ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சைபுதீன் சோஸ், மத்திய அமைச்சராகவும் இருந்தவர். சைபுதீன் சோசை நேரில் ஆஜர்படுத்தக் கோரி அவரது மனைவி உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு சமீபத்தில் பதில் அளித்த ஜம்மு காஷ்மீர் அரசு, சைபுதீன் காவலில் இல்லை என்றும், அவர் எங்கு வேண்டுமானாலும் தாராளமாக செல்லலாம் என்றும் தெரிவித்தது. இதனையடுத்து, வீட்டை விட்டு வெளியேறி தன் மகள் வீட்டுக்கு செல்ல முயன்ற அவரை, பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். வீட்டுச் சுவர் மீது ஏறி வெளியில் நின்று கொண்டிருந்த செய்தியாளர்களுக்கு நிலைமையை விளக்கினார். ஆனால் பாதுகாவலர்கள் அவரை தடுத்து கீழே இறக்குகின்றனர். இந்த வீடியோ காட்சியே, உச்சநீதிமன்றத்தில் ஜம்மு காஷ்மீர் அரசு பொய் சொல்லியதற்கான சாட்சியாக அமைந்துவிட்டது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தபின், முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் எதிர்கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலிலும், சிறையிலும் அடைத்து மத்திய அரசு துன்புறுத்தி வருகிறது. இது ஜனநாயக நாடா? இல்லை சர்வாதிகார நாடா? என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு அடிப்படை உரிமைகளை நசுக்கும் வேலையில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இது குறித்து, வீட்டுக்காவலில் இருக்கும் சைபுதீன் சோசுடன் இந்தியா டுடே தொலைக்காட்சியின் கன்ஸல்டிங் எடிட்டர் ராஜ்தீப் சர்தேசாய் நடத்திய காணொலி நேர்காணல்…
ராஜ்தீப் சர்தேசாய் : நீங்கள் கைது செய்யப்படவில்லை. நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என உச்ச நீதிமன்றத்தில் ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளதே. நீங்கள் சுதந்திரமாக வெளியே செல்கிறீர்களா? இல்லையா?
சைபுதீன் சோஸ்: 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதியிலிருந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன். காவல் துறையின் அனுமதி பெற்று 2 முறை என் மூத்த சகோதரியை சந்தித்துள்ளேன். ஒருமுறை புதுடெல்லிக்கு சிகிச்சைக்கு சென்றேன். இரு தினங்களுக்கு முன்பு என் சகோதரியை சந்திக்க விரும்பினேன். காவல் துறையினர் அனுமதிக்கவில்லை.
ராஜ்தீப் சர்தேசாய் : இப்படியிருக்கும் போது, நீங்கள் கைது செய்யப்படவில்லை என்றும், எங்கு வேண்டுமானாலும் செல்ல அனுமதிக்கப்படுவதாகவும் உச்சநீதிமன்றத்தில் காவல் துறை சொல்ல வேண்டிய அவசியம் என்ன?
சைபுதீன் சோஸ்: ஜம்மு காஷ்மீர் அரசு பொய் சொல்கிறதா? அல்லது மத்திய அரசு பொய் சொல்கிறதா என்று தெரியவில்லை. அவர்கள் சொல்வது அனைத்தும் பொய் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உண்மையை உச்சநீதிமன்றம்தான் வெளிக் கொண்டுவரவேண்டும்.
ராஜ்தீப் சர்தேசாய் : உங்களுக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் அரசு கூறுகிறது. பாதுகாப்புடன் வெளியே செல்வதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?
சைபுதீன் சோஸ்: 2019 ஆகஸ்ட் 5 வரை எனக்கு தனிப்பட்ட பாதுகாப்பும், அரசு வாகனமும் அளிக்கப்பட்டது. இவை அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டன. தொடர்ந்து வீட்டுச்சிறையில் தான் வைக்கப்பட்டுள்ளேன்.
ராஜ்தீப் சர்தேசாய் : உங்களைப் போன்ற முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரை இவ்வளவு நாட்கள் வீட்டுக் காவலில் வைக்க வேண்டிய அவசியம் என்னவென்று ஜம்மு காஷ்மீர் அரசிடம் கேட்டீர்களா?
சைபுதீன் சோஸ்: இது குறித்து உள்துறை செயலர் ஸ்டாலின் காப்ராவுக்கு கடிதம் எழுதினேன். நான் சட்டத்தை மதிக்கக் கூடியவன். இந்தியாவின் அரசியல் சாசனத்தையும், ஜம்மு காஷ்மீரின் சட்டத்தையும் நான் மதிக்கக் கூடியவன். என்னை ஏன் சிறையில் வைத்திருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளேன். சட்டத்தை மீறாத என்னை சிறையில் வைக்க வேண்டிய அவசியம் என்ன? வெளியே செல்லுவதற்கு தடை விதிப்பது ஏன்?
ராஜ்தீப் சர்தேசாய் : உங்களுக்கு பதில் வரவில்லையா?
சைபுதீன் சோஸ்: எனக்கு அவரிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை.
ராஜ்தீப் சர்தேசாய் : உங்கள் மனைவியின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இப்போது புதிதாக நீங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வீர்களா?
சைபுதீன் சோஸ்: உடனே உச்ச நீதிமன்றத்துக்கு நான் செல்லப் போவதில்லை. உயர்நீதிமன்றத்துக்கு சென்று உச்சநீதிமன்றத்தில் ஜம்மு காஷ்மீர் அரசு பொய் சொன்னதாக தெரிவிப்பேன். சில பத்திரிகைகள் என் மனைவி பொய்யர் என்று கூறுகின்றன. என்னை வீட்டுக்காவலில் வைக்கவில்லை என்று அவர்கள் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த பொய்யை நான் நிரூபிப்பேன்.
நீதியை தேடுபவர்கள் நாடும் பத்திரிகையாக பார்க்கிறேன்.
ஜனநாயக ஆட்சி போதும்.
சர்வாதிகார ஆட்சி தேவை இல்லை.