• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தமிழக அரசியல்

தமிழக காங்கிரஸில் புதிய நிர்வாகிகள் நியமனம்! தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் புதிய சகாப்தம் தொடங்கியது!

by Admin
12/01/2021
in தமிழக அரசியல்
0
மத்திய பா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்கள் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒரு கண்துடைப்பு நடவடிக்கை! தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்!
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு. தினேஷ் குண்டுராவ் அவர்கள் முன்னிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் 10.1.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :

தீர்மானம் – 1 : தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனத்திற்கு நன்றி, பாராட்டு

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களின் ஒப்புதலோடு, அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு. தினேஷ் குண்டுராவ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி ஆகியோரின் பரிந்துரையின்படி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் தேர்தல் குழுக்கள் நியமிக்கப்பட்டதை இக்கூட்டம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. 2013 ஆம் ஆண்டிற்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து, மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருப்பதை இக்கூட்டம் நினைவுகூற விரும்புகிறது.

சுதந்திர இந்தியாவில் 75 ஆண்டுகளில் 54 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட பெருமை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. ஆனால், தமிழகத்தில் நீண்டகாலமாக ஆட்சியில் இல்லாத காரணத்தால் அரசு பதவிகள் வழங்க இயலாத நிலையில் அதிக அளவிலான நிர்வாகிகளை நியமித்து காங்கிரஸ் கட்சியினரை அரவணைத்து ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பை இக்கூட்டம் சுட்டிக்காட்ட விரும்புகிறது. அனைவரும் பங்கேற்கிற அளவில் அமைப்புகள் இருப்பதுதான் ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்கக் கூடியதாகும். அந்த வகையில் நீண்ட விவாதங்களுக்குப் பிறகு கருத்தொற்றுமை மூலம் நிர்வாகிகளை நியமிப்பதில் மிகச் சிறப்பாக ஜனநாயக முறையில் செயல்பட்டு நியமனங்களைச் செய்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்களையும், அதற்கு பெரும் துணையாக இருந்த அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு. தினேஷ் குண்டுராவ் அவர்களையும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் திரு.கே.சி. வேணுகோபால் அவர்களையும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் திரு. சஞ்ஜய் தத், டாக்டர் சிரிவெல்லபிரசாத் ஆகியோரையும் இக்கூட்டம் மனதார பாராட்டுகிறது, போற்றுகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனத்திற்கு ஒப்புதலை வழங்கிய அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல்காந்தி ஆகியோருக்கு இக்கூட்டம் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

எனவே, தமிழக காங்கிரசில் நிர்வாகிகள் நியமனத்தின் மூலம் புதிய சகாப்தம் துவக்கப்பட்டிருக்கிறது. விரைவில் 100 நாட்களில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறோம். நிர்வாகிகள் நியமனத்திற்கு பிறகு நமது அமைப்புகள் போர்ப் படையை போல வீரம் செறிந்த வகையில் துடிப்புமிக்க செயல்பாடுகளோடு வரும் தேர்தலை சந்திக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய பெருமைகளை மீட்டெடுக்கிற வகையிலும், பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் நிலவிய மகோன்னத நிலையை அடைவதற்கும் புதிதாக நியமிக்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் கொள்கை பற்றுடனும், ஒற்றுமையுடனும், கட்டுப்பாடுடனும் செயல்படுவதென இக்கூட்டத்தின் மூலம் சூளுரை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் – 2 : விவசாய விரோத வேளாண் கருப்பு சட்டங்களை மத்திய பா.ஜ.க. அரசு திரும்பப் பெறவேண்டும்

விவசாயிகளோ, விவசாயச் சங்கங்களோ, எதிர்க்கட்சிகளோ எந்த கோரிக்கையையும் முன்வைக்காத நிலையில் மூன்று வேளாண் சட்டங்களை விவசாய பெருங்குடி மக்கள் மீது திணித்ததை எதிர்த்து கடந்த 45 நாட்களுக்கும் மேலாக தலைநகர் தில்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால், ஏழுகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், மத்திய பா.ஜ.க. அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க முன்வரவில்லை. இப்போராட்டத்தின் காரணமாக இதுவரை 42 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதற்கு பிறகும் மோடி அரசு விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணத் தயாராக இல்லை.

தலைநகர் தில்லியில் நடைபெறுகிற விவசாயிகள் போராட்டத்தில் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் மட்டுமே பங்கேற்பதாக பா.ஜ.க. அரசு சிறுமைப்படுத்தி பேசி வருகிறது. ஆனால், நாடு முழுவதிலுமுள்ள ஐநூற்றுக்கும் மேற்பட்ட விவசாயச் சங்கங்கள் பங்கேற்கிற நாடு தழுவிய போராட்டமாகத்தான் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெற்ற பாரத் பந்த்தில் 25 கோடி மக்கள் பங்கேற்றிருக்கிறார்கள். சுதந்திர இந்தியா இதுவரை காணாத வகையில் மாபெரும் விவசாயிகள் இயக்கமாக இப்போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தி வருகிற விவசாய பெருங்குடி மக்களை இக்கூட்டம் நெஞ்சார பாராட்டுகிறது.

விவசாயிகளுக்கு விரோதமாக பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒப்பந்த விவசாயத்தை ரத்து செய்ய வேண்டும். விவசாயச் சங்கங்களோடு கலந்து பேசி, திருத்தப்பட்ட புதிய வேளாண் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் நிறைவேறுகிற வரை விவசாயிகளின் போராட்டம் ஓயாது.

தமிழகத்தில், மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து திருவண்ணாமலை, தேனி, கோயம்புத்தூர், வேலூர் ஆகிய இடங்களில் மாபெரும் விவசாயிகள் சங்கமத்தை தமிழக காங்கிரஸ் நடத்தியிருக்கிறது. அதேபோல, இருநூற்றுக்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் ஏர் கலப்பை பேரணி சிறப்பான முறையில் நடத்தப்பட்டிருக்கிறது. தலைநகர் தில்லியில் போராடுகிற விவசாயிகளுக்கு வலிமை கூட்டுகிற வகையில், தமிழக விவசாயிகளின் குரலாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் தலைமையில், நாட்டு மக்கள் பாராட்டுகிற வகையில் செயல்பட்டதற்கு இக்கூட்டம் மிகுந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது. இதன்மூலம், மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்களை எதிர்ப்பதில் தமிழக காங்கிரஸ் முன்னணி பங்கு வகிப்பதை இக்கூட்டம் பெருமையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறது.

எனவே, விவசாயிகளின் விரோத வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தீவிரமான பரப்புரைகளைக் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் –  3 : அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல்கள் மீது விசாரணை நடத்தாமல் பாதுகாக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு கண்டனம்

தமிழகத்தில் கடந்த  10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சியில் பாதிக்கப்படாத மக்களே இல்லை என்று கூறுகிற அளவில், ஒரு மக்கள் விரோத ஆட்சியை அ.தி.மு.க. தொடர்ந்து நடத்தி வருகிறது. தமிழக மக்களைப் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன், சேலம் 8 வழிச் சாலைத் திட்டம், மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவது, நியுட்ரினோ திட்டம், புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை, நீட் தேர்வு, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு சட்டங்கள், இந்தி மொழி திணிப்பு, தமிழ் மொழி புறக்கணிப்பு, மாநில உரிமைகள் பறிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய பல்வேறு அநீதிகள் தமிழகத்திற்கு எதிராகத் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

அ.தி.மு.க.வே ஓர் ஊழல் கட்சி. முதலமைச்சராக இருந்தபோதே ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு முதல் குற்றவாளியான ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் சேர்த்து இரண்டாவது குற்றவாளியான சசிகலாவும் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் உச்ச நீதிமன்றமும் அவர்களுக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. இதன்படி சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், அவரும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்.

இப்படி அந்த கட்சியே ஊழல் கட்சியாக இருக்கிறது. ஜெயலலிதா நிரபராதி,சசிகலா குற்றவாளி என்ற வாதத்தை நீதிமன்றமும் ஏற்காது, சட்டமும் ஏற்காது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும், ஊழல் செய்வதையே நோக்கமாகக் கொண்டுதான் அ.தி.மு.க. ஆட்சியே நடக்கிறது. நெடுஞ்சாலை ஒப்பந்தப்புள்ளியை தமது சம்பந்தி பி. சுப்ரமணியத்துக்கு வழங்கியதில், அதிகார துஷ்பிரயோகமும், ரூ.3,500 கோடி அளவுக்கு  முறைகேடும் நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முதலமைச்சர் பழனிசாமி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு  உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. கடந்த 2 ஆண்டுகளாக அந்த தடை தொடர்ந்து நீடித்து வருகிறது. தடையை அகற்ற சிபிஐ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த தடை உத்தரவை வைத்துக் கொண்டு அதிமுகவை பாஜக மிரட்டி வருகிறது.

தடை உத்தரவை நீக்கிய அடுத்த நிமிடம் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக நீடிக்க முடியாது. இந்த வழக்கைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி  பா.ஜ.க. அரசியல் பேரத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

முதலமைச்சர் பழனிசாமியைத் தவிர, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 3 அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டிலும் சிபிஐ விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

முதலமைச்சருக்கு எதிரான ஊழல் வழக்கில் விசாரணைக்கு விதிக்கப்பட்ட  இடைக்காலத் தடையை நீக்கவும், 3  தமிழக அமைச்சர்கள் மீது விசாரணையைத் தொடரவும் ஜனவரி மாதத்திற்க்குள் சிபிஐ நடவடிக்கை எடுக்காவிட்டால், சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் – 4 : காங்கிரஸ் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கின்ற வகையில் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோருதல்

நவீன தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் போட்டிப் போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இன்றைய அரசியல் செயல்பாடுகளில் ஊடகத்துறையின் பங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சமூக ஊடகங்களின் பங்கு மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வகுப்புவாத பா.ஜ.க. அவதூறு செய்திகளைத் திட்டமிட்டுப் பரப்பி வருகிறது. இதை முறியடிக்க வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் கட்சியினருக்கு இருக்கிறது. இதை நிறைவேற்றுகிற வகையில்  காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும், திட்டங்களையும் அச்சு மற்றும் காட்சி ஊடகம், சமூக ஊடகம் ஆகியவற்றின் மூலம் தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொள்வது மிகமிக அவசியமாகும். ஆனால், காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சிலர் கட்டுப்பாடுகளை மீறுகிற வகையில்  ஊடகத்தின் மூலமாக காங்கிரசின் செயல்பாடுகள் மற்றும் முடிவுகளை பகிரங்கமாக விமர்சனம் செய்கிற போக்கு பரவலாக வளர்ந்து வருகிறது. உடனடியாக இத்தகைய ஆரோக்கியமற்ற போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

எனவே, காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கும், கட்சியின் நற்பெயருக்கும் களங்கம் கற்பிக்கின்ற வகையில் ஊடகங்களின் மூலமாக கருத்துகளைப் பகிரங்கமாகத் தெரிவிப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தலைவர்களை வரவேற்க அணிதிரண்ட காங்கிரஸ் செயல் வீரர்கள்! சத்தியமூர்த்தி பவன் திணறியது! வரலாறு படைத்தது!

Tags: congresstncc
Previous Post

மத்திய பா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்கள் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒரு கண்துடைப்பு நடவடிக்கை! தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்!

Next Post

தலைவர் ராகுல் காந்தியை வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் மதுரைக்கு அணிதிரண்டு வர தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு!

Admin

Admin

Next Post
தலைவர் ராகுல் காந்தியை வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் மதுரைக்கு அணிதிரண்டு வர தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு!

தலைவர் ராகுல் காந்தியை வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் மதுரைக்கு அணிதிரண்டு வர தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com