1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதையும், அதற்கு முந்தைய நாள் நடந்த ஒத்திகையையும் தி பிரிண்ட் இணைய தளத்தின் தேசிய புகைப்பட ஆசிரியர் பிரவீன் ஜெயின் ஆவணப்படுத்தியுள்ளார்.
ராம் என்று பொறிக்கப்பட்ட செங்கற்கள் ஹரியானா எல்லையில் உள்ள கிராமம் ஒன்றிலிருந்து அயோத்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன.உத்தரப்பிரேதத்தில் கல்யாண்சிங் தலைமையிலான பாஜக ஆட்சியில் கையகப்படுத்தப்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தில், கடந்த 1992 ஜுலையில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழா.
பாபர் மசூதி இருந்த இடத்தில் கரசேவகர்கள் செங்கற்களை கொண்டு அடிக்கல் நாட்டினர்.
அடிக்கல் நாட்ட நிலத்தை சீரமைத்தபோது மனித எலும்புகள் கிடைத்தன. வருவாய் ஆவணங்களில் இந்த இடம் முஸ்லீம் மயானம் என்று பதிவாகியுள்ளது.
அயோத்தி நிலைமையை கண்காணிப்பதற்கு லக்னோ செல்லும் முன்பு, புதுடெல்லி ரயில் நிலையத்தில் உள்ள பொது தொலைபேசி பூத்தில் இருந்து அப்போதைய பிரதமர் நரசிம்மராவிடம், அப்போதைய மனித ஆற்றல் வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங் பேசுகிறார்.
டிசம்பர் 5 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்துக்கு எதிரே உள்ள சுவற்றில், நாங்கள் ரத்தம் கொடுப்போம். உயிரைக் கொடுப்போம் என கரசேவகர் ஒருவர் எழுதுகிறார்.மசூதியை இடிப்பதற்கு முந்தைய நாள் உத்தரப்பிரதேச காவல் துறையினருடன் சேர்ந்து கரசேவகர்கள் ஜெய் ராம் என கோஷமிட்டனர்.மசூதியை இடிப்பதற்கு முந்தைய நாள் சுத்தியல் மற்றும் கடப்பாறைகளுடன் கரசேவகர்கள் வரிசையில் நின்ற காட்சி.முகத்தை மூடிய நபர் ஒருவர், மசூதியை எப்படி இடிப்பது என்று ஒத்திகை நடத்துகிறார்.இடிக்கப்படுவதற்கு முந்தைய இரவில் பாபர் மசூதி.உச்ச நீதிமன்ற அனுமதியோடு சராயு ஆற்றிலிருந்து மணல் மற்றும் நீரை டிசம்பர் 6 ஆம் தேதி கரசேவையின் அடையாளமாக கொண்டு வந்தனர்.மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பு, ராம ஜென்ம பூமி இயக்கத்தினரை பாஜக தலைவர் எல்.கே.அத்வானி சந்தித்தார்.பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, முரளி மனோகர் ஜோஷி, அப்போதைய பாஜக தலைவர் எல்.கே.அத்வானி மற்றும் விஜயராஜே சிந்தியா உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.மசூதி இடிக்கப்பட்டபோது விஷ்வ இந்து பரிஷத்தின் அசோக் சிங்கால் மற்றும் உமாபாரதி ஆகியோர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசுகின்றனர்.பாபர் மசூதியை இடித்த கரசேவகர்கள்.
புதுடெல்லியில் எல்.கே.அத்வானி கைது செய்யப்பட்டபோது, ஆரத்தழுவும் அவரது மனைவி கமலா அத்வானி. அருகில் நரேந்திர மோடி.
(நன்றி: ‘தி பிரிண்ட்’)
உச்சநீதிமன்றத்தில் கரசேவை நடத்தும்போது பாபர் மசூதி அருகில் நெருங்ககூடமாட்டோம் என பிராமண பாத்திரம் தாக்கல் செய்த பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். வகுப்புவாத சக்திகள் நிகழ்த்திய வன்முறை செயல்களை பாரீர்!
பாபர் மசூதி இடித்த இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டு விட்டது. ஏதோ ஒரு வகையில் ராம பிரானுக்கு கோயில் கட்டுவது அனைவருக்கும் மகிழ்ச்சியே. ஆனால், ராமர் கோயில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டதைப் போல பாபர் மசூதியை இடிப்பதற்கு காரணமாக இருந்த பா.ஜ.க. தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி, பஜ்ரங்தள் அமைப்பினர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் எப்போது நீதிமன்றம் தண்டனை வழங்கப் போகிறது ? நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.