பாபர் மசூதி இடிக்கப்பட்ட ஒரு மாதத்தில், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட காங்கிரஸ் அரசு அவசர சட்டம் பிறப்பித்தபோது, அதனை பாஜக எதிர்த்ததை மீண்டும் நினைவுபடுத்த வேண்டியுள்ளது.
அயோத்தியாவில் ராமர் கோயில் கட்ட 25 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது புதிய விசயமல்ல. ஆனால், 2018 ஆம் ஆண்டு வரை, அது குறித்த சிந்தனையே நரேந்திர மோடி அரசுக்கு இல்லை என்பதுதான் முக்கியமான அம்சம்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட ஒரு மாதத்தில், அதாவது 1993 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் பரிந்துரையின்பேரில், அப்போதைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா அயோத்தியாவில் குறிப்பிட்ட நிலத்தை ஆர்ஜிதம் செய்து அவசர சட்டம் பிறப்பித்தார். அதன்பின்னர் நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டத்தை அப்போதைய உள்துறை அமைச்சர் எஸ்பி.சவான் அறிமுகப்படுத்தினார். மசோதா நிறைவேறியதும் அயோத்தியா சட்டம் அமலுக்கு வந்தது.
அப்போது பேசிய சவான், இந்திய மக்களின் மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை நிலைநாட்ட வேண்டியது அவசியமாகிறது. என்று குறிப்பிட்டார்.
ராமர் கோயில் கட்ட அவசர சட்டம் மற்றும் அதனைத் தொடர்ந்து கொண்டு வரப்பட்ட அயோத்தியா சட்டம் மூலம் குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய இடத்தை ஆர்ஜிதம் செய்து, அதனை ஒட்டிய வேறு இடத்தில் ராமர் கோயில் கட்ட நிலம் அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கரைச் சுற்றியுள்ள 60.70 ஏக்கர் நிலத்தை இதற்காக நரசிம்மராவ் அரசு ஆர்ஜிதம் செய்தது. பக்தர்களின் கோரிக்கைகளுக்கேற்ப ஆர்ஜிதம் செய்யப்பட்ட இடத்தில் ராமர் கோயில், மசூதி, நூலகம், அருங்காட்சியகம் மற்றும் பல்வேறு வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.
எனினும், ராமர் கோயில் கட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட அயோத்தியா சட்டம் தோல்வியடைந்தது. இதனை பா.ஜ.க. கடுமையாக எதிர்த்தது. இந்த நடவடிக்கையை பா.ஜ.க. துணை தலைவர் எஸ்.எஸ். பண்டாரி விமர்சித்தார்.
இதனையடுத்து, அரசியல் சாசனத்தின் 143 ஆவது பிரிவின்கீழ், குடியரசுத் தலைவரின் பரிந்துரையின்பேரில், இந்த பிரச்சினையை உச்ச நீதிமன்றத்துக்கு மத்திய அரசு கொண்டு சென்றது.
ராம ஜென்ம பூமி, பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன், ஏதேனும் இந்து மத கட்டிடமோ அல்லது இந்து கோயிலோ இருந்ததா? என்ற கேள்வியை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு முன்வைத்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, மத்திய அரசின் கேள்விக்கு அப்போது பதில் அளிக்கவில்லை.
அயோத்தியா சட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் விளக்கம் அளிப்பதற்குப் பதில், அயோத்திய சட்டத்தை 1994 ஆம் ஆண்டு தடை செய்தது. எனினும், அயோத்தியில் ராமர் கோயில், மசூதி, நூலகம் கட்டும் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் ஆதரவு தெரிவித்தது.
1992 ஆம் ஆண்டு மசூதியை இடித்துவிட்டு, பா.ஜ.கவும், இந்து அமைப்புகளும் அரசியல் செய்து கொண்டிருந்தனர். நாடு முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. மத ரீதியான மோதல்கள் உருவாக்கப்பட்டன.
இந்த சூழலில், ராமர் கோயில் கட்டவும், மசூதி கட்டவும் நரசிம்மராவ் அரசு மேற்கொண்ட முயற்சியால், மதவாத சக்திகளின் ஆட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அரசின் எண்ணம் நிறைவேறாவிட்டாலும், நாட்டில் அமைதி நிலவவும், மக்கள் நிம்மதியுடன் வாழவும் வழி ஏற்படுத்திக் கொடுத்தது
நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது.
Now continuesly reading desiyamurasu very usefull news for congress speakers also cadets is it possible to change the spelling to thesiyamurasu
Thank you, keep reading. It has always been DesiyaMurasu so continuing the name in its digital avatar to inform, engage and inspire more people.