2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதுடெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது, வரலாறு காணாத தாக்குதல் நடத்தப்பட்டு பெரும் கலவரம் மூண்டது. பாஜக தலைவர் கபில் மிஸ்ரா உள்ளிட்ட சிலரின் வன்முறைப் பேச்சுக்களே இந்த கலவரத்துக்கு காரணமாக அமைந்தன. இந்த கலவரத்துக்குப் பிறகு, இதன் பின்னணியில் இருந்தவர்கள் குறித்து விசாரிக்காமல், விசாரணை ஏனோ தானோவென்று போய்க் கொண்டிருக்கிறது.
கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தின் போது, நானாவதி விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, அதனை விசாரிக்க லிபரான் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று வரை யாரும் தண்டிக்கப்படவில்லை என்பது வேறு விஷயம். பாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றும், அதன் பிறகு கலவரம் நடக்கவில்லை என்றும் நாமே முடிவு செய்ய வேண்டியுள்ளது.
2002 ஆம் ஆண்டு குஜராத்தின் முதலமைச்சராக மோடி இருந்தபோது, முஸ்லிம்களுக்கு எதிரான கலவர வழக்குகளில் சிலருக்கு தண்டனை கூட கிடைத்தது. 1984 ஆம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கிலும் சிலருக்கு தண்டனை கிடைத்தது.
டெல்லி கலவரத்தை பொருத்தவரை நேரிடையாக கலவரத்தைத் தூண்டிய பாஜகவை சேர்ந்த கபில் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு ஏதும் பதியவில்லை. மாறாக, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடிய மனித உரிமை ஆர்வலர்களை சிறைக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது இந்த அரசு.
இதுகுறித்து அரசியல்வாதியும் சமூக செயற்பாட்டாளருமான யோகேந்திர யாதவ், ‘தி பிரிண்ட்’ இணையத்தில் எழுதியுள்ள கட்டுரையில், “டெல்லி வன்முறைக்காக உமர் காலித் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம், இந்திய முஸ்லிம்கள் தலைமுறையின் ஜனநாயக விருப்பத்துக்கு தடை போடப்பட்டுள்ளதாக” தெரிவித்துள்ளார்.
யோகேந்திர யாதவ் கட்டுரையின் முழுப் பகுதி:
‘தி பிரிண்ட்’ இணையத்தில் கட்டுரையாளரான எனது நண்பர் ஹிலால் அகமது. அவருக்கு ஏராளமான அடையாளங்கள் உள்ளன. தர்காவில் 5 முறை தொழுவார். மார்க்சிய கோட்பாடுகளைப் பற்றிக் கொண்டு சேகுவாராவை பின் தொடர்வார். அரசியல் பார்வை மற்றும் செயல்பாடுகளில் காந்தியடிகளை பின் தொடர்வார். அவர் தன்னை ஒருபோதும் முஸ்லீமாக அடையாளப்படுத்திக் கொண்டதில்லை.
அவரது செயல்கள் விசித்திரமாக இருப்பதை சில ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். ஒரு வங்காளி வீட்டில் ராமகிருஷ்ண பரமஹம்சர் படமும் லெனின் படமும் இருப்பதை பார்த்திருக்கிறேன். மற்றவர்களை ஒப்பிடும்போது முஸ்லீம் என்பதற்கு குறுகிய அடையாளங்களே உள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடந்த கலவரம் தொடர்பாக தற்போது டெல்லி போலீசாரால் உமர் காலித் கைது செய்யப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது, இந்த அடையாளம் எனக்கு நினைவுக்கு வருகிறது.
நீங்கள் இளைஞர். நீங்கள் கிளர்ச்சியாளர். நீங்கள் இந்தியர். இருந்தாலும் நீங்கள் முஸ்லீம். உங்கள் மனசாட்சியை தவறாகப் புரிந்து கொள்ளலாமலோ அல்லது நீங்கள் சிறையில் அடைக்கப்படாமலோ, இருந்திட முடியுமா? இது உமர் காலித்துக்கு மட்டும் நிகழ்ந்த ஒன்றல்ல. லட்சக்கணக்கான படித்த இந்திய முஸ்லிம் இளைஞர்கள் இதனை சந்தித்து வருகிறார்கள். நான் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, பல இளம் முஸ்லிம்கள் இந்தியாவுக்கு விசுவாசமாக நடக்கிறார்களா? என்பது குறித்து அவர்களுக்கு தேர்வு வைக்கப்பட்டதுண்டு. அவர்களுக்குள் உள்ள முஸ்லிம் உணர்வை மறக்கடிக்கச் செய்வது அல்லது கிளர்ச்சியைத் தடுப்பது அவர்களது நோக்கமாக இருந்தது. எனக்குத் தெரிந்த பெரும்பாலான இடதுசாரிகள் முதல் பாதையைத் தேர்ந்தெடுத்தனர்.
உமர் காலித் மற்றும் கன்யா குமார் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளை 2016 ஆம் ஆண்டு சுமத்தினர். பின்னர், இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களின் லட்சியவாதமும் தியாகமும் என்னைக் கவர்ந்தன. இவர்கள் எந்த மாதிரியான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று நான் அவ்வப்போது ஆச்சரியப்பட்டதுண்டு.
உமர் காலித்தை அறிந்து கொள்வது ஒரு மகிழ்ச்சியான ஆச்சரியமாக இருந்தது. அவர் இந்திய அரசை வன்முறையில் தூக்கியெறியும் புரட்சிகர கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவர். சாதி மற்றும் பாலினம் தொடர்பான கேள்விகளைக் கையாளுவதில் கைதேர்ந்த உமர் காலித் தான், எதிர்காலத்தில் நான் காண விரும்பும் இடது சாரி தலைவன்.
ஒரு முஸ்லீமாக மாற மறுத்ததும். அவரது தந்தை ஜமாத்-இ-இஸ்லாமியைச் சேர்ந்தவர் என்பதால், உமர் ஒரு முஸ்லீம் அடிப்படைவாதி அல்லது முஸ்லீம் அடையாளத்தை முற்றிலுமாக விலக்கிக் கொண்டதும் என்னை மிகவும் கவர்ந்தது. இங்கே இளைஞர்களின் அடையாளமாக உமர் காலித் இன்று உருவெடுத்திருக்கிறார்.
மோசமான தீவிரவாத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு இன்று உமர் காலித் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் போலீஸ் பாதுகாப்புடன் வலம் வரும் உமர் காலித், டெல்லி கலவரத்தை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்புடன் இருக்கும் ஒருவன் எங்கேயோ போயி சரி செய்ய முடியும்?.
இடதுசாரிகள் மீது நீங்கள் எந்த குற்றச்சாட்டை வேண்டுமானாலும் சுமத்துங்கள். ஆனால் வகுப்புவாத கலவரத்தைத் தூண்டினார்கள் என்று மட்டும் குற்றம் காட்டாதீர்கள். உமர் காலித் முஸ்லிம் என்பதற்காக டெல்லி போலீசார் கதை திரைக்கதை வசனம் எழுதிக் கொண்டிருக்கின்றனர்.
ஒருவேளை உமர் காலித், நானாகவோ, யெச்சூரியாகவோ இருந்திருந்தால் அவர் மீது இதுபோன்ற வழக்கு தொடரப்பட்டு இருக்காது.
இதில் பெரும் சோகம் என்னவென்றால், இந்திய முஸ்லிம் தலைமுறையினரின் ஜனநாயக வாய்ப்புகள் முற்றிலும் தடை பட்டுள்ளன என்பதுதான்.
காங்கிரசே முஸ்லிம் அடையாளங்களை
தவிர்க்கிறதே…