.மத்திய பா.ஜ.க. அரசின் விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து அக்டோபர் 11 ஞாயிறு காலை 10 மணியளவில் திருவண்ணாமலை, செங்கம் மெயின் ரோடு, அத்;தியந்தல் பேருந்து நிறுத்தம் அருகில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் தலைமையில் மாபெரும் விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மூவாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். விவசாயிகள் மாநாட்டிற்கென பிரம்மாண்டமான மேடையும், பந்தலும் அமைக்கப்பட்டு சமூக விலகலை கடைப்பிடிக்கிற வகையில் மேடையிலும், பங்கேற்பவர்கள் பகுதியிலும் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மிகுந்த கட்டுப்பாடோடும், எழுச்சியோடும் விவசாயிகள் மாநாடு நடைபெற்றதை பார்த்தவர்கள் அனைவருமே பாராட்டி மகிழ்ந்தார்கள். மாநாட்டையொட்டி பந்தலுக்கு அருகில் டிராக்டர்கள் அணிவகுக்கும் வகையில் நிறுத்தப்பட்டிருந்தன.
மத்திய பா.ஜ.க. அரசின் அவசர சட்டங்களை எதிர்த்து தமிழக விவசாயிகளின் உள்ளக் குழுறலை வெளிப்படுத்துகிற வகையில் விவசாயிகள் மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை மாநாடு தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்துகிற வகையில் அனைவரும் பாராட்டும் விதத்தில் சிறப்பான ஏற்பாடுகளை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன் அமைப்பின் தமிழக தலைவருமான செங்கம் ஜி. குமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
விவசாயிகள் மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் டாக்டர் கே. ஜெயக்குமார், எம்.பி. துவக்கவுரை நிகழ்த்தினார். பா.ஜ.க. அரசின் விவசாய விரோதச் சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம் என்ற பிரச்சார நூலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத் வெளியிட, தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் ஆ. கோபண்ணா முதல் நூலை பெற்றுக் கொண்டார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் டி.என். முருகானந்தம், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் டி. செல்வம், கீழானூர் ராஜேந்திரன் ஆகியோர் முன்மொழிந்தனர்.
விவசாயிகளின் சங்கமமாக நிகழ்ந்த இந்த மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் சிறப்புரையாற்றினார். பகல் 1 மணியளவில் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் வேளாண் சட்டங்களை கடுமையாக விமர்சனம் செய்து மிகச் சிறப்பான உரை என்று சொல்வதை விட காங்கிரசின் ஜெயபேரிகையாக அவர் முழங்கியதை மாநாடே உன்னிப்பாக கவனித்து கரவொலி எழுப்பி வரவேற்றது.
இந்த மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர்கள் மயூரா எஸ். ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் டாக்டர் ஏ. செல்லக்குமார், எம்.பி., சி.டி. மெய்யப்பன், கிறிஸ்டோபர் திலக், முன்னாள் மத்திய அமைச்சர் ஆர். தனுஷ்கோடி ஆதித்தன், மக்களவை உறுப்பினர் செல்வி எஸ். ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். விஜயதரணி, எஸ். ராஜேஷ்குமார், ஜே.ஜி. பிரின்ஸ், வி.எஸ். காளிமுத்து, ஆர். கணேஷ் மற்றும் கே. கோபிநாத், உ. பலராமன், கு. செல்வப்பெருந்தகை, பொன். கிருஷ்ணமூர்த்தி, அருள் அன்பரசு, டாக்டர் கே.ஐ. மணிரத்தினம், இராம. சுகந்தன், எம்.பி. ரஞ்சன்குமார், எஸ்.பி. வரதராஜன், விவசாய அணி தலைவர் எஸ். பவன்குமார், திருச்சி ஜி.கே. முரளிதரன், விவசாய சங்கத் தலைவர் இளங்கீரன், வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன், ஹசன் மௌலானா, குங்பூ விஜயன், அஸ்லம் பாஷா, சுதர்சன் ஜெயசிம்மா, ஜி.கே. தாஸ், கே.டி. லஷ;மிகாந்தன் மற்றும் பெருந்திரளானவர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள். திருவண்ணாமலை மாவட்ட விவசாய பிரிவு தலைவர் டி. சீனிவாசன் மற்றும் டாக்டர் என். வெற்றிச்செல்வன் ஆகியோர் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.
ஐம்பது வருடங்களாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லை என்றாலும், தமது சொந்த முயற்சியின் மூலம் மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமான முறையில், பார்ப்போர் வியக்கும் வகையில் ஆளுங்கட்சி நடத்துவதைப் போல மாநாட்டு ஏற்பாடுகளை செய்த செங்கம் ஜி. குமாரை தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் மனதார பாராட்டினார். அந்த பாராட்டிற்கு தகுதியுள்ளவராக அவர் விளங்கியதை மாநாட்டை பார்ப்பவர்கள் அனைவரும் உறுதி செய்ததை பார்க்க முடிந்தது. மாநாட்டிற்கு வந்த அனைவருக்கும் உயர்தர மதிய உணவு வழங்கப்பட்டது.
தமிழக காங்கிரசை பொறுத்தவரை இந்த மாநாட்டை நடத்துகிற பொறுப்பை தலைவர் கே.எஸ். அழகிரி வழங்கிய நாள் முதல் இரவு, பகல் பாராமல், கண் துஞ்சாமல், அயராமல், சிறிதும் ஓய்வின்றி உழைத்த செங்கம் ஜி. குமார் அவர்களது உழைப்பை பாராட்டாதவர்களே இருக்க முடியாது. இவருக்கு உறுதுணையாக இருந்த செயல்வீரர் செந்தமிழ் அரசும் பாராட்டிற்கு உரியவராக அவரது செயல்பாடுகள் இருந்தது.
தமிழக காங்கிரசை பொறுத்தவரை செங்கம் குமாரைப் போல ஆற்றல்மிக்க மாவட்ட காங்கிரஸ் தலைவர்களாக செயல்படுவார்களேயானால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலிமைப் பெற்று முன்னணியில் இருக்கும் வகையில் மிகப் பெரிய வாய்ப்பு ஏற்படும் என்பதை எவரும் மறுக்க இயலாது.