செப்டம்பர் மாதத்தில் மக்களவையில் பா.ஜ.க.வின் மிருகபல மெஜாரிட்டியின் மூலம் நிறைவேற்றி விட்டது. ஆனால், மாநிலங்களவையில் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில்,  மசோதா மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்ற எதிர்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து, சட்டவிரோதமாக பெரும் அமளிகளுக்கிடையே குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேறியதாக மாநிலங்களவையில் அறிவித்தது. இதன்மூலம் பாராளுமன்ற ஜனநாயகத்தை பா.ஜ.க. அரசு படுகுழிக்குள் தள்ளியது. குடியரசுத் தலைவரும் இந்தச் சட்டங்களுக்கான ஒப்புதலை வழங்கிய பிறகு, மூன்று வேளாண் சட்டங்களும் இந்திய விவசாயிகள் மீது திணிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கி வருவதை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்பது தான் பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களின் நோக்கம்.

இன்றைக்கு விவசாயிகளின் விளை பொருட்கள் சந்தைக்கு வெளியே விற்பதற்கான வாய்ப்பு இச்சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பிறகு குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகள் கனவில் கூட காண முடியாது.

விவசாயிகளுக்கு விரோதமான அவசரச் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா மாநிலங்களிலும் கடுமையான போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகிறார்கள். இதையொட்டி காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த டிராக்டர் ஊர்வலத்தில் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக களம் இறங்கியிருக்கிறார். ஏற்கனவே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்தபடி, நாடு முழுவதும் பலகட்ட போராட்டங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்று வருகின்றன. பா.ஜ.க. அரசின் விவசாய விரோதச் சட்டங்கள் குறித்து விரிவான விளக்கத்தை வழங்குவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் தலைமையில் கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு தினேஷ் குண்டுராவ் அவர்கள் பங்கேற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற்றது.

தமிழகத்திலும் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளின் சார்பாக கடந்த செப்டம்பர்  28 -ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதேபோல, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்களின் அறிவிப்பின்படி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் விவசாயச் சட்டங்களை எதிர்த்து அக்டோபர்  6 முதல் 31 வரை கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது. இவை அனைத்தும் சேகரிக்கப்பட்டு நவம்பர் 14 ஆம் தேதி குடியரசுத் தலைவரிடம் வழங்கப்படும்.

விவசாய விரோதச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் கொழுந்து விட்டு எரியும் போராட்டங்களுக்கு இணையாக தமிழ்நாடும் போர்க்கோலம் பூணும் வகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்களின் செயல் திட்டத்தின் அடிப்படையில் போராட்டக் களம் வலிமை பெற்று  வருகிறது.

திருவண்ணாமலையில் அக்டோபர்  11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை  10 மணிக்கு விவசாயிகள் கண்டன மாநாடு தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நடைபெறுகிறது. இதில் தமிழகத்திலிருந்து பெருந்திரளானவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டின் மூலம் மோடி அரசு  ஒரு விவசாய விரோத அரசு என்பதை உறுதி செய்கிற வகையில் பஞ்சாப், அரியானா மாநிலங்களுக்கு இணையாக தமிழகமும் போர்க்கோலம் பூண்டிருப்பது உறுதி செய்யப்படுகிறது.

The post மத்திய பா.ஜ.க. அரசின் விவசாய விரோதப் போக்கு – வாழ்வாதாரம் பறிப்பு! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

ரோம் தீப்பிடித்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக மோடி அரசு: காங். செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா
ரோம் நகர் தீப்பற்றி எரிந்த போது, நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக, கொரோனாவில் இந்தியா சிக்கித் தவிக்கும்போது மயில்களுக்கு உணவு அளித்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி என, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த மார்ச் 24 ஆம் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட பொது முடக்க அறிவிப்பின் போது, மகாபாரத போர் 18 நாட்கள் நடந்தது. கொரோனாவுக்கு எதிரான போரில் 21 நாட்களில் வெற்றி பெறுவோம் என குறிப்பிட்டார். 166 நாட்களுக்குப் பிறகு, ஒட்டுமொத்த நாடும் கொரோனாவுக்கு எதிராக மகாபாரத போரை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கொரோனாவால் மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கும் நிலையில், மயில்களுக்கு உணவு கொடுப்பது போல புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி.

கொரோனாவுடன் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், நடவடிக்கைதான் காணாமல் போய்விட்டது. கொரோனாவை தோற்கடிக்கும் போராட்டத்தில், செயலிழந்து விட்டதையும், முற்றிலும் திறமையற்ற அரசு என்பதையும் மோடி அரசு நிரூபித்துள்ளது. மிக மோசமான தொற்றுப் பரவலுக்கு மத்தியில், மக்களைக் காக்கவும், அவர்களை தற்காத்துக் கொள்ள அனுமதிக்கவும் பாஜக அரசு தவறிவிட்டது.

உலக அளவில் கொரோனாவின் தலைநகரமாக இந்தியா தற்போது மாறியுள்ளது.  உலகிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 90 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அமெரிக்கா மற்றும் பிரேசிலில் இதில் பாதி எண்ணிக்கையில் கூட யாரும் பாதிக்கப்படவில்லை. மற்ற நாடுகளில் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்படவில்லை.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவியதற்கான 6 உண்மைகளை ஆராய்வோம்:

1. தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் – உலகிலேயே இந்தியா முதலிடம்(90,802)

2. தினசரி கொரோனா உயிரிழப்புகள் – உலகிலேயே இந்தியா முதலிடம் (தினமும் 1,016 பேர் உயிரிழப்பு)

3. கொரோனா பாதிப்பு இரட்டிப்பு-உலகிலேயே இந்தியா முதலிடம் (29 நாட்கள்)

4. மொத்த கொரோனா பாதிப்புகள்-உலகிலேயே இந்தியா இரண்டாவது இடம் (42 லட்சத்து 4 ஆயிரத்து 614 பேர் பாதிப்பு)

5. மொத்தமாக கொரோனாவால் தீவிர பாதிப்பு – உலகிலேயே இந்தியா இரண்டாவது இடம் – (8 லட்சத்து 82 ஆயிரத்து 542)

6. மொத்த கொரோனா உயிரிழப்பு – உலகிலேயே இந்தியா 3 ஆவது  இடம் (71 ஆயிரத்து 642 பேர்)

கொரோனா பாதிப்பில் அப்பட்டமான உண்மை:

0 முதல் 1 லட்சம் கொரோனா பாதிப்பு = 110 நாட்களில்.

1 முதல் 10 லட்சம் கொரோனா பாதிப்பு = 59 நாட்களில்.

10 முதல் 20 லட்சம் கொரோனா பாதிப்பு = 21 நாட்களில்.

20 முதல் 30 லட்சம் கொரோனா பாதிப்புகள் = 16 நாட்களில்.

30 முதல் 40 லட்சம் கொரோனா பாதிப்பு = 13 நாட்களில்

29 நாட்களில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகியுள்ளது – 20 லட்சத்திலிருந்து 40 லட்சம் ஆக உயர்வு.

கொரோனா பரவல் குறித்து நிபுணர்களின் அபாய எச்சரிக்கை:

கொரோனா பரவல் தொடர்ந்து அதே வேகத்தில் அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நவம்பர் 30 ஆம் தேதிக்குள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியை தாண்டும்.

டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியே 40 லட்சத்தை எட்டும்.

உயிரிழப்புகள் 1 லட்சத்து 75 ஆயிரத்தை எட்டும் என்று அஞ்சப்படுகிறது.

கொரோனா தடுப்புகளில் மொத்த இயலாமை மற்றும் மோசமான தோல்வி:

கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதியிலிருந்தே, காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தி அவர்களும் கொரோனா பாதிப்பு குறித்து அரசை எச்சரித்து வந்துள்ளனர். ஆனால், மோடி அரசு இதனை கேலி செய்ததோடு, கண்டுகொள்ளாமலும் விட்டுவிட்டது.

கொரோனா கால வரிசையில் 8 அம்சங்களை ஆராய்வோம்:

2020 பிப்ரவரி 12 =  கவலைப்படும் அளவுக்கு நம் நாட்டில் கொரோனா பாதிப்பு இல்லை என்று மோடி அரசு கூறியது. ராகுல் காந்தியின் எச்சரிக்கையை அரசு ஒட்டுமொத்தமாக புறக்கணித்தது.

2020 பிப்ரவரி 24 = 1 லட்சம் பேரை திரட்டி அகமதாபாத்தில் ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

2020 பிப்ரவரி 2 முதல் 5 ஆம் தேதி வரை = ராகுல் காந்தி தொடர்ந்து எச்சரித்ததை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நிராகரித்தார். கொரோனா குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.

2020 மார்ச் 24 = தேசிய அளவில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டபோது, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

2020 ஏப்ரல் 25 = நிதி ஆயோக் உறுப்பினர் மற்றும் அரசின் கொரோனா நிர்வாகக் குழுவின் தலைவர் டாக்டர் வி.கே. பவுல் அளித்த அறிக்கையில், 2020 மே 15 ஆம் தேதியில் புதிதாக கொரோனா பாதிப்புகள் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

2020 மே 4 = கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இனி அதிகரிக்காது என்றும்  சுகாதாரத்துறை செய்தி தொடர்பாளரும் இணைச் செயலாளருமான லாவ் அகர்வால் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

2020 ஜுன் 27 = நாட்டு மக்கள் மத்திய உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா பரவல் குறித்த எச்சரிக்கையில் உண்மை இல்லை என்றும், மற்ற நாடுகளை விட இந்தியா நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

2020 செப்டம்பர் 6 = கொரோனா பாதிப்பில் உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்தது இந்தியா. தினமும் கொரோனா பாதிப்பு ஏற்படுவதிலும், கொரோனா உயிரிழப்பிலும் உலக அளவில் இந்தியா முதலிடத்தைப் பிடித்தது.

பொது முடக்கம் அறிவித்து தோல்வி கண்ட மோடி தலைமையும் துக்ளக் ராஜ்யமும்:

திட்டமிடாமலும், ஆலோசிக்காமலும் 3 மணி நேரத்துக்கு முன்பு பிரதமர் அறிவித்த பொது முடக்கத்தால், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வியே ஏற்பட்டுள்ளது. அதோடு, நாட்டின் பொருளாதாரமும் அழிந்துபோனது. மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் இதுபோன்று துக்ளக் ஆட்சி நடத்தியது யாருமில்லை என்ற அளவுக்கு, மோடி தலைமை தோல்வியடைந்துள்ளது.

பொதுமுடக்கத்தாலும், துக்ளக் ராஜ்யத்தாலும் ஏற்பட்ட ஒரு டஜன் பாதிப்புகள்

திடீர் பொது முடக்கத்தால் கோடிக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பசியோடும், குடிக்க தண்ணீர் இன்றி தாகத்தோடும் சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்றனர். நடந்து சென்றவர்களில் 150 க்கும் மேற்பட்டவர்கள், விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழந்தனர்.

எந்த மாநிலத்திடமும், முதலமைச்சரிடமும் ஆலோசிக்காமல் பொது முடக்கத்தை அமல்படுத்தியதன் மூலம், கூட்டாட்சிக்கு கொள்ளி வைத்துள்ளார் மோடி.

நிபுணர்களும், காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து எச்சரித்தும், கொரோனா பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை அளித்து கட்டுப்படுத்த மோடி அரசு தவறிவிட்டது. பரிசோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டிய நேரத்தில், அது குறித்து கண்டுகொள்ளாமல் கிரிமினல் தனத்தோடு செயல்பட்டனர். பொது முடக்கம் இருந்தும், கொரோனா தொடர்புகளை  தேடவும் தவறிவிட்டனர்.

வெற்றிகரமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட போதும், உலகிலேயே இந்தியா மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய நாடாக உள்ளது. பொது முடக்க தளர்வுகளுக்குப் பிறகு, நோய் தொற்றும், உயிரிழப்புகளும் அதிகரித்தன.

தொலைக்காட்சி விவாதங்கள், கை தட்டுவது, விளக்கு ஏற்றுவது போன்றவற்றில் தான் மோடி அரசு கவனம் செலுத்தியது. ஆனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதிலும், பொருளாதாரத்தை காப்பதிலும் மோடி அரசு எடுத்துள்ள நடவடிக்கை வெறும் பூஜ்யம்தான்.

கொரோனாவுக்கு எதிராக மாநில அரசுகள் இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றன. ஜிஎஸ்டி இழப்பீட்டை மத்திய அரசு வழங்காத நிலையிலும், கொரோனா தடுப்புக்கு உதவாத நிலையிலும், மாநில அரசுகள் தனியாக நின்று போராடுகின்றன.

முதல்முறை பொது முடக்கம் அறிவித்த போதும், அதன்பின்  3 முறை பொது முடக்கத்தை நீட்டித்தபோதும், மாநில அரசுகளுடன் மோடி அரசு கலந்தாலோசிக்கவில்லை. அதன்பிறகு 4 முறை தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும், தொற்றைக் கட்டுப்படுத்தவோ, உயிரிழப்புகளைத் தடுக்கவோ, வேலை இழப்பு அல்லது மூழ்கிக் கொண்டிருக்கும் பொருளாதாரத்தை காப்பாற்றவோ, அரசிடம் எந்த கொள்கையும் இல்லை.

பொருளாதாரத்தை இழந்தும், வியாபாரத்தை இழந்தும், தவணைகளை கட்ட முடியாமலும், வேலை இழந்தும், வாழ்வாதாரத்தை இழந்தும் தவிக்கும் மக்களை கேலி செய்யும் வகையில், இது ‘கடவுளின் செயல்’ என்று மோடி அரசு சொல்கிறது.

மோடி அரசின் அலட்சியப் போக்கால் சிறு நகரங்கள், கிராமங்கள் வரை கொரோனா தொற்று பரவிவிட்டது. எனினும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 65 சதவிகிதம் பேர் கிராமங்களில் வசிக்கின்றனர். ஆனால், மொத்தமாக 35 சதவிகித படுக்கைகளும் 20 சதவிகித மருத்துவர்களும் மட்டுமே உள்ளனர். இந்த நேரத்தில் தொற்று பரவல் அதிகமானால் பெரும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

இந்தியாவில் இரண்டாவது கொரோனா தொற்று பரவல் தொடங்கிவிட்டதாக பெரும்பாலான நிபுணர்கள் கணித்துள்ளனர். சமூகப்  பரவல் தொடங்கிவிட்டதாக சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதைப் பற்றி எல்லாம் தெரிந்து கொள்ளாமலோ அல்லது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமலோ மோடி அரசு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

நாட்டுக்கு பிரதமர் மோடி அவசியம் பதில் அளிக்க வேண்டும்:

தமது தலைமை தோல்வியடைந்துவிட்டதற்கு மோடி பதில் அளிப்பாரா? கொரோனா தொற்றை எப்படி கட்டுப்படுத்தப் போகிறீர்கள்? வேகமாக பரவுவதை எப்படி தடுத்து நிறுத்தப் போகிறீர்கள்? கோடிக்கணக்கான மக்களுக்கு பரவுவதை அரசு எவ்வாறு தடுக்கப் போகிறது? கொரோனாவினால் ஏற்படும் உயிரிழப்புகளை எப்படி தடுக்கப் போகிறீர்கள்? மூழ்கிக் கொண்டிருக்கும் பொருளாதாரத்தை எப்படி கரை சேர்க்கப் போகிறீர்கள்?

இவற்றுக்கெல்லாம் மோடி அரசிடம் தீர்வு உள்ளதா? அல்லது கடவுள் மீது குற்றம் சாட்டப் போகிறீர்களா?

The post ரோம் தீப்பிடித்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக மோடி அரசு: காங். செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

தனி நபர் வருமான இழப்பு, பணவீக்கம், 40 கோடி இந்தியர்கள் வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர்! இதுதான் பா.ஜ.க.வின் சாதனையா?: ரன்தீப் சிங் சுர்ஜேவாலா
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, காணொலி காட்சி வாயிலாக நடத்திய  செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:

கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதாரம் அழிக்கப்பட்டுள்ளது. சாதாரண மனிதனின் வாழ்க்கை நிலைகுலைந்து போயிருக்கிறது. பொருளாதார சீரழிவு நிலையை நோக்கி இந்தியாவை பிரதமர் மோடி நகர்த்திக் கொண்டிருக்கிறார். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, பொதுமுடக்கம் ஆகியவை பெரிய அடி மட்டுமல்ல, பேரழிவு தாக்குதலும் கூட.

பொருளாதார இருள் நம்மை சூழ்ந்துள்ளது. வாழ்க்கை நிலை மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன. வியாபாரம், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பாழாகிவிட்டன. பொருளாதாரத்தை ஜி.டி.பி அழித்துவிட்டது. கடந்த 6 ஆண்டுகளாக ஏமாற்று வேலைகளை செய்துவிட்டு நிதி அவசர நெருக்கடி நிலைக்கு நாட்டை தள்ளிவிட்டு, தற்போது கடவுளின் செயல் என்கிறார்கள். கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தாங்கள் செய்த மோசடிகளை மறைக்க கடவுள் மீது பழியைப் போடுகிறார்கள்.

ஜி.டி.பி.யால் ஏற்பட்ட பாதிப்பு:

2021 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜி.டி.பி எனப்படும் உள்நாட்டு மொத்த உற்பத்தி குறையக்கூடும் என்பதால் ( சுதந்திரத்துக்குப் பிறகு முதல்முறையாக) ஒவ்வொரு இந்தியரின் சராசரி வருமானத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த 2019-20 ஆம் நிதியாண்டில் தனிநபர் வருமானம் ரூ. 1 லட்சத்து 35 ஆயிரத்து 50 ஆக இருந்தது. 2020-21 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில்  மொத்த உள்நாட்டு உற்பத்தி 24 சதவிகிதம் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது காலாண்டும் மிக மோசமாக இருக்கும். 2020-21 ஆம் ஆண்டு முழுவதும் ஜி.டி.பி. 11 சதவிகிதமாக குறைந்தால், ஒவ்வொரு இந்தியரின் வருமானத்தில் ரூ. 14 ஆயிரத்து 900 வரை இழப்பை ஏற்படுத்தும். ஒரு பக்கம் பணவீக்கம் சாதாரண மனிதனை பெரும் பாதிப்படையச் செய்துள்ளது. மற்றொரு பக்கம் வரிகளும் பொருளாதார வீழ்ச்சியும் சுமையை தாங்க முடியாமல் மக்களின் முதுகெலும்பை ஒடிக்கின்றன.

நம்பிக்கையான பற்றாக்குறை அல்லது அரசு மீதான நம்பிக்கை இழப்பு:

மோடி அரசின் நம்பிக்கை பற்றாக்குறையால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை கேட்டுப் பாருங்கள். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதைப் போல், வங்கிக் கடனோ அல்லது மற்ற நிதியுதவியோ கிடைக்கவில்லை என்று சொல்வார்கள். வங்கிகளுக்கு அரசின் மீது நம்பிக்கை இல்லை. அரசுக்கோ ரிசர்வ் வங்கி மீது நம்பிக்கை இல்லை. மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லை. மத்திய அரசின் ரூ. 20 லட்சம் கோடி தொகுப்பு நிதியுதவித் திட்டம் பொய் என உறுதியாகியுள்ளது. இது நம்பிக்கையின் பற்றாக்குறை மட்டுமல்ல. ஒட்டுமொத்த நம்பிக்கை தகர்ந்துபோனதையும் காட்டுகிறது.

பொருளாதார அழிவின் சுனாமி:

உண்மையை எதிர்கொள்ள மறுத்து, பொய்யை  விளம்பரப்படுத்திக் கொள்வதை  அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது. பொருளாதார சீரழிவால்  40 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டுள்ளார்கள். பொருளாதாரம் தேய்ந்து போனதால், வருங்கால வைப்பு நிதியிலிருந்து 80 லட்சம் மக்கள் தங்கள் பணமான ரூ. 30 ஆயிரம் கோடியை எடுத்துவிட்டனர். 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜுலை மாதம் வரை மாதச் சம்பளம் பெறும் 2 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். பொதுமுடக்கம் காரணமாக, அமைப்புச்சாரா துறையில் 10 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். நாட்டில் உள்ள 6 கோடியே 30 லட்சம் குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில், நான்கில் ஒரு பங்கு நிறுவனங்கள் மட்டுமே, 50 சதவிகிதம் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இதில், பெரும்பாலான நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன. கட்டுமானத் துறையில் 2020-21 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஜி.டி.பி. மைனஸ் 50.3 சதவிகிதமும், வர்த்தகம், ஓட்டல், போக்குவரத்து துறைகளில் மைனஸ் 26 சதவிகிதமும் குறைந்துள்ளது. உற்பத்தித் துறையில் ஜி.டி.பி. மைனஸ் 39.3 சதவிகிதமும், சேவைத்துறைகளில் மைனஸ் 26 சதவிகிதமும் குறைந்துள்ளது. பல கோடி பேர் வேலை இழந்துள்ளனர் என்பதே இதற்கு அர்த்தம். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் அறிக்கையின்படி, 2020 செப்டம்பரில் ஜி.டி.பி மைனஸ் 10.9 சதவிகிதமாக குறையும் என தெரிவித்துள்ளது.

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவை:

மாநில அரசுகளுக்கான ஜி.எஸ்.டியை குறைத்தது கூட்டாட்சி தத்துவத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். மாநில அரசுகளுக்கு தர வேண்டி ஜி.எஸ்.டி பங்கை, தரும் நிலையில் மத்திய அரசு இல்லை என, நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு மத்திய நிதித்துறை செயலாளர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  மாநிலங்களுக்கு ரூ. 3 லட்சம் கோடி வரை ஜி.எஸ்.டி. வருவாய் இழப்பு ஏற்படும் என்று ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. தங்கள் செலவினங்களை மாநில அரசுகள் எப்படி சந்திக்கும்? இது பொருளாதார அராஜகம் அல்லவா?

விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கம் மீது தாக்குதல்:

மாதச் சம்பளம் பெறுவோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு, வங்கித் தவணைகளை கட்டுவதற்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குப் பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்படாது என, உச்ச நீதிமன்றத்தில் மோடி அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அவர்களுக்கு வட்டியை தள்ளுபடி செய்யவும் மோடி அரசு மறுத்துவிட்டது. நடுத்தர வர்க்கத்தினர் நம்பிக்கையை இழந்துவிட்டனர். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பொருளாதாரச் சூழலால் தற்கொலை செய்து கொள்வதின் பின்னணியில் மத்திய அரசு உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டும், 42 ஆயிரத்து 480 விவசாயிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக என்சிஆர்பி அறிக்கை தெரிவிக்கிறது. அதாவது, தினமும் 116 விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். வேலை இழப்பும் தற்கொலைக்கு தூண்டியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டும் வேலை இழப்பால் 14 ஆயிரத்து 19 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது, தினசரி 38 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்தியாவின் பொருளாதாரத்தை அழிக்க வேண்டும் என்ற அதிகார போதை தலைக்கேறி ஆணவத்துடன் செயல்படும் ஓர் அரசு, விவசாயிகளின் உழைப்பு மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்பை கவனிக்கத் தவறிவிட்டது.

மயில்களுக்கு உணவு அளிப்பது, புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது,  உடைகளை அணிவது, தொலைக்காட்சியை ஆக்கிரமித்துக் கொள்வது மட்டுமே பிரதமரின் பணியாக இருக்கிறது.

அழிவுப்பாதையில் நாட்டை அழைத்துச் செல்லும் மோடி அரசிடம் இருந்தும் நாட்டை மீட்டு, இந்தியாவின் விருப்பங்கள் மற்றும் எதிர்பார்ப்பை செயல்படுத்தும் நேரம் வந்துவிட்டது.

The post தனி நபர் வருமான இழப்பு, பணவீக்கம், 40 கோடி இந்தியர்கள் வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர்! இதுதான் பா.ஜ.க.வின் சாதனையா?: ரன்தீப் சிங் சுர்ஜேவாலா appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

முடங்கிப்போன பொருளாதாரத்தை மீட்க என்ன வழி? புதிய வேலை வழங்க பா.ஜ.க. அரசிடம் என்ன திட்டம் உள்ளது?: பேராசிரியர் கவுரவ் வல்லப் கேள்வி
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் பேராசிரியர் கவுரவ் வல்லப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஒவ்வொரு ஆண்டும் பல கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற, அதே பழைய புராணத்தை பாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நடந்தபாடில்லை. காலாண்டில் ஜி.டி.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9 சதவிகிதமாக சுருங்கியதையடுத்து, இந்திய பொருளாதாரம் இருண்டு காணப்படுகிறது. ஜி.டி.பியில் அமைப்பு சார்ந்த துறைகள் உட்படுத்தப்படவில்லை என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். அமைப்பு சார்ந்த துறையையும் இணைத்தால், எண்ணிக்கை பயமுறுத்தும். முடங்கிப் போன இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க பின்வரும் 3 வழிகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்குமாறு, அரசுக்கு கோரிக்கை வைத்தோம்.:

குடும்பம் மற்றும் தனியார் செலவு மற்றும் தேவையை அதிகரிக்க வேண்டும். இந்த இரண்டின் வழியாகத்தான் கிட்டத்தட்ட 76 சதவிகித முதலீடு நடக்கிறது.

தொழிற்துறையை ஊக்குவிக்க அடிப்படை செலவினங்களை அதிகரித்தால், தொழிற்துறை நடவடிக்கைகள் வேகமாக நடைபெறுவதுடன் வேலை வாய்ப்புகளும் உருவாகும்.

கிராமம் மற்றும் நகர்ப் புறங்களில் நிலையான வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.

நாட்டில் 42 கோடியே 80 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். வேலை இன்றி 3 கோடியே 60 லட்சம் பேர் உள்ளனர். இந்த நேரத்தில் வேலைவாய்ப்பை அதிகரிப்பது அரசின் முதன்மை நடவடிக்கையாக இருக்க வேண்டும். இந்திய பொருளாதாரத்தில், கிராமப் பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கிராமப் புறங்களிலும் வேலை இழப்பு அதிகரித்துள்ளது. பிரச்சினை இரண்டு விதமாக உள்ளது. நகர்ப்புறம் மற்றும் கிராமப் புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கும் திறனற்ற அரசாக மோடி அரசு உள்ளது. அடுத்ததாக, காலிப் பணியிடங்களை நிரப்புவதில் அரசு காட்டும் அக்கறையின்மை மிகவும் வினோதமாக உள்ளது.

21 துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிக்கையை ரயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதோடு தேர்வு விதிமுறைகள் குறித்தும் வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

காலியாக உள்ள 2 லட்சத்து 14 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப 2 கோடியே 88 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த விண்ணப்பங்கள் மூலம் தேர்வு கட்டணமாக ரூ. 1,025 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த கணக்கு, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல்தான். அரசின் இயலாமையால் ஏற்படும் சுமையை இளைஞர்களின் தோள்களில் ஏற்றக்கூடாது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்போர் வசதிபடைத்த குடும்ப பின்னணியில் இருந்து வருவதில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 2 லட்சத்து 15 ஆயிரம் பணியிடங்களை நிரப்பாததால், 2 லட்சத்து 15 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அரசிடம் நான் கேட்கும் 3 முக்கிய கேள்விகள்:

காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பெரும்பாலான அறிவிக்கை, தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்பு வெளியிடப்படுவது ஏன்? உண்மையிலேயே பணியிடங்கள் காலியாக உள்ளனவா? இல்லை, ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 ஆயிரம் போடுவோம் என்று சொன்னது போன்ற, வெறும் அரசியல் வித்தையா?

பொருளாதாரத்தின் தேவை அதிகரிக்கும் போது, லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்கி அதனை பொருளாதாரத்துடன் இணைத்திருக்க வேண்டும் என்பதில் உங்கள் கவனம் இருந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் இத்தகைய நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை?. எதுவும் செய்யாமல் இருந்தது, தவறான நோக்கம் கொண்டதா? அல்லது தவறான செயல்பாடா?

இந்திய ரயில்வேயில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான காலம் நீண்டுகொண்டு இருக்கும்போது, மற்ற துறைகளில் பணியிடங்கள் நிரப்ப எவ்வளவு காலம் ஆகும்? காலிப் பணியிடங்களை நிரப்புவதில் காலம் தாழ்த்த மாட்டோம் என மத்திய அரசு உறுதி தருமா?

The post முடங்கிப்போன பொருளாதாரத்தை மீட்க என்ன வழி? புதிய வேலை வழங்க பா.ஜ.க. அரசிடம் என்ன திட்டம் உள்ளது?: பேராசிரியர் கவுரவ் வல்லப் கேள்வி appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

மத்திய பா.ஜ.க. அரசே! எல்.ஐ.சி.யின் பங்குகளை தனியாருக்கு விற்காதே! பண்டித நேரு வளர்த்த பொதுத்துறையை சீர்குலைக்காதே!கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம்!
சுதந்திர இந்தியாவில் 1956 ஆம் ஆண்டு இந்தியாவில் இயங்கி வந்த அனைத்து ஆயுள் காப்பீட்டுத் தொழிலும் பிரதமர் நேரு எடுத்த பெருமுயற்சியால் நாட்டுடமை ஆக்கப்பட்டது. அந்நிய கம்பெனிகளின் வணிகம் இதில் அடக்கம். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் நாள் ஆயுள் காப்பீட்டுக் கழகம் செயல்பட தொடங்கியது. மக்களுக்கு பாதுகாப்பு எண்ணமும், சேமிப்பு பழக்கமும் வளர இந்த துறை பெரும் உதவியாக இருந்தது. மக்களின் சேமிப்பு பணம் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்பட்டது. குறிப்பாக கிராமப்புற மக்களுக்கும், மத்திய தர வர்க்கத்தினருக்கும் பயன்படும் பல சேமிப்பு திட்டங்களை ஆயுள் காப்பீட்டுத் துறை சிறப்பாக செய்து வருகிறது. ஐந்தாண்டு திட்டங்களை வெற்றிகரமாக செய்வதற்கு காப்பீட்டுத் துறை கணிசமான அளவுக்கு நிதியுதவி செய்திருக்கிறது. மத்திய அரசின் நிதி பற்றாக்குறையை சமாளிக்க தற்காலிக கடன் கொடுத்து இந்த நிறுவனம் உதவியிருக்கிறது. தேசிய காப்பீட்டுக் கழகத்தை நாட்டுடமை ஆக்கியதன் பலனை கடந்த 65 ஆண்டுகளாக நமது நாடு அனுபவித்து வருகிறது.

இந்நிலையில், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதில் மத்திய பா.ஜ.க. அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல, எல்.ஐ.சி பங்கு விற்பனையை அரசு முன் மொழிந்துள்ள சூழலில் எல்.ஐ.சி தொடங்கிய நாள் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. அரசின் முடிவு, தேச பொருளாதாரத்திற்கோ, இன்சூரன்ஸ் துறையின் எதிர்காலத்திற்கோ நல்லதல்ல.

200 ஆண்டு கால இன்சூரன்ஸ் துறை வரலாற்றை திரும்பிப் பார்க்கும் போது இந்த 64 ஆண்டுகள் மட்டுமே அது தேசம் – மக்கள் நலன் என்ற நோக்கோடு செயல்பட்டு வந்துள்ளது. விடுதலை இந்தியாவிலும் சில ஆண்டுகள் அன்னிய, தனியார் நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருந்தன.

அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு, நிதியமைச்சர் சிந்தாமணி தேஷ்முக் ஆகியோர் எல்.ஐ.சியின் இலக்குகளை அறிவித்தனர். அவற்றில் முக்கியமான மூன்று. காப்பீட்டு பாதுகாப்பு மூலை முடுக்குக்கெல்லாம் எடுத்துச் செல்லப்பட வேண்டும்,இன்சூரன்ஸ் துறையின் மிக முக்கியமான நோக்கமான நுகர்வோருக்கான வாக்குறுதியை தவறாது நிறைவேற்றுவது, மக்கள் சேமிப்பு மக்கள் நலனுக்கே என தேச நிர்மாணப் பணிகளுக்கு பயன்படுத்துவது ஆகியவை ஆகும்.

64 ஆண்டு பயணம் முடிவடையும் தருவாய் இது. எந்த இலக்குகளுக்காக எல்.ஐ.சி உருவாக்கப்பட்டதோ அதை இக் காலத்தில் சிறப்பாக ஈடேற்றியுள்ளது. இருந்தாலும் 1999 ல் இருந்து மீண்டும் அன்னியர், தனியார் நிறுவனங்கள் இன்சூரன்ஸ் துறையில் அனுமதிக்கப்பட்டன. இப்போது களத்தில் 24 தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உள்ளன. ஆனாலும் எல்.ஐ.சியின் செயல்பாடுகள் எந்த வகையிலும் தனியார் நிறுவனங்களுக்கு மேம்பட்டதாகவே உள்ளன. இதோ அதன் செயல்பாட்டிற்கான ஆதாரங்கள்.

எல்.ஐ.சி 42 கோடி பாலிசிகளைக் கொண்டிருக்கிற உலகத்தின் தனிப் பெரும் நிறுவனமாக உள்ளது. இந்தியா தவிர்த்து சீனா மக்கள் தொகை மட்டுமே இந்த பாலிசிகளின் எண்ணிக்கையை விட அதிகம்.

1956 ல் அரசின் ரூ.5 கோடி முதலீட்டோடு துவங்கப்பட்ட எல்.ஐ.சிக்கு அதன் பின் கூடுதல் முதலீடே தேவைப்படவில்லை. 2011 ல் சட்ட நியதிகளுக்காக ரூ.100 கோடிகளாக உயர்த்தப்பட்டது. ஆனால் இந்த ரூ.100 கோடி முதலீட்டிற்கு அரசுக்கு கடந்த ஆண்டு கிடைத்துள்ள டிவிடெண்ட் மட்டுமே ரூ.2600 கோடிகள். வரிகளாக சுமார் ரூ.10,000 கோடிகள். ஒவ்வோர் ஐந்தாண்டுத் திட்டத்திற்கும் பல லட்சம் கோடி ரூபாய்கள். நடப்பு 13 வது திட்ட காலத்தின் முதலாண்டில் மட்டும் ரூபாய் 7 லட்சம் கோடிகளுக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சியின் சொத்து மதிப்பு ரூ.32 லட்சம் கோடிகள் ஆகும். ரயில்வே, நெடுஞ்சாலை, குடிநீர், மின்சாரம் போன்ற ஆதாரத் தொழில்களுக்காக பல்லாயிரம் கோடிகளை எல்.ஐ.சி நிதியாதாரங்களாக வழங்கி வருகிறது.

வழக்கமாக 25 ஆண்டுகளாக அரசு நிறுவனங்களின் தனியார் மயத்திற்கு முன் வைக்கப்பட்டு வரும் நட்டம், திறமையின்மை, நுகர்வோர் தெரிவு, வணிகப் பரவல் ஆகிய நான்கு காரணங்களுமே பொருந்தாது. ஆகவே பங்குச் சந்தையின் சில்லரை முதலீட்டாளர்களின் நலன், பங்குச் சந்தையின் செபி போன்ற அமைப்புகளின் கண்காணிப்பால் வெளிப்படைத் தன்மை போன்ற காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன.

ஆனால், இவையும் உண்மையான காரணங்கள் இல்லை. சில்லரை முதலீட்டாளர்கள் கைகளில் உள்ள பங்குகள் விரைவில் நிறுவன முதலீட்டாளர்கள் கைகளுக்கு போய் விடும் என்பதே ஏற்கெனவே பங்கு விற்பனைக்கு ஆளான அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் அனுபவம். ‘செபி’ கண்காணிப்பை மீறி அடுத்தடுத்து எவ்வளவு மோசடிகள் பங்குச் சந்தையில் நடந்திருக்கிறது என்பதற்கும் நிறைய அனுபவங்கள் உள்ளன.

எனவே, மத்திய பா.ஜ.க. அரசு இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் முதுகெலும்பாக விளங்குகிற ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பங்குகளை விற்பனை செய்கிற முடிவை உடனடியாக கைவிட வேண்டும். இந்த முடிவு மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கி, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் மீது இருக்கிற நம்பகத்தன்மையை சீர்குலைத்து விடும். மக்கள் சேவையில் மகத்தான பணி செய்து வரும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை காப்பாற்றுவதற்கு அனைவரும் அணிதிரண்டு குரல் கொடுக்க வேண்டும். மத்திய அரசின் முயற்சியை முறியடித்து ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை காப்பாற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

The post மத்திய பா.ஜ.க. அரசே! எல்.ஐ.சி.யின் பங்குகளை தனியாருக்கு விற்காதே! பண்டித நேரு வளர்த்த பொதுத்துறையை சீர்குலைக்காதே!கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம்! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்யும் பா.ஜ.க.அரசு! கொரோனா காலத்தில் 18 கோடி குடும்பங்களை பாதிக்கும் மோடி அரசின் கொடூர நடவடிக்கை!
சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்கிற முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டிருக்கிறதே ?

மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் மானியமாக 26.12 கோடி வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 4 மாதமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ஒரே விலை என்ற அடிப்படையில் முடிவு செய்திருக்கிறது. நடப்பு மாதத்தில் 14.2 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை ரூ.594 ஆக உள்ளது. இந்த விலையானது மானிய சிலிண்டர், மானியம் இல்லாத சிலிண்டர் ஆகிய இரண்டிற்குமான ஒரே விலையாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மானிய சிலிண்டர் வாடிக்கையாளர்களின் கணக்கில் மானியத் தொகை செலுத்தப்படுவது இல்லை. விலையை ஒன்றாக வைத்ததன் மூலம்  வங்கிக் கணக்கில் மானியம் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டிருக்கிறத

மத்திய அரசின் மானிய ரத்து முடிவால் 26.12 கோடி வாடிக்கையாளர்களில் 18 கோடி பேருக்கு மானியம் இனிமேல் கிடைக்காது. குறைந்த ஆண்டு வருமானம் பெறக் கூடிய 8 கோடி வாடிக்கையாளர்களுக்கு மட்டும் மானியம் வழங்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனால் மத்திய அரசுக்கு மானியத்திற்கு என ஒதுக்கப்பட்டதில் ரூபாய் 20 ஆயிரம் கோடி வரை மிச்சமாகும் எனக் கூறப்படுகிறது. இத்தகைய போக்கு காரணமாக 18 கோடி சமையல் எரிவாயு மானியம் பெறுகிற குடும்பங்கள் குறிப்பாக, பெண்கள் பாதிக்கப்படுகிற சூழல் ஏற்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிக்க வேண்டிய நிலையில் மத்திய அரசின் இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள வேண்டிய அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படுவதை எதிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் போராட வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஆந்திர மாநில அரசு ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையிலான தொடக்கக் கல்வியை தெலுங்கு மொழி வழியில் இருந்து ஆங்கில மொழி வழி கல்விமுறைக்கு மாற்றியதை எதிர்த்து பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறதே ?

ஆந்திர மாநில அரசின் இந்த முடிவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் ஆந்திர உயர் நீதிமன்றம் அரசாணைக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து ஆந்திர அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில், ‘பிள்ளைகள் ஆங்கில வழி கல்வி முறையை பயில்வதிலும், அதன்மூலம் சிறப்பான வாய்ப்புகள் பெறுவதையுமே பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புகிறார்கள். அதனால் தான் ஆந்திர அரசு இந்த முற்போக்கான கொள்கை முடிவை எடுத்திருக்கிறது’ என கூறப்பட்டிருந்தது.

பொதுவாக, தாய்மொழி வழிக் கல்வி தான் மிகச் சிறந்தது என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை. தமிழகத்தில் ஒரு காலத்தில் தமிழ் மொழி வழிக் கல்வி தான் ஒன்றாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரை இருந்தது. ஆனால், கல்லூரி புதுமுக வகுப்பில் ஆங்கில வழி கல்விமுறை புகுத்தப்பட்டது. அதேபோல, இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளும் ஆங்கில வழி கல்வி மூலமாகவே போதிக்கப்பட்டது. ஏறத்தாழ 11 ஆண்டுகாலம் தமிழ் வழியில் படித்து விட்டு, திடீரென கல்லூரி படிப்பை தொடங்கும் போது ஆங்கில வழிக் கல்வி புகுத்தியதன் விளைவாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலம் எண்ணிலடங்காதவை. அவர்களுடைய எதிர்காலம் என்பது ஆங்கில மொழியின் அடிப்படையில் தான் இருக்கிறது. அந்த வகையில் தமிழ் வழிக் கல்வி பயின்றவர்கள் ஆங்கில மொழி கல்வியில் சிறப்பாக பயில முடியாத காரணத்தினால் அடைந்த பாதிப்புகளுக்கு அளவே இல்லை. அதனால் தான் தமிழகத்தில் தமிழ் வழி பாடத் திட்டத்தில் சேர்த்திட பெற்றோர் விரும்புவதில்லை.

பெரும்பாலான மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மாணவர்களை பெற்றோர்கள் சேர்ப்பதற்கு காரணமே ஆங்கில மொழி வழிக் கல்வி படித்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும், எதிர்காலம் பிரகாசமாக அமையும் என்று கருதுகிறார்கள். இத்தகைய எதார்த்த நிலையை புதிய கல்விக் கொள்கையை தயாரித்தவர்கள் புரிந்து கொண்டார்களா என்பதை பார்க்கிற போது  மிகுந்த ஏமாற்றமே மிஞ்சுகிறது. எனவே, எதார்த்தத்திற்கும், வாழ்க்கை நடைமுறைக்கும் தொடர்பில்லாமல் கல்வி முறை இருப்பது குறித்து ஆட்சியாளர்களும், கல்வியாளர்களும் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

பா.ஜ.க. எம்.எல்.ஏ., டி. ராஜாசிங்கிற்கு முகநூல் நிறுவனம் தடை விதித்திருக்கிறதே ?

இந்தியாவில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் முகநூல் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவுகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அந்நிறுவனம் மேற்கொள்ளவில்லை என்று வால் ஸ்டிரீட் ஜர்னல் நாளிதழில் வெளியான கட்டுரையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதை தேசிய முரசு டாட் காம் தமிழாக்கம் செய்து வெளியிட்டது. அக்கட்டுரையில் ராஜாசிங் பற்றிய குறிப்பும் இருந்தது. அந்த அடிப்படையில் இதுகுறித்து காங்கிரஸ் கட்சி முகநூல் நிறுவனத்திடம் புகார் கூறியது. அது தொடர்பாக நிறுவனத்தின் கொள்கைகளை மீறியதற்காக ராஜா சிங்கிற்கு முகநூல் நிறுவனம் தடை விதித்திருக்கிறது. அதேபோல, அபாயகரமானவர்கள் பட்டியலில் ராஜாசிங் பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதைவிட ஒரு அவமானம் பா.ஜ.க.விற்கு இருக்க முடியாது.

தெலங்கானா மாநில சட்டமன்ற உறுப்பினரான டி. ராஜாசிங் தமது முகநூல் பதிவில், ‘முஸ்லீம்கள் அனைவரும் துரோகிகள். ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் இந்தியாவிற்குள் நுழைந்தால் சுட்டுத் தள்ள வேண்டும்’ என்று கூறி, மத நல்லிணக்கத்திற்கு கேடு விளைக்கிற வகையில் கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.
அந்த வகையில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜாவும் முகநூலில் பொது அமைதிக்கு கேடு விளைவிக்கிற வகையில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அவரது பதிவுகளுக்கு முகநூல் நிறுவனம் தடை விதிக்க வேண்டும். அத்தகைய கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் தமிழகத்தின் அமைதி சீர்குலைந்து விடும் என்பதை முதலமைச்சர் எடப்பாடி சிந்திக்க வேண்டும்.

சசிகலா சிறையில் இருந்து இம்மாத இறுதியில் வெளியே வர வாய்ப்பு என அனைத்து நாளேடுகளிலும் பிரதானமாக செய்தி வெளிவந்துள்ளதே ?

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அன்று முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டவர்களுக்கு 4 ஆண்டு தண்டனையும், ரூபாய் 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. தண்டனை அளிக்கப்பட்ட போது ஜெயலலிதா உயிரோடு இல்லை. ஆனால், சசிகலாவும், மற்றவர்களும் பெங்களுர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் சிறையில் இருந்து வெளிவருகிற செய்தியை நாளேடுகள் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன என தெரியவில்லை. இந்திய விடுதலைக்காக செக்கிழுத்த வ.உ. சிதம்பரனாரின் பிறந்தநாள் செப்டம்பர் 5. அவரைப் பற்றி ஒரு நாளேடு தவிர மற்ற எதிலும் எந்த குறிப்பும் இல்லை. ஆனால், ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டவரின் விடுதலை குறித்து இவ்வளவு முக்கியத்துவம் வழங்குவது எந்த வகை பத்திரிகை தர்மம் ?

கடன் தவணை செலுத்துபவர்களை வாராக் கடன் பட்டியலில் சேர்க்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே ?

வங்கிகளில் மக்கள் பெற்ற கடன்களின் மாத தவணையை கொரோனாவால் மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதைமீறி வங்கிகள் கடன் பெற்றவர்களிடமிருந்து தொடர்ந்து வட்டி வசூலிப்பதாகக் கூறி தொடரப்பட்ட பொதுநல வழக்கில் தான் உச்சநீதிமன்றம் இத்தகைய உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இதில் மத்திய அரசின் போக்கை கடுமையாக கண்டித்திருக்கிறது.  மத்திய அரசின் சார்பில் ஆஜரான துஷார் மேத்தா, ‘வங்கித் துறை, நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. அதை வலுவிழக்கக் செய்யக் கூடாது, வங்கிக் கடன் வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது, சில தளர்வுகளை அளிக்கலாமே தவிர, விவசாயக் கடன் உள்ளிட்டவற்றிற்கு தவணைக்கு அவகாசம் வழங்க முடியுமே தவிர, வட்டியை தள்ளுபடி செய்ய வாய்ப்பே இல்லை’ என்று கூறியது செய்தியாக வெளிவந்துள்ளது. கொரோனாவினால் மக்களும், தொழில் நிறுவனங்களும் பொருளாதார பாதிப்புகளை சந்தித்து வருகிற வேளையில் கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுவாக உள்ளது. ஆனால், மத்திய அரசு கடனுக்கான வட்டி செலுத்துவதை தள்ளி வைக்க முடியுமே தவிர, தள்ளுபடி செய்ய முடியாது என்று கூறியது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும்.

பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசு நிவாரணங்களை வழங்கலாம். கொரோனா என்பது எவரும் எதிர்பார்க்காதது. இத்தகைய பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்டெடுக்க சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு ரூபாய் 3 லட்சம் கோடி மத்திய அரசு ஒதுக்கியது. ஆனால், இதுவரை அதில் 36 சதவிகிதமான ரூபாய் 1.11 லட்சம் கோடி தான் வழங்கப்பட்டிருக்கிறது. வங்கிகளின் கடுமையான நிபந்தனை காரணமாக மீதி நிவாரணத் தொகையை பெற முடியவில்லை. கொரோனா நோயை விட கொடுமையான அணுகுமுறையை மத்திய நிதியமைச்சகம் கையாண்டு வருவதால் அனைத்து தொழில்களும் நலிவடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பலமுறை குற்றச்சாட்டாக கூறியும், மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக உரையாற்றியதற்காக டாக்டர் கஃபீல்கானை பணியில் இருந்து யோகி ஆதித்யநாத் அரசு தற்காலிக நீக்கம் செய்திருக்கிறதே ?

டாக்டர் கஃபீல்கான் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகத்தில் உரையாற்றியதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்படி யோகி ஆதித்யநாத் அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது பேச்சில் எந்தவிதமான தேசவிரோதமான கருத்துக்களும் இல்லை என்று கூறி, 7 மாதத்திற்கு பிறகு அலகாபாத் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இது பேச்சுரிமைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்
ஏற்கனவே கோரக்பூர் மருத்துவ கல்லூரியில் விரிவுரையாளராக  பணி செய்த அவரை உத்தரபிரதேச பா.ஜ.க. அரசு தற்காலிக பணி நீக்கம் செய்து பழிவாங்கியது. தற்போது சிறையில் இருந்து விடுதலை பெற்ற அவர், பணியில் திரும்பவும் சேர்த்துக் கொள்ளுமாறு முதலமைச்சர் ஆதித்யநாத்திற்கு கோரிக்கை விடுத்திருக்கிறார். இல்லையெனில், உயர்நீதிமன்றத்தை நாடுவதென முடிவு செய்திருக்கிறார்.

உத்தரபிரதேச பா.ஜ.க. அரசால் பழிவாங்கப்பட்ட டாக்டர் கஃபீல்கான் அவர்களது தாய், மனைவி ஆகியோரிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள், டாக்டர் கஃபீல்கானோடு நீங்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலத்திற்கு வருகை புரிந்தால் உங்களை பாதுகாப்பாக வைத்திருக்க உறுதி கூறுகிறேன் என்று அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பினை ஏற்று டாக்டர் கஃபீல்கான் உள்ளிட்ட குடும்பத்தினர் தற்போது ஜெய்பூரில் ராஜஸ்தான் காங்கிரஸ் அரசின் பாதுகாப்பில் தங்கி உள்ளார்கள். உத்தரபிரதேச மாநிலத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்கிற நிலையில் பிரியங்கா காந்தி இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் ஏறத்தாழ 2.5 கோடி இஸ்லாமியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இத்தகைய சூழலில் பா.ஜ.க. அரசில் டாக்டர் கஃபீல்கான் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்று சொன்னால், நமது நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது ? ஆனால், நீதியும், நியாயமும் டாக்டர் கஃபீல்கான் பக்கம் இருப்பது மிகுந்த மனநிறைவைத் தருகிறது.

The post சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்யும் பா.ஜ.க.அரசு! கொரோனா காலத்தில் 18 கோடி  குடும்பங்களை பாதிக்கும் மோடி அரசின் கொடூர நடவடிக்கை! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.