• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தமிழக அரசியல்

உத்தமர் ஓமந்தூரார்

by ஆ. கோபண்ணா
01/02/2021
in தமிழக அரசியல்
0
உத்தமர் ஓமந்தூரார்
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

பிப்ரவரி – 1: இன்று ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியார் அவர்களின் 125-வது பிறந்தநாள் ஆண்டு நிறைவு. பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில் அடிமை இந்தியாவின் சென்னை மாகாணத்தில் பல பிரிமியர்கள் பதவி வகித்துள்ளனர். ஆனால், அடிமை இந்தியாவில் 1947 மார்ச் 23 ஆம் நாள் சென்னை மாகாணத்தின் பிரிமியராக பொறுப்பேற்றவர் ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியார். 1947-ல் சுதந்திரம் பெற்ற போது ஆகஸ்ட் 15 அன்று தில்லி செங்கோட்டையில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தேசியக் கொடியை ஏற்றி வைத்து வரலாற்றுப் புகழ்மிக்க உரையை நிகழ்த்தினார். அதேநாளில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிற பிரிமியராக விளங்கியவர் ஓமந்தூரார்.

பல முதலமைச்சர்களை தமிழகம் பெற்றிருந்தாலும் ஓமந்தூராருக்கு தனி சிறப்பும், பெருமையும் உண்டு. அவர் ஆட்சி செய்ததே மொத்தம் 2 ஆண்டுகள்தான். இரண்டு ஆண்டுகளில் ‘உத்தமர் ஓமந்தூரார்” என்ற நற்பெயர் இன்றைக்கும் போற்றி பாராட்டப்படுகிறது என்றுச் சொன்னால், அவர் எந்தளவிற்கு நேர்மையான முதலமைச்சராக பணியாற்றியிருக்கிறார் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன.

சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக வர வேண்டுமென்று ஓமந்தூரார் விரும்பியதில்லை. அவரை முதலமைச்சராக்க வேண்டுமென்று பலர் விரும்பியதன் அடிப்படையிலேயே சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றார். அவர் முதலமைச்சராக இருந்த போது, சென்னை மாகாணத்தில் 102 ஐ.சி.எஸ். அதிகாரிகள் இருந்தனர். அவர்கள் பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில் அதிகாரத்தின் உச்சாணியில் இருந்து பணியாற்றியவர்கள். தேவலோக பிரஜைகளாக கருதப்பட்டவர்கள். முதலமைச்சருக்கு ஐ.சி.எஸ். அதிகாரிகள் தான் அந்தரங்க செயலாளர்களாக நியமிக்கப்படுவார்கள். ஆனால், அந்த நடைமுறைக்கு மாறாக மதுரை மாவட்டம், பெரியகுளத்தில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய ஏ. அழகிரிசாமியை அந்தரங்க செயலாளராக ஓமந்தூரார் நியமனம் செய்தார். இப்பொறுப்பில் நியமிக்கப்படுகிற முதல் தமிழன் என்கிற பெருமை இவருக்கு உண்டு. இவர் பிற்காலத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பதவி வகித்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கை ஐ.சி.எஸ். அதிகார வர்க்கத்தினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதுவே அவரது நிர்வாக திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பாகவும் அமைந்தது. ஒரு கிராமவாசி, விவசாயி, உயர்கல்வி பயிலாதவர், அடிப்படை ஆங்கில அறிவு மட்டுமே உள்ள ஒருவர் எப்படி அரசு நிர்வாகத்தை சிறப்பாக நடத்தினார் என்பதற்கு இதைப்போன்ற பல சான்றுகளை கூற முடியும்.

ஓமந்தூரார் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது மதுவிலக்கு 8 மாவட்டங்களில் மட்டுமே இருந்தது. இதனால் மற்ற மாவட்டங்களும் பாதிக்கப்பட்டதால் எஞ்சிய 17 மாவட்டங்களிலும் ஒரே நாளில் மதுவிலக்கை அமல்படுத்திய பெருமை ஓமந்தூராருக்கு உண்டு. இதில் நிதி ஆதாரம் குறித்து அவர் கவலைப்படவில்லை.

அரிஜனங்களின் ஆலய பிரவேசத்தில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டவர். இதன் தொடக்கமாக தமது சொந்த ஊரிலேயே அதை செய்து காட்டியவர். கோயில் குடமுழுக்கு நிகழ்வுக்கு அழைக்கப்பட்டால் அவருடைய முன்நிபந்தனை அரிஜன ஆலய பிரவேசம் இருக்க வேண்டும் என்பதே. திண்டிவனம் சட்டமன்ற ரிசர்வ் தொகுதியில் தேர்வு பெற்ற குலசேகர தாஸ் என்பவரை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலராக நியமித்து அரிஜனங்களின் ஆலய பிரவேசத்திற்கு மகுடம் சூட்டிய பெருமை இவருக்கு உண்டு.

தமிழகத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த ஜமின்தாரி முறை ஒழிப்பு சட்டம் கொண்டு வந்தவர். கோயில் சொத்துக்கள் தவறாக பயன்படுத்துவது, சில சுயநல சக்திகளால் ஆக்கிரமிக்கப்படுவது, கோயில் சொத்துக்களை கொள்ளையடிப்பது போன்றவற்றிற்கு முடிவுகட்டுகிற வகையில் இந்து சமய அறநிலையத்துறை சட்டம் கொண்டு வந்தார். இதன்மூலம் கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை சென்னை மாகாண அரசு எடுத்துக் கொண்டது. புராதான கோயில்கள், மடங்கள், தர்ம ஸ்தானங்கள் இதன்மூலம் பாதுகாக்கப்பட்டன.

இந்து சமய அறநிலையத்துறையின் மூலமாக, அனைத்து கோயில்களிலும் வழிபாடு தமிழில் நடத்தப்பட வேண்டும். இறைவன், இறைவி பெயர்கள் தமிழில் எழுதப்பட வேண்டும். கோயில்களில் அனைத்து பயன்பாடுகளும் தமிழிலேயே இடம்பெற வேண்டும் என்று கோயில்களில் தமிழைப் புகுத்தியவர் ஓமந்தூரார்.

நெடுங்காலமாக புரையோடிப் போயிருந்த தேவதாசி முறையை ஒழிப்பதற்காக சட்டம் கொண்டு வந்த பெருமை இவருக்கு உண்டு. இதன்மூலம் அக்காலத்தில் பெண்களிடையே நிலவிய பொட்டு கட்டுதல், கடவுளிடம் ஒப்படைத்தல் என்கிற இழிநிலையில் இருந்து மீட்டெடுக்க டாக்டர் முத்துலட்சுமி போன்றவர்கள் கடுமையாக போராடி வந்தார்கள். இதிலுள்ள நியாயத்தை புரிந்து கொண்ட ஓமந்தூரார் தேவதாசி முறையை ஒழித்து மிகப்பெரிய புரட்சியாளராக அறியப்பட்டார்.

தமிழ் மொழியின் வளர்ச்சியில் ஓமந்தூராரின் பங்கை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது. தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த மகாகவி பாரதியின் பாடல்களை நாட்டுடமையாக்கிய பெருமை ஓமந்தூராருக்கு உண்டு. பாரதியாரின் பாடல்களுக்கான உரிமம் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி. மெய்யப்ப செட்டியார் மற்றும் பாரதியார் குடும்பத்தினரிடமும் இருந்ததை மீட்டெடுத்தார். இந்த முயற்சி வெற்றி பெற அவருக்கு டி.கே. சண்முகம், கல்கி கிருஷ்ணமூர்த்தி, சின்ன அண்ணாமலை ஆகியோர் துணை புரிந்தனர்.

சென்னை மாகாண அரசின் அரசவை கவிஞராக ஒருவரை நியமிக்க வேண்டுமென கல்கியும், சின்ன அண்ணாமலையும் ஓமந்தூராரிடம் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்றுக் கொண்டு தேசியக் கவி நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்களை சென்னை மாகாண அரசின் முதல் ஆஸ்தான கவிஞராக நியமித்தார்.

138 ஆண்டுகாலமாக பிரான்ஸ் அரசின் பிடியில் இருந்த புதுச்சேரி மாநிலத்தை விடுவிப்பதில் ஓமந்தூராருக்கு நிறைய பங்கு உண்டு. புதுச்சேரி விடுதலை இயக்கத்திற்கு பாடுபட்ட குபேர், வெங்கட சுப்பாரெட்டியார், முத்துப்பிள்ளை ஆகியோரை திண்டிவனத்தில் பாதுகாப்பாக தங்க வைத்து துணைபுரிந்தார். இதற்காக பிரதமர் நேருவிடம் வாதாடிய பெருமையும் அவருக்கு உண்டு.

மக்கள் தொண்டராக, மக்கள் பிரச்சினைகளை அறிந்து, மக்கள் முதல்வராக விளங்கியவர் ஓமந்தூரார். ஆனால், அவரை முதல்வராக தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்களின் விருப்பத்திற்கேற்ப செயல்படாத காரணத்தால் அவருக்கு எதிர்ப்பு ஏற்பட்டது. பொதுவான பிரச்சினைகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் தலையிடுவதை ஏற்றுக் கொண்டவர் ஓமந்தூரார்.  சுயநலத்தின் அடிப்படையில் வைக்கப்படுகிற கோரிக்கைகளை அவர் முற்றிலும் புறக்கணித்த காரணத்தால் சட்டமன்ற உறுப்பினர்களிடையே எதிர்ப்பு வலுத்தது. இந்நிலையில் அவர் வெளியிட்ட சுற்றறிக்கைக்கு எதிராக  சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை திரும்பப் பெற வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதற்கு சம்மதம் தெரிவிக்க இயலாத காரணத்தினால் பதவி விலகுவதென முடிவெடுத்தார். இதுகுறித்து ஓமந்தூரார் கூறும் போது, ‘வரச் சொன்னார்கள், வந்தேன், இப்போது போகச் சொல்கிறார்கள், போகிறேன்” என்று சுருக்கமாக கூறி முதலமைச்சர் பதவியிலிருந்து எவ்வித தயக்கமும் இல்லாமல் விலகிக் கொண்டார்.

தமது இறுதி காலத்தில் வடலூரில் சுத்த சன்மார்க்க நிலையத்தை நிறுவி, வள்ளலார் வகுத்த பாதையில் தனது பணிகளை செய்து வந்தார். அங்கு தொண்டு நிறுவனங்கள், பள்ளிக் கூடங்களை நிறுவி சமூகப்பணி ஆற்றினார். இறுதியாக 25.8.1970 அன்று உயிர் நீத்த ஓமந்தூராரின் புனித உடல் அமர்ந்த நிலையில் சமாதியில் வைக்கப்பட்டது. ஊரன் அடிகளாரும், திருவலம் சுவாமிகளும் ஓமந்தூராருக்கான இறுதிச் சடங்குகளை செய்தனர்.

ஓமந்தூராரை விவசாய முதலமைச்சர், நேர்மையின் மறுவடிவம், உத்தமர் என்றும் தமிழகம் இன்றைக்கும் போற்றி பாராட்டுகிறது என்று சொன்னால், அதற்குக் காரணம் அவரது பொது வாழ்க்கையை தூய்மையாக, எளிமையாக, நேர்மையாக அமைத்துக் கொண்ட முறை தான்.

Previous Post

பிரதமர் நேரு வளர்த்த பொதுத்துறை சொத்துக்களை தனியாருக்கு தாரைவார்க்கும் பா.ஜ.க. அரசு! பிரதமர் மோடியே! மக்கள் சொத்தை கார்ப்பரேட் நண்பர்களுக்கு விற்காதே! தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்

Next Post

மத்திய பட்ஜெட் 2021 : முக்கிய துறைகளுக்கான ஒதுக்கீட்டில் உண்மை நிலவரம்

ஆ. கோபண்ணா

ஆ. கோபண்ணா

Next Post
மத்திய பட்ஜெட் 2021 : முக்கிய துறைகளுக்கான ஒதுக்கீட்டில் உண்மை நிலவரம்

மத்திய பட்ஜெட் 2021 : முக்கிய துறைகளுக்கான ஒதுக்கீட்டில் உண்மை நிலவரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com