லடாக்கில் சீன ஊடுருவல் குறித்த மவுனம், 5 ரபேல் விமானங்கள் வந்ததற்காக கோஷங்கள், நடிகரின் தற்கொலை ஆகியவை தான் அரசியலிலும் பிரதான தேசிய ஊடகங்களிலும் முக்கிய செய்திகளாக உள்ளன.
பிரதான ஊடகங்கள் என்பது அச்சு ஊடகமாகவும், அதன்பிறகு காட்சி ஊடகங்களாகவும் உள்ளன. தற்போதுள்ள இணைய தளம் அல்லது ஆப் போன்றவை பிரதான ஊடக வரிசைக்கு இன்னும் வரவில்லை. இதில் வயர் மற்றும் ஸ்க்ரோல் போன்ற இணைய தளங்கள் கடந்த 5 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு வாசகர்களும் அதிகம் உள்ளனர்.
பிரதான ஊடகங்களைப் போல் செய்திகளைப் பெறுவதற்கான சூழல் இணைய தளங்களுக்கு இல்லை. இந்திய ஊடகங்கள் விளம்பரம் மூலமே நடத்தப்படுகின்றன. எனினும். வாசகர்கள் அல்லது பார்வையாளர்கள் மூலம் ஊடகங்களுக்கு கிடைக்கும் வருவாய் உலகிலேயே குறைந்த அளவாக உள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிஜிட்டல் விளம்பரம் 27 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேசமயம், அச்சு ஊடகங்களுக்கு 22 சதவீதம் மட்டுமே விளம்பர வருவாய் கிடைத்துள்ளது. 43 சதவீத விளம்பர வருவாய் பெற்று காட்சி ஊடகங்கள் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்தன. ஆனால் காட்சி மற்றும் அச்சு ஊடகங்களின் வருவாய், 2020 ஆம் ஆண்டு டிஜிட்டலுக்கு பரிமாற்றம் ஆகக்கூடும். இதற்கான வேலையை கொரோனா பிரச்சினைகள் செய்து வருகின்றன.
டிஜிட்டல் என்பது கூகுள் மற்றும் ஃபேஸ்புக் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் டைம்ஸ் ஆஃப் இந்தியா அல்லது இந்துஸ்தான் டைம்ஸ் அல்லது மற்ற இந்திய அச்சு ஊடகங்களுக்கு கிடைக்கும் வருவாயை விட, அதிக விளம்பர வருவாயை இந்த இரு நிறுவனங்களும் பெற்று வருகின்றன. இது நம் கண் முன்னே நடந்து கொண்டிருக்கிறது. இது ஊடகங்கள் மத்தியில் நிகழும் முதல் மாற்றம்.
இரண்டாவது மாற்றமாக, பெரும்பாலான இந்திய ஊடகங்கள் இந்துத்வா நிலையை எடுத்துள்ளன. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பிறப்பின் அடிப்படையில் இந்தியர்களை பிளவுபடுத்த முயன்றதில்லை. மக்களை பிரித்தாளுவதில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க.வின் இந்த நிலையை இன்று ஊடகங்கள் ஏற்றுக் கொண்டுவிட்டன. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில், இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு மதத்தினரே பரப்பியதாக கூறியதை ஊடகங்களும் ஏற்றுக் கொண்டதை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
இதே தொற்று பரவும் ஆபத்து உள்ள நிலையில், மற்றொரு மதம் சார்ந்த நிகழ்ச்சி நடைபெற்றதையும் ஊடகங்கள் கவனிக்க தவறிவிட்டன.
அரசு நிர்வாகத்தின் தோல்விகளை கண்டுகொள்ளாமல் ஊடகங்கள் ஓடுகின்றன. 1962 ஆம் ஆண்டு தங்கள் இன்னுயிரை கொடுத்து ராணுவ வீரர்கள் காப்பாற்றிய நம் நிலப்பரப்பை, எதிரிகள் ஆக்கிரமிப்பதைப் பற்றி பேசவில்லை, மாறாக, ரபேல் விமானம் வந்ததற்கு லாவணி பாடிக் கொண்டிருக்கின்றன நம் ஊடகங்கள்.
பெரு நிறுவனங்கள் வங்கிக் கடனை தாமதமாக செலுத்த வாய்ப்பு தரப்படுகிறது. ஆனால் தனிப்பட்ட கடன், வீட்டுக் கடன் மற்றும் மோட்டார் வாகன கடன் கட்டுவதிலும் இத்தகைய வாய்ப்பு தரப்பட வேண்டும். இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும் போது, இவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல் ஒரு நடிகரின் தற்கொலைக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன.
10 ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலான ஊடகங்கள் உணர்வுப்பூர்வமாக செயல்பட்டன. அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கூறுகளை மதித்து, நாம் மாறுபட்ட மற்றும் மதச்சார்பற்ற தேசமாக இருந்தோம்.
அது தற்போது அரசியலிலும் ஊடகங்களிலும் முடிவுக்கு வந்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் ஓவர் ஜனநாயகம்
கொடுத்ததன் வளைவு பத்திரிக்கைகள்
சிறிய தவறுகள் பெரிதாக பிரசுரித்தனர்.
ஆளும் மாநிலமாகட்டும்,ஆளாத மாநிலமானாலும் தவறு செய்த சாதாரன BJP தோண்டர்கள்மீது நடவடிக்கை எடுக்க
அரசும்,போலிஸ் அதிகாரிகளும் வழக்கு பதிவு செய்யவே பயப்படுகின்றனர்.
காங்கிரஸ் அரசியல் கலை அன்னை இந்திரா காந்தி அவர்களோடு சென்றுவிட்டது.