• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தமிழக அரசியல்

தேர்தலில் பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி வேர் அறுக்கப்படும்! தலைவர் ராகுல் காந்தியின் ஆவேசப் பேச்சு!

by Admin
29/03/2021
in தமிழக அரசியல்
0
தேர்தலில் பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி வேர் அறுக்கப்படும்! தலைவர் ராகுல் காந்தியின் ஆவேசப் பேச்சு!
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

நண்பர்களே!

இந்த தேர்தல் எதைப் பற்றியது என்பதை நான் எளிமையாகச் சொல்ல விரும்புகிறேன். இதில் என்னுடைய சொந்த அனுபவத்தைச் சேர்த்து இங்கு சொல்ல விரும்புகிறேன். அதன்பிறகு உங்களுக்கே புரியும். பாஜக, அதிமுகவை ஏன் எதிர்க்கிறேன், என் முழு வலிமையையும் அதற்கான ஏன் செலவிடுகிறேன் என்பது உங்களுக்குப் புரியும்.

நான் அமேதி மக்களவை உறுப்பினராக இருந்தபோது, ஓர் இளம் காங்கிரஸ் நிர்வாகி, பாஜகவில் சேர்ந்தார். அவர் பாஜகவில் சேர்ந்தவுடன் பாஜகவின் மூத்த உறுப்பினர்களுக்கு இணையாக அவரைச் சேர்த்துக் கொண்டார்கள். இந்த தலைவர்கள் அமித் ஷாவைச் சந்திக்கும் ஒரு புகைப்படத்தை நான் பார்த்தேன். அவர் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட ஒரு தலைவர்.

அந்தப் புகைப்படத்தில் அமித் ஷா சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார். அந்த தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அவர் முன் கூனிக்குறுதி கைகட்டி நின்று கொண்டிருந்தார். அமித் ஷாவின் காலைத் தொட்டுக் கும்பிட்டபடியே இருந்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர் இன்னொரு தலைவர் முன் கையெடுத்துக் கும்பிட்ட கூனிக்குறுகி நிற்பதையும், காலில் விழுவதையும் ஓர் அவமானகரமான நிகழ்வாகத்தான் நான் பார்த்தேன்.

இந்த ஒரே ஒரு உறவுதான் பாஜகவில் இருக்கும். வேறு எதையும் அங்கு பார்க்க முடியாது. நீங்கள் பாஜகவில் இருந்தாலோ, கூட்டணிக் கட்சியாக இருந்தாலோ நீங்கள் அவமரியாதையை மட்டும் தான் சந்திப்பீர்கள். நீங்கள் கையெடுத்துக் கும்பிட்டு, கூறைக் கும்பிடு போட்டுத்தான் அவர்களிடம் நிற்கவேண்டும். அமித் ஷா, மோடி ஆகியோரின் காலை தொட்டுக் கும்பிட வேண்டும் என்பதுதான் அவர்களின் நடைமுறை.

எங்களுக்கு வேறு வகை சித்தாந்தம், எண்ணம் உள்ளது.எந்த உறவில் ஏற்றத்தாழ்வு உள்ளதோ அது உறவே இல்லை என்று நினைக்கிறோம். எங்கள் பார்வையில் தமிழக மக்கள் அனைவரும் சகோதர, சகோதரிகள். அதைத்தான் நம்புகிறோம். நாங்கள் விரும்புவது ஒன்றை மட்டும்தான். அன்பு, சகோதரத்துவத்தைத்தான் நாங்கள் விரும்புகிறோம்.

இந்தியாவில் இரண்டு சித்தாந்தங்கள் உள்ளன. ஒரு சித்தாந்தம் எல்லோரும் எனக்கு கீழே என்கிறது. அதுதான் ஆர்எஸ்எஸ், மோடி, அமித் ஷாவின் சித்தாந்தம். இன்னொரு சித்தாந்தம் சகோதரத்துவம், பாசம், மரியாதை என்கிறது. அதைத்தான் நாங்கள் நம்புகிறோம். என்னுடைய பிரச்சினை என்னவென்றால், இவ்வளவு தொன்மையான பண்பாட்டு, பாரம்பரியம் கொண்ட மக்களின் பிரதிநிதியான தலைவர்கள், அமித் ஷா, மோடி ஆகியோரின் கால்களில் விழுந்து கிடக்கிறார்களே என்கிற கோபம் எனக்கு வருகிறது. வரலாற்றுப் பாரம்பரியமிக்க தமிழக மக்களின் தலைவர்கள் இவர்கள் இருவர் காலில் வீழ்ந்து கிடப்பதா என்கிற கோபம் வருகிறது. அதற்காகத்தான் இங்கு வந்துள்ளேன்.

பரஸ்பரம் மரியாதை அளிக்கும் உறவை விரும்புகின்றேன். தமிழகத்திலிருந்து ஆளுகின்ற தமிழகம் தான் வேண்டும். டெல்லியிலிருந்து ஆளுகின்ற அரசு அல்ல. ஒரு வித்தியாசம் உள்ளது. தமிழகம்தான் இந்தியா என்று சொல்லும்போது இந்தியாவும் தமிழகம்தான் என்று சொல்ல வேண்டும்.

இந்தியாவுக்கு கீழ் பணிந்த தமிழகம் இருக்க வேண்டும் என்றால் அது இந்தியாவே அல்ல. நான் விரும்புவது சக மனிதருக்கு அளிக்கப்படும் மரியாதை. அனைவரின் பாரம்பரியத்தையும் மதிக்கும் மரியாதை. ஒரு மொழிதான் உயர்ந்தது என்பதல்ல இந்தியா. ஒரு பாரம்பரியம் தான் உயர்ந்தது என்பது நான் விரும்பும் இந்தியா அல்ல.

தமிழ் எவ்வளவு முக்கியமோ அதேபோல் வங்க மொழியும் முக்கியம். அதேபோல் அனைத்து மொழிகளும் முக்கியம் என்று மதிக்கும் இந்தியா தான் முக்கியம். தமிழக முதலமைச்சரைப் பிரதமர் கட்டுப்படுத்துவதும், அவரை தன் காலில் விழ வைத்திருப்பதையும் நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். இது நான் விரும்பும் இந்தியா அல்ல. உத்தரப்பிரதேச முதலமைச்சர், அமித் ஷா காலில் விழ கட்டாயப்படுத்தப்படுகிறார். அவர் நேர்மையற்றவராக இருந்ததால் தான் அமித் ஷா காலில் விழுந்தார். அதே விஷயம் தமிழகத்திலும் நடந்துள்ளது. ஒரே மாதிரியான சம்பவம் தான். கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், ஒரு மாநில முதலமைச்சரைக் காலில் விழ வைப்பது தான்.

தமிழக முதலமைச்சர் அவ்வாறு பணிந்து போவதற்குக் காரணம் அவர் நேர்மையற்றவராக மக்கள் வரிப் பணத்தை சுரண்டியேதே காரணம். எந்த மானமுள்ள தமிழனும் அதை விரும்பமாட்டான். 3 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட தமிழன் யார் காலிலும் விழமாட்டான். அதனால் தான், ஆர்எஸ்ஸ், பாஜக தமிழகத்துக்குள் நுழையக்கூடாது என்பதற்காகத்தான் இங்கு நிற்கிறேன். தமிழகத்தில் பெரிய மாற்றம் தேவைப்படுகிறது. மிகப் பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

பாஜகவை அகற்றும் வரை நானும் ஸ்டாலினும் எந்தவித சமரசமும் செய்து கொள்ளமாட்டோம். இந்த தேர்தலில் பாஜக- ஆர்எஸ்எஸ் வேர் அறுக்கப்படும். ஸ்டாலின் முதலமைச்சராவார்.

Tags: 2021 Election Campaigncongressrahul gandhiVelachery Chennai
Previous Post

கல்வியை மாநில பட்டியலில் சேர்ப்பதன் மூலமே நீட் பாதிப்பிலிருந்து தமிழகத்தை மீட்க முடியும்! தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை

Next Post

கேலிசித்திரங்களை பாரீர்! காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரிப்பீர்! கை சின்னத்தில் வாக்களிப்பீர்!

Admin

Admin

Next Post
கேலிசித்திரங்களை பாரீர்! காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரிப்பீர்! கை சின்னத்தில் வாக்களிப்பீர்!

கேலிசித்திரங்களை பாரீர்! காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரிப்பீர்! கை சின்னத்தில் வாக்களிப்பீர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com