தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜி.ராஜேந்திரன் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெருந்தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து தமிழகம் மீட்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கே.ஐ.மணிரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் அலங்கரிக்கப்பட்ட அவரது படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன், செயல் தலைவர்கள் டாக்டர் கே.ஜெயக்குமார் எம்.பி, டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி, சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் சிவ.ராஜசேகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் தமிழகத்தை மீட்டிட உறுதியேற்கப்பட்டது. இதில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று சிறப்பித்தனர்.

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகர் திருமலைப் பிள்ளை சாலையில் அமைந்துள்ள பெருந்தலைவர் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் செயல்தலைவரும், மக்களவை காங்கிரஸ் உறுப்பினருமான டாக்டர் கே.ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் ஆ.கோபண்ணா, தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் டி.செல்வம், சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவ.ராஜசேகரன் மற்றும் விருகை பட்டாபி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கே.கே.நகர், நெசப்பாக்கம் பகுதியிலுள்ள பெருந்தலைவர் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் ஆ.கோபண்ணா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விருகை பட்டாபி மிகச்சிறப்பாக செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் எஸ்.எத்திராஜ், ராமாபுரம் எம்.ஜி.மோகன், சுசீலா கோபால கிருஷ்ணன், ஜோதி பொன்னம்பலம், கே.கோபால சுந்தரம், வீ.மணி, மணி நாடார், டி.செல்வதுரை, டி.சுந்தரமூர்த்தி, ஜெய கீர்த்தி ராஜு மற்றும் ஏராளமான காங்கிரஸ் தோழர்களும், மகளீரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஏழை எளியவர்களுக்கு கேசரி இனிப்பு வழங்கப்பட்டது. நீண்டகாலத்திற்கு பிறகு அருமை நண்பர் விருகை பட்டாபி அவர்களின் முயற்சியால் 50 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நண்பர்களை காணமுடிந்தது.