அன்னை சோனியா கண்டெடுத்த
ஆற்றல்மிகு வீரரே !
தலைவர் ராகுல் காந்தியின்
போர்ப்படைத் தளபதியே !
சத்தியமூர்த்தி பவனத்தின்
சரித்திர நாயகரே !
தொடர் வெற்றிகளை குவித்திட்ட
தொண்டர்களின் திசைகாட்டியே !!
எட்டுத்திக்கும் உமது பெயர் எதிரொலிக்க…
எக்காலமும் உமது பணி சிறந்தோங்க…
வாஞ்சையுடன் வாழ்த்துகிறோம்…
பல்லாண்டு பல்லாண்டு
பல்லாண்டு வாழ்கவென்று !!!
காங்கிரசின் தொண்டராக இளமைப்பருவத்திலேயே தம்மை இணைத்துக் கொண்டு, ஓயாது கட்சி பணியாற்றி, ஊராட்சி ஒன்றிய தலைவர், இருமுறை சட்டமன்ற உறுப்பினர், மக்களவை உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என படிப்படியாக தமது கடும் உழைப்பால் களம்பல கண்டு, உயர்நிலைக்கு வந்த தேசியம் தந்த கொள்கை குன்று, தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் சரித்திரம் படைத்த சாதனைகளின் பட்டியலிலிருந்து சிலவற்றை அவரது 70-வது பிறந்தநாளில் மக்களின் பார்வைக்கு இங்கே படைக்கிறோம்…
அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் வாழ்த்துகளுடன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி சுற்றுப்பயணம். தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் ஒருங்கிணைந்து பணியாற்றி, நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் மகத்தான வெற்றி.
- தலைவர் ராகுல்காந்தி அவர்களின் தமிழகச் சுற்றுப்பயணத்தை சிறப்பாக திட்டமிட்டு, ஒருங்கிணைத்து மகத்தான தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளுதல்.
- தலைவர் ராகுல் காந்தி அவர்களின் சுற்றுப்பயணத்தில் மாணவர்கள், மகளிர், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், சிறுகுறு நடுத்தர தொழில்கள் மற்றும் வரலாற்றில் முதல்முறையாக உப்பளத் தொழிலாளர்கள் என அனைத்துதரப்பினரையும் சந்தித்து, பிரச்சனைகளை அறிய கலந்துரையாடல்.
- அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி நீடிக்க வேண்டி மாபெரும் பாதயாத்திரை.
- மகாத்மா காந்தி அவர்களின் 150-வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப் பட்டது. சத்தியமூர்த்தி பவனில் 150அடி உயர கொடிக்கம்பத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றி கின்னஸ் சாதனை படைத்தல்.
- கிராமசபை கூட்டங்களில் பங்கேற்று உள்ளாட்சி அமைப்புகளில் உரிமைக்குரல் எழுப்புதல்.
- ஏரிகளில் தூர்வாரும் திட்டத்தை காங்கிரஸ் சார்பாக தொடங்கி வைத்து புதிய சாதனை படைத்தல்.
- பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழாவில், அவரின் பொற்கால ஆட்சி குறித்து கருத்தரங்கம் நடத்தி பரப்புரை செய்தல்.
- சேலம் உருக்காலை தனியார்மயமாவதைக் கண்டித்து தொழிலாளர்களுடன் உண்ணாவிரத போராட்டம். தொழிலாளர்களின் உரிமைகளை காத்திட மே தின பொதுக்கூட்டங்கள்.
- அரசமைப்பு சட்டத்தில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமையை பறித்த பா.ஜ.க. அரசை கண்டித்து முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டங்கள்.
- கன்னியாகுமரியில் பல்கலைக்கழகம் அமைக்க வலியுறுத்தி நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றல்.
- பா.ஜ.க.வின் தவறான பொருளாதார கொள்கை, குடியுரிமை சட்டத்திருத்தம், விவசாயிகள் விரோத வேளாண் கருப்பு சட்டங்களை கண்டித்து பரப்புரை மேற்கொள்ளல். விவசாயிகளுக்கு விதைநெல், மரக்கன்றுகள் வழங்குதல்.
- வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி புதிய சரித்திரம் படைத்தல்.
- கடந்த ஓராண்டு காலமாக தமிழகம் முழுவதும் கொரோனா நிவாரணப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ளுதல். சத்தியமூர்த்தி பவனில் கொரோனா மருத்துவ உதவி மையம் திறப்பு.
- பொதுத்துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு குத்தகை வழங்கி, தாரை வார்க்கும் பா.ஜ.க.வை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்.
- தமிழகத்தில் பத்தாண்டுகாலம் நடைபெற்ற அராஜக அ.தி.மு.க. ஊழல் ஆட்சியை அகற்ற, பலமுனைப் போராட்டங்களை நடத்தி மக்கள் ஆதரவை திரட்டுதல்.
- மத்திய பா.ஜ.க. அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து கருத்தரங்குகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துதல்.
- இந்தி, சமஸ்கிருத மொழிகளை பலவழிகளில் திணித்துவரும் பா.ஜ.க. அரசை எதிர்த்து தொடர்ந்து குரல் எழுப்புதல்.
- பா.ஜ.க. ஆட்சியில் தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் தாக்கப்படுவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள்.
- பத்திரிகையாளர் சந்திப்புகள், அறிக்கைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாக மக்கள் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து உரிமைக்குரல் எழுப்புதல்.
- நீட் தேர்வை எதிர்த்து தொடர்ந்து குரலெழுப்பி பலமுனை போராட்டங்களை முன்னெடுத்தல்.
- மத்திய பா.ஜ.க. அரசின் ரஃபேல் ஊழல் மற்றும் பெகாசஸ் ஒட்டுக்கேட்பை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்.
தமிழக காங்கிரசின் தலைமை பொறுப்பேற்று கொள்கை சார்ந்த அரசியலை முன்னெடுத்து இயக்கத்திற்கு வலிமை கூட்டிய தலைவர் கே.எஸ். அழகிரி, சாதனைகளை புரிந்து சரித்திரம் படைத்து வருகிறார். தமிழக காங்கிரஸ் வரலாற்றில் தலைவர் அழகிரி படைத்த சாதனைகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு என்றும் மின்னிக்கொண்டிருக்கும். தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் 70-வது பிறந்தநாளில் சாதனைகள் பல புரிந்து, புதிய சகாப்தம் படைக்க உளமாற வாழ்த்துகிறோம் !