• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home சமூகநீதி

தமிழகத்தில் மட்டும் நீட் தற்கொலைகள் ஏன்?: கல்வியாளர்கள் விளக்கம்

by Admin
18/09/2020
in சமூகநீதி
0
தமிழகத்தில் மட்டும் நீட் தற்கொலைகள் ஏன்?: கல்வியாளர்கள் விளக்கம்
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

”நான் நன்றாகப் படிக்கிறேன். ஆனால், நான் தேர்ச்சி பெறாமல் போய்விடுவேனா என்று பயமாக இருக்கிறது. மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் போனால் என்ன ஆகும்?”

தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களின் மன உளைச்சலை ஏற்படுத்தும் இந்த எண்ணம் தான், இதுவரை 13 மாணவர்களின் உயிர்களைப் பறித்திருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 5 மாணவர்கள் உயிரிழந்திருக்கின்றனர்.

ஒரே மாதத்தில் 5 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டபின், நீட் பிரச்சினை தமிழகம் முழுவதும் உணர்வுப் பிரச்சினையாக மாறியிருக்கிறது.

மாணவர்கள் டாக்டராகி பல உயிர்களைக் காப்பாற்ற விரும்புகிறார்கள். நீட் தேர்வை நிறுத்தி அவர்கள் உயிரைக் காப்பாற்றுங்கள் என்று வேதனையுடன் கோரிக்கை வைக்கிறார், சமீபத்தில் நாமக்கல்லில் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உறவினர்.

”கடுமையாக உழைத்து படித்து,இருமுறை நீட் தேர்வு எழுதியும் போதிய மதிப்பெண் கிடைக்கவில்லை. தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவன் கோழையல்ல. நம்பிக்கை அதிகம் உள்ளவன். நீட் தேர்வால் ஏற்பட்ட மன அழுத்தத்தை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை” என்றும் அவர் தெரிவிக்கிறார்.

தற்கொலை செய்து கொண்ட மதுரை மாணவி அரசுப் பள்ளியில் படித்துவிட்டு, கடந்த ஆண்டுதான் வேலம்மாள் பள்ளியில் சேர்ந்தார். பிளஸ் டூ தேர்வில் 600க்கு 550 மதிப்பெண்கள் பெற்ற அவர், நீட் தேர்வு பயத்திலேயே இருந்துள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வு ஏன் பிரச்சினையாக இருக்கிறது?

1. மற்ற பாடத் திட்டங்களோடு, தமிழ்நாடு பாடத்திட்டத்தை ஒப்பிட முடியாதா?

”பாடத்திட்டம் சம்பந்தப்பட்ட விசயம் இல்லை. எல்லோருக்குமான சமமான கற்றல் அணுகுமுறை இல்லாததே காரணம். சிபிஎஸ்இ அல்லது ஐசிஎஸ்இ பாடத் திட்டங்களில் படிக்கும் மாணவர்கள் நீட் பயிற்சி மையங்களில் படிக்கவில்லையா?” என்று கேள்வி எழுப்புகிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

ஆரோ கல்விச் சேவைகள் நிறுவனர் டாக்டர் கே.ஆர். மாலதி கூறும்போது, ”பிரச்சினை பாடத் திட்டத்தில் இல்லை. நம் மாணவர்கள் திறனறிவை வளர்த்துக் கொள்ளவில்லை. இன்னும் மனப்பாட முறையையே பின்பற்றுகிறார்கள்” என்றார்.

2. நீட் தேர்வில் வெளிப்படைத்தன்மை இருக்கிறதா?

”நீட் தேர்வால் சந்தைப்படுத்துதல் முடிவுக்கு வரவில்லை. தமிழ்நாடு பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வுக்காக தயார்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை தமிழக அரசு எவ்வாறு இழந்தது?” என்று பிரின்ஸ் கஜேந்திர பாபு கேள்வி எழுப்புகிறார்.

”நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்பு, ஒவ்வொரு தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் 150 இடங்கள் இருந்தன. இதில், 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும், 42.5 சதவீதம் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கும், மீதமுள்ள 42.5 சதவீத இடங்களுக்கு அந்த கல்லூரிகள் நன்கொடை வசூலித்தன. நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு, 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடு அப்படியே இருக்கிறது. ஆனால், நீட் தேர்வு தகுதியின் அடிப்படையில் 85 சதவீத இடங்கள் நிரப்பப்படுகின்றன” என்று சுட்டிக் காட்டுகிறார் மாலதி.

3. சமமான அணுகுதல் குறைபாட்டால் மாணவர்கள் தற்கொலை செய்கிறார்களா? அல்லது அரசியலாகிவிட்டதா?

”தேர்வு பயம் மட்டுமல்ல. சரியான அணுகுதல் குறித்து எடுத்துரைக்க முறையான நீட் பயிற்சி மையங்கள் இல்லாததும், தரமான கல்வி முறை இல்லாததும் ஒரு காரணம்” என்கிறார்கள் சில கல்வியாளர்கள்.

கஜேந்திர பாபு கூறும்போது, ”வசதிபடைத்தவர்களாக இருந்தால், தனியார் கல்லூரிக்கு சென்றுவிடுவார்கள். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் தான் மாணவர்களுக்கு உதவ வேண்டும். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியவர்களாக இருக்கிறார்கள்” என்றார்.

மாலதி கூறும்போது, ”நீட் தேர்வு அரசியலாக்கப்பட்டுள்ளது. இதனை வாக்கு வங்கியாக மாற்ற முயற்சிக்கிறார்கள். குழந்தைகளின் மன நிலையோடு அவர்கள் விளையாடுகிறார்கள்” என்றார்.

Tags: NEET Death
Previous Post

சிறப்பு ரயிலில் இறந்த புலம்பெயர் தொழிலாளர்கள் விவரம்: பதில் தர மறுக்கும் ரயில்வே அமைச்சகம்

Next Post

பா.ஜ.க.அரசின் விவசாயிகளுக்கு விரோதமான அவசர சட்டங்கள். நாடு முழுவதும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு! தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்!

Admin

Admin

Next Post
தமிழக அரசே! 10 ஆண்டுகளாகப் பணியாற்றும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்க! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை!

பா.ஜ.க.அரசின் விவசாயிகளுக்கு விரோதமான அவசர சட்டங்கள். நாடு முழுவதும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு! தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com