ayodhya Archives - தேசிய முரசு - Desiya Murasu

முஸ்லீம்களின் தியாகத்தை ராமர் கோயில் வெளிப்படுத்தும்: இந்தோஇஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை
அயோத்தியில் இருந்த 400 ஆண்டுகால பாபர் மசூதி, அப்போதைய பாஜக தலைவர் எல்கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உமா பாரதி உள்ளிட்ட இந்து அமைப்பு தலைவர்கள் முன்னிலையில்  சங்பரிவார்கள் இடித்துத் தரைமட்டமாக்கினர்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு மதசார்பற்ற இந்தியாவில் தாங்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறோமோ? என்ற அச்சம் முஸ்லீம் மக்கள் மத்தியில் எழுந்தது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மசூதி இடிக்கப்பட்டதை சட்டவிரோதம் என்று கண்டித்தது. அதேசமயம், பெரும்பான்மை மக்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் நோக்கில், பாபர் மசூதியை இடித்தவர்களுக்கே பாபர் மசூதி  இருந்த இடத்தை ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் வழங்கியது. இடிக்கப்பட்ட மசூதிக்குப் பதிலாக 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்க உத்தரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதிதாக கட்டப்படவுள்ள ராமர் கோவிலின் வரைபடம்.

இந்நிலையில், பாபர் மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில், இருதய அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் வகையில் பல்நோக்கு மருத்துவமனையை கட்ட முடிவு செய்திருப்பதாக உத்தரப்பிரதேச சன்னி வக்பு வாரியத்தால் அமைக்கப்பட்ட இந்தோஇஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை அறிவித்தது.

இது குறித்து வக்பு செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் அத்தர் ஹுசைன் கூறும்போது, ” ஏற்கனவே இருந்த பாபர் மசூதியைப் போலவே  புதிதாக மசூதி கட்டவும், பொது மக்கள் பயன்பாட்டுக்காக பல்நோக்கு மருத்துவமனை, தொழில் பயிற்சி மையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. கொரோனா பரவலுக்குப் பின்தான், 5 ஏக்கர் நிலத்தில் மருத்துவமனை கட்டலாம் என்ற திட்டம் உதித்தது. இங்கு இருதய நோய்களுக்கு சிகிச்சையும், புற்றுநோயாளிகளுக்கு கீமோதெரபி சிகிச்சையும் அளிக்கப்படும்.

மருத்துவமனை மற்றும் மசூதி கட்டுவதற்கு ஜாமியா மில்லியா இஸ்லாமியா கட்டிடவியல் கல்லூரி டீன் பேராசிரியர் எஸ்எம். அக்தாரை அணுகினோம். மசூதியை வடிவமைப்பதில்  சில தொழில்நுட்பப் பிரச்சினைகள் இருப்பதாக அவர் தெரிவித்தார். மருத்துவமனையுடன் மசூதி கட்டினால் மதவெறி என்ற கண்டனம் எழும் என்பதால், மசூதி கட்டும் திட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளோம்.

மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் வேறு மசூதி இல்லை. இடித்து தரைமட்டமாக்கப்பட்ட மசூதிக்கு, புதிதாக கட்டப்படும் மசூதி ஈடாகாது. எனினும், ராமர் கோயிலைப் பார்க்கும் போதெல்லாம், பாபர் மசூதியை இடித்துத் தள்ளிய சங்பரிவார்களுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தும்.  வரலாற்றுச் சிறப்புமிக்க மசூதியை இடித்தவர்கள், புதிய மசூதியையும் இடித்தால் யாரால் தடுக்க முடியும்?

எனவே, மசூதிக்குப் பதிலாக ராமர் கோயில் அங்கு நிற்கட்டும். உலகின் பார்வையில் பெரும்பான்மையினரின் வலிமை மற்றும் சிறுபான்மை முஸ்லீம்களின் தியாகத்தையும் ராமர் கோயில் வெளிப்படுத்தும். அதே பெயரில் வேறு ஓர் இடத்தில் மசூதியை கட்டுவதைவிட, அழிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு பெரிய அஞ்சலி செலுத்துவதே சரியானது.

அதேசமயம், 5 ஏக்கர் நிலத்தில் மருத்துவமனை, தொழில் பயிற்சி மையம் கட்டினால், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படும். இதனை அந்த பகுதியில் வாழும் மக்கள் மட்டுமின்றி, உலகமே பாராட்டும்” என்றார்.

The post முஸ்லீம்களின் தியாகத்தை  ராமர் கோயில் வெளிப்படுத்தும்: இந்தோஇஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

மசூதியை இடித்தோரும்,இன்றைய ஆட்சியாளரும் ஒருவரே: வலியை வெளிப்படுத்தும் ஃபரிசாபாத் முஸ்லீம்கள்
ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு பூமி பூஜை நடத்தியது, நாட்டின் பன்முகத்தன்மையின் அடித்தள மதிப்புகளை அகற்றும் சங்பரிவாரின் உச்சகட்ட நிகழ்வாகும். அதோடு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின்  ராமர் கோயில் கட்டும் நீண்ட நாள் திட்டம் நிறைவேறியதன் மூலம், இந்தியா ஒரு நாடு என்ற கட்டமைப்பும்,  சமூக அரசியல் கட்டமைப்பும் நிலைகுலைந்துள்ளது. சங்பரிவாரின் இத்தகைய நோக்கம் வெட்கக்கேடானது என  இந்து மத செயல்பாடு கோடிட்டுக் காட்டுகிறது.

பெரும்பான்மைக்கு அடிபணிதல்

எனினும், பூமி பூஜை விழாவின் ஒட்டுமொத்த விளைவு ,நாட்டின் சமூக அரசியல் கட்டமைப்பு மற்றும் அதன் அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இந்துத்வா சார்ந்த பெரும்பான்மைக்கு கீழ்படிய வேண்டும் என்ற சமிக்ஞையை பூமி பூஜை விழா ஏற்படுத்தியுள்ளது. இதுதான் சங்பரிவார் பல ஆண்டுகள் மேற்கொண்ட பிரச்சாரமாகவும் இருந்தது.  சங்பரிவார் மற்றும்  1920 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்- ன் வரலாறு என்பது அரசியல், பன்முகத்தன்மை,ஜனநாயகம், சமத்துவம் மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்துக்கு எதிரான கொள்கையாகவே இருந்துள்ளது. இந்த கொள்கை தான், 1948 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டபோதும், 1992 ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதும் கொடூரச் செயல்களாக வெளிப்பட்டன.  அயோத்தியில் ஆகஸ்ட் 5 என்பது, சங்பரிவாரின் ‘நாசவேலை செயல்பாட்டின்’  முக்கிய நிகழ்வாகும்.

1949 ஆம் ஆண்டு அரசியல் சாசன சபையில் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தை சங்பரிவார் ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்துள்ளது. அப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த மாதவ் சதாசிவ் கோல்வால்கர், பாரதத்தின் மனு தர்மத்தின் அடிப்படையிலேயே அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும் என்றும், அரசியல் சாசனத்தில் மேற்கத்திய நாடுகளின் சட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார். சமத்துவத்தின் அடிப்படையிலேயே அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அம்பேத்கார் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த கோல்வால்கர்,  முஸ்லீம், கிறிஸ்தவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்கள் இந்தியாவின் உள்நாட்டு எதிரிகள் என்று குற்றஞ்சாட்டினார். மனுதர்மத்தை பின்பற்றும் இந்துக்கள் யாரும் அரசியல் சாசனத்தை ஏற்கமாட்டார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சுதந்திரத்துக்குப் பிறகு சங்பரிவாரின் வரலாறு இந்துத்வாவின் அடிப்படையிலேயே அமைந்தது. இது நாசவேலை சூழ்ச்சிக்கும் பயன்படுத்தப்பட்டது. 1960 ஆம் ஆண்டு மத்தியில் தொடங்கிய இந்த நாசவேலை சூழ்ச்சிகள் மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற 2014 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது.  இந்துத்வா கொள்கையின் முக்கிய  அம்சம், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்பதே. இந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019 ம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ராமர் கோயில் கட்டுவதும் இந்துத்வாவின் முக்கிய நிகழ்ச்சி நிரலும் பூமி பூஜை மூலம் நிறைவேறியிருக்கிறது.

பொய்யாக்கப்படும் சமகால வரலாறு

ராமர் கோயில் கட்டுவதற்கான போராட்டத்தை சுதந்திரப் போராட்டத்துடன் ஒப்பிட்டு பிரதமர் மோடி பேசினார். சுதந்திரப் போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரை கொடுத்தனர். மசூதியை இடிப்பதும், மசூதி இருந்ததற்கான தடயங்களை முற்றிலும் அழிப்பதுமே அவர்களது தியாகமாகவும், போராட்டமாகவும் இருந்துள்ளது.   சட்டத்திற்கு கட்டுப்பட்டும்,  உண்மையாகவும், வன்முறையின்றியும், தியாகத்துடனும் நடந்து கொண்டதாலேயே, பூமி பஜை விழா கொண்டாடும் நாள் நமக்கு பரிசாக கிடைத்திருக்கிறது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். ஆனால், 2019 ஆம் ஆண்டு அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கினாலும், மசூதியை கரசேவர்கள் இடித்தது கிரிமினல் குற்றம் என்று இடித்துரைத்தது. 1980 ஆம் ஆண்டு மத்தியில் ராமர் ஜென்ம பூமி பிரச்சினையை விஸ்வ இந்து பரிசத் பிரச்சாரமாக தொடங்கியது முதல் மசூதி இடிக்கப்படும் வரை, ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வகுப்புவாத வன்முறைக்கு பலியானார்கள். இதுதான் பிரதமர் மோடி கூறும் சுதந்திரப் போராட்டமா?

வகுப்புவாதத்தை ஆதரித்த பிரதமர் மோடி, இந்துத்வாவுக்கு அதிக மதிப்பைக் கொடுத்தார். இது நாடு முழுவதும் இந்து- முஸ்லீம் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும். குறிப்பாக, இந்தி பேசும் மக்கள் வாழும் பீகார், உத்தரப்பிரதேசம்,மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

புகையும் எதிர்விளைவுகள்

பிரதமர் எடுத்த நிலைப்பாடுகளை அயோத்தியிலும் வெளியேயும் உள்ள பார்வையாளர்கள் குற்றவாளியைப் போல் கருதினாலும், சங்பரிவாருக்குள் எழும் குரல்கள் இதனை வரலாற்றுச் சாதனையாகவும், இந்துத்வா கோட்பாடாகவும் எதிரொலிக்கின்றன. பூமி பூஜைக்குப் பிறகு பிரதமர் மோடியின் பேச்சு குறித்து பஜ்ரங்தள் தலைவர் வினாயக் கட்டியார் கூறும்போது, 1996 ஆம் ஆண்டு 13 நாட்கள் பிரதமராக இருந்த வாஜ்பாய், மக்களவையில் பேசும்போது, இந்துத்வாவின் பிரதான கோரிக்கைகளான அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது மற்றும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது போன்ற லட்சியங்கள், பெரும்பான்மை இல்லாததால் செயல்படுத்த முடியவில்லை. பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்போது, இவற்றை செயல்படுத்துவோம் என்று குறிப்பிட்டதை கட்டியார் சுட்டிக்காட்டினார்.  ராமர் கோயிலை சிறப்பு அறக்கட்டளை மூலமே கட்ட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மீறி, அரசே இந்த பணியை கையில் எடுத்துக் கொண்டுள்ளதே என்ற கேள்விக்கு பதில் அளித்த கட்டியார், யாராவது செய்து தானே ஆக வேண்டும் என்று மழுப்பலான பதிலை சொல்லி நழுவினார்.

இயலாமை உணர்வு

” கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நடந்த கலவரத்தில் எண்ணற்ற முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். அன்றைய தினம் வன்முறையிலும் மசூதி இடிப்பு போன்ற கிரிமினல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தவர்கள் தான் இன்று கோயில் கட்டப் புறப்பட்டுள்ளார்கள். அன்றைக்கு சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு வன்முறையில் ஈடுபட்டோரும், இன்று ஆட்சி அதிகாரத்தில் இருப்போரும் ஒரே நபராக இருக்கிறார்கள். வரலாற்றின் இந்த வெட்கக்கேடான நிகழ்வுகளை யாராலும் விவரிக்க முடியாது.  நாங்கள் உயிரை இழந்தோம். உடமையை இழந்தோம். குடிமக்கள் என்ற உரிமை இழந்தோம். எங்களை வெறும் சிறுபான்மையினர் என்று ஒதுக்கும் நிலைமைதான் இருக்கிறது…”

– அயோத்தி மற்றும் 8 கி.மீ. தொலைவில் உள்ள அதன் இரட்டை நகரமான ஃபரிசாபாத் முஸ்லீம் மக்களின் ஆழ் மனதில் உழன்று கொண்டிருந்த இயலாமையே இப்படி வார்த்தைகளாக … இல்லையில்லை, வலிகளாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

The post மசூதியை இடித்தோரும்,இன்றைய ஆட்சியாளரும் ஒருவரே: வலியை வெளிப்படுத்தும் ஃபரிசாபாத் முஸ்லீம்கள் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

அயோத்தி பூமி பூஜைக்கு தூர்தர்ஷன் நேரலை: அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சம்
அயோத்தியில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி (நாளை)  நடைபெறவுள்ள ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவை தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்பு செய்ய இருப்பது அதிகார துஷ்பிரயோகம் என பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தீவிர வலதுசாரி அரசியலின் முன்னேற்றத்தில் பிரச்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.  பல நிகழ்வுகளில் பாசிசத்தின் வரலாறு அணிவகுத்து நின்றுள்ளது. ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள பாஜகவின் இந்திய பாசிச முகம், ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் வெளிப்பட்டது.

பிரச்சாரம் செய்வதன் மூலம் கருப்பை வெள்ளையாக்க முடியும் என்றும், பொய்யை உண்மையாக்க முடியும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். இத்தகைய பிரச்சாரத்துக்காக நமது தேசிய தொலைக்காட்சியான தூர்தர்ஷனை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.

கார்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் ஏற்கனவே ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஊதுகுழலாக மாறிவிட்டன. பல ஆண்டுகளாகவே தூர்தர்ஷனும் அப்படியே செயல்படுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் தூர்தர்ஷனில் இடம்பெற்றபோது, தங்களுக்கு பாதகமான குறிப்பிட்ட வாசகத்தை நீக்குமாறு பாஜக அரசு உத்தரவிட்டதை உதாரணமாகச் சொல்லலாம். இப்போது ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும் அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை விழாவை தூர்தர்ஷன் நேரடி ஒளிபரப்பு செய்ய விரும்புகிறார்கள்.

பிரதமர் கலந்து கொள்ளும் முக்கிய நிகழ்ச்சி என்பதை யாரும் மறுக்கவில்லை. அதேசமயம், இந்த நிகழ்ச்சியை வழக்கமான நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்திருக்க வேண்டும். மாறாக, இந்த நிகழ்ச்சியை தூர்தர்ஷனின் நேரடி ஒளிபரப்பு செய்ய முடிவு செய்தது நாட்டுக்கு தவறான சமிக்ஞையை காட்டுவதாக அமைந்துள்ளது.

இத்தகைய அரசியல் நாடு முழுவதும் விவாதிக்கப்படும். சங்பரிவார் அமைப்பைப் பொறுத்தவரை,  ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதை தங்களது வெற்றியாக பிரகடனப்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்கள் அரசியல் ஆதாயமும் அடையக் கூடும்.

தூர்தர்ஷனை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் இந்தியாவின் மதச்சார்பின்மை மீதான மதிப்பு குறைவதோடு, இந்திய சிறுபான்மையினத்தவரின் உணர்வுகளையும் காயப்படுத்தும்.

வகுப்புவாத பதற்றத்தின் நிரந்த அடையாளமாக அயோத்தியா  மாறுவதையோ, மக்களிடையே மத நல்லிணக்கம் இல்லாது செய்வதையோ, இந்தியாவில் உள்ள உண்மையான இந்துக்கள் விரும்பவில்லை.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வுக்கு உள்நோக்கம் சிறிது மாறுபட்டதாக இருக்கலாம். இதன் சாதக, பாதக அம்சங்களை பார்க்கும்போது, 2019 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை நாடு அறிந்துள்ளது.

தங்களது பல ஆண்டு கனவு என இதனை ஆளும் பாஜக கொண்டாடியது. ராமர் கோயில் கட்ட 2.77 ஏக்கர் நிலத்தை மட்டுமே வழங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஒட்டுமொத்த 67.7 ஏக்கரையும் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளைக்கு அரசு வழங்கியது. இந்த பின்னணியையும் நேரடி ஒளிபரப்பில் காட்ட வேண்டியது அவசியம்.

பிரசார் பாரதி சட்டத்தின் 12 2 (ஏ) பிரிவில், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு மற்றும் அரசியல் சாசனத்தின் மதிப்பை காக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் ஒரு மத விழாவை நேரடி ஒளிபரப்பு செய்வதில் விவேகத்தை பயன்படுத்த வேண்டும் என்பதில் தூர்தர்ஷனுக்கு விளக்கவேண்டிய அவசியம் இல்லை.

மத நிகழ்ச்சியில் நேரலை செய்வது, தேசிய ஒருமைப்பாட்டின் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதிமுறைகளுக்கு முரணாக இல்லை என்பதை தூர்தர்ஷன் உறுதிப்படுத்த வேண்டும்.

400 ஆண்டுகளாக பாபர் மசூதி இருந்த இடத்தில் அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. மசூதி இடிக்கப்பட்டதை சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. அதே இடத்தில்தான் நிகழ்ச்சி நடக்கவுள்ளது.

இதே இடத்தில்தான் கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி மதக்கலவரம் நடைபெற்றது.  இந்து ராஷ்ட்ராவின் ஆக்கிரமிப்பு போர் குரல் ஒலித்த இடம். இந்திய மதச்சார்பின்மைக்கு பலத்த காயத்தை  ஏற்படுத்திய இடம்.

அதே இடத்தில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை நடத்துவது, பீகார் தேர்தலை எதிர்கொள்ள பாஜகவுக்கு அது அரசியல் தேவையாக இருக்கிறது.

ஆனால், ராமர் கோயிலுக்கு கொடுக்கும் முன்னுரிமை நாட்டிற்கும், ஏழைகளுக்கும் எவ்வித பலனையும் அளிக்காது.

கொரோனா பாதிப்பால் நாடு தவித்துக் கொண்டிருக்கிறது. அதனை எதிர்த்துப் போராடுவதே மக்களின் முதன்மை பிரச்சினையாக உள்ளது. உணவு, உறைவிடம் மற்றும் வாழ்க்கை நிலை அபாயக் கட்டத்தில் உள்ளது.

இத்தகைய சூழலில், மக்களிடையே பிளவை ஏற்படுத்துவது, இந்திய நெறிமுறைகளுக்கு எதிரானதாகும்.

இந்த நேரடி ஒளிபரப்பை தேசிய தொலைக்காட்சியான தூர்தர்ஷன்  மூலம் காணும் சிறுபான்மையினத்தவர், தாங்கள் பழி வாங்கப்பட்டதாகக் கருதலாம். இந்திய குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து போன்ற அரசின் நடவடிக்கைகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு, பாதுகாப்பற்ற உணர்வை இத்தகைய நேரடி ஒளிபரப்பு ஏற்படுத்திவிடும்.

அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் நாட்டின் ஒற்றுமையை சார்ந்ததாகவே இருக்க வேண்டும்.

பிரித்தாளும் வியூகம் ஆளும்கட்சிக்கு அரசியல் ரீதியாக பலன் தரலாம். ஆனால், ஏற்கனவே காயமடைந்துள்ள இந்திய மதசார்பின்மை கட்டமைப்பின் மீது உப்பை தடவுவதுபோல் அமைந்துவிடும்.

தூர்தர்ஷனின் நேரடி ஒளிபரப்பு சங்பரிவாருக்கு தற்காலிக மகிழ்ச்சியை தரலாம். ஆனால், மதசார்பற்ற ஜனநாயக அரசு என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படையை காக்க வேண்டும். சங்பரிவாரின் விருப்பங்களுக்கும் கற்பனைகளுக்கும் ஏற்ப செயல்படவேண்டியதில்லை.

இன்றைய இந்தியாவில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

The post அயோத்தி பூமி பூஜைக்கு தூர்தர்ஷன் நேரலை: அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.