தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்களின் 69-வது பிறந்தநாள் விழா 22.10.2020 வியாழக்கிழமை தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள். கடந்த 2019 பிப்ரவரி 2-ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகப் பதவியேற்ற அவருக்கு இன்றைய பிறந்தநாள் விழாவைக் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் நடத்திய விழாவாக அமைந்திருந்தது. இதுவரை எத்தனையோ தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் பதவியில் இருந்திருக்கிறார்கள். பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழாவைக் காங்கிரஸ் கட்சியே மிக விமரிசையாக நடத்தி வந்தது. ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்கிற கே.எஸ். அழகிரி அவர்களுக்கு நடத்தப்பட்ட விழா மிக மிக வித்தியாசமாக அமைந்திருந்தது.
சென்னை மாநகரத்தைப் பார்க்கிற மக்கள் வியக்கும் அளவிற்கு வண்ணமயமான, விதவிதமான சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள், பத்திரிகைகளில் பக்கம், பக்கமாக விளம்பரங்கள் என காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களே பிறந்தநாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடியதைப் பார்த்தவர்கள் பிரமித்துப் போனார்கள். தலைவர் அழகிரியின் பிறந்தநாள் விழா தொண்டர்களின் எழுச்சி விழாவாகக் காட்சியளித்தது.
சென்னை, சத்தியமூர்த்தி பவன் முகப்பில் எப்போதும் இல்லாத அளவிற்கு விசாலமான மேடையும், பந்தலும் அமைக்கப்பட்டு பயனாளிகள் சமூக விலகலோடு முறையாக இருக்கையில் உட்கார வைக்கப்பட்டு இருந்தனர். 69-வது பிறந்தநாளையொட்டி 69 கிலோ எடையுள்ள கேக் வெட்டுதல், 69 பயனாளிகளுக்குத் தையல் இயந்திரங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள், மின் விசிறி, கேஸ் அடுப்பு, குக்கர் போன்றவை எல்லாம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழு உறுப்பினர் எம்.பி. ரஞ்சன்குமார் மிகச் சிறப்பாகச் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் டாக்டர் கே. ஜெயக்குமார், எம்.பி. அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பிறந்தநாள் கேக் வெட்டி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் மகன் தமிழரசு சம்பந்தம் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக அமைத்து பார்ப்பவர்கள் வியக்கும் அளவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்.பி. ரஞ்சன் குமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். காங்கிரஸ் கட்சியில் நிறைய பேர் பொறுப்புகளில் இருக்கிறார்கள். ஆனால், எந்த பெரிய பொறுப்பிலும் இல்லாமல் தலைவர் அழகிரி அவர்களுக்காக அவரது பிறந்தநாளை மிகச் சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென்று நீண்டகாலமாகத் திட்டமிட்டு கடும் உழைப்பையும், பொருட்செலவையும் செய்து மிக நேர்த்தியாகச் செய்திருந்தார். இதன்மூலம் காங்கிரஸ் தலைவர் அழகிரியின் பெருமையைப் பலமடங்கு உயர்த்தியிருக்கிறார். அவரை பாராட்டுவது ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியினருடைய கடமையாகும்.
அதேபோல, பிறந்தநாள் விழாவிற்கு வருகை புரிந்த அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி பெருமை சேர்த்தவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பொன். கிருஷ்ணமூர்த்தி. எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அவரே முன்வந்து இனிப்புகள் வழங்குகிற பொறுப்பை ஏற்றுக் கொள்வதைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், அவரை பாராட்டுவது நமது கடமையாகும்.
இந்த நிகழ்ச்சிக்காக டி.என். முருகானந்தம், டி. செல்வம், கீழானூர் ராஜேந்திரன், கே. சிரஞ்ஜீவி ஆகியோர் சிறப்பாக பணியாற்றினர்.
தலைவர் கே.எஸ்.அழகிரி பிறந்தநாள் விழா புகைப்படங்கள்.





