‘உண்ட வீட்டுக்கு துரோகம் செய்வது’, ‘நண்பனுக்கு துரோகம் செய்வது’ போன்ற பழமொழிகள் குமுதம் நிர்வாக இயக்குனரான பி. வரதராஜனுக்கு அப்படியே பொருந்தும். ‘ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதையாக’ வரதராஜன் போட்ட ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. மோசடிப் பேர்வழிக்கு இதற்கு மேல் அறிமுகம் எதற்கு?
இப்போது குமுதம் நிறுவனத்தைப் பற்றி பார்ப்போம்…
குமுதம் நிறுவனம் கடந்த 1947 ஆம் ஆண்டு எஸ்.ஏ.பி. அண்ணாமலை மற்றும் அவரது மனைவி கோதை ஆகியோரால் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் லிமிட்டெட் நிறுவனமாக மாறிய பின், நிர்வாக இயக்குனர் எஸ்.ஏ.பி. அண்ணாமலையும், அவரது மனைவி கோதையும் 100 சதவீத பங்குதாரர்களாக இருந்தனர். இந்த நிறுவனத்தின் வெளியீட்டாளர் மற்றும் செயலாளராக பி.வி. பார்த்தசாரதி இருந்தார்.
அமெரிக்காவில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராக ஜவஹர் பழனியப்பன் இருந்த போது, கடந்த 1994 ஆம் ஆண்டு அவரது தந்தை எஸ்.ஏ.பி. அண்ணாமலை காலமானார். அப்போது தந்தையின் பெயரில் இருந்த பங்குகளை தன் பெயருக்கு ஜவஹர் பழனியப்பன் மாற்றிக் கொண்டார். கோதை நிர்வாக இயக்குனரானார். பார்த்தசாரதியும் அவரது குடும்பத்தாரும் நிறுவனத்தின் அன்றாடப் பணிகளை கவனித்து வந்தனர். பார்த்தசாரதி குடும்பத்தாருக்கு 33.39 சதவீத பங்குகளையும் கொடுத்தனர்.
எஸ்.ஏ.பி. அண்ணாமலையும், பார்த்தசாரதியும் நெருங்கிய நண்பர்கள். குமுதம் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இருவரும் இணைந்து பாடுபட்டனர். அந்த விசுவாசத்தின் காரணமாகவே 33.9 சதவீத பங்குகள் பார்த்தசாரதி குடும்பத்துக்கு தரப்பட்டது. இதுவரை சரியாகத்தான் போய் கொண்டிருந்தது. ஜவஹர் பழனியப்பன் அமெரிக்காவில் இருப்பதாலும், கோதை வயது மூப்பை எட்டியதாலும், கடந்த 2008 ஆம் ஆண்டு நிர்வாக இயக்குனர் பொறுப்பை பார்த்தசாரதியின் மகன் பி. வரதராஜனிடம் ஒப்படைத்தார் ஜவஹர் பழனியப்பன்.
குமுதம் தொடங்கிய காலம் முதல் மகிழ்ச்சியுடனும், மன நிறைவோடும் பணியாற்றிய ஊழியர்கள் அதன்பிறகு சொல்லொண்ணா மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.
ஜவஹர் பழனியப்பனுக்கு வேண்டப்பட்டவர்கள் என்று ஒரு பட்டியலை எடுத்து, அனைவரையும் வேலையை விட்டு நீக்கினார் வரதராஜன். நிறுவனத்தின் இயக்குனராக இருந்த கோதை அலுவலகத்துக்கு வருவதை தடுக்க லிஃப்டை மூடி வைத்து, தனது கொடூர மனோபாவத்தை வெளிப்படுத்தினார். தள்ளாத வயதிலும் 2 மாடிகள் மூச்சிறைக்க ஏறி வருவார் கோதை. அதனை தன் அறையில் இருந்தபடி கேமிராவில் ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பார் வரதராஜன்.
இதை எல்லாம் தூக்கி சாப்பிடுவதைப் போல் ஒன்று செய்வாராம் வரதராஜன். ஊழியர்களுக்கு சம்பளம் போடும் போது, வயிற்றெரிச்சலில் கழிவறைகளை பூட்டிவிடுவாராம். பாவம், பெண் ஊழியர்கள் உட்பட அனைவரும் பக்கத்தில் உள்ள அபிராமி திரையங்குக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனராம். இதனை அங்கு பணியாற்றி வரும் ஊழியர்களே தெரிவிக்கின்றனர்.
வரதராஜன் என்கிற ‘கேரக்டர்’ எப்படி பட்டது என்பது மேலே சொன்ன விசயங்களில் இருந்து புரிந்திருக்கும். இப்போது வரதராஜனின் மோசடிக்கு வருவோம்…
மோசடி வரதராஜன் மீதான முக்கிய குற்றச்சாட்டுகள்
* நிர்வாக இயக்குனரான பின் வரதராஜன் தன் ஊதியத்தை 95 சதவீதம் உயர்த்திக் கொண்டார். அதற்காக ஜவஹர் பழனியப்பனின் கையெழுத்தைப் போலியாகப் போட்டது.
* குமுதம் நிறுவனத்துக்கு எல்இடி போர்டுகள் வாங்கியதில் முறைகேடு.
* கணக்குகளை திருத்தி ரூ. 25 கோடி கையாடல் செய்தது.
* ஜவஹர் பழனியப்பன் மற்றும் அவரது தாயார் கோதையின் 64.73 சதவீத பங்குகளை ரத்து செய்தது.
இதனையடுத்து, குமுதம் நிறுவன பணம் ரூ. 25 கோடியை மோசடி செய்ததாக பி.வரதராஜன் மீது கடந்த 2010 ஆம் ஆண்டு மாநகர மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் குமுதம் குழுமத்தின் இயக்குனர் ஜவஹர் பழனியப்பன் புகார் கொடுத்தார். போலீஸாரும் வழக்குப் பதிவு செய்தனர். உடனே தலைமறைவான வரதராஜன், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க இரவு முழுவதும் சென்னையில் காரிலேயே சுற்றிக் கொண்டிருந்தார். காலில் விழாத குறையாக பலரையும் கெஞ்சினார். நல்லவேளை, அப்போது கலைஞர் ஆட்சி என்பதால், எந்த சிபாரிசும் எடுபடவில்லை. ஒரு வழியாக வரதராஜனை கைது செய்த போலீஸார், அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அங்கேயும் நாடகத்தை அரங்கேற்றினார் வரதராஜன். தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி ஜாமீன் பெற்று சிறைக்கு செல்வதை தவிர்த்துக் கொண்டார். இந்நிலையில், வரதராஜன் மீது தொடரப்பட்ட மோசடி வழக்கை கடந்த 2017 ஆம் ஆண்டு எழும்பூர் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் விசாரித்து, சென்னை நகரில் குற்றம் நடந்துள்ளதால் மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு தடை விதிப்பதாகக் கூறி, இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜவஹர் பழனியப்பன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், மனுதாரர் தரப்பு வாதத்தை பார்க்கும் போது, குமுதம் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் வரதராஜன் தமிழகத்தில் அரசியல் ரீதியாக செல்வாக்குப் பெற்றவர் என்று தெளிவாகிறது. நிர்வாக இயக்குனரான 6 மாதத்திலேயே தன் சம்பளத்தை 95 சதவீதம் உயர்த்திக் கொண்டுள்ளார். இதற்கான தீர்மானத்தில் குமுதம் குழும இயக்குனர் ஜவஹர் பழனியப்பனின் கையெழுத்தை போலியாக போட்டுள்ளளதும் ஆவணங்களில் மூலம் தெரிகிறது.
மேலும் எல்இடி பேனல் போர்டுகளை குமுதம் பப்ளிக்கேஷனுக்காக வாங்கியதிலும் வரதராஜன் மோசடி செய்துள்ளதற்கான ஆவணமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விலையை உயர்த்தி போலியாக பில் தயாரித்து பல கோடி மோசடியில் ஈடுபட்டதும், ரூ.25 கோடி வரை குமுதம் பப்ளிக்கேஷன் பணத்தை மோசடி செய்துள்ளதும் தெரியவருகிறது. எனவே, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மத்திய குற்றப்பிரிவு போலீஸாரே தொடர்ந்து விசாரிக்கலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தான் மோசடி பேர்வழி என்று நீதிமன்றமே அம்பலப்படுத்திய பின் சும்மா இருப்பாரா வரதராஜன். நிர்வாக ரீதியில் ஜவஹர் பழனியப்பனுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். குமுதம் பப்ளிக்கேஷனின் இயக்குனரான ஜவஹர் பழனியப்பன் அமெரிக்க பிரஜையாக இருப்பதால், குமுதம் பப்ளிக்கேஷனின் 3 லட்சத்து 32 ஆயிரத்து 640 பங்குகளை பறிமுதல் செய்யக் கோரி வரதராஜன் விடுத்த கோரிக்கையை அமலாக்கத்துறை இயக்குனரகம் நிராகரித்துவிட்டது. இதுவும் வரதராஜனுக்கு சவுக்கடி கொடுத்ததுபோல் ஆனது. தொடர்ந்து, அந்நிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் ஜவஹர் பழனியப்பன் மீது நடவடிக்கை எடுக்குமாறு ரிசர்வ் வங்கியில் வரதராஜன் புகார் அளித்தார். வரதராஜனின் புகாரை அவரது முகத்திலேயே தூக்கி அடித்துவிட்டு, நடவடிக்கை எடுக்க மறுத்தது ரிசர்வ் வங்கி. வரதராஜனின் பக்கம் நியாயம் இல்லை என்பதை சுட்டிக்காட்டியது ரிசர்வ் வங்கி.
பழிவாங்கும் வெறி அதோடு முடியவில்லை. இயக்குனர்கள் கூட்டத்தை கூட்டி, ஜவஹர் பழனியப்பன் மற்றும் அவரது தாயார் கோதையின் 64.73 சதவீத பங்குகளை ரத்து செய்தார். இதை எதிர்த்து தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் ஜவஹர் பழனியப்பன் புகார் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், பங்குகளை ரத்து செய்து இயக்குனர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்து, வரதராஜன் முகத்தில் தற்போது கரியைப் பூசியுள்ளது.
உண்ட வீட்டுக்கே பாதகம் செய்த வரதராஜனை, மனித நேயர் ஜவஹர் பழனியப்பன் மன்னித்தாலும், காலம் மன்னிக்காது. இது ஒரு சாம்பிள் தான். வரதராஜனின் மோசடி லீலைகள் இன்னும் பல இருக்கின்றன. ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டால், அவர் புழல் சிறையில் ‘களி’ சாப்பிட நேரிடும் என்பதை மட்டும் எச்சரிக்கையாக தெரிவிக்க விரும்புகின்றோம்.
Awesome sir
Thanks
அருமையான கட்டுரை. இவர் தான் அடுத்தவரை பற்றி வாய் கிழிய பேசும் வல்லவர். முதுகில் இவ்வளவு அழுக்கு. தெய்வம் நின்று கொல்லும்.
நன்றி
சிரம்பபட்டு செய்சிதிகளை சேகரித்து பிரசுரிக்கப்பட்டுள்ள சிறப்பான, மிகவும் தேவையான கட்டுரை. நன்றி!
நன்றி
Nicely written
அநீதியின் தோலை உறித்து தொங்க விட்டிருக்கிறீர்கள்.. தொடரட்டும் உங்கள் அரும் பணி…
அருமையான பதிவு
பிரபலமான பத்திரிகை குமுதத்தின் இன்னொரு பக்கம் வேதனையான ஒன்று. இப்போது அடுத்துக் கெடுப்பது சாதரணமான ஒன்று. அநேகமாக இன்னொரு அறிவு ஜுவி பத்திரிக்கையின் கதையும் விரைவில் வெளிவரும் என்று நம்புகிறேன்.
அண்ணன்
👌🙏🙏
வரதனின் தோலுரிக்கும் கட்டுரை…
அருமை தலைவர்….
வரதனுக்கு…..
காங்கிரஸ்கார்கள் நேர்மையும்,தியாக மனப்பான்மையும் கொண்டவர்கள் அதன் சாட்சி தான் ஜவகர்பழநியப்பன் அவர்கள் குமுதம் இதழ் நிர்வாகம் வரதனுக்கு கொடுத்தது.
வரதா… வரம் கொடுத்தவன் தலையில் வைக்க பார்ப்பதா, வேண்டாம்….
அதே
வரத்தால் உன் ஊழல்கள் தூர்வாரப்படும்…
நல்ல அருமையான பதிவு குமுதம் வரதராஜ் அவர்களின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டிய பதிவு